கண்ணம்மா 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 13

 

ஒன்றரை வருடங்களுக்கு முன்..

உண்மையில் தீபத்தாரா வேலை செய்ய வந்தது ஆதித்தின் நிக் அட்வெர்டைஸ்மென்ட்டில் இல்லை.

 

மாஸ் மீடியா படித்த பெண்ணவள் சென்னையில் ஆறு மாதம் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தாள். பெரிதாக அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. எடு புடி தான்.  

 

அவள் என்ன செய்தாலும்..

 

"இதெல்லாம் உனக்கு தெரியாது!!"

 

"எடுத்தவுடனே இந்த இடத்துக்கு எல்லாம் வர முடியாது மேடம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!!" என்று நக்கலாக பேசுபவர்களும்..

 

"மெது மெதுவா தான் கத்துக்கிட்டு வரணுமா வந்தவுடனே டைரக்ட்டா ஸ்கிரிப்ட் எழுத முடியுமா?" என்று கேட்கும் பெருசுகளும் இவளுக்கு தலை வலியை கொடுத்தாலும், "கற்றுக்கொள்வோமே!! இதில் என்ன தப்பு இருக்கு!!" என்று அவளும் கற்றுக் கொள்ளத்தான் முயன்றாள். 

 

ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் அந்த எண்ணம் இல்லை. பெரும்பான்மையான மக்கள் 'தன்னை சுற்றியுள்ளவர்கள் எங்கே தன்னை விட அதிக திறமை கொண்டு மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கி விடுவார்களோ?' என்று பொறாமை சூழ் உலகு அது!! அதுவும் மீடியாவில் கேட்கவும் வேண்டுமா??

 

இப்படியாக போவதும் சீட்டை தேய்ப்பதும் திரும்பி வருவதுமாக இருந்தாள் அவள். சில சமயம் அட்வர்டைஸ்மென்ட் எடுக்கும் நேரத்தில் அங்கே வரும் மாடல்களுக்கு எடுபிடியாக தான் இவள் இருந்தாள். சில சமயம் மேக்கப் ஆர்டிஸ்ட் கூட… இன்னும் சில சமயங்களில் பெண் மாடல்களுக்கு ஆடை அலங்காரத்திலும் உதவ வேண்டியதாக இருக்கும். அவர்களின் உடை கீழே படாதவாறு பிடித்தவரே சேடி பெண் போல பின்னால் நடக்க வேண்டியதாக இருக்கும்.

 

"என்ன தாரா உனக்கு வந்த சோதனை? ஊர்ல அம்மா சித்தி சொன்ன போதே வேலை செய்யாம டிமிக்கி கொடுத்துட்டு இருந்தல்ல.. இங்க பாரு எடுபிடியா எல்லா வேலையும் செய்ய வேண்டியதாக இருக்கு! எல்லாம் கர்மா.. கர்மா..!"

என்று நினைத்தவள் அடைமட்டத்திலிருந்து கற்றுக் கொள்வதில் ஒன்றும் தப்பில்லையே என்றுதான் அனைத்தையும் முகம் சுழிக்காமல் செய்தாள்.

 

 

பல கனவுகளோடு சென்ற வேலைக்கு அவள் தன் முழு உழைப்பை போட முனைந்தாலும் மற்றவர்கள் 'இந்த கௌசிக் குறுக்கே வந்த பரவாயில்லையா?' என்று மண்லாரியாக குறுக்கே புக.. கைகட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர ஒன்றும் முடியவில்லை!

 

 

"இப்படியே என் வாழ்க்கை சென்று விடுமா?" என்று சோகம் கொண்டாள். ஏனென்றால் இரண்டு வருடம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும். பின்பு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு வேலை செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். இவளுக்கு பின்னே மூன்று பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் திருமணம் செய்ய வேண்டுமே!

 

"பெற்றவர்களை சொல்லியும் தப்பில்லையே…!"

 

"வாழ்க்கை நாடகமா..

 

 என்று பிஜிஎம் ஓட அன்று எதேர்ச்சையாக கணினியில் நோண்டிக்கொண்டிருந்தவளின் கண்களில் பட்டது அந்த விளம்பர பதாகை!

 

வேறு ஒரு கம்பெனியில் வேகண்ட்!

 

அதுவும் வீக்எண்ட் கூட அருகில் இருக்கும் மகாபலிபுரத்துக்கு கூட செல்லாதவளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை!

 

"அடிச்சதுடா ஜாக்பாட்..!"

என்று துள்ளி குதித்து அதற்கு விண்ணப்பித்தாள்.

 

ஆஸ்திரேலியா கம்பெனிக்கு செல்ல அவளுக்கு வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு கிட்டவில்லை. வேலைக்கு என்னமோ அவள் தேர்வாகினாலும்.. வீட்டில் அவ்வளவு தூரம் பெண் பிள்ளையை அனுப்ப சம்மதிக்கவில்லை! 

 

வீட்டில் காந்தி வழியில் அகிம்சை உண்ணாவிரதம் ஒத்துழையாமை என்று போராடி தான் அந்த வேலைக்கு செல்ல அனுமதி வாங்கினாள் தாரா.

 

அது இரண்டு வருட ஒப்பந்தம் வேறு.

 

"இரண்டு வருடம் முடிவில் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துவிட வேண்டும்! அதற்கு பின் திருமணம் தான்" என்று வைதேகி தான் வீட்டில் மற்றவர்களிடம் அனுமதி வாங்கி இந்த கண்டிஷனோடு..

 

மறுக்காமல் தாராவும் சம்மதிக்க அவர் சந்தோஷமாக வழி அனுப்பினார் செந்தில்வேலன் மற்றும் கதிர்வேலன். 

 

அவர்கள் பெண் மீது அவர்களுக்கு ஏக நம்பிக்கை இருந்தது. 

 

'வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்' என்று குறுகிய மனம் எல்லாம் அவர்களுக்கு இல்லை. பெண்களை அதுவும் நான்கு பெண்களிய் இருக்கும் இடத்தில் படிப்பு ஒன்று அவர்களுக்கு இக்காலத்தில் பாதுகாப்பு.. துணிவு.. பலம்.. என்பதை அறிந்தவர்கள் அவர்கள்!

 

அதனால் பெண் மீடியா என்று தேர்ந்தெடுக்க அதையும் சந்தோஷமாகவே படிக்க சென்னைக்கு அனுப்பினார்கள். பேர் சொல்லும்படி நல்ல பர்சன்டேஜில் தான் கல்லூரி தேறினாள் தாரா. அதன் போல காலேஜ் கேம்பஸ்லேயே அவளுக்கு வேலையும் கிடைத்த விட.. இன்னும் சந்தோஷம் தான்.

 

"நம் நாட்டில் தான் இப்படி மேக்கப் போடு.. ட்ரெஸ்ஸ புடி.. அதை எங்கே வைச்ச.. இதை கொண்டு போய் அவங்களுக்கு கொடு" என்று எடுபிடி வேலைகள் அதிகமாக இருக்கும் வெளிநாட்டில் அவ்வாறு இருக்காது என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிவிட அதையும் மனதில் ஏற்றியவள் ஆஸ்திரேலியா கம்பெனியின் ஆஃபர் கண்ணில் பட்டதும் உடனே விண்ணப்பித்து விட்டாள்.

 

அந்த கம்பெனியில் அப்ளை செய்ய உடனே ஆஃபர் லெட்டர் வந்துவிட.. இன்னும் சந்தோஷத்தின் உச்சியில் தாரா!

 

ஆனால் அந்த சந்தோஷம் எல்லாம் கீழே விழுந்து நெருங்கும் ஆஸ்திரேலியா இறங்கியவுடன் என்று அவளுக்கு தெரியவில்லை.

 

அவளுக்கு ஆஃபர் லெட்டர் வழங்கிய கம்பெனி பேருக்கு தான் அட்வர்டைஸ்மென்ட் வேலை செய்தார்கள். பின்புலத்தில் வேறு மாதிரியான பலான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

 

அவர்களுடைய டார்கெட் இம்மாதிரி வேலைக்கு என்று உலகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரும் பெண்கள்தான்! அதுவும் இளம்பெண்கள்!!

 

தாராவிடம் பாஸ்போர்ட் முதற்கொண்டு அனைத்துமே அவர்கள் வாங்கி வைத்துவிட.. 

 

"இது இங்கு சாதாரண நிகழ்வு போல.." என்று அவள் நினைத்து

அனைத்தையும் ஒப்படைத்துவிட்டாள்.

 

முதல் வாரம் வேலை நன்றாகத்தான் போனது. பழைய கம்பெனி போல எங்கே அவளை எடுப்படியாக நடத்தவில்லை. சூட்டிங் நடக்கும் இடத்திற்கு எல்லாம் அழைத்துச் சென்றார்கள். அதனைப் பற்றி விவரித்தார்கள். ஒரு புது உலகில் தன்னை நுழைத்து அதில் நிறைய கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள் தாரா.

 

அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து பேசுவதும் என்றும் நன்றாக சென்று கொண்டிருந்தது.

 

ஆனால் அவை அனைத்துமே ஒரு மாயை என்று அடுத்த வாரம் கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு புரிய வந்தது.

 

இவளுடைய பாஸ்போர்ட் அவர்கள் கையில்.. விசா பேப்ர்ஸ் எல்லாம் அவர்கள் பாதுகாப்பில் இருக்க.. இவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

நேரடியாக இவள் சென்று பேச அவர்களின் கோணல் சிரிப்பில் மொத்தமும் புரிய வந்தது. வசமாக வந்து சிக்கிக் கொண்டோம் என்று!!

 

கூடவே இரண்டு வருடம் ஒப்பந்தம் என்று வந்திருப்பது ஒப்பந்த முடியும் முன் சென்றால் பெருந்தொகை கட்ட வேண்டும். 

 

"அடுத்த வாரத்தில் இருந்து பெரிய பெரிய ஸ்டார்களோடு ஷூட்டிங் எடுக்கும் நேரத்தில்.. அவர்களுக்கு ப்ரக்கில் நீ கம்பெனி கொடுக்க வேண்டும்!" என்றதும் அதிர்ந்து தாரா பின் வாங்க.. அதன் பின்னே கம்பெனியில் நடத்துபவனின் உண்மையான முகம் மிகக் கோரமாக வெளிப்பட்டது.

 

என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அதற்காக இவர்கள் நினைத்தது போல் அவளால் உடலை விட்டு உயிர் வாழ முடியாது! பட்டினி போடுவோம் என்று மிரட்டினார்கள்!

 

'வயிற்று பசிக்காக அவர்கள் உடல் பசியை தீர்க்க முடியாது!' என்று தீர்மானம் எடுத்தவள், சொன்னவன் முகத்திலேயே இரண்டு குத்து விட்டாள் மதுரைக்காரர் வீர பெண்ணாக!

 

அதற்கு தண்டனையாக ஒரு வாரம் அவளுக்கு அறையிலேயே சிறைவாசம்.

 

அவளின் பலம் மட்டுமல்ல நம் அனைவரின் பலமே உணவு தானே? உணவை குறைத்துவிட்டால் பலம் குறைந்து விடும் அல்லவா? பலம் குறைந்து விட்டால் இப்படி அடிக்க முடியாது அவளை சுலபமாக சம்மதிக்க வைத்து விடலாம் என்று 

நினைத்தார்கள் போலும்..

 

 பசி வந்தால் பத்தும் பறந்து போகும் போது.‌ அந்தப் பத்தில் கற்பும் மானமும் அடங்கும் என்று அவன் நினைத்து இவளை பட்டினி போட… 

 

அவளோ தமிழ் மறவப்பெண்? எப்படி கற்பை இழக்க முன் வருவாள்?

 

தமிழ் இனத்தில் மட்டுமல்ல உலகத்தில் நிறைய இடங்களில் அடுத்தவர்களின் இச்சைக்காக உடலை விற்க பெண்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தன் உயிர் போகும் வரை போராடுவார்கள்!!

 

ஒரு வாரமும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தாள் பெண்.

 

அவ்வப்போது வந்து அவளை நக்கலாக பார்த்து 'இன்றைக்கு வருகிறாயா? இல்லை நாளைக்கு வருகிறாயா?' என்று கேட்க ஒரு கட்டத்தில் இங்கிருந்து தப்பிக்க வெளியில் சென்றாக வேண்டும் என்று நினைத்து ஒருநாள் ஒப்புதல் அளித்தாள்.

 

"அப்படி வா வழிக்கு.. நீ வழிக்கு வந்து தானே ஆகவேண்டும்!" என்று கோணலாக சிரித்த அந்த ஓனர், அவளை அன்று வந்த ஒரு புதிய மாடலுக்கு அவளை அனுப்பி வைத்தான்.

 

இங்கேயே மாட்டிருந்தால் உயிர் போவது நிச்சயம் என்று புரிந்த தாரா அவர்களுக்கு இசைவது போல இசைந்தாள். என்னதான் வீரம் இருந்தாலும் புத்தியும் அவசியமில்லையா?

 

சத்ரியினை விட சாணக்கியா இருப்பது சால சிறந்தது என்பதை புரிந்தவள், அமைதியாக அவனோடு வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தாள். சிக்னலில் கார் நின்றிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக கதவினை திறந்து கொண்டு இவள் தாறுமாறாக ஓட…

 

அதுவும் எதிர்புறம் வண்டிகள் வந்து கொண்டிருக்கும் சாலை அது.

 

ஆதித் வந்து கொண்டிருருந்த வண்டியின் முன்னே இவள் குறுக்கே வந்துவிட.. அவனோ பயந்து வண்டியை ஒடித்து நிறுத்தினான் இவள் மீது எடுத்து விடாத வண்ணம்.

 

இந்த கதை புறத்தில் பல வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நிற்க.. ஒரு குட்டி கலாட்டாவே நடந்து விட்டது அவ்விடத்தில்.

 

போக்குவரத்துறை காவலர்கள் இவளை பிடித்து இவள் செய்த செயலுக்காக அவளுக்கு ஃபைன் போட.. போலீஸ் இந்த சீன் குள்ள வந்ததுமே தாராவை துரத்தி வந்த மாடல் தன் பெயர் கெட்டி விடும் என்று நழுவி விட்டான்.

 

 அவளின் கலங்கிய கண்களும்.. துடித்த உதடுகளும்.. ஆதித்தை எதுவும் செய்தது. அவனும் வண்டியிலிருந்து இறங்கி என்னவென்று விசாரித்தான். அவளைப் பார்த்து மாத்திரத்திலே தெரிந்தது இந்திய பெண் என்று! மெதுவாக அவளிடம் பேசிக் கொடுக்க அவன் தமிழ் என்றதும் அனைத்தையுமே ஒப்பித்து விட்டாள்.

 

ஆதித்தும் அதே தொழில் தானே அங்கே இருக்கிறான். அதனால் அவனுக்கு அவள் சொல்வது எந்த கம்பெனி என்று புரிந்தது. இவனாக எதுவும் செய்தால்தான் போட்டி பொறாமை என்று தப்பித்து விடுவார்கள்.. ஆனால் இந்த பெண் சொன்னால் மாட்டுவார்கள் தானே என்று எண்ணியவன், 

 

காவலர்களிடம் பேசி அவளுக்கான ஃபைன் பணத்தை இவன் கட்டி இவளை அழைத்து வந்தான்.

 

அவளிடம் தேவையான விபரங்களை வாங்கி அந்த போலியாக அட்வர்டைஸ்மென்ட் நடத்துபவனை போலீஸ் கொண்டு மிரட்ட.. இவளது பாஸ்போர்ட் விசா எல்லாம் கொடுக்கப்பட்டது. கூடவே அந்த இரண்டு வருட ஒப்பந்தப்படுத்த பத்திரம் கிழிக்கப்பட்டது. அவனை போலீஸ் கைது செய்தது. அவனது கம்பெனி முடக்கப்பட்டது.

 

அதற்குப்பின் அவளது படிப்பு அனைத்தையும் கேட்டவன் "இங்கே வேலை செய்கிறாயா? அல்லது ஊருக்கு திரும்பி செல்கிறாயா?" என்று கேட்க..

 

"இதையெல்லாம் வீட்டில் சொன்னால் இனி வேலைக்கு அனுப்புவது கனவில் கூட நினைக்காத காரியம்.. அதனால அந்த ரெண்டு வருஷம் உங்க கம்பெனியிலேயே ஒர்க் பண்ணவா?" என்று அவனிடமே வேலைக்கு சேர்ந்தாள்.

 

முதலில் மெல்லிய நேசமாக இருந்தது.. பெரும் பாசமாக மாறி.. அளவற்ற அன்பாய் பெருகி.. கட்டுப்பாட்டு அற்ற காதலாக பொங்கி வழிந்தது இருவருக்கிடையே!

 

 ஒரு கை தட்டினால் தானே ஓசை இருக்காது. இங்கு இரு பக்க காதல்!

 

காதல் அவர்களை ஆட்கொண்டதா இவர்கள் காதலை ஆட்கொண்டார்களா என்று தெரியாத வண்ணமே இருந்தது இருவருக்கும் இடையேயான அந்த காதல் புரிதல் எல்லாமே!!

 

அத்தனை ஆழமாக காதல் இல்லாவிடில்.. இப்படி காதலிக்காக இங்கே வந்து தவம் கிடப்பானா நாயகன்?

 

"என்ன மலரும் நினைவுகளா?' என்று தன் அருகில் அரங்கநாதர் போல தலையை கையில் வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஆதித்தின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினாள் தாரா.

 

"ஆமா.. ஆமா.. ஆஸ்திரேலியா டூ மதுரை.." என்றவன், அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு கையை தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.

 

"நாளைக்கு விடியல் நமக்கு எப்படி இருக்கும்னு தெரியல.. இன்னைக்கு நைட் நீ என் கூடவே தூங்கு தீப்ஸ்" என்றவன் அவளை அணைத்தப்படியே உறங்கினான்.

 

ஆஊஇத் நினைத்தது போல அந்த விடியல் அவர்களுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை!

 

வெற்றிவேல் அவனது அன்னை கூட வந்து "விடிஞ்சா தீபாவளி.. இன்னும் அவன் யாரு மனசுலேயும் இடம் பிடிக்கல தான.. அப்போ அவன திரும்ப ஊருக்கு பேக்கப் பண்ணுங்க மாமா.‌.!" என்று தன் தாய்மாமன்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top