ஆழி 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

28

 

 

ரிஷி " மாப்பிள்ளை இப்படி ஒரு டுவிஸ்ட் யாரும் எதிர் பார்க்கல…. ஆனால் எங்க எல்லாரையும் தூக்க போறேன்னு சொல்லவே இல்லை" என்று விஷ்ணுவிற்கு மேலே சிரித்தான்.

" மச்சான்.. நீங்க எல்லாம் சண்டியரும், விருமாண்டியுமா இருந்தா என்ன செய்ய…"

" மாப்பிள்ளை… அது.. அது.. வந்து.. அவ எப்படி இருக்கா"

" எவ மச்சான்… என் அவ நல்லா இருக்கா" 

" உங்க அவ கேட்கல… என் அவள கேட்டேன்"

" அதான் மச்சான்… யாரு???"

" விளையாடாதீங்க மாப்பிள்ளை… சுஜியை தான் கேட்டேன்" என்றான் மென்மையாய்..

 

" கேட்கல மச்சான்… ஹலோ.. ஹலோ…." விளையாட்டாய் விஷ்ணு..

" மாப்பிள்ளை.. எனக்கு கேட்குது யா… விளையாடாத…" மரியாதை ஒருமைக்கு மாற்றி ரிஷி கடித்தான்.

" ஹ ஹ ஹ… சும்மா மச்சான்.. நல்லா இருக்காங்க சிஸ்டர்.. இப்போ மினி போய் இருக்கா.. இரண்டையும் சமாளிக்க முடியாது…"

" சின்னது இருந்து இரண்டும் அப்படி தான்.. ஆனா செய்யுற குறும்பு எல்லாம் உங்க ஆளு தான்.. சுஜி ரொம்பவே அப்பாவி"

" மச்சான் … பயங்கர நோட்டீஸ் போல இருக்கு.." 

" ம்ம்… சரி மாப்பிள்ளை நான் வைக்கிறேன்"

" எல்லோரையும் பார்த்துக்கோங்க… ரமணன் இருப்பான்.. எதுவும் அர்ஜெனட்டுனா கால் பண்ணுங்க" 

பேசி முடித்தவன் நினைவுகள் அவனை சந்தித்த நாட்களுக்கு சென்றது..

அன்று விஷ்ணு மொட்டை மாடியில் சௌமினியை சந்தித்து விட்டு, மாடியில் இருந்து யாரும் கவனிக்கா வண்ணமே கீழே வந்தான். ஆனால் அவன் அறியாதது ரிஷி விஷ்ணுவை பார்த்து விட்டான் என்பது.

கீழே தோட்டத்துக்கு சென்றவனை, பின்னிருந்து வேகமாக உதைத்தான் ரிஷி. மண்ணில் குப்புற விழ, திடீர் தாக்குதலில், நிலை குலைய விழுந்தாலும், தன்னை சமாளித்து எழுந்து நின்று விட்டான் விஷ்ணு. யார் என்று பார்க்க, ரிஷியை எதிர்பார்க்கவில்லை ஆனாலும், நிலைமையை சமாளிக்க வேண்டி, அவனை நெருங்கி பேச முயல, மீண்டும் முகத்தில் அவன் குத்த எத்தனிக்க, இம்முறை சுதாரித்து விலகினான் விஷ்ணு.

ஆனாலும் ரிஷி தன் தாக்குதலை நிறுத்தாமல், தொடர்ந்து அவனை தாக்க முயல, விஷ்ணுவோ அவனை திருப்பி தாக்காமல், கூடியவரை விலகி விலகி போக, இதுவே தொடர் கதையாக… 

இப்படியே சென்றால் இவனை சமாளிக்க முடியாது, என்று எண்ணிய விஷ்ணு நொடியில் கீழே அமர்ந்து, அவன் காலை தட்டி விட இதை எதி்ர்பார்க்காத ரிஷி குப்புற விழுந்தான். நொடிக்கு குறைவான பொழுதில் அவன் மீது ஏறி அமர்ந்து, அவன் கைகள் இரண்டையும் பின் பக்கம் இழுத்து, தன் கைகள் கொண்டு, அழுந்த பிடித்துக்கொண்டு மற்றும் கால்களால் உதைக்கா வண்ணம் லாக் செய்து இருந்தான்.

ரிஷி தன்னால் முடிந்த மட்டும் அவனை கீழே தள்ளி விட முயல, முடியாமல் புஸ் புஸ் என்று மூச்சு விட்டு, தன் இயலாமை ஆத்திரத்தை காட்டி கொண்டிருந்தான்..

" ரிஷி.. தயவு செய்து கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க…. "

" என்ன டா.. சொல்ல போற… "

" நானும் மினியும் லவ் பண்றோம்" 

"எவ்வளோ தைரியம் இருந்தா … என்கிட்டே சொல்லுவ… ஹாஸ்டல்ல எகிறி குத்திச்சு போன அன்னைக்கே உன் காலை உடைச்சு இருக்கணும் டா…" ரிஷியின் பேச்சில் அதிர்ந்து, சற்று கவனம் பிசக, அதை பயன்படுத்தி கொண்டு, ரிஷி அவனை கீழே தள்ளி, இப்போ விஷ்ணுவை லாக் செய்வது அவன் முறை..

கை மற்றும் கால்களால் மண்ணை உதைத்து கொண்டு, விஷ்ணு அவன் பிடியிலிருந்து வெளியேற முயன்றான். 

" ஏண்டா.. எங்க வீட்டு பொண்ணை என்ன டா.. நினைச்ச.. கண்டவனும் வந்து களவாணி தனம் பண்ணி, லவ் கிவ்வுனு சொல்லி, கூட்டி போவீங்க.. நாங்க பார்த்து கிட்டு இருப்போம் நினைச்சியா… வெட்டி பொதைச்சிடுவேன்"

விஷ்ணு தன் வலது கை முட்டியை வேகமாக ரிஷியின் தாடை பார்த்து தாக்க, அவன் வலியில் முகம் சுழித்த வேளையில், இப்போது அவனை கீழே தள்ளி அவன் முகம் பார்த்து, வயிற்றின் மீது உட்கார்ந்து , " அப்படியென்ன டா.. நீங்க பெரிய வம்சம்.. பொல்லாத வம்சம்.. நீ இங்க பெரிய இவனா..

எங்க ஊர்ல நான் பெரிய அவன் தான்… அப்படி தான் டா லவ் பண்ணுவேன்… ஏன் நீங்க சம்மதிக்கலைன்னா தூக்க கூட செய்வேன்"

அவனின் பேச்சில் வெகுண்ட ரிஷி, தன் கால்களை முன்பக்கம் கொண்டு வந்து, அவனின் கழுத்தில் சுற்றி, அவனை மண்ணில் தள்ளி இருந்தான்.. அதே முன்பக்கம்.. அதே முகம் பார்த்தல்.. அதே வயிற்றில் அமர்ந்து, கூடவே கால்களையும் லாக் செய்தான் முன் எச்சரிக்கையாக…

" செய்வ டா.. செய்வ.. அதுக்கு வேற ஆள பார்க்கணும்.. நீ தூக்குற வரை எங்க கை என்ன பூ பறிக்குமா…. வகுந்துடுவேன் வகுந்து… எங்க வீட்டு குல தெய்வம் டா அவ.. அவள நீ தூக்குவியா.." என்று விஷ்ணு முகத்தில் குத்தினான்.. மனதில் அவனின் பாசத்தை நினைத்து மகிழ்ந்தாலும், இப்போதைக்கு அந்த நினைவை மறந்து.. மறுத்து இவனை வீழ்த்த யோசித்தான்..

மனதில் பளிச் என்று மின்னல் தோன்ற, " ஏண்டா.. உங்க வீட்டு பொண்ணு மட்டும் தான்.. குல விளக்கு.. குத்து விளக்கு… எல்லாமே.. அடுத்த வீட்டு பொண்ணுனா நீங்க பின்னாடியே கண்ணாலே ஃபாலோ பண்ணுவீங்களா…" ரிஷி புரியாமல் தன் புருவங்கள் சுருங்க அவனை பார்க்க.. 

விஷ்ணு.. சுஜி.. என்று கூறி அவனின் குழம்பிய முகத்தில் தன் தலையால் ஓங்கி ஒரு முட்டு முட்ட, அவன் மல்லாக்க விழுந்தான். 

ஆனால் விஷ்ணுவை முறைத்து கொண்டே.. " என்ன டா … உனக்கு பேரு சுருக்கம் வேண்டி இருக்கு.. ஒழுங்கா சுஜிதா சொல்லுடா" என்று பொறாமையில் வெந்து கத்தினான்..

பய புள்ள சிக்கீடீச்சி என்று நினைத்தவன், மேலும் குழம்பிய அவனின் மன குட்டையில், சுஜி என்ற தூண்டிலை போட்டு, காதல் என்ற மீன் பிடிக்க முயன்றான் விஷ்ணு.

" ஓகே.. ஓகே.. சுஜி சிஸ்டர்… அப்போ நீங்க செய்யுறதுக்கு பேரு என்னங்க சர்.. பொது சேவையா.. கண்ணாலே அவங்களை சுத்தி சுத்தி வந்து, போற இடம் எல்லாம் ஃபாலோ பண்றது… ஒரு வேலை செக்யூரிட்டி வேலையோ… ரிஷியின் மௌனம், தூண்டில் வேலை செய்ய துவங்கியதை சொல்ல, மேலும் மேலும் தூண்டிலை ஆட்டி… மீனை தேடினான் விஷ்ணு.. அதாங்க அவன் ஆழ் மன காதல்… 

" சிஸ்டர்… உன்னை விரும்புறது ஊருக்கே தெரியும்.. ஏன் எனக்கு கூட அவங்க வேலைக்கு சேர்ந்து இருபது நாளிலே தெரியும்.. எப்படின்னு தெரியுமா???

ரிஷி முகத்தில் ஆவல் பெருக்கெடுத்தது… "அவங்க ஹெட் நான் தான்.. சோ அவங்க எல்லா சிஸ்டம் உள்ள நுழையுற பவர் எனக்கு உண்டு, அவங்க பாஸ்வேர்டு என்ன தெரியுமா… ரிஷிமாமா143.. அப்போ யாரோ எனக்கு தெரியாது.. ஒரு முறை மினி உங்க பெயரை சொல்லும் போது புரிஞ்சுது அது நீங்க தான்.. காலையில் இருந்து இங்க உங்க வீட்டுல தான் சுத்திக்கிட்டு இருக்கேன்.. வீட்டையும் நோட் பண்ணினேன்.. உங்க ஆர்வ பார்வையும்., சுஜி சிஸ்டரின் ஒட்டாத பார்வையும் கவனிச்சேன்… இப்போ சொல்லுங்க லவ் தப்பா.. இல்ல நான் தப்பானவனா.." 

ரிஷியின் முகத்தில் வேதனையுடன் கூடிய குழப்பம்.. அன்று சுஜி பேசி சென்றதில் இருந்து, அவனுக்கு அவளின் கண்கள் கலங்க வேதனை ததும்பிய முகம் அவ்வபோது வந்து செல்ல, அவனால் தாங்க இயலாமல், சுஜியின் முகத்தை அடிக்கடி பார்த்தான்.. ஆனால் இப்போது சுஜி அவனை ஏறெடுத்து பார்ப்பது இல்லை.. . அவனை கண்டால் அவளின் பயம் கலந்த நாணம் கொள்ளும் வதனம் காண இவன் பிரியப்பட, அவள் ஒதுக்கம் கொள்ள.. இரண்டு நாட்களாக அவன் மனம் தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிந்த ரகசியம். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது காதல் கொண்ட விஷ்ணு மனது அவனை சரியான இனம் கண்டு கொண்டது.

விஷ்ணுவின் இந்த பேச்சில், தன் மன காயம் வெளிப்பட்டு மீண்டும் அவனை ரணம் ஆக்கியது. இன்னமும் அதே விழுந்த மாதிரியே படுத்து தானிருந்தான் ரிஷி..

அவனின் முக குழப்பமே விஷ்ணுவிற்கு தூண்டிலில் மீன் மாட்டிடுச்சு, இனி மெல்ல மெல்ல மேலே கொண்டு வர வேண்டியது தான் என்று புரிய.. மெல்ல ரிஷி அருகே சென்று தன் கையை நீட்டினான்..

ரிஷியும் சிறிது தயங்கி, அவன் கை பற்றி எழுந்து உட்கார்ந்து, தன் கைகளால் தலையை தாங்கி கொண்டான். விஷ்ணு அவன் அருகில் அமர்ந்து, தன் பாக்கெட்டில் இருந்து சிகெரெட் பாக்கெட்டை பிரித்து ஒன்றை எடுத்து கொண்டு, அவனிடம் நீட்ட.. அவனும் தயக்கமின்றி வாங்கி கொண்டான்.. சிறிது நேரம் அவர்களின் ஆறாம் விரல் மட்டும் வாயோடு பேசி கொண்டிருக்க.. கனத்த மௌனம் மட்டுமே அங்கே..

பின் விஷ்ணு தன்னை பற்றி குடும்பத்தை பற்றி அனைத்தும் ரிஷியிடம் தெரிவித்து அவனின் உதவியை யாசிக்க.. புதிதாய் காதல் கொண்ட அந்த கிராமத்து காளையும், தன் சம்மதத்தை தெரிவித்தது குறிப்பாக தன் சௌமி கண்ணு நல்வாழ்வுக்காக…

" நாளைக்கு சாயங்காலம் பரிசம் போட வராங்க.. அதுக்கு முன்னமே வந்திடுங்க.."

" அவன்.. என்ன வேணுணாலும் போடட்டும், அவளுக்கு தாலி நான் தான் கட்ட போறேன்"

" டேய்.. கூறுகெட்ட மாப்பிள்ளை.. பரிசம் போட்டா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி யா.. பாதி பொண்டாட்டி ஆகிடுவா.. ஒழுங்கா முன்னாடியே வந்து சேரு.."

" என்ன மச்சான்.. சொல்லுற… பாதி பொண்டாட்டியா… நோ.. நோ.. என் மினி எனக்கு மட்டும் தான் பொண்டாட்டி.. நான் முன்னாடியே வந்துடுறேன்" தங்களை அறியாமல் தங்கள் பந்தங்களை உறுதி செய்து கொண்டனர் இருவரும்.. 

ரிஷி புன்னைகயுடன். " தனியா வராதே.. கூட ஆளுங்க கூட்டிகிட்டு வா..இல்ல உன்னை பொலந்திடுவானுக…"

"நீயுமா மச்சான்.." என்றான் புருவத்தை தூக்கி..

" மொத அடியே.. என்னோடதா தான் இருக்கும்" என்றான் அவன் ஒற்றை கண் அடித்து..

" அடப்பாவி… ஐடியாவும் கொடுத்து… ஆப்பும் வைக்குற பாத்தியா நீ" என்று ஒருமையில் தாவி இருந்தனர் இருவரும்.

ஆனால் காவல் துறையை விஷ்ணு நாடியது.. மேரேஜ் சர்டிஃபிகேட் காட்டியது எல்லாம் எல்லோரும் போலவே ரிஷிக்கும் அப்போது தான் தெரியும்.. அன்று இரவு இவர்கள் பிளான் செய்து விஷ்ணுவை தூக்க திட்டம் தீட்ட.. ஜன்னல் அருகில் நின்று அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான் விஷ்ணு அதே கிராம இளைஞன் கெட்டப்பில்..

ஏ. சி வழியே தூக்க மருந்தை செலுத்தி, அவர்கள் மயங்கியதும் அனைவரையும் தூக்கிவிட்டான் விஷ்ணு. பின் தன் ஆட்கள் உதவியோடு சென்னைக்கு அழைத்து வந்தது. 

முதலில் திகைத்த ரிஷி, பின் மாப்பிள்ளை தங்களுக்கு சளைத்தவன் இல்லை என்று பெருமிதம் தான். இப்போது இரவில் மூர்த்தீஸ் பிரதர்ஸ் மட்டும் ஒரே அறையில், மற்ற நால்வரும் தனித்தனி அறையில் தான் தூங்க பணிக்க பட்டனர் விஷ்ணுவின் உத்தரவின் பெயரில் ரமணனால். அனைவரின் ஃபோன் பறிக்க பட்டு இருக்க.. ரிஷிக்கு மட்டும் விஷ்ணுவோடு பேச, ரமணனால் வழங்கபட்டு , பேசி முடித்தவுடன் அறையை வெளியில் பூட்டி விட்டு சென்று விட்டான்.

விஷ்ணுவோடு பேசி முடித்தவன் எண்ணம் எல்லாம் தன்னவள் சுற்றியே, காதல் என்றால் கட்டை எடுக்கும் தான், எப்படி இப்படி மாறினோம் என்ற யோசனையில் சுழன்று கொண்டிருக்க, காதல் என்கிற வார்த்தை எல்லாம் இன்னும் அவனுக்கு சட்டென்று வரவில்லை.. அவன் அதற்கு வைத்த பெயர் ஆழ் மனதில் உள்ள அதீத அன்பு, என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

அங்கே விஷ்ணு வீட்டில், இவன் நுழைந்தவுடன் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, இவனும் அவர்களுடன் ஐக்கியமகி விட்டான். ரோஹிணி இவ்வளவு வருடம், பிள்ளை, கணவன், தொழில் என்று மட்டுமே இருக்க, உறவினர்கள் சீராடல், சொந்தங்கள் திருமணம் என்று எதிலும் கலந்து கொண்டது இல்லை.. இதோ நேற்று இருந்து அவர்கள் வீடு கலகலப்பாக இருக்க அவர் மனது நிறைந்து இருந்தது. அதுவும் சௌமினி குடும்பத்தின் இந்த வஞ்சமில்லா அன்பு அவரை மேலும் கவர்ந்தது.

விஷ்ணுவை கண்ட உடன் எழுந்த அத்தைகளை பார்த்தவன், " ஆண்டி .. இப்படி எல்லாம் மரியாதை கொடுத்து தள்ளி வைக்காதீங்க.. பிளீஸ் உட்காருங்க"

" பரவா இல்லங்க தம்பி…" சரசு..

" தம்பி, அவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.. சரியா சாப்பிட்டாங்களா" இவ்வளவு பிரச்சனையிலும் பிள்ளையின் வயிற்றை காய விடாத அம்மாவின் அக்கறை மல்லியிடம்..

" சாப்பிட்டாங்க.. தூங்கவும் போயாச்சு.. நீங்க அவங்களை பற்றிய கவலை விடுங்க..அவங்க ஒரு நாலு நாள் டூர் போனதா நினைச்சிகிட்டி, எப்போதும் போல இருக்காங்க ஆண்டி" அவர்களிடம் தாங்களே சமைத்து சாப்பிட சொன்னதை இங்கே சொல்லவில்லை அவன், சொன்னால் அவ்வளவு தான் மொத்தம் குடும்பமும் கிளம்பிவிடும் அவர்கள் வயிற்று பாட்டை பார்க்க…

" இப்படி ஆம்பளைங்க எல்லோரும் மொத்தமா எங்கேயும் போனது இல்லை தம்பி, நாங்களுமே.. குடும்பமா எல்லாம் போனதும் இல்லை.. கல்யாணம் காட்சி , திருவிழா, சொந்தங்க விசேஷம் இப்படினா மட்டும் தான் போனது.. அது தான் ஒரு மாதிரியா இருக்கு" சராசரி குடும்ப தலைவிகளின் அங்கலாய்ப்பு அவரிடம்..

" நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க.. உங்க அண்ணன் தம்பி இருந்தா அவங்க வீட்டுக்கு போய் இருப்பீங்க தானே அண்ணி.. அது போல நினைச்சுக்கிட்டு இருங்க" ரோஹிணி பேச்சில் சற்று நெகிழ்ந்தார்கள் மல்லியும் சரசுவும்..

 

" மா பசிக்குது " என்ற விஷ்ணு கூற.. அனைவரும் இரவு உணவு உண்ண சென்றனர் . பேச்சும் சிரிப்புமாய் சென்றது உணவு வேளை. விஷ்ணு மாடிக்கு அவன் அறை சென்று விட.. மற்றவர்கள் கீழே தங்கினர் சௌமினி சுஜி உட்பட..

பிள்ளைகள், மல்லி , சரசு , வாசவி , தர்ஷினி அப்பத்தா எல்லாரும் ஒரு பெரிய அறையில் இருக்க, வழக்கம் போல சுஜியோடு சௌமினி ஒரு அறையில்.. சௌமினி சுஜியை தேடி செல்ல, அவளோ மொட்டை மாடியில் அமர்ந்து வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அவளுக்கு இன்னும் சௌமினி வந்தது தெரியாது..

மோன நிலையில் உள்ளவளின் முன் நின்று, " பக்தையே உன் பக்தியை மெச்சினாம்… என்ன வரம் வேண்டும் கேள்" சௌமினியின் பேச்சில் இவ்வுலகம் வந்தவள், தன் முன் கடவுள் போல அபிநயம் பிடித்து நின்ற சௌமினியை பார்த்து, " டி சௌமி.. என்று தாவி அணைத்து கொண்டாள்.

" என்னடி பயங்கர தவம் போல.."

" ம்ப்ச்.. போடி.. என்ன தவம் செய்து என்ன செய்ய" 

" தவம் வரமாகும் காலமும் வரும் டி"

" அந்த விஸ்வமித்ரனாவுது மாறதாவுது.. போடி.. எனக்கு நம்பிக்கை விட்டு போச்சு.. ஏதோ அண்ணன் சொன்னாங்கன்னு உனக்காக தான் நானும் வந்தேன்.. "

" சரியாகும் அண்ணியாரே...." என்று இருவரும் அணைத்தவாறே பேசி கொண்டே இருக்க.. க்கும் என்ற கணைப்பில் திரும்ப விஷ்ணு தான் மாடி வாசலில் சாய்ந்து, கைகள் கட்டியபடி நின்று கொண்டிருந்தான்.

விஷ்ணுவை பார்த்துடன் சுஜி,மெல்ல விலகி, " நீங்க பேசிக்கிட்டு இருங்க" என்று கீழே நழுவி விட்டாள்.

சௌமினியை பார்த்து கொண்டே வந்தவனின் காதல் பார்வை வீச்சை தாங்காமல், அவள் முகம் நாணினாலும், அவனுக்கு பதில் பார்வை மோகனமாய் பார்க்க தவறவில்லை பெண்ணவள்.

விஸ்த்தாரமாய் அங்கே படுத்தவன் தன் இரு கைகளை சௌமினி நோக்கி நீட்ட, மலர்ந்த செங்காந்தள் பூவென முகம் சிவக்க மன்னவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். அவன் மார்பில் தன் இருகைகளையும் வைத்து அதன் மீது தாடையை பதித்து அவனை தான் ரசித்தாள். 

காற்றில் ஆடும் கேசம், தாடியை மழித்து, மீசை முறுக்கி விட்டு இன்னும் விசிகரமாய் சிரித்த இந்த விஷ்ணு அவளை மேலும் மேலும் அவனின் மேல் பித்தாக்கினான். தன்னை கண்களால் விழுங்குவது போல பார்க்கும் ஓவிய பெண்ணவளை தான் அவனும் பார்த்து கொண்டிருந்தான். 

" ஏண்டி.. தாவணி போடலை இன்னைக்கு" 

புரிந்தும் புரியாமலும் வெட்க சிரிப்புடன் " ஏன் மாமா" என்றாள் கிறக்கமாக..

கைகள் தன் போல அவள் மேனியில் ஊர்ந்து கொண்டே இருக்க, அன்று உணர்ந்த மெண்மையை தேடி தேடி ஏமாந்து வந்தன அந்த வார்த்தைகள், " தாவணி தாண்டி வசதியா இருந்திச்சு… சுடி ரொம்ப கன்சர்வேடிவ் பண்ணுது டி"

" இருக்கும்.. இருக்கும்… " என்று உதட்டை சுழித்தவளின் கீழ் உதட்டை பிடித்து கடித்து சுவைத்தவன், " இனி இந்த மாதிரி சுழி டி.. அப்புறம் இருக்கு.. " அவளோ இன்னும் வெட்கத்தில் சிவக்க..

பெரு மூச்சை விட்டவன், " ரொம்ப நாள் ஆசை டி, இப்படி நம் வீட்டில், மொட்டை மாடியில் உன் கூட , இன்னக்கு தான் நடந்து இருக்கு" என்று நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்.

"நமக்கு தான் கல்யாணம் ஆகிடிச்சே டி… அப்படியே நம்ம ரூம்க்கு போய்டுவோமா.." என்றான் கள்ள சிரிப்புடன்..

" உன் நாலு மச்சானும் சேர்ந்து வந்து மொத்துவானுங்க… பரவாயில்லையா" என்று மாடி வாசலில் இருந்து ரோஹிணி குரல் கேட்டது.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top