தூகை 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

31

அன்று..

 

தூக்கத்திலேயே வதனியை இழுத்து அணைத்தவன் அவள் முதுகில் முகம் புதைத்து தன் உதடுகளால் உரசினான்.

 

வெகு நாளைக்கு பின்னான கணவனின் தீண்டலில் மெழுகாய் உருகினாள் வதனி.

 

அவன் தீண்டிய மேனி தான்..! அவன் பார்த்து ரசித்து ருசித்த அங்கலாயவங்கள் தான்..! அவன்‌ விரல்கள் தீண்டாத இடமில்லை..! அவன் அவன் இதழ்கள் பதிக்காத தடம் இல்லை..!

 

ஆனாலும் இன்று ஏனோ பெண்ணவளுக்குள் அத்தனை நாணம்.. அத்தனை மகிழ்ச்சி.. ஊற்றெடுத்தது, வெகு நாளைக்கு பின்னான கணவனை காதலில்..!

 

சில சமயம் அரை தூக்கத்திலேயே மனைவியின் வாசத்தை கண்டு அவளை ஆக்கிரமிக்க தொடங்கி விடுவான் நிரஞ்சன் வேலைப்பளு ஒரு காரணம். இன்றும் அப்படியே அவன் செய்ய அவனுக்கு கொஞ்சம் இணங்கி கொடுத்தாள் வதனி.

 

“ம்ம்ம் ஸ்வீட்டு” என்று அவன் கொஞ்ச, அமைதியாக அவனைப் பார்த்தாளே தவிர, ஒன்றும் பேசவில்லை..! அவன் பேச்சில் குளிர்ந்தாள்..! அவன் செயலில் நெகிழ்ந்தாள்‌.‌.!

 

அவனின் செல்ல பெயரில் சொல்லத் தெரியாத ஒரு உணர்வு ஊந்த அவளே அதிரடியாக அவனது அதரங்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தாள்.

 

ஆச்சரியத்தில் அரை கண்கள் சொருக அவளை பார்த்தவனும் அந்த முத்தத்தில் களித்தான். அவளை வளைத்தான்.. இறுக்கமாக அணைத்தான் தன்னோடு..!

 

பின் அவளது அதிரடிக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவனும் திருப்பிக் கொடுக்க.. இரு அதரங்களும் ஒன்றோடு ஒன்று லயித்து.. பின்னிப் பிணைந்து வன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. மூச்சுக்காக அவள் திணறி அவனிடமிருந்து பிரிய.. அவள் பிரியும் நொடியை கூட விடாமல் சேர்த்து வைத்து சிறை செய்தான் அவள் அதரங்களை.

 

அவளது கூந்தலில் விரல் நுழைத்து அசையாது தலையை இறுகப் பற்றிக் கொண்டு மீண்டும் இதழ் யுத்தத்தை துவங்கினான். பெண்ணவளின் கரங்கள் அவன் தோள்களிலும், முதுகிலுமாய் ஊர்வலம் நடத்த அதில் இன்னும் அவனது தாபம் தூண்டப்பட, ஒரு கை கூந்தலைப் பற்றி இருந்தாலும்.. மறுகரம் கொண்டு இறுக்கமாக அவள் இடை பற்றி தழுவிக் கொண்டான்.

 

அவர்களின் அழகிய கூடல் ஒற்றை முத்தத்தில் துவங்கியது.‌ “ஸ்வீட்டு.. ஸ்வீட்டு..” என மெல்லிய குரலில் அவன் அவளது காது மடலை கவ்வி சரசமாக அழைக்க.. வதனியோ அதில் கிளர்ந்து அவனோடு சரசமாட முனைந்தாள். அவளை இறுக்கி அணைத்து முத்தங்களால் முகம் முழுவதும் அர்சித்தான்.

 

“அசத்துறடி என் ஸ்வீட்டு" என்று செழுமையான அவளது கன்னத்தை அவன் செல்லமாக கடிக்க.. மேல் பற்கள் கொண்டு தன் உதட்டை கடித்து தன் உணர்ச்சிகளை கட்டினாள் வதனி‌. ஆனாலும் நிரஞ்சனா விடாமல் அவளது அழகை ஆராதிக்க.. அவனுள் அழகாக பொதிந்து போனாள் வதனி.

 

காலையில் முதலில் கண்விழித்தது என்னவோ நிரஞ்சன் தான்.

 

தன் கை வளைவில் கவலை என்று கண்ணுறங்கிக் கொண்டிருந்த மனைவியை தான் முதலில் பார்த்தான் ‘இவள் எப்போ எங்கு வந்து படுத்தா?’ என்று முதலில் குழம்பித்தான் போனான்.

 

இரவு நடந்தது எதுவுமே அவனுக்கு சரியாக ஞாபகம் இல்லை. காலையிலிருந்து வங்கியில் இடைவிடாத வேலை அதன் பின் லைவ் அது இது என்று அவனது நாட்கள் வேகமாக செல்ல.. அவ்வப்போது மனைவியுடன் சண்டையும் சேர்ந்து கொள்ள.. ஒரு விதமாய் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு இரவு நடந்தது ஏதோ கனவில் நடந்தது என்று நினைத்திருந்தான். 

 

“மேகா.. மேகா..” என்று எழுப்ப அவளோ “போங்க நிரஞ்சன், தூக்கம் தூக்கமா வருது. கொஞ்சம் தூங்குகிறேனே.. ஒரே டயர்ட்டா இருக்கு” என்று தூக்கத்திலேயே சிணுங்கினாள்.

 

என்னதான் கணவனின் காதலில் கட்டுண்டு கலவி புரிந்தாலும் பெண்ணவளுக்கு தேகங்கள் வலிக்க தான் செய்தது, ஆணவனின் வன்மையில்..!

 

“பாவம் மேகா.. அதிகமான வேலை இப்போதெல்லாம் அவளுக்கு அதுதான் தூக்கம் வராம இங்கே வந்து படுத்து விட்டாள் போல.. சரி தூங்கட்டும்” என்று நினைத்தான் நிரஞ்சன்.

 

கணவன் மனைவி இருவரும் உறங்கும் போது நடுவில் மிருகுட்டியை படுக்க வைத்து தான் உறங்குவார்கள். இரவில் என்னதான் உணர்வு மிகுதியில் கணவனுடன் கலந்தாலும் அவ்வேளையிலும் லேசாக உடம்புக்கு தண்ணீரை ஊற்றிவிட்டு தான் வந்து மகளைத் தொடுவாள் வதனி. கணவனையும் அவ்வாறே செய்ய சொல்லி விடுவாள்.

 

“இந்த மாதிரி இருந்திட்டு குளிக்காம புள்ளைய தொடக்கூடாது. புள்ளைக்கு தோஷம் பிடிக்கும். இல்லைன்னா காலையில குளிச்சிட்டு தொடுங்க” என்று அவள் கட்டளையிட்டு விட அதை மீற முடியாதவனும் அப்படியே தான் செய்வான்.

 

பெரும்பாலும் குழந்தையை நடுவில் தான் படுக்க வைத்துக் கொள்வாள் வதனி. அவளுக்கு தூக்கம் வரவில்லை என்றாலோ.. ஏதோ மனதில் பாரமாக இருந்தாலோ.. பிறந்த வீட்டின் நினைவு வந்து அழகை வந்தோலோ.. மட்டும்தான் குழந்தையை சுவற்றோரம் படுக்க வைத்துவிட்டு கணவனின் அருகாமையை நாடுவாள். 

 

கட்டிப்பிடித்து கட்டிலாடுவது மட்டும் தாம்பத்தியம் அல்ல..!

 

மன அழுத்த நேரத்திலும் மனையாளின் உள்ளம் புரிந்து அவளுக்கு துணை கொடுப்பதே தாம்பத்தியம்..!

 

அந்த வகையில் சிறந்த கணவனாக தான் இருந்தான் சிறிது காலம் முன்பு வரை நிரஞ்சன்.

 

அதே நினைப்பில் தான் இருந்தவன், “ஓஓ.. அம்மா ரூம்ல தூக்கம் வராம இங்கு வந்துட்டா போல” சிரிப்போடு மெல்ல இழந்து தன்னை சுத்தம் பண்ணியவன் பிரேமா அறையில் என்று பார்க்க அவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். 

 

“நல்லவேளை தூங்கிட்டு இருக்காங்க. முழிச்சிருந்து வதனி இல்லேன்னு பார்த்திருந்தா பிரச்சனை ஆயிருக்கும்” என்றவன் வெகு நாள் கழித்து அவனே‌ அனைவருக்கும் காலையில் டீ பால் அவர்களுக்கு தக்கப்படி கலந்தான். மனது ஏதோ புத்துணர்ச்சியாக இருந்தது. 

 

பிரேமா எழுந்தவர் “வதனி.. வதனி..” என்று அழைக்க அவருக்கு பாலை எடுத்துச் சென்றவன், அவர் அறை டேபிளில் வைத்துவிட்டு “என்னனு தெரியலம்மா காலைல எழுந்து வந்தா திரும்பவும் ஏதோ தலை வலிக்குதுன்னு படுத்துட்டா.. உடம்பு வேற லைட்டா காயுது” என்றான் மனைவிக்கு ஆதரவாக..!

 

இப்படி எல்லாம் சட்டென்று உடல்நிலை சரியில்லை என்று பொய் காரணம் கூறி படுப்பவள் வதனி கிடையாது என்று இத்தனை வருடத்தில் பிரேமாவுக்கு தெரியும்.

 

 அதனால் “சரிப்பா தூங்கட்டும்” என்றவர் மகனின் கைப்பிடித்து குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தார். மகன் கொடுத்த பாலை குடித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். 

 

மகளை எழுப்பும்போது மனைவியையும் எழுப்ப அவள் அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருக்க..

 

“என்ன இவ இவ்ளோ நேரம் தூங்குறா? இப்படி எல்லாம் தூங்க மாட்டாளே..! ரொம்ப வேலையோ? இல்ல நிஜமாவே காய்ச்சல் இருக்கா?” என்று அவளை தொட்டுப் பார்த்தான் உடம்பு சில்லென்று தான் இருந்தது.

 

“சரி.. இன்னிக்கு நாமே பார்ப்போம்” என்று மகளை கிளப்பினான்.

 

“அப்பா அம்மாவுக்கு காய்ச்சலா அதான் இவ்வளவு நேரம் தூங்குறாங்களா?” என்று எப்பொழுதும் தன்னை கிளப்பி விடும் அன்னை இன்று தூங்குகிறாளே என்று மகளும் வருத்தமாக கேட்க..

 

“ஆமாமா நைட்டு அம்மாவுக்கு ஃபீவர் அதனால டேப்லெட் போட்டு படுத்து இருக்காங்க.. இன்னைக்கு ஒரு நாள் நான் உனக்கு லஞ்சுக்கு வெளியில் வாங்கி தரவா?” என்றதும்,

 

“ஓகே பா..!” என்று சமர்த்தாய் சம்மதித்தாள் மிரு.

 

குளித்து உடைமாற்றி வந்தவள் “நான் பாட்டிகிட்ட போய் தலை வாரிக்கிறேன்” என்று அவரிடம் சென்று தலைவாரிக் கொண்டாள்.

 

“என்ன ஆச்சு உன் அம்மாவுக்கு இன்னும் தூங்கறாளா?” என்று பிரேமா கேட்க..

 

“ஆமா பாட்டி.. அம்மாவுக்கு ஃபீவர். பாவம் அம்மா” என்றாள் பிள்ளை பாவமாக

 

பிரேமாவுக்குமே சற்று மனம் நெகிழ்ந்தது. “சரி சரி அம்மாவ இன்னைக்கு டிஸ்டர்ப் பண்ணாம நீ நல்ல பிள்ளையாக கிளம்பு” என்று தலைவாரி விட்டு அனுப்பி வைத்தார். 

 

“அம்மா நான் மிருவ விட்டுட்டு அப்படியே வெளியில காலைக்கு சாப்பாட்டுக்கு வாங்கிட்டு வந்துடறேன் சரியா?” என்றான் நிரஞ்சன்.

 

சில சமயம் இது போல் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் வீட்டில் செய்து கொள்ளத்தான் வேண்டும். வேலை செய்பவரே தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் அவரது உடல் நலம் என்னவாகும்? 

 

‘மருமகளை மேலும் தொந்தரவு செய்து ஒருவேளை கடை உணவு என்பது இன்னும் ஒரு வாரம் என்று நீடித்தால்… ஐயையோ வெளி சாப்பாடெல்லாம் நமக்கு ஒத்துக்காது’ என்று யோசித்தவர்

 

“அவ ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையாகவே வரட்டும் ஆதவா..” என்று மனதில் நினைத்தை மகனிடம் கூறாமல் பதில் மட்டும் கூறினார்.

 

“ஆதவா எனக்கு லைட்டா வாங்கிக்கோ. காலையில இடியாப்பம் எல்லாம் கிடைக்குமா? இல்லைன்னா இட்லியே போதும் எனக்கு” என்றார். 

 

“இடியாப்பம் கிடைக்குதான்னு பாக்குறேன் மா இல்லன்னா இட்லி வாங்கிட்டு வரேன்” என்றவனும் மகளை பள்ளியில் விட அழைத்து சென்றான். 

 

மிருவோ “ம்மா.. நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன் பை” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து செல்ல உறக்கத்திலிருந்தே மகளுக்கு “பை பை பாப்பு” என்றாளே ஒழிய அவளுக்கு அதெல்லாம் நினைவே இல்லை நன்றாக உறங்கி ஒன்பது மணி போல்தான் விழித்தாள்.

 

திடீரென்று ஏதோ தோன்ற அடித்த பிடித்து எழுந்து அமர்ந்தவள், மணியை பார்க்க “ஒன்பது மணி 9 ஆச்சே.. அச்சச்சோ…” என்று அரக்க பறக்க முகத்தை கழுவி வந்து பார்க்க ஹாலிலும் கணவனும் இல்லை மகளும் இல்லை.

 

உடனே ஃபோனை எடுத்து கணவனுக்கு அழைக்க அதுவோ வீட்டில் இருந்து சத்தம் போட்டது. காலையில் சார்ஜ் போட்டு இருந்தவன் ஃபோனை எடுத்து செல்ல மறந்திருந்தான்.

 

“ஃபோன மறந்துட்டார் போலயே..!” என்று தனக்குத்தானே பேசியப்படி பிரேமாவின் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவரோ ஏதோ படித்துக் கொண்டிருந்தவர் அவளை பார்த்து கண்ணாடியை இறக்கி “இப்ப உடம்பு பரவாயில்லையா வதனி?” என்றதும்,

 

‘நான் நல்லா தானே இருக்கேன் ஒருவேளை நாம் தூங்குனதுக்காக சமாளிப்பா ஏதும் சொல்லி இருப்பாரோ நிரஞ்சன்? நாமும் சமாளிப்போம்’ என்று நினைத்தவள் “பரவால்ல அத்த.. இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கேன். எங்க இவங்க ரெண்டு பேரும் காணும்?” என்று கேட்டாள். 

 

“நல்லா தான் போ. ஸ்கூல் போகும்போது உன் பொண்ணு உன் கிட்ட சொல்லிட்டு போனாளே? அது கூட உனக்கு தெரியல? அப்படியா தூங்கின? மிருவ ஸ்கூல்ல விட போயிருக்கான் ஆதவன். வரும்போது காலையில டிபன் வாங்கிட்டு வந்துடறேன்னு சொன்னான். காலையில நல்லா ரெஸ்ட் எடுங்க பொறுமையா மத்தியானமா பாத்துக்கலாம். அதுவும் முடிஞ்சா பாரு இல்லன்னா லைட்டா ஏதாவது செய் போதும்” என்றதும் அதிசயமாக மாமியாரை பார்த்தவள்,

 

“சரிங்க அத்தை” என்றவள் மீண்டும் தங்கள் அறைக்கு வந்து அமர்ந்தாள்.

 

இத்தனை வருடத்தில் இது புதுமை எப்படி எல்லாம் அவள் உறங்கியதும் கிடையாது‌‌.! கணவனை மகளை தயார் செய்து பள்ளிக்கு அழைத்து சென்றதும் கிடையாது..! அது தெரியாமல் அவள் தூங்கி வழிந்ததும் கிடையாது..!

 

“என்னவோ போ வதனி. அப்பப்ப உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது போல” என்று சிரித்தவள் கணவனின் மொபைலை எடுத்து பார்த்தாள். 

 

கடைசியாக அவன் அந்த வி ஃப்ரெண்ட்ஸ் ஆப்பை பயன்படுத்தியதோடு நின்றிருந்தது. 

 

“அப்படி என்னதான் இதுல இருக்கு எப்ப பாத்தாலும் இதையே வச்சுக்கிட்டு இருக்கார்” என்றபடி உள்ளே நுழைந்தாள்.

 

பொதுவாக அதில் லைவ் வருபவர்கள் சில சமயம் ரீல்ஸூம் போடுவார்கள். இவள் ஒவ்வொரு ஆப்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தவள் கடைசியாக இருந்த சாட் பகுதியை பார்த்தாள்.

 

“இந்த ஆப்பு லைவ் அப்புறம் ரிலீஸ் தானே போடுவாங்க? சாட் ஆப்ஷனும் இருக்கா என்ன?” என்றபடி அதனை தொட அதில் இரண்டு மூன்று நண்பர்களோடு‌‌ நிரஞ்சன் சாட் செய்திருப்பது தெரிந்தது. 

 

“யார் கூட சாட் செஞ்சிருக்காரு?” என்று அவளுக்கு அவளே கேள்வி கேட்டாள்.

 

“இதுல என்ன இருக்கு? இதுல நிறைய பேரு லைவுக்கு வர சொல்லி அந்த லிங்க் ஷேர் பண்ணுவாங்க.. காயின்ஸ் போட சொல்லி கேட்பாங்க..” என்ற தானே பதிலும் அளித்துக் கொண்டாள்.

 

நிரஞ்சன் சாட் செய்து இருந்த ஒரு ஐடியை உற்றுப் பார்த்தாள். அதில் வெறும் கண்களை மட்டும் வைத்திருந்த ஒரு பெண்ணின் டிபியை சற்று யோசனையாக பார்த்தவள் அதை திறந்து பார்த்தாள், உள்ளே தோன்றிய நடுக்கத்தோடு..!

 

பார்த்தவள் கண்கள் நிலை குத்தி நின்றது அதிலிருந்த “ஹாய் ஸ்வீட்டு.. ஸ்வீட் மார்னிங்” என்ற வார்த்தையில்..!

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top