மோகங்களில்… 11
“நைட் எல்லாம் அவ ரொம்ப கஷ்டப்பட்டா.. சரியா தூங்கல.. நல்லா தூங்கட்டும்! டிஸ்டர்ப் பண்ண வேணாம்!” என்றவாறு தன் உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தவனை தான் பிளந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் சாவித்ரி அம்மா.
அவன் பேச்சை மீறி உள்ளே சென்று அனுவை பார்க்கும் தைரியம் இல்லை அவருக்கு. அதைவிட அவர் மனதில் எண்ணங்கள் விளைவின் கோலங்களில் உள்ளே அவள் எந்த கோலத்தில் இருக்கிறாளோ என்று பயந்து தலையை உலுக்கி கொண்டவர் “பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு? நம்ம என்ன வேலைக்கு வந்தோமோ அதை மட்டும் ஒழுங்கா செய்வோம்” என்று புலம்பிய படியே மாடியில் இருந்து இறங்கினார்.
அவன் சொன்னது என்னவோ இரவெல்லாம் ‘உதவி செய்தும் தப்பான பெயர் வாங்கி வந்துட்டோமே’ என்று மன உளைச்சலில் இருந்தாள் என்ற பொருளில் தான்… கூடவே கர்ப்பமாக இருக்கும் நேரம் இவ்வாறு மன அழுத்தம் உளைச்சல் கூடாது அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணி அவன் சொல்லிவிட்டு சென்றதுக்கு இங்கே சாவித்ரி அம்மாவோ புலம்ப தொடங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் அங்கே வந்த சுகன் “மேடம் எழுந்துட்டாங்களா? அவங்களுக்கு இதை கொடுத்துடுங்க” என்று இரண்டு செவ்இளநீரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
“உக்கும்.. உன் மேடம் சீக்கிரம் எழுந்து வந்துட்டாலும்..” என்று நொடித்தார்.
“அவங்க எந்திரிச்சு வரலைன்னா இந்நேரம் வரைக்கும் தூங்க விடுவீங்களா நீங்க? போய் எழுப்புங்க? அதுக்கு தானே நாங்க உங்களை அப்பாயின்ட் பண்ணி வச்சிருக்கோம்”
“என்னால எல்லாம் அந்த ரூம்ல போய் எழுப்ப முடியாது உங்க மேடத்த..” என்று முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார் சாவித்ரி அம்மா.
“ஏன் உங்களால போக முடியாது? ஒரு லேடி தனியா இருக்குற ரூம்ல நாங்க எல்லாம் எப்படி போக முடியும் அதானே உங்கள போக சொல்றேன்! போங்க.. போங்க.. போய் சீக்கிரமாக எழுப்பி கூட்டிட்டு வாங்க” என்று விரட்டினாள்.
“உங்க மேடம் அவங்க ரூம்ல இருந்தா.. எழுப்புவதற்கு நான் ஏன் தயங்க போறேன்?” என்று ஒரு இக்கு வைத்து முடித்தார்.
“அவங்க அவங்க ரூம்ல இல்லாம வேற எந்த ரூமுக்கு போய் இருக்க போறாங்க? ஒழுங்கா தேடி பாத்தீங்களா.. உங்களை..” என்று இவன் பதட்டம் ஆகி வெளியே இருக்கும் செக்யூரிட்டியை அழைக்க சொல்ல….
“ஏ தம்பி.. தம்பி நில்லு.. யோவ் நில்லுயா.. கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன் இல்ல நீ பாட்டுக்கு வேகமாக நடக்கிற. உன் நடைக்கு என்னால ஈடு கொடுத்து வர முடியுமா? நில்லு..!” என்று அதற்குள் செக்யூரிட்டி அருகே சென்றவன் என்ன என்று அவரை திரும்பி பார்த்து முறைத்தான்.
“உங்க மேடம் அவங்க ரூம்ல தான் இல்லேன்னு சொன்னேன்? அதுக்காக இந்த வீட்டிலேயே இல்லைன்னு சொன்னேனா? எதுக்கு அவசரப்பட்டு செக்யூரிட்டி எல்லாம் கூப்பிட்டு தேவையில்லாம விஷயத்தை பெருசு பண்ற?” என்று கண்டித்தார்.
“என்னத்த விஷயத்தை பேசி நான் பிரச்சினையாகுகிறேன்?” என்று புரியாமல் பார்த்தவனிடம் உள்ளே வருமாறு சைகை செய்து உள்ளே சென்றவர் “உங்க மேடம் உங்க சார் ரூம்ல தூங்கறாங்க.. என்னால போய் எழுப்ப முடியாது! அப்படியே போனாலும் அந்த மனுஷன் ‘அவ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணுமாம்! டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு’ சொல்றார்” என்றவுடன் அதிர்ந்து அவரை பார்த்தவன் “இல்ல நீங்க பொய் சொல்றீங்க. அப்படி எல்லாம் அவரு ரூம்குள்ள யாரையும் விட மாட்டார்! குறிப்பா பொண்ணுங்கள!” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் சுகர்.
“என்னது நான் பொய் சொல்றனா? நான் பொய் சொல்றனா? என்று அவனுடன் எகிறியவர் “காலங்காத்தால இந்த பொண்ண எழுப்ப ரூமுக்கு போனா கதவை திறந்து இருக்கு.. எங்க போச்சுடானு அலசு அலசுனு அலசி தோட்டத்து பக்கம் இருக்குமோனு.. இந்த முடியாத காலோட விந்தி விந்தி ரொம்ப நேரமா தோட்டத்தை தான் சுற்றி பார்த்துட்டு இருந்தேனா.. பால்கனியில உங்க பாஸ் அரையும் குறையுமா காட்சி அளிக்கிறாரு!”’என்றதும் அவன் திடுக்கிட்டு பார்க்க ஆமாம் என்பது போல தலையை ஆட்டினார் சாவித்ரி.
“அதுக்கப்புறம் முடியாத இந்த முட்டி வலியோட மாடி ஏறி நான் போய் அவரிடம் கேட்டேனா.. அதுவும் அந்த பொண்ண காணோம்னு காலையில் இருந்து பதட்டத்தோடு நான் கேட்டா.. அவரு கொஞ்சம் கூட அலட்டிக்காம என் ரூம்ல தான் தூங்குற.. ஆனா அவ நல்லா ரெஸ்ட் எடுக்க வேண்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவளா எழும்பும் போது எழட்டும்! நைட் எல்லாம் தூங்காமல் கஷ்டப்பட்டா அப்படின்னு சொல்லிட்டார்” என்று மேவாயை தாடையில் வைத்து அதிசயத்து சுகனை பார்த்தார்.
சுகனுக்குமே சாவித்ரி அம்மா சொன்ன கோணம் புரிந்தது. ஆனால் அந்த வழியில் தன் பாஸை நினைக்க அவனால் முடியவில்லை. மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் சுகனுக்கு அவரைப் பற்றி இன் அண்ட் அவுட் எல்லாம் தெரியுமே? அதுவும் பெண்கள் விஷயத்தில் அவன் எப்படிப்பட்ட கொங்கணவர் என்று தெரியாதா? அதனால் சாவித்ரி அம்மா சொன்னதை நம்ப முடியாமல் அவரை பார்த்தான்.
“வேற ஏதோ ரெண்டு பேருக்குள்ள பிரச்சினனையா இருக்கும் போல” என்று அவன் சரியாக யூகித்துக் கொண்டே இருக்கும் போது தயாராகி கீழே வந்த துருவும் சாவித்ரி அம்மாவை முறைத்து..
“அந்த பெண்ணை ஒழுங்கா பாத்துக்க தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. புரியுதா?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க.. அவர் வேக வேகமாக தலையாட்டி நகர்ந்து நிற்க. சுகன் ஒரு ஆராய்ச்சி பார்வையோடு துருவை பின் தொடர்ந்து சென்றான்.
அனு தூங்கி எழுந்து மதியத்துக்கு மேல் தான் வந்தாள். ஆனால் அவளிடம் எதையும் கேட்கவில்லை சாவித்ரி அம்மா. அனுவுக்குமே எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. எப்பொழுதும் போலவே இருந்தாள். ஆனால் மனதின் குழப்பம் முகத்தில் தெரிய நெற்றியில் முடிச்சுகள் தோன்றின.
அவளைப் பார்த்துக் கொண்டே இருந்த சாவித்ரி அம்மாவின் மனதுக்குள் பல கணக்குகள். ஆனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவளை கவனித்துக் கொண்டார்.
“சாவி மா நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு வருவோமா?” என்று அவள் கேட்க..
“என்ன அதிசயமா கோவிலுக்கு கூப்பிடுற?”
“இல்ல சும்மாதான். கொஞ்சம் மனசு குழப்பமா இருக்கு.. கோவிலுக்கு போனா எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்! அதனால தான்!” என்றவளின் மனதில் உள்ள குழப்பங்களை ஓரளவு யூகித்துக் கொண்டவர் சரி என்றார்.
அதன்படி மறுநாள் கோவிலுக்கு சாவித்ரி அம்மாளோடு சென்றாள் அனு. அதுவும் முதல் முதலில் இவள் சென்று அதே அம்மன் கோவிலுக்கு தான்.
அன்று “இலவச தரிசனம் அந்த பக்கம் இருக்கு போமா!” என்று துரத்தியவர்கள்.. இன்றோ “மேடம் விஐபி வரிசை இந்த பக்கம்.. வாங்க வாங்க..” என்று மரியாதையோடு அழைத்து சென்றார்கள். அம்பாளின் அருகே நின்று தரிசனம் முடித்தாள்.
‘பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுதெல்லாம் கடவுளின் கருவறை வரை பாய்கிறது..’ நினைத்தவளுக்கு மெல்ல சிரிப்பு எட்டிப் பார்த்தது திருப்தியாக அம்மனை அருகே நின்று தரிசனம் முடித்து வந்தவளுக்கு மனதில் நேற்றைய மனக்குழப்பங்கள் இன்றி சற்று ஆறுதலாக இருந்தது.
அவள் அருகில் திடீரென்று “என்னம்மா எப்படி இருக்க? இதான் உங்க மாமியாரா?” என்று குரலில் கொஞ்சம் பரிச்சயமாக தெரிய.. திரும்பி பார்த்தாள். அன்று பார்த்து அதே பெண்மணி.
அன்று பசித்தவளுக்கு அன்னபூரணியை அப்பொழுது சரியான நேரத்தில் உணவு கொடுத்தார் அல்லவா? எங்கன மறக்க முடியும் அந்த முகத்தை? அவளோ விரிந்து நமட்டு சிரிப்போடு சாவித்ரி அம்மாவை பார்த்துக் கொண்டே ஆம் என்றாள்.
“ஏட்டி.. நான் என்ன உனக்கு மாமியாரா?” என்று மெதுவாக கிசுகிசுத்தார் சாவித்ரி அம்மா.
“இல்லையா பின்ன? எப்ப பாரு எட்டிக்கு போட்டின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க.. உறவா இல்லை என்றாலும் உரிமையா நீங்க மாமியார் தான்! அப்படி தான் சொல்லுவேன்” என்று இவளும் அவர் காதில் கிசுகிசுக்க.. இவர்கள் இருவரும் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அந்த பெண்மணி “நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” என்று திகைத்துப் பார்த்தார்.
“இல்ல இல்ல மா.. அன்னிக்கு நீங்க தான் எனக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்தீங்கனு என் மாமியார் கிட்ட சொன்னேன்!” என்று அந்த மாமியாரில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூறினாள்.
அவர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேச.. அவளின் தாய்மை தாங்கிய வயிற்றை ஆவலோடு பார்த்து “எத்தனாவது மாசமா?” என்று கேட்டார்.
“ஆறு முடிஞ்சு ஏழு தொடங்க போதுமா” என்றாள்.
ஆனால் அவள் வயிற்றை பார்க்க அப்படி தெரியவில்லையே என்று யோசனை பார்க்கும்போது, அதை புரிந்து கொண்ட அனு “ட்வின்ஸ்!” என்றதும் “சந்தோசம் மா.. நல்லா இரு இரு” என்று சந்தோசமாக கூறினாலும் முகத்தில் ஒரு வருத்தம் இழையோடியதை அனுவும் கண்டுபிடித்து அமைதியாக இருக்க.. ஆனால் சாவித்திரி அம்மா வாய் தான் சும்மா இருக்காதே.. “உங்களுக்கு எத்தனை பேர பிள்ளைங்க” என்று கேட்டார்.
“எங்கங்க.. என் மகன் வாழவே காணோம்? இதுல எங்கிருந்து பேரப்பிள்ளைகள் எல்லாம் பொறக்குறது” என்று முணுமுணுத்தார்.
“என் பையன் சீக்கிரமே குழந்தை குட்டியோட குடும்பமா இருக்கணும்னு சொல்லி தான் எப்பொழுதும் இந்த கோயிலுக்கு வந்து வேண்டுகிறது. அது மட்டும் அல்ல அடுத்த மாசம் எங்க செலவுல ஏழ்மையான பெண்களுக்கு வளைகாப்பு செய்ய முடிவு எடுத்திருக்கோம். அதை பத்தி கோயில் தர்மகர்தாவிடம் பேச தான் வந்தேன்” என்று சிறிது நேரம் இவர்களோடு உரையாடிவிட்டு சென்றார்.
வளைகாப்பு என்பதன் பெரிதாக அனுவுக்கு ஆசை எல்லாம் வரவில்லை. ஆனால் சாவித்ரி அம்மாவுக்கு யோசனை ஆனது முன்னே செல்லும் அந்த பெண்மணி இடம் இவருக்கு பேச வேண்டியிருந்தது.
“நீ ஒரு நிமிஷம் இங்கே இரு.. அங்க புளியோதரை கொடுக்குறாங்க நான் போய் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று அவளிடம் கூறி அப்பெண்மணியை சந்திக்க சென்றார். ஆனால் அவரோ அப்போதுதான் காரில் ஏறி செல்வதை மட்டுமே சாவித்ரிமால் பார்க்க முடிந்தது.
அன்று வேலைக்கு சென்று துருவையும் தாரதி வாங்க வாங்க என்று வாங்கிவிட்டாள். “இப்படி அந்த பொண்ணுக்கு பிபி எகிறி மயக்கம் போடற அளவுக்கு நீங்க வச்சிருக்கீங்க? ஒன்னு இல்ல ரெண்டு குழந்தைங்க வயித்துல.. அவளோட சேர்த்து மொத்தம் மூன்று உசுரு. கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கங்க. அனு கூட பேசுங்க அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க” என்று கர்ப்பம் தரித்த மனைவி பற்றி கணவனுக்கு வழக்கமாக அவள் அறிவுரை கூறுவது போலவே துருவிடம் அனைத்தையும் கூறினாள்.
“ஹேய் டாக்டர் தாரதி.. ஜஸ்ட் ஸ்டாப் இட். நான் என்னமோ அவளோட புருஷன் மாதிரி அவ்வளவு கேர் பண்ண சொல்றீங்க.. ஷி இஸ் ஜஸ்ட் சர்போகேட் மதர்” என்று அவனும் சற்று கடுப்பாக பேச..
“வாடகை தாயினாலும் வயிற்றில் இருக்கிறது உங்கள் குழந்தைகள் தானே? அதை நினைச்சு பாத்தீங்களா? இந்த காலத்துல எத்தனை பேர் இந்த மாதிரி குழந்தை இல்லாமல் வருஷக்கணக்கா தவம் இருக்காங்க.. பத்து வருஷம் 15 வருஷம் கழிச்சு பெற்றுக்கொள்கிறார்கள் தெரியுமா? உங்களுக்கு உங்க மனைவிக்கும் என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதிலே குழந்தைகளையே தண்டிச்சுடாதீங்க.. குழந்தைங்க நல்லா பிறக்கணும்னா அதுக்கு அனு ஆரோக்கியமாகவும் மன ரீதியா சந்தோஷமாகவும் இருக்கணும்! அது ரொம்ப அவசியம்! இனிமே எல்லாம் உங்க கையில தான்..” என்று அவள் வைத்து விட்டாள்.
இவனும் சற்று தலைவலியோடு தான் இருந்தான். காரணம் அன்று இவன் கான்ஃபரன்ஸூக்காக சிங்கப்பூரில் போயிட்டு வந்த முதல் இவனுக்கு சில பல எதிரிகள் முளைத்திருந்தனர். பொதுவாக இவனுக்கு கிடைக்கும் சில காண்ட்ராக்டர்களை தட்டி பறித்து இருந்தனர்.
ஆனால் கடைசி நிமிடத்தில் அனைத்தையும் தன் வசப்படுத்தியிருந்தான் துருவ் வல்லப் வல்லவனாய்!!
கூடவே புல்லுருவியை முளைத்திருக்கும் அந்த எதிரிகளைப் பற்றி கண்காணிக்கவும்.. அவர்கள் இல்லை சுற்றி ஷேடோ போடவும் ஆட்களின் நியமிக்கவும்.. தன் பாதுகாப்பையும் தன் தொழிற்சாலையின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும்.. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் பற்றிய மூன்று மாத ரிப்போர்ட்டை தனியார் துப்புறியும் நிறுவனம் இடம் இருந்து விசாரிக்கவும்.. என்று காலையில் இருந்து அவனுக்கு சரியான வேலை சரியாக இருந்தது!
அதனால் காலையிலிருந்து மிகுந்து டென்ஷனில் தான் இருந்தான். கூடவே தாரதி வேறு அவனை ஏற்றி விட்டிருக்க.. ‘அப்படி என்ன பெரிய இவ அவ.. குழந்தை பெத்துக்குறது எல்லாம் ஒரு பெரிய மேட்டரா?’ என்று கடுப்போடு தான் இன்றும் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தான்.
காரில் இருந்து இவன் இறங்க.. தோட்டத்தில் மெல்ல நடை பயின்று கொண்டிருந்தாள் மாலை வேளையில் அனு. மேட்டினிட்டி உடையில் மெல்ல நடந்தபடி ஒரு கையை இடுப்புக்கு முட்டு கொடுத்து சற்றே சாய்ந்தாற் போல் நடந்தவளை பார்த்தவனின் மெல்ல துயுவின் கால்கள் அவன் கட்டளையை கேட்காமல் அவள் புறம் நடந்தன.
சற்று தூரத்தில் அமர்ந்து அனு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சாவித்ரி அம்மா.. துருவ் இவளை நோக்கி வருவதை தூரத்தில் இருந்து பார்த்தவர், அவன் நெருங்கி வந்ததும் இடுங்கின விழிகள் மெல்ல அளவிட “அனு இதோ வந்து விடுகிறேன்” என்று சென்று விட்டார்.
“ஹாய்.. ஆர் யூ ஓகே?” என்றவனின் குரலில் அவள் திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. நிலைத்தடுமாறி விழப் போனவளை பற்றி,
“ஹேய். .ஹேய்… ரிலாக்ஸ்..! நான் தான்!” என்றான் அவள் அருகில் நெனக்கமாக நின்று!
நேற்று போல் எதுவும் செய்து விடுவானோ என்று சற்று பயத்தோடு தான் அவனைப் பார்த்தவளின் பார்வை அவனுக்கு புரிய.. “அது.. அது.. நேத்து கொஞ்சம் ஓவர் கோபம். அதுல நீனும் சீண்டின மாதிரி கொஞ்சம் பேசினது நிஜமாகவே என்னை கொஞ்சம் சீண்டி விட்டுடுச்சு.. அதான்..” என்றதும் அவள் முறைத்தாள்.
“அதுக்குன்னு ஒரு பொண்ணு கிட்ட அப்படித்தான் நடந்துப்பீங்களா? உங்களுக்கு கோபம் வந்தா அதுக்கு நான் என்ன செய்ய?” இப்போது அவள் கோபத்தோடு கேட்க..!!
“நீனும் ஒரு ஆம்பளை கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று பதிலுக்கு அவனும் சீறினான்!!
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு பார்க்க சற்று அந்த முறைத்தல் ஒரு இலகுவான சிரிப்பாக மாறியது. அவளுக்கும் புரிந்தது தான் நாமும் அவருடைய அந்தரங்கத்தை பற்றி பேசியிருக்கக் கூடாது என்று!
“சாரி..! நானும் அப்படி பேசியிருக்க கூடாது!” என்றாள் கண்களை சுருக்கி கெஞ்சலாக..! அழகாக..!!
“உன் சாரி அக்செப்டட்! நானும் சாரி..!” என்றான் அவனும் கற்றை மீசைக்கடியில் பளீரிடும் வெண் பற்கள் தெரிய புன்னகையோடு..
“எதுக்கு இப்படி இருட்டுற வேளையில இங்கே நடக்குற.. வீட்டுக்குள்ளேயே வாக்கிங் பண்ண வேண்டியதுதானே?” என்று கேட்டான்.
“ஈவினிங் கொஞ்சம் சாப்பிட்டது ஒரு மாதிரி வாமிட்டிங் சென்சேனாகவே இருக்கு. கொஞ்சமாக இப்படி விஸ்தாரமா தோட்டத்துல நடக்கலாம்னு நடந்தேன்” என்று மெல்லிய புன்னகையோடு.
“ஏன் ஈவினிங் சாப்பிட்ட?! ஆஃப்டர்நூன் சாப்பிடலையா..?” மெல்லிய அக்கறை எட்டிப் பார்த்தது குருவின் பேச்சில்!
“நீங்க வேற சார்… நார்மலா சாப்பிடுற அளவுக்கு இப்பல்லாம் சாப்பிடவே முடிய மாட்டேங்குது. வயிறு பெருசா வளருதா.. அது போய் நம்ம ஸ்டொமக்க டிஸ்டர்ப் பண்ணுமா, அதனால முன்ன சாப்பிடுற அளவுல இப்போ பாதி தான் சாப்பிடுறேன். அதான் மத்தியானம் கொஞ்சம் ஈவினிங் கொஞ்சமா பிரிச்சு பிரிச்சு சாப்பிடுறேன். அதுவுமே ஒரே நெஞ்சு எரிச்சலா ஒரு மாதிரியா இருக்கு” என்று அவள் தொண்டையை நீவி விட்டு கொண்டே பேச, அவனுக்கு சற்று வருத்தமானது இவளை நிலை கண்டு…
“சரி வா… அப்படியே கொஞ்சம் வாக்கிங் கடற்கரையோரம் போகலாம்” என்றதும் அவளும் கண்கள் ஒளிர “அங்க பீச்லையா? வாக்கிங் போலாமா? யாரும் சொல்ல மாட்டாங்களா?” என்றாள்.
சிரித்துக் கொண்டே “வா..!” என்றான். பங்களா ஓரம் இருந்து கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தவன் “இந்த இடம் ஃபுல்லா என்னது தான்! பப்ளிக் ஆள் யாரும் வர மாட்டாங்க! நமக்கே நமக்கு மட்டும் தான்! பிரைவேசி உண்டு.. சோ.. நீ தினமும் கூட இங்க வாக்கிங் வரலாம்..” என்று கூறிக் கொண்டே அருகில் பார்க்க அவளை காணும்.
எங்கே என்று இவன் திரும்பிப் பார்க்க.. இவனுக்கு 20 அடிக்கு பின்னால் பெரிய வயிற்றை சுமந்து கொண்டு ஆழி தேர் போல அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் அனு. அதுவும் கால்களை நேராக வைத்து நடக்க முடியாமல் தாங்கி தாங்கி அவன் நடக்க.. மேலும் அந்த பீச் மணலில் அவளின் கால்கள் புதைய.. அவள் நடையின் வேகம் தடைப்பட்டு மெதுவாகவே வர முடிந்தது.
இடுப்பை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு ஒரு மாதிரி சாய்ந்த நிலையில் அவள் நடந்து வர அவள் காலில் போட்டிருந்த அந்த செப்பல் வேறு அந்த பீச் மணலில் புதைந்து புதைந்து போக.. நடக்க முடியாமல் சிரமத்தோடு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க… அவ்வப்போது நின்று நின்று பெரிய மூச்செடுத்து ஆசுவாசப்படுத்தி கொண்டு வந்தவளை..
இமை சிமிட்டாமல்.. கண்ணெடுக்காமல்.. பார்த்தவனின் மனதில் ஏதேதோ எண்ண குவியல்கள்!
“ஒரு குழந்தை பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டப்படணுமா?” என்று முதன் முதலில் அவளுக்காக யோசித்தான் துருவ் வல்லப்!
எந்த உணர்வை கணவனுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அப்சரா அத்தனை மெனக்கட்டாளோ.. அந்த உணர்வு இயற்கையாகவே அவனிடம் தோன்றியது அனுப்ரியா மீது!!
அப்சராவும் ஒரு சுயநலவாதி தான்!! ‘எங்கே நாளை பின்ன குழந்தை என்று வந்தும் இவன் மாறாவிட்டால்.. நான் என்ன செய்வது? வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாதே!’ என்று எண்ணத்தில் தான் வாடகை தாயைஅவள் அணுகியது.
ஒருவேளை அவள் கர்ப்பமுற்றிருந்தால்.. கண்டிப்பாக அவளின் கர்ப்பகால கஷ்டங்களை கண்டு துருவ் மாறி இருப்பானோ என்னவோ?
ஆனால் விதி ஒன்று இருக்கிறது அல்லவா?
இன்னாருக்கு இன்னார் என்று அது போட்ட முடிச்சு எவரால் மாற்ற முடியும்??
மெல்ல நடையிட்டு வந்தவளை நோக்கி வேக நடையிட்டு சென்றான் துருவ் வல்லப்..!!
அவளை நோக்கி மட்டுமல்ல.. அவர்கள் வாழ்க்கையை நோக்கியும்…!!
துரு 🤩🤩🤩🤩
இது தானே, எங்க ரைட்டர் ஓட ஹீரோ♥️♥️♥️♥️
இப்படி தானே இருப்பான்🥰🥰🥰🥰🥰
அதுக்கு இவன் என்ன தப்பி போயிருவனா என்ன????
SUPER WRITERJI 😘 😘