ஆழி 26

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

26

 

காலையில் வழக்கம் போல கண் விழித்த நரசிம்மர், " சிவாய நமோ " என்று கூறிவிட்டு தன் மீது பாரம் போல தோன்ற, தன் மனைவி என்று நினைத்து, இந்நேரம் அவள் எழுந்திருச்சுருப்பாளே.. யாரது என்று பார்க்க, அருண் தான் அவரை அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான். இவன் எப்போ இங்கன வந்து படுத்தான் என்று யோசனையுடனே எழுந்து பார்க்க, அங்கே அவர் தம்பி வல்லபர் மற்றும் பிள்ளைகள் எல்லாம் உருண்டு புரண்டு தூங்கி கொண்டிருந்தனர்.. எப்படி எல்லோருமே. ஒரே அறையில்.. அதுவும் கீழே மெத்தை விரிக்க பட்டு, அனைவரும் ஒவ்வொரு திசையில்… அமர்ந்து கண்களை நன்றாக துடைத்து விட்டு பார்க்க, அது அவர்கள் அறை இல்லை… அறை மட்டுமா… வீடே அவர்களது இல்லை… இது யார் வீடு, இங்கே எங்கே நாம்… பதறி எழுந்து கதவை திறக்க, கதவு திறந்த பாடு இல்லை..

பின் பிள்ளைகள் தம்பி எல்லோரையும் எழுப்ப, அவரவர் முக்கி முணகிக் கொண்டே மீண்டும் மீண்டும் தூங்கி வழிந்தனர்.. ஒவ்வொருவரையும் கன்னத்தில் தட்டி, அடித்து ஒரு வழியாக எழுப்பி அமர வைத்தார். 

 

" அம்மா… எனக்கு தூக்கம் தூக்கமா வருது…" என்று மீண்டும் படுக்க போன அருணை " டேய் முதல கண்ணனை திரிந்து பாருங்கடே .. நாம எங்கன இருக்கோம்னு.. " என்று நரசிம்மர் கோபமாக கத்த, எப்போதும் இப்படி கத்தாத பெரியாப்பா கத்தியவுடன் அருண் வாரி சுருட்டி கொண்டு எழுந்திரிக்க, அதுவரை அருண் போலவே தூங்கி வழிந்து கொண்டு இருந்த மற்றவர்களும், அட்டேன்ஷன் போசிஷனுக்கு வந்து நின்று, சுற்றி முற்றி பார்க்க, எல்லாம் இரண்டு இரண்டாக தெரிந்தது நரசிம்மர் உட்பட…

"டேய் நல்லா கண்ணனை துடைச்சிட்டு பாருங்கடே… " என்று அவரின் அதட்டலில், பர பரவென கண்களை துடைத்துக் கொண்டு பார்க்க, இப்போது எல்லாம் ஒற்றையாக தெரிய அப்பாடி எல்லாம் ஒழுங்கா தெரியுது என்று பெரு மூச்சு விட்டனர்..

" டேய்.. நேத்து சரக்கு அடிச்சோமா என்ன… இன்னும் தலை சுத்துதுடா… "

" அடிச்ச சரக்கு சரியில்லை போல டா.. அந்த கடைகாரன் ஏமாத்திட்டான் போல.. டா.. போய் அவனா பொலக்கணும்"

" டேய் முதல, கடை மாத்தனும் டா"

" டேய்.. நீங்க என்ன டா எல்லாரும் என் ரூம்ல படுத்து இருக்கீங்க…"

" நல்லா பாரு.. இது என் ரூம்… நீ தான் மதனிக்கு பயந்து இங்கன வந்து படுத்து இருக்க…" மற்றவர்கள் சிரிக்க… 

" நீ சிரிக்காத டா, நீயும் இங்கன தானே பொண்டாட்டிக்கு பயந்து படுத்து இருக்க.."

" அச்சோ… என் ரூம்ல இருந்த கட்டில காணோம் டா.. "

" ஹ .. ஹா.. ஹ.. நல்லா தேடி பாரு.. இங்கன தான் எங்கையாவுது தான் கீழ கிடக்கும்"

இதுவரை இவர்களின் அலப்பறை பார்த்து கொண்டிருந்த பொறுக்க முடியாத நரசிம்மர் , அருகில் இருந்த தண்ணி கேனை எடுத்து, இவர்கள் முகத்தில் தெளித்தார்.. இல்லைல்லை.. ஊற்றினார்..

" எடுபட்ட… பயலுகளா… முதல.. இது நம்ம வீடு இல்ல டா"

" பெரியப்பா, அப்போ இது யாரு வீடு.. "

" ஆமா.. அப்பா ஏன் இன்னும் தூங்குறாரு… "

" வாயை மூடுங்க டா.. நம்மல எவனோ தூக்கிட்டான்…"

" என்னது…. தூக்கிடான்னா…நம்மலையா…." என்று கோராசாக கத்தினார்கள் விழி தெறித்து விடும் அளவு விரித்து…

" நாம இருக்கிற அறையை பாருங்க டா…"

பெரியப்பா பேச்சை வேத வாக்காக எடுத்து கொண்டு, அறையை சுற்றி பார்க்க… திக் என்றது அவர்களுக்கு..

" யாரு டா.. நம்மையே தூக்கி இருப்பா..

" இது எந்த ஊரு டா.."

மெல்லமாக புலம்பியவர்கள், திடீரென வீரு கொண்டு, அவர்கள் இருந்த அறை கதவை திறக்க முயற்சிக்க, அது முடியாமல்… வேகமாக தட்ட ஆரம்பித்தனர்.. அதுவரை.. நடந்த களைபரம் தெரியாமல் உறக்கத்தில் இருந்த வல்லவர், " எந்த எடுபட்ட பய டா.. தூங்கும் போது சும்மா சும்மா லொட்டு லொட்டுன்னு கதவை தட்டுறது… போங்கடே அங்கிட்டு ." என்று கூறிக் விட்டு, தூக்கத்தை தொடர்ந்தார்..

பிள்ளைகள் தலையில் அடித்து கொண்டு, அவரை தட்டி ஒரு வழியாக எழுப்பி, அமர வைத்து தங்கள் நிலைமையை சுட்டி காட்ட… வேட்டியை மடித்துக் கொண்டு, " எவண்டே . எங்களை கடத்தினது… பொட்டபயலே .. தைரியம் இருந்தா நேருக்கு நேர் மோதி பாருடே…" அவர்களும் விஷ்ணுவிற்கு இதை தான் செய்ய இருந்தது என்பதை மறந்து விட்டு வீரவேசமாக பேசினார்.

இவர்கள் மாறி மாறி, இங்கே சலசலத்து கொண்டிருக்க இதை எல்லாம் விஷ்ணு சுவாரஸ்யமாக லைவ் ஆக பார்த்து கொண்டிருந்தான் இவர்களின் அலப்பரையை சிரித்து கொண்டே… இப்போது உள்ள நவீன யுத்திகளை பயன்படுத்தி..

இவர்கள் போட்ட சத்தம் வெளியில் உள்ள ஆட்களுக்கு கேட்க, அவர்களில் ஒருத்தன் வந்து கதவை திறக்க, ஈஸ்வர் பிரதர்ஸ் அவன் மீது பாய்ந்தனர். அவனோ, முன் ஏற்பாடாக தன் பின்னால் இன்னும் சிறிது ஆட்களை வைத்து இருக்க.. இவர்கள் பாயும் போது அவர்களும் சேர்ந்து கொள்ள, அங்கே கை கலப்பு, நரசிம்மர் வல்லபரும் இவர்கள் சண்டை போட்ட கேப்பில் வெளியே போக வழி இருக்கா என்று தேடினார்.

சிறிது நேரத்தில் ஈஸ்வர் பிரதர்ஸ் சோர்வடைந்து விட்டனர். ஏற்கனவே தூக்கம் கலக்கத்தில் இருந்தவர்கள், கூடவே அவர்கள் உடலில் இருந்த மருந்தும் முழுவதும் ஆக இன்னும் நீங்கவில்லை.. அதனால் சீக்கிரம் சரண்டர் ஆகினர். அடி ஆட்களோ தற்காப்பு மட்டுமே , இவர்களை அடிக்கவெல்லாம் செய்யவில்லை… பின்னே, இதை நேரடியாக பார்க்கும் அவர்களின் முதலாளி இவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடுவான்.

இவர்கள் சற்று அமைதியாக அமர்ந்த உடன், அவர்களும் அமைதியாக நிற்க, பிரதர்ஸ்க்கு ஏகப்பட்ட குழப்பம்… 

யார் கடத்தியது என்று தெரியாது… எதுக்கு என்று தெரியாது… எந்த ஊர் என்று தெரியாது.. கடத்தியவன் இவர்களை என்ன செய்ய போகிறான் என்று தெரியாது… இந்த அடியாட்கள் ஏன் திருப்பி இவர்களை அடிக்க வில்லை என்று தெரியாது.. இதுவரை இவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்று தெரியுது… ஸ்ஸ்ப்ப்ப்பா எத்தனை தெரியாது… 

ஒருவன் சென்று, வழி தேடி கொண்டிருந்த மூர்த்தி பிரதர்ஸை அழைத்து வந்து இவர்களுடன் அமர வைத்து விட்டு திரும்ப தன் இடத்தில் சென்று நின்று கொண்டான் . என்னடா நடக்குது என்று இவர்கள் குழம்ப, கிஞ்சித்தும் விஷ்ணுவை நினைக்கவில்லை அவர்கள்.. அவன் காவல் துறையை நாடியது இருந்து, அடி தடி, அடியாட்கள் இது எல்லாம் அவனுக்கு பழக்கமில்லா மேல் வர்க்கம் என்று நினைக்க… அவனோ இவர்களுக்கு மேல்…

இப்படியே இவர்கள் குழப்பத்துடன் நின்றிருக்க, ஒருத்தன் அவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையை கொடுக்க.. பிரித்து பார்த்து சற்று அதிசயத்து தான் போனார்கள். அவர்கள் உடை… இவர்களுக்கு தேவையான பிரஷ் சோப் என்று இருக்க... பிளான் பண்ணி தான் தூக்கி இருக்கான்.. இவர்களுக்கு குளியலறை காட்டி விட்டு, இவர்கள் காவலுக்கு நிற்க.

போகிற போக்கில் போவோம் என்ற நாட்டாமை பேச்சில், அவர்களும் சரி என்று தங்கள் காலை கடமை முடிக்க, அவர்கள் அடுத்து சாப்பாடு வந்து காத்திருந்தது.. இவர்களும் தங்களுக்குள் ஒரு சிறு பார்வை பரிமாற்றத்திற்கு பிறகு, உணவை உண்டனர்.. அதுவரை அந்த அடியாட்கள் வாயிலிந்து ஒற்றை வார்த்தை வெளி வர வில்லை.

உணவு முடித்தவுடன் அவர்களை அழைத்து கொண்டு, அவர்களுடைய அறைக்கு முன்னால் இருந்த சோஃபாவில் அமர வைத்தவர்கள், முன்னே சுவற்றில் இருந்த தொலைக்காட்சியை ஆன் செய்ய, சில நிமிடங்களில் வசீகர சிரிப்புடன் விஷ்ணு தோன்றினான். அனைவரும் உச்ச கட்ட அதிர்ச்சியில் இவனா… என்று எழுந்தே நின்று விட்டனர்.

" ஹாய்.…. மாம்ஸ்.. மச்சானாஸ்… இவ்வளோ மரியாதை எல்லாம் வேணாம்.. உட்காருங்க பிளீஸ் " என்றவனை முறைத்து கொண்டே, அமர்ந்தனர்.

" அப்புறம்… வீடு எல்லாம் வசதியா இருக்கா.. நம்ம வீடு தான்.. பசங்க நல்ல கவனிச்சுக்கிறாங்களா.. என்று அவர்களை பார்த்து , "என்ன ரமணா.." என்று கேட்டான். ரமணன் மற்றும் அவனின் அடியாட்கள் தான் இவர்களுக்கு காவல் வைத்திருந்தான்.. அவர்கள் யார் என்று சொல்லி தான். அது தான் அவர்கள் இவர்களை திருப்பி தாக்கவில்லை.

" அண்ணே… நாங்க பார்த்திகிறோம் என்று சொல்லிவிட்டு ஓரம் சென்று நின்று விட்டான்.

" என்ன மாம்ஸ்.. அதிர்ச்சியா இருக்கா.. இவனை நாம தூக்க பிளான் பண்ணினால், இவன் நம்மை மொத்தமா தூக்கிடான்னு.. நான் எப்போவும் செயல் தான் காட்டுவேன்.. வெட்டிய பேச்சு எல்லாம் கிடையாது. அப்புறம் உங்க மனைவிமார்கள் எல்லாம் எங்கேனு தேடலையா… ம்ம்"

" அப்போது தான் அவர்களுக்கு அது பற்றி தோன்றியது, அதுவரை அவர்கள் வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்திருக்க, இவனின் பேச்சில் ஆவேசமாய் எழுந்த சிவா… " டேய் என்று தொலைகாட்சி அருகே செல்ல, தரணி அவனை அடக்கி, " டேய்.. அது எல்லாம் ஒன்னும் பண்ணி இருக்க மாட்டான். நம்மை போட்டு குழப்புறான்.. அமைதியா இரு " என்று கூற.. அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர், நரசிம்மரும் அவனை ஆமோதிக்க.. இப்போது அனைவரும் அமைதியாக.. 

விஷ்ணு ஒரு மெச்சுதல் பார்வை.. " மச்சான் … ஐ லவ் யூ …" என்று அந்த ரணகளத்திலும் அவனின் செயல் தரணிக்கு சிரிப்பை வரவழைக்க, முயன்று மறைத்து முறைத்தான்.

" சரி ஓகே.. விஷயத்துக்கு வருவோம்.. என் பொண்டாட்டி உங்க சம்மதம் இல்லாமல், என்னை இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணி என்கூட வர மாட்டாளாம்.. நானும் நேத்து அவ்வளோ பிட் போட்டு பார்த்தேன்.. நீங்க எல்லோரும் அமைதியா இருந்திட்டு, அப்புறம் என்னை தூக்க, பிளான் போடுறீங்க.. அதான் நான் முந்திகிட்டேன்.. நீங்க பிளான் போட்ட போது நானும் அங்க தான் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக அங்கே தான்... " என்று ஷாக் மேல் ஷாக் கொடுத்த அவர்களை சோதித்தான்.

" உங்களை எப்படி தூக்கினேன் தெரியுமா.. நீங்க தூங்கும் போது கொஞ்சமே கொஞ்சம் தூக்க மருந்து ஸ்ப்ரே தான்.. அதுக்கே எல்லோரும் தொப்பு தொப்பு விழுந்திட்டீங்க.. சோ வீக் பாடி.. அப்புறம் என் ஆட்களை விட்டு, தூக்கி , நீங்க எப்பவும் ஆம்னி பஸ்ல தானே வருவீங்க.. உங்களுக்கு ஸ்பெஷல் ஆ..ஏ.சி. ஸ்லீப்பர் பஸ்ல சௌகரியமாக தூக்கி வந்தேன்.. என்ன இருந்தாலும்.. என் மாமன்.. மச்சான்ஸ் இல்லையா…" என்றவனை எதை கொண்டு திட்ட என்று நல்ல நல்ல வார்த்தைகளை தேடினார்கள்.

" முக்கியாமா.. ஏன் கடத்தினேன் சொல்லைல.. சொல்லுறேன்.. பொண்டாட்டிய பிரிஞ்சி இருக்கிறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா.. அதுவும் ஆறு மாசமா.. ஒண்ணா இருந்திட்டு… என்று இழுத்தவனை , ரிஷி டேய் கத்தினான், ,. " நோ.. டர்டி திங்கிங் ..மச்சான்.. ஒண்ணா வேலை பார்த்ததை தான் சொன்னேன்... "

" இப்போ அவளை பிரிஞ்சி இருக்கிறது.. எப்படினு உங்களுக்கு புரிய வைக்க தான்.. இந்த கடத்தல்.. இல்லைலை… பிக் பாஸ் மாதிரி நினைச்சுக்கோங்க.. இங்கே நீங்கள் சமைச்சு, நீங்களே சாப்பிடணும், உங்க தேவை நீங்க தான் பார்த்துக்கணும்…அப்போ தான் வொய்ஃப்பை பிரிந்து இருக்கிறது உங்களுக்கு புரியும்.. இது எல்லாம் ஒரு மேட்டர் ஆ அப்படின்னு யோசிக்கிறீர்களா… இருந்து தான் பாருங்களேன்… " நரசிம்மர் அவனை தீர்க்கமாக பார்க்க.. " பிக் மாம்ஸ்… நீங்க சம்மதிக்கும் வரை இங்கே தான்.. என் ஆட்களை தாண்டி உங்களால் ஒன்னும் முடியாது.. அப்புறம் ஆட்களும் இரண்டு நாட்கள் ஒருமுறை மாறிடுவாங்க.. நீங்க அவங்களை தாஜா பண்ண முடியாது.. அவர்களுக்கு தமிழ் தெரியாது கூடுதல் தகவல்.."

" அப்புறம்.. உங்க மனைவிமார்கள் எல்லாம் சுகமா.. குறிப்பா.. சந்தோசமா என் வீட்டில் அம்மாவோட இருக்காங்க.. அப்பப்போ ஷாப்பிங், பர்சேஸ்னு.. எல்லாம் எங்க கல்யாண பர்சேஸ் தான். இப்போவே நாங்க ரெடி ஆகுறோம்." என்று சொல்லிக்கொண்டே அவன் சமையல் அறைக்குள் நுழைய..

"என்ன இந்த வீட்டை பார்த்த மாதிரி இருக்கா.. எல்லாம் என் மாமனார் வீடு தான். என்ன பொண்ணு வளர்த்து வச்சு இருக்கீங்க.. மணி என்னாகுது இன்னும் எழுந்து வரல… மனுசனுக்கு பசிக்குது.. அதான் நானே.. சாப்பிட எதாவுது செய்ய போறேன்.." 

" என்ன.. எங்க வீட்டுல இருக்கியா.. அதுவும் என் பொண்ணும் நீயும் மட்டும்" என்று அதிர்ச்சியாகி கத்தினார் வல்லபர்.. மற்றவர்கள் முகமும் அதை பிரதிபலித்தது..

" ஆஃப் கோர்ஸ்" என்று தோள்களை குலுக்கி இரு கைகளையும் விரித்தான் விஷ்ணு..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top