சூர்யா அப்பாவிடம் அவ்வளவாக பேசமாட்டான்
எப்போதாவதுதான் பேசுவானீ
இப்போது இருந்து இல்லை பிறந்ததிலிருந்து
அம்மாவிடம்தான் அதிகம்இருப்பான்
அம்மாவை சிறு வார்த்தை சொன்னால்கூட அப்பாவோடு சண்டைக்கு வருவான் அப்படிப்பட்ட அன்பானவன் அம்மா கண்ணில் ஒருசொட்டு கண்ணீர் வந்தால் கூட வீட்டையே இரண்டாக்கி அப்பாதம்பி தங்கையே கதறவிடுவான்
அந்தளவுக்கு அம்மாமேல் அவ்வளவு பாசம்
இதோ அம்மா கூறியதும் அடுத்து ஒருமணி நேரத்தில் எங்கேயும் நிற்காமல் சாப்பிடாமல்கூட லண்டன் வந்துசேர்ந்தான்
எலிகாயுதுனா எலிபுழுக்கையும் ஏண்டா காயனும் என்று தாரா கடுப்பானாள்
என் மம்மிகிட்ட மாட்டிவிட்டியே சாவுடி என்றே சாப்பாடு குடுக்காமல் இழுத்துவந்தான்
அழகி சோபாவில்தான் கோபமாக அமர்ந்திருந்தார் மகன் வந்ததும் அவனுக்கு சிறப்புபூஜை இருக்கிறதென அப்பாவும் வேலைக்கு போகாமல் தம்பியும்தங்கையும் வெளியேபோகாமல் அறைக்குள் அமர்ந்து எட்டிஎட்டி பார்த்துக்கொண்டிருந்தனர்
இதோ வீட்டுக்கு தாராவோடு வந்துவிட்டான்
வேகமாக உள்ளே ஓடியவன் கையை பிடித்து நிறுத்தினாள் தாரா
நான் பாட்டுக்கு சும்மாஇருந்தவளுக்கு தாலிகட்டி இழுத்துட்டு வந்துட்ட புருஷன்வீட்டுக்குள்ள முதல்முதலா போகும்போது ஆலம் கரைச்சுதான் கூப்பிடனும் உங்களுக்குதெரியாதா உங்கம்மா தமிழ்கலாச்சாரத்தை சேர்ந்தவங்க ஏதோ பழக்கம் பண்பாடுனா நிறையசொல்லிட்டு இருந்தீங்க இதுகூட அவங்கவங்களுக்கு தெரியாதா
ஹலோ மாமியாரே வீட்டுக்கு வந்த மருமகளை ஆலம் சுத்தி வரவேற்காம என்னபண்ணிட்டு இருக்காங்க கொஞ்சம் சத்தமாகவே அவள் கூற
உள்ளே கோபமாக அமர்ந்திருந்த அழகி தமிழ்குரல் கேட்டதும் எழுந்து வெளியே ஓடிவந்தார்
ஹிந்தி ஆங்கிலம் மலையாளம் கன்னடம் இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஒன்றும் புரியாமல் தவித்துபோய் கிடப்பவர்களிடம் தாய்மொழி பேசும் ஒருவன் கிடைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும் அதே நிலைதான்அழகிக்கும் உற்சாகமாக வாசல் வரை ஓடிவந்தவர் புடவையில் இருந்தவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு நீ தமிழா ஆச்சரியமாக கேட்க அவளும்ஆமாம் கூற அவருக்குகையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
மருத்துவமனையில் வேலைசெய்யும் பெண்ணோடு இருந்த வீடியோ வெளியானதால் அந்த பெண் வெள்ளைக்காரியாக இருப்பாள் என்றுதான் நினைத்தார்
ஆனால் தமிழகத்தை சேர்ந்தவளாக இருப்பாள் என்று நினைக்கவில்லை அவரையும் அறியாமல் உற்சாகம் தொற்றிக்கொண்டது வேகவேகமாக உள்ளே போய் குங்குமம் கரைத்து சூடம்கொளுத்தி வெளியே வந்து ஆலம் சுற்றியவர் பெற்றமகனுக்கு கூட பொட்டுவைக்கவில்லை மருமகளுக்குதான் வைத்து நெட்டி முறித்து அவள் கையைபிடித்து அழைத்துக்கொண்டு போய் சோபாவில் அமர்ந்து விட்டார
என்னடா இது ஏதாவது கலவரம் நடக்கும்னு பார்த்தா உங்கம்மா அந்த பொண்ணு கை புடிச்சு இழுத்துட்டு வந்து கொஞ்சிட்டு இருக்கா
மைக்கேல் தமிழை கொலைசெய்தவாறு கூற
மகனும் மகளும் தெரியலயே என்ற ரீதியில் அப்பாவை பார்த்தனர்
வீட்டில் இருந்தால் தமிழ்தான் பேச வேண்டும் என்பது அழகியின் கட்டுப்பாடு கணவருக்கு தமிழ்தெரியவில்லை என்றாலும் தினமும் ஒவ்வொன்றாக தமிழ்சொல்லிகொடுத்து ப தி கற்றுக்கொடுத்திருக்கிறார் ஓரளவுக்கு திக்கி திக்கி பேசுவார் சரளமாக பேசதெரியாது ஆனால் இரண்டாம்மகன்மகள் இருவருக்கும் கொஞ்சம் நன்றாகவே தமிழ் வரும் சூரியபிரகாஷ்தான் அப்பாவைபோல் திக்கிக் கொண்டிருப்பன் ஆனாலும் நன்றாக பேசுவான்
அடடே தமிழ் பொண்ணு ரொம்ப அழகாஇருக்கமா உன்னோட பேரு என்ன
அழகி புன்னகையோடு கேட்க
என் பேர் தமிழ்ச்செல்வி தாரானு கூப்புடுவாங்க
அடடா தமிழ்ச்செல்வி ரொம்ப நல்லபேரா இருக்கு தமிழ்பொண்ணுதான் எனக்கு மருமகளா வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன்
என் அண்ணன் பொண்ணுங்க இந்த வீட்டுக்கு மருமகள வரணும்னு ரொம்ப கனவுகண்டு வைத்திருந்தேன் அதெல்லாம் இல்லன்னு ஆகிப்போச்சு போனாபோகட்டும் அண்ணன் பொண்ணுதான் வரல தமிழ்பொண்ணு வந்துச்சு ரொம்ப சந்தோசம் ஆமா உன்னோட ஊரு எந்த ஊரு
தலைவெட்டியான்பட்டி அவள் கூறவும் அதிர்ந்துபோன அழகி
அங்க உங்ம்மா அப்பா யாரு பதட்டத்தை மறைத்தவாறு கேட்க
அவளும் அப்பா அம்மாவின் பெயரை கூறியதும் ஒரு பக்கம் சந்தோஷம்
இன்னொரு பக்கம் கோபம்
அய்யோ ஆண்டவா அடேய் பாவி என்னடா பண்ணிவச்சிருக்க கோபமாக மகன்பக்கம் திரும்ப இப்பஎன்ன பண்ணிட்டேன் என்ற ரீதியில் சூர்யா அம்மாவை பார்க்க
பாவிபயலே நான்தான் வீட்டவிட்டு வந்து நாதியில்லாமல் கிடைக்கேன்
அதே வீட்டுபொண்ண யாருடா உன்னை இழுத்துட்டு வந்தது கல்யாணம் பண்ணிக்க சொன்னது
இப்போதானா ஆலயம்சுத்தி வெல்கம் பண்ணுனா உங்கம்மா திடீர்னு என்னடா ஆச்சு இளைய மகனிடம் கேட்க எனக்கும் தெரியலையே அவனும் தலையை சொரிந்தான்
ஐயோ கடவுளே பிரிஞ்சுபோனா என்சொந்தத்தை ஒன்னுசேர்த்து வைப்பனு பார்த்தா மறுபடியும் பிரிச்சுட்டியேடா எடுபட்டவனே உனக்கு கூட்டிட்டு போக வேறபொண்ணா கிடைக்கல இவளை ஏன்டா இழுத்துட்டு வந்த சூர்யாவின் நெஞ்சில்அடிக்க அவனும் நெஞ்சை தடவிக்கொண்டு எடுபட்டபயல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் கடுப்பாக அப்பாவை பார்த்தான்
அவரோ கும்பிடாபோட்டார் நீயே பாத்துக்கோ டா என்று
டாட் நானே அவமேலேஇருக்கிற கோவத்துல தாலிக்கட்டி கூட்டிட்டு வந்துருக்கேன் அம்மா எதுக்குப்பா இப்படி பஜாரிமாதிரி ஊரைகூட்டிட்டு இருக்க கடுப்பாக ஆங்கிலத்தில் திட்ட
டேய் இங்க பேசினா தமிழ்லதான் பேசணும்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன் தசு புசுன்னு இங்கிலீஷில் பேசின சோத்துல பாய்சனை வச்சுகொன்னுருவேன் இவளை ஏண்டா கூட்டிட்டு வந்த மறுபடியும் நடு ஹாலில் அமர்ந்து ஒப்பாரி வைக்க அவரைசுற்றி மைக்கேலும் மற்ற இரண்டு பிள்ளைகளும் சோகமாக அமர்ந்துகொன்டனர்
எனி பிரோப்ளம் டார்லிங் உனக்குபிடிச்ச மாதிரி தமிழ்பொண்ணதானே மேரேஜ்பண்ணி கூட்டிட்டு வந்துருக்கான் அப்புறம் எதுக்கு அழுகுற சூர்யாவின்அப்பா கேட்க
வேறயாரையாவது இழுத்துட்டு வந்தாலும் பரவாயில்லை நான் ஏத்துப்பேன் ஏற்கனவே எங்க வீட்டுல என்மேல கோவத்துல இருக்காங்க இவன் அதே வீட்டுபொண்ண இழுத்துட்டுவந்தா என் குடும்பம் எப்படி சேரும்
இன்னும் அவங்களுக்கு கோபம்தானே அதிகரிக்கும் ஐயோ கடவுளே என் குடும்பம் எப்போ ஒன்னுசேரும் தெரியலையே
அடியே அறிவு கெட்டவளே அவன் கூப்பிட்டா உனக்கு எங்கடிபோச்சடி அறிவு வரமாட்டேன் சொல்லவேண்டியது தானே அவளையும் பிடித்த திட்ட
நான் என்ன ஆசைப்பட்டா வந்தேன் என்ற ரீதியில் தாரா அவரைமுறைத்தாள்
அதன்பிறகே அவர் கூறியது மூளைக்குள் சென்றுசேர்ந்தது அய்யய்யோ அப்போ அப்பா அப்பாவோட தங்கச்சி ஒன்னு இங்கிலீஸ்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போச்சுனு சொன்னாங்களே
அந்த அத்தை நீங்கதானா தாரா கேட்க
நான்தான் நானேதான் பெரியவீட்டு வீராசாமி கூட பொறந்த அழகம்மை நானேதான்
ஐயோ கடவுளே அந்த வீட்லபோய் பேசி இரண்டுகுடும்பமும் சம்மதிச்சு என் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்னு நினைச்சேனே
என் வயித்துல மண்ணள்ளி போட்டுட்டானே
சொல்லாம கொள்ளாம இழுத்துட்டு வந்துட்டியேடா ஏற்கனவே என்மேலே கொலவெறிஇருப்பாங்க
இவளையும் இழுத்துட்டு வந்துட்ட
இன்னும் என்னென்ன ஆட்டம் ஆட போறாங்க தெரியலையே ஐயோ கடவுளே ஏன்டா ஏண்டா இப்படி என் உயிர வாங்குறீங்க நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதவரை பார்த்த பிள்ளைகளோ அதிர்ச்சியாக தாராவை பார்த்தது
தாராவும் அதிர்ச்சியாக அழகியை பார்த்தாள் அந்தவீட்டையும் சுற்றிபார்த்தாள்
அடப்பாவி சண்டாளா அப்ப நீஎன்னோட அத்தை மகனா வேற யாரோ இழுத்துட்டுவந்துட்டானோனு ரொம்ப கவலையில இருந்தேன்
நல்லவேளை அத்த மகனா போயிட்டான்
கொஞ்சம் நிம்மதியாகதான் இருந்தது
இருந்தாலும் அப்பாவை நினைத்து பயமாக இருந்தது
கூடவே தெருபொறுக்கி தாலிகட்டிவிட்டானே என்று சூர்யாவை நினைத்து கொஞ்சம் கோபமும் இருக்கத்தான் செய்தது
ம்ம் வாட் மா தாரா பேரண்ட்ஸ் உங்க ப்ரோவா சூர்யாவும் அதிர்ச்சியோடு கேட்க அதைதாண்டா சொல்றேன் என் குடிய கெடுத்துட்டியா டா பாவி மறுபடியும் அழுதார்
ஷட்டப் சூர்யா கோபமாக சத்தம் போட அவ்வளவுதான் அழகியின் கண்ணீர் அப்படியே நின்றுவிட்டது
தாரா செய்தது அந்த வீட்டில் அவர்கள் பேசியது நடந்துகொண்ட முறை நிக்கி ஊர்வசி பற்றி அத்தனையும் ஒன்று விடாமல் கூறினான்
ஜாதிவெறி பிடிச்சுட்டு சுத்திட்டு இருக்காங்க இந்தலட்சணத்துல அந்த குடும்பத்தில் போய் பேசி கொஞ்சி குலாவி வெத்தலபாக்கு வச்சு மேரேஜ்பண்ணி வைக்கணும் ஆசையா மாம் எனக்குடென்ஷனா வருது இனிமே உன் பேமிலியபத்தி பேசவே பேசாத இவஉங்கஃபேமிலினு எனக்கு தெரிஞ்சிருந்தா நான் மேரேஜ் பண்ணிருக்கவே மாட்டேன்
ஹலோ தாரா நான்தாலிகட்டினது தப்புதான் ஐ அம் சோ சாரி அதை நானே கழட்டிடுறேன் நீ உன்னுடைய வீட்டுக்கு போ சர்வசாதாரணமாக கூறி தாலியில் கைவைக்க
தாரா அடித்த அடியில் பையன்கன்னம் சிவந்துபோனது
ஏற்கனவே எடுத்த சிவப்பழகன் இப்போது கை நீட்டியடிக்கவும் இன்னும் சிவந்து கை தடம் பதிந்துவிட்டது
சூர்யாவின் குடும்பமே அதிர்ச்சியோடு அவளைபார்க்க சூர்யா கோபமாக பார்த்தான்
என்னடா நெனச்சிட்டு இருக்க எனக்கு வாழ்க்கைகொடுனு நான் உன்கிட்டவந்துகேட்டேனா உன் இஷ்டத்துக்கு வந்த தாலிகட்டினா எங்கப்பா கிட்ட பேசிட்டதா சொல்லி அவங்கமுன்னாடி இழுத்துட்டுவந்த
இப்ப நான் யாருன்னுதெரிஞ்சதும் மறுபடியும் தாலிய ழட்டி வீட்டுக்கு போகசொல்ற உன்இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்கியா உன் இஷ்டத்துக்கு ஆடுறதுக்கு என்னைஎன்ன உன் வீட்டு வேலைக்காரி நினைச்சியா
வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டு இப்போ கழட்டவேற வர்ற நான்ஒன்னும் உங்க நாட்டுல பொறந்தவ இல்லை தமிழ்நாட்டில் பிறந்தவ
தாலியால கைவெச்ச உன்ன வெட்டி போட்டுருவேன் தாரா ஒழுங்கு மரியாதையா என்னை வச்சு வாழ்ற வழியபாரு அத்துவிடலாம்னு நினைச்ச மவனே சாவடிச்சுருவேன் ஆவேசமாக கூற
மகனை அடித்துவிட்டாளே என்ற கோபம் கொஞ்சம் கூட இல்லாமல் அழகிக்கு ஆனந்தமாக இருந்தது அச்சோஎன் தங்கமே ராசாத்தி என் குலகொழுந்து என்அண்ணன்மவளே
என் தங்கப்புள்ள அப்படிசொல்லுடி என்சிங்கக்குட்டி நீஒன்னும்கவலைப்படாத உங்கப்பனே வந்ததும் சரி
எங்கப்பன் வந்தாலும் சரி யார்வந்தாலும் எதிர்த்துபோராடலாம் என்னபண்ணிரபோறாங்க அவங்களால ஒன்னும் கிழிக்கமுடியாது உனக்குநான்இருக்கேன் கவலையேபடாதடி அழகி தாராவை நெட்டிமுறிக்க சூர்யாவுக்கு எரிந்தது
வந்து ஒருநாள்கூட ஆகஷ பெத்த மகனை கைநீட்டி அடிச்சிருக்கா
ஒரு வார்த்தை வாய்திறந்துபேசதோணுதா கொஞ்சம் கூட கவலைமில்லாம எப்படிகொஞ்சிட்டு இருக்க நீயெல்லாம் பெத்த தாயா சூர்யா கோபமாக தமிழில் திட்ட
நீ என்னமோசொல்லிட்டு போடா வெண்ண என்ற ரீதியில் முகத்தை சுளித்துவிட்டு தாராவை அழைத்துப்போய் பூஜைறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு
மகளையும் இளையமகனையும் அறிமுகப்படுத்தி கணவனையும் அறிமுகப்படுத்தி விட்டு அந்தவீட்டை ஒவ்வொரு அறையாக திறந்துகாட்டி வீடுமுழுவதும் சுற்றிகாட்டிவிட்டு சூர்யாவின் அறைக்கு வந்தார்
இதுதான் சூர்யா ரூம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவன்மேல கோபப்படாதே கோபத்துலதான் அப்படிஇப்படினு பேசுவான் மத்தபடி என்புள்ள தங்கமானவன்
ஈ எறும்புக்கு கூட துரோகம்செய்யாதவன் பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கனும்னு நினைக்கிறவன்
பெத்தவங்களை தங்கமா பாத்துக்கிறவன
மனைவியை தவிர யாரையும் நினைக்காத ஸ்ரீ ராமன்
ஏதோ கோவத்துல அப்படி இப்படி ஏதாவது சொன்னா அதை அப்படியே மறந்திடுமா எனக்கு அடுத்து நீதான் இந்த குடும்பத்தை நல்லபடியா வழிநடத்தணும் குழந்தை குட்டி ஆயிடுச்சுன்னா அண்ணன்அப்பா எல்லாரும் உன்னை ஏத்துப்பாங்க தைரியம் கூறினார்
மத்ததை கூட பொறுத்துபோவேன் ஆனா பொண்டாட்டிக்கு மட்டும் உண்மையா இருக்கிறவன் மனைவியை தவிர யாரையும் நினைச்சு கூட பாக்கமாட்டான்னு சொல்றாங்களே சத்தியமா இதை தாங்கிக்கவே முடியல
நெஞ்சில் கைவைத்தாள் தாரா