Share:
Notifications
Clear all

மோகங்களில் 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

மோகங்களில்… 10

 

“என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம்.. நீங்க தான்..!! நீங்களும் உங்க எக்ஸ் பொண்டாட்டியும் தான்..!!” என்று ஆவேசமாக கூறியவளை விழிகள் இடுங்க பார்த்தான் துருவ்.

 

“திரும்பத் திரும்ப சொல்றேன்.. உன் இந்த நிலைமைக்கு..” என்று வயிற்றியும் அவளையும் சுட்டிக்காட்டி “நீ மட்டும் தான் காரணம்!” என்றவன், “பணத்துக்காக வந்துட்டு இப்ப பேச்சு பேசுறா.. பாரு.. ஜஸ்ட் இரிடேட்டிங்” என்று முணுமுணுத்தான்.

 

“என்ன எப்ப பாத்தாலும் பணத்துக்காக வந்தவ.. பணத்துக்காக வந்தவனு சொல்றீங்க? என்ன பணத்துக்காக உங்க கூட படுக்கவா வந்தேன்? திருடாம பொய் சொல்லாம தப்பான வழியில் போகாமல் செய்யும் எந்த தொழிலும் தப்பு இல்ல.‌. அதுவும் தாய்மைங்கிறது எவ்வளவு பெரிய உன்னதம் தெரியுமா? அது உங்க மனைவிக்கும் உங்களுக்கும் வாரிச பெத்து கொடுத்து அப்பான்னு இந்த சமூகத்தில் உங்களை கவுரப்படுத்த.. அம்மான்னு அவங்களை நிறைவுப்படுத்த வந்தவ நான்.. அதுக்கு சம்மந்தமாக தான் பணத்தை தரீங்க! அப்படி இந்த பிள்ளையை மட்டும் நான் பெத்து கொடுக்கலைன்னா.. இந்த சமூகம் உங்களையும் உங்க பொண்டாட்டியையும் என்ன சொல்லும் தெரியுமா?” என்று தன் மன ஆதங்கத்தை கொட்டினாள் அவனின் பேச்சில்..

 

“ஏய்.. அவளை பத்தி என்கிட்ட நீ பேசவே பேசாத… அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லவே இல்லை! அவள் என் வாழ்வில் முடிந்து போனா அத்தியாயம்” என்று சீறினான்.

 

இன்று அவனின் கோபத்திற்கும் அவனின் நிலைக்கும் காரணம் அப்சரா.. அவனின் எக்ஸ் மனைவி மட்டுமே!

 

‘அவள் பிரிந்து சென்றதால் தான்.. அத்தனை பேரின் அவலப் பேச்சைக் கேட்க வேண்டியது இருந்து. சென்றவள் இவளுக்கும் ஒழுங்காக பணப்பட்டு வாடா பண்ணி அனுப்பி இருந்தால்.. இந்த இம்சையும் எனக்கு இருந்திருக்காது!’ என்று கோபத்தில் கொந்தளித்தான்.

 

ஆனால் அவளை வேண்டாம் என்று வாழ்க்கை போரடித்து விட்டது என்று பிரித்து அனுப்பியதே இவன் தான் என்று ஏனோ இந்த ஆறடி ஆண்மகனுக்கு மறந்து விட்டது.

 

கோபத்தில் நின்றவனின் நரம்பு எல்லாம் முறுக்கி ஏற்கனவே சிவந்தவனின் உடல் இன்னும் ஒரு கோட்டிங் சிவப்பு கலர் கொடுத்தது போல சிவந்து தகித்தது சினத்தில்!

 

“அவங்கள ஏன் நான் இழுக்க கூடாது? எப்படி இருந்தாலும் அவங்க உங்க மனைவியாக இருந்தவங்க தானே? என்ன நான் பொய்யா சொல்லிட்டேன்? அப்போ நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா தானே இருந்தீங்க! நான் மட்டும் பிள்ளை பெத்து கொடுக்கலைனா.. இந்த சமூகம் உங்க பொண்டாட்டியே மலடின்னு பட்டப்பெயர் சொல்லியிருக்கும்.. அதோட விடாம உங்களையும் ஆண்மையில்லாதவனு சொல்லி மட்டம் தட்டி இருக்கும்…” என்றது தான் தாமதம் “ஏய்…!!” என்று அவளின் கழுத்தை அழுத்தி பிடித்தான் துருவ் கண்களில் ரௌத்திரத்துடன்…

 

கழுத்தில் அவனின் இரும்பை ஒத்த முறுக்கிய கை அழுத்தமாக பிடித்திருக்க.. பயத்துடனே கண்கள் வெளிய‌ பிதுங்க.. மூச்சு வேற‌ அவனின் கை அழுத்தத்தில் முட்ட… அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்று மெல்ல எட்டி பின்னாலேயே நடந்தாள் அனு.

 

‘ஆண்மை இல்லாதவன்’ ‘பர்ஃபாமன்ஸ் சரியா செய்யாதவன்’ என்ற வார்த்தைகள் அவனை கோபத்தின் உச்சிக்கு.. அதாவது எரிமலை போல ஏற்கனவே தகித்துக் கொண்டிருந்தவனை இப்பொழுது வெடிக்க வைத்துவிட..‌ தான் என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என்று ஸ்வரமணையே அவனிடம் இல்லை.

 

தன் எதிரில் இருப்பது ஒரு பெண், அவனைவிட பத்து வயது சின்ன பெண், அதுவும் கர்ப்பம் தாங்கி நிற்கிறாள் என்று பிரங்கையே இல்லாமல்.. மேலும் இவனின் கை அழுத்தத்தில் அவள் மூச்சுக்கு திணறுவதை கூட முழுவதாக உணர முடியாமல் அத்தனை ரௌத்திரத்தில் நின்று இருந்தான் துருவ் வல்லப்!!

 

அவளின் வெளிறிய‌ முகமும்… நீர்‌ கோர்த்து கலங்கிய விழிகளும்.. 

கோபத்தில் ஆற்றாமையில் துடித்த உதடுகளும்… மூச்சு வாங்க ஏறி இறங்கிய தனங்களும்.. கண்டவன் அப்போதுதான் சுற்றுப்புறத்தையும் தன்னையும் ஆராய்ந்தான்.

 

அவள் சுவாசம் முட்டி மூச்சுக்கு வாங்குவதைக் கண்டவன், தன் செய்கை எண்ணி அவனுக்கு பிடிக்காமல் போனது. ஒரு கர்ப்பவதியை இப்படி செய்கிறோமே என்றே.. ஆனால் அதற்காக அவள் பேசும் பேச்சை சகித்து கொள்பவன் இல்லையே துருவ்..

 

“ச்சை..” என்று அவளின் கழுத்தில் இருந்து கை எடுத்துக் கொள்ள அவளோ வலித்த கழுத்தை நீவிக்கொண்டும்.. வேக வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டும் இருந்தாள் தன் சுவாசத்தை சீர்படுத்த… ஆனால் அவளின் அந்த கண்கள் அவனை அவ்வளவு குற்றம் சாட்டின!!

 

அதில் அவனுக்கு மீண்டும் ஆத்திரம். “செய்வது எல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்வார்களாம்.. ஆனால் பழி என் மீதா? இந்த துருவ் வல்லபை பார்த்தால் எல்லோருக்கும் எப்படி இருக்கிறது? ஆளாளுக்கு பேச??” என்று கனல் கக்க பேசியவனை கண்டு அவளுக்கு தொண்டையில் நீர் வறண்டது. அவளின் சம்மதம் இன்றியே கால்கள் பின்னே நகர்ந்தது.

 

பின்னால் நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து தன் முன்னே கொண்டு வந்தவன், அவள் கையில் பின்னால் இறுக்கி முறுக்கினான்.

 

அனு அவ்வாறு நகர, அவளது பின்புறம் துருவின் நெஞ்சில் வந்து மெத்தென்று அழுந்தியது. அவளுடைய கூந்தல் வாசனை அவனின் நாசிக்குள் புகுந்தது. அவளது காது மடலும், வழவழப்பான பின்கழுத்தும், செழுமையான தோளும்… அவளுடைய அழகு துருவின் கண்களை பளிச்சென தாக்கியது. அவளோ வலி தாளாமல் அலறினாள்.

 

“ஆஆஆஆ… வலிக்குது..!! உங்களுக்கு பிடிக்கனும்னா.. வேற எதையாவது பிடிச்சு தொலைங்க..!! என் கையை விடுங்க..‌ ஆறு மாத கர்ப்பமா இருக்கிற பொண்ணுன்னு கரிசனை இருக்கா உங்ககிட்ட..” என்று‌ கடித்து துப்பினாள் பற்களுக்கு இடையே..

 

அந்த நிலையிலும் அவள் சீண்ட, அவன் மேலும் டென்ஷனானான். முறுக்கியிருந்த அவளுடைய கைக்கு மேலும் சற்று அழுத்தம் கொடுத்தான். அவள் இப்போது வேதனையில் துடித்தாள். 

 

“நானே நீ பிரக்னண்டா இருக்கேன்னு பாவம் பார்த்தாலும்.. உன் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது இல்ல..” என்று அவளை இன்னும் நெருங்கி அவன் அடிக்குரலில் கூறினான். அவனின் மூச்சுக்காற்று அவளின் காதினை‌ தீண்ட.. அவனது மெல்லிய தாடியோ அவளது கனிந்த கன்னங்களை அழுத்த.. அவனது கற்றை மீசையும் அழுத்தமான உதடும் அவளது காது மடலை உரச.. பெண்ணுக்குள் ஹார்மோன்களின் சதிராட்டம்!

 

“ஆஆஆஆஆஆ… யோவ் அங்கிள் விடுயா என்னை? இப்படி நீ பண்றது எல்லாம் வயலன்ஸ் தெரியுமா?” என்று அப்போதும் எகிறினாள்.

 

“எதே? அங்கிளா? கொழுப்புடி உனக்குலாம்..! ஏற்கனவே நான் டென்ஷன்ல எவன போட்டு மிதிக்கலாம்னு வந்தேன் நீயா வாண்டடா வந்து என்கிட்ட மாட்டிக்கிட்ட..‌” துருவ் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான்.

 

“ஆஆ.. எனக்கென்ன கொழுப்பா? ஆமா எனக்கு கொழுப்பு இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? அந்த டாக்டரு போட்டு கொடுத்துட்டா?” என்று அவள் பேச.. அவளின் அந்த பேச்சில் அவனுக்கு முனுக்கென்று சிரிப்பை கூட மூட்டியது.

 

‘ஆனாலும்.. இவள் வாய்க்கு இவளை ஏதாவது செய்தி ஆக வேண்டும் இல்லை என்றால் நித்தமும் இப்படித்தான் நம்மை கண்டால் பேசுவாள்’ என்று மெல்லிய சிரிப்பில் பிரிந்த இதழ்கள் மீண்டும் இறுக்கமாக மூடிக்கொண்டன.

 

“நான் ஒன்னும் உங்களை சீண்டி விளையாடலை..!! காட் ப்ராமிஸ்..!” ப்ச்.. கையை விடுங்க அங்கிள்..”

 

“அங்கிளா? இதுக்கே உன்னை வெளுக்கணும் டி!” என்றான். பார்த்து பார்த்து செதுக்கி செதுக்கி வைத்த அவனது உடற்கட்டை கண்டு இவள் எப்படி அங்கிள் என்று சொல்லலாம் என்ற தார்மீகம் கோபம் அவனுக்கு.

 

“உங்களுக்கு 35 பிளஸ் ஆகுது எனக்கு 22 தான். பின்ன உங்கள அங்கிள் சொல்லாம என்ன சொல்றது? ஆஆஆ… சொல்லல

 சொல்லல.. உங்கள.. அங்கிள் சொல்லல! ஐயோ வலிக்குது விடுங்க..”

 

“கைய விடுங்க சார்னு‌ சொல்லு.. இனி‌ எது கேட்டாலும்.. எஸ் சார் நோ சார் இது மட்டும் தான் நீ சொல்லணும். புரியுதா?” என்று அழுத்தமாக கேட்க..

 

“ஹான்.. புரியுது புரியுது.. விடுங்க இப்போ..” அவள் கெஞ்ச..

 

“ஒழுங்கா கேளுனு இப்பதானே சொன்னேன்?” என்று அவன் மிஞ்ச.. மீண்டும் ஒரு கையில் ஒரு அழுத்தம் கொடுக்க..

 

“சரி சரி.. விடுங்க சார்.. விடுங்க சார்” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு..

 

“இல்லை.. இல்லை.. உன் வாய்ஸ் மாடுலேஷன் சரியாக இல்லை! என்னமோ எனக்கே ஆர்டர் போடுற மாதிரி இருக்கு! இப்படி எல்லாம் கேட்க கூடாது.. ப்போளைட்டா அமைதியா கெஞ்சி கேளு..” என்று அவனும் விடாமல் அவளை படுத்தி வைத்தான். எங்கோ உள்ள கோபத்தை இங்கே கொண்டு வந்து கொட்டினான்.

 

“துருவ் சார்.. துருவ் சார்.. ப்ளீஸ் சார்.. எனக்கு சார்.. கை வலிக்குது சார்..‌ கையை விட்டுடுங்க சார்..” என்று வார்த்தைக்கு ஒரு சார் போட்டு அவள் போலியாக பவ்யமாக கேட்க அதற்கு பின்னே தான் கையை தளர்த்தினான். ஆனால் முழுவதாக விடவில்லை.

 

“உண்மையில.. இன்னைக்கு நான் தான் பயங்கர டென்ஷன்! அதுவும் உங்களால..” என்றாள் அப்போது வாய்‌ அடங்காதவளாய்..!

 

“உன்னை யாரோ பேசினதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?” என்றதும்,

அனு தன் உடலை படக்கென ஒரு சிலுப்பு சிலுப்பி, தனது கையை துருவிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள். 

 

“ஆமா.. யாரோ பேசினாங்க தான்! ஆனா அந்த கோவத்தை நான் யார் மீது காட்ட முடியும்? இங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. அதுவும் இல்லாம அவங்க பேசுனது.. என்னை என்னென்ன பேசினாங்க தெரியுமா?” என்று செல்விக்கு தான் செய்த உதவியும் அவர் பேசியதையும் அவள் கூற அமைதியாக கேட்டுக் கொண்டான். 

 

பின் அவளை அலட்சியமாக பார்த்து “இதற்கு தான் உதவின்னு யாருக்குமே செய்யக்கூடாது! முக்கியமாக தெரிஞ்சவங்களுக்கு.. அதுவும் உதவி வாங்கிட்டு உன்ன தப்பா பேசினாங்கனா அப்ப தெரியுதா அவங்க யோகியதை! அதனாலதான் பா இந்த செண்டிமெண்ட் பக்கமே நான் போறது கிடையாது” என்று தோள் குலுக்கி கொண்டான் துருவ். 

 

அவனின் அலட்சியமான உடல் மொழியும்.. கேலியான சிரிப்பும்.. நக்கலான வார்த்தைகளும் இது உனக்கு தேவைதான் என்ற விழிமொழியும்.. அவளை இன்னும் கோபமுறச் செய்தது.

 

உடனே திரும்பி அவனின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். வலியெடுத்த கையை இன்னொரு கையால் அழுத்தி தடவிக்கொண்டே சீற்றமாக சொன்னாள்.. “உங்களை யாரு உங்க பொண்டாட்டிய விட்டு பிரிய சொன்னது? ஓகே ஒத்துக்கிறேன் அவங்க உங்க வைஃப் இல்ல எக்ஸ் தான்! நீங்க உங்க எக்ஸ்சை விட்டு ஏன் பிரிச்சீங்க? இன்னைக்கு என்ன பாத்து கூ**** எல்லாம் கேள்வி கேட்கிறாங்க..!” கோபம் கலந்த அழுகுரலில்!

 

மூக்கை உறிஞ்சிக் கொண்டு அவ்வப்போது புறங்கையால் கண்களையும் துடைத்துக் கொண்டு அவள் பேசியவற்றை இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக பார்த்து இருந்தான் துருவ்.

 

அவளது அந்த கோபத்திலும் அழுகையிலும் அவனது கோபம் சற்று மட்டுபட்டது.

 

“ஆமா துருவா சார்.. என்னதான் பிரச்சனை உண்மையிலேயே உங்களுக்கு உங்க பொண்டாட்டி கிட்ட..??” என்று கேட்டவள், சட்டென்று “நிஜமாலுமே ரெண்டு பேருக்குள்ள ஏதாவது இஸ்கு இஸ்கு பிரச்சனையா? அதனாலதான் வாடகை தாயா என்னை கொண்டு வந்தீங்களா?” என்று ஒரு மாதிரி உதட்டை சுழித்து கண்ணடித்து அவள் கேட்க…

 

“வாட் இஸ்கு இஸ்கு?” என்று ஹைஃபைவாதியான அவன் இந்த கோட் வேர்டை புரியாமல் கேட்டான்.

 

(மக்களே.. இவனுக்கு இஸ்கு இஸ்கு தெரியவில்லையாம்?? இவனையெல்லாம் ஜியாவின் ஹீரோ என்று சொல்வதற்கு வெட்கம்.! வேதனை.! அவமானம்.!)

 

“அதுவே தெரியாத உங்களுக்கு?” என்று ஆச்சரியமாக விழி விரித்தவள் பின்ன முட்டும் சிரிப்போடு வாயை மூடிக் கொண்டாள்.

 

“இப்ப சொல்ல போறியா இல்ல என்கிட்ட ரெண்டு வாங்க போறியா?” என்று அவன் கையை உயர்த்த கண்களை சுருக்கி தலையை சாய்த்து முகத்தை மறைத்துக் கொண்ட அவளின் பாங்கை கண்டு இவனே கையை கீழே இறக்கினான்.

 

“அது இஸ்கு இஸ்குனா.. உங்க ரெண்டு பேருக்கும்…” என்று அவள் மெல்லிய குரலில் விளக்க.. அதுவும் அவ்வப்போது உதட்டை நாவினால் ஈரப்படுத்திக் கொண்டு கூற…

 

அவனின் அந்தரத்தை கூறியவுடன் அவனுக்கும் சற்று கோபம் முகிழ்த்தது. 

 

“இவளை.. எவ்வளவு கொடுத்தாலும் அடங்கவே மாட்டேன் என்கிறாளே?!! இவ.. சரியான இம்சை.. ராட்சசி.. இம்சை அரசி!” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டு இருக்க

 

அவளோ ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘அப்படியா?’ என்பது போல உதடுகளை பற்களால் கடித்தும் மேல் உதட்டால் மடிக்கியும் என்று சேட்டைகள் செய்ய…

 

அவளது மெல்லிய ரோஜா இதழ்கள் மேல் அவன் பார்வை விழுந்தது. அவள் உதடுகளை தன் உதடுகளால் பிணைக்கவேண்டுமென ஏனோ ஒரு வேகம் பிறந்தது துருவுக்கு.

 

அப்படி பிணத்தால் என்ன ஆகிவிடும்..? கோவிச்சுக்குவாளா..? இதுவரை அவன் அந்த முயற்சி செய்து பார்த்ததில்லை.!

 

இப்போது முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன..? கோவிச்சா.. கோவிச்சிக்கிட்டும்!

இயல்பாக நகர்வது போல.. நகர்ந்து.. சட்டென அவள் இடுப்பில் கை போட்டு வளைத்து அணைத்தான் துருவ்.

 

அவள் சட்டென அதிர்ந்து விழித்தாள். கைகளால் அவனை உதற முயன்றாள்.

அவளது முகத்தில் அவன் முத்தமிட முயல.. அதனை புரிந்துக் கொண்டவள் அவள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

 

அவளது முரண்டல்.. அவளின் பிராண்டல் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளது இடுப்பு பின்பக்கமெல்ல அவன் கையை அலைய விட்டு இறுக்கி பிடிக்க பார்க்க.. அவள்‌ தவிர்க்க.. குனிந்தவன் உதடுகளுக்கு பதில் அவளது பக்க கழுத்தில் முத்தமிட்டான் துருவ்.

 

அவனுக்கு அவள் முகத்தைக் காட்டவே இல்லை.

அவள் முகம் கிடைக்காவிட்டாலும்.. விடாது விக்ரமாதித்தனாய் முயன்று அவளது தாடையை அழுத்தமாக பற்றியவன்,

 

அடுத்த நொடி அதிரடியாக அவள் உதடுகளை தன் உதடுகளால் கவர்ந்தான். அவள் அதிர்ந்து, ஒரு கை அவன் அகன்ற தோளிலும்.. இன்னொரு கை அவனின் விரிந்த நெஞ்சிலும் பதித்து தள்ள முனைய.. அவனோ அவளது எதிர்ப்பில் இன்னும் கிளர்ந்து அவள் உதடுகளை சற்று ஆவேசமாக உறிஞ்சி சுவைத்தான்!! 

 

அவனது கவ்வலில் துடித்துப்போனாள் பாவை. அவன் பற்களின் மெல்லிய அழுத்தம்.. அவளின் பருவ நரம்பில் பட்டு.. அவளுக்கு ஒருவித இன்ப லாகிரியைத் தூண்டினாலும்.. துருவின் இந்த அத்து மீறல் அவளுக்கு கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

 

இத்தனை நாட்களாக இவன் அத்துமீற மாட்டான்! தன்னிடம் தவறாக நடக்க மாட்டான்! என்ற நம்பிக்கையில் தான் சாவித்ரி அம்மா வரும் முன்பே அவள் தைரியமாக இங்கே தங்கி இருந்தது.

 

தாரதியும் மேற்கோளாக சொல்லி அனுப்பி இருந்தாள். “பெண்களை கண்டால் துருவ் கொஞ்சம் தள்ளி தான் இருப்பார். பணக்காரர்கள் என்றாலே பெண்களை பார்த்தால் மேலே பாய்ந்து விடுவார்கள் என்றெல்லாம் கிடையாது. இவர் அப்படிப்பட்டவர் கிடையாது. தனித்துவன்!” என்று ஒரு முறை பரிசோதனை செல்லும்போது கூறி இருந்ததால்.. ஒரு வித நம்பிக்கையோடு அனு அந்த வீட்டில் இருந்தாள். 

 

அதனாலதான் நள்ளிரவு நேரத்திலும் அவனைத் தேடி அவன் அறைக்கே வந்து அவள் பேச வந்திருக்க.. இவனின் இந்த முரட்டுத்தனத்தோடு கூடிய இதழணைப்பு பெண்ணவளை விதிர்விதிர்க்க செய்தது.

 

அதன் தாக்கம் தாங்க முடியாமல் உயர் ரத்த அழுத்தத்தில் மயங்கி சரிந்தாள் மாது.

 

சத்தியமாக இப்படி ஒரு எதிர்வினையை அனுவிடம் எதிர்பார்க்கவில்லை துருவ். கோபப்படுவாள்.. திட்டுவாள்.. தான் கோபமாக பேசி விடலாம் என்று தான் நினைத்திருந்தான்.

 

அது மட்டுமல்லாமல் ஏதோ ஒரு தூண்டுதலில் தன்னை எல்லோரும் ஏன் அந்த புள்ளியில் வைத்து பேசுகிறார்கள் என்ற தாக்கத்தில் தான்.. நான் அப்படி இல்லை என்று நிரூபித்து விடும் வேகத்தில் தான்.. அவளிடம் சற்று அத்துமீறினான். 

 

அவள் மயங்கி சரிந்ததும் அதிர்ந்து போனவன் அவன் செய்த முட்டாள் தனத்தின் அளவை உணர்ந்து “சாரி சாரி.. சாரி.. சாரி..” என்று ஏங்கி விழுந்தவளிடம் அத்தனை சாரி கூறி அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப.. அவள் விழித்தால் அல்லவா?

 

அப்படியே அவளை அள்ளி தனது மெத்தையில் படுக்க வைத்தவன் என்ன செய்வது என்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றான். பின்பு தாரதியிடம் சொல்லி ஒரு செவிலியரை வர செய்தான். சாவித்திரி அம்மாள் அப்பொழுதே உறங்கி விட்டிருந்தார்.

 

ஏதாவது அசௌகரியம் என்றால் அனு அழைப்பாள் என்று தெரியும். அதனால் இன்று செல்வி பேசிய அதிர்ச்சி அவளை தாக்கியிருக்கும் அவள் தூங்கட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரும் உறங்கி இருக்க.. செவிலியர் வந்து போன விஷயம் அவருக்கு தெரியாது.

 

வந்த செவிலியரும் “கொஞ்சம் பிபி ரைஸ் ஆயிருக்கு சார்! வேற ஒன்னும் இல்ல. கொஞ்சம் தூங்கி எழுந்தாலே அவங்க சரி ஆயிடுவாங்க” என்று சொல்லிவிட்டு தாரதியிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு சென்றுவிட்டாள். அப்பொழுதுதான் போன மூச்சே வந்தது துருவுக்கு.

 

“துருவ்.. வர வர உன் நடவடிக்கைகளை சரி இல்லை! சரியே இல்லை.. நம்பி கூட்டிட்டு வந்த பெண்ணிடம் அத்துமீறுகிறாய் இது தப்பு.. ரொம்ப ரொம்ப தப்பு!” என்று அவன் தனக்குத்தானே திட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அவ்வறையில்… பின்பு சோபாவில் சாய்ந்த படி அவளைப் பார்த்துக் கொண்டே உறங்கியும் விட்டான்.

 

மறுநாள் நன்றாக விடிந்து விட.. அனுவின் உறக்கம் கலையவில்லை. முதல் நாள் அழுத்தமும் மன சஞ்சலமும் அவளை ஆழ்ந்த தூக்கத்தில் அழ்த்தி இருக்க நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

விழிப்பு வந்தவுடன் உறங்கிக் கொண்டிருந்த அனுவை பார்த்த துருவ் அப்படியே சென்று தன் அறை பால்கனியில் நின்று கைகளை தூக்கி நெட்டி முறித்தான்.

 

“காலையில் எழுந்ததும் இந்த பொண்ணு எங்க போச்சு ஆளையே காணோம்?” என்று வீடு முழுக்க தேடி விட்டு அப்பொழுதுதான் தோட்டத்தில் வந்த நின்ற சாவித்ரி அம்மா கண்களுக்கு வெறும் ஷார்ட்ஸூடன் நின்றிருக்கும் துருவ் தெரிய..

 

அவனிடம் கேட்கலாம் என்ற வாயை எடுப்பதற்கு முன், அவன் உள்ளே சென்று விட்டான். இவர் அவசர அவசரமாக மாடி ஏறினார். இவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன், அருகில் இருக்கும் உடற்பயிற்சி அறையை நோக்கி தன் ட்ராக் பாண்ட்டோடு செல்ல…

 

“சார்.. சார்.. அந்த பொண்ண காலையில் இருந்து காணும்” என்று பின்னாடி மூச்சரைக்கு வந்த நின்ற சாவித்ரி அம்மாவை ஏற இறங்க பார்த்தவன், தன் அறையைச் சுட்டிக்காட்டி “அவ அங்க தூங்குறா.. நைட் எல்லாம் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. இப்ப போய் டிஸ்டர்ப் பண்ணாதீங்க! நல்லா தூங்கி எழட்டும்” என்று அவள் மன சஞ்ச

லத்தை பற்றி அவன் குறிப்பிட..

 

இஸ்க்கு இஸ்காக காதில் விழுந்தவற்றை நம்ப முடியாமல் வாயை பிளந்து பார்த்தார் சாவித்ரி அம்மாள்.

 

என்னடா நடக்குது இங்க???


   
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

துரு நீ நினைக்கிறது கொஞ்சம் ஆவது நியாயமா இருக்கா டா🤣🤣🤣🤣🤣

கோவ்ச்சிக்குவாளா????

இல்ல டா, உன்ன குனிய வெச்சி கும்ம போறா பாரு 🤭🤭🤭

அட சாவி மா, இவங்க வேற😂😂😂


   
Jiya Janavi reacted
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

@gowri நம்ம ஹீரோஸ் அப்படி தான் 🤭🙈😜 சாவிக்கு சாக் மொமண்ட் 🤣🤣


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top