கண்ணம்மா 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 18

 

 தள்ளாடியப்படி நின்று இருந்த ஆதித்தின் பின்னால் நின்ற வெற்றிவேல் "பங்கு.. ஸ்டடி ஸ்டடி!" என்று சொல்ல தலையை உலுக்கி கொண்டவன், "சரி பங்கு! சரி பங்கு!" என்றவனின் கண்கள் மீண்டும் தூக்கத்திற்கு கெஞ்ச…

 

இந்த பக்கம் நின்றிருந்த குகனோ "அய்த்தான்.. ஸ்டடி ஸ்டடி..!"

 

"ஆஹான்.. சரி மச்சான்.. சரி மச்சான்!" என்று மீண்டும் தலையை உலுக்கி நின்றான்.

 

அது வேறொன்றுமில்லைங்க.. வேண்டுதல் என்று மொத்த குடும்பமும் விடியற்காலையிலேயே மதுரையின் புகழ்பெற்ற பாண்டி கோயிலில் பூஜைக்காக வந்துவிட்டது. 

 

அதுவும் இரவெல்லாம் மனைவியோடு கூடிக் களித்து மகிழ்வில் களைத்து விடியற்காலையில் அப்பொழுதுதான் கண்ணை மூடியவனின் அறை கதவு வேகமாக தட்டப்பட.. ஆதித் அதிர்ந்து விழித்துப் பார்க்கையில் அருகே தாரா இல்லை.

 

அவளோ அவ்வளவு காலையில் குளித்து முடித்து பட்டுப்புடவையில் வந்திருந்தாள். "என்ன பட்டுப் புடவையில இருக்கா?" என்று அவன் யோசித்துக் கொண்டே கதவை திறக்க.. அங்கே குகன் நின்று இருந்தவன் "மச்சான்.. சீக்கிரம் கிளம்புங்க.. கிளம்புங்க.. கோயிலுக்கு போகனும்" என்று தூக்கத்தில் இருந்தவனை குளிக்க வைத்து இழுத்து வந்திருந்தனர்.

 

கோயிலில் ஆங்காங்கே சந்தனம் வந்த பக்தர்கள் சாமியாடி கொண்டிருந்தார்கள். இவனோ தூக்கத்தில் சாமியாடிக் கொண்டிருந்தான்.

 

ஆதித்தை பார்த்த உறவினர்களோ "பரவால்ல செந்திலு உன் மாப்பிள்ள ஃபாரின்ல இருந்தாலும் பக்தி ஜாஸ்தி போல.. நம்ம பாண்டி கோயிலுக்கு வந்ததும் பாரு பக்தி முக்தி போய் சாமி வந்துருச்சு" என்று அவனைப் புகழ் பாட.. கூட இருந்தவர்களுக்கு தானே தெரியும் அது எந்த சாமி என்று!!

 

அதற்குப் பின் பூஜை எல்லாம் முடிந்து கிடா வெட்டி படையல் போட்டு விருந்து ஆரம்பிக்கும் வரை மாற்றி மாற்றி குகன் அல்லது வெற்றிவேல் தோளை கடன் வாங்கிக் கொண்டான் தூங்குவதற்கு நின்று கொண்டே ஆதித் நிகேதன். 

 

அவர்களும் பாரபட்சமில்லாமல் தன் தோள்களை பட்டா போட்டுக் கொடுத்தனர் புது மாப்பிள்ளைக்கு.

 

திருமணம் என்ற பெயருக்கு ஆரம்பித்ததில் இருந்து வேலை அவனுக்கு அதிகமே!!

 

அதிலும் "தம்பி நாங்க அதை செய்வோம். தம்பி நாங்க இதை செய்றோம்!" என்று வரும் அருணாச்சலத்தின் அரசியல் படைகளை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது.

 

திடீரென்று எங்கேயாவது பெரும் அன்பின் காரணமாக அவர்கள் போஸ்டர் அடித்து ஓட்ட போக.. அதை கேள்விப்பட்ட இவன் விரட்ட போக..

ஒரே கும்மாளம் தான்.

 

அவர்களிடம் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி.. ஒட்டிய போஸ்டர் எல்லாம் கிழித்தி எறிவதற்குள் போதும் போதும் என்றாகும் ஆதித்துக்கு.

 

இப்படியாகத்தான் அவெஞ்சர்ஸ் இருந்து பாகுபலி வரை கண்ட கண்ட உருவங்களில் ஆதித்தை போட்டு அவர்கள் அமர்க்களம் படுத்த.. அதை கண்டவன் காண்டாகி அவர்களை சமாதானப்படுத்தி அதை எல்லாம் ஓரங்கட்டி.. ஆதித்தை ஒரு வழி

படுத்தி தான் திருமணம் நடைபெற்றது. அதனால் கடந்த ஒரு வாரமாகவே அவனுக்கு தூக்கம் சரியில்லை.

 

அதிலும்.. முதலிரவு முடிந்து வந்த மாப்பிள்ளை குண்டு கட்டாக தூக்கி வந்து இருந்தால் அவனும் என்னதான் செய்வான்?

 

பூஜை முடிந்ததும் "டேய் என்னை விடுங்கடா நான் வீட்டுக்கு போறேன். தூக்கம் வருது" என்று புலம்பியவனை..

 

"அப்படி எல்லாம் விட முடியாது பங்கு! என்ன நினைச்சீங்க எங்க ஊரு விருந்து எல்லாம் இனிமேதான்! ஒவ்வொருத்தரா உங்களை வந்து கூப்பிடவும்.. பாருங்க களைகட்டும்" என்றதும் பதறி குகனை பார்க்க..

 

"ஆமா மச்சான் எங்க அம்மா வகை சொந்தங்க இருக்காய்ங்க.. பெரியம்மாவை வகை சொந்தங்கள் இருக்காய்ங்க.. அப்புறம் அப்பா வழி சொந்தங்க.. அத்த புகுந்த வீட்டு சொந்தங்கள்…"

 

"யோவ் போதும்.. போதும்! இப்பவே தல கிறுன்னு இருக்குது" என்றவன் "நீங்களெல்லாம் பேசி முடிங்கடா நான் காருக்குள்ளயே ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று காருக்கு சென்று கட்டயை நீட்டி விட்டான் ஆதித்.

 

வைதேகி தான் கதிர்வேலனிடம் பேசி "நாமதான் இங்க இருக்கோம் இல்ல.. பொறவு என்ன.. புதுசா கல்யாணமான ஜோடிய வீட்டுக்கு அனுப்பி வைங்க.. போய் ரெஸ்ட் எடுக்கட்டும் அவங்க" என்று அவர் சொல்வதை புரிந்து கொண்டவரும் குகனை அனுப்பி தாராவையும் ஆதித்தையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

 

வீட்டுக்கு வந்தவன் நன்றாக தூங்கி எழுந்து மாலை முடிந்து இரவு எட்டு பார்க்கும் வேளையில் தான் இவன் வெளியிலே வந்தான்.

 

அருணாச்சலம் அண்ட் குடும்பத்தார் எல்லாம் காலையில் பாண்டி கோவிலில் பூஜை முடிந்ததுமே கிளம்பி விட்டார்கள்.

 

மூன்று நாட்களில் இங்கு முடித்து அதற்கு பின் அவன் சென்னை செல்ல வேண்டும். அதற்குப் பின் திரும்பவும் இங்கே மறு வீடு வந்துவிட்டு மதுரையிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடு செய்திருந்தான்.

 

"நான் முழித்துப் பார்க்கும் நேரம் எல்லாம் இவ என்கிட்ட இருக்க மாட்டேங்கிறாளே.. இருடி தீப்ஸ் முதல் ஆஸ்திரேலியா போய் உன்னை கூண்டுக்குள்ள போட்டு வைக்கணும். இங்கே பரந்து பறந்து போயிரு.." என்று மனைவியை திட்டிக்கொண்டு கீழே இறங்கி வந்தவன், 

 

அங்கே கேட்ட சத்தத்தில் நிஜமாலுமே வீட்டிற்குத்தான் வந்தோமா இல்லை ஏதாவது அடிதடி சண்டை நடக்கும் இடத்திற்கு வந்து விட்டோமா என்று திரும்பிப் பார்க்க.. அங்கே அடிதடி எல்லாம் இல்ல உரிமை போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

 

"அது எப்படி? தாய்க்கு பின் தாய் மாமன் தான்! தாய்மாமன் பேருலேயே தாயின் பேர் இருக்கு இல்லையா? அதனால என் மருமகள நான்தான் முதல் விருந்துக்கு கூட்டிட்டு போவேன் " என்று மரகதவல்லியின் அண்ணன் வரிந்து கட்டிக்கொண்டு நிற்க…

 

"நாங்க பங்காளிகளை எத்தனை பேர் இருக்கோம் தெரியுமா மச்சான்? மூணு நாள் அதுக்கே எங்களுக்கு நேரம் பத்தல.. இதுல உங்களுக்கு எப்படி நாங்க நேரம் கொடுக்க?" என்று செந்தில்வேலன் கதிர்வேலன் பங்காளிகள் ஒரு புறம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க…

 

"இந்த வீட்டு பொண்ணு நானு! அதனால இந்த வீட்டு பொண்ணோட மொத விருந்து எங்க வீட்ல தான்! அதனால என் மருமகள என் வீட்டுக்கு தான் விருந்துக்கு வரணும்" என்று அழகு மீனாள் ஒரு புறம் ஆண்களுக்கு நிகராக கோதாவில் இறங்க…

 

"அதெல்லாம் இல்லை தாய் மாமன் தான் முதல் விருந்து!" என்று தன்‌ ஒன்று விட்ட அண்ணனுக்கு சப்போர்ட்டாக நின்று இருந்தார் வைதேகியின் தம்பி வேறு.

 

என்ன நடக்குது என்றே தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த குகனின் புஜத்தை சுரண்டி என்ன என்று கண்களால் கேட்டான் ஆதித்.

 

அவன் ஆதித் காதில் அத்தனையும் ஒப்பித்து விட.. நெஞ்சை பிடித்து விட்டான் ஆதித். 

 

"இவங்க பேசுவதை பார்த்தால் ஒரு வாரத்துக்கு என்னை விட்டு வைக்க மாட்டாங்க போலயே.. இதெல்லாம் ஆகுறதுக்கு இல்ல! மச்சான் நாளைக்கு காலைல நான் ஜூட்" என்றான் ஆதித்.

 

"அப்படி எல்லாம் முடியாது மச்சான். நாளைக்கு காலைல நம்ம வீட்டுக்கு விருந்து இருக்கு.. அத விட்டுட்டு எப்படி நீங்க போக முடியும்?" என்றதும்..

 

"அடப்பாவிகளா! என்னடா இப்படி என் ஹனிமூன் ட்ரிப்பில் கை வைக்கிறீங்க!!" என்று இந்த பாசக்கார கும்பலை பயந்து பார்த்தான் ஆதித்.

 

அதன் பிறகு காலையிலேயே கறிவிருந்துக்கான ஏற்பாடுகள் தடைப்படலாக நடக்க.. விருந்தை முடித்தவனும் அனைவரும் இருக்கும் இடத்தில் "எனக்கு சென்னையில முக்கியமான வேலை இருக்கு. நான் கண்டிப்பாக போகணும். அடுத்து சென்னையில் நடக்கிற ரிசெப்ஷனுக்கு எல்லாரும் வந்துடனும்.. அதற்கு நானும் எங்க அப்பாவும் உங்களை எல்லாம் வந்து தனியாகவே அழைப்போம். இப்போது எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் சென்னை வரை போகணும் எல்லாரும் எனக்கு அனுமதி கொடுங்க… விருந்து நீங்க கொடுத்தா என்ன நான் கொடுத்த என்ன.." என்று ஏதோ பேசி சென்னை என்று பொய் சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு குளுகுளு கொடைக்கானலுக்கு சென்று விட்டான்.

 

மாலைப்போல் கிளம்பியவர்கள் இரவு வந்து சேர்ந்தனர். 

தோட்டத்தின் நடுவே தான் ரெசார்ட் ஒன்றை புக் செய்திருந்தான்.

 

ரெஷார்ட் தோட்டத்தில் இருந்து வந்த பூக்களின் வாசனையும்.. இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும்.. நட்சத்திரங்களுக்கு போட்டியாக ஆங்காங்கு ஏற்றி வைத்த வாசனை அழகு மெழுகுவர்த்திகள் மணத்துடன் அதிகமாக ஒளியை வாரி வழங்காமல்.. குறைவான ஒளி சிந்தும் விளக்குகளுடன் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

 

அதன் நடுவே ஒரு மேஜையும் இருநாற்காலிகளும் போட்டு அதில் அவளுக்கு பிடித்தமான உணவு வகைகள் இருக்க..

அவ்விடத்தின் அலங்காரம் மிக ரம்யமாக இருக்க.. மெல்லிய தென்றல் வீச.. தன்னவளின் இரு கண்களைப் பற்றி அங்கே அழைத்து வந்து "ஹவ் ஈஸிட்?" என்று அவ்விடத்தை காட்ட…

 

அவன் அருகில் வந்தவள், அவனை அணைத்து " சச்ச அ ரொமான்டிக் ப்ளேஸ்.. சோ ஹேப்பி பேபி" என்று அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள்.

 

"இவ்வளவு ரொமாண்டிக்கா நீங்க நிக்.. எனக்கு தெரியாம போச்சே" என்று கூறி அவளை அணைத்துக்கொண்டான்.

 

"இனி தெரிய வச்சுட்டா போச்சு!" என்றவன் அவளை அங்கிருந்து உணவுகளிடம் அழைத்து வந்து அவளை அந்த இருக்கையில் அமர வைத்து அவனே பரிமாற ஒரு வித புன்னகையோடு அவன் செய்வதை எல்லாம் பார்த்து இருந்தாள் மணையாள்.

 

"பயப்படாத தீப்ஸ்... இதையெல்லாம் நான் வெளியில் இருந்து தான் ஆர்டர் பண்ணினேன். நான் சமைக்கல.. இந்த மாதிரி டிஃபரண்ட் டிஃபரண்டா சமைக்க எனக்கு தெரியாது. ஆனால் இப்படி உன்னை அமர வைத்து பரிமாற எனக்கு தெரியும்" என்றவனின் அன்பில் அவள் கரைந்து கொண்டிருந்தாள்.

 

அங்குள்ள எதிர் நாற்காலியில் அவனை அமர வைத்து இவள் பரிமாற அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் தன்னவளை..

அவள் பரிமாறி முடித்தவுடன் மறுபக்கம் நாற்காலியை நோக்கி அவள் செல்ல, அவள் கையை பிடித்து தடுத்து தன் மடியிலேயே அமர்த்தி அவளுக்கு ஊட்டி விட.. நாணத்தோடு அவனைப் பார்த்தவள் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். 

 

பின் அவளும் அவனுக்கு ஊட்டிவிட இருவரும் மாறி மாறி ஊட்டிவிட்டு தங்கள் உணவினை முடித்தனர். அந்த நாற்காலி மேசையை ஓரமாக கணவனின் உதவியுடன் தள்ளிவைத்தாள். 

 

"இந்த இடமே நல்லா இருக்கு நிக். இங்கே ஒரு பெட் கொண்டு வந்து போட்டு நாம படுக்கலாமா?" என்று கேட்க இல்லை என்று தலையசைத்தவனை ஏன் என்று பார்த்தாள் கேள்வியாக..

 

மனைவியை பார்த்து கொண்டே தன் கையில் உள்ள ரிமோட்டை ஆன் செய்யவும் இனிமையான இசை அங்கே தவழ்ந்தது.. அவள் அதிசயித்து பார்க்க…

 

அவளை ஓரமாக ஒரு நாற்காலி போட்டு அதில் அமர வைத்தவன் இத்தனை நாட்களாக தன் மனதில் இருந்து காதல் எல்லாத்தையும் தன் நடனத்தின் மூலம் முதன்முறையாக தன் மனையாளுக்காக ஆடி வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஆதித்.

 

அவன் வீடியோ துறையில் இருந்ததில் பார்ட்டிகளில் ஆடி அவனுக்கு பரிச்சியமே! ஆனால் அதற்கு பிறகு ஆஸ்திரேலியா சென்ற போது கூட இவன் இப்படி ஆடியது இல்லை. ஏனோ இன்று மனைவியுடன் இது மாதிரி தனித்து ஆட வேண்டும் என்று எண்ணம் வெகு நாளாக இருக்க.. அதற்கு இன்று தான் அவனுக்கு நேரம் கிடைத்தது போலும்.

 

ஆடிக்கொண்டே அவளையும் தன்னோடு இழுத்து அவன் ஆட வைக்க.. அவனின் ஆட்டி வைப்பில் அழகாக ஆடினாள் தாரா.

 

அந்த பாடலுக்கேற்ப அவளோட ஒவ்வொரு ஆட்டத்திலும் அவள் சிற்றிடையின் நெளிவு சுளிவுகளும்.. அவள் பெண்மையின் குலுங்கல்களும் அவனும் பித்துக் கொள்ள செய்ய... கிறக்கத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான் நடனத்தை.. கணவனின் கண்களை பார்த்ததும் இன்னும் தன் நடனத்தில் நெளிவு சுளிவுகளை ஏற்றி தன்னவனின் பார்வையை ஒரு கணம்கூட திருப்ப முடியாமல் செய்து கொண்டிருந்தாள் அந்த வசியக்காரி.. ஒரு கட்டத்தில் நடனம் அவள் கைக்கு சென்று விட ஆதித் அமைதியாக நின்று அவளை பார்க்க..

 

மெல்லமெல்ல அவனை சுற்றி சுற்றி வந்து அவள் ஆட ஒரு வழியாகத்தான் போனான் ஆதித்.. ஆழ் மனதில் இருந்த காதல் மெல்ல மெல்ல வெளியில் வந்து தன் காதலியை தன் கண்களால் விழுங்கி கொண்டிருந்தான்.

பின் மெல்ல எழுந்து அவள் சிற்றிடையில் கை வைத்து ஆட்டத்தை நிறுத்தியன் "ஐ அம் சோ என்ஜாய்டு" என்று கண்களில் காதல் வழிய கூறினான்.

 

"ஐ லவ் யூ சோ மச் " என்றவன் அவள் கண்களைப் பார்த்து கூற..

 

"நான் தான் சொல்லணும்! நிறைய நிறைய ஐ லவ் யூ.. இன்னைக்கு நிறைய நிறைய சர்ப்ரைஸ் நீங்க கொடுத்துக்கிட்டு இருக்கீங்க.. இப்படி ஒரு ரெசார்ட்.. அழகான டின்னர்.. உங்க கூட டான்ஸ்.. இதெல்லாம் ரொம்ப நாள் ஏக்கம் எனக்கு. நீங்க அதுக்கு மறுப்பிங்களோனு பயந்து நான் கேட்டது இல்லை. ஆனால் நீங்களே எப்படி எனக்கு ஒரு ப்ளஷண்ட் ஷாக் கொடுத்துட்டீங்க.." என்று அவனை தழுவிக் கொண்டு மூச்சு வாங்க முத்தம் கொடுத்தாள் தாரா.

 

"அதுக்குள்ளே வா?? இன்னும் மிச்சம் இருக்கு தீப்ஸ்.. உன் முத்தத்தை மிச்சம் வச்சுக்கோ.. மொத்தமா எடுத்துக்கிறேன்!" என்று கூறியவன் ஒரு பக்கத்திலிருந்த மெல்லிய திரையை அகற்ற.. அங்கே இரண்டு மெத்தைகளுடன் கூடிய அழகிய மஞ்சனை காத்துக்கொண்டிருந்தது அவர்களுக்காக..

 

அதுவரை ஒரு மோனநிலையிலேயே இருந்தவள் அதனைக் கண்டு நாணத்துடன் அவன் நெஞ்சினிலே முகத்தை புதைக்க.. அவனோ அவளை தள்ளி கண்களுக்குள் பார்க்க…

 

அவனது கண்கள் உணர்த்திடதை அவள் புரிந்து கொண்டவளாக முகத்தை மூடி கொண்டாள். 

அவளை உணர்ந்தவனாக மெல்ல அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.

 

அவள் முதுகுக்குப் பின் இருந்தது அந்த ஒற்றை ஜிப்பை மெல்ல விலக்க.. மென்மையான வெண்ணிற முதுகை கண்டதும் காதல் போய் காமம் தீ பற்றி கொண்டது.

 

மெல்ல மெல்ல அவளின் உடைகளுக்கு அவன் விடைகொடுக்க.. முயலின் துள்ளலுடன் விரிந்த மென்மைகளை அவனது கைகளில்‌ சிக்குண்டு அதன் மென்மையை உணர்த்த.. பிறகுதான் தலைவனின் செயல்புரிய.. வெட்கி அவனை தள்ளிவிட்டாள்.

 

ஆனாலும் தன்னிலை கண்டு வெட்கமேவுற பின் அவனையே ஆடையாக அவள் போர்த்திக்கொள்ள.. அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் ஆதித்.

 

அதன்பிறகு அங்கு வெட்கங்கள் எல்லாம் தூர போக கொஞ்சுல்களும் சிணுங்கில்களும் மட்டுமே கேட்டது.. வெம்மையும்.. கடும் குளிருமாக கணவன் கை காட்டும் ஜாலத்தில் நிமிடத்திற்கு ஒருமுறை தன் உணர்வுகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தாள் தாரா.

 

அவனின் அணைப்பு கூடிக் கொண்டே போக அதில் அவர்கள் உடம்பில் இருந்த மொத்த ஹார்மோன்களும் விழித்துக்கொண்டு பேயாட்டம் ஆடியது. உடல் சிலிர்த்து எழுந்தது.. நாணத்தில் அவள் முகம் செம்மையுற.. அதை ரசித்தவன் தன் நாவினை கொண்டு ருசித்தான். அவனின் சூடான மூச்சுக்காற்று எக்குத்தப்பாய் வெளியேற.. விழிகள் மூடி அதை ரசித்தாள் பெண்ணவள்..

 

மெல்ல அவன் முகத்தை தன் கைகளால் பிரித்தெடுத்து "நிக்.. வேண்டாம்" என்றாள் வெளியே வராத மெதுவான குரலில்..

 

அவனோ "வேண்டாமா...?" என்றான் கிறக்கமாக..

 

"ம்ஹும் வேணாம்.." என்று அவள் மெதுவாக சொல்ல..

 

"பொண்ணுங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தமாமே?" அவளை பின்பக்கமாக அணைத்து அவள் போட்டு இருந்த நீள கவுனின் கொக்கியை முழுவதுமாக கழட்டிக்கொண்டே முதுகில் முத்தமிடத் தொடங்கினான்.

 

அவள் புரியாமல் "யார் சொன்னது? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே?" என்று கேட்க..

 

"அதெல்லாம் உலக மேதாவிகள் சொன்னதுமா.. அவங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்" என்றான் முத்த எண்ணிக்கையைக் கூட்டிக் கொணடே..

 

சூடான மூச்சை காற்றும்.. குளிர்ந்த உதடுகளும் மங்கைக்குள் மாயம் செய்திட.. அவளை அறிந்திடாமல் கண்கள் சொருகியது அவளுக்கு. அவள் தள்ளாடிட அவளின் உதடுகள் தானாய் பிரிந்துக் கொண்டன. சுக வேதனையில் அவள் சுகிக்க.. அவனின் சூடான முத்தங்கள பெருக.. மோகத்தீ பற்றிக்கொண்டது இருவருக்குள்ளும்.. மெல்ல அவளை தன் புறம் திருப்பியவன் அவளின் உதட்டில் திகட்ட திகட்ட தேன் உறிஞ்சினான். 

 

அவளின் உதட்டை உறிஞ்ச, உறிஞ்ச அவளுக்கு தேகமெல்லாம் அனலடித்தது. அவனின் முத்தம் நின்றிடாமல் தொடர.. நங்கையவளோ மூச்சு வாங்க.. சற்று அவளுக்கு இளைப்பாற நினைத்த அவனது அதரங்களோ உதட்டை விட்டு அவளின் நெற்றி, மூக்கு, கன்னங்கள் என்று ஒரு சுற்றடித்து முத்தங்களால் சுழற்றி அடித்தது. அவன் முத்தத்தில் அவள் கிறங்கி இருக்க எப்பொழுது அவளை தூக்கினான்? எப்பொழுது மஞ்சத்தில் கிடத்தினான்? என்று அவள் அறியவே இல்லை..

 

அவனின் ஒற்றை விரலை நீட்டி அவளின் நெற்றியில் தொடங்கிய ஊர்வலம் மேலிருந்து கீழே மெல்லமாய் உரசியப்படி அவளின் மென்மைகளை தாண்டி நாபியில் வந்து நின்றது. அவளோ அந்த உணர்வுகளை தாங்க இயலாமல் அவன் சிகைக்குள் தனது விரலை விட்டு அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

 

அவளின் இடையில் இருந்த அந்த சிறிய மின்னிய ஒற்றை வைரக்கல்லில் அவனை வெறியேற்ற அதை வாயால் கவ்வியவன் இதழ்களால் உரசிட மேனி தகித்தது பெண்ணவளுக்கு..

 

மெல்ல மெல்ல அவளது உடைகளுக்கு விடை கொடுத்தான்.. அதில் அவளின் மென்மைகள் மெல்ல எட்டிப் பார்க்க.. அவள் நாணம் கொண்டு அதை மறைக்க முயல.. அவள் கைகளைப் பிடித்து சிறை செய்தவன்.. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் பல்லவன் சிலையாய் விழுந்தவளை கண்களாலேயே அள்ளி அள்ளி பருகிய அவன்.. அடுத்து அதரங்களாலும் விரல்களாலும் அவளை மீட்டி எடுத்தான் விடியும் வரை... அவளை சுவைக்க சுவைக்க அவளும் சுகத்தில் சுகித்தாள்..

 

 

அவளின் அங்கங்களுக்கு அதிக பாரமாய் இருந்த ஆடைகளை அகற்றிட.. 

அங்கே பல்லவன் சிற்பமாய் அவள் மிளிரந்திட..  

அவனும் அந்த அழகிய சிற்பத்தை செதுக்கும் சிற்பியாய் மாறிட..

இந்த சிற்பத்தை செதுக்கும் ஆயுதங்களாக அவனது விரல்களும் அதரங்களும் சென்றிட..

அவளின் அங்கங்களை அவனோ தன் நாவினால் சுவைத்திட..

காரிகையவளோ மன்னவனின் விளையாட்டில் கண்கள் மயங்கி கிறங்கிட..

அவள் இடைப்பற்றி இன்னும் இறுக்கமாக தன்னுடன் அவன் அணைத்திட..

அங்கே மோக ராகங்கள் தாப ஸ்வரங்களுக்குள் இசைத்திட..

மெல்ல மெல்ல அவளது பெண்மை மலர்ந்திட..

மன்னவன் ஆளுமையில் மங்கையவள் முயங்கி தள்ளாடிட..

கோமகன் காதலாட.. காதலாட..

கோதையவள் அதில் உணர்வுகள் எல்லாம் உச்சமாகி ஆனந்த கூச்சலிட..

அங்கே அழகிய தாம்பத்தியம் அரங்கேறிட…

 

மெல்ல மெல்ல அவளை முழுவதுமாக ஆட்காண்டு இரண்டறக் கலந்து தன் பெருங்காதலை அவளுக்கு உணர்த்தி கொண்டிருந்தான்.

இடையிடையே அவளையும் அவனின் தேவையை பார்க்க வைக்கவும் அவன் தவறவில்லை.

 

ஆதவன் உதிக்கும் தருவாயில் தான் அவளை விட்டு விலகினான் ஆதித். ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்து போயினர் அவ்விரு காதல் கிளிகளும் தங்களை மறந்து…

 

அப்போது கதவு தட்டப்படும் ஓசையில் வேகமாக தன் உடைய சரிபடுத்திக் கொண்டு வெளியே சென்று தாரா பார்க்க..

 

அங்கே "ஹாய் அக்கா டி!" என்று நின்றிருந்தனர் மூன்று தங்கைகளும் பின்னாடி குகன் அதற்கு பின்னால் செந்தில்வேலனும் கதிர்வேலனும் அவர்கள் மனைவியோடு…

 

தாரா அதிர்ந்து நோக்கும் போதே யாரு என்றப்படி வந்தான் ஆதித். இவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். எங்கே தேனிலவு வந்த இடத்தில் குடும்பமாக வந்து நின்றவர்களை என்ன சொல்வானோ என்று பயந்து..

 

அவளின் எதிர்பார்ப்பை தகர்த்து "ஹாய் சிஸ்டர்இன்லாஸ்.. ஹௌ வாஸ் த ஜெர்னி?" என்று ஆர்ப்பரித்தவனை அதிசயமாக பார்த்தாள் தாரா.

 

விழி விரித்த நின்ற மனைவியின் மூக்கை பிடித்து ஆட்டி "ஆஸ்திரேலியா போனா நமக்கு எல்லா நாளுமே ஹனிமூன் தான்! ஆனா இங்க இருக்கிற நேரம் நாம ஏன் கொஞ்சம் டிஃபரண்டா பேமிலி மூன் கொண்டாடக்கூடாது? அதான் காலையிலேயே அவங்கள வரவழைச்சிட்டேன்!" என்றவனை 'என்னா மேக் டா நீ.. நிக்?' என்று தான் பார்த்தாள் தாரா


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top