தூகை 36

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

36

 

இன்று…!

 

 

மேகலா அறிவுரைகளாய் பேச பேச அமைதியாக தான் இருந்தாள் வதனி. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு பொறுமை இல்லை..!!

 

‘குற்றம் செய்தது அவன்..! அவனை விட்டுவிட்டு எல்லோரும் எனக்கு அறிவுரை கூறுகிறார்களே?’ என்ற கோபம்.. அதனோடு சேர்த்து கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஹார்மோன் சதிராடல் மூட் ஸ்விங் எல்லாம் சேர்ந்து கொள்ள “அம்மா நிறுத்து..!” என்று அந்த வீடு அதிர கத்தினாள் வதனி.

 

வதனி சிறுவயதில் இருந்து சற்று சத்தமாக பேசும் பழக்கம் உள்ளவள். அவளுக்கும் தம்பிக்கும் இடையே சண்டை வரும் போது போல் அவனை அதட்டி உருட்டுவாள்.

 

“சின்ன பிள்ளை தானே டி அவன். நீ விட்டுக் கொடுத்தால் என்ன?” என்று மேகலா திட்ட ஆரம்பித்ததுமே..

 

“ஆமா ஆமா.. உனக்கு பையனா தான் பாசம். பொண்ணுனா வேசம் தானே?” என்று உதடு பிதுக்கி அழ ஆரம்பித்து விடுவாள். அதற்குப் பின் அவளை சமாதானப்படுத்த அன்னையின் தம்பியும் மல்லுக்கட்டுவார்கள். அதிலேயும் தங்கபாஸ்கரன் வந்து அவரிடம் ஒரு முறை முறையிட்டு.. அவர் சமாதானப்படுத்த பைவ் ஸ்டார் வாங்கி கொடுத்தால் தான் சமாதானம் ஆவாள்.

 

இன்றும் அதுபோல கத்தும் மகளைப் பார்த்து “சத்தமாக பேசாத.. கத்தாதே பாப்பா வயித்துல் குழந்தைய வச்சுக்கிட்டு..”

என்று மேகலா தான் தணிந்து போக வேண்டி இருந்தது.

 

அதற்குள் அவளுக்கு தலை சுற்ற ஆரம்பிக்க.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சன் சட்டென்று அவளை தோள்களை அழுத்தமாக பிடித்துக் கொள்ள.. அந்த நிலையிலும் அவனின் தீண்டலை பிடிக்காமல் பட்டு என்று அவன் கைகளை உதறியவள் அவனை தீப் பார்த்துவிட்டு மெல்ல அருகில் இருந்த சேரை பிடித்துக் கொண்டாள் ஆதாரமாக..

 

நிரஞ்சன் அவளை நெருங்கியதும் சற்று தள்ளி சென்ற மேகலா வேகமாக வந்து அவளை தாங்கிக்கொண்டார். 

பிரேமா எழுந்தவர் அவளை அமர வைத்து “இந்த ஃபேனை கொஞ்சம் ஸ்பீடாக்கு ஆதவா” என்று மகனுக்கு கட்டளையிட்டார். 

 

மனைவியின் ஒதுக்கம் அவனுக்கு புதிதாக வருத்தத்தை கொடுக்கவில்லை. இத்தனை நாட்களில் பழகியது தானே? அன்னையின் பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டு மின்விசிறியின் வேகத்தை அதிகப்படுத்தியவன், மேகலாவை பார்த்து “அத்த காலையில இருந்து அவ இன்னும் ஒன்னு சாப்பிடல அதுவே மயக்கம் வரும்.. கொஞ்சம் பாலாத்தி குடுங்குளிங்களா அவளுக்கு.. வீட்ல இருந்த தோசை மாவு எல்லாம் தோசை ஊத்திட்டேன்” என்றான் அமைதியாக. 

 

மருமகன் என்ன செய்தான் ஏது செய்தான்? எதற்கு மகள் தனியாக வந்தாள் அதெல்லாம் எப்பொழுதும் மேகலாவுக்கு மனதில் பதியவில்லை. மகள் கர்ப்பமாக இருக்கிறாள்.. மருமகன் தாங்குறான் இவளுக்கு ஏன் இவளுக்கு வீம்பு? என்று சாதாரண அன்னையாக தான் யோசித்தார்.

 

ஏனென்றால் சமூகம் அவர்களை அப்படித்தான் கட்டமைத்து இருக்கிறது. அதுவும் 60 70களில் பிறந்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். 

 

‘கணவனே கண்கண்ட தெய்வம்’ ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்பது போல கணவன் என்னதான் தவறு செய்தாலும் அவனோடு ஒத்து வாழ்பவர்கள். அவன் திருந்தி மன்னிப்பை யாசித்தால் மன்னிக்காமலா போய் விடுவார்கள்?

 

ஏனென்றால் அவர்களுக்கு சிறுவயதில் இருந்து போதித்தது அதை தான். 

 

“ஆண்னா அப்படித்தான் இருப்பான். நாம தான் கட்டு சட்டா குடும்பம் நடத்தணும். இழுத்து அவனை பிடிச்சு வச்சுக்கணும். அது தான் சமத்து.. அதுதான் சாமர்த்தியம்.. அதுதான் குடும்ப பெண்ணின் கலை..!” என்று போதித்து வளர்க்கப்பட்டவர்கள் எப்படி இருப்பார்கள்? 

 

“அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டாங்க.. இவளுக்கு இவ்வளவு கோபம். தனியா வந்து இருந்தா சரி? இப்ப வயித்துல இன்னொரு புள்ள இருக்கு.. இந்த நேரத்திலும் கோபப்பபட்டா குழந்தையோட நலமும் பாதிக்குமா இல்லையா? படிச்ச பொண்ணுக்கு இது கூட தெரியல? இந்த காலத்திலுள்ள புள்ளைங்க எங்க புரிஞ்சுக்கறாங்க” என்று மேகலா மகளை பொறுமியவாறு அவளுக்கு பாலாற்றி எடுத்துக்கொண்டு வந்தார். 

 

அதற்குள் வெளியே சென்றிருந்த மிருவும் விக்ரத்தனனும் வந்திருந்தார்கள்.

 

வந்த உடனே மிரு மாமனின் தோளிலிருந்து இறங்கி அன்னையிடம் ஓடிச் சென்று ஒரு 5 ஸ்டாரை நீட்டி “தேங்க்ஸ் அம்மா” என்றாள்.

 

எதற்கென்று புரியாமல் மகளை பாரத்தாள். அப்பொழுதுதான் பாலைக் குடித்திருந்த வதனிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல இருக்க “எதுக்குடா அம்மாவுக்கு தேங்க்ஸ் சொன்ன?” என்று மகளை தன்னிடம் இழுத்து அணைத்து கேட்க..

 

“கீழ குனிங்க மா..” என்றவள் குனிந்த வதனியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு..

 

“என் கூட விளையாட தங்கச்சி பாப்பாவோ இல்ல தம்பி பாப்பாவோ வரப்போறவங்க தானே? அவங்க வயித்துக்குள்ள தானே இருக்காங்க அதுக்கு தான் நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன்” என்றாள் மகிழ்வோடு. 

 

திரும்பி தம்பியை பார்த்தாள் அவனோ அவனோ தோளை குலுக்கி மென்னகை புரிந்தான்.

 

சிறுவயதில் இருந்து இவர்களுக்குள்ள ஒரு பழக்கம் இருவரில் யார் கோபமாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு சிறு ஃபை ஸ்டாரை நீட்டினால் போதும் அந்த வயதில் அவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயம். உடனே சமாதானமாக விடுவார்கள். அதை இன்று அக்காவின் மகளுக்கு சொல்லிக் கொடுத்தான்‌ மாமனாய்.

 

“மா இதுல சாப்பாடு இருக்கு அவளுக்கு சாப்பிட குடுத்து கொஞ்ச நேரம் தூங்க வை” என்றதும் விகர்த்தனன் கொடுத்த பையில் இருந்த சாப்பாட்டை எடுத்து மகளுக்கு கொடுத்தார்.

 

வதனிக்கும் பசிக்கவே அமைதியாக உண்டவள், “நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

 

பெருமூச்சோடு அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தரை பார்க்க.. நிரஞ்சனோ வதனி தட்டி விட்டு தட்டு அங்கு சிதறி கிடந்த உணவுகளை எல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டு சமையலறை பக்கம் சென்றான்.

 

“ஐயோ மாப்பிள்ள.. இருங்க.. இருங்க.. நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க.. கொடுங்க நான் செய்றேன்?” என்ற பதறிப் போய் அவன் கையில் இருந்த தொடப்பத்தை வாங்க முயன்றார் மேகலா. 

 

“பரவாயில்லை அத்தை எங்க வீட்லயும் இதெல்லாம் நான் பண்ணி இருக்கேன்..” என்றவன் அந்த இடத்தை கூட்டி மாப்பு போட மற்ற மூவரும் அவனை அமைதியாக பார்த்திருந்தனர்.

 

வீட்டில் இருந்து வரும் பொழுது விதர்த்தனனும் மேகலாவும் சாப்பிட்டு வந்திருக்க.. பிரேமாவும் உண்டு இருந்தார். மகன் இன்னும் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு மனம் வருந்தியது. “ஆதவா நீ சாப்பிடு பா” என்றார். ஆனால் அவன் அமர்ந்திருக்க…

 

நிரஞ்சனை சகஜமாக்கும் பொருட்டு “அட வாங்க பாஸ் எனக்கும் பசிக்குது” என்றவன்,

 

வதனிக்கு வாங்கி வந்த உணவுகளில் எக்ஸ்ட்ரா இருந்தது நிரஞ்சன் சுட்ட தோசை மற்றும் சட்னியை சேர்த்து இருவரும் பகிர்ந்து உண்டனர்.

 

உண்ட பின் அனைத்தையும் இருவரும் எடுத்துக் கொண்டு சமையலறையில் வைக்கும்போது “தேங்க்ஸ் சக்தி” என்று மனதார கூறினான்‌ நிரஞ்சன்.

 

ஒரு பெருமூச்சு விட்ட விகர்த்தனனோ “எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ண பாருங்க இப்படியே போனா அவ ஹெல்த்துக்கும் நல்லது இல்ல.. பிறக்க போற குழந்தைகளுக்கு நல்லது இல்ல.. நீங்க சண்டை போடுறது பார்த்தா மிருவோட மனநிலையும் பாதிக்கும். அதனால சீக்கிரமா எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வாங்க” என்றான்.

 

சிறிது நேரம் அமர்ந்து அவர்களோடு பேசிவிட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு அவன் வீடு சென்று விட்டான். 

 

அதற்குள் நிரஞ்சன் ஆர்டர் செய்து இருந்த கட்டில் வந்துவிட விகார்த்தனன் உதவியோடு தான் அதை ஹாலில் ஒரு பக்கமாக செட் செய்திருந்தான்.

 

பின் விரிப்பை விரித்து பிரேமாவை படுக்க சொன்னான். கூடவே மிருவும் அவர் அருகில் படுத்துக்கொண்டு “கதை சொல்லுங்க பாட்டி” என்று காலை அவர் இடுப்பு மேல் போட்டுக் கொண்டு கேட்க.. வெகு நாள் கழித்து பேத்தியோடு சந்தோஷமாக பேசிக்கொண்டே அவரும் உறங்கிவிட மிருவும் உறங்கினாள்.

 

மூவரையும் பார்த்து ஒரு பெருமூச்சோடு அமர்ந்திருந்தான் நிரஞ்சன், எங்கோ பார்வையை வெறித்தபடி..!

 

தன் தப்பை எண்ணி வெறுத்தப்படி..!

 

இது என்ன என்று தெளிவில்லாத வாழ்க்கையை நினைத்து வருந்தியபடி..!

 

இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால் சத்தியமாக நான் வழித்தவறி சென்றிருக்க மாட்டேனே என்று தன்னையே நொந்தப்படி..!

 

தொடரும்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top