ஆழி 27

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

27

 

சௌமினியை பின்னிருந்து அணைத்து அவள் தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு, " குட்டி வாலுலிருந்து உங்க அப்பத்தா வரை.. எல்லோரையும் தூக்கிட்டேன்… " என்றவனை ஒரே தள்ளாக தள்ளி "என்னது.. தூக்கிட்டீங்களா என்று கண்கள் விரிய பார்த்தவள், பின் தன் அதிர்ச்சியை கை விட்டு, ஆத்திர மோட்க்கு தாவினாள். கண்கள் அனல் அடிக்க.. கைகள் அவனை அடிக்க.. வாய் அது பாட்டில் அவனை வசவுப்பாட… 

" எவ்வளோ… தைரியம் இருந்தா.. என்கிட்டவே என் வீட்டு ஆளுங்களை தூக்கிட்டேன்னு சொல்லுவீங்க… அப்படி என்ன உங்களுக்கு வன்மம் அவங்க மேல... தவம் இருந்து பெண்ணை பெத்து, கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைச்சு, கூடவே நான் பண்ற அலும்பு எல்லாம் தாங்கி, என்னையும் தாங்கோ தாங்குன்னு தாங்கி அவங்க வளர்ப்பாங்களாம், நீங்க லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் வந்து நின்னா… வாங்க மாப்பிள்ளை அப்படின்னு உங்களுக்கு ஆரத்தி எடுப்பாகளா… இல்ல எடுப்பாகளானு கேட்குறேன்…" அவனின் மினி , ஒரு மினி முனீஸ்வரீயாய் அவதாரம் எடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி கொண்டிருந்தாள்..

விஷ்ணுவோ அவளின் இந்த புது அவதாரத்தில் பேய் அடித்த மாதிரி நின்று கொண்டிருந்தான். அவனை உலுக்கி, " யோவ்.. முதல அவங்களை எல்லாம் எங்க வைச்சு இருக்க சொல்லு.. இல்லை " என்று கை விரல் நீட்டி பத்திரம் காண்பித்தவளை பார்த்து, மெல்ல அவளை நெருங்கி அவள் விரலில் தன் விரலை பிணைத்து, அவளை ஒரு சுழட்டு சுழட்டி அருகிலிருந்த சோஃபாவில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.

" எப்பா.. என்ன கோவம் டி.. உனக்கு.. அப்படியே ஜிவு ஜீவுனு ஏறுது, இந்த மூக்கு நுனி எப்படி சிவக்குது " என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவள் அவன் கையை தள்ளி விட்டு முறுக்கி கொண்டு அமர்ந்தாள்.

" மினிம்மா… உங்க அப்பாஸ்.. அண்ணாஸ் விட நான் கொஞ்சமா கம்மியா தான் யோசிச்சேன்.. "

" எது.. மொத்த குடும்பத்தையும் தூக்கினதை விட வா.."

" பின்ன.. இல்லையா… என் மாமாஸ்.. மச்சான்ஸ் ஐ எவ்வளவு சஃபே ஆ கொண்டு போய், எவ்வளோ பந்த பஸ்த்தோட வச்சுயிருக்கேன் தெரியுமா… "

" செஞ்சது.. பிராடுத்தனம்… இதுல பெருமை வேற உங்களுக்கு"

" அப்போ.. ஆள தூக்கினது பிராடுத்தனம் .. இல்லையா???"

" ஆஃப் கோர்ஸ்…" என்று கூறி அவனை மாதிரி தோளை குலுக்கினாள்.

" அப்போ அந்த பிராடுத்தனம்.. செய்ய போனது உங்க பெரியப்பா, அப்பா, அண்ணன்கள் தான்.. அவ்வளவு பெரும் பிராடுகளா மினி செல்லம்"

அவள் நம்பா பார்வை பார்க்க, அவன் நேற்று நடந்ததை கூறினான். இப்போ அசட்டு பார்வை சௌமினியிடம்…

" ஆமா, அப்போ என்ன சொன்ன, உன்னை மட்டும் தான் தவம் இருந்து பெத்து, அருமை பெருமையா வளர்த்தாங்களா… என்னை எல்லாம் என்ன தண்ணி தெளிச்சி விட்டுடாங்களா.. எங்களையும் அப்படி தான் மா வளர்த்தாங்க… அதுவும் ஒத்த வாரிசு" 

சௌமினி மெல்ல அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் தொடர்ந்தான், " மினி காதல் என்கிறது, எப்போ யார்கிட்ட எந்த நேரத்தில் எப்படி வரும்ன்னு இதுவரை எவனும் சொன்னதில்லை… இனி சொல்லபோறதும் இல்லை.. 

எங்க வீட்டுல அம்மா அப்பா கிட்ட எப்படி சொன்னேன் நானு உனக்கு தெரியும் தானே.. உங்க வீட்டுல நான் வந்து நின்னு, உங்க பெரியப்பா அப்பா கிட்ட… நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணி கொடுங்கனு சொன்னா.. என்ன பண்ணியிருப்பாங்கனு நினைக்கிற, நீ சொன்ன மாதிரி வாங்க மாப்பிள்ளை அப்படினு ஆரத்தி எடுத்தா.. வரவேற்த்து இருப்பாங்க, என்னை உயிரோடவே பொதைச்சு இருப்பாங்க.. " சொன்னவனின் வாயை தன் மென் கரங்கொண்டு பொத்தியவள், தன் தலையை ஆட்டி " அப்படி சொல்லாதீங்க " என்றாள் கண்கள் கலங்க… " ச்சு.. சும்மா சொன்னாலும், அதில் உண்மை கூட தான்.. சோ, அவர்களை மாற்ற அவர்கள் வழியில போய் கிட்டு இருக்கேன்.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு அவர்களுக்கு புரிய வைக்க பார்க்கிறேன்.. முக்கியமா நம்ம காதலை… அவங்க கிட்ட போய் என் காதல் புனிதமானது, உயர்ந்தது அவள் இல்லாமால் நான் இல்லை.. நான் இல்லாமல் அவள் இல்லை.. அப்படின்னு டயலாக் பேசினேன் வை, அவங்க வாய் பேசாது அவங்க கை தான் என் வாய் மேல பேசும்… அதான் அவங்களுக்கு புரியுற மாதிரி, அவங்க அன்பு வைச்சவங்க கிட்ட இருந்து பிரிச்சா அவங்களுக்கு எவ்வளவு வலிக்கும், அந்த வேதனை எப்படி இருக்கும்ன்னு புரிய வைக்கிறேன்… அதான் அவங்க அவங்க ஒய்ஃப் கிட்ட இருந்து அவங்களை பிரிச்சி வைச்சிட்டேன்"

" என்னது… யார.. யாருகிட்ட இருந்து பிரிச்சி வைச்சீங்க… " என்று அந்த இடம் அதிர கூறினாள்.

" சிம்பிள்… என் மாம்ஸ்.. மச்சான்ஸ் எல்லோரையும் அவங்க ஒய்ஃப் கிட்ட இருந்து தான் பிரிச்சி தனியா ஒரு வீட்டுக்குள்ள வைச்சு இருக்கேன்"

அவள் வாய் பிளந்த படி, விழிகள் தெறிக்க என்ன பிளான் டா இது என்று பார்க்க.. பிளந்தபடி இருந்த அவள் வாயில் தன் வாயை வைத்து அடைத்து, அவளை தன் மடி மீது அமர்த்தி, மெல்ல இதழ் பிரித்து, தன் முன்னிருந்த கணினியை உயிர்ப்பித்து காண்பித்தான்..

அதில் சௌமினியின் அன்னை மற்றும் பெரியம்மா தெரிந்தார்கள் ரோஹிணி உடன் சிரித்து பேசியபடி கூடவே கட்டிலில் படுத்து இருந்த அப்பத்தா…

அவள் ஆச்சர்யத்துடன் திரும்பி விஷ்ணுவை பார்க்க, அவன் தன் சட்டையை காலரை தூக்கி விட்டு, எப்படி என்று தன் புருவங்களில் அபிநயம் பிடித்தான். அவளும் அவன் நெற்றி முட்டி, செம்ம என்றால் ஒற்றை கண் அடித்து..

" நேற்றே.. ஆண்கள் விக்கெட்டை போல்ட் பண்ணிட்டு, அடுத்து வந்தது பெண்கள் அணியிடம் தான்.. இவர்களுக்கு அதிரடினா, அவங்களுக்கு செண்டிமெண்ட்.. "

சௌமினி போலியாக முறைக்க, " சும்மா டி.. அத்தைகள் கிட்ட எடுத்து சொன்னேன் நம் காதலை, அன்பை.. பெண்ணை அன்பாக, பாசமாக பார்த்துக்குற , எங்கையும் விட்டு கொடுக்காத மாப்பிள்ளை தான் ஒவ்வொரு அம்மாவின் சாய்ஸ், அதுல ஐயா சென்ட் பர்செண்ட் வாங்கி பாஸ்… ஒரு உண்மை சொல்லட்டுமா.. ஒரு அம்மா எவ்வளவு வேணா தன் பிள்ளையை தண்டிப்பாங்க, ஆனா அடுத்தவங்க ஒரு அடி அடிச்சா கூட, சுனாமியா பொங்கிடுவாங்க…. உங்க அம்மாவும் அதே போல தான், நான் நீ அடி வாங்கும் போது உனக்கு சப்போட் பண்ணேன்ல.. அதுல விழுந்துட்டாங்க…" என்று சொல்லி அவன் சிரிக்க, சௌமினி கண்கள் கலங்க ஆரம்பித்தது.

" நாம தப்பு செய்யுரோமா…" என்றாள் கலங்கியபடி..

" எங்கடி விட்ட நீ… " இதழ்களை தொட்டு காண்பித்தவன், " இந்த சிங்கிள் பார்ட்டுல மட்டும் மிங்கிள் ஆனா தப்பில்லை மினி.. கல்யாணத்துக்கு முன்னமே மொத்தமா மிங்கிள் ஆனா தான் தப்பு… நான் இன்னும் சிங்கிள் ஆ தான் இருக்கேன்" என்று சொல்லி அவன் பெரு மூச்சு விட, அவன் விளக்கத்தில் இவளுக்கு தான் கோவை என முகம் சிவந்து லஜ்ஜையுற்றது.. 

" இங்க பார்.. எதை பற்றியும் யோசிக்காதே.. அத்தைகள், சிஸ்டர்ஸ் இரண்டு பேரும், அப்புறம் குட்டீஸ் எல்லோரும் சந்தோசமா, நம்ம கல்யாண வேளையில் பிஸியாவும் இருக்காங்க.. அம்மா நல்லா பார்த்துப்பாங்க.."

இன்னும் அவன் மடி விட்டு இறங்காது, அங்கே தன் மன்னவன் நெஞ்சில் சாய்ந்து, அவன் சட்டை பட்டனை திருகியவாறு, " எல்லாம் நல்லா நடக்கும்ல" என்று மென்மையாக கேட்டாள் சௌமினி..

தூங்கி எழுந்து , இன்னும் குளிக்க கூட இல்லாமல், தலை எல்லாம் களைந்து, அழகிய ஓவியம் போல இருந்தவளை பார்த்து அவனுள் காதலும், தாபமும் பெருக்கெடுக்க, அதை சமாளித்து, சிவந்திருந்த அவள் கன்னங்களை மெல்ல நிமிண்டியவன் " எல்லாம் சரியாகும் டா மினி" என்றான் விஷ்ணு.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்து சிரித்தவள், புருவங்கள் முடிச்சிட்டு ஏதோ யோசித்தாள், சட்டு என்று அவன் மடி மீது இருந்து துள்ளி குதித்து எழுந்து, " அச்சோ.. அப்போ நாம இரண்டு பேர் மட்டும் தான் இங்கன தனியா இருக்கோமா" என்று அலறினாள்.

"ஹ ஹ.. ஹ.. இப்போ தான் உனக்கு அது பிரிஞ்சிச்சா… " என்று தன் கைகளை தூக்கி நெட்டி முறித்தான்.

சௌமினி அவனை பீதியாக பார்க்க.. " என்னடி உன் பார்வையே சரி இல்லை... அப்படி இப்படி எதும் பண்ற எண்ணம் இருந்தா மாத்திகோ… நான் உன் கூட இப்போ ரொமான்ஸ் பண்ற மூடுல இல்லை.. ஐய்யா செம்ம டயர்ட்.. நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு, நான் ஒரு தூக்கம் போடுறேன்.." என்று அருகில் இருந்த சோஃபாவில் சரண் அடைந்து விட்டான்..

இப்போ இன்னும் லிட்டர் கணக்கில் அசடு வழிய நின்ற சௌமினி, பின் தன் தலையில் தட்டி கொண்டு சென்று விட்டாள். நேற்று இவர்களுக்கு கொண்டு செல்ல, ஏற்பாடு செய்தது, பின் சௌமினி தனியே இருக்க என்று இவன் ஹால் சோஃபாவில் சுருண்டு படுக்க, சரியான துக்கம் இல்லை விஷ்ணுவிற்கு. படுத்த சில நிமிடங்களில் உறங்கி விட்டான்.

ரமணனிடம் இருந்த ஃபோன் வர, தூக்க கலக்கத்தில் எடுத்தான் , " என்ன ரமணா… "

" அண்ணா.. அந்த பெரியவரில் ஒருவர் உங்க கிட்ட பேசணும்னு, ஒரே ரகளை ணா.. நீங்க முன்னாடி பேசிட்டு வைச்சதில் இருந்து" 

ஆம்.. வல்லவர் கோபமாக கேட்க உடன், ஆஃப் கோர்ஸ் என்று விட்டு காலை கட் செய்து இருந்தான் விஷ்ணு.. அவர் அங்கே தாம் தூம் என்று குதித்து கொண்டு இருக்கிறார்.

இவனோ அவர்களை வெறுப்பு ஏற்ற மட்டுமே அப்படி சொன்னேன் தவிர, காலையில் சௌமினி எழுந்துடன் அவளை அழைத்து கொண்டு, சென்னை போவதாய் தான் அவனின் எண்ணம்.

சரி கொடு.. என்று பேசியை கொடுக்க சொன்னான். " டேய்.. என்னடா.. நினைச்சுகிட்டு இருக்க.. ஒழுங்கா எங்களை விட சொல்லு.. இல்லை என் பொண்ணையும் என் பொண்டாட்டி கூட கொண்டு போய் விடு" அவர் கத்த, 

" மாம்ஸ்.. நைட்டு எல்லாம் தூங்கவே இல்லை..." சோம்பலில் அவன்,

ஃபோன் லவுட் ஸ்பீக்கர் இல் இருக்க, " என்னது நைட்டு எல்லாம் தூங்கலையா…" என்று கோரசாக...

" ம்ம்" இவன் கொட்டாவி விட்டு கொண்டே.

" டேய்.. வந்தேன்.. உன்னை கொன்னே போட்டுடுவேன்" அவர் கர்ஜிக்க..

தூக்கத்தில் இருந்தவன்… " டிஸ்டர்ப் பண்ணாதீங்க… எனக்கு டயர்ட் ஆஹ் வேற இருக்கு" தூக்க குரலில் விஷ்ணு..

" எங்க டா.. எங்க டா என் பொண்ணு" பதட்டத்துடன் அவர்…

" சோம்பேறி.. இப்போ தான் குளிக்க போய் இருக்க.. இவ்வளோ நேரம் என்னை தூங்க விடாமல் பண்ணிட்டு" மீண்டும் கொட்டாவி விட்டு கொண்டே இவன்..

" டேய் .. உன்னை எல்லாம் " பல்லை கடித்து கொண்டே எக்கச்சக்க கடுப்பில் அவர்..

" மாம்ஸ்.. எனக்கு தூக்க.. துக்காம வருது.. அப்புறம் பேசுறேன்" என்று காலை கட் செய்து விட்டு , புன் முறுவலுடன் தூக்க மோட்டில் விஷ்ணு..

அங்கே.. " அண்ணனே… என்னமோ சொன்னீங்க . இப்போ அவன் பேசுறதை பாருங்க.." வல்லபர்..

" வல்லபா… பொறுமையா பேசு, அவனை நம்ப வேண்டாம் நீ.. நம்ம பொண்ணை நம்பலாம் இல்லை.." அவரால் பதில் பேச முடிவில்லை.

சௌமினி ரெடி ஆகி வந்தவுடன், அங்குள்ள சில வேலையாட்களை அழைத்து, சில பல உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, சென்னை நோக்கி பயணமானான் விஷ்ணு.

இரண்டு வேளை உணவு அவர்கள் தந்து விட்டனர், இரவுக்கு தோசை மாவும், சட்னி செய்ய தேவையான பொருட்கள் இன்னும் பிற சமையலுக்கு

தேவையான பொருட்களையும் வைத்து விட்டு அவர்கள் ஒதுங்கி விட, ஈஸ்வர் பிரதர்ஸோ விழி பிதுங்கி…

ஏதோ போட்டு வதக்கி, அரைத்து சட்னி என்று அதற்கு பெயர் வைத்து இருந்தனர் அவர்கள். 

" என்னடா.. இந்தியா மேப் வரைஞ்சு வைச்சி இருக்க… தோசை எங்கடா" அருண் கேட்க, சிவா முறைத்து கொண்டு, " இதுவே அதிகம் உனக்கு எல்லாம்… ஒழுங்கா ஓடிடு, கடுப்பு ஏத்தினா உனக்கு அதுவும் கட்.. " என்க, அவன் அமைதியாக எந்த ஊர் மேப் அடுத்து வர போகுதோ என்கிற யோசனையில்… 

" இது சட்னி யா டா.. தூ தூ…" என்று தரணியை பார்த்து ரிஷி கத்த, " நான் என்ன செப் தாமு வா, அப்படியே வாயில் எச்சில் ஊருற மாதிரி செய்ய"

" எச்சில் துப்புற மாதிரி தான் டா செஞ்சு வைச்சியிருக்க… அச்சோ அந்த படு பாவி.. சாப்பாடுலையா கை வைக்கணும் .. அம்மா செய்யுற கார சட்னி.. சித்தி வைக்கிற சிக்கன் குருமா.. நாக்கு கேட்குது டா..." என்று ரிஷி நொந்து கொண்டான்..

தரணியும், சிவாவும்.. அருண் மற்றும் ரிஷியை சோதனை எலியாக்கி, தங்கள் சமையல் திறனை காட்ட.. ஒரே நாளில்.. இல்லையில்லை ஒரே வேளையில் புரிந்து போனது அம்மாக்களின் அருமை.. ஓய்வே இல்லாமல் ஓடும் இல்லத்தரசிகளின் அந்த தேவை பெரும்பாலான ஆண்கள் புரிந்தாலும் காட்டி கொள்வதில்லை.. இப்போது இவர்கள் சொன்ன பாராட்டை, ஒரு முறையேனும் நேரில் சொல்லி இருந்தால் அந்த நிறைவை வேறு எந்த அவார்டு கூட கொடுக்காது..

இவர்கள் மாறி மாறி தங்களை துப்பி கொண்டும், சீண்டி கொண்டும், வல்லபரோ பொருமலோடு, நரசிம்மரோ தீவிர சிந்தனையோடு இரவு உணவை முடித்தனர். 

விஷ்ணு அப்போது தான் தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து இருக்க, அவன் ஃபோன் அடித்தது..

எடுத்து பார்த்தவன், சௌமினியை நோக்கி, "நீ உள்ள போ.. ஒரு முக்கியமாக கால் பேசிட்டு வரேன் " என்று கூறி அன்னையை அழைத்து, சௌமினியை அவரோடு உள்ள அனுப்பி விட்டு வந்தான். அதற்குள் அந்த கால் முடிந்து இருக்க, மீண்டும் வரும் என்று இவன் எதிர்பார்க்க.. இவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் வந்தது அந்த கால், முகத்தில் புன்னகையுடன்…

" சொல்லுங்க… ரிஷி மச்சான் .. எல்லோரும் எப்படி இருக்காங்க" என்றான் சிரித்தபடி..

" இப்படி ஒரு டுவிஸ்ட் யாரும் எதிர் பார்க்கல மாப்பிள்ளை" என்றான் ரிஷி அவனுக்கு மேல் சிரித்தபடி…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top