கண்ணம்மா 10

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 10

 

"பெரியப்பா…" என்று அலறியப்படி வந்தான் குகன்.

அறையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த செந்தில்வேலன் மகனின் அலறலில் வேகமாக வந்தார். கூடவே மரகதவல்லியும். 'மகன் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டு வந்து விட்டானா?' என்று அவனை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தார் மரகதவல்லி… நல்ல காலம் மகனுக்கு ஒன்றுமில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

 

"என்னடா குகா..? என்னாச்சு எங்கன கதிரு?" என்று விசாரித்தார்.

"அப்பா.. அப்பா.. போலீஸ் ஸ்டேஷனல பெரியப்பா.." என்று திக்கி திணறி கூறினான்.

 

"என்னது? போலீஸ் ஸ்டேஷனா?" என்று இருவரும் அதிர்ந்து..

"என்னடா சொல்ற? எதுக்கு தம்பி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கணும்? என்ன பிரச்சனை தெளிவா சொல்லுடா! படபடன்னு வருது இல்ல" என்று கேட்டார் மரகதவல்லி.

 

"அது பெரியம்மா.. புதுசா ஒரு கடைக்கு பை ஆர்டர் கொடுத்து இருந்தாய்ங்க.. அந்த பை ஆர்டர முடிச்சு.. காலையில அதை லோட் ஏத்தி அவிங்க சொன்ன அட்ரஸூக்கு அனுப்பியாச்சு.."

 

"அப்புறம் அதுல என்னடா பிரச்சனை?" என்று புரியாமல் கேட்டார் செந்தில்வேலன்.

 

"வழக்கம் போல தீபாவளி பாதுகாப்புக்கு அங்கங்கன போலீஸ் சோதனை பண்ணிட்டு இருந்தாய்ங்க.. இதுல ஸ்பெஷல் ரைய்டுன்னு சொல்லி புதுசாக வந்திருக்கிற ஏசிபி தலைமையில அங்கங்க நிறுத்தி சோதனை பண்ணிட்டு இருந்தாய்ங்க போல… நம்ம வண்டியில் இருந்து.."

 

"நம்ம வண்டியில இருந்து.. என்ன டா.. என்னாச்சு?" என்று பதட்டத்துடன் கேட்க..

"ஏதோ போதை சரக்கு மாட்டி இருக்காம் பெரியப்பா.. அதனால. அப்பாவ.." என்றான் அழு குரலில்..

 

"என்னது? என்ன டா சொல்லுற?" என்று செந்தில்வேலனின் அதிர்ச்சியான குரலில் குடும்பமே என்ன ஏது என்று தெரியாமல் கூடத்திற்கு ஓடி வந்தனர்.

 

"ஆமாம் பெரியப்பா.. அப்பாவ போலீஸ் புடிச்சு வச்சுருக்கு. ஏதோ சரக்கு நம்ம வண்டியில் மாட்டிக்கிச்சாம்" என்றவனின் கண்களில் அத்தனை பீதி..கலக்கம்.. பயம்!

 

"என்னது? அப்பாவ போலீசு பிடிச்சிருக்காய்ங்களா? ஏ ஆத்தே.." என்று நெஞ்சில் கை வைத்து திகைத்து நின்று விட்டார் வைதேகி.

தாரா அவருக்கு ஆறுதலாய் அருகில் நின்றுக் கொள்ள… அடுத்தடுத்து மற்ற‌ மகள்கள்களும் மரகதவல்லியும் வைதேகி சுற்றியே..

 

"இரு இரு ஆத்தா.. வெசனப்படாத.. நான் என்னன்னு போய் பார்க்குறவன்!" என்று செந்தில்வேலன் கிளம்ப..

 

"இருங்க.. நானும் வரேன் உங்களோட.." என்று அவரின் பதிலை எதிர்பாராமல் அவரோடு சேர்ந்து கொண்டான் ஆதித்.

 

செந்தில்வேலனும் ஆதித்தும் அரை மணி நேரமாக வெளியில் அமர்ந்து காத்திருந்தனர்.. அந்த சிறப்பு ஆய்வாளரை காண…

அரை மணி நேரத்திற்கு பிறகு தான் "அரசு.!" என்று குரல் கம்பீரமாக ஒலிக்க.. ஆதித் மட்டும் தலையை உள்ளே விட்டுப் பார்த்தான்.

 

அவசரமாக ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் உள்ளே ஓட.. "யார் இந்த ஏசிபின்னு தெரியலையே? அப்பா கிட்ட பேசி பார்க்கணும்" என்று இவன் யோசனையோடு அமர்ந்திருக்க..

 

அருகில் இருந்த செந்தில்வேலன் 'மொதல விஷயம் என்னனு தெரிஞ்சுக்கணும்.. அதுக்கப்புறம் தான் யாரையும் கூப்பிடனும்' என்று யோசனையோடு இருந்தார்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் முன்னால் விரைப்பாக சல்யூட் அடிக்கும் அரசுவை, உதட்டில் தெரிந்தும் தெரியாமலும்.. நெளிந்து நெளியாமலும் இருக்கும் புன்னகையோடு எதிர்கொண்டான் அந்த சிறப்பு இணை ஆணையர் சூரிய பிரகாஷ் ஐபிஎஸ்.

 

அட.. நம்ம எஸ்பி தானுங்க..!!

 

மூஞ்சிய தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்த அரசுவை பார்த்து "என்ன அரசு முகம் ஒரு பக்கமா கோணிட்டு இருக்கு?" என்றபடி தன் முன் இருந்த ஃபைலை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தான் எஸ்பி.

 

"பின்ன என்ன சார்? நான் பாட்டுக்கு நம்ம ஸ்டேஷனில் குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன்.. நீங்க இங்கே ஸ்பெஷல் ரைட் வரும் போது என்னையும் தூக்கி போட்டுட்டு வரணுமா? தீபாவளி வேற நெருங்குது சார்! ஏற்கனவே என் பொண்டாட்டி காய்ச்சி எடுக்கிறா.. என் பிள்ளைகளுக்கு என் முகமே மறந்துவிடும் போல.. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா அப்பப்ப வந்துட்டு போற இந்த மாமா யாருன்னு கேக்குற நிலைமைக்கு கொண்டு வந்துறாதீங்க சார்! உங்களுக்கு புண்ணியமா போகும்!" என்று அழுகுரலில் கேட்டவனைப் பார்த்து சிரித்த எஸ்பி..

 

"எதுக்கு உன் கைல எல்லாம் ஸ்மார்ட் ஃபோன்னு ஒன்னு இருக்கு அரசு.. அதுல வீடியோ கால் ஆப்ஷன் எல்லாம் எதுக்கு இருக்கு? அதுல அப்பப்ப பேசிக்கணும் அரசு.."

 

"அப்படியே நீங்க பேச விட்டுட்டாலும்…" என்றும் முணுமுணுத்துக் கொண்டான் அரசு.

 

"சரி. ஓகே ஓகே.. முணகாம காலையில ஒரு சரக்கு மாட்டிச்சி இல்லையா.. அந்த வண்டி ஓனர் உள்ள தான இருக்காரு.. அந்த ஆள கூட்டிட்டு வா.."

 

'எப்போதுமே விசாரணை என்றால் இவரு தானே சிறைக்குள் சென்று ஒரு வழியாக்குவாரு கைதிகளை.. இதுதானே வழக்கம்! இன்று என்ன அதிசயமாக இங்கே கூட்டிட்டு வர சொல்றாரு?' என்றபடி யோசித்துக் கொண்டே சென்றவன் அங்கே லாக் அப்பில் அவமானத்தையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்த கதிர்வேலை பார்த்து "சார் கூப்பிடுறாங்க.. வாயா.." என்றான்.

 

வேந்தன் அளவுக்கு பெரு மதிப்பு கொண்ட குடும்பம் இல்லை என்றாலும் ஓரளவு கௌரவமான குடும்பம் தான் முத்துக்கருப்பன் குடும்பம். அதுக்கு தக்கப்படியே தான் மகன்களையும் வளர்த்திருந்தார். விவசாயம் என்று செந்தில்வேலன் செல்ல.. 'நான் பை தயாரிக்கும் தொழிலை எடுக்கறேன்' என்று இத்தனை வருடங்களாக ஒரு சின்ன தவறும் தப்பான பேச்சுமின்றி தான் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறார் கதிர்வேலன்.

 

தொழில் மட்டும் அல்ல வீட்டிலும் சரி சரிக்கியது இல்லை. இக்காலத்திலும் கூட்டு குடும்பமாக தான் இருக்கின்றனர். இப்படி வீடு தொழில் என்று உறவினர்கள் மத்தியில் கௌரவத்தோடு மதிப்போடு வாழ்ந்து வந்தவரை, திடீரென்று 'உங்க வண்டியில கள்ள சாராயம் போதை வஸ்து இருக்கு' என்று கைது செய்து இருந்தால் அவரின் மனநிலை எப்படி இருக்கும்?

 

எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை கடமையை கடைபிடிக்கும் காவல்துறையினர்.

 

அதுவும் தீபாவளி சமயத்தில் இது மாதிரி போதை வஸ்துக்களை கடத்துவதை தடுக்க என்றே மதுரை தேனி கம்பம் ராமநாதபுரம் திருநெல்வேலி திண்டுக்கல் திருச்சி என்று இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு தலைமை ஏற்று இருந்தான் ஏசிபி சூரிய பிரகாஷ்.

 

அவனின் அதிரடியில் நிறைய மாட்டி இருந்தார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டு நேற்று விடிய காலை தான் மதுரை வந்தான்.

 

 கதிர்வேலனின் துரதிஷ்டமோ என்னவோ அவன் சோதனையிடும் போதா.. இவர் வண்டி மாட்ட வேண்டும்?

 

உண்மையில் விடிய விடிய கம்பெனியில் வேலை செய்து ஒரு புது ஜவுளிக்கடைக்காக ஆயிர கணக்கில் கட்ட பைகளை ஏற்றி சென்றிருந்த வண்டியை தான் மறித்து காவலர்கள் சோதனையிட.. அதில் அடியில் பதிக்க வைத்திருந்து கள்ளச்சாராயம் கேன் கேனாக.. பாக்கெட் பாக்கெட்டாக போதை வஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.

 

டிரைவரை அடித்து கேட்டால் "எனக்கு தெரியாது சார். பையை ஏத்தி லோட் பண்ணி வச்சிருப்பாய்ங்க.. நான் போய் டெலிவரி பண்ணிடுவேன் சார். அங்குள்ள ஆளுங்க தான் வண்டியிலுள்ள பார்சல எல்லாம் எடுத்துப்பாய்ங்க.. அவ்வளவு தான் சார் எனக்கு தெரியும்!" என்று அவ்வளவு அடிக்கும் அவன் சொன்னதை தான் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு பின் தான் வண்டியின் ஓனர் யாரு என்று விசாரித்து கதிர்வேலனை கைது செய்து அழைத்து வந்திருந்தான் அரசு.

 

வந்தது முதல் ஆயிரம் முறையாவது "எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை! என்று கோபமாக.. வருத்தமாக ஏன் அழுகையாக கூட சொல்லிப் பார்த்து விட்டார் கதிர்வேலன்.

 

ஆனால் அவரின் பேச்சை யாரும் காதில் வாங்கவில்லை. சூரிய பிரகாஷூம் அதற்கு அடுத்தடுத்து என்று தீவிரமாக மதுரையை சுற்றிக் கொண்டிருக்க.. கதிர்வேலன் லாக்கப்பில் இருந்து கத்திய கதறல் அவனுக்கு எட்டவில்லை.

கொஞ்ச நேரம் முன்பு தான் வந்தவன் சில கோப்புகளை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கு பின்னே கதிர்வேலனை அழைத்தான்.

 

தன் முன்னால் கூரிய கண்களோடு ஆளுமையான தோற்றத்தோடு அமர்ந்திருக்கும் சூரிய பிரகாஷை கொஞ்சம் பயத்தோடு தான் பார்த்தார் கதிர்வேலன். அந்த பயம் அவன் பதவி கொண்டே ஒழிய தப்பு செய்தவனின் பயம் இல்லை. அதை அவர் கண்களிலே கண்டு கொண்டான் சூரிய பிரகாஷ்.

 

அவ்வப்போது எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தின் கண்களில் கதிர்வேலனை அழைத்துச் செல்வது பட்டு விட.. அங்கிருந்த ஒரு ஏட்டை பிடித்து விவரங்களை கறந்து செந்தில்வேலனிடமும் தெரிவித்துவிட்டு தன் தந்தைக்கு ஃபோன் போட்டு செய்தியை சொன்னான்.

 

கதிர்வேலனிடம் தன் விசாரணையை துவக்கி இருந்தான் சூரிய பிரகாஷ். அவன் எவ்வளவு அதிகாரத்தோடு கேட்டும் "சத்தியமா எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்லிய்ங்க சார்.. நாங்க நல்ல குடும்பம். பேர் போன குடும்பம் இல்லனாலும் ஓரளவு மரியாதையான குடும்பம் தான். இந்த மாதிரி தொழில் செஞ்சுதான் பொழைக்கணும்னு அவசியம் இல்ல சார்.. வயல் தோட்டம் தோப்பு துரவுனு ஏற்கனவே நிறைய இருக்கு.. எனக்கு புடிச்சி இந்த பை வியாபாரத்தை செய்றேன் சார்" என்று இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க..

 

 அப்பொழுது பார்த்துதான் அருணாச்சலத்தின் பிஏ ஏசிபிக்கு கால் செய்து கதிர்வேலனை விடுவிக்க கூறினார்.

 

"இன்னும் விசாரணையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள உங்களுக்கு மேல் இடத்துல இருந்து எல்லாம் சப்போர்ட் வருது.. சார் ரொம்ப பெரிய இடமோ?" என்று நக்கலாக கேட்டவுடன் இன்னும் சர்வமும் ஒடுங்கியது கதிர்வேலவனுக்கு.

அதற்குள் மீண்டும் மீண்டும் ஏசிபிக்கு ஃபோன் வர.. அதை அணைத்து போட்டவன் "எம்பி அருணாச்சலம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கதிர்வேலனிடமே குறுக்கு விசாரணை செய்ய…

 

ஆதித் பற்றி முழுமையாக சொல்லாமல், தெரிந்தவர் என்ற முறையில் சொல்லி வைக்க.. "அந்த அரசியல்வாதி பையன கூப்பிடு அரசு.. அவனுக்கு அரசியல் தெரிந்திருக்கும். இப்போ கொஞ்சம் சட்ட திட்டத்தையும் சொல்லிக் கொடுப்போம்!" என்று கதிர்வேலனை ஓரமாக அமர வைத்துவிட்டு ஆதித்தை வரவழைத்தான் எஸ்பி.

 

உள்ளே நுழைந்தவனை ஓரக்கண்ணால் அளவெடுத்தான் எஸ்பி. மதுரைக்கு ஏற்ப கழுத்தில் நகைக்கடையையே அணிந்து கொண்டு கதர் வேட்டி சட்டையில் முன்னால் இரண்டு பட்டன்களை திறந்து விட்டுக்கொண்டு கையில் பல பளபளக்கும் புது ஃபோனுடன் உள்ளே வருவான் என்று எஸ்பி எதிர்பார்க்க.. அதற்கு நேர்மறையாக சாதாரண கேஷுவல் உடையில் வந்து ஆதித்தை புருவம் உயர்த்தி பார்த்தான் எஸ்பி.

 

"அரசியல்வாதி மகன்னா நாங்க பயந்துருவோமா? இல்ல அங்க இருந்து உங்க அப்பா ஃபோன போட்டா.. நாங்க குற்றவாளி விட்டுவிடுவோமா?" என்று தெனாவட்டாக கேட்ட அந்த ஏசிபியை பார்த்தவன் கண்களில் நிச்சயம் பயமில்லை.. பரிட்சியம் மட்டுமே!

 

அதனோடு கர்வம் இல்லை அரசியல்வாதி மகன் என்று ஆணவம் இல்லை!

 

சாதாரணமாகத்தான் பார்த்தவன் "வெல்.. ஏசிபி சூரிய பிரகாஷ் சார்.. க்ளாட் டூ மீட் யூ! உங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். முன்னாடி நான் சென்னையில் இருந்த போது உங்க அதிரடி நடவடிக்கையில இம்ப்ரஸ் ஆனவர்களில் நானும் ஒருவன். பை த பை.. ஐ அம் த சோல் ப்ரோப்பரைட்டர் ஆஃப் ஆதி சேனல் ஒன்ஸ்.. ஐ அம் ஆதித் நிகேதன்!" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

எந்த இடத்திலும் எம்பியின் மகன் என்றோ அருணாச்சலத்தின் மகன் என்றோ அவன் குறிப்பிடாததை குறித்துக் கொண்டது எஸ்பி மூளை!

"இந்த மாதிரி சரக்கு எடுத்து தான் பிழைக்கணும்னு இவருக்கு அவசியமே இல்லை சார்" என்று கதிர்வேலன் பக்கத்து நியாயங்களை எல்லாம் அவன் எடுத்துக் கூற.. ஓரமாக அமர்ந்த கதிர்வேலன் ஆதித்தின் பேச்சை எல்லாம் அமைதியாக உள்வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

"புடிச்சது அவர் வண்டி உள்ள இருந்து? பார்சல் எல்லாம் லோட் பண்ணது அவங்க ஆளுதான்.. அப்ப நான் யாரு அரெஸ்ட் பண்ண முடியும்? விசாரணை போயிட்டு இருக்கு ரெண்டு நாளுல குற்றவாளி கண்டுபிடிச்சிடுவோம். அதுவரைக்கும் அவரு இங்க தான் இருக்க முடியும்!" என்றான் எஸ்பி ஒரு கடமை தவறாதவன் என்பதாக..

"சார்.. நான் தனி நபர் ஜாமீனில் அவரை எடுக்கலாமா சார்?" என்று கேட்டவனை பார்த்தவன் ஓகே என்று அனுமதி அளித்தான்.

ஒரு பெரும் தொகையை கட்டி கதிர்வேலனை அப்பொழுதே அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

 

அந்த பெருந்தொகை செந்தில்வேலன் குடும்பத்திற்கு ஒன்றும் இல்லாத தொகை இல்லை. ஆனால் தீபாவளி நேரம் என்பதால் அடுத்தடுத்து அவர்கள் பணம் எல்லாம் இங்கே ரொட்டேஷனில் இருந்தது. இந்நேரத்திற்கு அது பெரும் தொகையை.. கூடவே அந்நேரத்திற்கு ஒரு மேஜிஸ்ட்ரேட் இடம் கையெழுத்து வாங்குவது எல்லாம் சாதாரண விஷயமா? அங்கே எல்லாம் அருணாச்சலத்தின் அரசியல் விளையாண்டது.

 

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்..

ஞாலத்தின் மாணப் பெரிது அல்லவா?

 

"பெரிய மாம்ஸ்.. ஏன் வொர்ரி? சின்ன மாம்ஸ் வந்துட்டாங்க தானே.. அவர வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. எனக்கு குகன் கூட கொஞ்சம் வேலை இருக்கு" என்று குகனை அழைத்துக்கொண்டு அவர்கள் பைக் கம்பெனிக்கு சென்றவன், "சிசிடிவி ஃபுஞ்டேஜ் இருக்கா குகன்?" என்று கேட்டான்.

 

"அதெல்லாம் வைக்கிற அளவு இது பெரிய கம்பெனி இல்லைங்க.."

"பெரிய கம்பெனியோ சின்ன கம்பெனியோ.. இம்மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கு. இனிமே விடக்கூடாது முதல்ல சிசிடிவி கேமராவ ஃபிக்ஸ் பண்ணுவோம்" என்றவன் யாரிடமும் அனுமதி எல்லாம் வாங்கவில்லை. அவனே அப்பொழுதே அதற்கான ஏற்பாட்டை ஒரு பக்கம் செய்தவன், அடுத்தடுத்து அங்கு இருந்தவர்களை எல்லாம் பிடித்து தன் விசாரணையை ஆரம்பித்தான்.

 

சூப்பர்வைசர் காலையில்‌ சென்றவர் அதன் பின் வரவில்லை என்பதை அறிந்தவன் அவர் பற்றிய விவரங்களை சேகரித்தான்.

 

"அவரு எங்க சொந்தக்காரர் தான்.. ரொம்ப நல்ல மனுஷன். அப்பா கூட ரொம்ப நாளா இருக்காரு.." என்றதும் 

 

"சொந்தக்காரங்கவங்கள தான் மொதல்ல நம்ப கூடாது குகன். கூடவே ஒரு தொழில் நடத்தும் போது நம்ம கண் எல்லா இடத்திலும் இருக்கணும் குகன்" என்று வியாபாரத்தின் அரிச்சுவடியை போதித்தான் ஆதித்.

 

பின் அவரின் வீட்டுக்கு குகனை அழைத்து சென்றான்.

 

அவர் மனைவியோ குகனை ஆச்சரியமாக பார்த்து "என்ன தம்பி.. எதுவும் விஷயமா? மாமா இன்னும் வீட்டுக்கு வரலையே.. ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டு இருவரையும் உபசரித்தார்.

 

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆதித்தை பார்த்தான் குகன்.

 

"இல்ல ஆண்ட்டி.. நான் புதுசா இந்த தொழிலை கத்துக்கலாம்னு சென்னையில் இருந்து வந்து இருக்கேன். இவங்களுக்கு தூரத்து சொந்தம்! கதிர் அங்கிள் கொஞ்சம் பிஸியா இருக்காரு.. அவருக்கு அப்புறம் இந்த விஷயம் எல்லாம் ரொம்ப நல்லா தெரிஞ்சது உங்க வீட்டுக்காரரு தான்னு குகன் சொன்னார். அதுதான் அவர்கிட்ட கொஞ்சம் டீடைல்ஸ் கேட்கலாம்னு வந்தேன்" என்றவன் அந்த வீட்டை ஆராய..

 

புதிதாக இருந்த டபுள் டோர் ஃபிரிட்ஜ் அவனின் கண்களை கவர.. பேச்சுவாக்கில் விசாரிப்பது போல "சூப்பர் டிசைன் ஆன்ட்டி.. இந்த கம்பெனி ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் காஸ்ட்லி" என்று சூப்பர்வைசரின் மனைவியிடம் பேசிக்கொண்டே பார்த்தவன் கண்களாலே குகனிடம் சேதி சொன்னான்.

 

இத்தனை வருடம் அப்பா கூட இருந்தும் ஓரளவு நெளிவு சுழிவுகளை கற்றுக் கொண்டிருந்த குகனுக்கு ஆதித் சொன்ன செய்தியை புரிந்துகொள்ள அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாதே என்பது போல தலையசைத்தவன் "எங்க ஆன்ட்டி சார இன்னும் காணோம்?" என்றான்.

 

"தீபாவளி சமயம் எல்லாம் அவர் வீட்டில் இருக்கவே மாட்டாருங்க தம்பி.. காலைல வேலைக்கு போனாருனா இராவு தாமதாமா தான் வருவாரு.. இது தெரியுமே குகன் தம்பிக்கு" என்றதும்.

 

குகன் சமாளித்து, "இல்லிங்க அய்த்த.. மாமா இன்னைக்கு ஜவுளி எடுக்க போனும்னு சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டாய்ங்க.. நீங்க வீட்ல இருக்கீங்களா இல்லையோன்னு சந்தேகத்தில் தான் இவர கூட்டியாந்தேன்" என்றான்.

 

"ஜவுளியா? நாங்க பத்து நாளைக்கு முன்னமே எடுத்துட்டோமே தம்பி.. அப்பவே போனஸ் போட்டது சொல்லி இந்த முறை நல்லாவே ஜவுளி எல்லாம் எங்களுக்கு வாங்கி தந்தார். கூடவே அடகுல இருந்த என் நகைகளையும் மீட்டுக் கொடுத்தார். இத்தனை வருஷத்துல எந்த வருஷம் தான் நிறைய ஃபோனஸ் கொடுத்ததா சொன்னாரு" என்று வெள்ளந்தியாக அனைத்தையும் அவர் உளறி வைக்க கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரிந்து போனது சூப்பர்வைசரின் சூப்பர் தந்திர செயல்கள்.

 

"இந்த ப்ரிட்ஜ் ரொம்ப நல்லா இருக்கு.. இந்த மாடல நான் ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?" என்று ஆதித் கேட்க..

 

அவரும் "நல்ல எடுத்துக்கோங்க தம்பி.. இதுல என்ன‌ இருக்கு?" என்று அனுமதி கொடுக்க.. அவரோடு சேர்த்தே அந்த ஃப்ரிட்ஜையும் போட்டோ எடுத்துக் கொண்டவன் "குட் நைட்" தலையசைத்து வெளியில் வந்தான்.

 

குகனை நேருக்கு நேராக பார்க்க "எங்க தப்புன்னு புரியுது. ஆனா இத எப்படி நம்ம நிரூபிக்கிறது?" என்று கேட்டான் குகன்.

 

"வெரி.. சிம்பிள்.. மயிலே மயிலேனா இறகு போடாது. நாம தான் பிடுங்கணும்!" என்றவன் குகன் மூலம் கதிர்வேந்தனின் நம்பரை வாங்கி அவனிடம் உள்ள அப்ரண்டீஸ்களுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு இவன் வேலை

கொடுக்க.. சந்தோசத்தோடு வந்த அந்த பெரிய உருவங்கள் அலேக்காக சூப்பர்வைசரை தூக்கி வைத்து கும்மி அடித்ததில் அனைத்து விபரங்களும் வெளிவந்தன..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top