தோகை 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 2

 

"சோ மிஸ்டர் குப்தா நீங்க செஞ்ச இந்த தப்பை மறைக்க எத்தனை கோடி தருவீங்க?" என்று தன் எதிரே இருப்பவனை கேட்டதும் தன் பான்பராக் கறைபடிந்த பற்களை காட்டி இளித்தான் அந்த குப்தா.

 

"இருபது சி தரான் சார்!" என்றான் அந்த வயிற்றுக்கு மட்டுமின்றி மூஞ்சிக்கும் தொப்பை போட்ட கொழுத்த பணக்காரன் குப்தா.

 

அவனது தொழிற்சாலையில் பதினைந்துக்கு குறைந்த வயதில் இருக்கும் தொழில் சிறார்களே அதிகம் இருந்தார்கள்!! அவர்கள் தானே கொடுக்கும் உணவிற்கும் சிறு தொகைக்கும் அடி மாடு போல வேலை செய்வார்கள்!! எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள்!! இரண்டு அடி அடித்தால் போதும்… அடங்கி ஒடுங்கி இருப்பார்கள்!! கூடவே அவ்வப்போது இவர்களின் தாபத்துக்கும் சில சிறுமியர்கள் பலியாக.. அதைப் பற்றிய நிறைய புகார்கள் வந்ததால் தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

"கொஞ்சம் கூட பத்தாது!! இருபது சி எல்லாம் எந்த மூலைக்கு!!" என்றான்‌ கராராக கையில் இருந்த கூலரை நன்றாக ஊதி கண்களில் மாட்டிக் கொண்டு சாவதானமாக இருக்கையில் சாய்ந்து…

 

"ஓகே சார்.. உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் முப்பது சி தரான்!!" என்றதும் அவனது உடல் மொழியே அது இன்னும் பத்தாது என்று கூற.. 'இவன் என்ன நாம் சேர்த்து வைத்திருக்கிற எல்லாத்தையும் கேட்பான் போலயே?' என்று மனதுக்குள் அவன் புலம்பியது இவன் காதில் தெளிவாக கேட்டது போலவே.. "ஆமா குப்தா.. இதுவரைக்கும் நீங்க கிட்டத்தட்ட இந்த தொழில் மூலமா கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கிங்க தானே.. அதெல்லாம் நான் கேட்டேனா? நான் கேட்டது நீங்க சம்பாத்திச்சதுல ஒரு தூசி தான். எனக்கு ஒரு நல்ல அமௌன்ட் கொடுத்தீங்கன்னா இந்த பேச்சு வார்த்தையும் முடியும்!! இல்லை என்றால்... முதலுக்கே மோசம்!! எப்படி?" என்றான் கூலரை சற்று கீழ் இறக்கி கூலாக!!

 

அந்த வார்த்தையில் சற்றே ஜெர்க்கான குப்தா அப்படி இப்படி என்று 75 கோடியில் வந்து முடித்தான்.

 

சரி என்றவன், மறுநாள் காலை ஒரு இடத்தை தெரிவு செய்து அங்கே வாருங்கள் தருகிறேன் என்றதும் கடகடவென்று சிரித்தான் ருத்ரப்ரதாப்.. "எதுக்கு முன்னாடியே ஆள வச்சி போட்டோ ஷூட் வீடியோ ஷூட் எடுத்து மீடியாவுல போடவா?" என்றான் தன் எதிரே இருந்த கேடியின் குள்ளநரித்தனத்தை அறிந்து…

 

"அய்யோ சாப்.. அப்படி எல்லாம் இல்ல.. அப்படி எல்லாம் சாப்!!" என்று அவன் வெளியில் அவசரமாக கூறினாலும், உள்ளுக்குள் அந்த ஐடியா அவனுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது. 

 

"பணத்தை ரெடி பண்ணி வைங்க காலையில நான் போன் பண்ணுவேன். அப்ப எங்க வரணும்னு சொல்றேன்" என்றவன், அதேபோல மறுநாள் காலை அவன் இருக்கும் ஏரியாவுக்கும் பணத்தை கொண்டு வர சொன்ன இடத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்திற்கு வர சொன்னான். அவனிடமிருந்து முகம் தெரியாத இருவர் பணத்தை வாங்கி சென்றனர்.

 

"சரி குப்தா ஜி நீங்க போகலாம்!!" என்றான் ஃபோனிலே.. அப்பாடி பிரச்சனை முடிந்தது என்று நிம்மதியாக சென்றவன் நிம்மதி அதன் பின்னே பறந்து போனது!!

பிரச்சனையை முடிக்க பணம் வாங்கியவனே பிரச்சனையை பூதாகரமாக கிளப்பி விட்டான் குழந்தைகள் நல வாரியத்தை தூண்டிவிட்டு...

 

பணத்தை இந்த பக்கம் வாங்கிக் கொண்டு அந்த பக்கம் அவர்கள் தொழில் செய்யும் இடத்தை மொத்தமாக பூட்டி சீல் வைத்திருந்தான் நொய்டாவின் கலெக்டரான ருத்ர பிரதாப்!!

 

"நீ என்ன வேலை செஞ்சு வச்சிருக்க தெரியுமா கலெக்டரே? என்கிட்ட இந்த பக்கம் துட்ட வாங்கிட்டு அந்த பக்கம் உன் புத்திய காட்டிட்ட இல்ல!! உன்னை எல்லாம் சும்மா விடமாட்டேன் நான்… உன் குடும்பத்த என்ன பண்ணுறேன் பாருடா!" என்று காச்சு மூச்சு என்று கத்தியவன் போனை கட் செய்யும் முன் கைது செய்யப்பட்டு இருந்தான்.

 

அவன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதவு செய்து உள்ளே தள்ளி தன் கைவரிசையை காட்டினான்.

அதுவும் அவனை சிறைக்கே சென்று "அறிவு இருக்காடா தொப்ப போட்ட எரும? சின்னப் பிள்ளைகள வைத்து வேலை வாங்குற? அதுவும் பிஞ்சுகளை என்ன வேலைக்கு நீ பயன்படுத்துற? என்ன.. என்ன சொன்ன.. என் குடும்பத்தை தூக்கிடுவியா? முடிஞ்சா உன் குடும்பத்த காப்பாத்து.. அடுத்துடுத்து உன் பிள்ளைகள் எல்லாம் வருவானுங்க… செல்லுக்குள்ள இருந்து குடும்ப சாங் பாடுங்க டா டுமீலு!!"என்று ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த சதைகள் எல்லாம் அவனது கைவரிசையில் பிய்ந்து போகாத குறையாக நொந்து நூலாகி கிடந்தான் அந்த குப்தா!!

 

அத்தனை கோபத்தையும் வெறியையும் அவன் மீது காட்டிவிட்டு.. அந்த செல்லை விட்டு வெளியே வந்தவன், அப்படியே ரௌத்தரமான முகத்தை நார்மலாக மாற்றி முழங்கை வரை ஏற்றி வைத்திருந்த சட்டையை நீவி விட்டு, மிக அஃபீஸியலாக கலெக்டராக வெளியே வந்தான்!! கூடவே அந்த கூலரும்!!

 

வீட்டிற்கு வந்தவனை கடிந்துக் கொண்டார் அவனது தாய் மாமா ராமஜெயம். "என்ன செஞ்சு வெச்சிருக்க தெரியுமா பிரதாப்? அவன் எப்பேர்பட்ட ஆளு தெரியுமா? அவன் மேல போய் கை வச்சுட்டு வந்து இருக்க? மினிஸ்டர் லெவல எவ்வளவு பிரஷர் தெரியுமா?" என்று மந்திரிக்கு தனி பாதுகாவலராக இருக்கும் ராமஜெயம் சலித்துக் கொண்டு பேசினார். பின்னே இந்த மூன்று வருடத்தில் எத்தனை எத்தனை டிரான்ஸ்ஃபர்கள்… அனைத்தும் இவனின் இந்த அதிரடி ரவுடி நடவடிக்கையால் என்பார்.

 

"ஏன்டா உன்னை கலெக்டராக பார்க்க நான் எவ்வளவு எவ்வளவு ஆசைப்பட்டேன்.. நீ எப்படி ரவுடியா மாறி வந்து நிக்கிறியேடா..!!" என்று ஆதங்கப்பட்டார்.

 

"இங்க பாரு ப்ராதாபா…. அவனுங்களுக்கு சட்ட மூலமாக தண்டனை வாங்கி கொடு.. வேணாம்னு சொல்லல.. இப்படி அடிதடினு இறங்காத டா…!!" என்று அவனிடம் கோபம் வருத்தம் ஆதங்கம் எதுவும் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கடைசியாக கெஞ்சலில் ஈடுபட்டார்.

 

அதுவரை அவர் பேசியதை எல்லாம் காதலே வாங்கிக் கொள்ளாதவன் அவரின் கெஞ்சல் குரலில் தான் சற்றே மனம் இறங்கி அவருக்கு பதில் அளித்தான்.

 

"போகிற பாதை முக்கியமில்லை மாமா.. நம்முடைய டெஸ்டினேஷன் அதுதான் ரொம்ப முக்கியம்!! இதுதான் இத்தனை வருடத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்!!" என்றவன், அதன்பின் அவர் சொல்லிய அறிவுரைகளை எல்லாம் கொஞ்சமும் காதில் வாங்காமல் தூங்கும் தனது மூன்று வயது மகளைத்தான் பாசத்தோடு வருடிக் கொண்டிருந்தான். கண்களோ எதிரே போட்டோ பிரேமில் சிரித்துக் கொண்டிருந்த நந்தினியைத் தான் வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்தது!!

 

குப்தா மட்டுமில்லை அவனைப் போன்று சிறு தொழில் என்ற பெயரில் சிறு சிறு தொழில்களாக நிறைய நடத்தி அதில் 15 வயதுக்கு கீழுள்ள சிறார்களை வேலைக்கு வைத்து கொடுமைப்படுத்தி.. அடிமைப்படுத்தி.. போதாக்குறைக்கு சிறுமிகளையும் அவர்களின் அரிப்புக்கும், வேலைக்காக பிற அதிகாரிகளின் காமத்துக்கும் தாரைவார்த்து சீரழிக்கும் அந்த கொழுத்த பணப் பிசாசுகளை எல்லாம் களையெடுத்தான் அந்த ஒரு மாதத்தில் ருத்ர பிரதாப்!!

 

நொய்டாவுக்கு அவன் கலெக்டராக பதவி ஏற்ற இந்த ஆறு மாதத்தில் முதலில் அமைதியாக அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தவன், அவ்வப்போது லஞ்சங்களை எல்லாம் வாங்கி வாங்கி தன் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டான். இம்மாதிரி தவறு செய்யும் வியாபாரிகள் போர்வையில் இருக்கும் இந்த குள்ளநரிகளுக்கு வலை விரித்து காத்திருந்து அனைத்து ஆதாரங்களும் சிக்கியவுடன் அவர்களை சின்னாபின்னமாக்கி முழுவதுமாக முடித்து வைத்தான் அவர்களது சகாப்தத்தை ருத்ரனாக இந்த கலெக்டர்!!

 

இப்படி ஒரு அதிரடியான கலெக்டரை அந்த நொய்டா இதுவரை தன் வரலாற்றில் கண்டது இல்லை!! இனி காண போவதும் இல்லை!!

 

குப்தா மட்டுமல்ல அவனைப்போல மற்ற வியாபாரிகளிடமும் இவன் வாங்கி அத்தனை பணத்தையும் அந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கும் படிப்புக்கும் ஒரு மிலிட்டரி ரிட்டையர்டு பர்சனை தேர்ந்தெடுத்து அவர் மூலம் அனைத்தையும் செய்தான். வெறும் படிப்பு மட்டுமல்லாமல் தொழில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தான். அனைத்தையும் முடித்து இவன் நிமிர்கையில் அவன் முன்னே டிரான்ஸ்ஃபருக்கான உத்தரவு கடிதம் வந்து காத்திருந்தது!!

 

மென் புன்னகையோடு அதை எடுத்து பிரித்தான். "இவனுங்களுக்கும் வேற வேலை இல்லை.. கரெக்டா ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி ஒரு லெட்டர் அனுப்பி வச்சிட்டுறானுங்க… சில்லி கைய்ஸ்!!" என்று சிரிப்போடு அதனை வாசித்துக் கொண்டிருந்தவனது முகம் அதில் இடம் மாற்றலுக்கான ஊரை பார்த்ததும் அத்தனை இறுகியது!!

 

அவன் இந்நாள் வரை தவிர்த்து வந்த ஊர்!!

எக்காலத்திலும் போகக்கூடாது என்று தவிர்த்த ஊர்!!

இனி அந்த ஊரிலேயே கால் பதிக்க கூடாது என்று வைராக்கியமாக இருந்தவனின் உறுதியை சோதனை செய்தது அந்த கடிதம்!!

 

அவனுக்கு வேற வழி கிடையாது போய் தான் ஆக வேண்டும்!! அந்த குப்தா மற்றும் ஆட்கள் அரசியலில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் என்று தெரிந்தே தான் அத்தனையும் செய்து வைத்தான். இப்பொழுது நன்றாக மாட்டிக் கொண்டு முழித்தான் இந்த கலெக்டர்!!

 

ஒன்று அந்த ஊருக்கு செல்ல வேண்டும் அல்லது வேலையை விட வேண்டும். இல்லையில்லை வேலை அவனது உயிர் மூச்சு!! எப்படி விடுவான்? வேறு வழியின்றி தனது கொள்கையை சற்று தளர்த்தி

அவ்வூருக்கு போவதாய் முடிவு செய்தான்!!

 

தன் மாமாவுக்கு போன் செய்து மாற்றலாகிய விஷயத்தை சொல்லி ஊரைப்பற்றி சொல்லியதும்.. அந்த பக்கம் சிறிது நேரம் மௌனம்!! பின்பு வெடித்து சிரித்தார் ராமஜெயம்!!

 

"டேய் பிரதாபா... உன்னை அந்த ஊரு விடுறதா இல்லடா!! யாருக்கண்டா இந்த முறை உனக்கு ஒரு அழகிய வாழ்வையே அது வைத்துக் கொண்டு காத்திருக்கலாம்…" என்று அவர் முடிக்கு முன், "வாயை மூடுங்க மாமா!! கடுப்ப கிளப்பாதீங்க" இவன் இந்த பக்கம் சிடுசிடுக்க… 

 

"அப்படி எல்லாம் சொல்லாதடா பிரதாப்பா.. வந்தாரையே வாழ வைக்கும் ஊரு அது. உன் சொந்த ஊருடா அது!! கண்டிப்பா உனக்கு அங்க ஒரு வாழ்வியல் மாற்றம் இருக்கிறது. ஏன்னா அது சிங்கார சென்னை டா!!" என்றார் அந்த சென்னையில் அழுத்தம் கொடுத்து!!

 

இப்படியாக ருத்ர பிரதாபின் விருப்பம் இல்லாமலே சென்னை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான் தனது மூன்று வயது மகள் ஆதினியோடு!!

 

முதல் முறையாக ஓரளவு விவரம் தெரிந்த வயதில் விமானத்தில் பறக்கும் அந்த பூஞ்சிட்டு கேட்க நிறைய கேள்விகள் இருந்தது!! சளைக்காமல் கேள்விகளை அவள் தொடுத்து கொண்டே இருந்தாள்.. விமானம் எப்படி ஃப்ளை பண்ணுது பா? என்பதில் தொடங்கி மேகம் எப்படி அந்தரத்தில் கீழே விழாமல் நிற்கிறது? என்று அனேக கேள்விகள் அவளிடமிருந்து… சிறிது நேரத்திலே விழி பிதுங்கி போனான் கலெக்டர் பதில் கூற முடியாமல்…

 

"அப்படியே உங்க அம்மா மாதிரி இருக்க பட்டு நீ!! வாய தொறந்தா அவளும் மூட மாட்டா... தொணத்தொணன்னு பேசிட்டே இருப்பா!!" என்று நந்தினி பற்றிய இனிமையான நினைவுகளில் மூழ்கிப் போனான் ருத்ரா!!

 

அவனது பழைய நினைவுகளின் இன்பத்தையும் மட்டுமல்ல துன்பத்தையும் தனதாக்கிக் கொண்டு… அவனுக்கு வாழ்வியல் பாடத்தை குழந்தைத்தனத்தோடும் குறும்புத்தனத்தோடும் கற்றுத் தர காத்திருந்தாள் மகதி சிங்கார சென்னையில்!!

 

வழக்கம் போல காலை மகாதேவன் தன் மருத்துவமனையில் ரவுண்ட்ஸில் ஈடுபட்டிருந்த சமயம்!! மூன்றாவது தளம்… அவரது லிட்டில் பிரின்சஸ் மகதியின் ராஜ்ஜியம்!!

 

"என்ன இந்த ஃப்ளோருக்கு வந்தா எப்பவும் ஒரே கூச்சிலும் சத்தமுமால இருக்கும்? இன்னைக்கு என்ன ரொம்ப அமைதியா இருக்கு? ஒருவேளை இது செகண்ட் ஃப்ளோரோ?" என்று மீண்டும் லிப்ட்டுக்குள் சென்று பார்த்துவிட்டு திரும்ப அந்த தளத்தில் நுழைந்தார்.

 

'இத்தளத்தில் இருந்த செவிலியர்கள் கூட காணோமே? எங்கே சென்றார்கள் இந்த சிஸ்டர்ஸ் எல்லாம்?' என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டே நடந்து வந்தார்.

 

மகதி வெளி நோயாளிகளை பார்க்கும் அந்த பெரிய ஹால் போன்ற அறை!! மகாதேவன் உள்ளே நுழையும்போதே வரவேற்பு ரொம்ப பலமா இருந்தது. 

 

"வழக்கமாக சத்தமாக இருந்தா தான் இந்த ரூம் நார்மலா இருக்குனு அர்த்தம்!! இவ்வளோ அமைதின்னா… சம்திங் ராங்!!

ஆண்டவா என்னை காப்பாத்து அந்த பச்ச புள்ளை கிட்ட இருந்து" என்று பலமான வேண்டுதலோடு 

மெதுவாக ரூமை திறந்து காலடி வைத்த நேரம் மேலிருந்து சடசடவென்று ஏதோ அவர் தலையில் பட்டு உடைந்து ஊற்றியது.. என்ன என்று பார்க்க…

 

அம்புகள் மூலம் கலர் தண்ணீர் நிறைந்த பலூன்கள் அவர் தலையில் போடப்பட, ஹோலியை தனியாக கொண்டாடிக் கொண்டிருந்தார் மகாதேவன்!!

 

மெல்ல நிமிர்ந்து அவர் பார்க்க அவர்‌ முன் பல உருவங்கள் தெரிய.. 'என்ன நடக்குது இங்க? ஏன் இத்தனை குழந்தைங்க நிக்குது. நம் கண்ணில் தான் ஏதும் கோளாறா?' என்று மீண்டும் நன்றாக கண்ணில் வழிந்த தண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் பார்க்க, அங்கே கையில் வில்லோடு ஒரு குட்டி சேட்டை பட்டாளம் அவர் முன்னே...

 

"அச்சோ… உங்கள யாருப்பா இங்க வரச்சொன்னா? நாங்க கேம் விளையாடிட்டு இருக்கோம்!! இப்படி இடையில் வந்து மாட்டிக்கிட்டீங்களே? சோ சேட்!!" என்று கூறிய மகதி கையிலும் ஒரு குட்டி வில் இருந்தது. 

 

அதே நேரம் "டாக்டர் டார்லிங்.. நீங்க அவுட்!!" என்று‌ அந்த குட்டி பட்டாளம் கூச்சலிட..

 

"நான் ஒன்னும் அவுட் இல்லை!! நீங்க தான் ஆளு தெரியாம அடிச்சு இருக்கீங்க.. அங்க பாருங்க!!" என்று அவள் தந்தையை காட்ட அந்த வாண்டுகளோ சற்றும் மகாதேவனுக்கு பயப்படவோ அவர் உருத்து விழிப்பதை கண்டு அச்சப்படவோ இல்லாமல் "ஹாப்பி ஹோலி டாக்டர்!!" என்று கத்த… மகதியோ வாய் மூடி சிரித்தாள்.

 

"மகதிஇஇஇஇ…. வாட்ஸ் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" என்று குழந்தைகளுக்கு மேல் அவர் கத்த…

 

"டோண்ட் ஷவுட் பா!! இன்னைக்கு நாங்க ஹோலி செலிப்பிரட் பண்ற டே!! வீக்லி ஒன்ஸ் இப்படி நாங்க ஏதாவது செலிபிரேட் பண்ணுவோம். தெரியும் தானே? நீங்களா வந்து மாட்டிட்டு எங்கள சொல்லாதீங்க?" என்றவள், "லெட்ஸ் ஸ்டார்ட் த கேம் டியர்ஸ்… கெட் ரெடி!!" என்று கூற பிள்ளைகளை நோக்கி வில்லை உயர்த்த… மகாதேவன் கோபத்தோடு கதவை படார் என்று அடைத்து சாற்றி விட்டு வெளியே சென்றார்.

 

இதுவரை அவர்களை செய்யாதே.. பண்ணாதே.. என்று மிரட்டியவர்களை பார்த்த குழந்தைகளுக்கு இன்னும் இன்னும் நிறைய செய் என்று கூறினால் குதூகலம் வர தானே செய்யும்!! அதைத்தான் குழந்தைகளோடு குழந்தைகளாக செய்து கொண்டிருந்தாள் இவள்!!

 

அதில் ஒரு நாள் கேமிங் டே இவளுக்கு!! வெளி நோயாளி பிள்ளைகள் அங்கே உள்நோயளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் என்று அனைவரையும் வைத்து ஒரு மணி நேரம் விளையாடிவிட்டே அவள் வேலையை தொடங்குவாள். இன்று வசமாக வந்து மாட்டிக்கொண்டார் மகாதேவன் தன் லிட்டில் பிரின்சஸின் கேமிங் டேயை மறந்து!!

 

மெல்ல அவர்கள் உயரத்துக்கு குனிந்தவள், "எப்படி உங்க டாக்டர் டார்லிங்? உங்களுக்கு இது மாதிரி விளையாட ஐடியா தெரியலைன்னா சொல்லுங்க நானே சொல்லி தரேன்" என்று இவள் கூறி கண்ணடிக்க.. பிள்ளைகளும் வாயை பொத்தி சிரித்துக் கொண்டனர். இந்த ஒரு மணி நேரம் பெற்றோர்களும் செவிலியர்களும் அங்கே சற்று தள்ளி பார்வையாளர்கள் மட்டுமே!!

 

மருத்துவராக நோய்க்கு மருந்தளிப்பதை விட.. மனதிற்கு மருந்தெளிப்பது சிறந்தது என்று எண்ணம் கொண்டவள் மகதி!!

 

இதே ஒரு கேமிங் டேயில் தான் மலையென இறுகி இருப்பவனை சூறாவளியாக சுழன்று அடித்து தன்னுள் இறுக்கிக் கொள்ளப் போகிறாள் இந்த குறும்பி என்று அறியாத ருத்ர பிரதாப் சிங்காரச் சென்னையில் கால் பதித்தான் அன்று மாலை!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top