கண்ணம்மா 5
என்னதான் தமிழ்நாட்டில் பெரிய அரசியல்வாதியின் மகனாக இருந்தாலும், அங்கே அத்தனை பேர் ஆட்களுக்கு கீழ் சீமானாக ஆதித் வளர்ந்திருந்தாலும், ஆஸ்திரேலிய வந்த பிறகு அவனது தொழில் மட்டுமே அவனுக்கு பிரதானமாக இருக்க.. அதிலும் வெளிநாட்டில் அவரவர் வேலைகளை அவரவரே பார்த்திருக்க.. அந்த நாட்டு தட்ப வெப்பநிலை மட்டுமல்ல இம்மாதிரியான கலாச்சாரங்களும் அவனுக்கு பிடித்து விட்டது.
அவனும் அப்படியே பழகி இருந்தான். அதனால் பெரிதாக வேலையாட்கள் கிடையாது. தினமும் ஒரு ஆள் வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்வதோடு சரி. மற்றபடி இவனுக்கு தேவையானதை இவனை சமைத்துக் கொள்வான். இல்லை ஏதாவது இந்தியன் ஹோட்டலை பார்த்து உணவு அருந்தி கொள்வான்.
அதுவும் தாரா இவனுடன் வாழ்க்கையில் வந்த பிறகு பெரும்பான்மையான நேரம் உணவை அவள் பார்த்துக் கொண்டாள். ஆனாலும்.. எப்பொழுதும் போல காலையில் ஒரு ஆள் மட்டும் வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்று விடுவான்.
சில நேரம் இவர்கள் இருக்கும்போது வருவான். சில இவர்கள் வேலைக்கு சென்றாலும் அந்த வேலையாள் வந்து அவன் வேலையை செய்து விட்டு செல்வான். அன்றும் அப்படித்தான் அவன் வீட்டுக்குள் வரும் நேரம் யாரோ நாலைந்து பேர் ஆதித்தை தூக்கி கொண்டு செல்வதை பார்த்தவன், ஸ்தம்பித்தான்!! அதன்பின் போலீசுக்கு தகவல் கூறினார்.
தமிழ்நாடு போலீஸ் போல மெதுவாக வரவில்லை என்றாலும் அவர்களால்.. ஆதித் எங்கு சென்றான் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சிசிடிவி கேமரா ஒன்றில் கூட அங்கு நடந்தது எதுவும் பதிவாகவில்லை. அனைத்தையும் ஜாமர் வைத்து கிளியர் கட்டாக செய்திருந்தனர் மருது மற்றும் வேந்தன் கூட்டணி.
அதனால் ஒருவேளை வேறு எங்கேயும் அவன் சென்று இருக்கலாம் என்ற வகையிலும் விசாரிக்க.. எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதை அப்படியே அருணாச்சலத்திற்கு அவர்கள் கடத்தி இருக்க.. அங்கே அவரோ துடிதுடித்து போனார்.
ஒற்றை பையன் மாயமாய் மறைந்தது எண்ணி சந்திரிகாவுக்கு நெஞ்சே வெடித்தது. அவருக்கும் அதே நிலைமைதான். ஆனால் இருவருக்கும் கொஞ்சம் கூட இது தாரா வீட்டு நபரால் செய்யப்பட்டிருக்கும் என்று எண்ணம் வரவே இல்லை. அவர்கள் மத்திய தரப்பினர் தானே என்ற எண்ணம்.
அந்த சமயம் செழியனும் அவரோடு இல்லாமல் அவர்கள் கட்சியின் சார்பாக சூறாவளி பிரச்சாரம் செய்ய வட மாநிலம் பக்கம் சென்று இருந்ததால்.. அவனையும் அழைக்க முடியாத நிலைமை.
அப்போதுதான் கோயம்புத்தூரில் ராஜ குடும்பமான மோகன ராஜனை அழைத்து உதவி கேட்டார்.
வெகு நாள் பிறகு நண்பனின் பேச்சு அதுவும் மகன் காணாமல் அவனின் குமறல் கேட்டு தன்னால் முடிந்த உதவி செய்வதாக வாக்களித்த மோகன ராஜன் அவனை கண்டுபிடித்த தர தேவேஸ்வர ராஜனிடம் கூறினார்.
தேவ் ஜி… என்றால் தொழில் வட்டாரத்தில் மிகப் பிரபலம்!!
"நான் என்ன காணப்போன போனவர்களை தேடி கண்டுபிடித்து தரேன் இங்க போர்டா பா வச்சிருக்கேன்! எனக்கே என் வேலை அவ்வளவு இருக்கு. இதுல இந்த நந்தா வேற ஆஸ்திரேலியா போய் உட்கார்ந்து இருக்கான்.." என்றவன் "இருங்க.. இருங்க.. நீங்க சொன்ன உங்க பிரண்டோட பையனும் ஆஸ்திரேலியா தானே?" என்றதும் ஆமாம் என்றார மோகனராஜன்.
"அப்போ விடுங்க நான் நந்தாவுக்கு ஃபார்வேர்ட் பண்ணிடுறேன்" என்றவன் அந்த விஷயத்தை நந்தாவுக்கு தெரியப்படுத்தினான்.
தேவின் தம்பி என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரே நாளில் ஆதித் கடத்தப்பட்டது பின்பு இங்கிருந்து தனி விமானத்தின் மூலமாக மதுரைக்கு சென்று இருக்கிறான் என்பது வரை தகவலை கண்டுபிடித்து அண்ணனிடம் சேர்ப்பித்தான் "வெல்டன் நந்தா.." என்று அண்ணனின் பாராட்டில் உச்சிக் குளிர்ந்தான்.
"மதுரைக்கு ஏன் இவனை கடத்திட்டு போனாங்க?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவனுக்கு பதில் கூறினார் மோகனராஜன் மதுரையில் தான் அவன் காதலிக்கும் பெண் இருப்பதாய் என்று!
அப்பொழுது இரண்டும் இரண்டும் நான்கு என்பதாய் கணக்கை போட்டவன் "இந்த கௌரவ கொலை.. பிடிக்காத திருமண கொலைகள் எல்லாம் மதுரை தேனி கம்பம் ராமநாதபுரம் இந்த மாதிரி மாவட்டங்களில் அதிகமாக நான் கேள்விப்பட்டு இருக்கேன் பா.. ஒருவேளை அந்த பெண் குடும்பத்தார்களால் கூட இவனுக்கு ஆபத்து வந்து இருக்கலாம்" என்று உள்ளதை சொல்ல..மோகனராஜன் பதறிவிட்டார்.
"தேவ்.. என் பிரண்டுக்கு இவன் ஒரே ஒரு பையன் டா. அவனை அங்கிருந்து எப்படியாவது அவனை மீட்டுடனும் டா" என்று பதறினார்.
இப்படி இவர்களெல்லாம் பதறி கொண்டு அவனை காப்பாற்றும் நிலைமையில் எல்லாம் ஆதித் நிகேதன் இல்லை. அவன் ரொம்ப கூலாகவே தான் இருந்தான்.
முதலில் வேந்தன் கேட்ட கேள்வியில் போது திடுக்கிட்டாலும் அழகாய் சிரித்தவன் "வேலை பார்க்கிற பொண்ண மேரேஜ் பண்ணிக்கல சார். நான் காதலிச்ச பொண்ணை தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ஹஸ்பண்ட் ஆபிஸ்ல வைஃபும் வேலை பார்க்கிறது தப்பா சார்?" என்றவன் கேள்வியில் மருதுசுந்தரம் உருவம் உயர்த்தினான் என்றால் வேந்தனுக்கு இவன் பேச்சை கண்ட மாத்திரத்தில் ஒரு மெச்சுதல்.
ஆளைப் பார்த்தவுடனே எடை போடுபவன் அல்லவா அவன்? அதுவும் தீபதாராவிடம் கதிர் தனியாக கேட்டிருந்த அத்தனை விஷயத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காதல்.. ஒரு வருடமாய் ஒரே வீட்டில் ஜாகை.. என்று அனைத்தும் தெரிந்திருந்தான் வேந்தன்.
ஆனால் அவனின் காதலின் உறுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவே தான் இந்த கடத்தல் நாடகம்.
"ஒன்றுமில்லாதவளாக தாரா தெரிந்தாலும் அவளுக்கு பின் நாங்கள் எல்லாம் இருக்கிறோம். இந்த காதல் எல்லாம் எங்களுக்கு சரிவராது ஓடிவிடு!" என்று மிரட்டும் தொணியாக தான் வேந்தனின் நடவடிக்கைகள் இருக்க.. அனைத்தையும் தன் சில் பார்வையாலும்.. கூல் ஸ்மைலாலும் தகர்த்து எறிந்தான் ஆதித்.
அவனை மேலும் கலவரப்படுத்தத்தான் "டேய் அவனை மதுர தூக்கிட்டு வா.. இங்கன வச்சு நான் கவனிக்கிறேன்" என்று மருது விடும் சொன்னான் வேந்தன்.
"வாவ்.. எல்லாரும் மாப்பிள்ளை அழைப்பு சாரட் வண்டியில் தானே வைப்பாங்க சார்.. நீங்க என்ன சார்டட் ப்ளைட்டில் வச்சிருக்கீங்க.. இன்ட்ரஸ்டிங்!! ஐ அம் இம்பர்ஸ்ட்!" என்று அருகில் இருந்த மருதுவை பார்த்து இவன் சிரிக்க..
"டேய் உன்னை நாங்க கடத்திட்டு போறோம் டா!" என்று மருது ஆதித்தின் இந்த நிதான பேச்சில் அவனை கொலை வெறியோடு பார்த்தான்.
"குட்.. குட்.. அப்பப்போ இது ஞாபகப்படுத்திக்கோங்க கிட்நாப் சார்.." சிரித்தான் ஆதித்.
"ஏன்.. இல்லாட்டி நீ மறந்து விடுவியோ?" என்று மருது நக்கலாய் கேட்க..
"ஞாபகப்படுத்திக்க சொன்னது எனக்கு இல்ல கிட்னா சார். உங்களுக்கு! ஏன்னா எனக்கு அந்த பீலிங் நீங்க கொடுக்கல.. மாப்பிள்ளைய அழைச்சிட்டு போற மாதிரி தான் கொடுக்குறீங்க.. குட்.. குட்! எங்க மாமனார் வீட்ல எனக்கு தல தீபாவளி!" என்றவன் அருகில் இருந்து அலெக்ஸாவிடம்
"அலெக்ஸா! பிளே தி சாங்.. தீபாவளி தல தீபாவளி.." என்றதும் மருதுவின் ஃபோனில் கனெக்ட் செய்யப்பட்டிருந்த அலெக்சாவோ ஆதித்தின் வாய்ஸூக்கு கட்டுப்பட்டு அப்பாடலை ஒளிபரப்ப..
அதைக் கேட்டு ரசித்து தோளை குலுக்கியப்படி மெல்ல நடனம் புரிந்தவன், பின் ஃப்ளைட் டேக் அப் ஆனதும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே வந்தான்.
அது மட்டுமல்ல.. "கிட்னாப் சார் உங்க ஃபோனை கொடுங்க" என்று மருது ஃபோனை வாங்கி அதில் அவன் பிளே லிஸ்டில் இருக்கும் பாடல்களை எல்லாம் ஓட விட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
"உங்க கலெக்ஷன் ஒண்ணுமே நல்லா இல்ல சார்! உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா?" என்று கேட்டதும் அவன் இல்லை என்று முறைக்க..
"எப்படியாகவும்? இல்ல எப்படி ஆகும்னு கேட்கிறேன்? பாட்டு லிஸ்ட்ல ஒரு காதல் சாங் காணும்! எல்லாம் முரட்டு குத்து சோக பாட்டு வச்சிருந்தீங்க.. பின் எப்படி ஆகும்னு கேக்குறேன்? நீங்க நைட்டீஸ் கிட்டா கிட்னா சார்?" என்று மீண்டும் மருதுவை வம்புக்கு இழுக்க..
"டேய் வேந்தா.. எல்லாம் உன்னால டா! இப்படி ஒருத்தன் கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டு நீ அங்க நிம்மதியா இருக்க இல்ல.. வந்து இருக்குடா உனக்கு!" என்று புலம்ப மட்டுமே முடிந்தது மருதுவால்.
"ஆமா கிட்டினா சார் நீங்க எல்லாம் என் பொண்டாட்டிக்கு என்ன உறவு வேண்டும்?" என்று கேட்க..
"வாடா வகையா வந்து மாட்டினியா?" என்று நினைத்த மருது, வேந்தன் குடும்பத்துக்கும் தாராவின் குடும்பத்திற்கும் அந்த ஒன்று விட்டு இரண்டு விட்டு உறவு முறைகளை சொல்லி.. வேந்தன் மூலம் எப்படி தாரா குடும்பம் தங்கள் குடும்பத்திற்கு உறவானது என்பதையும் அவன் சுற்றி சுற்றி சொல்ல.. தலைசுற்றி போனது ஆதித்துக்கு.
பெரிய கும்பிடு போட்டவன் "சுருக்கமா நீங்க எனக்கு சகல.. அந்த திரையில் பேசினவரு எனக்கு மச்சான்! அவ்வளவு தானே? புரிஞ்சிருச்சு!!" என்றவன் தனக்குள்ளாகவே 'ஏண்டா உறவு முறையை இவ்வளவு சிக்கலாகுறீங்க? சிம்பிளா அப்படி சொல்லிவிட்டு போனாதான் என்னடா?' என்று முணுமுணுத்துக் கொண்டான்.
இப்படியாக இவன் மருது ஒரு வழியில் படுத்தினான் என்றால்..
மருது வேற வகையில் அவனை படுத்தி எடுக்க.. ஒரு வழியாக வந்து சேர்ந்தனர் மதுரைக்கு.
நேராக மருதுவின் கார் வேந்தனின் குவாரிக்கு தான் சென்றது.
இம்மாதிரியான விஷயங்கள் தொழில் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் வேந்தன் குவாரியில் இருக்கும் அந்த ஆஃபீஸில் வைத்து தான் பேசுவது வழக்கம்.
ஆபீஸில் தற்று தள்ளி இருக்கும் மற்றொரு அறையில் தான் ஆதித் அமர வைக்கப்பட்டிருந்தான். சிறிது நேரத்தில் கதவு திறக்கும் ஓசையில் இவன் திரும்பிப் பார்க்க..
வேக நடையோடு வேஷ்டி சட்டையோடு வந்த வேந்தனை கண்டு "வாட் அ மேன்!" என்றபடி தன்னையும் அறியாமல் மனம் அவனை பாராட்ட..
அவனின் பார்வையை கண்ட வேந்தன் அவன் முன்னால் இருந்தி இருக்கையில் அமர்ந்து "வெல்.. ஆதித் நிகேதன்.. ஹௌ வாஸ் த ஜெர்னி?" அழகான உச்சரிப்போடு ஆங்கிலத்தில் கேட்க, அசந்து அவனைப் பார்த்தான் ஆதித்.
"சகல.. என்னை சகல வசதிகளோடு தான் கூட்டிட்டு வந்தார் மச்சான். அதனால ஜெர்னியில் எந்த பிராப்ளம் இல்ல மச்சான்" என்று உரிமையோடு பேசியவனை வழக்கம் போல உதடு கடித்து முறைத்தான் வேந்தன்.
"உறவுக்குள்ள எப்படி முறை சொல்லி கூப்பிடுவது தப்பா மச்சான்?" என்றவனை "நான் இன்னும் உன்னை உறவாக ஏற்றுக் கொள்ளவில்லை ஆதித். மோதிரம் மாத்தி தான கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஆனா அதை ரிஜிஸ்டர் பண்ணலேன்னு எனக்கு தெரியும்" என்றதும் மனது ஆதித்துக்கு திடுக்கிட்டாலும் அதை வெளியே காட்டாமல் "எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தானே.. அவள் என் பொண்டாட்டி தானே! அவளுக்கு அண்ணனா எனக்கு நீங்க மச்சான் தானே!" என்றான் இன்னும் தன் உறவை உறுதிப்படுத்தி.
அவன் இந்த உறுதி வேந்தனுக்கு பிடித்திருந்தது. காதல் கொண்டவன் என்றால் அந்த உறுதி எந்நிலையிலும் மாறாமல் திடமாய் இருக்க வேண்டும் அல்லவா? அதில் ஆதித் நிகேதனை மெச்சினான் வேந்தன்.
ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் "ஜெட்லாக் இருக்கும் ரெஸ்ட் எடுங்க! அப்புறம் பார்க்கலாம்.." என்று அங்கிருந்த அறையிலேயே ஆதித்தை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவன் ஆட்களை பார்த்து "பார்த்துக்கோங்க!" என்று சென்று விட்டான்.
வீட்டுக்கு அவன் செல்லும் வழியிலேயே அவனது ஃபோன் இசைக்க.. தெரியாத நம்பர்! யாராக இருக்கும்? என்றவன் எடுத்து காதில் வைத்து கனமே "இட்ஸ் தேவ் ஹியர்.!" என்று ஆளுமையான குரலில்..
"எந்த தேவ்?" என்று நெற்றி சுருங்க கேட்டான் வேந்தன்.
"மதுரையில வெற்றி வேந்தன் எப்படியோ? அதே போல கோயம்புத்தூருக்கு இந்த தேவேஸ்வரராஜன்!" என்றவன், "உங்க குறுக்கு விசாரணை எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா.. சீக்கிரமே ஆதித்தை ரிலீஸ் பண்ணிடுங்க! அவங்க அம்மா அவனை காணாம ரெண்டு நாளா சாப்பிடாம இருக்காங்க.." என்றதும் வேந்தன் புருவமோ மெச்சுதலுடன் உயர்ந்தது.
"அது எப்படி எங்க வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைய.. அவ்வளவு சீக்கிரம் விடுவோம்? தீபாவளி வேற வருதே!" என்றான் வேந்தன் ஆதித்தை தாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக…
"ஹா.. ஹா.. மாப்பிள்ளையா ப்ரோமோட் ஆகிட்டானா.. அப்போ சந்தோஷம்! மாப்பிள்ளைய தல தீபாவளி முடிச்சே அனுப்புங்க. நான் அங்கிள் கிட்ட இன்பார்ம் பண்ணிடுறேன்" என்று சிரிப்பு உடனே ஃபோனை வைத்தான் தேவ்.
செந்தில்வேலன் சந்தேகப்படுவது போல ஆதித் ஒன்றும் அவ்வளவு மோசமானவன் இல்லை. அவனின் கடந்த காலத்தை எல்லாம் விசாரித்த வேந்தன், அவன் சறுக்கி ஒரே ஒரு இடம் விநாயக் ரணசிங்க மட்டுமே! மற்றபடி அவன் நல்லவனே என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
மேலும் அவனது காதலின் ஆழத்தை சோதிக்க தான் இத்தனை டெஸ்டுகள்! என்ன இருந்தாலும் பணக்கார வீட்டு பிள்ளை மாறிவிட்டால் என்ன செய்வது என்ற மத்தியதர தந்தையின் மனதை புரிந்து தான் இவ்வாறு செய்தான் வேந்தன்.
அன்று இரவே செந்தில்வேலனிடம் பேசினான் வேந்தன்.
"சொல்லு வேந்தா அந்த பையனை பற்றி விசாரிச்சிட்டியா? நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது தானே! நானா சொன்னா உன் தங்கச்சி கேட்க மாட்டா.. நீ சொன்னினா கண்டிப்பா கேட்டுக்குவா! கொஞ்சம் நீயே வந்து புத்தி சொல்லிட்டு போயா.." என்று அவர் பேச அமைதியாக இருந்தான் வேந்தன்.
"என்ன வேந்தா.. ஒண்ணுமே பேச மாட்டேங்குறவன்?" என்றதும் "நீங்கள் ஒரு முடிவு எடுத்துட்டு.. அந்த முடிவை என்னை செய்ய வைக்க சொல்றீங்க சித்தப்பு!" என்று சிரித்தான் வேந்தன்.
பின் எஃகு குரலில் "அது என்னால முடியாது! என்கிட்ட ஒரு விஷயத்தை கொடுத்தீங்கன்னா.. அது நல்லதா கெட்டதானு பகுத்துப்பார்த்து என்னால உங்களிடம் சொல்ல முடியும். ஆனா அது கெட்டது தானு நீங்க முடிவு பண்ணிட்டு.. நானும் அதை கேட்டனும்.. அதையே சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீங்க? நான் எப்படி சொல்ல முடியும்?" என்றவுடன் கேள்வியால் அவரை அசரடித்தான்.
செந்தில் வேலவனும் வாயடைத்து போனார். "நான் வேந்தன் பரம்பரை சித்தப்பு! எங்க குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியாதா?" என்றவனின் பேச்சில் வாயடைத்து போனார்.
உண்மைதான்! அவர்கள் மனதில் அரசியல்வாதியின் மகன் பெரும் பணம் பெற்றவன்.. வெளிநாடு வாழ்க்கை முறையில் வாழ்ந்தவன்.. அவன் எப்படி தங்கள் பெண்ணோடு ஒத்துக் குடும்பம் பண்ண முடியும்? அதுமட்டுமின்றி.. குடும்பம் என்றால் அது வீட்டுக்குள் மட்டுமல்ல.. அதைத் தாண்டிய உறவுகளும் விழாக்களும் விசேஷங்களும் வரிசையாக இருக்கும். அனைத்துக்கும் அவனால் ஈடு கொடுத்து செய்ய முடியுமா? இவளுக்கு பின்னே இருக்கும் பெண்களுக்கு திருமணம் என்றால் மூத்த மருமகன் மகனாய் நிற்க வேண்டுமே.. இவனால் நிற்க முடியுமா? எப்படி அனைத்து கேள்விகளும் செந்தில்வேலனின் நெஞ்சில் இருந்தது.
இதற்கு விடை காணவோர் யார்??
அவரவர் கேள்விக்கு அவரவரே அதற்கான விடையினை தேடி தெரிந்து கொண்டால் மட்டுமே அந்த விஷயத்தில் முழு மனதோடு நிற்க முடியும்! ஒரு சில சந்தேகங்கள் இருந்தால் கூட அதுவே விஸ்தாரமாகி ஒவ்வொரு செயலையும் குற்றமாக்கி பார்க்கும்.
அதனால் இவர் தெரிந்து தெளிந்து வரட்டும் என்று முடிவெடுத்த வேந்தன் "நான் ஒரு விஷயம் சொல்றேன் சித்தப்பு.. என் பொறுத்த வரைக்கும் அந்த பையன் ரொம்ப தெளிவா இருக்கான். அதாவது…" என்று அவன் ஆரம்பிக்கும் முன்னமே..
"என்ன வேந்தா.. நீயே இப்படி சொல்ற? அப்படி என்ன தெளிவா இருக்கான். என் பொண்ணு வேணுமாமா அவனுக்கு? என் பொண்ணுக்கு புருஷனும் சொல்லி சொந்தம் கொண்டாடுகிறானா?"
என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தார் செந்தில்வேலன்.
"இல்ல சித்தப்பு! அவன் தெளிவா இருக்கிறது.. உங்க வீட்டு மாப்பிள்ளைனு!"
"ஆமா மாப்பிள்ள.. பெரிய மாப்பிள்ள" என்று இவர் முணுமுணுக்க..
"ஆமா சித்தப்பு மாப்பிள்ளை தான்! பெரிய மாப்பிள்ளை தான்! உங்க பெரிய மகளின் மாப்பிள்ளை தான்.." என்றான் சிரிப்போடு.
"சொல்லாத வேந்தா.. உன் வாயால அதை சொல்லாதே! என் மருமவன் வெற்றிவேல் இருக்கும் இடத்தில அந்த பையனை எல்லாம் என்னால் வைச்சுப் பார்க்க முடியாது" என்று உறுதியாக நின்றார் செந்தில்வேலன்.
"இதுதான் பிரச்சனை சித்தப்பு! ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் இருக்கணும்னு எதிர்பார்க்காதீங்க! இவன்தான் உங்க பொண்ணுக்குனு விதிக்கப்பட்டவன்னா.. அதை யாராலும் மாத்த முடியாது!"
"சரிப்பா.. இப்ப நான் என்ன செய்யணும்? இவனை கூப்பிட்டு வந்து.. இவனுக்கு என் பொண்ண கட்டி வைக்கணும்னு சொல்றியா?" என்று கடுப்போடு தான் கேட்டார். இல்லை என்று மறுத்தான் வேந்தன்.
"என்ன வேந்தா.. குழப்புறவன்? இவன்தான் மருமவனு சொல்ற.. இவனேக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கவான்னு கேட்டா.. அதுக்கும் வேணானும்னு சொல்ற.. நான் என்னதான் செய்யறது?" என்று அழு குரலில் கேட்டார்.
"அவர மாப்பிள்ளையாக ஏற்க வேணும். அதாவது சித்தப்பு.. தீபாவளிக்கு.. அதான் அவங்க தல தீபாவளிக்கு மாப்பிள்ளையா உங்க வீட்டுக்கு அழையுங்க.. கண்டிப்பா அவரோட பழகுனீங்கன்னா உங்களுக்கு புரிதல் வரும் அவர் மேல.."
வேந்தன் பேச்சை மறுக்க முடியாமல் கேட்டவர் அதை அப்படியே வேண்டும் வீட்டில் சொல்ல அனைவரும் திகைத்தனர்.
ஒரு வழியாக சமாதானப்படுத்தி மாப்பிள்ளைய தலை தீபாவுக்கு வீட்டுக்கு அழைத்தனர்.அதாவது அவர்களுக்கு எல்லாம் இவனை பிடித்து இருந்தால் மாப்பிள்ளை! இல்லையா வெறும் விருந்தாளியாய் திரும்பி சென்று விட வேண்டும் என்ற டீலோடு அவனை அனுப்பி வைத்தான் வேந்தன்!
ஆதித் நிகேதன்.. மாப்பிள்ளையாய் அனைவரையும் கவர்வானா? இல்லை மண்ணைக் கவ்வி விட்டு சென்று விடுவானா??
வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆதித் அதிரடியாக தாரா
வின் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்த.. அனைவரும் திகைத்து நெஞ்சின் மேலே கை வைத்து விட்டனர்.
தலை தீபாவளி அட்ராசிட்டீஸ் இனி மாப்பிள்ளையோடு!!
