மோகங்களில்… 7
மகிழ்ச்சியோடு தன்னுடைய வெற்றியை தாய் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் உத்வேகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவனை "அங்கே நில்லடா!" என்று கோபமாக மிரட்டியது ஒரு குரல்! அது துருவ் வல்லப்பின் தாய் சசிகலா.
"வாட்? என்னாச்சும்மா?" என்று அன்போடு கேட்டவனை முறைத்துப் பார்த்தார் அவர். அவனுக்கு எதற்கு அன்னையின் திடீர் இந்த காளி அவதாரம் என்று புரியவில்லை.
"எப்பொழுதும் அன்புள்ளம் கொண்ட ஜெகன்மாதாவாக.. சாந்த சொரூபிணியாக தான இருப்ப மா? இப்ப என்ன திடீர்னு வீரபத்திரகாளியா கையில் சூலம் இல்லாம நிற்கிற? என்ன ஆச்சு? என்று இலகுவாக கேட்டவாறு, சற்று தள்ளி அமர்ந்திருந்த அவனது தந்தை திருமலை சாமியை பார்த்து "ஏன் உன் சாமிகிட்ட ஏதாவது வேண்டுதல் நடக்காம போயிட்டா? அதுக்கு என்னை நிக்க வச்சு நீ பேசுறியா?" என்று அம்மாவை சமாதானப்படுத்த கேலியை அவன் கையில் எடுத்தான்.
'உன் கேலி எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது!' என்று வேலி போட்டுக் கொண்டவராய் மீண்டும் மகனை முறைத்தவர் "அப்சரா எங்கே டா? எங்க மருமக.. இந்த வீட்டு மருமக எங்கே டா?" என்று ஒற்றை கேள்வியில் மகனை உறைய வைத்தார்.
"அது.. அது.. வந்து.." என்று முதலில் தயங்கியவன் பின் அன்னையைப் பார்த்தான். அன்னையின் கோபம் முகத்திலேயே அனைத்தும் விஷயம் அறிந்து கொண்டார் என்று புரிந்தவன் "வர வர ரொம்ப சீரியல் பாக்குறியாமா நீ? ஒரே கேள்வியை பல மாடுலேஷன்ல கேட்கிற?
எங்களுக்குள்ள சரிப்பட்டு வரல அதனால நாங்க பிரிஞ்சிட்டோம்! டிவோர்ஸ் ஆயிடுச்சு. அவ லண்டன் தான் போனாளோ இல்ல எங்க போனாளோ எனக்கு தெரியாது! இப்போ நான் உண்டு.. என் வாழ்க்கை உண்டு.. என் வேலை உண்டு.. என் தொழில் உண்டுன்னு சந்தோஷமா இருக்கேன்" என்று தோளை உலுக்கியவன்,
நேராக தாயிடம் சென்று "ரொம்ப டையர்ட் மா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வரேன். அப்புறம் உன் பூஜை புனஸ்காரம் எல்லாத்தையும் வச்சுக்கோ.. அதுவரைக்கும் உன் சாமியை சேவகம் பண்ணுமா" என்றவன் தந்தையிடம் திரும்பி "லவ் யூ டாட்!" என்று விட்டு செல்ல..
"ஏண்டா.. ஏன்? என்னைய ஏன் கோர்த்து விட்டு போற?" என்று அவர் தனியாக புலம்பிக் கொண்டிருந்தார். அதற்குள் அவன் தன் அறைக்கு சென்று மறைந்து விட்டான்.
மகனது இந்த விட்டேறியான பதிலில் அதிர்ந்து அப்படியே நின்று இருந்தார் சசிகலா.
துருவைப் பொறுத்தவரை அவனுக்கு தொழில்.. தொழில்.. தொழில் மட்டுமே! அதைத் தாண்டிய சந்தோஷம் வாழ்வில் உள்ளது என்றால்.. அவனுக்கு அது தொழிலில் பெறும் வெற்றி மட்டுமே!
எப்படியும் இவன் மாறிவிடுவான் என்று நம்பி தான் அவனது அம்மா சசிகலா, அப்சராவை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
பெரிதாக முரண்டு பிடிக்கலாம் இல்லை துருவ். வாழ்க்கையின் அடுத்த நிலையில் கல்யாணமும் ஒன்று. அதன் கூட சொசைட்டியில் திருமணம் ஆனவன் என்று தனி மதிப்பு உண்டு என்று எண்ணியே திருமணம் செய்து கொண்டான். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிதாக சசிகலா நுழைய விடவில்லை துருவ்.
ஆனால் இப்பொழுது வாழ்க்கையே இல்லை என்கிறானே? அவரால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அருமை பெருமையாக வளர்த்தார்கள் அவனை. தொழிலும் அவனுடைய அப்பா செய்து வந்த ட்ராவல்சை வேண்டாம் என்று இவன் கார்மெண்ட்ஸை கையில் எடுத்தான்.
அதற்கும் அவனை ஊக்குவித்தார்கள். தன்னை தாண்டி மகன் வளர்வது எந்த பெற்றோருக்கும் பெருமை தானே? அதை பெருமையாய் இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க.. அவன் தொழிலை மட்டுமே வாழ்க்கையாக்கிக் கொண்டு இன்று வாழ்வை தொலைத்து நிற்பதை ஒரு அன்னையாக சசிகலாவால் தாங்க முடியவில்லை.
இவர்களுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பற்றிய பேச்சு இல்லாமல்.. இருவரும் ஆளுக்கு ஒரு புறம் நண்பர்கள் பார்ட்டி வேலை பிசினஸ் என்று இருந்ததை கண்டு "இக்கால பிள்ளைகள் இப்படித்தான் போல.." என்று அவர் தப்பாக நினைத்து கொண்டு இருந்தார்.
ஆனாலும் மேலும் ஒரு வருடம் இப்படியே செல்ல இவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து..
அவர்களிடடம் பேசலாமா? வேண்டாமா? என்று தயங்கி தயங்கி அவனை நெருங்குவதற்குள்ளாகவே மனைவியை மொத்தமாக தலைமுழுகி விட்டு ஒத்தையாக நிற்கிறான் மகன்!
அதனோடு இப்பொழுது மருமகள் வேறு யாரு கூட போட்டோவை இன்ஸ்டாலில் உலாவ விட்டு இருக்கிறாள். "என்ன நடக்கிறது இவன் வாழ்க்கையில்?" என்று கணவனிடம் அழுது புலம்பினார்.
"இவனை எப்படிங்க மாத்த? எப்படி குடும்பாய் வாழ வைக்க?" என்று புரியாமல் துவண்டு போய் அமர்ந்தவரை வந்து ஆறுதலாக அணைத்து கொண்டார் திருமலைசாமி.
"கவலைப்படாத சசி.. எல்லாம் சரியா நடக்கும். இல்ல நாம எதுக்கு இருக்கோம்? அவனை வழி நடத்துவோம்" என்று ஆறுதல் கூறினார்.
இந்த ஆறுதலும் இணையிடமிருந்து கிடைக்கும் இந்த நம்பிக்கையான வார்த்தைகளும் அன்பும் இதுதானே வாழ்வின் அஸ்திவாரம்! அடித்தளம்!
இது இல்லாமல் எப்படி உயர உயர கோபுரம் கட்ட முடியும்?
என்ன தான் தொழிலில் உயர்ந்து பல கோடிகளை ஈட்டினாலும் அந்த பணம் வந்து இவ்வாறு நமக்கு அருகில் இருக்காது அல்லவா? பசிக்கும்போது உணவு ஊட்டாது அல்லவா? கவலையோடு இருக்கும்போது துணை நிற்காதல்லவா? தடுக்கி விழும்போது தாங்கி நிற்காதல்லவா?
அதற்கு ஏற்ற துணை வேண்டுமே! இவனுக்கு எப்போது இது புரியப்போகிறது? என்பது போல் அவர் கணவனை பார்க்க.. அதனை புரிந்தவர், "காலம் ஒரு சிறந்த ஆசான் சசி! அவனுக்கு புரியாத பலதையும் புரிய வைக்கும்! நீ கவலைப்படாதே..!" என்று தேற்றினார்.
"ம்ம்.. வேற வழி? ஆனாலும் இவனை கொஞ்சம் கண்காணிக்க வேண்டுமுங்க" என்று முடிவு எடுத்துக் கொண்டார் சசிகலா.
அறைக்குள் வந்தவனுக்கு அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததை நினைத்து ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது. சொல்ல வேண்டாம் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை.
அன்றே சொல்லிருந்தால்.. இப்படி நின்று கேள்வி கேட்பார்கள். அவர்கள் கேள்வி கேட்பதைவிட அப்படி கலங்கி நின்று அழுகுவதை அவனால் காண முடியாது. அத்தனை பாசக்காரன் கிடையாது!
பெண்கள் அழுது சாதிக்கும் அந்த குணத்தை அறவே வெறுப்பவன் இவன்!
அதனால்தான் அப்சரா சில சமயம் அவனிடம் இந்த மாதிரி சென்டிமெண்டாக பேசி லாக் செய்தால் கூட.. அதனை எல்லாம் தவிர்த்து உடைத்து விட்டு வெளியில் வந்து விடுவான்.
"எனக்கு அம்மா சென்டிமென்டே கிடையாது.. இதுல பொண்டாட்டி செண்டிமெண்ட் எல்லாம் எனக்கு எங்கிருந்து வொர்க் அவுட் ஆகும்? இவளுக்கு புரியவே மாட்டேங்குது.. சர்தான் போடி.." என்று அவளுக்கு நேராவே பல தடவைகள் எடுத்துரைத்திருக்கிறான்.
அன்னை செய்ய முடியாததை.. மனைவி செய்ய முடியாததை.. பிள்ளைகள் பல நேரத்தில் செய்ய முடியும் என்று அவனுக்கு காட்ட காத்திருந்தார் கடவுள்!!
அதுவும் ஒன்றல்ல இரண்டை கொடுத்து…!!
இன்று இதே அறையில் அவளின் வாசம் துளி கூட இல்லாமல் முறையான முறையில் அவளைப் பிரிந்து விட்டது எண்ணி மகிழ்வோடு தான் உறங்கினான் துருவ் வல்லப்! பாவம் அவனது உறக்கத்திற்கு இனி ஆயுள் கம்மி என்று அப்போது அவன் அறியவில்லை.
கடவுள் எந்த ஒரு காரியத்தையும் காரணமின்றி சும்மா செய்வதில்லை. அந்த காரியங்கள் நடக்கிறது என்றால் அதன் பின்னே கனமான காரணம் ஒன்று இருக்க வேண்டும்!!
அது போல தான் அப்சரா பிரிந்ததும் அனுப்ரியா அவன் வாழ்க்கையில் நுழைந்ததும்… காரணம் என்னவோ குழந்தையை வைத்து தான். ஆனால்… அதன் பின்னே நடக்கும் காரியங்கள் யாவும் அவன் ஆற்றுவது அல்லவா??
காலையில் வழக்கம் போல எழுந்து குளித்து வந்தவன் டைனிங் டேபிள் அமர எதிரே அமர்ந்த திருமலை "அம்மா.. கொஞ்சம் உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறா துருவ். கொஞ்சம் அவகிட்ட பேசி சரி பண்ணு. அதற்கு முன்ன உன் வாழ்க்கை நீ இப்படியே இருக்கிறது நல்லதுக்கு இல்லை. உனக்கு வயசு 36. மிட் ஆஃப் தி லைஃப்க்கு இன்னும் கொஞ்சம் வருஷத்துல வந்துருவ.. அதுக்கப்புறம் என்ன செய்வ?" என்றதும் அவன் கேள்வியாக தந்தையைப் பார்த்தான்.
"புரியுது! அப்பவும் தொழில் தான் செய்வேன்னு நீ நினைக்கிறது புரியுது. இப்போ உன்னோட கவனம் எல்லாம் தொழில்.. தொழிலா இருக்கலாம். ஆனா ஒரு கட்டத்துக்கு அப்புறம் ஓடிப்போய் கலச்சி இளைப்பாற ஒரு இடம் வேண்டும் துருவ். அந்த இடத்தை நீ எங்கே எப்படி தேடுவ நீ? தொலைச்சிட்டா தேடி கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் தெரியுமா?" என்றதும் தந்தையை அவன் தீர்க்கமாக பார்த்தான்.
"இப்போ உள்ள புள்ளைங்க எல்லாம் என் வாழ்க்கை என் கையில்ன்னு சொல்றீங்க.. ஓகே! ஆனா அந்த வாழ்க்கையை ஏன் ஒழுங்கா வாழ மாட்டேங்கறீங்க? இப்படி சேர்ந்து இருப்பதை விட பிரிஞ்சி இருக்கிறது தான் நல்லது என்று நினைக்கிறீர்களா? நம்ம இணைக்கிட்ட நமக்கு என்னத்துக்கு ஈகோ? ஈகோவ தூக்கி போட்டுட்டு சரணாகதி அடைவது தான் சம்சார சாகிதம் துருவ்" என்று அவர் வாழ்க்கையின் அறிவுரை கொடுக்க..
இவனோ சப்பாத்தியை கடாய் பன்னீர் தொட்டு துய்த்துக் உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தவன், "போதும் டாட்! ப்ளீஸ்.. என்ன அம்மாவை பார்த்து சமாதானம் பேசணும்.. பேசுறேன்" என்று அன்னையை தேடி அவரின் அறைக்குள்ளே சென்றான்.
"அம்மா.." என்று அழைத்ததும் அவரோ முகத்தை திருப்பிக் கொள்ள "இங்க பாருமா இப்படி முகத்தை சோகமாக தூக்கி வைச்சு ஒரு பிரயோஜனமும் கிடையாது. என்னமோ அப்சராவை நான் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்ட மாதிரி சீன் பண்ணாத. அந்த அளவுக்கு எல்லாம் அவ வொர்த் கிடையாது"
இப்படி அவன் பேசியதும் மகனை முறைத்தார் சசிகலா.
"எங்களுக்குள்ள நடந்தது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்.. அதுக்கப்புறம் தான் பிரிவு வேணும் நாங்க முடிவு எடுத்தோம். அவளுமே இப்போ லண்டன் போயிட்டு என்னை விட சுதந்திரமா இருப்பா.. இருக்கா! யார் கண்டது இன்னும் கொஞ்ச நாளுல அவ வேற லைப் அமைத்துக் கொள்ளலாம்" என்றதும்
மகனை பார்த்து "சரி அவ அமைச்சுகிட்டு நல்லா வாழட்டும்! அப்ப நீ காலம் ஃபுல்லா இப்படியே தான் இருக்க போறியா? நீயே சொல்லு? மனச தொட்டு சொல்லு.. இவ்வளவு ஓடி ஓடி உழைக்கிறியே இதெல்லாம் யாருக்காக? உனக்கு அப்புறம் ஒரு வாரிசு வந்து இதெல்லாம் பார்க்க வேண்டாமா? ஆள வேண்டாமா? இப்படியே எல்லாரும் வேண்டாம்னு நீ ஒதுக்கிக்கிட்டே போனா.. நீயும் ஒரு நாள் தனிமரமா தான் நிக்க போற துருவ்! நம்ம குடும்பத்துக்கு உனக்கு அப்புறம் ஒரு வாரிசு இல்லாம நாங்களும் கஷ்டப்பட போறோம்" என்றதும் அவன் மனதுக்குள் அதுவரை இல்லாத பிள்ளையின் கவனங்கள் மொத்தமாய் குவிந்தது.
ஆம் தானே?? நமக்கு பின் நம் வாரிசு என்றால்… அனுவின் முகமும் அவளின் பெரிய வயிறும் கண்முன்னே வர.. "அதான் இருக்கிறார்களே வாரிசுகள்!" என்று ஒரு உரிமை வித்து முதன் முதலில் அங்கே அவனுக்குள் விழுந்தது.
அந்த கவனத்திலேயே அன்னை பேசப்பேச இவன் எழுந்து வெளியே செல்ல கணவரிடம் வந்து புகார் வாசித்தார்.
"பாருங்க நான் சொல்ல சொல்ல கேட்காம அவன் பாட்டுக்கு போறான்" என்று அவரிடம் முறையிட மீண்டும் மனைவியை தாங்கிக் கொண்டார் திருமலை.
அன்று நாள் முழுதும் என்னவோ அவன் அம்மா சொன்ன வாரிசுகள் குழந்தை நினைப்பிலேயே இருந்தான் துருவ். வழக்கம் போல வேலை முடிந்ததும் அவனது கார் தானாக பீச் ஹவுஸூக்கு சென்றது.
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டுக்குள் நுழைகிறான் துருவ்.
உள்ளே நுழைந்ததும் அவன் கண்டது கேட்டது எல்லாம் அனுவின் அலறல் தான்..
"என்னை விட்டுட்டுங்க.. விட்டுடுங்க.." என்று!!
"என்ன விட போறியா இல்லையா? ஏன் இப்படி என்னை பருத்தி எடுக்குற.. அய்யோ.. யாராவது என்னை காப்பத்துங்களேன்..!" என்று அனுப்ரியாவின் அழுகை குரலில் அவன் வேகமாக பாய்ந்து சென்று எட்டி அந்த அறையைப் பார்க்க..
அவளை படுக்க வைத்து நல்லெண்ணையை இளம் சூடாக தேய்த்துக் கொண்டிருந்தார் சாவித்ரி அம்மாள்.
அவளுக்கு அது பிடிக்காமல் இருக்க "கம்முனு இரு ஏற்கனவே வயிறு வலி அங்க பிடிக்குது இங்க பிடிக்குது சொல்றல.. அதுக்கு தான் இத தடவனும்" என்று அவர் வயிற்றில் தடவ…
"இதுக்கு தான் இவ இந்த கத்து கத்தினாளா?" என்று அனு அறையில் இருந்து வெளியே செல்ல முயன்றவனின் பார்வை அவளின் பெரிய வயிற்றில் மீண்டும் படிந்து படிந்து மீண்டது.
அப்போது அங்கே அவனைப் பார்த்த சாவித்ரி அம்மாள் "சார் ஒரு நிமிஷம் இங்கே வாங்க.." என்றதும் அவன் என்ன என்று உள்ளே வர..
எண்ணெய் கிண்ணத்தை அவன் கையில் கொடுத்தவர் "என்னால ரொம்ப நேரம் தேய்க்க முடியல.. அதுவும் இந்த சண்டே ராணி ஒழுங்காவே காட்ட மாட்டேங்குறா! நீங்க கொஞ்சம் உங்க வீட்டம்மாவுக்கு நல்லது சொல்லி இந்த நல்லெண்ணெயை தேச்சு விடுங்க.. நான் போய் சமையல் வேலையை பார்க்கிறேன்" என்று அவர் மெதுவாக நழுவ..
"எதே?? நானா?" என்று
அவனும்..
"எதே? அவரா?" என்று அவளும்..
ஒரு நேரத்தில் கத்த..
"ஆமா.. அவரு தான்! உனக்கு தான்!" என்று அவளிடமும்..
"நீங்க தான்.. உங்க பிள்ளைக்கு தான்!" மனைவி என்கிற வார்த்தையை தவிர்த்து அவனிடமும் அழுத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
எச்சில் விழுங்கியப்படி அவளது பெரும் வயிற்றைப் பார்த்தான் துருவ் வல்லப்.
ஏதோ உருவம் இல்லாத உணர்வு ஒன்று தான் அந்த பெரும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை தொட்டு பார்க்க வேண்டும் என்று பாடாய் படுத்தியது.
மெல்ல கைகளை உயர்த்தி அவளது வயிற்றை மெதுவாக தொட்டான் துருவ். வேற வழியின்றி அதுவரை கண்களை மூடி இருந்தவள் சட்டென்று அவனது தொடுகையில் அவனை பார்த்தாள்.
இருவரது பார்வையும் ஒன்றை ஒன்றை கவ்விக் கொள்ள… அவளது கண்களை பார்த்துக் கொண்டே மெல்ல மேட்டினிட்டி கவுனை தளர்த்தியவன் எண்ணெய்யை தடவ…
அவனது ஸ்பரிசத்தில் மெல்ல அவள் சங்கோஜப்பட்டு பார்வையை திருப்ப… அவனும் அவளை பார்ப்பதை தவிர்க்க.. அவர்களது குழந்தைகளோ முதன் முறை தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தது போல எட்டி உதைத்து தங்கள் மகிழ்ச்சியை காட்ட இப்பொழுது இருவரும் திடுக்கிட்டு
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
எல்லாருக்கும் ஆட்டம் காமிக்குற உனக்கு ஆட்டம் காமிக்க ரெண்டு பேரு வரப்போறாங்க 🙄🙄🙄