ஆழி 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

31

 

 

கைகள் கார் ஸ்டெயரிங்கில் தன் போல இயங்கியது, ஆனால் கண்களோ தன்னவளையே திரும்பி திரும்பி பார்த்து பல்வேறு கதைகளை பேசியது விஷ்ணுவிற்கு…

எதில் தான் சண்டையிடுவது என்று இந்த அப்பாவிற்கும், மாம்ஸ்க்கும் புரியவில்லை என்ற எண்ணம் தான்.. இவர்களுக்கு இப்போது புரிய வைக்கும் மன நிலையும் இல்லை அவனிடம்.. பின் என்ன செய்வது, மாமன்கள், மச்சான்களை தூக்கியது போலவே இப்போது பொண்டாட்டியை தூக்கிட்டான்.. இவர்கள் இங்கே வாதம் செய்து கொண்டு இருக்க, நழுவியவன், அறையில் இருந்த மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி, மெல்ல அழைத்து யாருக்கும் தெரியாமல் காரில் ஏதோதோ சொல்லி ஏற்றி, இதோ மகாபலிபுரம் உள்ள ரிசார்ட் நோக்கி பயணிக்கிறார்கள்… ஃபோனில் அனைத்தும் முடித்து விட்டான்.. வீட்டில் சொல்வதில் இருந்து, ரிசார்ட் புக் செய்வது வரை..

விஷ்ணுவின் பேச்சை கேட்டு முதலில் அதிர்ந்தாலும், இவனின் இந்த அதிரடியை மாப்பிள்ளை செம என்று மச்சான்கள் சொல்லிக்கொண்டே செல்ல.. பெண்களோ எல்லாம் உங்களால் தான் என்று நாகுவையும், வல்லபரையும் குற்றம் சாட்டிவிட்டு சிறு வெட்கத்துடன் நகர.. என்னடா இவன் என்று முழிப்பது இந்த வீம்பு சம்மந்திகளின் நிலை….

சௌமினியோ அவனை முறைத்த வண்ணமே வந்து கொண்டிருந்தாள்.. அவளை பார்த்து வசிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன், " ஏண்டி… முஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்க… வில்லன் கடத்துனது மாதிரி… மாமன் தானே " என்று விசிலடித்தவனை தன் மென் கரங்கள் கொண்டு அடிக்க, விஷ்ணுவிற்கு எங்கே அது எல்லாம் வலித்தது.. அனைத்தையும் வாங்கி கொண்டு, அவ்வளோ தானா … என்று லுக்கில்… 

" எல்லோரும்.. நம்ம பத்தி என்ன நினைப்பாங்க.. அச்சோ.. போங்க மாமா.." 

" என்ன நினைச்சா என்ன டி.. இதுவும் வழக்கமான சம்பிரதாயம் தானே.. இன் பாக்ட் அவங்களே.. ஏற்பாடு செஞ்சு இருக்கணும்… இந்த நேரத்தில போய் இரண்டு அப்பாஸ் விவாதம் பண்ணுறாங்க.. அவங்க பண்றதா பார்த்தா… ஹம்ம்ம் என்னை சிங்கிள் ஆகவே வைக்க பிளான் மாதிரி இருக்கு.. நம்ம குடும்பத்துக்கு அதிரடி தான் கரெக்ட்…எதமா பதமா எல்லாம் சரியே வராது .. என்ன நான் சொல்லுறது..,"

" அப்படி என்ன உங்களுக்கு அவசரம்"

" என்ன அவசரமா…அடியே அவனவன் கல்யாணம் முன்னே மிங்கிள் ஆகுறாங்க.. ஐம் வெரி ஜெண்டில் மேன் யூ நோ… பாரு இரண்டு தரம் உன்னை கல்யாணம் பண்ணியும்.. ஐம் ஸ்டில்… என்று மேல பேச போனவனை தன் விரல் கொண்டு அடக்கினாள். 

 " போதும்.. போதும்… " என்றாள் வெட்கம் மிளிர, அவள் விரலில் தன் அதரங்களை ஒற்ற, அவள் நாணி தன் விரலை எடுத்து கொண்டாள். 

" இவ்வளோ டிரெய்னிங் கொடுத்தும் உனக்கு பத்தலை மினி டியர்…" என்று ஒற்றை கண் அடித்தவனின் செய்தி புரிய, அவனின் தோள் வளைவிலேயே தன் முகம் மறைத்தாள்.

குறும்பு பேச்சும், நாண முறுவலுமாய் நேரம் செல்ல, ரிசார்ட் வந்து சேர்நதனர்.

கையில் சிறு பையுடன் வந்தவனை பார்த்து அவள் நெற்றி சுருங்க, " எல்லாமே பிளான் பண்ணி தான் செய்யணும் மினி டியர்" என்றவாறே அவளை அழைத்து சென்று, தாங்கள் முன் பதிவு செய்த அறையின் சாவி வாங்கி சென்றான் தன்னவளோடு…

தங்களுக்கான அறையை திறந்தவன், உள்ளே செல்ல பின்னே தொடர்ந்தவள் இருளில் மூழ்கிய அறையை புரியாது நோக்க, அறைக்குள் நுழைந்த விஷ்ணுவை காணாமல், மேற்கொண்டு செல்ல பயந்து, அறை வாசலியே நின்று கொண்டிருந்தாள்.

அறை கதவு சாத்தப்பட்டு, வெளியில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் இல்லாத போக, மொத்தமாக இருளில் மூழ்கியது அறை.. அவளுக்குத் திகிலை மூட்டியது..

இருளில் தன் கண்களை பழக்கப்படுத்த, அதற்குள் அவள் இடையில் ஊர்ந்த கையின் ஸ்பரிசத்தை உணரும் முன், அனிச்சை செயலாக வாய் வீலிட… சத்தம் வெளிவரும் முன்னே அவள் இதழ்கள், விஷ்ணுவின் இதழ்களால் சிறைப்பட்டு, இல்லறத்தின் இனிய தொடக்கத்தை துவங்கியது..

இதழ்கள் இரண்டும் இணைபிரியாது இருக்க, இடையில் ஊர்ந்த கரங்கள், சற்றே கீழே பயணித்து, அவளின் அழகியலை ஆராய்ந்து கொண்டே சென்றது. அவளை தன் உயரத்துக்கு விஷ்ணு தூக்க, மயக்கதிலிருந்த அவள் விழிகள் மெல்ல அதிர்ச்சியை காட்டி, பின் அந்நிலையையும் அனுபவித்து தன் மயக்கத்தை பிரதிபலித்தது..

மூச்சு காற்றுக்கு கூட பிரியா வண்ணம் தன்னவளை தன்னுடன் இறுக்கி கொண்டே அவன் முத்ததெடுக்க, மயக்கங்கள் மீறிய இந்நிலை அவளை துவள துவங்க, அவளை அள்ளி எடுத்தவன், அருகில் இருந்த படுக்கையில் கொடி என படரவிட்டான்..

கண்கள் முடிய நிலையில் இருந்த சௌமினி, தன்னவன் ஸ்பரிசம் தன் அருகில் இல்லாமல் இருக்க, மெல்ல கண் விரித்து பார்த்தவள் அதிர்ச்சியில்…

அறை முழுக்க, இதய வடிவிலும், ரோஜாக்கள் வடிவிலும் மெழுகுவர்த்திகள் மெலிதாக ஒளிர்ந்து, மென் வாசனையை பரப்பி கொண்டிருக்க, அறை மற்றும் கட்டில் முழுவதும் செய்யப் பட்டிருந்த மிதமாக அலங்காரம் அப்போது தான் அவள் கண்ணில் பட்டது.. இவ்வலங்காரங்கள் எல்லாம் , ஏற்கனவே மன்னவன் தீண்டலில் உயிர்த்து எழுந்த அவளின் உணர்வுகளை மேலும் மேலும் கூட்டுவதாய்…

கண்கள் விஷ்ணுவை தேட, பாதங்களில் ஏற்பட்ட குறுகுறுப்பு அவனின் இருப்பை காட்ட, அதுவரை அவன் இட்ட மாதிரியே சயணித்து இருந்தவள், மெல்ல எழுந்து உட்கார, விஷ்ணு தன் காதல் லீலைகளை தொடங்கி இருந்தான்..

கால் விரல்களில் அவன் ஆரம்பித்த முத்த யுத்தம் தொடர்ந்து முன்னேற, அமர முடியாமல் சௌமினி மீண்டும் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்.

விஷ்ணுவின் தொடர் முன்னேற்றத்தால் எழுந்த உணர்ச்சிகளை, இவள் கீழ் உதட்டை தன் வெண்பற்கள் கண்டு கடித்து சமனாக்க… மெல்ல மெல்ல அவள் சேலை அவளிடம் இருந்து விடை பெற்றது.. சூரியனை எதிர் நோக்கும் அல்லி மொட்டுகள் என அவள் கொங்கைகள் , அவனை மேலும் மேலும் பித்தனாக்கியது.. அன்று அவன் கைகள் மட்டுமே உணர்ந்த மென்மைகளும், விரல்கள் விளையாடிய நாபி குழைவுகளும் இன்று அவனின் இதழ்களுக்கு விருந்தாகின… இராஜ சூய யாகத்தில் விடப்படும் குதிரை செல்லுமிடம் எல்லாம் எவ்வாறு அவ்வரசனுக்கு சொந்தமோ.. அதே போல விஷ்ணுவின் இதழ்களும் கைகளும் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு சௌமினியின் அங்கங்களை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள போராடின.. போராட்டத்தின் முடிவில், சௌமினி பல்லவன் சிற்பம் போல மஞ்சத்தில் மிளிர்ந்தாள்.

தன் இதழ்கள் மற்றும் கைகளின் வேலை மஞ்சள் நிறத் தேவதை பெண் அந்தி வான நிறத்தை சூட்டி கொண்டதை கண்டு அவனின் உணர்ச்சிகள், பலவித எழுச்சிகள் எழுப்ப, மெல்ல அவள் மீது படர்ந்தான் விஷ்ணு..

தாம்பத்தியத்தின் பால பாட கற்றலில் பல பிழைகள் அவர்கள் புரிய… முதலில் ஏற்பட்ட பிழையை திருத்தம் செய்ய, மீண்டும் மீண்டும் அவர்கள் முனைய, புரியாத பல புதிர்களுக்கான விடைகளும், நிறைய புரிதல்களும் கிடைக்க பெற… புதிதாக கற்றுக்கொண்ட அந்த பாடம், மிக விருப்ப பாடமாக மாற… விடியம் வரை அவர்கள் கற்றல் குறைய வில்லை.. அவளுள் தேடி தேடி அவன் தொலைய, அவனுள் தேடி தேடி அவள் தொலைய முடிவில்லா இந்த தேடல் பல இன்பங்களை அவர்களுக்கு வாரி வழங்கியது.. 

முடியா இரவை... விடியா பகலை அவர்கள் தேடலுக்கு அழைக்க, இதற்கு மேல் சிறிது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என்று, சூரியன் உதித்து அவர்களை தூக்கத்தில் ஆழ்த்தியது…

தன் மார்பின் மீது அதீத களைப்பில் தூங்கியவளை மெல்ல நகர்த்தி மஞ்சத்தில் கிடத்தி, குளியலறை புகுந்தான் விஷ்ணு..

மீசையின் இனிய இம்சையில் மெல்ல கண் விழித்தவள், விஷ்ணுவின் வசீகர புன்னகையில் கட்டுண்டு, தன் கைகளை அவன் கழுத்தில் சுற்றி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.. அவளின் இச்செயல் கற்ற பாடத்தை அவன் மீண்டும் பரிசோதிக்க அழைப்பை விடுக்க.. மீண்டும் ஒரு அழகிய கூடல் அங்கே.. 

இருவரும் இளமை பசியில் திளைத்து இருக்க, இருவருக்கும் வயிற்று பசி எங்கே தெரிய..சிறிது நேரம் உறங்கி ஓய்வு எடுத்தார்கள் இரவுக்கான தேடலுக்கு…

மாலையில் சௌமினியின் நச்சரிப்பில் தான் அவளை கடற்கரைக்கு அழைத்து வந்தான் அவன். அலையில் விளையாடிய அவளை தான் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இன்று அவள் அழைக்காமலே அவளுடன் சேர்ந்து அலையில் அவளுடன் கை கோர்த்து நிற்க.. புது புது வார்த்தைகள் இல்லா மொழிகள் அங்கே பரிமாறப்பட்டது..

அறையில் நுழைந்து சௌமினியை பார்க்க… அவளோ குளியல் அறையில் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் கதவை அடைக்கும் முன் நொடி பொழுதில் உள் நுழைந்து இவன் கதவு அடைக்க..

" மாமா… நான் குளிக்கணும்…"

" குளி டி.."

" நீங்க போங்க…" என்றாள் வார்த்தை சிக்கி..

" வெளியே போகவா… ஸ்பைடர் மேன் மாதிரி பாய்ஞ்சு வந்தேன்.. தண்ணிய ரொம்ப வேஸ்ட் பண்ண கூடாதாம்.. மினி டியர்" என்றான் அவன் அணைப்பில் கொண்டு வந்து..

" அதனால…." வாகாக அவன் அணைப்பில் நின்று கொண்டு…

" அதனால்ல… சேர்ந்தே குளிபோமாம்…" என்றவன் அவனின் ஆசையை நிறைவேற்றியே வெளியில் வந்தான் அவளையும் கூட்டி கொண்டு..

உணவுக்கு பின்னான அவர்கள் தேடல்களின் முடிவை விடியல் வந்து முடித்து வைக்க.. இரண்டு நாள் இன்பமாக கழிந்தது இருவருக்கும்..

அன்னைக்கு ஃபோன் செய்தது அவர்களை தேனி போக சொன்னவன், இங்கிருந்தே சௌமினி அழைத்து கொண்டு தேனி சென்றான்.

தேனியில் மிக பிரம்மாண்டமாக நடந்தது அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி.. 

ஊருக்கு செல்லும் முன், சுஜியை தனியா பிடித்தவள், " ஏய் ரொம்ப பண்ணாதடி .. எங்க அண்ணன் உன்னை சுத்தி வரது தெரியும் தானே… "

" நான் வருசகணக்கா சுத்துனேன் தானே.. உங்க அண்ணா.. ஒரு மாசம் தான் சுத்துறாரு… சுத்தட்டும் சுத்தட்டும்… இது கூட நல்லா தான் இருக்கு செல்லம்". என்ற சுஜியை இவள் முறைக்க.. 

" ரொம்ப முறைக்காதடி… கொஞ்சமே கொஞ்சம் நானும் இதை என்ஜாய் பண்ணிக்கிறேன் டி.. உங்க அண்ணனுக்கு ஃபீல் எல்லாம் பத்தல.. ஃபீல் வரட்டும் " என்று முடித்துக்கொள்ள அவள் அதை விஷ்ணுவிடம் சென்று கூறி குறைபாட்டாள்.

" மினிம்மா.. சுஜி சொல்லுறது உண்மை தான் . ஈஸி கிடைச்சா அதன் மதிப்பு தெரியாது.. கொஞ்சம் நாள் அவனும் சுத்தட்டும்" 

பிறகு சென்னை சென்று இவர்கள் அங்குள்ள வரவேற்ப்பு வேலைகளை பார்க்க.. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான் விஷ்ணு அவ்வலுவலகம் சென்றான். 

முதலில் சென்று பார்த்தது நட்டுவை தான்.. இப்போது தான் அவனும் உடல் நிலை சரியாகி வேலைக்கு வந்திருந்தான்..

" என்ன மச்சி.. நல்லா இருக்கியா.."

" உன்ன மாதிரி ஒரே ஒருத்தன் நண்பனா இருத்தா.. எப்படி டா நல்லா இருப்பேன்.. ஏதோ எங்க அம்மா பண்ணின புண்ணியம் உயிரோட இருக்கேன்" என்று சொல்லி அவன் நொந்து கொள்ள, விஷ்ணு பார்த்து சிரித்து விட்டு, தன் வரவேற்ப்பு அழைப்பிதழை கொடுக்க.. நட் பயங்கர ஷாக்..

" அடப்பாவி… கல்யாணமே ஆகிடிச்சா டா.. எப்படி அந்த குடும்பத்தில் பெர்மிஷன் வாங்கின" என்றவனிடம் ஃபிளாஷ் பேக் சொல்லி முடித்தான் விஷ்ணு.. " என்னது அவனுகளையே… தூக்கிட்டீய்யா…" என்று கூறிய வாயை பிளக்க.. அவன் பிளந்த வாயை முடிய விஷ்ணு.." ரிசப்ஷன் வந்து சேரு டா" என்றுவிட்டு சென்றான்.

அலுவல அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்தவன் கோபியர் கூட்டத்தையும் விடவில்லை.. அவர்களின் கோகுல கண்ணன் திருமணத்தில் அவர்களுக்கு அபரிமிதமாக சோகம் இருந்தாலும் ரிசப்ஷன் செல்ல தவறவில்லை அவர்கள்.. 

சென்னையிலும் மிக சிறப்பாகவே நடந்தது விஷ்னுப்ரசாத், சௌடாம்பிகை வரவேற்பு..

சுகியும் நட்டுவே நமக்கு செட் ஆகும், என்று அவனிடம் பச்சை கொடி காட்ட.. அவனோ இறக்கை இல்லாமல் பறந்தான்.. எப்படி . ஏன் என்று கேட்க, " அவ்வளோ அடி நண்பனுக்காக வாங்குன நீங்க… நாளைக்கு பொண்டாட்டி கிட்ட வாங்க மாட்டீங்களா என்ன" அவள் சொன்ன பதிலில், இறக்கைகள் கட் ஆனா பறவையாய் தரையில் நட்.. ஆனாலும் முரட்டு சிங்கிள் இருந்து மிங்கள் ஆனா எபெக்ட்டில் சுற்றி கொண்டிருக்கிறான். 

விஷ்ணு அவன் பார்த்து கொண்டிருந்த புராஜக்ட் முடிந்தவுடன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, தன் தந்தை தொழிலை கையில் எடுத்து கொண்டான்.. 

மினியையும் அவன் விடவில்லை.. தன்னுடனே அவளை அலுவலகம் அழைத்து சென்றான். அவர்களின் காதல் லீலைகள் வீட்டை போலவே அலுவலகத்தில் சிறப்பாக மிக சிறப்பாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது…

ஒருவழியாக நான்கு மாதங்கள் ரிஷியை அவள் பின்னே அலைய விட்டு தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் சுஜி… அவளின் திருமணத்தில் தன் மூன்று மாத சிசுவை சுமந்து திரிந்து கொண்டே இருந்த மினி பின்னே, விஷ்ணு சுற்றி கொண்டிருந்தான் காதல் கணவனாக.. அனைவரும் பொறாமை கொள்ளும்படி…

ஏழாம் மாதம் வளைகாப்பு போட விஷ்ணு அனுமதிக்க வில்லை… ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்தி சௌமினியாய் அழைத்து சென்றனர் அவர்கள் பிறந்த வீட்டுக்கு … இப்போது ஸ்லீப்பர் கூடன் கூடியே ஒரு ஆம்னி பஸ் சொந்தமாக எப்போதும் சௌமினி வீடு வாசலிலே நின்று கொண்டிருக்கிறது… 

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் சென்னையில் வாசம் விஷ்ணு குடும்பத்தார், மீதி ஏழு நாட்களும் தேனி தான்.. பின்னே மருமகளை விட்டு எப்படியிருக்க…

ரிஷியை இப்போது எல்லாம் பார்க்க முடியவில்லை விஷ்ணுவால், சுஜியும் மாசமாக இருக்க, நாத்தி முறை உள்ளவர்கள் பார்த்து கொள்ள கூடாது என்று சுஜி இப்போது அவர்கள் வீட்டில்.. அதனால் பாதி நாள் அங்கே தான் ரிஷியும் விஷ்ணுவை பின் பற்றி…

கதிரவன் உதிக்கும் ஒரு அதிகாலை நேரத்தில் விஷ்ணுவின் தவ புதல்வன் தாய் தந்தையை தவிக்க விட்டு, அதை விட மாமன்களை தவிக்க விட்டு பிறந்தான்..அசிதன் பிரசாத்.. அசிதன் என்றான் வெல்ல முடியாதவன் என்ற பொருளில் அந்த பெருமாள் பெயர் வருமாறு வைத்தது நம் விஷ்ணுவே தான்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top