மோகங்களில்… 18
துருவ் அனு அறையில் இருப்பதை அறியாமல் சுகன் அவனுக்கு ஃபோனை போட்டு விட..
துருவ்வின் ஃபோனும் அவள் அறையிலிருந்து ஒலித்தது.
அனு அறைக்குச் சற்று தள்ளி நின்று தான் இவர்கள் பேசிக் கொண்டிருக்க… சத்தம் எளிதாக சசிகலாவின் காதிலும் விழ..
“என்ன ஃபோன் அடிக்குற சத்தம் பக்கத்தில் எங்கிருந்தோ கேட்குதே?” என்று அவர் சுற்றி முற்றியும் பார்த்து கூற, துருவ்வுக்கோ உள்ளுக்குள் அல்லுவிட்டது.
துருவ் ஒலித்துக் கொண்டிருந்த ஃபோனில் சத்தத்தை குறைக்க எண்ணி வேகமாக விரைய.. அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த அனு “காலங்காத்தால ஒரே டிஸ்டர்பா இருக்கு” என்று அந்த ஃபோனை கைப்பற்றி இருந்தாள்.
வெளியில் நின்றிருந்த சுகனோ சசிகலாவின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் “அது மேடம்.. சத்தம் என் ஃபோனில் இருந்து தான் வருது.. இங்க பாருங்களேன்..” என்று அவன் ஃபோனை லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டான்.
“பாத்தீங்களா.. சத்தம் இங்க தான் வருது! வேற எங்கிருந்தும் வரல!!” என்று இங்கே அவன் அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்க…
அங்கே அனுவோ ஃபோனை எடுத்துப் பார்த்தாள். நன்றாக தூக்கத்தில் இருந்தவள் ஒற்றை கண் கூட இல்லை அரை கண்ணை மட்டும் திறந்து பார்க்க.. “எந்த பேரும் தெரியல.. இது என்ன புது விதமா இருக்கு! நிப்பாட்டவே முடியல!!” என்று ஏதேதோ சத்தத்தை குறைக்க முனைய..
அதுவோ அவளுக்கு ஜாலம் காட்ட.. தூக்கி போட்டாள் ஒரே போடு இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஃபோனை கீழே தரையில் ஓங்கி.. அதுவோ சில்லு சில்லாக சிதறியது!!
“அய்யய்யோ..!” என்று கண்கள் விரிய வாயில் கைவைத்து பார்த்தான் துருவ் தனது ஃபோனின் நிலைமையை..
ஆனால் அடுத்த நிமிடமே ஒரு பெருமூச்சு வந்தது. “நல்ல வேள இவள் ஃபோனை அட்டென்ட் செய்யாமல் கீழே போட்டு உடைச்சா! அட்டன் மட்டும் செய்திருந்தால்.. இங்க கடக்கிற ஃபோன் மாதிரி நான் தான் சில்லு சில்லா போயிருப்பேன்! தாங்க் காட்!!” என்றவன், இவள் எங்கு எழுந்து விடுவாளோ.. என்று அருகில் சென்று மெல்ல தட்டிக் கொடுத்து “நீ தூங்குமா அனுமா..” என்றான் அவன்.
அவனின் வாசத்திலும் அண்மையிலும் உம் கொட்டிக் கொண்டு அவனை அணைத்த வாக்கில் தூங்க ஆரம்பித்தாள்.
“மேடம்.. பாஸ் ஃபோன் எடுக்கல! ஒருவேளை நேத்து வந்த களைப்புல தூங்கிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்! இன்னைக்கு ஈவினிங் தான் அந்த முக்கியமான மீட்டிங். நான் இங்கே வெளியில் ஹாலிலேயே வெயிட் பண்றேன். பாஸ் எழுந்து வந்ததும் பாத்துக்கிறேன்” என்றான்.
“சரி.. சரி! நீயும் தான அலைஞ்சு இருப்ப.. நீயும் போய் ரெஸ்ட் எடு” என்றதும் “இல்ல மேடம் வேணாம்! நான் இங்கேயே இருக்கேன்” என்றான் அவன்.
“என்னைக்கு நான் சொன்னது கேட்டு இருக்க நீ? உன் பாஸே நான் சொன்னா கேக்க மாட்டாங்குறான். எப்படியோ போங்க இரண்டு பேரும்.. இந்த பொண்ணு வேற கதவை திறக்க மாட்டேங்குது” என்று புலம்பியபடி அவர் செல்ல..
அப்போதுதான் சுகனுக்கு மண்டையில் பல்பே எரிந்தது!!
“ஒரு வேள பாஸ் மேடமோட ரூம்ல இருப்பாரோ?” என்று.
அது உண்மைதான் என்பது போல மெல்ல கதவை திறந்து வெளியே பார்த்தான் துருவ்.
நல்லா விடிந்திருந்தது! அவனது பெரிய வீடு என்றாலும் இப்பொழுது மழையின் காரணமாக அத்தனை வேலை ஆட்களும் இல்லை! வீட்டை பராமரிக்க ஒருத்தரும் சமையலுக்கு ஒருத்தரும் என்று இருவர் மட்டுமே இப்போது வீட்டோடு தங்கியிருக்கின்றனர். அவர்களும் காலையிலே வேலையை முடித்து இருக்க.. சசிகலாவும் கிச்சனில் மதிய உணவுக்கு மெனு சொல்ல சென்றிருந்தார்.
துருவ் பார்ப்பதை பார்த்த சுகன் வேகமாக நெருங்கி “பாஸ் நீங்க இங்கையா இருந்தீங்க.. சாரி பாஸ் நான் தெரியாம ஃபோன் பண்ணிட்டேன்!”
“அது பரவாயில்ல.. யாராவது வராங்களான்னு மட்டும் பாத்துக்கோ! நான் என் ரூமுக்கு எஸ்கேப் ஆயிடுவேன்” என்றவன் கையோடு கொண்டு வந்திருந்த அவன் சட்டை மற்றும் ஃபோனை எடுத்துக் கொண்டு அவன் தன் அறைக்கு சென்று விட்டான்.
நேற்று அவன் கொண்டு வந்த லக்கேஜ் சோஃபாவுக்கு பின்னால் அனாதையாக கிடக்க.. அதை காலையில் சுத்தம் செய்தவர் எடுத்து யாரோடது என்று தெரியாமல் தனியாக எடுத்து வைத்திருந்தார்.
“என் லக்கேஜ் என்னன்னு பாரு?” என்று சுகனிடம் சொல்லியவன் தன்னறைக்கு சென்று விட்டான்.
குளித்து முடித்து கீழே வந்தவனை சாப்பிட்டு முடித்து ஹாலில் அமர்ந்திருந்த திருமலையும் சசிகலாவும் பார்த்து புன்னகைத்து வரவேற்றனர். இவனும் புன்னகையோடு அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு எதிரில் அமர்ந்தான்.
அன்று காலையிலிருந்து மேகம் சற்று மழைக்கு விடுப்பு கொடுத்திருக்க.. வானம் கொஞ்சம் தெளிவாக இருக்க சூரியன் எட்டி எட்டி அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னப்பா அம்மா சொன்னா ஏதோ அவசர மீட்டிங்காமே.. இப்படித்தான் மழையில அலைஞ்சு திரிஞ்சு வருவியா? ஒன்னு கெடக்கு ஒன்னு நடந்தா என்னப்பா ஆகுறது?” என்று மகனை கண்டித்தார் திருமலை.
“வேற வழி இல்லப்பா.. வந்து தான் ஆகணும்” என்றவனின் கண்கள் அனுவின் அறையை பக்கம் சென்று சென்று மீண்டது.
“சரி வாப்பா சாப்பிட போலாம்” என்று சசிகலா அழைக்க..
“ஆமா.. கேட்கணும்னு நினைஞ்சேன், நீ மட்டும் வந்திருக்க அந்த பொண்ணோட வீட்டுக்காரர் எங்கப்பா?” என்றதும் துருவ் விழிக்க.. துருவ் கீழே வந்ததை பார்த்து அவனை நோக்கி வந்த சுகன் திருமலை கேட்ட கேள்வியில் தொண்டையை கணைத்துக் கொண்டு தன் பாஸை குறுகுறுவென்று பார்த்தான். இவனை கண்களால் மிரட்டி விட்டு அநேகமா இன்னைக்கு வருவான் நினைக்கிறேன் அப்பா என்றவன் சசிகலா பின்னால் டைனிங் எங்களுக்கு சென்றாலும் அவனுக்கு உணவு உண்டு மனம் வரவில்லை அந்த பொண்ணு சாப்பிட்டாச்சா என்று எதார்த்தமாக கேட்க…
“இன்னும் எழுந்திருக்கல போல பா..”
“என்ன மா.. இப்பவே 11 ஆகுது எழுந்திருக்கலைனு சொல்றீங்க? போய் என்னன்னு பாருங்க?” என்றான். இங்கே சாப்பிட்டதாக பேர் பண்ணிக்கொண்டு எழுந்து விட்டவன் சுகனை அழைத்து தன் ஃபோனின் நிலைமையை காட்டி உடனே வேறு ஒன்றை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.
அதற்குள் எழுந்திருந்த அனு தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்திருந்தாள்.
அன்னையோடு வந்த அனுவை தான் கண்ணெடுக்காமல் வாயில் புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்
துருவ்.
“இப்படியா புள்ளத்தாச்சு பொண்ணு சாப்பிடாம இருக்கிறது? நைட்டு தூக்கம் வரலைன்னா என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல.. அத விட்டுட்டு மொட்ட மொட்ட முழிச்சிட்டு வந்து இப்படி தூங்கினா எப்படி? வயித்துல உள்ள புள்ளைக்கு பசிக்காது?” என்று கடிந்து கொண்டே அவளுக்கு சாப்பாடு வைத்தார். “போதும் முடியல ஆன்ட்டி” என்றவளை விடாமல் சாப்பிட வைத்து கூடவே ஜூஸும் கொண்டு வந்து கொடுத்தார். தன்னோட அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தார்.
காலையில் எழுந்தவுடன் துருவை அவள் கைகள் அருகில் தேட.. அவன் அருகில் இல்லாதது அவளுக்கு முகம் வாட்டமானது. அதன் பின்னே நிதர்சனம் புரிந்தது. இங்கே அவர்கள் வீட்டில் எப்படி துருவ்வை அணுக முடியும்? கிட்ட கூட நெருங்க முடியாது? பின் எப்படி பார்க்க.. பேச?” என்று குழப்பமான மனநிலையில் தான் வெளியில் வந்தாள். சோஃபாவில் அமரும் போது தான் தன்னையே பார்த்துக்கொண்டு சுகனிடம் பேசுபவனை கண்டு கொண்டவளின் முகம் தெளிந்தது.
“இப்பதான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கு” என்றார் சசிகலா.
“என்ன ஆன்ட்டி? என்ன தெளிஞ்சிருக்கு?” என்று அவள் திடுக்கிட..
“இல்லமா வானத்தை சொன்னேன் மளை விட்டு வானம் தெளிந்து இருக்கு பாரு” என்றதும் தான் அவளுக்கு மூச்சு சீரானது.
எட்ட நின்றே அனுவை அணு அணுவாக பார்த்துக் கொண்டிருந்தான் துருவ். கிட்ட நெருங்கவே இல்லை! எங்கே அவனை அறியாமல் ஏதாவது பேசி விடுவோமோ பெற்றோரின் முன்னிலையில் என்று, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
காலையில் தனது அலுவலக வேலைகள் பற்றி தன் பிஏவிடம் ஆபீஸ் மேனேஜர் இடமும் விவாதித்துக் கொண்டிருந்தான் ஃபோனிலேயே…
இவள் துருவ்வை பார்த்து சசிகலாவை பார்க்க…
“சொல்லாமல் கொள்ளாமல் நைட்டோட நைட்டா வந்துட்டான். ஏதோ பிசினஸ் விஷயமாம். பொல்லாத பிசினஸ்! அடிக்கிற மழையில் போகிற வெள்ளத்தில் எப்படி வந்து நிக்கிறான் பாரு?” என்று மகனை திட்டிக் கொண்டிருந்தார் சசிகலா.
“உன் வீட்டுக்காரருக்கு நீ போன் பண்ணியா அனு? எப்ப வருகிறாராம்?” என்றதும் “ரெண்டு நாள்ல வந்துறேன்னு சொல்லி இருக்காரு ஆன்ட்டி!” என்றாள்.
“நீ ஏன் தனியா இருக்க? அன்னைக்கு கோவில பார்த்த மாமியார் உன் கூட இல்லையா?” என்று கேட்டார்.
“அவங்களுக்கு கிராமத்துல வீடு இருக்கு ஆன்ட்டி. அதனால இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருப்பாங்க.. இப்ப மழைனால அவங்க இங்க வர முடியாது நிலைமை” என்று சமாளித்தாள்.
“சரி சரி.. நீ காலை மாத்திரை எல்லாம் சாப்பிடலையா? நான் எடுத்து தரட்டுமா?”
“வேண்டாம் ஆன்ட்டி! உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே பார்த்துக்கொள்கிறேன்” மெதுவாக எழுந்து துருவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
அம்மா முன்னாடி இவரிடம் பேசுவதற்காக வேலை விஷயம் என்று போனில் கையெழுத்தவனுக்கு மதியம் வரை வேலை இழுத்துக் கொண்டது இவளும் மாத்திரை உண்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தவள் போல் உணவுக்கு வர அங்கே திருமலையில் சசிகலா மட்டுமே இருந்தனர் வெள்ளம் வெல்லம் ஒரு அளவு உடைஞ்சிடுமா மழை இல்ல என்று அவளிடம் சொல்ல அது ஏதும் காதிலே விழவில்லை அவளுக்கு மனதில் துருவிடம் பேச வேண்டும் என்ற எண்ணமே…
“வா மா சாப்பிடலாம். உனக்காக தான் வெயிட்டிங்” என்று சசிகலா கூப்பிட..
“எங்க உன் புள்ளைய காணோம்?” என்றார் திருமலை.
“அவன் ஏதோ வீடியோ கால் மீட்டிங்னு ஆபீஸ் ரூம் உள்ள போனவன் தான். இன்னும் வரல..” என்றார்.
மனதில் சோர்வோடு சரியாக உண்ணாமல் எழுந்தவள் அறையிலேயே குறுக்கும் நெடுக்கம் நடந்து கொண்டிருந்தாள். மனதினில் துருவ்வை அவ்வளவு வறுத்துக் கொண்டு இருந்தாள். காலையிலிருந்து முகம் கொடுத்து பேசவில்லை! தனிமை கிடைக்கவில்லை! அது இது என்று..
மாலை போல வெளியில் பேச்சு சத்தம் கேட்க.. எழுந்து வந்தவள் பார்க்க ஹாலின் உள்ளடங்கு சோஃபாவில் அமர்ந்து துருவ் ஏதோ லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.
சற்று வெளிப்புறம் இருந்த சோஃபாவில் திருமலை ஏதோ மேகசீனில் ஆழ்ந்த இருக்க.. சசிகலா தனது மொபைலில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஆன்ட்டி நான் அவங்க கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.. என் வீட்டுக்காரர் பத்தி கொஞ்சம் பேசணும்!” என்று அவள் சசிகலாவிடம் சொல்ல “அதுக்கு ஏன் என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்கிற? நீ போய் பேசுமா தாராளமா” என்றார்.
முறைப்போடு வந்தவளை கண்டு கொண்டவன், “உக்காரு” என்றான் தன் கையில் இருந்த லேட்டாப்பில் கவனம் வைத்துக் கொண்டு!
அவள் மனதில் அவன் மீதான கோபம் வருத்தம் இருந்தாலும் அதையும் தான்டி எங்கே மறுபடியும் இவர்களிடம் விட்டுவிட்டு வேலை ஆபீஸ் என்று சென்று விடுவானோ என்ற பயம் இருந்தது. அவள் மனசு படபடத்தது!!
சோஃபாவில் அவனை விட்டு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்தாள். இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவள் துப்பட்டாவின் முனை தவழ்ந்தது. இருவரின் இடைவெளியை பார்க்காதது போல பார்த்தவனின் கண்களில் குறும்பு புன்னகை!!
அச்சமயம் அவனின் பிஏவிடம் இருந்து அவனுக்கு ஃபோன் வந்தது. பிசினஸ் சம்பந்தமாக ஏதேதோ பேசினான்.
“ம்ம்.. எஸ்.. கிளம்பிட்டேன்! ஹாஃப்ன் அவர்ல வரேன்” என்று முடித்தவனை அவளை பார்க்க..
“ஆஃபிஸ் போறிங்களா சார்?” என்றாள், முக வாட்டத்துடன்..
“ம்ம்ம்!” என்றான் கவனத்தை லேப்டாப்பில் வைத்து!
“போயிட்டு எப்போ வருவீங்க?” மெல்ல கேட்டாள். சற்று தள்ளி தான் சசிகலாவும் திருமலையும் அமர்ந்திருக்க.. அவனிடம் உரிமையாக சண்டை போடவோ சத்தம் போடவோ முடியாமல் தன்னை அடக்கிக் கொண்டிருந்தாள் அனு.
“டைம் சொல்ல முடியாது” என்றான் கெத்தாக.. அலட்சியமாக.
ஆனால் பேச்சுக்கு எதிராக அவன் கண்கள் அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தது. அவள் அறியாமல்..
“அம்மா.. சின்னதா டிபன் ப்ளீஸ்” என்று அம்மாவிடம் சொன்னவன், சுகனிடம் தன் அப்பாவை காட்டி கண் ஜாடை காட்ட.. அவனும் புரிந்தது என்பது போல தலையசைத்தவன் திருமலையை நெருங்கி.. “சார்.. ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம். கொஞ்சம் வாங்க” என்று தனியாக அழைத்துச் சென்றான்.
சுகனை மெச்சியப்படி அவள் பக்கம் சரிந்தான் துருவ். எட்டி அவள் கன்னத்தில் கிள்ளி முத்தம் வைத்தவன், “என்ன கோபமா அனு?”
என்று அவள் கையை தன் கையில் எடுத்தவன் மெல்ல அவள் கை விரல்களை நீவினான். பின் குனிந்து ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்த்து சிணுங்கியது. அவளின் இளம் மனசோ அவனிடம் சரிந்தது. அவனின் அன்பில் அருகாமையில் கோபம் பறந்து போனது. வருத்தம் மறைந்து போனது.
“லவ் யூ அனுமா?” அவள் கையை இழுத்தவன், “என்ன கோபம் இப்போ?” மெல்ல அவன் பக்கம் சாய்ந்தாள்.
“போறிங்களா இப்போவே..?” என்று கலக்கத்துடன்.
“ம்ம்”
“போகணுமா??”
“போகணுமே? ”
“அப்போ என்னையும் கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்..”
“பிஸினஸ் விஷயமா ஒரு மீட்டுக்கு போறேன் அனுமா..”
“எப்போ வருவீங்க?”
“நைட்..!!”
“எதே? நைட்டா? அதுவரை தனியா இருக்கணுமே?”
அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தான். அவன் கை அவள் பின் பக்கத்தில் நுழைந்து அவள் இடையை வளைத்து அணைத்தது. அவள் நெளிந்தாள் “ஆன்ட்டி எல்லாம் அங்க தான் இருக்காங்க” என்று!
அவனோ எல்லாம் கண்டுக் கொள்ளாமல் “ஒரு முக்கியமான பிஸ்னஸ் விஷயம் கண்டிப்பா போய் தான் ஆகணும். அந்த இடத்துக்கு உன்னை நான் எப்படி கூட்டிட்டு போக?”
அவன் முகம் அவள் கழுத்தருகே வந்தது. அவளை நெருக்கமாக இழுத்தான். இறுக்கமாக அணைத்தான். மிருதுவான கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.
“கண்டிப்பா நைட்டு வந்து உன்னை வெளியில் கூட்டிட்டு போறேன் சரியா?” என்றதும் அவள் முகம் தெளியாமல் இருப்பதை பார்த்து “பிராமிஸ் அனுமா” என்றப்படியே எழுந்தான்.
காலையில் சுகன் சொன்னது போல முக்கியமான அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போடும் வேலை எல்லாம் இல்லை. ஆனால் சுகன் சொல்லிவிட்டான் என்று இவனாக ஒரு பிசினஸ் மீட்டை ஏற்பாடு செய்து தான் இப்பொழுது சென்றான்.
அவனுக்குமே காலையிலிருந்து அனுவை எட்ட வைத்து பேசுவது சுத்தமாக பிடிக்கவே இல்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்தவன், நாளை எப்படியும் அவளை அழைத்துக் கொண்டு வீடு சென்று விட வேண்டும் என்று முடிவு எடுத்தே வீடு திரும்பினான்.
அவன் வந்த நேரம் சசிகலாவும் திருமலையில் உணவருந்தி முடித்து இருந்தனர். அனு சற்று நேரம் சென்று சாப்பிடுகிறேன் என்று அங்கேயே நடந்து கொண்டிருந்தாள். துருவ்வை பார்த்ததும் அவளுக்கு சட்டென ஐடியா தோன்ற “சார் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் எங்க வீட்ல இருக்கு. நாளைக்கு செக்கப்புக்கு போற டேட்டு! அத போய் எடுத்துட்டு வரணும்” என்றதும்
“நம்ம டிரைவரை விட்டு எடுத்துட்டு வர சொல்லுவோமா?” என்று சசிகலா கேட்க..
‘அய்யய்யோ நம்மளே ஒரு ஐடியா பண்ணி வெளியில் போகலாம்னு பார்த்தா.. இந்த அம்மா நம்மள விடாது போலவே!’ என்று அவள் அதிர்ந்து துருவ்வை பார்க்க…
“அது எப்படி மா அவங்க எங்க வச்சிருக்காங்க தெரியாது? அதுவும் பெட்ரூமில் எல்லாம் இருந்தா டிரைவர் அங்கெல்லாம் நம்ம அனுப்ப முடியுமா? என்ன பண்றேன் நானே இவங்களை கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன்” என்றதும் இருவரும் ஒத்துக் கொண்டனர். அனுவும் மகிழ்ச்சியோடு அவனோடு காரில் ஏறினாள்.
அவர்கள் பீச் ஹவுஸூக்கு அழைத்து வந்திந்தான் துருவ்.
அவளோ அவனை இழுத்துக் கொண்டு பீச்சுக்கு சென்றாள்.
இருள் கவ்வும் இரவு நேரம்..
அவர்களுக்கான கடற்கரையின் ஓரம்..
இளமை மொழிகள் சஞ்சாரங்கள்..
ஈர இதழ்கள் ஒன்றோடு ஒன்று முத்த
ஊர்வலங்கள்..
உன்னை பிரியேன் என்று இறுகிய அணைப்புகள்..
ஊண் உருகும் காதல் கிளிகளின் கொஞ்சல்கள்..
எல்லை இல்லா நேச பிணைப்புகள்..
ஏந்திழையின் விழியோரம் ஒற்றை துளியாய் காதல் மொழிகள்..
ஐவனாய் நானிருக்க ஏனிந்த கலக்கமென தலைவனின் வன் அணைப்புகள்..
ஒன்றோடு ஒன்று காதலால் இணைந்த உள்ளங்கள்..
ஓர் உயிராய் இரு மனங்கள்..
குளிர் காற்று குபீரென வீசியது. அவள் உடல் சிலிர்த்து.. உதடுகள் நடுங்கியது! நடுங்கிய உதடுகளை தன் இதழோடு அணைத்து வெம்மை கொடுத்தான் தலைவன்!
மலரினியின் மலர்ந்த இதழ்களில் வண்டென தேன் அமுதம் பருகிக் கொண்டிருந்தான் மன்னனவன்.. அவன் விலக விரும்பாத இடமது.. அவள் விரும்பி தொலையும் இடமது.. அனுவின் பலவீனமான எதிர்ப்புகள் எல்லாம் முறியடித்து தனது வெற்றிக் கொடியை அவள் இதழ்களில் நாட்டிக் கொண்டு இருந்தான் துருவ். அவனின் தீண்டலில் பாகாய் குழைந்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் மீதான அவன் தேடல்கள் நெடும் தொடராய்.. நடுங்கிக் கொண்டிருக்கும் பெண்மையை இறுக்க அணைத்து.. அவனுக்குள் அவளை புதைத்து.. பின் கழுத்துகளில் அவன் இட்ட சூடான முத்தங்கள் அவளை கிறங்கிப் போக வைத்தது. அவளின் பெண் வாசனை அவனை தாபம் கொள்ள வைக்க.. அவனின் ஆண்மை ஸ்பரிசமோ பாவையவளுக்கு பித்த கொள்ள செய்ய.. தங்களை மறந்த நிலையில் ஆலிங்கணம் செய்தப்படி இரு காதல் புறாக்களும்...
அவளின் வெம்மை மூச்சு காற்று அவனின் மீசை உரசி செல்ல.. அதில் ஆடவனுக்கு மோக வெப்பத்தை கூட்ட..
துருவ்வின் அதீத நெருக்கம் அவளை எந்தவொரு சிந்தனையும் செய்யவிடவில்லை. அவள் விலகி அமர.. கண்களால் அதற்கு தடா விதித்தவன், ஆக்டோபஸ் போல தனது கரங்களால் அவளை பிணைத்து கொண்டான் அவளின் சிறு விலகல் கூட தாங்க முடியாதவனாய்..!!
இரு கால்களையும் விரித்து வைத்து அவன் அமர்ந்திருக்க கால்களுக்கு இடையில் அமர்ந்து அவனது மார்பில் தலை சாய்த்து இருந்தாள் அனு.. அவன் முரட்டு கரங்கள் அவளை இறுக்கிப் பிடித்து அணைத்து இருந்தது. மெல்ல அவை கீழே இறங்கி அவள் மெல்லிடையில் வழுவழுப்பில் அழுத்தமாகப் பதிய.. ஸ்ஸ் என்ற மோகன குரல் பாவையிடத்தில்...
அவளது அந்த குரலில் கிளர்ந்தவன், அவளை இன்னும் இன்னும் தீண்டும் ஆர்வம் அதிகரித்தது. அவர்களின் காதலில் அவள் அவனிடத்தில் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் மறந்து போக.. அவனோ அவனிடத்தில் சொல்ல துடித்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குழியில் சிக்கி போக... இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து கொண்டிருந்தனர்.
புதிதாக காதல் கொண்ட காதலன் காதலியின் அழகினை விரல்களால் தீண்டி தீண்டி ஆட் கொள்ள முனைய.. காதலியோ அவனின் அத்துமீறும் விரல்களுக்கு அவ்வப்போது தடைவிதித்து தன் கைகளோடு பிணைத்துக் கொண்டாள்.
"ஏன் அனு..” என்று காதுக்குள் கிசுகிசுத்தான். அவனுக்கு என்ன பதில் உரைப்பாள் அவள். வெட்கம் கொண்டு மன்னவன் மார்பிலேயே அவள் புதைந்துகொள்ள.. அவளை தன் மீது சரித்தவனின் முரட்டுத்தனமான அணைப்பு அவளுக்கு இன்னும் இன்னும் வேண்டுமாய்..
"என்னை கொல்லுறடி" என்று காது ஓரத்தில் கிசுகிசுக்கும் மீசை முடிகளின் ஸ்பரிசத்தில் தன்னை இழந்து கொண்டிருந்தாள் அனு!
அவர்களின் இந்த அணைப்பு பிணைப்பு எல்லாம் இழுக்கும் நேரமும் வந்தது..!!
Oh no.... பாவம் இல்ல ரெண்டு பேரும்....
அவன் அம்மாக்கு தெரிய போகுதா விசயம்.....
இல்ல அந்த அப்சரா வருமா????