மோகங்களில்… 8
துருவ் வல்லப் தன்னை ஒரு மகராஜ் போல தான் இது நாள் வரை பாவித்திருந்தான். யாருக்கும் இதுவரை எந்த ஒரு பணிவடையும் அவன் செய்ததில்லை. அவன் கண் பார்வையில் இவனுக்கு செய்தவர்கள் தான் அதிகம்!! இன்று அவனுள் என்ன நேர்ந்ததோ?
சாவித்திரி அம்மா அவ்வாறு சொல்லி சென்றதும் ஏற்கனவே குழந்தைகள் பற்றிய நினைவில் இருந்தவன், எண்ணெய் இருந்த அந்த கிண்ணத்தை தன் போல அவன் கைகள் வாங்க அனுவின் வயிற்றில் தடவலானான். அதுவும் அத்தனை மென்மையாக… இதமாக… ஒருவித லயத்தோடு!
மென்மையாக பேசக்கூட அறிந்திராதவன், இன்று பூவை வருடுவது போல.. அழகிய பட்டாம்பூச்சியின் வெல்வெட் சிறகுகளை மென்மையாக தொடுவது போல.. அவளது வயிற்றில் மென்மையாக எண்ணெயை தடவினான் துருவ் வல்லப்.
இதுவரை ஆணின் ஸ்பரிசமே படாத கன்னி அவள்! ஆனாலும் இப்போது கருவுற்றிருக்கும் பெண்ணவள்!
முதன் முறை ஒரு ஆணின் மென் ஸ்பரிசத்தில் அவளுள் ஏதேதோ சொல்ல முடியா உணர்வு! அது பேறு காலத்தின் ஹார்மோன்களின் விளையாட்டா?? இல்லை அவள் இளமை உணர்வுகளின் ரசவாதமா?? இல்லை இயற்கையாக ஆதாம் ஏவாளின் மிச்சங்களா?
அனு யாரிடமும் இதுவரை உணராத ஏதோ உணர்வு!
அது அசூசையாக இல்லாமல் ஆழ் மனதினை சலனப்படுத்தும் உணர்வு! அதில் அவள் சங்கோஜப்பட்டு பார்வையை திருப்ப… அவனும் அவளை பார்ப்பதை தவிர்த்தான்!!
மனைவி அல்லாத ஒரு பெண்ணின் அங்கங்களை காண ஆணவனுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும் அவன் கண்களிலோ அவள் மீதான தப்பான தாபமான உணர்வுகள் இல்லை.
இருவருமே குழந்தைக்காக தான்.. குழந்தைக்காக தான்.. என்று மனதில் உரு போட்டுக் கொண்டே அந்த நிமிடங்களை கடக்க முயல…
அவர்களது குழந்தைகளோ அந்த நிமிடங்களை மறக்க முடியாதவைகளாக மாற்ற எண்ணின போலும்!
முதன் முறை தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவர்கள் எட்டி உதைத்து தங்கள் மகிழ்ச்சியை காட்ட.. இப்பொழுது இருவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வார்த்தைகளால் சொல்ல முடியாத ஏதோ ஆனந்தம்!
சொல்லில் வடிக்க முடியாத உணர்ச்சி மழை!!
இருவரும் பிஞ்சு கால்கள் மெலிதாக காட்டும் அந்த முட்டை வயிற்றை தான் விழியெடுக்காமல் பார்த்து அதிர்ந்து.. 'அது.. அது.. தானா?' தாங்கள் பார்த்தது.. உணர்ந்தது.. உண்மை தானா? என்று ஒருவரை ஒருவர் விழிகளால் கேள்வி கேட்டுக் கொண்டனர்.
அவனுக்கு தாம்பத்தியம் புதிதல்ல ஆனால் தாய்மை புதிது!!
இவளோ இரண்டிலுமே அரிச்சுவடி கூட அறிந்திராதவள்!!
அதனால் ஒருவித எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதே சமயம் பயமும் கலந்து இருவரும் விழிகளால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மீண்டும் மீண்டும் அவன் அப்பாதங்கள் முட்டிய இடத்தில் எண்ணெயால் வருட… ஆனால் அந்த ஸ்பரிசங்களை அதன்பின் உணர முடியாமல், அவளை பார்த்தான் கேள்வியாக!
அதுவரை அவளுமே அவனை போல ஒரு எதிர்ப்பார்ப்புடன் தன் வயிற்றை குனிய முடியாமல் குனிந்து பார்த்தவள், இப்போது அவன் தன்னை பார்த்ததும் அவனை முறைத்தாள்.
"என்ன?"
"எண்ணெய்!!"
"ம்ம்ம்?" முறைத்தவள், "என்னை பார்த்தா? எனக்கு இதெல்லாம் புதுசு. அதனால் அடுத்து எப்ப இப்படி முட்டுவானுங்கன்னு தெரியல" என்றாள் வெடுக்கென்று!
"எனக்கு மட்டும் பத்து பதினைந்து குழந்தை பெற்று அனுபவமா என்ன?" என்றான் அவனும் விடாமல்.
"பெத்து இருக்க வேண்டியது தானே?
ஏன் யாரும் அப்போ என்னை போல இளச்சவாயி கிடைக்கலையா?" என்றாள்.
"எது? நீ இளிச்சவாயா?" என்று நக்கலாக சிரித்தவன் அவள் முன் குனிந்தான்.
"இந்த துருவ் வல்லபக்கு குழந்தை இல்லையேன்னு சொல்லி என் கூட படுத்து குழந்தை பெத்து தர வந்தியா? இல்லை தானே! உனக்கு பணம் தேவை அதனால பத்து லட்ச ரூபாய் வாங்கிட்டு புள்ள பெத்து கொடுக்க வந்த.." என்று அவனும் அவளுக்கு சளைத்தவன் இல்லை என்று வார்த்தைகளை விட்டான். அதுவும் அவளது கண்களை பார்த்துக் கொண்டே ஆழ்ந்த குரலில் கூற..
'ச்சீ என்ன பேச்சு இது?' என்று முகம் சுழித்தாள் பெண். முகத்தோடு சேர்ந்து அவள் உதடும் சேர்ந்து ஒருபக்கமாய் சுழிய.. துருவின் பார்வை அதில் ஒரு கணம் பதிந்து மீண்டது.
"இப்படி முகத்த சுழிச்ச…" என்றவன் இப்பொழுது சற்றே அழுத்தமாய் எண்ணெய்யை அவள் வயிற்றில் தடவ.. அவனின் அந்த அழுத்தத்தில் அவள் திரும்பிப் பார்க்க.. மீண்டும் கண்களுக்குள் பார்த்துக் கொண்டே மீதி இருந்த எண்ணெயலயும் நன்றாக தேய்த்து விட்டவன், அருகே இருந்த டிஸ்வில் கையை துடைத்துவிட்டு அவள் அறையில் இருந்த அட்டாச் பாத்ரூம் சென்று கைகளை கழுவி வந்தான்.
பின் அவளை பார்த்தான் பெரிய வயிற்றை காட்டிக் கொண்டு சாய்ந்த வாக்கில் பெட்டில் அமர்ந்திருந்தாள் அனு. இப்படி இவன் முன் தன் வயிற்றை காட்டுகிறோமே என்று சிறு கூச்சம் இருந்தாலும், தலையை குனியவெல்லாம் இல்லை பார்வை மட்டும் தாழ்த்திக் கொண்டு இருந்தாள்.
அவன் காலடிகள் அறைக்கு வெளியே செல்வதை பார்த்ததும்தான் 'ஸ்ஸ்ப்பஆ.. என்ன பேச்சு பேசுறான் இவன். பாவம் இவன் பொண்டாட்டி.. இல்லை எக்ஸ் பொண்டாட்டி' என்று பெரு மூச்சுவிடப்படி, அவன் சென்று விட்டானா என்று நிமிர்ந்து பார்க்க.. அவனும் கதவை திறந்தவன் போகாமல் அவளைத்தான் திரும்பி நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
'ஏன் இப்படி நிற்கிறான்? ஒருமாதிரி வேற பார்க்குறான்?' என்று அவள் நெற்றி சுருங்கப் பார்க்க..
"ஆமா என்ன கேட்ட.. பத்து பதினைந்து குழந்தைகளா? இன்ட்ரஸ்டிங்! நல்லா தானே இருக்கும் அப்படி 10 15 குழந்தைகள் இருந்திச்சுனா. இப்ப அப்படி பெத்துக்க ஐடியா இல்லை! அப்படி வந்துச்சுன்னா… உன்கிட்டே தான் வருவேன்.. ம்ம்.. பெத்துக் கொடு" என்று கூறி கதவை சாத்திவிட்டு அவன் சென்று விட.. அவன் பேச்சின பேச்சின் தாக்கத்தில் அதிர்ந்து அமர்ந்திருந்தாள் அனுப்ரியா.
துருவும் அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து சொல்லவில்லை!!
அனுவும் அவன் சொன்ன வார்த்தைகளின் உள் அர்த்தத்தை கண்டு கொள்ளவில்லை!!
"என்னது இன்னும் பத்து பதினைந்து குழந்தை வேண்டுமா? என் உடம்பு என்ன ரோபா மிஷினா இவனுக்கு பெற்றுக் கொடுக்கிறதுக்கு?' என்று அவன் தன்னை வாடகை தாயாக மீண்டும் கேட்கிறானோ என்று நினைத்து இவள் சத்தமாக பேச.. அது ஸ்படிகமாக அவன் காதில் விழுந்தது.
கதவை சாத்திக் கொண்டே வெளியில் வந்தவனுக்கு தான் என்ன அர்த்தத்தில் சொன்னோம் என்று புரிய.. ஷிட்! தலை உலுக்கிக் கொண்டவன் காதில் தான் அப்பொழுது சத்தமாக பேசியவளின் முழு பேச்சும் காதில் விழ..
"லூசு..! அவளா ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டாள்!" என்று நினைத்தவன் தலையாட்டி சிரித்தப்படி தன் அறையை நோக்கி சென்றான்.
அன்று இரவு அவனுக்குள் ஏக குழப்பங்கள்!! அநேக சந்தேகங்கள்!!
"எப்படி அந்த மெயிட் சொன்ன உடனே நான் போய் அவளுக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்படி என்ன ஆர்வம் பெண் மீது? நமக்கெல்லாம் பெண் மீது ஆர்வமே கிடையாது.." என்றவுடன் ஞாபகத்தில் அவளது சுழித்த அதரங்கள் வந்து அப்படியா என்று கேட்டது.
ஒரு பெண்ணுடனான அவனது வாழ்க்கையை பிணைத்துக் கொள்ளவே முடியாது என்று தெள்ளத்தெளிவாக உணர்ந்து இத்தனை வருட அப்சரா உடனான இல்வாழ்க்கையில் இருந்து பிரிந்து கொண்டான். "அப்படி இருக்க இப்பொழுது மட்டும் என்ன புதிதாக பெண்ணின் மீது ஆர்வம் வந்து விடுமா என்ன? நெவர்..! ஐ அம் துருவ் வல்லப்!" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
அதிலும் அம்மாவின் வாரிசு என்ற அழுத நச்சரிப்பில் அவன் கண்முன்னே தோன்றியது அனுவும் அவளது பெரிய வயிறு மட்டுமே.
'இல்லை இல்லை குழந்தைகளுக்காக மட்டும் தான் அவளிடம் நெருங்கி இருக்கிறேன்.'
'அம்மா சொல்வதும் சரிதானே! இவ்வளவு பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை எனக்கு பின் ஆள வாரிசு வேண்டும் தானே? அந்த வாரிசு ஏன் அந்த குழந்தைகளாக இருக்கக் கூடாது? வாடகை தாய் மூலமாக வந்தாலும் என் குழந்தைகள் தானே!' என்று அதுவரை அக்குழந்தைகளை வேண்டாம் என்று எண்ணி இருந்தவன் இப்போது வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான்.
ஒன்றை முடிவெடுத்து விட்டால் அவனை அதிலிருந்து மாற்றுவது யார்?
எப்படி இருந்தாலும் இது அவனின் வாரிசுகள்! அந்த பெண்ணுக்கும் அவள் குழந்தைகள் மீது ஈடுபாடு இல்லை. பெற்று கொடுத்ததும் அம்மா கையில் கொடுத்துவிட்டு நாம் நம் தொழிலை பார்க்கலாம். அம்மாவும் வாரிசை பார்த்தவுடன் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதான் ஒன்றுக்கு இரண்டு வாரிசுகள் வர போகிறதே!"'என்று தனக்குத்தானே திட்டம் போட்டுக் கொண்டவனை பார்த்து விதி சிரித்தது.
நேற்று முழுவதும் சூடு பிடித்துக் கொள்ள "ஐயோ அம்மா.. முடியலையே.. அங்கங்க வலிக்குது! இல்லையில்லை ஒரு மாதிரி புடிச்சிருக்கு.. ஹான்.. இல்ல இல்ல குத்துது குடையுது… இல்ல எனக்கு சொல்ல தெரியல என்ன என்னவோ பண்ணுது" என்று அழுதுக் கொண்டிருந்த அனுப்ரியாவை அப்போது விட்டு விட்டு இப்போது வாங்கு வாங்கு என்று வாங்கி கொண்டிருந்தார் சாவித்ரி அம்மாள்.
"புள்ள பெக்குறதுனா அவ்வளவு ஈஸினு நினைச்சியா? பத்து மாசம் கோர்ஸ் போல பத்து மாசம் வயித்துல புள்ளய வைச்சிருந்து எடுத்து கொடுத்துட்டு வந்துடலாம்னு நெனச்சியோ? தாய்மை உங்களுக்கெல்லாம் கிள்ளி கீறையா ஈஸியா போச்சா? அது ஒரு தவம்!!"
"தான் கர்ப்பம் தரித்த தெரிந்த நாளிலிருந்து குழந்தை வெளிவர வரைக்கும் ஒரு ஞானியாய் நம்ம உணவை சுருக்கி.. குழந்தைக்கு எது ஒத்துக்கும் ஒத்துக்காது என்று பார்த்து பார்த்து தன் நாவை கட்டி.. தன் ருசியை குறைத்து.. பிள்ளைக்கு என்று பார்த்து பார்த்து சாப்பிடணும்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் பிரச்சனை வரும். நம் பலத்தை தைரியத்தை சோதிக்கும்!!
"அடிக்கடி மூச்சு முட்டும்! சில நாள் அதிகமாக நடந்தால் மூச்சு வாங்கும்! சில நாள் ஒரு பிடி சாதம் உள்ளே அதிகமாக சென்றாலே மூச்சு முட்டும். அத்தனையும் தாங்கி.. சமாளித்து.. மாதம் ஆக ஆக வயிறு பெருக்கப்பெருக்க.. இடை பெருத்து குழந்தையை தாங்கும் கற்பப்பை குழந்தையின் எடை தாங்காது கீழே இறங்கும்போது சிறுநீர் பை அழுத்தம் கொடுக்க.. அடிக்கடி சிறுநீர் செல்லும் நிலை ஏற்படும்! இது எல்லாம் சாதாரணமாக ஒரு பெண்ணால் கடந்து வர முடியாது. அதற்கு அவள் துணையின் பக்க பலம் ரொம்ப ரொம்ப அவசியம்" என்று பக்கம் பக்கமாக கிளாஸ் எடுத்து அவளின் உணவை முற்றிலுமாக தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.
அவர் இவ்வளவு பிட்டு போட காரணமே ஒரு பெண் தனியாக இவ்வாறு பணத்துக்காக என்றாலும் கர்ப்பமாவது தவறு! இணையோடு இணைந்து தாம்பத்தியத்தில் உருவாகும் குழந்தையே உன்னதம் என்று மறைமுகமாக உணர்த்தினார். நேரடியாக சொன்னால்தான் இந்த வாயாடி அவரை வைத்து வாங்கி விடுவாளே…
என்னதான் பணத்திற்காக வந்தாலும் அதை தாண்டிய அவரது தாயுள்ளம் இந்த பெண்ணுக்காக இரங்கியது. இந்த வயசில் அப்படி என்ன இவளுக்கு பணத்திற்கு அவசியம் இருக்க போகிறது என்று அவர் நிலையில் இருந்து மட்டுமே அவர் யோசித்தார்.
அவரவர் நிலை அவரவருக்கு அல்லவா??
உதவிக்கோ ஆதரவுக்கோ அன்பு காட்டவோ யாருமே இன்றி வயதான பாட்டியின் தயவால் சற்று தனது பள்ளி பருவத்தை சிரமத்தோடு முடித்திருந்தாள் அனு.
அவளை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு பெரிய முதலாளி இடம் கைகட்டி வாய் பொத்தி தன் உழைப்பை கொடுத்து, அதற்கு சின்மானமாக ஏதோ சம்பளம் என்ற பெயரில் கொஞ்சம் பணத்தை வாங்கி, அதுவும் முழு மாதத்திற்கு போதாமல் சிரமப்பட்டு கொண்டிருக்க… ஆனால் முதலாளிகளோ சுகபோகமாக வாழ்வதை கண்ணூற்றவள் அவள்.
தன்னை சுற்றி பார்த்தவளுக்கு 'நாம் ஏன் ஏதோ ஒருவனிடம் நம் உழைப்பை கொண்டு போய் கொட்ட வேண்டும்? அதை நமக்கு நாமே செய்தால் என்ன?' என்ற வித்து விழுந்தது சிறு வயது முதலே.. அவளின் கனவு என்றே சொல்லலாம் இந்த தொழிலிபி…
ஆம் ஒரு முறை அவள்தான் பாட்டியிடம் "ஆயா தொழிலதிபர்னு சொல்றோம் இல்லையா.. அதுவே பொண்ணுங்களா இருந்தா நம்ம என்ன சொல்லுவோம்?" என்று கேட்டதும்.. அந்த ஆயாவுக்கும் தெரியாமல் "அவன் தொழிலதிபன்னா.. இவ தொழிலதிபி டி கண்ணு" என்று கூற, அந்த தொழிலதிபி அவள் மனதிற்குள் இன்று வரை பச்சை குத்தாமல் பதிந்திருந்தது.
'தன்னை அறியாமல் அவர் வாழ்ந்த வாழ்வை அவர் கூறிகிறார்' என்று சாவித்ரி அம்மாள் கூறுவதை கண்டுக்கொண்டதே கிடையாது அனு!
சாவித்ரி அம்மாள் அந்த பக்கம் சென்றதும் மேட்டர்னிட்டி உடையில் பெரிதாகத் தெரிந்த தன் வயிற்றை குனிந்து பார்த்தாள் அனுப்ரியா.
"ஏன் டா பிள்ளைகளா? நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்னு இந்த சாவித்திரி அம்மா பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு போகுது? அவங்களுக்கு அவங்க புருஷன் அவங்க மகன் அதுதான் அவங்க குடும்பம்.. அவங்க வாழ்க்கை! ஆனா என்னோடது அப்படி இல்ல.. பரந்து விரிந்த இந்த ஆகாயத்தை போல என்னுடைய கனவுகளும் ரொம்ப ரொம்ப பெருசு.. அப்துல் காலம் ஐயா சொன்னது போல என் கனவுகளும் ரொம்ப ரொம்ப பெருசு அந்த வானம் போல.. இப்போதைக்கு சென்னையே திரும்பிப் பார்க்கிற ஒரு தொழிலதிபதியா மாறுனா போதும்! அதற்கு அப்புறம் இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கிற அளவு கண்டிப்பா நான் ஒரு நாள் முன்னேறுவேன். என்ன என்னிடம் தொழிலுக்கு முதலீடு செய்ய எங்க அப்பன் பாட்டன் பூட்டன் சேர்த்து வச்ச சொத்து இல்லை. அதுக்காகத்தான் இப்படி வந்து.. உங்களை.. இந்த அனுவால் தான் நீங்கள் இந்த உலகத்துக்கே வரீங்க! ஐ அம் சோ ஹாப்பி" என்று நல்ல மனநிலையில் அவள் இருக்க.. வயிற்றைக் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.
அது தாய்மையினால் வெளிப்பட்ட பாசம் அல்ல அவள் மனதில் உண்டான மகிழ்ச்சியை அவ்வாறு தெரிவித்தாள்.
மாடியில் இருந்து இதை பார்த்துக் கொண்டே இறங்கி வந்த துருவுக்கு சற்றே மனமும் முகமும் சுருங்கியது. அன்று குழந்தையோடு இவளை விரட்ட வேண்டும் என்று நினைத்தவன், இன்று குழந்தைக்காக இவ்வளவு விரட்ட வேண்டும் என்று எண்ணினான். எப்படியும் சில மாதங்கள் தானே! குழந்தை பிறக்கும் வரை தானே! என்று எண்ணியவன் வதனத்தில் மர்ம புன்னகை ஒன்று இழைந்து ஓடியது.
விரட்ட நினைத்தவனே அவளை விரட்டி விரட்டி காதலிப்பான் என்று தெரிந்தால்…
தெரிய வைத்தது விதி! இல்லையில்லை சதி!!
அன்று ஒரு மீட்டிங்க்காக சில தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் அதுவும் இவனை போல கார்மெண்ட்ஸ் தொழிலதிபர்கள் கலந்து கொள்ள மீட்டிங்காக ஒரு உயர் ரக ஹோட்டலுக்குள் நுழைந்தான் துருவ்.
வழக்கமான அபிஷியல் மீட்டிங் முடித்து அடுத்து தண்ணி பார்ட்டி ஆரம்பிக்க… துருவையும் அவன் தொழிலையும் எட்ட முடியாத வன்மம் கொண்ட, சில நல்ல உள்ளங்களும் அங்கு இருக்க தான் செய்தனர். அவர்கள் இப்பொழுது வாய்க்கு அவலாகிப் போனது துருவ் அப்சரா டிவோர்ஸ்.
"உங்க பொண்டாட்டி உங்களை பிரிஞ்சுட்டாங்களாமே.. அப்படியா துருவ்?" என்று ஒருவன் ஆச்சரியமாக கேட்க…
"அட ஆமாம்! உங்களுக்கு விஷயம் தெரியாதா? டிவோர்ஸ் ஆகி எப்படியும் ஒரு ஒரு மாசம் ஆகாது?" என்று துருவிடமே பதிலறிய கேள்வி கேட்டான் மற்றொருவன்.
"சோ சேட்! நம்ம துருவ் இவ்வளவு வசதி, ஹாட் அண்ட் ஹாண்ட்செம்! ஆனால் நம்பர் ஒன் இன்ட்ரஸ்டியலிஸ்ட்! அப்புறம் ஏன் இவ்வளவு பிரிந்து போனாங்க?" என்று வன்ம குடோனை திறக்க ஆரம்பித்தான் ஒருவன்.
"ஒருவேளை தொழில அளவுக்கு குடும்பத்திலும் பெர்ஃபார்மன்ஸ் பத்தலையோ.. என்னவோ?" குருவின் ஆண்மையை கேள்விக்குறியாக்கினான் மற்றவன் அதுவரை பொறுத்திருந்தவன் கோபம் எல்லை மீற…
எதிரில் இருப்பவனை அடித்து வீழ்த்த ஒரு நிமிடமாகாது துருவுக்கு. ஆனால் அதையே வைத்துக் கொண்டு சோசியல் மீடியாவிலும் செய்திகளிலும் மீண்டும் மீண்டும் போட்டு தேவையே இல்லாத சில வன்மங்களை தாக்கி.. பிரிந்து போன அப்சராவுக்கும் இவனுக்கும் இல்லாத சண்டையை கூறி.. ஏன் இருவருக்குமே மற்றொரு அஃபேர் இருக்கு என்று சொன்னால் கூட வியப்பில்லை!
அதனால் அமைதியாக நின்றவன் தன் எதிரில் கேள்வி கேட்டவன் கோட்டை நீவி விட்டு "என்னோட பர்ஃபார்மன்ஸ் எப்படின்னு இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு தெரியும்" என்று சொன்னவனின் மர்ம புன்னகையில் எதிரே இருந்தவனுக்கு கொஞ்சம் தொண்டை வறண்டது.. பயத்தில் துருவின் ஆளுமையில்!!!
பேச்சோடு பேச்சாக பேசிவிடலாம் என்று அவன் எண்ணியிருக்க..
"என்னிடம் பேச்சே இல்லடா! வெறும் வீச்சு தான்!" என்று அடுத்த அரை மணி நேரத்தில் பேசியவனுக்கு தன் தன் ஸ்டைலில் தண்டனை கொடுத்து இருந்தான் துருவ் வல்லப்!!
இனி.. வீட்டில் அவனுக்கு பர்பாமென்ஸ் செய்ய முடியாத நிலைமையில் இருந்தான் பேசியவன்!!
இவளையும் தொரத்தி விட போறியா 🙄🙄🙄🙄.