சூர்யா கிளம்பிவிட்டான் அவனுக்கு முன்பே நிக்கிரெடியாகி ஏர்போட்டில் இருந்தான்
டேய் நீ எங்கடா வர்ற உன்னநம்பி எவ்வளவு பெருய ஹாஸ்பிடலை குடுத்திருக்கேன் நீ எதுக்குடா என்கூட வர்ற ஒழுங்காமரியாதையா போயிரு சூர்யா கோபமாக திட்டவும்
ப்ளீஸ்டா என்னை திட்டதடா எனக்கு முக்கியமான வேலை இருக்கு அதை முடிக்கணும் என்னையும் கூப்பிட்டு போ ஹாஸ்பிடல் பொறுப்பு எல்லாம் முக்கியமானவங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன்
என்னை விட்டுட்டு போகாதடா கூட்டிட்டு போடா அவன் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக அழுக
இவனுக்கு இந்தியாவில் என்ன வேலை
எதற்கு இவ்வளவு பதட்டமென புரியாமல் அவனையும் கூடவே அழைத்துகொண்டு சென்றான்
லண்டனிலிருந்து
இதோ தலைவெட்டிகிராமத்திற்கு மூன்றுகிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பெரியநகரத்தில் இறங்கிகொண்டனர்
அந்தஊர்ல ஹோட்டல்வசதி இல்லடா அங்கபோய் ரெஸ்ட் எடுக்கமுடியாது அதனால இந்த பக்கம்தான் ரூம் எடுத்து தங்கனும் நிக்கி கூறவும் இவனுக்கு இதெல்லாம் எப்படிதெரியும் என்று ரீதியில் பார்த்தான்
எதையும் ஆராயாமல் கூறமாட்டான் என்று அவனும் தலையாட்டி வைத்தான் பலமணிநேரம் பயணம் செய்துவந்ததால் களைப்பாக இருந்ததும் சூர்யா தூங்கிவிட்டான்
நிக்கி அவன்முகத்தை பார்த்து ஐ அம் சோ சாரி டா உன்கிட்ட உண்மைய சொல்ல பயமா இருக்குடா மன்னிப்புகேட்டுவிட்டு தலைவெட்டியான் கிராமத்திற்கு கிளம்பினான்
அவன் போன ஒருமணிநேரத்தில் சூர்யாவுக்கு போன் வந்தது ஹலோ சூர்யாவா உங்கப்ரெண்ட் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க அவரூ கொல்ல துரத்திட்டு இருக்காங்க சீக்கிரம் கூட்டிட்டு போங்க பெண் குரல் கேட்க
மெத்தையில் நண்பனைபார்க்க நிக்கியை காணவில்லை அந்த போன்நம்பர் லொகேஷன் அனுப்பியிருக்க
அதை பார்த்தவாறே அங்குவந்து சேர்ந்தவனுக்கு குத்துயிரும் குலை உயிருமாக போராடிக்கொண்டிருந்த நண்பனை பார்த்ததும் துடித்துபோனான்
அவனுக்கு அருகில் வாயில் நுரை தள்ளியவாறு ஊர்வசிகிடந்தாள்
சொந்தமாக கார் வாங்கியதால் கவலையில்லாமல் போனது இருவரையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்
என்னடா ஆச்சு என்கூடதானே இருந்த சொல்லாம எங்கடாபோன ஏண்டா இப்படி இருக்க எனைனைபாருடா பேசிக்கொண்டே மருத்துவமனைக்கு செல்ல நிக்கி பேசக்கூட முடியாமல் கிடந்தான்
சூர்யா.. ஊர்வசிக்கு.... பாய்சன் குடிக்கவச்சிட்டாங்க உயிருக்கு போராடிட்டு இருக்கா அவளை எப்படியாவது காப்பாத்திருடா சூர்யா கையை பிடித்துக்கொண்டு கூறிவிட்டு மயங்க
ஊர்வசிக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் என்று அவன்சொல்லாமல் புரிந்தது ஆனால் பாய்சன் எதற்குகுடிக்க வேண்டும்
யார் இவனை அடித்தது கேள்விகெல்லாம் விடை கிடைக்கவில்லை
தனியார் மருத்துவமனைக்கு வெகுதூரம் செல்ல வேண்டும் வழியில்லாமல் அரசுமருத்துவமனையில் சேர்க்க அவர்களோ அலட்சியமாக சிகிச்சைகொடுக்க சூர்யாவுக்கு கோபம்வந்துவிட்டது நல்லவிதமாக ஏதோ பேசிபார்த்தான் அவர்கள்கேட்கவில்லை அவசர பிரிவில் இருக்கும் அத்தனை டாக்டர்களையும் அடித்து வெளியே தள்ளிவிட்டு கதவைபூட்டிகொண்டு இரண்டுபேருக்கும் முதலுதவிசெய்தான்
கூடவே இருக்கும் நர்ஸ்கள் அதிர்ந்து போய் அவள் கேட்பதையெல்லாம் எடுத்துகொடுத்தனர்
விஷயம் மருத்துவமனை முதல்வருக்கு செல்ல தன்படைகளோடு வந்துவிட்டார்
அதற்குள் நிக்கிக்கு முதலுதவிசெய்து ஆக்சிஜன் மாஸ்க் மாற்றிவிட்டான் தலையில் பலத்த அடியால் கோமாஸ்டேஜ்க்கு போய்விட்டான்
ஊர்வசிக்கு கொடுத்த விஷததையெல்லாம் வெளியேகொண்டு வந்திருந்தான்
இருவரும் மூச்சுவிட்டபிறகே அவனுக்கே மூச்சு வந்தது இரண்டுபேரும் மயக்க நிலையில் படுத்திருக்க
அவசர பிரிவு கதவை இடித்துதள்ளாத குறையாக வெளியே தட்டிக்கொண்டிருக்க கையுறைகளை கழற்றி வைத்துவிட்டு கதவைத் திறக்க வெளியே பெரிய பட்டாளமே நின்று கொண்டிருந்தது
ஹலோ யாருடா நீ அத்துமீறி ஹாஸ்பிடலுக்குள்ள நுழைஞ்சு அராஜகம் பன்றியா யாருடா போலீஸ்க்கு போன் பன்னுங்க டீன் கூற
தாராளமா போன்பண்ணிக்கோங்க உங்க மருத்துவமனையோட அலட்சியத்தை பற்றி வெளிநாடுவரை பரப்பி இங்கே இருக்கும் அத்தனை பேரையும் வேலையைவிட்டு தூக்கமுடியும் படபடவென ஆங்கிலத்தில் பொறிய
ஆங்கிலத்தில் படபடவென பேசும் இவன் யார் என்றுதெரியாமல் அத்தனைபேரும் முழிக்க
தன் ஐடி கார்டை எடுத்துகாட்டினான்
ஹாஸ்பிடல் டீன் ப்ரெசிடன்ட் அதிர்ந்துபோய் நின்றனர்
லண்டனில் தலைசிறந்த மருத்துவமனையின் நிர்வாகில்லவா
இதற்குமேல் எப்படி எதிர்த்துபேச முடியும்
சாரி சார் இதுபோல் அலட்சியமாக எந்த தவறும் நடக்காது மன்னிப்புகேட்டுகெஞ்ச முறைப்போடு அவர்களை பார்த்துவிட்டு உள்ளே போய் தன் நண்பனை பார்த்தான்
தலையில் அடிபட்டு காமஸ்டேஜ் க்கு போய்விட்டான்
ஊர்வசி வாடிவதங்கியகொடியாக கிடந்தாள்
அவனைத் தொடர்ந்து மருத்துவர்களும் வந்தனர்
மயக்கம் தெளிந்த ஊர்வசி சூர்யாவை பார்த்து பயந்தாள்
அவளுக்கு அருகில் நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தவன் என்ன நடந்துச்சு எதையும் மறைக்காமல் உண்மையை சொல்லிட்டா நல்லது இல்லாட்டி என்னபண்ணுவேன் எனக்கே தெரியாது
சொல்லு என்ன நடந்துச்சு கோபமாக கேட்க
நானும் நிக்கியும் லவ்பன்னோம் சார்
ட்ரைனிங் முடிஞ்சு வந்ததும் வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டாங்க அப்பாஅம்மாகிட்ட கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி நிக்கிய விரும்புறதா சொல்லி அவருக்கும்போன்போட்டு வீட்ல பேசசொன்னேன்
அவரும் வந்துட்டாரு ஆனா வெளிநாட்டுக்காரன் இங்கிலீஷ்காரன் தெரிஞ்சதும் அத்தனைபேரும் அடிச்சு போட்டுட்டாங்க ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணிக்கபாக்குறியான்னு எனக்கு விஷம் ஊத்தி வெளியே தள்ளிட்டாங்க என்னை காப்பாத்துறதுக்காகத்தான் நிக்கி தூக்கிட்டு வந்தாரு பாதிவழியில நீங்கவந்துட்டீங்க அழுதவாறு கூற
அவள் ஊர்பெயரை கேட்டு அம்மா அப்பாவை பற்றியும் கேட்டான்
சார் எங்கப்பா அம்மா என்னைஎதுவும் பண்ணல சார் அந்த ஊரோட தலைவரே தாராவோட அப்பாதான் அவரை மீறி யாராலும் எதுவும் செய்யமுடியாது சார்
ஜாதிமாறி கல்யாணம் பண்ணிக்ககூடாது சார்
கொன்னுருவாங்க ஜாதிவெறிபுடிச்சவங்க சார்
எங்கபோனாலும் தேடிவந்து கொல்லுவாங்க
உங்களாலும் எதுவும் பன்னமுடியாது சார் என்னஎதுக்கு காப்பாத்துனிங்க நான்உயிரோடஇருக்கிறது தெரிஞ்சா தேடிவந்துருவாங்க சார்
நீங்க நிக்கியை கூட்டிட்டு போயிருங்க சார் அவரைகொன்னுருவாங்க சார் தேம்பிகொண்டு கூற
தாரா பதட்டமாக உள்ளே வந்தாள்
சூர்யாவை பார்த்து பயந்தவள் ஊர்வசியிடம் கண்களால் சைகைகாட்டிவிட்டு
கோபமாக
உன்மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சுருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடி பாவி நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சிருந்தா
உனக்குசெலவு பண்ணி படிக்க வெளிநாடுவரைக்கும் கூட்டிட்டு போயிருக்கமாட்டேனே துரோகி
ஏண்டி இப்படி செஞ்ச
நம்ம ஊர்ல ஆளுங்களா இல்ல
ஜாதிகெட்டவன்கூடபோயி வாழனும்னு சொல்லிருக்கியேடி பாவி அவளை அடிக்க அவள் கையை பிடித்துக்கொண்டான்
சூர்யா
என்ன சார் அவளை காப்பாத்திட்டதால் எல்லாம் முடிஞ்சுரும்னு நினைக்காதிங்க உங்களால ஒரு ஆணியும் புடுங்கமுடியாது போலீசுக்கு போகபோறீங்களா இல்ல இந்த ஹாஸ்பிடலில் இருக்கிறவங்கள உதவிக்கு கூப்பிட போறீங்களா
யாரைவேணாலும் கூப்புடுங்க
எங்கப்பாவை மீறி யாராலும் எதுவும் செய்ய முடியாது எல்லாரும் என் அப்பாவுக்கு கீழேதான் இருக்காங்க மரியாதையா ஊர்போயி சேருங்க
ஏய் எந்திரிடி ஊர்வசி கையைப்பிடித்து இழுக்க சூர்யா அறைந்துவிட்டான்
அப்போதே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து இருவரையும்சென்னைக்கு அனுப்பிவிட்டான்
சென்னையிலிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் நிக்கியின் நிலை மோசமாக இருந்தது எப்போது இதயம் வேலைநிறுத்தம் செய்யும் என்று தெரியாது லண்டன்மருத்துவர்கள் கூறிவிட
கான்பிரஷிங்காலில் இருந்த சூர்யாவுக்கு கோபம்மொத்தமும் தாரா மேல் திரும்பியது
டாக்டர் தேவையில்லாத வேலைபாக்காதிங்க ஊர்வசியை எதுக்கு அவன்கூடஅனுப்பிவச்சிங்க மரியாதையா அவளை என்கூட அனுப்பிவைங்க கோபமாக கூறிய தாராவை பார்த்தவன்
என்னோட ஃப்ரெண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது ஊர்வசி உயிரோட உன்கிட்ட திரும்பவருவான்னு நினைக்கிறியா
அவனுக்கே ஏதாவது ஆச்சு அடுத்தசெகண்ட் அவஉயிரோடஇருக்கமாட்ட
அவளை காப்பாத்தி லண்டனுக்கு அனுப்பி வச்சது என் பிரண்டுகூட ஜோடிசேக்குறதுக்கு நெனச்சியா அந்த நெனப்புஇருந்தா மொத்தமா தூக்கிபோட்டுரு
உன் பிரண்டு உயிரோட இருக்கிறதும் சாகுறது என்பிரண்டுகிட்ட தான் இருக்கு வில்லத்தனமாக புன்னகைக்க அரண்டுபோனாள் தாரா
அவரை காப்பாற்றி யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பான் என்று நினைத்தால் இவனோ பழிவாங்க காப்பாற்றியதுபோல் கூறுகிறானே
சார் வேணாம் சார் அவ பாவம்சார் அவளை விட்ருங்கஅழுதவாறு கூற
அவளை விடனும்னா நான்சொல்றதை நீ கேக்கனும்
என்னை கல்யாணம் பண்ணிக்கோ அவளைவிடுறேன் என்று கூற அதிர்ந்துபோய் பின்னால் நகர்ந்தாள்
டாக்டர்... இது... நான்... உங்களை வேணாம் ப்ளீஸ் எனக்கு மாப்பிள்ளை பாத்து நிச்சயம் பன்னி கல்யாணம் நடக்கபோகுது சார்
அவளை விட்ருங்க அவ பாவம்
எங்கப்பா ரெண்டுபேரையும் கொல்ல முயற்சி செஞ்சதும் நான்தான் உங்களுக்கு போன்பண்ணி எல்லாம் சொன்னேன் எங்கப்பா அண்ணன்கிட்ருந்து அவங்கள என்னால காப்பாத்த முடியல யாருக்கும் தெரியாம அவங்கள மெயின்ரோடுவரைக்கும் கூட்டிட்டு வந்தது நான்தான் நீங்கவந்த பிறகுதான் மறைஞ்சுகிட்டேன்
இப்போகூட எங்கப்பாவேட ஆளுங்க அவளைதேடுறதை பாத்துதான் அவளை காப்பாத்துறதுக்காகத்தான் நான் அப்படிபேசினேன் ப்ளீஸ்சார் அவளை விட்ருங்க எதும் பன்னிடாதிங்க
அவளோட நிலைமைதான் எனக்கும் என்னையும்கொன்னுருவாங்க தயவுசெஞ்சு இப்படிபேசாதிங்க சார்
எனக்கு ரெண்டுநாள்ல கல்யாணம் சார்
வீட்ல நான் இல்லாட்டி என்னைதேடிட்டு வந்துருவாங்க நான் போறேன் என்று கிளம்பியவளை இழுத்துபிடித்தான்
என் ஃப்ரெண்ட் இந்தநிலைமையில படுக்கவைச்சுட்டு நீ மட்டும் உங்கப்பன்கிட்ட நல்ல பேர் வாங்கனும் நினைக்கிறியா உங்கப்பன் என் ப்ரெண்டை படுக்கவச்சுட்டு உனக்கு சீரும்சிறப்பா கல்யாணம் பண்ணி வாழவைக்கணும்னு ஆசைப்படுறானா நான்விட்ருவேனா
சார் எங்கப்பா செஞ்ச தப்புக்கு நான் என்னசார் பண்ணுவேன் நானும் ஊர்வசிமாதிரிதான் இந்த ஊரைவிட்டு போனாபோதும்னு இருக்கேன் தயவுசெஞ்சு என்னைதப்பாநினைச்சு என் வாழ்க்கைய கெடுத்துறாதிங்க கையைவிடுங்க சார்
என் கைய தொட்டது எங்கப்பாவுக்கு தெரிஞ்சா உங்க உசுரை எடுத்துருவாரு
தயவு செஞ்சு போயிருங்க
எப்படி எப்படி நான் உன்வாழ்க்கையை கெடுக்கபார்க்கிறேனா
லண்டன் ஃபுல்லா என்னை அசிங்கப்படுத்தி என்பேரை நாறடிச்சுட்டு நீ மட்டும் புருஷன்புள்ளனு வாழனுமா
என் லைஃபை கெடுத்த உன்னை நான் எப்படிசும்மாவிடுவேன் இந்த சூர்யாவை பத்தி தெரியாம கைவச்சுட்ட உன்னைதேடிதாண்டி நான் வந்துருக்கேன் பல்லைகடித்தவாறு ஆங்கிலத்தில் கூற
அரண்டுபோனாள் தாரா
சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வைபார்க்க அவர்களோ அவன் பேசும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளமுடியாமல் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர்
தேம்பி அழுதவளோ நான்செஞ்சது தப்புதான் விளையாட்டுதனமா பண்ணிட்டேன்
தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிருங்க உங்க கால்ல விழுந்துகூட மன்னிப்பு கேட்கிறேன் என்னை விட்ருங்க கையெடுத்து கும்பிட்டு அழுதவளை கண்டுகொள்ளாமல் தலைமுடியை பிடித்து காரில்ஏற்றினான்
சார் சார் ப்ளீஸ் சார் என்னைவிட்ருங்க சார் எங்கப்பாவுக்கு தெரிஞ்சா உங்களையும் சேத்துகொன்னுருவாரு சார்
என்னை விட்ருங்க சார் கதறிஅழுதவளுக்கு ஸ்பிரே அடித்து தூங்கவைத்தவன்
அந்த ஊர் எல்லையைதாண்டுவதற்குள் அவனை சுற்றிவளைத்தது நான்கு ஐந்துகார்கள்
ஸ்டியரிங்கில் தாளம்போட்டபடியே காரிலிருந்து இறங்கியவர்களை பார்த்தான்