6
"க்கும்!!" என்று தொண்டையை கனைத்து சற்குணம் அம்பலவாணனை நோக்கி "ஏதோ கேட்கணும்னு சொன்னீரு.. இப்ப அமைதியா இருந்தா என்ன அர்த்தம்கிறேன். அதான் யேன் மருமக வந்து நிற்குது இல்ல கேளும்.. சந்தேகத்தைக் கேட்டு தெளிஞ்சுக்குக" என்று அசிரத்தையாக கூறி இன்னும் நன்றாக கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் அவருக்கும் அஸ்திரா அவசரப்பட்டு தந்தையோடு செல்லும் முடிவை எடுக்க மாட்டாள் என்று தெரியும். அதைவிட மகன் ஏதாவது சொல்லி தான் அழைத்து வந்திருப்பான் என்று மகனின் மீது பெரும் நம்பிக்கை. அதனாலதான் கொஞ்சம் கர்வம் ஆகவே அம்பலவாணனை பார்த்து அமர்ந்து இருந்தாள்.
இதே மற்றபடி பஞ்சாயத்தில் எல்லாம் இவர் இவ்வாறு அமருபவர் இல்லை. எப்பொழுது பஞ்சாயத்து இரு குடும்பத்துக்கும் மட்டும் என்று அம்பலவாணன் சொன்னாரோ இனி உனக்கு எதற்கு மரியாதை என்பது போல தான் அவரது உடல்மொழியும் நடத்தையும் வார்த்தைகளும் இருந்தன.
கண்களில் அவ்வளவு வெறுப்பு மண்ட நாவோ வாய் இனிக்க இனிக்க பேச ஆரம்பித்தது மகளிடம். "அஸ்திராமா.. என்ன கோலம் இது? உன் புருஷன் செத்து முப்பது நாளு கூட முடியல.. அவனுக்கு உண்மையா இருந்து வாழ்ந்தவ தானே நீனு.. அப்படிப்பட்ட நீ இந்த களவானி பயலோட.." என்று அவர் ஆரம்பித்ததும் சுற்று பக்கத்திலிருந்து "ஏய்ய்.. வாய அய்க்கிய பேசு!! எடுறா அந்த அருவாள பேச்சி நாக்க அறுத்திடுறேன்" என்று சவுண்டு சத்தமாக வரவும், தன் தொண்டையை கனைத்துக் கொண்டவர் "இவனோட எப்படி நீ வாழ ஒத்துகிட்ட.. அது உன் புருசனுக்கு செய்யும் துரோகம் இல்லையா? ஆத்மாவா பார்த்து அவன் கண்ணீர் வடிப்பானே.. அவனுக்கு சாவும் போது தான் நிம்மதி கிடைக்கல.. செத்தும் நிம்மதி இல்லாம ஆக்காத ஆத்தா.. உன் மேல எம்பூட்டு பாசமா உன் பின்னாலயே சுத்தி சுத்தி வந்து உன்னை விரும்பி கட்டிக்கிட்டான் இப்படி பண்ணிட்டியே நீயி?" என்று போலியாய் கண்ணீர் வடித்து.. நஞ்சை நெஞ்சுக்குள் வைத்து தேன் தடவிய வார்த்தைகளால் அவளை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் சென்று விடும் நோக்கத்தில் பேச ஆரம்பித்தார் அம்பலவாணன்.
பெண்களிடம் அதிரடியாக பேசுவதைக் காட்டிலும் அவர்களின் உணர்ச்சியை தூண்டி.. குற்றவுணர்ச்சியை அதிகரித்து..
உணர்வு ரீதியாக பேசி அவர்களை மடக்குவது மிகவும் எளிது.
பாசத்தினால் பாழ் கிணற்றில் விழ கூட தயங்க மாட்டார்கள்.. அன்பு என்னும் பெயரில் அரளி விஷத்தைக் கூட அள்ளிக் குடிக்க மறுக்க மாட்டார்கள்.. அத்தனை உணர்வுமிக்க பெண்களை நாடி பிடித்து வைத்திருந்த அம்பலவாணன் தனது தாக்குதலை ஆரம்பிக்க..
அவர் பேசப்பேச மற்றவர்களுக்கும் இப்போ இந்த பேச்சு தேவைதானா இந்த பெண் இப்போது இன்னொருவருடைய மனைவி எதற்கு செத்துப் போனவனை பற்றி பேசவேண்டும். அவன் உயிரோடு இருந்தாலாவது பரவாயில்லை என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் வாய் திறந்து யாரும் பேசவில்லை. இங்கு அவள் பேசினால் தான் சரியாக இருக்கும் என்று!!
முதலில் அந்த குற்ற உணர்ச்சியின் பிடியில் அஸ்திரா சிக்கி தவித்தாலும்.. தந்தையினை நம்பி அவர் பின்னே சென்றால் என்ன நடக்கும் என்பதை அவளும் அறிந்து வைத்திருக்க.. தனது தலையை உலுக்கி இல்லை இல்லை அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்று அழுத்தந்திருத்தமாக தனக்குள்ளேயே உரைத்து கொண்டவள், மெல்ல நிமிர்ந்து தந்தையை பார்த்தாள்.
"இப்போ.. இப்போ.. என்னுடைய புருஷன் இவரு தான்!!" என்று வீரநெருமாறனை கை காட்டியவள், "அவர.. அவர மட்டுந்தேன் நினைக்கிறேன்.. வேற ஆரும் யேன் மனசுல இல்ல.. நானு எங்கேயும் வரல" என்று திக்கி திணறி கூறியவள் அமைதியாக நின்று கொண்டாள்.
தன் பெண்ணாக தன் வீட்டில் இருந்தவரை சொன்னதற்கு எல்லாம் தலையாட்டியவள், இன்று அவன் மனைவியாகி ஒரு நாள் கூட ஆகவில்லை.. அதற்குள் என்னை எதிர்த்து பேசுகிறாளே என்று கடும் கோபம் அம்பலவாணனிடம்.. இருந்த நாற்காலியை எடுத்து அவளை அடித்து விடும் வேகம் இருந்தாலும் வீரியத்தை விட காரியம் பெரிது என்று அமைதியாக தன்னை கட்டுப் படுத்திக் கொண்டார். "அதெல்லாம் சரிவராது ஆத்தா.. நீ நம்ம வீட்டுக்கு வந்துரு.. உனக்கு என்ன பிடிக்குதோ அதுபோல நீ இரு. ஆனால் இது ரொம்ப ரொம்ப தப்பு.. என்ற மருமவன் செத்து முப்பது நாள் கூட முடியல.." என்று இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டே சென்றார்.
அவள் எதற்கும் மசியாமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க.. ஒரு கட்டத்தில் பொறுமை எல்லாம் பறந்து போனது அவருக்கு. சீற்றமாக எழுந்தவர் அமர்ந்திருந்த நாற்காலியை ஒரே தள்ளி தள்ளி நின்றவாறே "என்ன நினைச்சுகிட்டு இருக்க நீனு.. எல்லாம் மறந்து போச்சா?" என்று அவர் உறுமியதில் பயத்தில் பின்னாலே இரண்டடி சென்றவள் வீராவின் நெஞ்சு மீது ஒட்டிக் கொள்ள.. அதில் இன்னும் விதிர்விதிர்த்து முன்னால் சில அடிகள் எடுத்து வைக்க முயல.. போக முடியாமல் அழுதமேனிக்கு நின்றாள். அவளது நடுங்கும் கரங்களை தன் கரங்களோடு இணைத்து வீரா நான் இருக்கேன் உனக்கு என்பதாய் தைரியம் கொடுத்தான்.
அதுவே அவளுக்கு சற்று தெம்பை கொடுக்க.. நடுக்கங்கள் நீங்கி தந்தையை பார்க்காமல் அருகில் அமர்ந்திருந்த சற்குணத்திடம் "ஐயா.. மா..மாமா.. எனக்கு அவரு கூட போக இஷ்டம் இல்லீங்க.. இதுதான் யேன் வூடு.. அவரு தான் யேன் வூட்டுக்காரர். இதில் மாற்றமும் இல்லீங்க.. நீங்களே அவருக்கு சொல்லிடுக" என்று கூறியவள் நிமிர்ந்து அசோகனை ஒரு பார்வை பார்க்க.. அவரும் மெல்ல தலையசைத்து கண்மூடி திறக்க ஒரு சிறு நிம்மதி அஸ்திராவதிக்குள்!!
இதுவரை பெரியப்பா என்ன சொல்வாரோ? தன்னை பற்றி ஏதும் அசிங்கமாக நினைத்துக் கொண்டாரோ என்று பலவாறு சிந்தித்தவளுக்கு அவர் திறந்து மூடிய கண்களில் அத்தனை நேரம் இருந்த மன கிலேசங்கள் அகன்று நிம்மதியை தந்தது.
"நீயி எப்படி இவன் கூட வாழ்றேனு நான் பார்க்குறேன்" என்று கோபத்தில் மூச்சிரைக்க பேசிய அம்பலவாணனை பார்த்த வீரநெடுமாறன் தன்னவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து அவருக்கு நேராக நெஞ்சை விடைத்து நின்றவன், "அம்பலவாணனு பேரு வச்சிக்கிட்டா உம்ம பேச்செல்லாம் அம்பலத்தில் ஏறும்னு அவசியம் கிடையாது அம்பலவாணா.. அம்பலமே இல்லாம ஆக்கிபுடுவேன்!" என்று மெதுவாக உரைத்தவன், பின்பு எல்லோருக்கும் கேட்கும் படி "யேன் பொண்டாட்டிய சொல்லிட்டா.. அதை நாந்தேன் அவ புருஷனு.. இதுதேன் அவ வூடு!! வ இனிமே அவ இங்கன தேன்!!" என்றான் நிமிர்வோடு!!
தோளில் கிடந்த துண்டை உதறிய அம்பலவாணன் இருவரையும் கண்ணில் துளிர்த்த அக்னியால் எரிக்க முயல "அப்பா என்ன சூடு.. என்னா சூடு" என்று நக்கலடித்த வீரா… "யோவ் மாமா நல்லா கேட்டுகுக.. அடுத்த வருஷம் இதே நாளு யேன் மகன ரிலீஸ் பண்ணி உம்ம மேல உச்சா போக வைக்கல நானு வீரநெடுமாறன் இல்லை யா!!" என்றான் சபதம் போல.. அந்த சபதத்தையும் அதற்குப் பின்னேயான அவனது குறும்பையும் வாழ்க்கையையும் கண்ட அனைவருக்கும் அப்பாடி என்ற உணர்வும் சிறு சந்தோசமும் வந்தது.
அம்பலவாணன் வேகத்துடன் நடந்து கொண்டே செல்ல.. அவரை சேர்ந்த கூட்டம் வேகவேகமாக பின்னால் செல்ல.. அசோகனும் அவரது ஆட்கள் எழுந்து கொண்டனர். நேராக வந்து நின்று சற்குணத்திடம் "அவ அம்பலவாணன் பொண்ணு மட்டுமல்ல சம்பந்தி.. என்ற வூட்டு பொண்ணும் கூடத்தேன். இனி உங்க வூட்டு பொண்ணா நினைச்சுக்கோங்க" என்று சொன்னவரின் பொருளை உணர்ந்த சற்குணம், "இனி அஸ்திரா யேன் வூட்டு பொண்ணு சம்மந்தி.. நீங்க கவலைப் படாம போங்க.. அவள பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு மட்டுமல்ல அவ புருஷன் பொறுப்பும்தேன்" என்றார்.
வந்தவர்களும் சென்று விட.. இங்கிருந்து அல்லகைகளும் நல்லகைகளும்.. ஒன்று விட்ட சொந்தங்களும் இரண்டு விட்ட ஏன் பத்து விட்ட சொந்தங்கள் கூட.. ஒருவித வருத்திலேயே காணப்பட்டனர்.
அதற்குள் பஞ்சாயத்து முடிந்த விஷயம் கேள்விப்பட்ட தர்மராஜன் சாப்பாட்டுக்கு வருவதுபோல இங்கே அத்தை வீட்டுக்கு வந்துவிட்டான்.
"என்ன மாப்புள்ள பஞ்சாயத்து சுமூகமாக முடிஞ்சிருச்சு போலயே.. பஞ்சநதி குளத்துக்கு ரங்கா அமைதியா போய்ட்டானுங்க போலயே" என்று அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டே அவன் கேட்க..
வீராவும் ஆமாம் என்பது போல தலையசைத்தவன் அதை பிறகு "எப்படிடா கரெக்டா சொன்ன? என்று கேட்க..
"அதான் நம்ம ஆளுக மூஞ்சிலேயே எழுதி ஓட்டு இருக்கே மாப்புள்ள.. ஏதாவது பிரச்சனையா இருந்தா இவனுக இந்நேரம் உறுமிகிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் உலாவி இருப்பானுங்க… கூடி கூடி பேசிட்டு இருப்பானுக.. நிமிசத்துக்கு நாலு போன் காலு பேசுவானுக.. நாப்பத்தி அஞ்சு தடவை ஊருக்குள்ள சுத்தி வந்து இருப்பானுக.. இப்படி எதுவும் இல்லாம மூஞ்ச தொங்க போட்டு சுத்துவதிலிருந்து தெரியலை யா.. வா மாப்புள்ள சாப்பிட போலாம் பசிக்குது" என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் தர்மா.
அன்றிரவு.. தன்னை அருகில் அண்ட விடாமல் இழுத்து மூடி உறங்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கண்களில் சிறு குறும்பு கூத்தாட.. அவளிடம் வம்பு செய்ய நினைத்தவன், எட்டி சேலையை பின்பக்கம் விலக்கி..
இறுக்கி கட்டி தடம் பதித்திருந்த அவளின் பாவாடை நாடா விளிம்பை விரல்களால் வருடினான். அதில் அதிர்ந்து திரும்ப.. வாகாய் போய்விட்டது ஆணவனுக்கு.
அவனது இடது கை விரல்கள் அவளது வயிற்றில் வட்டமிட்டன... வயிற்றின் மையத்தில் அழகாய் சுளிந்திருந்த நாபி குழியைச் சுற்றின.. மெல்லிய ரோமங்களை சிலிர்க்க வைத்தன. கவர்ச்சியாக சுழிந்திருந்த அவள் நாபியில் சட்டென குனிந்து உதடுகள் பொறுத்தி முத்தமிட்டான். மெல்ல அவள் இடுப்பை பிசைந்து கொண்டே நாக்கை நீட்டி அச்சிறு மரகத கல் தாடகத்தை தீண்டினான். சிலிர்க்க வேண்டியவளோ சினந்து கொண்டு அவன் தலையை இறுக்கி தள்ளினாள். அவன் நாக்கு அவள் ஆழிசுழியை சுற்றி கோலமிட்டது… அத்தடாகத்தில் இறங்கி நீந்தியது.
"ஹ்ஹ்ஹா" அவன் தலை முடிக்குள் விரல்களை விட்டு பிய்த்தாள்.. தவித்தாள்… அடங்க மறுத்தாள்.. அவன் தலை முடிகளை இறுக்கி இறுக்கி பிடித்து இழுத்து தள்ளினாள். பொன்னில் வார்த்த இத்தனை அழகான வளைவு நெளிவுகளை.. மேடு பள்ளங்களை.. அமிர்த குடத்தையும் கனிகளையும் தாங்கி நிற்கும் இவள் எனக்கு மனைவி என்ற கர்வத்தில் காதலின் காமத்தில் வீழ்ந்தான் காளையவன்!!
"நீயி புதுசா பார்க்க.. செய்றதுக்கு ஒன்னும் கிடையாது. ஏற்கனவே இன்னொருத்தன் கைபட்ட எச்சில் தான் இது" என்று தன் உடம்பை அவள் கைகளால் சுட்டிக்காட்ட... அவன் மோகம் மட்டுமல்ல காமமும் கலைந்தது.
ஆனால் காதல்??!!!
தீரமோ தீரா தாகம்??
