ஆழி 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

 

25

 

வீட்டு வாசலில், இரு கால்களையும் அகல விரித்து, இரு கைகளையும் தன் பாக்கெட்டில் விட்டு, கர்ஜித்தவனை பார்த்து யாரு டா இவன் என்று அனைவரும் பார்க்க.. " ஆபிசர் தம்பி.. என்ன பேச்சு இது" என்று கோபமாக கேட்டு கொண்டே எழுந்து வந்தார் வல்லபர். நரசிம்மர் தீர்க்கமாக முறைக்க, ஈஸ்வர் பிரதர்ஸ் நரம்புகள் புடைக்க, கண்கள் கோபத்தில் சிவக்க, கொலைவெறியுடன் விட்டால் விஷ்ணுவை கொல்லும் வெறியுடன் நின்றிருந்தார்கள்.. அண்ணிகள் யாருடா இந்த புது பீஸ் என்று பார்க்க.. அம்மாமார்களுக்கோ பயங்கர பய பந்து வயிற்றில்…

அவன் அருகே ரோஹிணியும், நாகுவும்.. நாகு மெல்ல மனைவி புறம் குனிந்து , " ரோஹி.. இவன் என்னடி இன்னும் அதையே பொய்யே ரிப்பீட் பண்ணிகிட்டு இருக்கான்.. சோ போரிங்.. புதுசா எதுனா டிரை பண்ணலாம்ல" என்று கூறி ரோஹிணியின் முறைப்பை பெற்று வாயை மூடி கொண்டார்.

வல்லபர், " உங்களை பற்றிய நல்ல அபிப்ராயம் எங்களுக்கு இருக்கு.. அதே நீங்களே கெடுத்துக்காதீங்க… வீணா புரளி கிளப்பி, பொட்டா புள்ள வாழ்க்கை விளையாடாதீங்க… கிளம்புங்க.. அப்புறம் உங்க உசுருக்கு கூட உத்திரவாதம் கிடையாது.." என்று மகன்களை கண் ஜாடையில் காட்டி பேசியவரை பார்த்து வெண்பற்களை காட்டி அழகாக சிரித்தான்.

பின் நிதானமாக நடந்து வந்து, அங்கிருந்த ஊர் பெரியவர்கள் ஒருவரை பார்த்து, " ஏங்க ஐய்யா.. பரிசம் போட்டா.. பாதி பொண்டாட்டியாமே…அப்படியா ஐயா" என்று வினவினான்.

அவர் நரசிம்மரை பார்த்து விட்டு, " ஆமா தம்பி" என்றார். " பரிசம் அடுத்தவன் பொண்டாட்டிக்கு போட்டாலுமா ஐயா"

" அதெப்படி முடியும்… " என்று அவர் ஏகிற.." பாருங்க உங்களுக்கே இவ்வளோ கோபம் வருது, அப்போ என் பொண்டாட்டிக்கு போடற இவங்களை நான் என்ன செய்யலாம்" என்று யோசித்தவனை, ரிஷி நெருங்கி சட்டையை பிடிக்க, " மச்சான்.. இப்படி சட்டுனு சட்டை எல்லாம் பிடிக்க கூடாது.. நாள பின்ன.. மாப்பிள்ளை மேல கை வைச்சிட்டோமேன்னு ரொம்ப்பப ஃபீல் பண்ணுவீங்க" 

" யாருடா மாப்பிள்ளை.. . தனியா வேற வந்து மாட்டி இருக்க… ஓடிடு..உயிரோட பொதைச்சிடுவேன்.. " ஆஹ்ஹாண்… அப்படி தனியா வந்து மட்டா நான் என்ன அவ்வளவு கேனையா என்ன.. " என்று சொல்லி வாசலில் பார்க்க… காவல் அதிகாரிகள் சில பேர் நிற்க, ரிஷியின் கை தானாக இறங்கியது, தன் சட்டையை நீவி விட்டு கொண்டே, ஒரு எள்ளல் சிரிப்பை உதிர்த்தான்.

அனைவர் முகத்திலும் ஒரே கலவரம், மாப்பிள்ளை வீடோ , " என்ன நரசிம்மர் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க… ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை தான் எங்களுக்கு பெண் கொடுக்க வந்தீங்களா… உங்க வீட்டு பொண்ணை தான் பார்க்க வந்தோமே தவிர, அடுத்தவன் பொண்டாட்டியை இல்ல.." என்று மாப்பிள்ளை அப்பா கோபமாக கத்தினார்.

நரசிம்மர் பல வழக்குகளை பார்த்தவர் அல்லவா.. இவர்கள் மாதிரி தாம் தூம் என்று குதிக்கவில்லை அவர். மெல்ல விஷ்ணுவை அவதானித்தவர், அவனின் தீர்க்கமான பார்வை, யாருக்கும் அஞ்சா பேச்சு, அலட்டிக் கொள்ள இயல்பு, நேர்த்தியான அவனின் உடல் மொழிகள் எல்லாம் சேர்த்து, அவனை பொய்யன் இல்லை என்று அனுமானித்தார். இவ்வளோ தைரியமாக பேசுகிறான் என்றால், நம் பெண்ணுக்கும் இதில் கண்டிப்பாக சம்மதம் இருக்கும் என்று சரியாக கணித்தவர், தன் பெண்ணை பார்க்க, கலக்கமாக, அவஸ்தையுடன் சௌமினி அமர்ந்து இருந்தாலும், அவளின் கண்ணில் நேற்று வரை இல்லாத ஒரு ஒளி அவரை யோசிக்க வைத்தது. 

அதற்குள் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் சலசலக்க, பெண்கள் வீட்டு உறவினர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க, வல்லபருக்கு இந்நிலை பிடிக்காதவராய், விஷ்ணுவை பார்த்து, " போலீஸ கூட்டி வந்திட்டா.. நீ பெரிய ஆளா.. மரியாதையா கிளம்பு" மிரட்ட.. அருணும், சிவாவும் அவர் அருகில் நின்று அவனை முறைத்து கொண்டிருந்தனர்.

தரணி மட்டுமே, சற்று அமைதியாக இருந்தான் தம்பிகளை போல குதிக்காமல், ஆனால் முகம் கடுமையாகவே இருந்தது.

மாப்பிள்ளை தந்தை , " என் பிள்ளை யாருனு நினைச்சீங்க.. ஊர்ல இவ்வளோ சொத்து இருந்தும் அதையும் தாண்டி, பெரிய கம்பெனியில ஜெனரல் மேனேஜரா இருக்கான்.. மாசம் சம்பளம் மட்டுமே லட்ச ரூபா.. பொண்ணு வீட்டுக்காரங்க வரிசை கட்டி நிக்குறாங்க என் பையனுக்கு தெரியுமா…" என்று பெருமையாக கூறி, மிதப்பான ஒரு பார்வை பார்த்தார் விஷ்ணுவை. மாப்பிள்ளையின் அப்பாவை பார்த்த விஷ்ணு, " லட்ச ரூபா.. மாசத்துக்கு, அதுவும் ஒரு ஜெனரல் மேனேஜருக்கு ரொம்ப அதிகம் தான்.. அப்போ அதை பாதியா குறைச்சிடுவோமா.. இல்லை ஒரேடியா தூக்கிடுவோமா … எந்த சாய்ஸ் ஓகே" என்றவன் தன் மொபைலை எடுத்து, இரண்டு மூன்று மெசேஜ்களை தட்டி விட்டான். அடுத்த நொடி, மாப்பிள்ளையாக நின்றவனின் மொபைல் மெசேஜ் வந்த சத்தத்தில், அவன் எடுத்து பார்க்க, பார்த்தவனின் முகத்தில், வியர்க்க ஆரம்பித்தது அவன் துடைக்க துடைக்க.. பாய்ந்து வந்தவன், விஷ்ணுவின் கை பிடித்து,. " சர்.. பிளீஸ்.. என்னை டெர்மினேட் பண்ணிடாதீங்க… எனக்கு இந்த ஊர், இவங்க அடி தடி இது எல்லாம் ரொம்பவே அலர்ஜி, பயம்.. அது தான் வெளியூரில் வேலை பார்க்கிறேன்.. பிளீஸ் சர்.. " என்று கெஞ்சினான்.

அவன் பெயரில் உள்ள வீரத்திற்காகவே அவனை மாப்பிள்ளையாக தேர்ந்து எடுத்தவர்கள் , ச்சீ இவ்வளோ பயந்தா கொல்லியா இவன்.. இவனுக்கா.. நம்ம வீட்டு பொண்ணை கொடுக்க போனோம் என்று அவர்கள் கோபம் மாப்பிள்ளை மேல திரும்பியது.

மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் அவனின் சொந்தங்கள் புரியாமல் விழிக்க, அவனின் அப்பா " ஏண்டா.. அவன் கிட்ட போய் கெஞ்சிகிட்டு இருக்க" 

" அப்பா.. சும்மா இரு… சர் தான் , நான் வேலை பார்க்கும் கம்பனியை சார்ஜ் எடுத்த புது எம்.டி, நான் அவரை நேர்ல அப்போ பார்க்கல… நியூஸ் மட்டும் தான் வந்தது." என்று சொல்ல, இப்போ மிதப்பான பார்வை விஷ்ணுவிடம் அவரை நோக்கி.

" சர்.. எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை, அப்பா சொன்னதுக்காக தான் வந்தேன்.. பிளீஸ் என்னை டெர்மினேட் பண்ணிடாதீங்க.. " என்று மீண்டும் கெஞ்சியவனை பார்த்து, " அவுட்" என்று கூறி அவன் சொந்தங்களை கை காட்ட… 

" சூர் சர்..சூர்…" என்று கூறி அவன் சொந்தங்களை எல்லாம் கிளப்பினான். போகும் போது…" சர்… என் வேலை என்று இழுத்தவனை பார்த்தவன்…. " டிமொரோ மார்னிங் யூ ஷூட் பீ ரிப்போட் அட் டைம் .. அதேர் வைஸ்…"

" நோ.. நோ.. சர்.. ஐ ஷூட்…" என்று பம்மியவாறு வெளியேறினான். அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் அந்த இடத்தில் இருந்து மந்திரம் போட்டது போல மாயமாகி இருந்தனர்.

விஷ்ணுவின் அதிரடியைப் பார்த்து கொண்டிருந்த தரணி, மனதுக்குள் சபாஷ் சொல்லி கொண்டான். 

"சோ.. இப்போ பேசலாமா… " என்றவனை அனைவரும் கோபமாகவே பார்க்க.. " இன்னும் என்னங்கடா.." என்ற அலுத்த பார்வை விஷ்ணுவிடம்.

" அவனுகளை விரட்டிட்டா.. உனக்கு பொண்ணை கொடுத்திடுவோமா…. ஆயிரம் மாப்பிள்ளை பார்போம்டா.. என் தங்கச்சிக்கு" என்று மார் தட்டிய சிவாவை பார்த்து, " தாரளமா பார்த்துக்கோங்க உங்க தங்கச்சிக்கு, ஆனா என் பொண்டாட்டிக்கு இல்ல"

" சும்மா.. சும்மா.. பொண்டாட்டி பொண்டாட்டி சொன்ன.. பல்லை பேத்துடுவேன்…." என்ற ரிஷி.. சௌமினியை இழுத்து வந்து, எல்லோர் முன் நிறுத்தி, " சொல்லு.. இவன் உனக்கு தாலி கட்டினானா… " ஆத்திரமாக கேட்க.. சௌமினியோ இல்லை என தலை அசைத்தாள்.. இப்போது தான் அவர்கள் குடும்பத்திற்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.. நம் பெண் நம்மை மீறி போகவில்லை என்று.. ஆனால் அவர்களுக்கு வி.பி. பற்றி தெரியவில்லை.. அவன் வைத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்..

" அவளே சொல்லிட்டா தானே.. போடா வெளியில… " என்று அருண் அவனை அடிக்கவே செல்ல, தரணி தான் அவனை பிடித்து தடுத்தான்.

" அவ சொன்னது சரி தான்.. நான் தான் உங்க எல்லோர் முன்னிலையில் தான் தாலி காட்டுவேன் சொல்லி இருக்கேன்.. உங்க ஆசிர்வாதத்தோட" என்றவனை லூசா டா நீ… என்று அனைவரும் பார்க்க..

" அப்போ தாலி கட்டல இல்லையா… இனிமேலும் அது நடக்கவே நடக்காது… அதுவும் எங்க முன்னிலையில் அதுவும் ஆசிர்வாதத்தோட… " என்று எள்ளிய வல்லபர்,காவல் அதிகாரிகளை பார்த்து, " உங்களுக்கு எங்க குடும்பத்தை பத்திதெரியும் தானே.. யாரோ சொன்ன உடனே கூட வந்திடுவீங்களா..போங்க சர்.. " என்று அவர்களையும் கடிந்து விட்டு விஷ்ணுவை கண்களாலேயே எரித்தார் .

இதுவரை ஒரு வார்த்தை நரசிம்மர் பேசினார் இல்லை.. திரும்பவும் ஆளாளுக்கு வார்த்தைக்கு வார்த்தை பேச, நரம்சிம்மரின் " அமைதியா இருங்க எல்லோரும்" என்ற கர்ஜனையில் அவ்விடம் அமைதியானது, விஷ்ணு உட்பட.

விஷ்ணு பெற்றோரை பார்த்தவர், " உங்க பிள்ளை இது போல பேசுறது நல்ல குடும்பத்துக்கு அழகு இல்லை.. நல்ல புத்தி சொல்லி கூட்டி போங்க" என்றார்.

ரோஹிணி வெகு அமைதியாக அவரை பார்த்து விட்டு, மெல்ல நடந்து சௌமினியிடம் வந்தார். அவளோ தலையை கீழே குனிந்த வண்ணமே, மெல்ல அவளை நிமிர்த்தியவர் அவளை பார்த்து புன்னகை புரிந்தார்.. பின் கணவனை திரும்பி பார்க்க, புரிந்தவர் போல, ரோஹிணி அருகில் வந்து ஒரு பெட்டியை கொடுக்க, அதிலிருந்த ஒரு வைர நெக்லஸ் எடுத்து சௌமினிக்கு அணிவித்து விட்டு, விஷ்ணுவின் அன்னை என நிரூபித்தார்.. மொத்த குடும்பமும் ,ஊரும், சொந்தமும் ஆவென பார்க்க மட்டுமே முடிந்தது..

சௌமினி மென்னகையுடன், அவர்கள் காலில் விழ்ந்து ஆசிர்வாதம் வாங்க, பெண்ணின் இந்த செயல் அனைவருக்கும் பி.பி. ஏகிற வைத்தது.. விஷ்ணு வதனத்தில் அன்னை மற்றும் சௌமினி செயலில் ஏக பெருமிதம்.

பின் ரோஹிணி, நரசிம்மரை பார்த்து தன் கணவருடன் ஒரு வணக்கத்தை வைத்து, பழைய படி போய் நின்று கொண்டார்.. தன் பையனின் சொல்லை செயல் வடிவில் காட்டி சௌமினி எங்கள் வீட்டு மருமகள் என்று சொல்லி விட்டு…

என்ன ஃபேமிலி டா நீங்க என்ற மைண்ட் வாய்ஸ் தான் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும்..

அந்த காவல் அதிகாரி நரசிம்மர் அருகில் வந்து, ஒரு சர்டிபிகேட் காட்டி, "இது இவர்கள் மேரேஜ் சர்டிஃபிகேட் சர், இதை காண்பித்து தான் எங்களை அவர் மனைவியை மீட்டு கொடுங்க சொல்லி எங்களிடம் புகார் கொடுத்தார்.. நீங்களே உங்க பெண்ணிடம் கேளுங்கள் இது அவர்கள் கையெழுத்து தானா" என்று சொல்ல..

இப்போது ஒரு பரபரப்பு அனைவரிடமும், போலீஸ் அதிகாரி முன்னே சௌமினி அழைத்து விசாரிக்க, அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது , . எப்போ நாம கையெழுத்து போட்டோம் என யோசித்தவள், தங்கள் தனிமை நேரங்களில் ஏதேதோ பேப்பர் அவன் நீட்ட, இவள் எதையும் படிக்காமல் கையெழுத்து போட்டது நினைவு வந்து அவனை முறைக்க.. அவனோ உல்லாசமாக சிரித்து அவளை பார்த்து கண்ணடித்தான்.

’பாவி.. பாவி.. என்ன பண்ணி வைச்சு இருக்கான்.. அது தான் பொண்டாட்டி பொண்டாட்டி கூப்பிட்டானா.. இப்படி மொத்தமா சிக்க வைச்சுட்டானே.. எல்லோரும் என்னையே உத்து உத்து பார்க்குறாங்களே.. இப்போ என்ன செய்ய ’ என்று கையை பிசைந்த படி நின்று கொண்டிருந்தவளை , அந்த அதிகாரி, " என்னமா.. இது நீ போட்டது தானே " என்று கேட்க.. தலை அவள் சம்மதம் இல்லாமல் ஆமென ஆட்ட… கண்களோ தன் குடும்பத்தாரை பார்த்து பயந்தது.

இவள் சொன்ன அடுத்த கணம் , சரசு அவள் தலையில் இரண்டு குட்டு குட்டி, " பாதகத்தி… என்ன காரியம்.. செய்ஞ்சு வைச்சு இருக்க.. உன்னய வேலைக்கு அனுப்பினா.. நீ புருசுன தேடுகிட்டா வரவ…." என்று ஆரம்பித்து அர்ச்சனையை வாயாலும் கையாலும் கூட்டி கொண்டே போக, சௌமினி அழுக தொடங்க, பாரு உன்னால தான் என்று முகம் விஷ்ணுவை குற்றம் சாட்டியது..

சிறிது நேரம் பொறுத்தவன், " ஆண்டி.. போதும் என்றான் அழுத்தமாக.. சரசு வாய் மூடி, கை இழுத்து கொண்டார். பின் அனைவரையும் பார்த்தவன், " மினி.. சட்டபடி என் பொண்டாட்டி . அவளை திட்டிவோ . அடிக்கவோ உங்களுக்கு உரிமை இல்லை.. மீறினால் நானும் எந்த எல்லைக்கும் போவேன்.. ரெஜிஸ்டர் மேரோஜ் செய்த எனக்கு, அவளை கூட்டி போய் தாலி கட்ட என்ன… குடும்பம் நடத்தவும் தெரியும்.. ஆனா.. இங்க உங்க முன்னால் , நான் வந்து நின்னு இவ்வளோ வாதாடி கிட்ட இருக்க காரணம் என் மினி தான்... நீங்க எவ்வளோ அன்பு, பாசம் அவள் மேல வைச்சு இருக்கீங்களா.. அதை விட அவ அதிகம் உங்க எல்லோர் மேல வைச்சு இருக்கா.. அவ உங்க யாரையும் பிரிச்சு பார்த்தே இல்லை.. அவங்க அப்பா விட.. அப்பூ.. அப்பூனு உங்களை தான் சொல்லுவா.. என்றான் நரசிம்மரை பார்த்து, " தலை வலிச்சா.. இப்போ பெரியம்மா இருந்த நல்ல இருக்கும்.. அவங்க மடியில் தலை வைச்சு படுத்தா தலைவலி ஓடிடும் சொல்லுவா…" பின் அண்ணன்களை பார்த்து, " நாலு அண்ண்கள் எனக்கு தான் சொல்லுவாள் தவிர, பெரியப்பா பசங்கனு சொன்னது இல்லை… அவளை தூக்கிகிட்டு உங்க கண் காணாத ஊர் போக எனக்கு ஒரு நிமிசம் ஆகாது.. ஆனா உங்க ஆசிர்வாதத்தோட தான் வரணும் என்கிறது மினியோட ஆசை, அது தான் எனக்கும்... சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க.. நான் இதே ஊருல தான் தங்க போறேன்.. ரொம்ப எல்லாம் எனக்கு பொறுமை கிடையாது… நீங்க நல்ல பொறுமையா யோசிச்சு நாளை காலையில் பதில் சொல்லிடுங்க.." என்று பெரிதாக பேசியவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன்னவளிடம் தலையசைத்து விடை பெற்று சென்று விட்டான்..

அவன் சென்றவுடன், சௌமினியையும் சுஜியையும் அனைவரும் முறைக்க, நரசிம்மர் இருவரையும் அறைக்கு போக சொன்னார்.. அவர்களும் சென்று விட.. மற்ற பெண்களை பார்க்க.. அவர்களும் அதே தான்.. ஊரும் உறவினரும் இடத்தை காலி செய்தனர்.

ஒரு அறையில் ஆலோசனை நடந்து வழக்கம் போல நரசிம்மர் நாட்டாமையாக… 

" அவனை ஒரேடியாக போட்டுடலாம்.." அருண்..

" டேய்.. போலீஸ் புகார் பண்ணி இருக்கான்.. நம்ம மேல தான் சந்தேகம் வரும்…" தரணி.

" அப்போ ஆள் மட்டும் தூக்கி.. விவாகரத்து பண்ண சொல்லி கையெழுத்து வங்கிடலாம்" சிவா

" இது ஓகே… அவன் குடும்பத்தையும் சேர்த்து தூக்கனும் டா" ரிஷி. கடைசியாக.. விஷ்ணு அவனின் பெற்றோரை தூக்கி, அடைத்து வைத்து அவனிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டது‌ ஒரு மனதாக..

மறுநாள், காலை சௌமினி தூங்கி எழுந்து கீழே வர, அவள் வீட்டு சோஃபாவில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த விஷ்ணு கண்ணில் பட்டான். அவள் பதறி போய்.." என்ன மாமா , இங்கன வந்து சாவகாசமா உட்கார்ந்து இருக்கீங்க… யாராவது பார்த்தால் அவ்வளோ தான்" என்று சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே பேசியவளை, பின் இருந்து அணைத்தவன்.. " அது எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.." என்று அவள் கழுத்தில் தன் இதழால் கோலம் போட்டவனை தள்ளி விட்டாள்.

" ஏன்"

" மொத்த குடும்பத்தையும் தூக்கிட்டேன்… உன்னை தவிர" என்றான் திரும்பவும் அவளை அணைத்து கழுத்து வளைவில் கோலம் போட்டு கொண்டே….

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top