மாமனே…. 21
"ஐ லவ் யூ மாமா!" இந்த வார்த்தைகள் அவன் மனதில் சொல்லவெணா தாக்கத்தை ஏற்படுத்தியது!!
இதே வார்த்தைகளை வேறொரு வாயிலிருந்து கேட்க அவ்வளவு ஆசையாய் ஆவலாய் தவமாய் இருந்த காலமும் உண்டு!!
ஆனால் இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தது போல இவனின் காதல் இவளே என்று இருக்கும் போது எப்படி வேறு ஒருத்தி வருவதாம்? இல்லை காதல் தான் சொல்வதாம்?
ஆம்!! இவளே இவனின் காதல்!!
மொத்த காதலையும் அவளுள் காட்ட அவனுக்கு ஆவல் பிறந்தது!!
அதற்கு முன்.. அவனுக்கு தெரிய வேண்டியது. இவள் எங்கே எப்போது தன்னை சந்தித்தாள்? ஏன் தன்னை காதலித்தாள்? அதுவும் இரண்டரை வருஷமாக வா? அதெல்லாம் தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.
அந்த பரண் வீட்டில் அழுத்தமான போர்வைகள் மட்டுமே.. அதை விரித்து போட்டவன், சிறு சிறு ஜன்னல்கள் உள்ள இடத்தில் அமர்ந்து, மனைவியை தன் இரு கால்களுக்கிடையே அமர்த்தி நெஞ்சில் சாய்த்து கொண்டு, தன் வலது கரத்தால் அவளது வலது கரத்தை பற்றியவன் மெல்ல ஒவ்வொரு விரல்களால் முத்தமிட்டு "சொல்லுங்க அம்மிணி எப்போ எங்க என்ன பார்த்தீங்?" என்று கேட்டவனின் குரல் அத்தனை குழைந்து வந்தது!!
"நீங்க எப்ப மதுரைக்கு வந்தீங்க? வந்து என்ன செஞசீங்க? அதை நீங்க சொல்லுங்க?? அப்படி நீங்க சொல்லும்போதே என்னுடைய வருகையும் உங்களுக்கு தெரியும்!" என்றாள்.
"மூன்றரை வருஷம்னு சொல்லலாம் நான் மதுரைக்கு வந்து. என்ன தொழில் செய்றதுன்னு எனக்கு ஃபர்ஸ்ட் புரியலிங்.. மாமா எல்லாரும் ஒவ்வொரு தொழில் பண்ணவும் அதையெல்லாம் வந்து பார்த்துக்க சொல்லி கேட்டாங்.. எனக்கு கொண்டான் கொடுத்தான் வீட்டில் வியாபாரம் வச்சுக்க பிடிக்கலிங்.. அதனால அவங்க செய்யாத ஒரு தொழிலை செய்யணும்னு நினைச்சேனுங்.. அப்பதான் அடகு கடை.. அந்த பிசினஸ் யோசிச்சேனுங்!"
"முதல்ல பெரிய மாமா அவருக்கு தெரிஞ்ச ஒரு பிரைவேட் பைனான்ஸ் கம்பெனில என்னை சேர்த்து விட்டாருங்.. அங்கு லோன் கொடுக்கறதும் உண்டு. நாலு மாசம் அங்க வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் தனியா கடை தொடங்கலாம் நினைக்கும் போது, மாமா திரும்பவும் அவரு தெரிஞ்ச காலம் காலமா நகை அடகு வைக்கிற ஒரு நண்பர் கிட்ட சேர்த்து விட்டாருங்.. அங்கேயும் ஒரு ரெண்டு மூணு மாசம் இருந்தேனுங்.. அப்பதான் அந்த மொதலாளி சொன்னாருங், 'தம்பி நகை மதிப்பீட்டாளர் அப்படின்னு ஒரு கோர்ஸ் இருக்கு அதை பண்ணீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்!' என்று.."
"எனக்கும் அது சரினு தோணுச்சிங்… ஜீவன் பாலிடெக்னிக் படிக்கிற கல்லூரியிலேயே இதற்கான கோர்ஸ் இருக்கிறதா வந்து சொன்னான். சரி நாம ஏன் அதுல சேர கூடாதுனு நினைச்சு.. அதுல சேர்ந்திட்டேனுங்! சாயந்திரம் வந்தா கடைக்கு போயிடுவேனுங்க.. கொஞ்ச நாள்ல கோர்ஸ் முடிஞ்சு எனக்கு ஒரு அளவு அனுபவம் வந்ததும் சொந்த கடை போட்டேனுங்க! அவ்வளவுதானுங்..!! இப்ப நீங்க சொல்லுங்??" என்று அவளை தன் பக்கம் திருப்பி கேட்க…
"ஏற்கனவே என்னுடைய என்ட்ரி வந்துடுச்சிங்களே மாமா.. நீங்க கவனிக்கலைங்களா?" என்றால் ஒரு மர்ம சிரிப்போடு!
"எங்கே இவள் வந்தாள்? எப்படி தவற விட்டோம்? முதலில் முத்தூட் பிரைவேட் அந்த கம்பெனியில் இவ இல்லை.. அடுத்த வேலை செய்தது நகை அடகு கடை.. அதிலும் பெண்களே இல்லை. வேறு எப்படி…?" என்று வாய்விட்டு யோசித்துக் கொண்டிருந்தவன், 'இவள் ஜீவனின் தோழி என்றால்… அவன் பாலிடெக்னிக்.. நானும் அங்க தான் கோர்ஸ் படிச்சேன்… அப்போ.. பாலிடெக்னிக்! அங்கயா? அப்போ வா? எப்படி?" என்று சரியாக பதில் சொன்ன மாணவன் போல அவன் முகத்தில் அத்தனை பிரகாசம்!!
"ஆமா.. அதே பாலிடெக்னிக் கல்லூரியில் தான் நானும் படிச்சேன். நீங்க ஜீவன் கூட சேர்ந்து இருந்திருந்தா உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும். நீங்கள் தான் அப்போ ஏதோ வசூலுக்கு வந்தவன் மாதிரி தானே விரைப்பா வந்தீங்க..
ஸ்டுடென்ட் மாதிரி வந்தீங்க?
ஏதோ எங்களுக்கு வகுப்பு எடுக்கிற லெக்சரர் மாதிரி வந்தீங்க! அதனால் உங்களை பார்த்த நான் பயந்து ஜீவன் கிட்ட கேட்க.. அவனும் அத்தனை சிரிப்புடன், நீங்க நகை மதிப்பீட்டாளர் கோர்ஸ் இருக்குல அதுல படிக்கிறிங்கனு சொன்னான். அதன் பின் அடிக்கடி நிறைய முறை உங்களை பார்த்திருக்கிறேன்" என்றவளின் முகத்தில் ஒரு நவட்டு சிரிப்பு!!
'என்னவோ தன்னைப் பற்றி நினைத்திருக்கிறாள்?' என்று புரிந்தவன்.. அவளது மூக்கோடு அழுத்தமாக தனது மூக்கை உரசி இதழ்கள் இணையும் சிறு இடைவெளியில்.. "சொல்லுங்க அம்மிணி என்ன நினைச்சீங்க என்ன பத்தி?" என்று கேட்டான்.
"அதுவா.. எப்பவும் இழுத்து மூடப்பட்ட அரசாங்க ஆபீஸ் போலவே இருக்கும் உங்க முகம்! அதுவும் இந்த மீசைக்கு அடியில் இந்த உதடு இருக்குதா இல்லையானே தெரியாத அளவுக்கு வச்சிருப்பீங்க… இதழ்கள் இருக்கிறதா அவை சிரிக்குமானு எனக்கு நிறைய நாள் டவுட்?" என்றதும் அவளை பார்த்து சிரித்தவன் அதரங்களை அவள் புறம் நோக்கி "செக் பண்ணிக்கோங்க அம்மிணி?" என்று சரசமாக கேட்க.. ஆசையோடு பார்த்தவளின் இதழ்களில் இதழ்களால் உரசி, "இப்போ நம்புறீங்களா?" என்றதும், "போங்க மாமா!" என்று அவள் முகத்தை அவன் கழுத்தில் புதைத்துக் கொண்டான்.
"இதுக்கே வெக்கப்பட்டு நீங்க முகத்தை மூடிக்கிட்டா.. மிச்ச கதையெல்லாம் என்ன ஆகிறதுங் அம்மிணி?" என்றதும் அவள் நாணத்தோடு அவன் புஜத்தை கிள்ள "இல்லிங்.. நான் கதையை சொன்னேனுங்க! நீங்க என்ன நினைச்சிங்?" என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.
'நான் ஒன்னும் நினைக்கல!' என்ற ஒரு கதையை தொடர்ந்தாள்.
"நானும் ஜீவனும் அதிகம் பேசுகிறதே அப்போ உங்களை பத்தி தான். நீங்க லவ் பிரேக் அப் ஆகி…" என்று மெல்ல நிமிர்ந்து கணவனை பார்க்க அவன் முகத்திலும் எந்த வித பாவமும் இல்லை. 'நீ மேலே சொல்!' என்பது போலவே பார்த்திருந்தான், "அதனால இங்கே வந்துட்டீங்க.. யார் கிட்டயும் ரொம்ப பேச மாட்டீங்க அப்படின்னு சொல்லுவான்! அவன் மட்டும் தான் உங்க கூட இருக்கேன் இன்னும் உங்களை பற்றி தான் நிறைய பேசுவான்".
"லவ் ஃபெயிலியர் சகஜம் தான்! ஆனா அதிலேயே சிக்கி மது போதைன்னு போகாம இப்படி உங்களை நீங்களே மாத்திக்கிட்ட விதம் எனக்கு பிடித்தது. சில பேரு எப்படி அவ என்னை விட்டு போகலாம்னு சொல்லிட்டு பழிவாங்க கிளம்பிடுவாய்ங்க.. அது போல செய்யாம, எங்கு ஊருக்கு வரும் போது அவங்களை பார்த்தால் அந்த பெண்ணின் வாழ்வில் எதுவும் பிரச்சினை வரும்மோனு நீங்கள் ஒதுங்கி நின்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது!! இந்த மாதிரி நிறைய பிடிச்சது…" என்று அவன் மூக்கு தன் தளிர் விரல்களால் பிடித்து ஆட்டினாள்.
"நீங்க கோர்ஸ் முடிச்சுட்டு போறதுக்கு அப்புறமும் நாங்க காலேஜ்ல இருந்தோம் இல்லையா.. அந்த ஒரு வருஷம் காலேஜும் போயிட்டு உங்களோட கடைக்கு வருவேன்னு ஜீவன் சொல்வான். என்னைய படிக்க கூட விட மாட்டேங்றாரு.. கடையில உட்கார வைச்சிடுறாரு.. ஒரு கிரிக்கெட்ல விளையாட அனுப்ப மாட்டேங்குறாரு.. ஓவரா உங்கள பத்தி புகார் சொல்லுவான். அதிலும் அவன் ஒரு பாட்டு பாடுவான் பாருங்க.." என்று சிரித்தவள் அதை பாடி காட்டினாள்.
//பெத்து எடுத்தவ தான்…
என்னை எங்க மாமான்கிட்ட தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்கு தான்..
என்னைய வைச்சு அடகு கடை
நடத்திக் கிட்டா…
பெத்தவ மனசு கல்லாச்சு…
இந்த பிள்ளையின் வாழ்ககை போயாச்சு..
அதுவும் என் ராட்ஷஸ மாமனால பாழாச்சு!!
நான் படிச்சு ரொம்ப நாளாச்சு…//
"அதிலும் அந்த ராட்சச மாமான்னு சொல்லுவான பாருங்களேன்.. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்" என்றவள் இன்னும் அணைந்து அமர்ந்தாள்.
"நான்தான் அவனை திட்டி அதட்டி உருட்டி அவர் தனியா இருக்கார் தானே.. அவரை நீ பார்த்துக்கோனு ஆயிரம் சமாதானம் சொல்லி அனுப்புவேன்! அப்பதான் கேட்டான்
"வர வர என்னடி என் மாமனுக்கு நீ சப்போர்ட் பண்ற?" என்று!
"என்ன டா நீனு நானு பிரிச்சு பேசுற.. நாம அப்படியே பழகி இருக்கோம்? நம்ம ராட்சசன் மாமானு சொல்லுடா!" என்றவளே அவன் வித்தியாசமாக பார்க்க அவளோ வாயே திறக்கவில்லை.
"அதன்பின் நான் படிப்பு முடித்து சிறிது காலம் பயிற்சிக்காக மதுரையிலேயே மூணு மாசம் ஒரு கம்பெனியில் வேலை செஞ்சேன். நித்தமும் உங்கள எப்படியாவது பார்த்திடுவேன். இல்லைன்னா ஏதாவது ஒரு வேலை போல பஜாரில் இருக்கும் உங்க கடை வழியாகத்தான் செல்வேன்.. உங்க தரிசனத்திற்காக…!!" என்றாள் கண்களில் மட்டுமல்ல குரலிலும் மையலை தேக்கி!!
'ஒரு பெண் இத்தனை ஆழமாக தன்னை நேசித்திருக்க முடியுமா?' என்று உச்சக்கட்ட வியப்பில் அவளைப் பார்த்து இருந்தான். மெல்ல அவளது அதரங்களை அவன் வருட "என்ன மாமா?" என்று கேட்க வந்தவளின் வார்த்தைகள் மொத்தம் அவன் அதரங்களுக்குள் சென்று முடிந்தது.
"சரியான ராட்சசன் தான் நீங்க!! சரியா தான் பேர் வச்சிருக்கான் ஜீவன்.." என்று தனது கீழ் உதட்டை வருடி கொண்டவள், "இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் எப்படி கதை சொல்லி முடிகிறததாம்?" என்றாள்.
"அப்புறம் கொஞ்ச நாள் வீட்லயே தான் இருந்தேன். இரண்டு முறைமாமனுங்களும் மாத்தி மாத்தி எனக்கு ரூட் விட்டு இருந்தாய்ங்க.. அதேசமயம் உங்களையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி நெருக்குகிறதா ஜீவன் என்கிட்ட போன்ல சொன்னான்".
"இங்க பார் ஜீவா.. சொல்லிவை உன் ஆச்சி கிட்ட.. அதான் என் வருங்கால மாமியாருகிட்ட… என்னைய தவிர யாரையாவது மருமகளா கொண்டு வரணும்னு நினைச்சாங்கனா அவிய்ங்க மகன் அவிய்ங்களுக்கு இல்லை! மொத்தமா சோழவந்தான்னுக்கு தூக்கிட்டு வந்துருவேன்! பாத்துக்கோ.." என்று விளையாட்டுக்காய் மிரட்டுவாள் பதிலுக்கு இவளும்.
"ஆனால் அப்படி தூக்கி வந்து தான் நம்ம திருமணம் நடக்கும் என்று அப்போது எனக்கும் தெரியாது மாமா.. இந்த இரண்டு பக்கிங்களும் வீட்டில் கல்யாணத்துக்கு நெருக்க.. வேறு வழி இல்லாம கல்யாண தேதியை குறிச்சதும், அப்பதான் நான் ஜீவ கிட்ட சொல்லி அழுதேன். அதேசமயம் களஞ்சியம் மாமா பணம் தரலைன்னு நீங்க அவனை விசாரிக்க சொன்னீங்க… அதை சாக்க வச்சிக்கிட்டு களஞ்சியத்தை உசுப்பேத்தி பேச விட்டு, அவன் சொன்னதை அப்படியே கொண்டு வந்து உங்க கிட்ட சொல்லி உங்களையும் தூண்டிவிட்டு என்னை தூக்க வச்சியான் ஜீவன்… நீங்க மதுரையில் இருந்து கிளம்பி என்னைய தேடி வர வரைக்கும் எனக்கு அப்பப்ப அப்டேட் சொல்லிட்டே தான் இருந்தியான். நானும் ஏர் பாடு மூலமா அதெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேன். உங்களை பார்த்ததும் தான் அதை தூக்கி எறிஞ்சேன்.. அதுக்கப்புறம் தான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே மாமா" என்றாள் சிரிப்போடு!!
"எப்பா!! என்ன திட்டம்!! சரியான கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும் டி!" என்று நறுக்கு என்று அவள் தலையில் கொட்டினான்.
அது என்னமோ மாணிக்கவேலுக்கு தாறுமாறாக காதல் பெருகும் போது தான் உரிமை உணர்வு அதிகமாகி விழி.. டி.. எல்லாம் அவன் வாயிலிருந்து வரும். மற்ற நேரத்தில் அம்மணி தான்.
"பொல்லாத இராட்ஷசி டி நீ!" என்றான்.
"ம்ம்ம்.. இந்த இராட்ஷசனுக்கு ஏத்த ராட்ஷசி!!" என்று சிரித்தாள்.
சிரித்தவளை அப்படியே இருக்க அணைத்துக் கொண்டான்.
ஒரு கட்டத்தில், இருவரும் மெத்தையில் இருந்து தரையில் சாய, மலர் பொத்தென்று தரையில் விழுந்தாள். மலரின் மேல் வண்டாய் மாணிக்கம்!!
“ஆஆ… அம்ம்மா…” என்று கத்திய படியே மலர் மெதுவாக கையை ஊன்றி எழுந்து அமர்ந்தாள்.
பதறிய மாணிக்கம், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஐயோ… அம்மிணி.. ஸாரி.. ஸாரிடி” என்று கண்களை இடுக்கி கொண்டு சின்ன பிள்ளையை போல் கெஞ்ச,
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உதட்டை கைகளால் பொத்தி கொண்டு மன்னவனின் கெஞ்சலை ரசித்துக் கொண்டிருந்தவள், மெதுவாக எழுந்து அவனின் பின் தலையை அழுத்தி பிடித்து நெற்றியோடு நெற்றியை இடித்து மோகனமாக சிரித்தாள்.
இருவரது கரு விழிகளும் ஒன்றோடு ஓன்று பார்க்க, அவனின் மூக்கோடு தன் மூக்கை உரசி, அவனின் தடித்த இதழில் மெதுவாக இவள் முத்தமிட…
“போங் அம்மிணி.. நான் பயந்துட்டேனுங்.. நீங்க விழுந்ததும்" என்றான் ஆசுவாசமாக மூச்சை விட்டப்படி..
“இன்னும் கொஞ்ச நேரம் கொழந்தைய கதற விடலாமான்னு பார்த்தேன்… ஆனா மனசு கேக்கல.. மனசு பூராவும் இந்த மாமன்தான்! என்றவள் எழுந்து நின்ற படி, கைகளை நீட்ட..
“ம்ஹும்.. ஒன்னும் வேணாமுங்க… ” என்று அவன் தானாக எழுந்தான்.
“ஓ.. அப்ப போதுமா? ஒன்னும் வேணாமா? சரி நான் தூங்க போறேன்…” என்றவள் இதழுக்குள் சிரித்தப்படியே ஜன்னலோரம் செல்ல.. அவனோ பெரு மூச்சோடு சோக முகத்தோடு கதவை நோக்கி சென்றான்.
சட்டென்று மலர் அவனின் முதுகில் உப்பு மூடை ஏறி அவளின் கழுத்திலும் இடுப்பிலும் கைகளாலும் கால்களாலும் பிண்ணிக் கொள்ள… திடீர் தாக்குதலில் பேலன்ஸ் செய்ய முடியாமல் அவன் திணற… இருவரும் மெத்தயில் சரிந்தனர்.
அவள் இதழ்களை கொய்தான் வன்மையாக..
அதில் அவள் விழிகள் பயத்தில் விரிய.. சற்றே வலியொடுக்க.. அவன் மார்பில் குத்தி விடுபட முயற்சியில் எத்தனிக்க, அவனோ தன் கால்களால் அவன் கால்களை நகரவிடாமல் ஆலிங்கனம் செய்திருந்தான்.
பின் அவளை விட்டவன் "உன் காதலை நீ சொல்லிட்ட.. இனி என் காதலை பாரடி ராட்ஷசி" என்று அவன் நெற்றி முற்றி கிறக்கமாக கூற.. அவனின் வன்மையைக் கண்டு பயந்தவள், மெல்ல தன் தளர் கரம் கொண்டு அவன் சொற்களை செயல்கள் ஆக்கினாள்.
அவன் கரங்களும் இதழ்களும் அவள் மேனியில் ஊர்வலம் நடத்த அவளோ அவன் கற்பித்தவற்றை பின்பற்றினாள் நல்ல மாணவியாக.. மனைவியாக..!!
மென்மையான அவன் பாகங்கள் அனைத்தும் இந்த முரட்டு காளையின் அதிரடியால் ஆங்காங்கு சிவந்து போயின. ஆனால் அதில் காதலை மட்டுமே கண்ட பெண்ணவளால் தன் மாமன் தானே என்ற சிந்தனையில் அனைத்தையும் தாங்கினாள்.
மூடப்படா அங்கங்கள் அனைத்திலும் அவன் பற்தடங்களே!!
நிலவின் ஒளியில் ஆடைகளற்ற அப்ஸரசாய் மிளிர்ந்தவளை கண்டவனுக்கு உணர்வுகள் பேயாட்டம் ஆட..
தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவனோ, அவள் கழுத்து மற்றும் பிற அங்கங்களில் தன் பற்தடத்தை உண்டாக்கி.. படிப்படியாக அவளை மொத்தமாக கொள்ளையிட்டு கொண்டிருந்தான்.
மலரின் உடல் மோக சூட்டால் நெருப்பாய் கொதிக்க, அவளின் செவ்விதழ்கள் மாணிக்கத்தின் தீண்டலுக்கு ஏங்கித் தவிக்க.. அதனை உணர்ந்தவன் போல ஆக்ரோஷமாக அவளின் ரோஜா நிற உதடுகளை அள்ளி கொண்டது அவனின் கருமை நிற இதழ்கள். அழுத்தி முத்தமிட்டு உமிழ் நீரை உறிந்து எடுக்க, அவனின் பிடிக்குள் அவள் தவியாய் தவிக்க, கண்கள் அகண்டு விரிந்தது.
ஈர கூந்தலுக்குள் கணவனின் வெம்மை சூட்டில் வியர்த்து கொட்ட துவங்க, அவளும் அவனின் உதட்டைக் கவ்வினாள்.
கற்பை மட்டுமல்ல.. கலவி இன்பங்களையும் பொதுவில் வையுங்கள்!!
ஏனெனில்… உணர்ச்சிகள் இருவருக்குமே பொது தானே!!
இருவருக்குள்ளும் ஒரு காம பிரளயமே அரங்கேற துவங்கியது.
உதடுகளின் உரசலும்.. முத்த சத்தமும்.. கொலுசுகளின் சிணங்கலும்.. அதற்கு சுதி சேர்த்த மலரின் மெல்லிய கொஞ்சலும்.. மாணிக்கத்தின் இடைவிடா கெஞ்சலும்.அறை முழுவதும் பரவ, அவளோ மூச்சு விட முடியாமல் திணறினாள்.
மலரின் காதில் நுனி நாக்கை படர விட்டு அழுத்தி முத்தமிட்டான் அவன். அவளின் கைகள் அவனின் சிகைக்குள் நுழைந்து இறுக்கியது.
மனைவியை இறுக்கி அணைத்து, அவளின் கன்னத்தை பல் பதிய கடித்து, அவள் துடி துடிப்பதை ரசித்து, கழுத்தில் அவன் நாக்கை படர விட, துடி துடித்து போனாள்!
அங்கே மோகங்கள் மீற..
தாபங்கள் ஆற..
பாவங்கள் கூட…
முத்தங்கள் ஆட…
அழகிய தாம்பத்தியம்!!
மறுநாள் காலை அருகில் இருக்கும் பம்பு செட்டில் குளித்து மெல்லிய துண்டால் ஈர தலையை சுற்றி கூந்தலோடு பின்னி கொண்டை இட்டு பரணுக்குள் அவள் நுழைய, அவனை காணவில்லை. கணவனை தேட, கதவின் பின் ஒளிந்து இருந்தவன், மெதுவாக பின் கழுத்தில் முத்தமிட, அவள் திடுக்கிட்டாள். திருக்கிட்டவளை அள்ளிக்கொண்டவன் கொள்ளையிட்டான் மீண்டும்!
மீண்டும் ஒரு சங்கமம்!!
அவளின் முகத்தில் ஈர கூந்தல் படர்ந்திருக்க இதழில் பொன்முறுவல்கள். அவனின் பிடியில் இருந்த கையை மெதுவாக அவள் வெளியே எடுத்து தலைமாட்டில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
அதே நொடி பொழுதில் அவனும் கையை கொண்டு செல்ல, அவளின் விரலை அழுத்தி பிடிக்க, இருவரது உடலிலும் மீண்டும் ஒரு இன்ப அதிர்வு பாய்வது போல் சிலிர்த்து எழ, அவனின் பிடிக்குள் அவளின் விரல்கள் நசுங்கியது. சுகவலி!!
அவள் கண்களை இறுக மூடினாள்.
அவளின் கையை மெதுவாக கீழ் இறக்கியவன், தன் முகத்தில் அவளின் கையை அழுத்தி பிடித்து நுனி விரலால் கோடு போட்டான். அவளின் நக கீரல்கள் அவனின் கன்னத்தில். அவனோ மோக சுகத்தில் அவள் விரல்களை கடிக்க.. அவளோ இன்ப சுகத்தில் கண்களை மூடி உதட்டைக் கடித்தாள்.
அவள் வலியில் துடிப்பதை உணர்த்தவன் விரல்களை உருவ, அவளோ மீண்டும் அவள் விரலை அழுத்திப் பிடித்து அவன் வாய்க்குள் நுழைத்தாள்.
அவனின் சூடான உமிழ் நீரில் அவளின் விரல்கள் நனைய.. சிலிர்த்து சிணுங்கினாள் பெண். அவனும் அவளது உணர்வுகளை உண்டவாறே வலி எடுக்கும் அளவுக்கு அவள் விரல்களை சப்பி எடுக்க, அவளின் கையில் இருந்த பூனை முடிகள் சிலிர்த்து எழுந்தது.
"போதும் மாமா வீட்டுக்கு கிளம்பனும்! இன்னைக்கு கறி விருந்து நடக்குது. நாம அங்கன தேன் இருக்கணும். வந்தவங்களை வரவேற்கணும்!" என்றதும் அவளை இழுத்து மீண்டும் அடியில் அமர வைத்தவன்,
"போலாம்டி போலாம்!" என்றவன் இன்னும் அவளை அவன் அமைப்பிலிருந்து விட்ட பாடில்லை!!
"என்னாச்சு மாமா உங்களுக்கு?" என்றதும் ஒன்றுமில்லை என்று இருபக்கமும் தலையாட்டியவன், அவள் மடியில் படுத்துக்கொண்டு அவள் விரல்களை எடுத்து தன் சிகையில் விட.. புரிந்துகொணடவள் மெல்ல சிகையை கோதிவிட்டாள்.
"என்னால நேத்து நீ சொன்னதுல இருந்து கொஞ்சம் கூட வெளியே வர முடியல டி!" என்றான் உணர்வு மிக!!
"ஏனாம்?" என்றாள் அவ்வப்போது அவன் முடியை மசாஜ் செய்து கொண்டே…
"காதல் தோல்வி அப்படிங்கிறத விட.. மனசு வலி!! இந்த இதயத்தை பிளப்பது பொல வலி!! நாம கொடுத்த அன்பு கிடைக்காமல் போகிறது எப்படி இருக்கும் தெரியுமா? ஆனா.. இப்போ எங்கு மறைஞ்சு போச்சுன்னு தெரியல!" என்றதும், குனிந்து அவன் மீசையை பிடித்து இழுத்தவள் "எங்கே போச்சாம்?" என்றாள் விளையாட்டாய்..
"எல்லாம் இந்த மலர்விழியாளின் மலர் கண்கள் கொடுத்த காதல் கணைகளில் மறைந்து போய்விட்டன!" என்றான் அவள் முகத்தை இரு கைகளாலும் பற்றி தன்னருகே இழுத்து ஆழ்ந்த குரலில்…
அந்தக் குரல் அவளை கொள்ளையிட.. அவன் நெற்றியோடு நெற்றி முட்டி அமைதியாக இருக்க..
"காதலிக்கிறதை விட காதலிக்கப்படுகிறது ரொம்பவே சுகம் டி!! பத்து நாளா என்றாலும் அந்த சுகம் தனி தான்!! நன்றி விழி.. எல்லாத்துக்கும்!" என்றான் ஆத்மார்த்த குரலில் அவள் காது மடலில் தன் கற்றை மீசை உரச..
"அஸ்கு புஸ்கு!! உங்க நன்றி எல்லாம் யாருக்கு வேணும்? நீங்க மட்டும் அந்த சுகத்தை அனுபவித்தால் எப்படி? நான் அனுபவிக்க வேண்டாமா? ரெண்டரை வருஷம் நான் காதலிச்சாச்சு! இனிமே உங்க டேர்ன்! நீங்க ஆரம்பிங்க.. இப்போ கிளம்புங்க!" என்று கணவனை கை பிடித்துக் கொண்டு மெல்ல அந்த பரண் வீட்டில் இருந்து இறங்கினாள்.
பின் அவனோடு பைக்கில் ஏற.. அவர்கள் பயணம் வீட்டை நோக்கி சென்றது!!
பிரபஞ்சம் மிகவும் அழகானது!! அதேநேரம் நாம் எதை கொடுக்கிறோமோ.. அதை பன்மடங்காக திருப்பிக் கொடுக்கவும் மறக்காதது!! ஒருவரிடம் கொடுத்து ஏமாந்தாலும் மற்றொரு வழியில் கண்டிப்பாக பலமடங்காய் நம்மை வந்து சேரும்!!
அன்பானாலும்…
நேசமானாலும்..!!
