ஆழி 18

 

(@thadathagainovels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 9
Thread starter  

18

விஷ்ணுவால் அம்மாவின் பேச்சை ஜீரணிக்க முடியாத நிலை. எப்படி அப்பா அப்படி செய்யலாம். அவன் காதலிக்கும் முன்னால் இந்த மாதிரி நிலைமை இருந்து இருந்தால் கூட சம்மதித்திருக்க மாட்டான். இப்போது மினி தன் உயிராய் தன்னுள் நிறைந்த பின், எங்ஙனம் சம்மதிப்பது.. 

ஆனால் தன்னிடம் கலக்காமல் தந்தை எவ்வாறு இப்படி ஒரு முடிவு எடுத்தார். நிச்சியம் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும் என உறுதியாய் எண்ணினான். இதுலே முழ்கி இருந்தால், எதுவும் தன்னால் யோசிக்க இயலாது என்று முடிவெடுத்து அன்னையை பார்க்க.. அவரோ இன்னும் அழுதபடி தான் இருந்தார்.

காலையில் தான் மகனை சந்தோசமாக இருக்க வாழ்த்தியவர், மாலைக்குள் தானே அதை கலைத்து விட்டதாக அவருக்கு குற்ற உணர்வு.

மெல்ல அன்னையின் அருகே அமர்ந்தவன், அவரின் கை பற்றி, " ம்மா… ஃபர்ஸ்ட் இப்படி அழுகிறதை நிப்பாட்டுங்க.. என்ன ஏதுன்னு முழுசா தெரியாம நாம ஒண்ணும் செய்ய முடியாது. நான் அப்பா கிட்ட முதல பேசுறேன்.." என்றவன் தந்தைக்கு ஃபோன் போட்டான்.

இரண்டு மூன்று தரம் போட்ட பிறகே எடுத்தவர், " நாணா… எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. நம்ம ஊரு பொண்ணையே உனக்கு பார்த்து இருக்கேன்.. நம்ம ஊரு சொந்தம் எந்நாளும் இனி விட்டு போகாது.. நான் உன் மேல உள்ள நம்பிக்கையில் வாக்கு கொடுத்திட்டேன்.. பொண்ணு தங்க விக்ரகம் மாதிரி இருக்கா.. நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு.. உனக்கு கண்டிப்பா பிடிக்கும்.. உன்னையும் அம்மாவையும் கூப்பிட ஆட்கள் அங்க வருவாங்க.. ஒரு பத்து நாட்கள் கடைகளை பார்த்துக்க சுப்பர்வைசர்க்கு சொல்லிட்டு வந்திடு.. வைக்கிட்டுமா.. கல்யாண வேலை நிறையா இருக்கு"

மகனை பேச விடாமல், கடகட வென பேசி வைத்து விட்டார். ஸ்தம்பித்த நிலையில் விஷ்ணு.. நம்பிக்கை.. வாக்கு என்ற வார்த்தையில் அவனை சிறை வைத்து விட்டார் நாகேந்திரன். அன்று தசரதன் கொடுத்த வாக்கு ராமனுக்கு ஆரணிய வாசம்.. இன்று நாகேந்திரனின் வாக்கு விஷ்ணுவுக்கு ஆரா காயத்தை தந்து, ஆருயிர் காதலியையும் பிரிய நேரிடுமோ…

அமைதியாக நின்ற மகனை உலுக்கிய ரோஹிணி விஷ்ணுவின் முகத்தை பார்த்து வேதனை அடைந்தார். பின் ஒரு முடிவெடுத்தவராக, தன் அறை நோக்கி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார்.

" தம்புடு, இதை பிடி" என்று அவர் நீட்டிய அவர்கள் வகை மாங்கல்யத்தை பார்த்து யோசனையுடன் அன்னையை நோக்கினான்.

" இது.. அன்னைக்கு போனமே அந்த கோவில் திருக்கல்யாணத்திற்கு எடுத்த மாங்கல்யம்.. உனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்க வேண்டிய நான் வேண்டிகிட்டேன்.. இப்போ எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம்.. உங்க அப்பா வாக்கு.. நம்பிக்கை எல்லாம் அப்புறம் தான் எனக்கு.. நீ முதல போய் சௌமியை கூப்பிட்டு ஏதோ ஒரு கோவில் வைத்து , இந்த மாங்கல்யத்தை அவ கழுத்துல கட்டு.. அப்புறம் எப்படி அவர் இந்த கல்யாணம் பண்ணுறார் பார்க்குறேன்.. வீட்டுக்கு வரட்டும் அந்த மனுஷன்.." என்று ஆவேசமாக பேசியவரை ஆச்சிரியமாக பார்த்து அணைத்து கொண்டான் மகன். எந்நிலையிலும் மகனின் மனதை பார்க்கும் தாய் என்றுமே நடமாடும் தெய்வங்கள் தான்.

மெல்ல அந்த மாங்கல்யத்தை வாங்கியவன், ஒரு விரக்தி சிரிப்புடன் அதனை அன்னையின் கையில் திரும்ப வைத்து, " இப்படி திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணினால், அது…என் காதலுக்கு நியாயம் செய்வதாய் இருக்காது.. காலம் முழுக்க இது உறுத்தும்.. எனக்கு நீங்கள் எவ்வளோ முக்கியமோ அதே போல தான் மினிக்கும் அவங்க குடும்பமும் அவளை உயிரா நேசிக்கிறாங்க.. அவளும் அப்படி தான்.. இவ்வளோ அன்பான உங்க எல்லோருடைய ஆசீர்வாததோட தான் எங்க கல்யாணம் நடக்கும்.. நடத்துவேன்.. அதே பாலாஜி கோவில்ல… "

மகனின் இந்த தெளிவான பேச்சு, இரு வீட்டையும் விட்டு கொடுக்காத பாங்கு, உச்சி குளிர்ந்து போனார் ரோஹிணி..

 " அம்மா.. அது மட்டும் இல்லை.. அப்பா சொன்னது அவர் என் மேல் உள்ள நம்பிக்கையை.. அதை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கு" என்று கூறுபவனை அவர் குழம்பி போய் பார்க்க.. 

"என்னமா.. ரொம்ப குழப்புறேனா.. யூ ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ " என்று அன்னையின் கன்னத்தை பிடித்து ஆட்டி, கொஞ்சி விட்டு தன் அறை நோக்கி சென்றான்.

போகும் போதே.." அம்மா .. ஊருக்கு போக பேக் பண்ணுங்க" என்றான்.

’ இவன் என்ன இப்படி சொல்லுறான்.. எது எப்படியோ சௌமி தான் எனக்கு மருமகள்.. வேற ஒருத்தி வர விட்டுடுவேணா.. என்ன’ என்று முந்தியை ஒரு உதரு உதரி இடுப்பில் சொருகி விட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்.

அம்மாவை சுலபமாக சமாளிக்க முடிந்தவனால், எப்படி சௌமினியை எதிர் கொள்ள என்று தயக்கமாகவே இருந்தது. இவர்கள் காதல் பற்றி இப்போதைக்கு யாருக்கும் தெரிய அவனுக்கு விருப்பமில்லை. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்.. பலவாறு யோசித்தவன், மணியை பார்த்தான், வேலை நேரம் முடிந்திருக்கும், பெரு மூச்சை ஒன்றை விட்டு , முடிவோடு சௌமினிக்கு அழைத்தான். அவளும் இவன் அழைப்புகாகவே காத்திருந்தாள் போல, முதல் ரிங்ஙிலேயே எடுத்து விட்டாள்.

" என்னாச்சு .. மாமா.. அய்த்தை நல்லா இருக்காங்க தானே..?" என்றாள் பதட்டத்துடன். அவளின் அந்த பதட்டம் அவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு.. 

" மினி.. ம்ம் நல்லா இருக்காங்க... "

" அப்பாடி. ..இப்போ தான் நிம்மதியா இருக்கு, நீங்க போனதுல இருந்து ஒரே கவலையா இருந்துச்சு… ஐய்யனாருக்கு. கிடா வெட்டுறேனு நெந்துகிட்டேன்.."

அவளின் வெள்ளை மனது அவனை அசைத்தது, " மினி.. உன் கிட்ட ஒண்ணு கேட்கனும்"

" என்ன.. . மாமா.."

" என் மேல உனக்கு எந்த அளவு நம்பிக்கை இருக்கு?"

" நீங்க என்னை மாடியில் இருந்து குதிக்க சொன்னா.. கண்ணை மூடிக் கிட்டு குத்திக்கிற அளவுக்கு.. மாமா"

அவளின் இந்த வார்த்தையில் அவன் நெகிழ்ந்து, " "மினிம்மா…" என்று வார்த்தை வராமல் நின்றான்.

" ஏன் மாமா.. எதுவும் பெரிய பிரச்சனையா"

தன் தொண்டையை ஒரு முறை செருமி கொண்டவன், " மினி.. இப்போ நான் சொல்லுறது நல்லா புரிஞ்சுக்க.. நீ சொன்ன மாதிரியான ஒரு இக்கட்டான நிலையில் தான் இருக்கேன்.. இப்போ நீ சொன்ன அந்த நம்பிக்கை தான் எனக்கு யானை பலம் தருது... எந்நிலையில் அதை விட்டுடாதே.. என் மொத்த பலமும் நீ தான்.. பலவீனமும் நீ தான்.. என்னைப்பற்றி என்ன கேள்விப்பட்டாலும் உன் மாமனை நீ கடைசி வரை நம்பனும்.. என் உயிர் மூச்சு உள்ள வரை.. " என்றவானின் பேச்சில் இடையிட்டு " லூசு மாதிரி பேசாதே மாமா.. யார் என்ன சொன்ன என்ன.. ஏன் என் கண்ணை கூட என் மனசு நம்பாது.. அது என் மாமாவை மட்டும் தான் நம்பும்.. போதுமா.. சும்மா உயிரு……….பேசி என்கிட்ட வாங்காதே… " என்று உருக்கமாக ஆரம்பித்து கோபமாக முடித்தாள்.

சௌமினி பேசி முடித்தவுடன்… ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை… அவளின் வார்த்தைகளை தன்னுள் ஆழ்ந்து புதைத்து கொண்டிருந்தான்.. அவளோ…மாமா.. மாமா.. பி.எம்.. வி.பி.. என்று வரிசையாக அவனுக்கும் வைத்த பெயர்களை ஏலமிட்டு கொண்டிருந்தாள்.

அவன் சிரித்து கொண்டே.." போதும் டி… நிறுத்து.. இருக்கேன்.. "

" அது தானே .. நான் கூட திட்டுனதுல ரோசப்பட்டுடீங்களோனு நினைச்சேன்.. " 

" அது எப்படி டி பட முடியும்... உன்னை எல்லாம் காதலிக்க முதல் தகுதியே.. வெட்கம்.. ரோசம்.. மானம்.. ஈகோ எல்லாத்தையும் முழுசா விட்டுடனும்.. "

" ரொம்ப தான்.." என்று உதடு சுழித்தாள்.

" இப்போ தான் மனசு ரீலாக்சா இருக்கு .. அதுக்கு தாண்டி பொண்டாட்டி வேணுங்கிறது.."

" ஆஹ்ஹாண்ண்"

" ஓகே டா. … இன்னும் ஒரு பத்து நாள் நான் ஊருல இருக்க மாட்டேன்.. நீ கவனம் டா.. எது நடந்தாலும் நீ.. உன் நம்பிக்கையும் எனக்காக காத்துக்கிட்டு இருக்கணும்.. இருப்பியா டா" என்றவனின் குரல் தழுதழுக்க..

" மாமா…" என்று அதட்டியவள், " உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா" என்று கேட்க.. "என் எல்லாமும் நீ தான் டி"

" அப்புறம்.. என்ன. நல்லபடியா போய்ட்டு வாங்க.. பிரச்னை எல்லாம் முடிச்சிட்டு வாங்க.. "

தன்னவளின் தன் மீதான நம்பிக்கை அவனுக்கு இதையும் எதிர் கொள்ளும் துணிவு தர, அதுவரை இருந்த மன உளைச்சல் பறந்து போக, அவனும் பயணத்திற்கு ரெடி ஆனான்.

 

சிறிது நேரத்திலேயே ஏ.சி. டெம்போ வேனுடன் மூன்று அடி ஆட்கள் சகிதம் வந்து இறங்கினான் ரமணன் ரெட்டி.. உள்ளே வந்தவன், ரோஹிணியை பார்த்து வணங்கி, " வணக்கம் அம்மா.. நாகேந்திரன் சர் தான் அனுப்பி வைச்சாங்க.. உங்களையும் மாப்பிள்ளையும் கூட்டி வர சொல்லி.." என்று வந்தவனின் பார்வையை கொஞ்சமும் பிடித்தம் இல்லாமல் போனது ரோஹிணிக்கு.

அவரிடம் பேசி கொண்டே, அவன் கண்கள் அலை பாய்ந்த வண்ணம் இருந்தது வீட்டை சுற்றி.. கீழ சத்தம் கேட்டு மாடியில் இருந்து இறங்கி வந்தான் விஷ்ணு.

விஷ்ணுவின் அழகிலும், கம்பீரத்திலும் மெச்சிய பார்வை அவனிடம். கீழ் இறங்கியவனிடம் நெருங்கியவன், கை கூப்பி, " வணக்கம் மாப்பிள்ளை… நான் ரமணன் ரெட்டி.. நான் பொண்ணு வீடு, கல்யாண பொண்ணு எங்க ஐயாவோட பொண்ணு தான்.. நீங்க இரண்டு பேரும் ரொம்ப பொருத்தம்.. மாப்பிள்ளை"

விஷ்ணுவின் கூரிய பார்வை ரமணனை அளக்க தவறவில்லை. நெற்றியில் குங்கும் தீற்றலுடன், கழுத்தில் உருண்டு திரண்ட தங்க செயின், கையில் செம்பு காப்புடன் அக்மார்க் அடியாள் தொனியில் இருந்தான்.

அவனின் பேச்சிற்கு வெறும் தலை ஆட்டலுடன், நகர்ந்து விட்டான் விஷ்ணு. தன் தாயிடம் சென்று போகலாம் மா.. என்ற வார்த்தையை கண்ணை அழுத்தமாக பார்த்து கூறினான், இதற்கு மேல் இவன் முன்னிலையில் பேச வேண்டாம் என்ற செய்தி அதில் இருந்தது.

மகனின் செய்தியை புரிந்து கொண்ட ரோஹிணியும் அமைதியாகவே அவர்களுடன் சென்றார். அவர்கள் பயணம் முழுவதும் விஷ்ணுவும் ரோஹிணியும் அனாவசிய பேச்சு இல்லை. வழி முழுவதும் ரமணன் தான், பேசி கொண்டும் அவர்களின் தேவையை பார்த்து பார்த்து செய்து கொண்டும் வந்தான் உண்மை ஊழியனாக..

ஊருக்குள் நுழைந்ததும், வான வேடிக்கை அதிர, மேல தாளங்கள் முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மாப்பிள்ளைக்கு.. 

விஷ்ணுவும் ரோஹிணியும் இறங்கி நிற்க ஆள் உயர மாலை தாங்கி நின்ற யானையின் மூலம் விஷ்ணுவிற்கு அனுவிக்கபட்டது. அவன் வெறும் பார்வையாளராக மட்டுமே..

ரமணன் தான் அங்கே அனைத்தும் முன் நின்று செய்து கொண்டிருந்தான். " வாங்க.. வாங்க.. மாப்பிள்ளை.. சம்மந்தியம்மா" என்ற அழைப்பில் உச்ச கட்ட அதிர்ச்சி ரோஹிணிக்கு..

 அம்மாவின் அதிர்ச்சி பார்வையின் வழி சென்ற விஷ்ணு பார்வை கண்டது நண்பரோடு கை கோர்த்து நின்ற நாகேந்திரனை தான். அவனுக்கு யார் அந்த நண்பர் என்று அடையாளம் தெரியவில்லை.

ஆம் அந்த நண்பர் , நாகேந்திரனை ஏமாற்றி தொழிலில் நட்டமடைய வைத்த அதே ரோசைய்யா ரெட்டி தான்..

விதி சிரித்தது, " எப்படி நம்ம டுவிஸ்ட்" … கி

யூபிட் அமைதியாய்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top