24
விஷ்ணு போடிநாயக்கனூர் ஊரில் நுழைந்த போதே, தலையில் கட்டிய முண்டாசு, பெரிய மீசை , வேட்டி சட்டையில் தான் வந்து இறங்கினான். இவனின் அடையாளம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம்.. அசல் கிராமத்து இளைஞன் போல.
மெல்ல விசாரித்த கொண்டே இவர்கள் வீட்டை நெருங்கியவன், கல்யாண களையில் திகழ்ந்த வீட்டை பார்த்து கோபம் பொங்கியது அவனுக்கு.. தன்னை கட்டுப்படுத்தி கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே வேலையாட்கள் வேலை செய்ய, சிறிது நேரம் அவர்களை கண்காணித்து பின் தானும் அவர்களோடு இணைந்து கொண்டு, தெரிந்தவன் போலவே பேசி, வேலைகளை செய்து, இடையிடையே சௌமினியிடம் பேச நேரம் பார்த்து கொண்டிருந்தான். கவனம் வேலையில் இருந்தாலும், கண்கள் தன்னவளின் தரிசனத்தை நோக்கியே தவம் இருந்தது..
இரவு பெரும்பாலானோர் வீட்டுக்கு செல்ல, சில வேலையாட்கள் மட்டுமே அங்கே தங்கினர், இவனும் அவர்களோடு. அவ்வபோது வீட்டுக்குள் நடமாடி பிறர் கவனம் கவராமல், தகுந்த தருணம் காத்திருந்து அவளது அறை நோக்கி போக, ஆனால் அவளோ மாடி நோக்கி செல்ல, மெல்ல இந்த திருட்டு பூனை தன் பாலான பெண்ணவளை திருட்டுத்தனமாக காதல் செய்ய பின் தொடர்ந்து சென்றது.
சௌமினிக்கு அதிர்ச்சி கொடுக்க விஷ்ணு அவளை கை பிடித்து இழுத்து அணைக்க, அவளின் இந்த முத்த வரவேற்பு அவன் எதிர்பார்க்காத ஒன்று. ஒவ்வொரு முறையும் தானே அவளை முத்தத்தால் முத்தாட வைப்பவன், இன்று அவளின் இதழ் நடத்தும் முத்த யுத்தம் அவனை மேலும் மேலும் அவள் மேல் பித்தாக்க, எதிர் வினை புரியாமல் மொத்தமாக அவள் இதழ் ஸ்பரிசத்தை மட்டுமே, அணு அணுவாக ரசித்து அமிழ்ந்து போய் கொண்டிருந்தான். அவன் இதழ் மட்டுமே அவளின் இதழ் ஆளுகைக்கு உட்பட, அவனின் கைகளோ அவள் இடையில் தவழ்ந்து, குழைந்து, இடையின் மென்மையை ஆராய்ந்து, முன்னோக்கி சென்றது. அவள் அணிந்திருந்த தாவணி அவனுக்கு வழி செய்து கொடுக்க, மேலும் முன்னேறிய அவன் விரல்கள் அவளின் நாபியில் விளையாட, சௌமினி அவன் விரல் விளையாட்டில் கூச்சம் கொண்டு, போரில் தோற்ற படை போல பின் வாங்க, அவனோ மற்றுமொரு கை கொண்டு அவளின் நகர்வை தடை செய்து, தன்னை நோக்கி இடை பற்றி அழுத்தி தள்ள, அவளின் இதழ் முற்றுகையை தன் வசமாக்கி பின் வாங்கியவளை தடை செய்து, வெற்றி கொடி நாட்டியது விஷ்ணு இதழ்கள்... அவனின் இரு கைகளும், இதழ்களும் நடத்தும் யுத்தம் முடிவில்லா முடிவிலியாய்… பத்து நாள் பிரிவுக்கும் சேர்த்து தங்களை தங்களுக்கு தொலைத்து கொண்டிருந்தது அந்த காதல் புறாக்கள்..
கீழே தரணியின் குரலில் தங்கள் மோன நிலையில் இருந்து, பிரிந்தனர்..மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன் கண்களால் தன்னவனை நிரப்பி கொண்டிருந்தாள் சௌமினி.. கண்கள் கலங்கி அருவியென கொட்ட, அவள் இரு கன்னங்கள் பற்றி, தன் இரு விரல் கொண்டு துடைத்தவன், அவளை மென்மையாக அணைத்து கொண்டான் காதலாக..
"ஸ்ஸ் அழ கூடாது மினி.. வந்துட்டேன் தானே.. பின்ன என்ன.. அப்படி விட்டுடுவேணா என்ன.. என் பொண்டாட்டியை.."
தன் முகத்தை அவனின் மார்பில் தேய்த்து கொண்டே , மேலும் மேலும் அவனோடு ஒண்டி கொண்டாள்.
" மினி… மினிம்மா…" மீசை உரச அவள் காதுக்குள் விஷ்ணுவின் குரல் குழைந்தது. சௌமினியோ அவளை தேடி விஷ்ணு வந்ததே போதும் என, இவ்வளவு நேரம் இருந்த மன அழுத்தம் போக்க, அவனையே நாடி, பரந்த மார்பினில் தஞ்சம் கொண்டவள், இங்கிருந்து பிரிய மனமின்றி, காற்றுக்கு கூட இடமளிக்காமல், இறுக அணைத்து கொண்டாள்.
விஷ்ணுவிற்கு சௌமினியின் மனம் புரிந்தது, பெண்ணவளின் நெருக்கம் அவனுள் புது புது ஹார்மோன்களின் எழுச்சி, அவளும் தன்னை துறந்த நிலையில், இந்நிலை நீடித்தால் கூடலில் முடிய வாய்ப்புகள் அதிகம்… நேரமும் இடமும் அதற்கானவை அல்லவே, மெதுவாக தன்னிடம் இருந்து அவளை பிரித்து, பின் சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்து, அவளை தன் மடி மீது அமர்த்தி கொண்டான். சௌமினியின் இரு கைகளும் மாலை என அவன் கழுத்தை சூடி கொள்ள, மீண்டும் ஒரு மோன நிலை இருவரிடம்..
"மினி.. இப்போ டைம் இல்லை.. உன்னை தேட ஆரம்பித்து விடுவாங்க… அதுக்குள்ள நான் சொல்லுறது கேளு.." என்று ஆந்திராவில் நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.
அவள் அமைதியாக இருக்க, " மினி.. நோ கோபம் டா.."
" நான் எவ்வளோ பயந்தேன் தெரியுமா.. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை… எனக்கு கால் பண்ணனும் உங்களுக்கு தோணவே இல்லையா.." என்று மூக்கு சிவக்க கோபத்துடன் சௌமினி…
" நானே அவனை எப்படி கட்டம் கட்டி தூக்கிறதுன்னு பிளான் போட்டுகிட்டு இருந்தேன்.. உன்கூட பேசுனா.. என்னால அங்க இருந்திருக்க முடியாது, அடுத்த நிமிடம் உன்னை பார்க்க ஓடி வந்திருப்பேன், அவனும் இன்னும் இன்னும் பெரிய சிக்கலை உண்டு பண்ணி இருப்பான்.." குட்டி குட்டு முத்தங்கள் மூக்கு நுனியில் இட்டு கொண்டே விஷ்ணு…
" ஆமா… அப்படியே ஆசை பொங்குற மாதிரி… இப்போ கூட நான் அவ்வளோ வாய்ஸ் மெசேஜ் போட்ட உடன் தானே வந்தீங்க" கை தன் போல அவன் பிடரி முடியை கோதி கொண்டே சௌமினி..
" இல்லைனாலும் வந்து இருப்பேன் டி.. ஆமா என் ஆசையில் என்ன குறைச்சல் சொல்லு.. சரி பண்ணிடுவோம்" மூக்கொடு மூக்கு உரசி கொண்டே விஷ்ணு…
" அம்புட்டும் என்னைப் பார்த்த உடன் பேச வேண்டியது.. " உதடு சுழித்து கொண்டு சௌமினி..
" உன்னை பார்த்தா எங்கடி பேச முடியுது" என்று சுழித்த அவள் உதட்டை விரலால் நீவி கொண்டே விஷ்ணு..
வெட்க புன்னகையுடன் முகம் சிவக்க, பற்களால் தன் கீழ் உதட்டை கடித்து கொண்டே சௌமினி..
அவள் உதட்டை பற்களில் இருந்து விடுதலை அளித்து, விரல்களால் சுண்டி இழுத்து மெல்லிய முத்தமிட்டு விஷ்ணு.. அவளின் சிணுங்கல்களும், இவனின் சீண்டல்களும் மாறி மாறி அரங்கேறி கொண்டு இருக்க… அவள் அறையில் சௌமினியை காணவில்லை என்று தேடி கொண்டு ரிஷியும், மல்லிகாவும் தேடி கொண்டிருந்தனர்..
சிறிது நேரத்தில் மாடி படியில், மல்லிகாவின் குரல் உயர்ந்து ஒலிக்க, சட்டு என்று அவன் மடியை விட்டு எழுந்து, " அச்சோ பெரியம்மா வராங்க போங்க… போங்க… " என்று பதறினாள்.
" ஏய்.. ஏண்டி… திடீரென்னு போன்னா.. எங்க போக.. இந்த மாடிக்கு ஒரு வாசல் தானே.. அது எல்லாம் போக முடியாது… "
" பிளீஸ்.. பிளீஸ்.. மாமா.. இப்போவே பிரச்சனை வேணாம்…"
" இவ்வளோ நேரம் இந்த மாமாவை காணோம்.. உனக்கு தேவைன்னா மட்டும் எங்க இருந்து வருதுடி… ஆனாலும் ஆண்கள்ல எப்படி ஏமாத்துறதுனு கரெக்ட்டா புரிஞ்சி வைச்சு இருக்கீங்க டி நீங்க"
" அது எல்லாம் ஆப்ட்ர் மேரேஜ் ஒன்லி மாமா.. இப்போ கிளம்புங்க.. கிளம்புங்க.. அவங்க வந்திட போறாங்க"
அருகில் மல்லியின் குரல் கேட்க, விஷ்ணு அவசர கதியில் அவள் உதட்டை ஒற்றி விட்டு, மாடி திட்டில் கை வைத்து, கீழிருந்த சலாப்பில் குதிக்கவும், அவர்கள் வரவும் சரியாக இருந்தது.
" என்ன கண்ணு.. உன்னை எங்கெல்லாம் தேட .. நீ இங்கட்டு என்ன பண்ற.."
" சும்.. சும்மா.. பெரியம்மா.. தூக்கம் வரல, அதான் கொஞ்சம் இங்கன நடக்கலாம்னு"
" சரி.. சரி.. வா.. ஊத காத்து உடம்புக்கு ஆகாது.. உள்ள போகலாம்" என்று அவளை அழைத்து கொண்டு போக, அவள் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள். இருளில் இருந்தவன் எழுந்து அவளுக்கு கை அசைத்து திரும்ப மாடியில் குதித்து, கீழே சென்றான்.
மறுநாள் காலையில் கல்யாண பரபரப்பு கொண்டது சௌமினி வீடு.. அன்று மாலை பரிசம் போட்டு மறுநாள் திருமணம் என்று முடிவு செய்ய பட்டு இருந்தது.
கல்யாண பலகாரங்கள், உறவினர்களுக்கு விருந்து சமையல் என ஒரு பக்கம் இருக்க.. மறு பக்கம் வீட்டு பெண்கள் பட்டும், நகைகளும், அலங்கரமாய் சுற்றி சுற்றி வர, வீட்டு ஆண்கள் வேட்டியை மடித்துக் கொண்டு ஆட்களை ஏவி கொண்டும், வேலை வாங்கி கொண்டும் அனைவரும் பிசியாகவே..
விஷ்ணு ஆண்கள் கண்ணில் படாமல், வீட்டுக்குள்ளேயும் வெளியிலும் சுற்றி கொண்டிருந்தான். பட்டு கட்டி, மிதமாக அலங்கரித்து, இருபக்கம் தவழும் மல்லிகை என இறங்கி வந்தவளை , மல்லி கன்னம் தடவி நெட்டி முறித்து, " என் ராசகுமாரி தங்கம் நீ" என்று பெண்ணை கொஞ்சி, அவள் கையில் தான் வைத்திருந்த லட்டு தட்டை கொடுத்தார்.
" இப்போ தான், கல்யாண பொண்ணா லட்சணமா இருக்க.. நேத்து வரை அழுது வடிஞ்சிக்கிட்டு இருந்த.. திடீரென்னு என்ன அதிசியம் நடந்துச்சுடி" என்று மேவாயில் கை வைத்து சரசு ஆச்சரியப்பட..
" போ மா " என்று அழகாக வெட்கப்பட பெண்ணை ஆவென வாய் பிளந்து பார்த்தார்கள் அம்மாமார்கள்.
" பெரியம்மா.. எதுக்கு இவ்வளவு லட்டு, நான் என்ன சோட்டா பீம் ஆ" என்று கேட்டவளை அங்கு வந்த அவளின் அண்ணன் வாரிசுகள், " அத்த… நீ பீம் இல்ல.. டுன் டுன் ஆண்டி என்று கூறி விட்டு ஓட, " அடேய் .. நில்லுங்கட…" என்று இவள் துரத்த ஆரம்பித்தாள்.
" இப்போ தான் பொண்ணா இருக்கானு சொன்னேன்.. அதுக்குள்ள இல்லேன்னு நிரூபிச்சிட்டா… இவ எல்லாம் எப்படி குடும்பம் பண்ணி.. " தலை அடித்து கொண்டு சரசு செல்ல, மல்லியும் அதை ஆமோதித்தவாறு அவருடன் சென்றார்.
லட்டுடன் ஓடி கொண்டிருந்தவளை ஒரு கரம், மாடி வளைவில் இழுக்க, ஆவென கத்த போனவளின் வாயில் லட்டு அடைக்க பட்டது. நிமிர்ந்து பார்க்க, அவளின் அழகை தான் ரசித்து கொண்டிருந்தான் விஷ்ணு.. அவளை புடவையில் இப்போது தான் பார்க்கிறான் முதன் முதலாய்.. புடவையில் பிரமளித்த அவளின் அழகுகள் அவனை கிறங்க வைத்தது, மெல்ல அவளை நெருங்கி, " அசத்துரடி அழகி…" என்றான்.
வாயில் லட்டுடன், அப்படியே சிலை என நின்றவளை மேலும் நெருங்கி, விரலால் அவளின் முக வடிவை அளக்க, அவளின் அழகு அவனை அழைக்க… அவள் வாயில் இருந்த லட்டை மெல்ல மெல்ல ருசிக்க ஆரம்பித்தான் விஷ்ணு..
பிளந்த வாய் பிளந்தபடி சௌமினி நின்றிருக்க, அவள் இதழ்களோடு சேர்த்து வாயில் உள்ள லட்டு மொத்தத்தையும் மிச்சம் இல்லாமல் உண்டு இருந்தான் விஷ்ணு.. " செம்ம டேஸ்ட் டி" என்றவாறு அவன் சென்று விட.. சௌமினி அதே பொசிஷனில்..
உதடு எல்லாம் அங்கங்கே லட்டு ஒட்டி இருக்க, ஆவென இருந்தவளை பார்த்த சரசு, இவளை என்று அருகே வந்து, தலையில் இரண்டு குட்டு வைத்து.. "ஏண்டி இப்படி தான் லட்டு தின்பாங்களா.. வாய் எல்லாம் பாரு, அதுவும் மாடி படி கீழே நின்னுக்கிட்டு… அறிவு கெட்டவளே..போ போ..போய் அங்கன உட்கார்ந்து சாப்பிடு... முதல வாயை கழுவிட்டு போ" என்றவரின்
பேச்சில் அதிர்ந்து, சுற்றி முற்றும் பார்த்து மீண்டும் அன்னை ஆரம்பிக்கும் முன்னே தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
யாருக்கும் காத்திராமல் மாலையும் வந்தது, வீட்டிலேயே பரிசம் போட அனைத்தும் ஏற்பாடு ஆகி இருக்க, இரு பக்க உறவினர்களும் வந்த வண்ணம் இருந்தனர்..
வாசலில் ஏற்பட்ட பரப்பில், மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்து விட்டனர் என்று அறிந்து, சரவெடி அமர்க்கள பட, ஆர்பாட்டமாய் வரவேற்றனர் ஈஸ்வர் பிரதர்ஸ் மாப்பிள்ளை வீட்டை..
இரு குடும்ப ஆட்களும் எதிர் எதிர் உட்கார, பரிசம் போட சாங்கியங்கள் நடை பெற தொடங்கின.. ஆழ்ந்த நீல நிற பட்டில், வெள்ளை கற்கள் பதித்த நகைகள் மின்ன தேவதை என அமர்ந்து இருந்தாள் சௌமினி, முகம் மட்டும் இறுகி.. அவள் அருகிலேயே சுஜியும், அவளின் கை பற்றி கொண்டு..
மாப்பிள்ளை ஃபுல் சூட்டில் நாற்காலியில் அமர்ந்து, அவ்வபோது மணி பார்த்து, அலப்பரயாய்.. மாப்பிள்ளை வீட்டு சார்பில் அவ்விடம் முழுவதும் வரிசை தட்டுகள் அடுக்க பட்டு, தங்கள் வீட்டு செல்வ வளம் காண்பித்தனர்..
இருவீட்டாரையும் பார்த்து, "அப்போ பரிசம் போட்டிரலாமா.. "என்று ஊரு பெருசு ஒன்று கேட்க, சம்மதமாய் தலை ஆட்டினார் இரு வீட்டினரும்.
அப்போது சத்தமாக வாசலில் இருந்து, " யார் பொண்டாட்டிக்கு… யாரு டா பரிசம் போடுறது" என்று கர்ஜணையாய் விஷ்ணு.