கண்ணம்மா 15

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 15

 

"ஏன்டி வைதேகி.. என்ன டி இவரு அய்யனார் கணக்கா இப்படி நிக்கிறாரு?" என்று மருமகனின் இந்த புதிய தோற்றத்தை சற்று நெகழ்ச்சியுடன் பார்த்தவாறு அருகில் நின்ற வைதேகியின் கையை இறுக்கமாக பார்த்துக் கொண்டார் மரகதவல்லி.

 

வைதேகி கூட அப்படித்தான் இருந்தது. 'இதுவரை சிரித்துக் கொண்டே அமைதியாக மூன்று நாட்களாக வீட்டில் வலம் வந்தவனா இவன்?' என்று யோசிக்க வண்ணம் இருந்தது அவனின் தோற்றம்!

 

அவன் மருமகன் என்றதுமே வெற்றிவேலுக்கு அத்தனை கோபம் வர மாமன்மார்கள் இருவரையும் முறைத்து பார்த்துக்கொண்டு "மருமகனு ரொம்ப ஆடாத பங்கு! உனக்கு முன்னாடியே இத்தனை வருஷமா நான் தான் வந்து வீட்டு மருமகனே இந்த பெரிய மனுசங்க ரெண்டு பேரும் சொல்லிகிட்டு இருந்தாய்ங்க.. இப்ப ஒன்னைய சொல்றாயங்க.. நாளைக்கு இன்னொருத்தனை.." என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டை காலரை எக்கி பிடித்திருந்தான் ஆதித்.

 

"என்னடா ரொம்ப பேசுற! பேசுற வாய் அடுத்த பேச்சுக்கு இருக்காது தெரியும்ல.. என்ன ஃபாரின்ல இருந்து வந்தவன் டீசண்டா இருப்பான் நினைச்சியோ? நானெல்லாம் சென்னை.. ரொம்ப லோக்கல்!! இறங்கி அடிச்சேன்னு வச்சுக்கோயேன்.. மொவனே..! ஏற்கனவே இப்படித்தான் ஒருத்தனை இறங்கி அடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் ஏதோ நாமளும் நல்லவனா இருக்கலாமேன்னு அமைதியா இருந்தா.. ரொம்ப சீண்டுற? உரிச்சு கட்டிடுவேன் பாத்துக்கோ!" என்று கூறுபவன் சற்று பயத்தோடு பார்த்தாலும் அவன் கையை தட்டிவிட்ட வெற்றிவேல்..

 

"அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்? இத்தனை நாள் வரைக்கும் தீபுவ எனக்குனு தானே சொல்லி பேசிட்டு இருந்தாய்ங்க. இப்போ உனக்குனு சொல்றாய்ங்க! இத நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?" என்றதும் கண்களை இறுக்க முடித்திருந்தவன் "அட கூறு கட்ட எருமை மாடு" என்று அவனை திட்டினான் ஆதித்.

 

"ஏய்.. என்ன.. என்ன.. நீ பாட்டுக்கு வந்து உன் இஷ்டத்துக்கு என் புள்ளய திட்டுறவன்?" என்று அழகு மீனாள் பாய்ந்து வர.. அவர் உற்றுப் பார்த்து உதட்டில் ஒரு விரலை வைத்து "உஷ்.!! அமைதியா இருக்கணும் இங்க.. இவ்ளோ பேச்சுக்கும் ஆன்ட்டீஸ் அமைதியா இருக்குற மாதிரி நீங்களும் அமைதியா இருங்க.. இது எனக்கும் இவனுக்கும் உள்ள பிரச்சனை! அதை நாங்க பார்த்துக்கிறோம்" என்றவன் வெற்றிவேல் புறம் திரும்பினான்.

 

"உன்னை மருமகனா ஆக்கிக்கலாம்னு தான் சொல்லிருப்பாங்க. ஆனா நான் தீப்ஸோட புருஷன்! உனக்கு எனக்கு வித்தியாசம் இருக்கு பங்கு.. இன்னொரு முறை பேச்சுக்கு கூட நீ இப்படி சொன்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சொன்னது தான்.. அடுத்து பேச உன் வாய் அதுல உள்ள பல்லோ நாக்கோ எதுவும் இருக்காது!" என்றதும் அமைதியாக இருந்தான் வெற்றிவேல்.

 

பொதுவில் அவனும் கெட்டவன் இல்லையே..!! இத்தனை நாள் வரை தனக்கென்று இருந்த தான் கட்டிக் கொள்ள நினைத்த முறைப்பெண்ணை இன்று வேறொருவன் தனக்கு சொந்தம் என்று வந்து நின்றால் எந்த ஆண்மகனுக்கு அதனை தாங்கிக் கொள்ளும் இயலும்?

 

தாய் பெண் மாமன் பெண்ணின் மீது உள்ள பாசம் என்பது வேறு! அதை தாண்டி அவளின் மீது கொண்ட உரிமை என்பது வேறல்லவா? பாசம் என்பது எப்பொழுதும் இருக்கும். ஆனால் உரிமையை ஒருவன் தட்டிப் பறித்தால்.. அது எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

 

ஆனால் இங்கு நிதர்சனம் வேறவாக அல்லவா இருக்கிறது. அவளுக்குமே அவனைத்தான் பிடித்து திருமணம் ஏற்கனவே முடித்திருக்க.. இனி அதில் தலையிட்டால் இம்மாதிரி வீண் பேச்சுகளும் சண்டைகளும் கூடவே இந்த உறவையே இழக்க நேரிடும் என்ற நிதர்சனத்தை புரிந்து வெற்றிவேல் தன் மூச்சை இழுத்து ஆழமாக விட்டு சட்டையை நீவிக் கொண்டு ஆதித்தை பார்த்தவன் இடது கையால் அவனை ஒதுக்கிவிட்டு "சரிங்க மாமா.. இதோ உங்க மூத்த மருமகன் சொன்ன மாதிரி அவரே மூத்த மருமகனாக.. ஏன் மகனாக இருந்துட்டு போகட்டும். ஆனா.. நானும் இந்த வீட்டு மருமகனாதான் வருவேன். அதான் ஒன்னுக்கு மூணு பொண்ணுங்க இருக்குல.. அதுல ஏதாவது ஒரு பொண்ணு எனக்கு கட்டிக் கொடுங்க! நான் கேட்கிறதுல தப்பு இருக்கா? சொந்தத்துல பொண்ணு கொடுத்து எடுக்கறது நம்ம சாதிசனத்துல ஒன்னும் புதுசு இல்லையே.. அதுலேயும் மாமன் பொண்ணு அத்தை பையன் இந்த முறையும் புதுசு இல்லையே?" என்று கேட்டதும் அவர்களும் என்னதான் செய்வார்கள்? சரி என்று சொல்வதை தவிர…

 

அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சரி என்ற தலை ஆட்ட..

 

"கொஞ்சம் நிறுத்துறீங்களா? உங்க பாலாவதியான பழக்கத்தை!" என்று கர்ஜித்து இருந்தான் ஆதிதி நிகேதன்.

 

"இவனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி கேக்குறான். சரி! இதே உங்க பொண்ணுக்கு புடிச்சிருக்கான்னு கேக்குறீங்களா? உங்களுக்கு உங்க பிள்ளைகளை விட உங்க தங்கச்சி புள்ளை ரொம்ப முக்கியம்!! நீங்க கொடுத்த வாக்கு முக்கியம்!! உங்க சமூகத்துல உங்க கௌரவம் முக்கியம்!! ஆனால் அந்த பொண்ணோட வாழ்க்கை முக்கியம் இல்ல.. அப்படித்தானே??" என்றதும் அனைவரும் சற்று சங்கடமாக உணர்ந்தனர். உண்மையும் அதுதானே?

 

தங்கள் கௌரவம் முக்கியம்!

 தங்கள் வாக்கு முக்கியம்!

தங்கள் சமூகத்தில் தங்கள் பெயர் மாசு படாமல் இருப்பது முக்கியம்! என்று முக்கியம் என்று மற்ற சில்லறை தனத்தை எல்லாம் முக்கியமாக என்னும் இவர்கள் முக்கியமாக தன் பெண்ணின் வாழ்க்கையை பார்க்க மறுக்கிறார்களே?

 

ஜாதி பணம் அனைத்தையும் தாண்டி பாசம் நேசம் காதல் அன்பு இதையெல்லாம் உணரவே மறக்கும் இம்மாதிரி பெற்றோர்களும் இன்னும் பூமியில் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! அவ்வளவு ஏன் இதே இந்த சமூகத்திற்காக ஜாதிக்காக எவனோ நாலு பொழப்பில்லாத பன்னாடைகள் கிளப்பி விடும் அந்த வெறியை.. ஜாதி வெறியை தன் உடம்பில் ஊற்றி தன் ரத்தத்தையே தன் வாரிசையே கொல்லும் தந்தைமார்கள் தான் எத்தனை? எத்தனை?

 

இம்மாதிரி ஆணவ கொலைகளுக்கு பலியாகி தன் காதலை கனவை வாழ்க்கையை கடைசியில் உயிரையே தொலைத்த இளைஞர்கள் இளைஞிகள் தான் எத்தனை? எத்தனை?

 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று முண்டாசு கவிஞன் பாடினான் அன்று!!

 

ஆனால் அவன் இருந்திருந்தாலோ என்று தணியும் எந்த ஜாதி வெறியும் மோகமும் என்று பாடியிருப்பானோ?

 

பாடி இருக்க மாட்டான்.. அவன் சொல்லின் வீரியத்தை செயலில் காட்டி இருக்கவும் கூடும்!!

 

ஆதித்தின் இந்த பேச்சு அனைவருக்கும் புரிந்துதான் இருந்தது. ஆனாலும் மனது ஏற்க மறுத்தது!! அதையும் தாண்டி தங்கை மகன் மீதான பாசம் இத்தனை நாட்களாக மருமகன் என்று அழைக்கப்பட்டவனை எப்படி நாமே தள்ளி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் இந்த பாசமிகு தாய் மாமன்கள்.

 

தாங்கள் கூட செய்ய தவறியதை ஆதித் செய்கிறானே என்று இரு அன்னை மார்களும் பார்த்திருந்தனர்.

 

என்னதான் ஆண்களின் இந்த குடும்பப் பெயர் கௌரவம் இது எல்லாத்தையும் பெண்கள் பெரும்பாலான நேரத்தில் தூக்கி சுமப்பதில்லை!!

 

 ஒரு பெண்ணின் மனது பெண் இருக்கு புரியும் என்பது போல தன் மகளின் வாழ்க்கையை தான் முக்கியமாக பார்ப்பார்கள். அதனால் இன்று ஆதித்தின் பக்கமே அவர்கள்.

 

"இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம். ண்ணே.. நீங்களாவது பேசுங்க. நீங்களும் இவன வாய் நிறைய மருமகனே மருமகனே தானே கூப்பிட்டு இருந்தீய்ங்க! இன்னைக்கு யாரோ ஒருத்தன் வந்து பேசினா.. அவன் சொல்றது நியாயமா பாடுது. நாங்க சொல்றது தப்பா படுதோ?"'என்று அண்ணன்களிடம் சீறினார் அழகுமீனாள்.

 

"ஏன் நீங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு ஐய்த்த மாமன் மகளா தான் இருந்தீய்ங்க.. உங்ககிட்டயும் இப்படித்தானே பேச்சுவார்த்தை எல்லாம் நடந்து கல்யாணம் கட்டி வந்தீங்க.. இப்ப என்ன நீங்க எல்லாம் சிறப்பா வாழலையா? எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க! நான் வச்சிருக்கிறதே ஒத்த புள்ள.. அந்த பிள்ளைக்கு மனசு நெறைஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா? அதுவும் என் சொந்தம் விட்டு போகக்கூடாது அண்ணன் பொண்ணுங்கள கட்ட நினைக்கிறது தப்பா?" என்று அவர் வியாக்கியானம் பேச.. அதில் இன்னும் பேச்சடைத்து நின்றனார் அக்குடும்பத்தினர்.

 

அப்பத்தாவும் அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வந்தவர் மகளின் பேச்சை கவனித்து விட்டு "என்னடி ஆத்தா இப்படி சத்தம் போட்டு இருக்கிறவ.. எதுக்கு உங்க அண்ணனுங்க கிட்ட கத்துக்கிட்டு இருக்கிறவ.. பொண்ணுனா பொறுமை வேணும் ஆத்தா.." என்று அவர் ஆரம்பிக்க..

 

"அட கிழவி! நீ சும்மா இரு.. என்ன பிரச்சனை நடந்தது என்னனு தெரியாம இப்பதான் நீ எனக்கு அறிவுரை கூற வந்துட்ட.. முதல்ல இங்க நடக்குறதுக்கு பஞ்சாயத்த சொல்லு.." என்று அவர் காதில் சென்று கத்தினார் அழகு மீனாள்.

 

"அட கூறுகட்ட சிறுக்கி.. எதுக்குடி என் காதுல வந்து லபோ திபோனே கத்துறவ" என்று அங்குள்ளவர்களின் முகத்தை ஆராய்ந்ததிலேயே ஏதோ பெரும் பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட அந்த அனுபவ பெண்மணி கூடவே தன் பேரன் முகத்தையும் ஆதித் முகத்தையும் கவனித்தவர் மகன்களையும் கவனித்தார். அவர்களின் குனிந்த தலையை தன் பேரனுக்கு எதிராக ஏதோ முடிவு எடுத்து இருக்கின்றனர் என்று புரிந்தது.

 

"ஐயா ராசா.. உங்க மாமன்க என்ன சொல்றாய்ங்க பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாய்ங்களா? அப்படி சொன்னா விடாத ராசா! நீ முறை பையன் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ என்ன பண்ற பொண்ணு தூக்கிட்டு போயிடு" என்றதும் சுற்றி இருந்தவர்களுக்கு லேசாக சிரிப்பு கூட மூண்டது.

 

"உள்ளதான் இருக்கா பெரியவ?" என்று ரகசியம் சொல்வதாய் கத்தி சொன்னார். அதுவும் ஆதித்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினார் அவர்.

 

"மச்சினிச்சிய கல்யாணம் பண்ணி தர்றதுக்கே இவன் விட மாட்டேங்குறியான்.. இதுல அவன் பொண்டாட்டியவே என்னைய தூக்க சொல்லுது இந்த அப்பத்தா! அவ்வளவுதான் என்னை இங்கனவே வெட்டி போட்டுருவியான்" என்ற வெற்றிவேலின் இதழ்களிலும் லேசாக சிரிப்பு படற அதை முகத்தை திருப்பி மறைத்துக் கொண்டான்.

 

அதற்குள் கிருஷ்ணாமணி அருகில் வந்த ஆதித் அவர் தண்டட்டியை சுண்டி விட்டு "ஏன் கிழவி என் பொண்டாட்டிய அவன் கூட கோய்த்து விடுற.. அப்போ என்ன யாரு பாத்துக்குவா? நீ ஃப்ரீயா தானே இருக்க.. வா நான் உன்னை கட்டிக்கிறேன். எனக்கு நைட்டு தனியா படுத்த தூக்கம் வராது" என்று சைகையில் கூறி அவரை தூக்க செல்ல..

 

"ஐயையோ.. ஐயையோ.. பொண்ணுங்களுக்கு இந்த வீட்ல பாதுகாப்பே இல்ல" என்று அவர் பின்னால் பதறி ஓட.. மீண்டும் அந்த இறுக்கத்திலும் ஒரு சிரிப்பு அலை உருவானது அங்கே.

 

அனைவரும் மனமும் சற்று தளர்ந்து இருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட ஆதித் மெல்ல வெற்றிவேல் புறம் நெருங்கி "எனக்கு புரியுது ப்ரோ உங்க மனசு! ஏற்கனவே சின்ன வயசுலயே பேசி வச்சது. அந்த ஆசை உங்க மனசுல இருக்கும். நீங்களே யோசிச்சு பாருங்க‌‌.. நீங்க நினைச்ச பொண்ணு கிடைக்கலைன்னா அடுத்து எப்படி உங்களுக்கு வேற ஒரு பொண்ணு கட்டி கொடுக்க சொல்றீங்க? நீங்க டக்குன்னு மனச மாத்திக்கிட்ட மாதிரி பொண்ணுக்கும் உங்களை பிடிக்கணும் இல்லையா? இது எடுத்தோம் கவுத்தோம்னு வேலை இல்லை ப்ரோ.. கொஞ்சம் நிதானமா செய்யணும்" என்றவன் அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு.‌.

 

"தீப்ஸ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண தெரிஞ்ச எனக்கு இதே ஊர்ல எங்க அப்பாவோட பணத்தாலும் அரசியல் பலத்தாலும் அதிரடியாக கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக தெரியாதா? எதற்கு இத்தனை நாள் இங்கே வந்து இருக்கேன்" என்றதும் வெற்றிவேலும் அவனை யோசனையோடு பார்த்தான்.

 

"இந்த உறவுகளுக்காக!!" என்றார் எல்லோரையும் கை காட்டி!

 

"இந்த ஒரு ஜென்மம் நாமெல்லாம் இப்படி உறவுகளா இருக்கோம் ப்ரோ.. அடுத்த ஜென்மம்.." என்று உதடு பிதுக்கியவன் தோளை குலுக்கி "யார் யார்? எப்படியோ? இந்த ஜென்மத்திலும் சண்டை சச்சரவு எதுக்கு ப்ரோ?" என்றான் சமாதானமாக வெற்றி வேலின் தோளில் கை வைத்து..

 

"அப்போ என் தாய்மாமன்.. என் மாமன் மகள்னு உரிமையில் நான் பொண்ணு கேட்கிறது தப்பா?" என்றான் வெற்றிவேல் சற்று இறங்கி வந்து.. உன்னை இருந்த அதிகாரமும் கோபமும் அவன் குரலில் தற்போது இல்லை. ஆதித்தின் பேச்சு சற்று அவனை தளர்த்தி இருந்தது. 'ஆதித் சொல்வது போல அதிகாரமும் பணமும் இருக்கும் அவனே ஒரு பொண்ணுக்கு இங்கே இவ்வளவு நாள் வந்து இருக்கும்போது நாம் ஏன் சற்று இறங்கி போக கூடாது?' என்று நினைத்தான்.

 

"தப்பே கிடையாது! ப்ரோ.. உங்க மாமா கிட்ட நீங்க பொண்ணு கேட்கிறதும் தப்பு கிடையாது! நம்ம மருமகன் தானேனு அவரும் பொண்ணு கொடுக்குறது தப்பு கிடையாது! ஆனா இங்க நீங்க ரெண்டு பேரும் உங்க ரெண்டு பேர மட்டும் தான யோசிக்கிறீங்க.. அதைத்தான் நான் தப்பு என்று சொல்கிறேன்!"

 

"உங்க ரெண்டு பேரையும் தாண்டி நீங்க கட்ட போற பெண்ணோடு மனசுல உங்களை பத்தி என்ன எண்ணம் இருக்குன்னு யோசிக்கவே இல்லையே?" என்றதும் அழகு மீன்னால் குறுக்கே புகுந்தார்.

 

"அது என்ன பொண்ணுங்களுக்கு புதுசா மனசு? அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. கல்யாணம் பண்ணி வச்சா எல்லாம் சரியாகும். மஞ்சள் கயிறு அவ கழுத்துல ஏறினாலே.. அது என்னமோ சொல்லுவாய்ங்களே.. ஆஹான் மாஜிக்.. அந்த மாஜிக் வந்து தானா நடக்கும். புருஷனை பிடிக்காதா என்ன? நீ வேணா பாரு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிவை அடுத்த வருஷம் ரெட்ட புள்ளைய பெத்து கொடுப்பா என் மருமக" என்றதும் இன்னும் கோபம் வந்தது ஆதித்துக்கு.

 

இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று அவனுக்கு புரியவில்லை. உண்மையில் அழகுமீனாளுமே அப்படிப்பட்ட சமூகத்தில் வளர்க்கப்பட்டதால் அவருக்கும் குடும்பத்தை தாண்டி தனக்கென்று ஒரு மனம் இருப்பது அறியாது போனது தான் சோகம்.

 

"சரி ‌ நீங்க சொல்றது மாதிரியே வச்சுக்கோங்க.‌ நான் இப்போ மஞ்சரிய கூப்பிடுறேன். அந்த பொண்ணுக்கு இதுல விருப்பம் இருந்தா.. நான் குறுக்க நிக்கல! அவளுக்கு விருப்பம் இருந்தா அவ படிப்பு முடிஞ்ச உடனே நீங்க கல்யாணம் பண்ணி வச்சுக்கலாம்" என்றான் கதிர்வேலனையும் செந்தில்வேலனையும் பார்த்து! 

 

அவர்கள் இருவரும் ஒருவர் வரை பார்த்துக் கொண்டு தங்கள் மனைவிமார்களை பார்க்க அவர்களும் சரி என்று தலை அசைக்க அதன் பின்னே மஞ்சரியை அழைத்தனர்.

 

மாடியில் அக்காவின் மடியில் படுத்து விசும்பிக் கொண்டு இருந்தாள் மஞ்சரி. அருகில் வர்ஷினி! விசாகா மட்டும் தான் இங்கே நடந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது.

 

மஞ்சரியை கூப்பிடு என்றதும் அவள் தான் ஓடி சென்று "அக்கா உன்னைய பெரியப்பாஸஅப்பா கூப்பிடுகிறாய்ங்க" என்றதும் அவள் திடுக்கிட்டு போய் தன் அக்கா தாராவின் கைகளை இறுக்க பற்றி கொண்டாள்.

 

"அக்கா ப்ளீஸ் கா.. அக்கா.. ப்ளீஸ் கா.. எனக்கு இந்த கல்யாணம் வேணாம். இவங்க பண்றது எல்லாம் பார்த்தா அடுத்த முகூர்த்தத்திலேயே இல்லனா தை பொறந்த உடனே கல்யாணம் வச்சிருவாய்ங்க போல.. நான் எப்போ அக்கா அப்ப படிப்பேன்? எனக்கு உன்னாட்டம் வெளிநாடு போக எல்லாம் ஆச இல்ல. ஆனா.. எனக்குன்னு ஒரு வேலை! என் சுய சம்பாத்தியம் எனக்கு வேணும்! இவிம்ங்க பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு அக்கா.." என்றதும் வர்ஷினிக்கு கோபம் வந்தது.

 

"இது எல்லாம் உன்னால தான் அக்காடி. நீ காதலிச்சு ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு எங்க எல்லா வாழ்க்கைலையும் பிரச்சனை வருது.. இப்போ இவளுக்கு கல்யாணம் பண்ணாய்ங்கன்னா ஒட்டி பொறந்தா ரெட்டையா இருக்குன்னு எனக்கும் அடுத்தது பார்த்திடுவாய்ங்களோ.. அப்போ என்னோட பேக்கரி பிசினஸ் என்னவாகுறது? சூரரை போற்று படத்தில் வர ஹூரோயினு மாதிரி நானும் பெரிய பேக்கரி வைக்கலாம் கனவெல்லாம் கண்டேனே.. எல்லாம் போச்சா!" என்று அவள் கவலை அவளுக்கு!!

 

அனைத்துக்கும் மூல காரணம் தான் என்று நினைக்க தாராவிக்கும் மனம் பாரம் ஆகி போனது. இப்படி தங்கைகள் வருத்தத்தில் இருக்கும் பொழுது தான் மட்டும் பிடித்த வாழ்க்கையை எவ்வாறு சந்தோஷமாக மன நிறைவாக வாழ முடியும்? என்று அவளும் மனம் குழம்பிப் போனாள்.

 

"இந்த நிக் இதையெல்லாம் பார்த்துட்டு கீழே என்னதான் பண்றான்?" அவளால் அங்கே இருப்பு கொள்ளவே முடியவில்லை.

 

நேற்று இருந்த சந்தோஷம் எல்லாம் மறைந்துவிட.. இன்றோ அனைத்தும் தலைகீழாக மாற..

 

"சாரிடி.. சாரிடி.. என்னால தான் எல்லாமே.. நான் சரியா இருந்திருக்கணும்! நான் சரியா உங்களை கைடு பண்ணி இருக்கணும்! தவறிவிட்டேன்! சாரிடி சாரிடி" என்று இரு தங்கைகளையும் அணைத்துக் கொண்டு அவள் அழுக.. இவற்றையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த விசாகா பொறுமை இழந்தாள்.

 

"ஏய்.. லூசுங்களா.. ஏன் இப்படி எல்லாரும் அழுகுறீய்ங்க? அப்பா உங்க கீழே தானே வர சொன்னாய்ங்கன்னு சொன்னேன். அதுக்குன்னு உன்னைய மாமனுக்கு கட்டிக் கொடுக்கிறேன் சொன்னாய்ங்கனு நான் சொன்னேனா?" என்றதும் மூவரும் ஆனந்த அதிர்ச்சியோடு விசாகாவை பார்த்தனர்.

 

"எஸ்.. அக்காஸ்!! அதெல்லாம் மச்சான் பாத்துக்கிட்டாய்ங்க. நீங்க மூணு பேரும் தைரியமாக கீழே இறங்கி வாங்க. ஆல் சுபம்!" என்றதும் மூவரும் ஆவலுடன் அவளை பார்த்து அங்கே நடந்ததை கேட்க.. அவளும் விவரிக்க.. அதற்கு பின்னே தான் மூச்சே வந்தது அனைவருக்கும்!

 

இப்பொழுது மஞ்சரியின் கைப்பிடித்து "ஏய் மஞ்சூரியன்.. உன் மனசுல பட்டது நீ சொல்லு. அதான் மச்சான் எல்லாத்தையும் பேசிட்டே"

என்றாள் சந்தோஷமாக தாரா.

 

சற்றுமுன் தான் நினைத்தது தவறு தான் தேர்ந்தெடுத்தவன் சரியானவன் என்று எண்ணமே அவளுக்கு பெருமிதம் கொள்ள செய்ய.. அந்த சந்தோஷம் அப்படியே அவள் முகத்

தில் தெரிந்தது.

 

அதன்படியே கீழே வந்த மஞ்சியிடம் அழகு மீனாள் பேச போக.. அவரை தடுத்து நிறுத்தியது ஒரு கை! 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top