கண்ணம்மா 17
மறுநாள் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கினார் அருணாச்சலம் தன் படைகளோடு.. அதில் அரசியல் படைகள் ஒரு பக்கம் உறவினர்கள் படைகள் மறுபக்கம்!!
செந்தில்வேலன் குடும்பம் சற்று தடுமாறி தான் போனது அவர்களை எப்படி உபசரிக்க என்று!!
அவர்களின் முகத்தைப் பார்த்து சூழ்நிலையை புரிந்த அருணாச்சலம் "கவலைப்படாதீங்க சம்பந்தி.. வரும்போதே செழியன் சொன்னான் மதுரையிலேயே ஒரு வீடு பார்த்து முடிச்சிடுங்க. இப்படி நீங்க படையோடு போனால் அவங்க பாவம்னு!;அதனால ஒரு வீட்டை பார்த்து முடிச்சிட்டோம். இப்போ எங்களோட ஜாகை அங்கதான்" என்று மகனைப் பார்த்தார் மகன் ஏதும் சொல்கிறானா என்று.
"செழியன் சொன்னா சரியா தான் இருக்கும் பா" என்றான்.
"செழியன் என்ன சொல்லி அனுப்பி இருந்தான்னா.. பெரியப்பா இவ்வளவு பெரிய படையுடன் நீங்க எங்க போனீங்கனா பாக்குற அவங்களுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கும். இப்பதான் ஆதித் அங்க பேசி பேசி ஒரு வழியா சமாதானப்படுத்தி இருக்கான். நீங்க போய் பயமுறுத்தி வைக்காதீங்க.. மதுரையில் நான் ஒரு வீடு பாக்குறேன் இப்போதைக்கு அந்த வீடு கொஞ்ச நாளைக்கு பயன்படுத்திக்கலாம். இவங்க கல்யாணம் எல்லாம் முடிஞ்சதும் அதை சும்மா விட வேணாம். நம்ம கட்சி அலுவலகமா பயன்படுத்திக்கலாம்" என்றதும்
செழியனை வாஞ்சையுடன் பார்த்தார் அருணாச்சலம்.
இப்படி பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும் தன் அரசியல் வாரிசாகவே காணும் அவனை பிடிக்காமல் போகுமா என்ன அருணாச்சலத்திற்கு!
"கல்யாணம் சென்னையில் வைச்சு சும்மா பிரம்மாண்டப்படுத்தலாம் சம்பந்தி.. " என்று வரிசையாக அவர் திட்டம் போட்டுக் கொண்டு செல்ல அதில் கொஞ்சம் நடுக்கமே வந்தது செந்தில்வேலன் கதிர்வேலனுக்கு.
ஏனென்றால் அவர் கூப்பிடுவது எல்லாம் மிகப்பெரிய அரசியல்வாதிகள்! அதிலும் ஸ்டேட்டு விட்டு ஸ்டேட் தாண்டி.. கூடவே அத்தனை தொழிலதிபர்களையும் சினிமா நட்சத்திர பிரபலங்களையும் வெள்ளி திரையில் மின்னுபவர்களை எல்லாம்!!
இதை கேட்கும் பொழுது சந்தோசமாக இருந்தாலும் தன் மகளின் திருமணத்தில் இவர்கள் எல்லாம் இடம் பிடித்தால் கண் குளிர நாம் பார்க்க முடியுமா? என்பதே அங்கு பெற்றவர்கள் வளர்த்தவர்களின் நியாயமான கேள்வி!!
"அப்பா.." என்று ஆதித் அவரை அடக்க..
"என்ன தம்பி.. நான் சொன்ன லிஸ்ட் பத்தலையா? இன்னும் வேற யாராவது சேர்க்கணுமா? உனக்கு தான் பாரின்ல நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்களே தம்பி.. அவங்கள இறக்கிவிடலாம்! விசா டிக்கெட் செலவு எல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது.. நாம பாத்துக்கலாம்!" என்று அவர் இன்னும் அடுக்க தலைசுற்றி போயினர் தாராவின் குடும்பத்தினர்.
அம்மாவை திரும்பி பார்க்க சந்திரிக்காகவோ அப்பா சொல்வதில் என்ன தவறு? மகனின் கல்யாணம்.. அதுவும் ஒற்றை மகனின் கல்யாணம் பிரம்மாண்டமாக நடத்துவதில் தவறில்லை என்பதுதான் அவரும் மகனை பெருமையாக பார்த்திருந்தார்.
தந்தையின் அருகில் வந்து அமர்ந்தவன் "இவ்வளோ பெரிய பெரிய ஆட்களை எல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட்டா உங்களால என் கல்யாணத்தை கண் குளிர பார்க்க முடியுமா? மகிழ்ச்சியோடு கலந்துக்க முடியுமா? இல்ல வரவங்க போடுறவங்களை எல்லாம் கவனிக்கிறதுல உங்க கவனம் போகுமா?" என்று கேட்டான்.
"நியாயமான கேள்வி!" என்று செழியன் நினைத்தாலும் இதில் எதிலும் அவன் மூக்கு நுழைக்கவில்லை. இது அவன் அண்ணனின் வாழ்க்கை அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று அமைதியாக அவதானித்தபடி அமர்ந்திருந்தான்.
அருணாச்சலம் ஒரு நிமிடம் திகைத்து "அது.. அதுக்கு தான் நம்ம ஈவென்ட் ஆட்கள் இருக்காங்களே தம்பி" என்றதும் "அது எப்படி பா? ஈவன் ஆட்களுக்கு எந்த பிரபலத்தை எப்படி உபசரிக்கணும்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேட்டான்.
இம்முறை ஆமாமில்ல என்று யோசித்தார். "அது மட்டும் இல்லை பா.. சிஎம் வேற கூப்பிடறீங்க அவர் பக்கத்துல தான் நீங்க இருக்க முடியும்! சொந்த மகன் பக்கத்துல நீங்க வந்து நிற்க முடியுமா? அதுவும் மணமேடையில் என்னருகே.." என்றதும் மகன் எதிர்பார்ப்பது புரிந்தது.
"சரி தம்பி என்ன செய்யலாம்னு சொல்லு.. சிறப்பா செஞ்சிடுவோம்!" என்று கேட்டார்.
"கல்யாணத்தை மதுரையிலேயே வச்சுக்கலாம்" என்றான். அனைவருமே திகைத்தனர் அவர் மீண்டும் ஆரம்பிக்கும் போது, அவர் கையை பற்றியவன் "நம் சொந்தங்களை மட்டும் கூப்பிடுவோம் பா.. இதில் அரசியலுக்கு இடம் இல்லை! அதே மாதிரி தாரா வீட்லயும் அவங்க சொந்தங்களை கூப்பிடுவோம். எவ்வளவு பிரம்மாண்டமான நடத்துறோமோ அதை இங்கே நடத்தலாம். ஆனால் அரசியல் உள்ள கிடையாது! அது சென்னையில் என்றைக்கு ரிசப்ஷன் வச்சு காட்டுங்க.. அப்ப நான் தலையிட மாட்டேன். அது உங்க விருப்பம்!" என்றதும் மகன் சொல்வதும் ஏதுவாக இருக்க மனைவியை பார்க்க அவரும் சம்மதமாக தலையசைக்க ஒத்துக் கொண்டனர்.
ஆதி தாராவை பார்க்க அவள் முகத்தில் இப்பொழுதுதான் சற்று முன் இருந்த பயம் எல்லாம் தெளிந்து மகிழ்ந்து தெரிய.. 'நான் பார்த்துக் கொள்கிறேன்!' என்பதாய் கண்மூடி திறந்தவனுக்கு யாரும் அறியாமல் பறக்கும் முத்தத்தை ஒன்றை அளித்தாள்.
அதன்படி முதல் நாள் வரவேற்பு அமர்க்களப்பட்டது. அழகிய பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருமண மண்டபமா இல்லை பூஞ்சோலையா என காண்பவர் விழி விரித்து அதிசயக்கும் வண்ணம் வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த திருமண மண்டபம்.
அத்தனை பாதுகாப்பு வேறு..
மதுரையை கலக்கும் வண்ணம் திருமண ஏற்பாடுகளை செய்து இருந்தார் செந்தில்வேலன். அவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டு செலவில் பாதி தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கவரராக கூறிவிட்டார் அருணாச்சலம். ஆனால் செந்தில்வேலனே அறியாமல் அவர்களுக்கு அதிக செலவில்லாமல் பார்த்துக் கொண்டான் ஆதித்.
மிக செல்வாக்கான அரசியல்வாதி வீட்டு இளவரசனுக்கும் மற்றும் மதுரையில் சில தொழில்களை நடத்தும் பிரபல தொழிலதிபர் வீட்டு இளவரசிக்கும் நடக்கும் திருமணம்.
ஆம்.. ஒரு ராஜா வீட்டு திருமணம் மாதிரி தான் எல்லா ஏற்பாடுமே. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி.. இப்போ திருமணம் வரை.
முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்பு ரதம் போல வடிவமைக்க பட்ட வண்டியில் , முத்து வேலைப்பாடு அமைந்த ஆழ்ந்த நீல நிற ஷர்வானியில் , தங்க நிற தலைப்பாகை அணிந்து முத்துக்கள் சரங்கள் சரங்களாக மின்ன, ராஜா களையில் கம்பீரமாக, அதே சமயம் கல்யாண களையும் முகத்தில் சொட்ட கந்தர்வனை போன்ற அழகுடன் வந்து இறங்கினான் ஆதித் நிகேதன். திருமண விழாவிற்கு வந்திருந்த அனைத்து உறவினர்களும் பார்த்த விழி பார்த்த வண்ணம் இருந்தது அவனை பார்த்து.
பெற்றோரும் பிள்ளையின் இந்த அலங்காரத்தில் கண்களில் மின்னும் பெருமிதத்தோடு, ஆசை பொங்க பார்த்திருந்தனர் பெற்றோரிடம் ஆசி வாங்கியவன் அலங்கரிக்கப்பட்ட மேடையை நோக்கி செல்ல.. சட்டென்று அவனை மறைத்தது பெண்கள் கூட்டம் ஒன்று.
அவன் ஆர்வத்தோடு பார்க்க அதிலிருந்து அவனது மூன்று மச்சினிச்சிகளும் முழு அலங்காரத்தோடு வெளியில் வந்து அவனுக்கு வெல்கம் டான்ஸ் ஆடினர்.
//கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ..
அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன..
பள பளவென வந்தான்
வந்தான் பாரு..//
என்று அவர்கள் பாடிக்கொண்டு ஆலம் எடுத்து அவன் முன்னே ஆடிக்கொண்டே செல்ல சிரித்துக் கொண்டே பின்னால் சென்றான் ஆதித்.
மேடையில் நின்றாலும் தன் அழகு தேவதையை தேடி தேடி விழிகள் சுழன்றது ஆதித்க்கு. மணமகள் அறை பக்கம் பார்வை சென்று மீண்டு மீண்டு வர சற்று எதிர்பார்ப்போடு இருந்தான், முழு அலங்காரத்தில் அவனின் அழகு தேவதையை காண..
யாரும் எதிர்பாராத விதமாக அவனின் விழி சென்ற எதிர் பக்கத்தில் இருந்து வந்ததது ஒரு பல்லாக்கு. அதிலிருந்து ராஜ நிமிர்வுடன் இறங்கினாள் தாரா. அவனின் ஷர்வானிக்கு பொருத்தமாக, அதே ஆழ்ந்த் நீல நிற பட்டில் வெள்ளி சரிகையால் நெய்யப்பட்டு ஆங்காங்கே வைரங்கள் போல மின்னிய விண்கற்கள் பதிக்கப்பட்டு, அவளின் அழகை மெருகூட்டியது. அவள் அணிந்து இருந்த வைர நகைகளும் அவளின் அலங்காரமும் தேவலோக காந்தர்வ கன்னி போல தோன்றினாள்.
கம்பீர நடையுடன் தான் மேடை ஏறினாள் பெண். இவளுக்காக வெற்றிவேலன் குகன் தலைமையில் சிறு ஆண்கள் கூட்டம் ஆடியது.
//எட்டூரு எட்டும் படி
தட்டுங்கடா மத்தளத்த பாச
மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த…
அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு ஹல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு..//
என்று ஆடியப்படியே அவளை மேடை நோக்கி அழைத்து வந்தனர்.
இருவரும் தங்கள் இணைகளின் அலங்காரத்தில் மெய் மறந்து ஒரு நிமிடம் நிற்க.. அதற்குள் இளைஞர்களின் கூட்டம் ஓவென்று சத்தமிட.. செந்தில்வேலன் இரு மோதிரங்களை கொண்டு வந்து கொடுக்க.. அதனை மாற்றிக் கொண்டனர்.
அதற்கு பின் அந்த மண்டபத்திலேயே இவர்களுக்கு நிச்சய தாம்பூலம் வாசித்து இரு சம்பந்திகளும் மாற்றிக் கொண்டனர்.
இரவு உணவு உண்டுக் கொண்டிருந்தவளை கைப்பிடித்து தனியாக இழுத்துச் சென்று விட்டான் நாயகன்.
"என்னங்க இது சாப்பிட்டது கையை கூட கழுவல.. இப்படி இழுத்திட்டு வருவீங்க.. ஒரு நிமிஷம் இருங்க" என்று அருகில் இருந்த பைபில் அவள் கைகளில் படிந்திருந்த சாஸ்சை கழுவ சென்றவளை பிடித்து தடுத்தவன், அவள் ஒவ்வொரு விரலையும் தன் வாய்க்குள் விட்டு சுவைத்து சுவைத்து தன் நாவாலேயே சுத்தம் செய்ய.. அவனின் இந்த காதல் விளையாட்டுகளில் அவளும் மயங்கி தன் மேல் பற்களால் கீழ் உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். தொழிலில் எப்படி பேசி பேசி தன் காரியத்தை சாதித்து கொள்வானோ.. அதே போல் காதலிலும் அவளிடம் தன் காரியத்தை மெல்ல மெல்ல சாதித்து கொண்டிருந்தான்.
அவள் பற்களிடமிருந்து உதட்டை விடுதலை செய்தவன் இப்போது அச்செவ்விதழ்களில் தன் ஒற்றை விரல் கொண்டு வருடினான்.
ஆதித்குள் அடங்கி இருந்த மோக நெருப்பு எரிமலை போல் வெடித்து சிதற, தாராவின் கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து முன்னோக்கி அவளை இழுத்தான். அவனின் சூடான மூச்சு காற்று தாராவின் முகம் முழுதும் பரவ, முன்னோக்கி அவளை இழுத்தான்.
தாராவின் இளம் இதழில் அழுத்தி கவி எழுதினான் ஆதித் நிகேதன் தன் இதழ்கள் கொண்டு.
அவளும் அவனின் மேல் உதட்டை கவ்வினாள். இருவரது உதடுகளும் ஒன்றோடு ஓன்று பிணைந்து பல்லில் கடி பட்டு உமிழ் நீர் பறிமாற துவங்க, அவளின் கண்களில் தேம்பி இருந்த கண்ணீர் வழிந்து இருவரது உதட்டையும் நனைக்க, இரண்டு நிமிடத்திற்கு பிறகு இருவரது உதடுகளும் ஒன்றை விட்டு ஒன்று விலகியது.
இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது. தாராவின் கண்களிலும் வெட்கம் விலக, இதழில் மெல்லிய சிரிப்பு!!
"யாராவது இப்படி நம்மளை பார்த்தாங்க அவ்வளவுதான்.." என்று அவள் சொல்லி சிரிக்க…
"இது ஒரு கிக் தீப்ஸ்…" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது..
"உங்களுக்கு கிக்கா இருக்கலாம் எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பக்குனு தான் இருக்கு பங்கு.. கல்யாணமாகாத கன்னி பையன்களும் இங்கன இருக்கோம் யா பங்கு.. பார்த்து பதமா நட.. பங்கு முடிஞ்சதுனா தீபுவ அனுப்பி வைய்ங்க.. கீழ தீபுவ தேடுறாய்ங்க.." என்று குரல் மட்டும் வர சற்று தள்ளி இவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான் வெற்றிவேல்.
"பங்கு.." என்று அசட்டு சிரிப்பு சிரித்தான் ஆதித்.
"ஏய் வர்சு.." என்று வெற்றி அழைக்க அவளுக்கு முன் "சொல்லுங்க மாமா.." என்று வந்து நின்றாள் விஷாகா.
"உங்க அக்காவ அழைச்சிட்டு போ" என்றவன் "நீங்க வாங்க பங்கு" என்று ஆதித் கையை பிடித்து இழுத்து சென்று விட்டான்.
மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் அழகாய் விடிந்தது திருமண வேளை!
அழகு தேவதையாய் அன்ன நடையிட்டு வந்தாள் தீபதாரா. ஊரும் உறவும் அவளின் அழகில் வியந்து பார்த்தது.
ஊர் பார்வையே இப்படி என்றால் உரியவனோ, கை மட்டுமே ஐயர் சொன்ன மந்திரங்களுக்கு ஏற்ப செய்துகொண்டிருக்க, கண்களில் காதல் வழியச் சுற்றுப்புறம் மறைய தன்னவள் அலங்காரத்தை அணுஅணுவாக ரசித்து கொண்டிருந்தான் ஆதித்.
ஆதித்தின் பார்வை தாராவின் மெல்லிடையில் பதிய ஏற்கனவே தடுக்கி விழுந்தவன் இப்பொழுது முற்றிலுமாக அந்த மெல்லிடையில் வீழ்ந்தான், ஒன்றில் வீழ்ந்தால் அதிலிருந்து மீள்வதே மனித இயல்பு ஆனால் மெல்லிடையாளின் அந்த மெல்லிடையில் விழுந்தவன் , வீழ்ந்தவன் …. மீண்டும் மீண்டும் அதில் புதையவே ஆசைப்பட்டான் . இவ்வகை ஆசை காதலில் மட்டும் சாத்தியமோ??
பெற்றோர்களின் ஆசிர்வாதத்தோடு சுற்றும் உறவுகளின் சந்தோஷ வாழ்த்தோடு.. தன் காதலியை யாரும் அறியாமல் மோதிரம் மாற்றிக் கொண்ட சட்டபூர்வமான மனைவியை.. இங்கே அக்னி சாட்சியாக தன் சகதர்மினியாக மாற்றிக் கொண்டான் ஆதித் நிகேதன்.
தாராவின் விருப்பப்படி சடங்கு சம்பிரதாயங்கள் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டு திருமணம் விருந்து கோலாகலமாக நடைபெற்றது.
அன்றிரவு தாராவின் வீட்டிலேயே அவர்களுக்கு மீண்டும் ஒரு முதல் இரவு!
கண்களில் காதல் வழிய பட்டு வேஷ்டி சட்டையில் பந்தமாக நின்ற கணவனை பார்த்தவளின் கண்களில் அவள் கட்டுண்டு போக...
ஆனால் அவனோ அவளின் சம்மதத்தை நாடி நிற்க..
"இது என்ன புதுசா? என்ற அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் "இனி எல்லாம் அப்படித்தான்!" என்றான் கண்களை மூடி திறந்து!
"நீ என்னுள் வந்து வெகு நாட்களாகி விட்டது.. உன் அன்பில்.. காதலில் கரைந்து , நான் அழிந்து நாம் ஆகி நாட்கள் கடந்து விட்டது. இனி என்ன கேள்வி " என்று தன் சிறகு இமைகளை அவள் மூடி திறந்து சம்மதம் தெரிவிக்க... அதற்கே காத்து இருந்தது போல, கரை புரண்ட காதலில் சிக்கி அவளின் இதழ்களை விழுங்கி அமிர்தம் பருகி தேவனாகி போனான் ஆதித்..!!
அவளை கட்டிலில் கிடத்தி, தன் விரல்கள் கொண்டு வருட.. அவன் விரல்களின் வித்தையை உணர துவங்கியவளின் கண்கள் மெல்ல சுகத்தில் மூடி கொண்டன... அவள் மேனி எங்கும் ஊர்ந்து செல்லும் அவன் விரல்களை தடுக்க மனமின்றி லயித்து இருந்தாள் தாரா.
காதோரம் அவன் பேசிய காதல் மொழிகளில் மேனி எங்கும் அதிர்வலைகள் பரவ அதை தாங்க இயலாதவலாய் தன் இதழ் கடித்து சமன் படுத்தினாள் மாது.. அவள் புடவை விலக்கி வெண்ணெய் என வழு வழுத்த இடையில் நுழைந்து நாபியில் விளையாடிய அவன் விரல்கள், பின் இடுப்பில் அழுத்தமாக பற்ற.. மெல்ல முனகல் சத்தம் மட்டுமே பெண்ணிடம்.
அவளை இன்றி யாரும் தொடாத அங்கங்களில் அவன் விரல்கள் எல்லையை மீறி கொண்டிருக்க.. என்ன அதிசயம் தடுக்க மனமில்லமால்... சுகத்தில் சுகித்து கொண்டிருந்தாள். அவன் தேடலில் இவள் மூச்சு வேக வேகமாய் வெளி வர.. மெல்ல அணைத்து "ரீலாக்ஸ்.. தீப்ஸ்" என்று நெற்றி முட்டி மூக்கு உரசியவன்... சிவந்து மின்னிய கன்னங்களில் தன் கன்னம் உரசி இவனுள் இருக்கும் வெப்பத்தை அவளுக்கு கடத்த மோக தீ அவளையும் தொற்றி கொண்டது...
மெல்ல அவனின் விரல்களோடு அவன் இதழ்களும் போட்டி போட்டு கொண்டு முத்த ஊர்வலம் நடத்த.. இதுவரை அறியதா உணர்வுகள் உடல் முழுவதும் அலையென பரவி நடுக்கம் கொண்டவள், அவனை இறுக அணைத்து கொள்ள, அவனை தழுவியவனின் கைகள் அவள் முதுகில் கோலமிட்டு, தாபத்தை ஏற்றிவிட.. மோக கடலில் மூழ்கி முத்தெடுக்க தொடங்கினான். காதலோடு காமத்தையும் அவன் கையில் எடுக்க, அக்கணைக்கு எதிரே சமர் செய்ய முடியாமல் அவனோடு ஒன்றி, அவனும் அவளும் மாறி அங்கே அவர்கள் பிறந்தார்கள்.
ஒரு ஜோடி தங்கள் காதல் கை கூடிய சந்தோஷத்தில் மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்க..
மற்றொரு ஜோடி என்ன செய்கிறது என்று பார்ப்போம்..
வெற்றிவேல் தூக்கம் வராமல் புகைத்தப்படி வெளியில் உலாவிக் கொண்டிருக்க.. அவன் முன் வந்து நின்ற விசாகாவை பார்த்து திடுக்குற்றவன் "இப்படி குட்டிச்சாத்தான் போல முன்னால நிக்கிற.. அறிவு இல்ல குட்டி உனக்கு? யாராவது நம்மை இப்படி பார்த்தால் என்ன நினைப்பாய்ங்க.." என்று அவள் தலையிலேயே குட்ட..
"நான் ஒன்னும் குட்டிச்சாத்தான் இல்ல.." என்ற தலையை தேய்த்துக் கொண்டவள் "அப்புறம் குட்டி பொண்ணும் கிடையாது மாமா" என்றாள் மிடுக்கோடு.
"அப்புறம் பெரிய பொண்ணோ??" என்று அத்தனை கேலி அவன் குரலில்.. அதில் தூண்டப்பட்டவள் அவனை முறைத்து நிற்க..
அவனும் இகழ்ச்சியாக அவளைப் பார்த்து தம்மை உள்ளே இழுத்து வெளியே விடும் முன் அவளின் செவ்இதழ் அவனின் முரட்டு இதழ்களை கவ்வியது.
"ஹேய்.." என்று அவன் பதறி விலகும் முன், அவளின் விரல்கள் அவனின் முகத்தை பிடித்துக் கொள்ள.. சிகரெட்டின் புகை அவள் உதடுக்குள் நுழைய, பதட்டத்தில் விசாகா வேகமாக புகையை உள்ளுக்குள் இழுக்க, நெஞ்சு எரிச்சலில் இருமி கண்கள் சிவந்து கலங்கியது. சட்டென விலகியவன் "ராட்ஷஸி.. ராட்ஷஸி.. அறிவு இருக்கா டி உனக்கு? என்ன எல்லாம் பண்ற.. ஐயோ.. மெதுவா… குட்டி” என்று வெற்றி அவளின் தலையை தட்டி விட்டான்.
கண்கள் கலங்க இருமிக் கொண்டே அவனைப் பார்த்தவள் "நான்தான் சொன்னேனே மாமா.. அஞ்சு வருஷம்.. மறந்துடாதீய்ங்க.." என்ற படியே வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாள் என்று நினைத்தவன் அவளின் இந்த செயலில் அதிர்ச்சி விலகாமல் நின்றான்.
