22
மாப்பிள்ளை அலங்காரத்தில் வெகு சிரத்தையாக ஐயர் சொன்ன மந்திரங்களை திரும்ப சொல்லி கொண்டிருந்தான் விஷ்ணு.. தலையில் தலை பாகை, பஞ்சகஜம் போன்ற முறையில் கட்டப்பட்ட பட்டு வேட்டி.. நெற்றியில் தீட்டிய சந்தனம் என பார்ப்பதற்கு அவ்வளவு கம்பீரமாக அமர்ந்து இருந்தான் விஷ்ணு… இதுவே அவருக்கும், அவனுக்கும் பிடித்த பொண்ணோடு இப்படி ஒரு அழகிய தருணம் நடந்தேறி இருந்தால், மகனின் இக்கோலத்தை கண்களில் நிரப்பி கொண்டு இருந்திருப்பார் ரோஹிணி.. ஆனால் இப்போது அவனின் எவ்வித அலங்காரமும் ஏன் மகனே கண்ணில் படவில்லை… ஆம் தன் மகன் என்ற எண்ணம் இல்லை.. அவ்வளவு ஆத்திரத்தில் அமர்ந்து இருந்தார் ரோஹிணி. அவரை விட்டால், பாய்ந்து சென்று மகனின் கன்னத்தில் ஒரு அறை விட்டு, அவனின் இக்கோலத்தை கலைத்து, கையோடவே அழைத்து கொண்டு சென்றிப்பார்.. ஆனால் மகனின் ஒரு வார்த்தையில் இதை எதையும் காண்பிக்காமல் வெளிப்புறம் அமைதியாகவே தெரிந்தார்.
விஷ்ணு மணமேடையில் அமர்ந்து, அங்கிருந்த வண்ணமே அன்னையை நோக்கி ஒரு கண் அடித்து சிரித்தான்.. மேலும் தன் ஆள் காட்டி விரல், கட்டை விரலை வாய் அருகே வைத்து, சிரிப்பதை போல விரித்து அவரை சிரிக்க சொன்னான்.. அவரோ சலனமற்ற பார்வை பார்க்க.. அடுத்து தந்தையை பார்க்க, அவரோ மனைவிக்கும் சேர்தது பல் மேல் வரிசை, கீழ் வரிசை தெரிய புன்னகை முகமாக…
ரமணனை அழைத்து தன் பெற்றோரை மேடை அருகே அழைத்து வர சொன்னான்.. இருவரும் மேடை அருகே வந்து நிற்க.. பெண்ணை அழைத்து வாருங்கள் என்ற ஐயரின் விளித்தலில், பெண்ணை அழைத்து வந்தார்கள்.. விஷ்ணு எடுத்து கொடுத்த பட்டு புடவையை தான் அணிந்திருந்தாள் சைதன்யா.. நகைகளும் கூட அவன் எடுத்தவையே, பால் வண்ண புடவையில், பர்ப்பிள் நிற பார்டர், மணப்பெண் அலங்காரத்தில் மிக அழகாக இருந்தாள் அவள்.
ரோசைய்யா மற்றும் பர்வதம் கண்கள் கூட கலங்கின.. எவ்வளவு பாதகம் செய்து இருந்தாலும், பெண் என்று வரும் போது கலங்கி விட்டார். பர்வதம் பெண் அருகில் வந்து அவளை திருஷ்டி கழித்து, விஷ்ணுவின் எதிரில் அமர வைத்து ரோசைய்யா அருகில் சென்று நின்று கொண்டார்.
அனைவரின் வதனமும் ஆனந்தத்தில் மின்ன… ரோஹிணி இதயம் மட்டும் திக் திக் என்ற சத்தத்தில்… அவரால் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியவில்லை.. விழிகள் அகல விரித்து ஏறி இறங்கும் சுவாசத்தை, நெஞ்சில் கை வைத்து பற்றி கொண்டு, மணமேடையை பார்த்து கொண்டு இருந்தார்.
ஐயர் மாங்கல்ய தானம் செய்ய சொல்ல, மாங்கல்யம் ஆசிர்வதிக்க பட்டு அனைவருக்கும் அட்சதை வழங்க பட்டு, மாங்கல்யம் விஷ்ணு கையில் தர பட்டது..
மாங்கல்யம் வாங்கிய விஷ்ணு எழுந்து நின்று, சைதன்யாவை நோக்கி குனியும் பொது, சட்டு என தன் அருகில் இருந்த ரமணனை இழுத்து தன் இடத்தில் நிறுத்த, விஷ்ணு கையில் உள்ள மாங்கல்யம் நொடி பொழுதில் அவன் கை மாற, அவன் விகித்து நிற்க இடம் கொடுக்காமல், சைதன்யா அவன் கை பிடித்து தன் கழுத்து அருகே கொண்டு செல்ல, அவள் பின்னிருந்து ஒரு பெண் மாங்கல்ய கயிற்றை வாங்கி மூன்று முடிச்சு போட்டாள். சுற்றியள்ள அனைவரும் இதை எதிர்பார்க்க வண்ணம், அனிச்சை செயலாக தங்கள் கையில் இருந்த அட்சதை தூவ, அதில் ரோசைய்யா பர்வதம் அடங்க, அனைவரின் ஆசீர்வாதத்தால் இனிதாக நடந்து முடிந்தது ரமணன் சைதன்யா ஸ்ரீ திருமணம்..
ரோஹிணி இடம் மறந்து துள்ளி குதித்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி, மகனை அணைத்து உச்சி முகர்ந்தார். நொடி பொழுதில் நடந்து முடிந்த இந்த நிகழ்வை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கச்சிதமாக நடத்தி முடித்து இருந்தான் விஷ்ணு..
ரோசைய்யா பர்வதம் பதறி போய் ஓடி வர, சொந்த பந்தங்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு, ரமணனை தாக்க முனைந்தனர். மணமக்கள் இருவரையும் தன் பின்னால் மறைத்து கொண்டு, தன் தலை பாகையை வீசி விட்டு, ஒரு கையால் கலந்த தன் தலையை கோதி கொண்டு, இன்னும் ஒரு அடி முன்னே வைத்தாலும் வர சேதாரத்துக்கு நான் பொறுப்பு அல்ல என்று தன் பக்கத்தில் பார்க்க… ரமணனின் அடியாட்கள் தான் முரட்டு பீசாய் நிற்க, ஜகா வாங்கியது உறவினர் கூட்டம்… " எந்த புத்துல எந்த பாம்பு இருக்குனு யாருக்கு தெரியும்… இவ்வளோ தைரியமா அந்த பொண்ணு இப்படி பண்ணி இருக்கு பாரேன்" என்று கூறி கொண்டே பந்தியை நோக்கி பாதி கூட்டம் சென்றது.
ரோசைய்யா கோபமாக விஷ்ணுவை பார்க்க, அவனோ அவரை நக்கலாக பார்த்து சிரித்தான்.
" யோவ்.. நாகு, உன்னை நம்பி தானே கல்யாணம் ஏற்பாடு பண்ணினேன்… இப்படி பண்ணிட்டானே உன் மகன்.. இது தான் நீ எனக்கு கொடுத்த வக்கா"என்று கத்தினார்.
நாகுக்கு சற்று கோபம் எட்டி பார்க்க, பல்லை கடித்து கொண்டு, " நாணா… என்ன இது …நான் உன்கிட்ட இதை எதிர் பார்க்கல"
" அப்பா.. முதல ஒண்ணு தெரிஞ்சிக்ககோங்க.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு, ரெஜிஸ்டர் மேரேஜ்.. என் வைஃப் பெயர் சௌமினி… " என்று அனைவரையும் அதிர வைத்தான்.
ரோஹினி அவன் அருகில் சென்று மெதுவாக " எது எப்போ டா.. என்கிட்ட சொல்லவே இல்லை" என்று அவன் காது கடிக்க.. " ம்மா.. ஒரு ஃபாலோவா போய்க்கிட்டு இருக்கு.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. அக்கடா ரெண்டி…" என்றான் பல்லை கடித்து கொண்டு…
திரும்ப தொடர்ந்தான் அவன் " இங்க வந்தவுடனே சொல்லலாம்னு இருந்தேன்.. நீங்க அதுக்குள்ள எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டீங்க.. சரி பொண்ணு கிட்ட பேசலாம் நினைச்சு, சைதன்யா கிட்ட பேசினேன். அப்போ தான் தெரிஞ்சுது அவங்க ஒரு தலையா ரமணனை காதலிக்கிறாங்கனு.. இதை சொன்ன நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. அதான் இப்படி செஞ்சோம்.." என்று சைதன்யாவை பார்க்க அவள் தலை அசைத்து அமோதித்தாள்.
" ப்ரோ.. சொல்லுவது எல்லாம் உண்மை அங்கிள். எனக்கு ரமணனை ரொம்ப பிடிக்கும்.. அவரோட சுயநலமில்லாத உழைப்பு, என் மேல காட்டுற பாசம், எங்க வீட்டு மேல் உள்ள விசுவாசம்… எல்லாமே பிடிக்கும்.. ஆனா அவர் கிட்ட சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார்.. அப்போ தான் நீங்க எல்லாம் சேர்ந்து கல்யாணம் ஏற்பாடு பண்ணுனீங்க.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட யாரும் கேட்கவில்ல.. அப்போ ப்ரோ தான் என் கிட்ட வந்து பேசினாங்க, அவங்க லவ் பத்தி சொல்லி இந்த கல்யாணம் நடக்காது சொன்னாங்க…எனக்கு பயங்கர சந்தோசம்… அப்போ என் மனசை ப்ரோ கிட்ட சொன்னேன்.. அவங்க தான் இந்த பிளான் போட்டது . இவருக்கு கூட தெரியாது.." என்று அழகாக சிரித்தாள், மன விரும்பியவனின் கை தாலி சேர்ந்த சந்தோசத்தில்….
இன்னும் அந்த ஷாக்கில் இருந்து ரமணன் வெளி வர வில்லை.. விஷ்ணு அவன் அருகே சென்று அவனை உலுக்க, அவன் திகைப்பில் இருந்து வெளி வந்து… பந்தால் அடிபட்ட விஜய் சேதுபதி மாதிரி பேசினான்… "என்னாச்சு.. நீங்க தாலி கையில் எடுத்தீங்க.. மேளம் கொட்டிச்சு… அப்புறம் தாலி என் கைக்கு வந்துச்சு… அப்புறம்… அப்புறம்.. " என்று இழுத்தவனின் முதுகில் ஒன்று போட்டு, " ம்ம் அப்புறம் சைதன்யா கழுத்துல கட்டிட்ட…இனி ஆயுள் கைதி தான்… கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் ப்ரோ.. அப்புறம் பழகிடும் " என்று மீதியை அவன் சொல்ல, சைதன்யா பெற்றோரை தவிர அனைவரும் சிரித்தனர்..
நாகு மகன் காதலிக்கவே மாட்டான் என்று நினைத்து இருக்க, அவன் கல்யாணமே முடித்து விட்டான் என்ற செய்தி அவரை அசைத்தது… மெல்ல மகனிடம் வந்து, அவன் கை பற்றி.. " என்னை மன்னிச்சிக்கோ நாணா.. உன்கிட்ட நான் ஒரு வார்த்தை கேட்டு இருக்கணும்.." என்று வருந்தினார், தந்தையின் வருத்தத்தை தாங்காமல், " விடுங்ப்பா… ஒன்னுமில்லை" விஷ்ணு ஆறுதல் கூர.. " நாம் தனியா எடுத்த முடிவு.. என்னைக்கு தான் சரியா இருந்திருக்கு.. இப்போ இருக்க" என்று தன் பங்குக்கு வாரினார் ரோஹிணி..
" ஆமாம்.. ரோஹி.. நான் இனி இந்த முடிவும் தானா எடுக்க மாட்டேன் .. "
இவர்கள் இங்கே மாற்றி மாற்றி பேசி கொண்டும் சிரித்து கொண்டும் இருக்க, இதை எதையுமே பொறுக்க முடியாமல் கோபத்தில் கணன்றார் ரோசைய்யா..
" டேய் என்னை ஏமாத்தி..இவங்க கல்யாணத்தை நடத்திட்டதா ரொம்ப பெருமை பட்டுக்காத, இந்த வேலைகார் நாயிடமிருந்து என் பொண்ணை எப்படி பிரிக்கனு எனக்கு தெரியும்… நீங்க நடைய கட்டுங்க"
கத்தியவரை பார்த்து, ஒரு விரலால் காதை குடைந்து கொண்டே…" ஸ்ஸஸ்ப்பா ஓவர் சத்தமா இருக்கு.. இந்த வயசுக்கு மேல.. எல்லாத்தையும் குறைச்சுகணும்… " என்றவன்.. அவரை நெருங்கி தன் முழு உயரத்துக்கு நின்றவன் , " நாங்க ஏன் வெளியில போகனும்… என் ஊரு.. என் வீடு.. அதை விட முக்கியமா.. என் கம்பனி…"
விஷ்ணுவின் பேச்சில் அதிர்ந்து நின்று விட்டார் ரோசைய்யா.. இவனுக்கு எப்படி தெரியும் என்ற யோசனையுடன்…
ஆனாலும் ஒத்து கொள்ள மனம் வராமல், " எது உன் கம்பனி.. அது என்னோடது.. எனக்கு அப்புறம் என் வாரிசுக்கு தான்"
சைதன்யா இடையிட்டு ," எனக்கு நீங்களும் வேண்டாம்.. உங்க சொத்தும் வேண்டாம் " என்றாள். ரமணின் பார்வை அன்பாய் வருடியது அவளை.
மகளை திரும்பி முறைத்தவரை, தன் பக்கம் திருப்பி, " அக்கட சுடண்டி…" என்றான் நக்கலுடன்.
அந்த திருமண மண்டபத்தில் அங்காங்கே இருந்த தொலைகாட்சி உயிர் பெற்றது விஷ்ணுவின் கை சொடுக்கில்.. அடுத்த சொடுக்கில் ரோசைய்யா பர்வதமும் தோன்றினார்கள் அதில்..
அன்று அவர்கள் அறையில் யாருக்கும் தெரியாமல் பேசியது.. இன்று அனைவரின் முன்பு லைவ் டெலி காஸ்ட் ஆனது. ஆம் அன்று அவர்கள் அறைக்கு போனது, மைக்ரோ போனை வைக்க தான்.. அந்த அறையில் மட்டும் இல்லை.. அந்த வீட்டில் பல இடங்களில் வைத்து ஒரே நாளில் அந்த வீட்டை.. வீட்டின் நடமாத்ததை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் விஷ்ணு..
இரண்டாம் முறையாக ரோசைய்யா அதிர்ந்து பார்க்க.. விஷ்ணு குடும்பத்தாரின் வாழ்வில் பல நட்டங்களை தந்த அந்த பெரும் பெருச்சாளிக்கு, விஷ்ணு அதிர்ச்சி வைத்தியம் பார்த்து, தன் தந்தைக்கு ஏற்பட்டதுக்கு இவன் நேர் செய்தான்.. என் மகன் கொண்ணுற்றன் எனும் சொல்.. என்ற குறளுக்கு ஏற்ப..
அதுவரை சாதாரணமாக இருந்த நாகு, பாய்ந்து சென்று ரோசைய்யா சட்டை பற்றி கன்னம் கன்னம் ஆக அரைந்தார்.." நண்பனு உன்னை நம்பியதை தவிர வேற என்னடா பாவம் பண்ணினேன்… ச்சீ.. நம்பிக்கை துரோகி" என்று ஆவேசம் அடங்கமால் நின்றவரை ரோஹிணி கை பிடித்து ஆறுதல் படுத்தினார் . கூடவே மகனின் செய்ல்கள் கண்டு பெருமித புன்னகை அவர் இதழில்..
" நீயே.. தெளிவா ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்க.. அதனால் இனி ஒன்னும் பண்ண முடியாது.. உன் குறுக்கு புத்தியை காட்டி.. எனக்கோ.. என் பெற்றோருக்கு .. இல்லை என்னை சேர்ந்தவங்களுக்கோ ஏதாவது ஆனா… ஆனா… உன் மேல தான் கடமை தவறாத காவல் துறை நடவடிக்கை எடுக்கும்… ஏன்னா இந்த வீடியோவை அனுப்பி இந்த ஏரியா கமிஷனர் கிட்ட கம்பிளைண்ட் பண்ணி இருக்கேன்.. ஆல் ஆன்லைன்…" என்று ஒற்றை கண் அடித்து சிரித்து.. அவரின் பி.பி வை அடுத்த அதிர்ச்சி கொடுத்து எகிற வைத்தான்.
" கம்பனி நான் டக் ஓவர் பண்ண போறேன்.. அப்புறம் உன் அந்த பத்து பர்செண்ட் ஷேர்.. இவ்வளோ நாள் எங்க கம்பனி நீ ஆண்டு அனுபவித்துக்காக, உன் மகள் பெயரில் இருந்ததை என் பெயருக்கு மாற்றிட்டேன் " என்ற அடுத்த அதிர்ச்சியை அனாயாசமாக போட்டான் விஷ்ணு..
ரோசைய்யா அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார் தளர்வாக…
" சோ.. இனி நீ அந்த கம்பனிக்குள்ள கால் வைக்க முடியாது.. கால் என்ன.. உன் மூச்சு காத்து கூட அந்த பக்கம் வர கூடாது… அண்டர்ஸ்டண்ட்" அப்பவும் அவனை நிமிர்ந்து பார்க்காமல், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அதே பொசிஷனில் ரோசையா.
" இதுக்கே இப்படியா.. இனி தான் மெயின் சீனே .." என்றான் விஷ்ணு குரலில் அவ்வளோ ரெளத்திரம்…. விஷ்ணுவின் அடுத்த விரல் சொடுக்கில் , ரமணனின் அடியாட்கள் ஒரு ரூமில் சென்று, மூவரை அழைத்து வந்தனர் .
அதில் இருவர் ரோசைய்யா துரோக நாடகத்தில் பங்கு ஏற்று, பங்கு பெற்ற அதே வக்கீல் மற்றும் ஆடிட்டர்… மற்றொருவர் விஷ்ணுவின் வக்கீல்…அவர்களை ரோசைய்யா இடுங்கிய பார்வை பார்க்க…
" என்ன பார்க்கிற உன் தோஸ்து தான்.. ஆனா பாரு.. இப்போ உன் துரோகி ஆகிட்டாங்க … புரியலையா… எங்க அப்பாவை ஏமாத்தி கம்பனி நட்டம் சொல்லி ஏமாற்றியது, இவ்வளவு நாள் எங்க அனுமதி இல்லாமல் கம்பெனி ரன் பண்ணியது, எங்க ஷேர்ஸ் பணத்தை நீ திருடியது .. எல்லாத்தையும் நீ தான் செய்தேனு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துட்டாங்க…"
பொதுவாக சிவனின் ருத்திர தாண்டவம் தான் அனைவருக்கும் தெரியும் … ஆனால் இங்கே விஷ்ணு ஆடி கொண்டிருந்தான்.. மிக மிக ரெளத்திரம் ஆக .. அதில் சிதறியது ரோசைய்யா என்ற பண முதலை..
எல்லாவற்றையும் பக்கவாக ப்ளான் செய்து அதிர்ச்சி அதிர்ச்சி மேல் கொடுத்து, ரோசைய்யா என்ற அரசியல் தாதாவை சல்லி சல்லியாக ஆக்கினான் இந்த மென்பொறியாளன்…
ஆனால் இவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது தேனியில்…அவனின் மினி குடும்பத்தினரால்…