தேன்மழை 💞 - (25)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 26
Thread starter  
  • மாலை 4.05மணி 
  • "அஸ்வத்!" என அன்னை விசாலாட்சி அழைத்த குரலுக்கு, அரக்க பறக்க கூடம் நோக்கி வந்தான்.
வந்தவன் விழிகளை உருட்டி என்னவென்பது போல் நிற்க, "ராசிகா அப்பா, அம்மா கிட்ட பேசிட்டேன். உன் விருப்பத்துக்காக நேர்ல ஒரு தடவை போய் பேசிடலாம். அவங்களுக்கும் பட்டும் படாம சொன்னதுலயே விருப்பம் இருக்குன்னு தெரியுது."
 
தனது விருப்பம் நிறைவேறவுள்ளதை எண்ணி சிலாகித்தவன், "தாங்க்ஸ் மா.. தேங்க் யூ சோ மச்.." என்று கொண்டே அன்னையை ஆரத்தழுவி கட்டிக்கொண்டு கொஞ்சியவனை விலக்கியவர்,
 
"எல்லாம் ஓகே தான். பட் சொன்ன கண்டீஷன்ல மட்டும் நான் எப்பவும் சேஞ்ச் ஆக மாட்டேன். அதை மட்டும் ராசிகா கிட்ட பேசிக்கோ.
 
ஆஃப்டர் மேரேஜ் நீ எங்க இருந்தாலும் அதெல்லாம் எனக்கு இஸ்ஸு இல்லை. இந்த விஷயத்துல என் முடிவு மாறாது." என கறாராக கூறிய அன்னையை, அவன் தான் விழிகள் இடுங்க பார்த்து நின்றான்.
 
நடிப்பு இன்றைக்கு ஒரு சில விடயங்களால் அவள் வேண்டாமென யோசித்தாலும், வேறு யாரு கூறினாலும் அதிலிருந்து பின் வாங்கும் மன நிலை அவளுக்கு வரப்போவதில்லை.
 
ஆனால், அன்னையிடம் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி திடமான மனதோடு பொய்யுரைத்து விட்டான் அஸ்வத்.
 
"சரி நீ வரயா? இப்போ அவங்க வீட்டுக்கு?"
 
"இல்லை மா நான் வரல நீங்களும் டாட் மட்டும் போயிட்டு வாங்க.."
 
ஏன் என்பது போல் மகனை ஏறிட்டவரை கெஞ்சலோடு பார்த்தான். அதனை புரிந்து கொண்டவராக, புன்னகைத்து விட்டு கிளம்பிட ஆயத்தமானார்.
 
சுற்றிலும் பசுமை போர்த்திய தேயிலை தோட்டம். சலசலக்கும் ஆற்று நீர். சாரல் பட்டும் படாது வீசிய சிலிர்ப்பு. மனம் முழுவதும் அதன் ரம்மியம் நிறைந்திருந்தாலும், அவன் கை கோர்த்து நின்று அனுபவித்த தருணங்கள் வீடு வந்து சேர்ந்த பின்பும், அந்நினைவில் திளைத்து இருந்தாள் காரிகை.
 
வெகு நாட்களுக்கு பின்பு வந்தவளுக்கு, உபசரிப்பில் எவ்வித குறையுமின்றி பலமாக இருந்தது.
 
"என்ன மா முகத்துல பல்பு எரியுது?" என்றவள் அம்மாவின் கை வண்ணத்தில் தயாரான அதிரசத்தை ருசித்தப்படி கேட்க..
 
ஹேண்ட்ஸ் ஃப்ரியில் இருந்தவன் "தின்னு.. நல்லா தின்னு.. உனக்கென்ன குறைச்சல்" என்றான்.
 
வீட்டினரோடு பேசியப்படி இருந்தாலும், போனில் அவனிற்கு அழைத்தவள் ஹேண்ட்ஸ் ஃப்ரியோடு தான் சுற்றிக் கொண்டு இருந்தாள். அவனும் அப்படி தான்.
 
அவளிடம் பேச வேண்டுமென்ற அவாவில், வீட்டினரிடம் பேசும் குரலையாவது கேட்டு ரசிப்போம் என நினைத்தான்.
 
"ராசி மா.. இதென்ன காதுல?"
 
அதிரசத்திற்கு வாயில் ஒரு ஓரம் இடமளித்தவள், "ஆங்.. அது வந்து.. ப்ளூடூத்.. பாட்டு கேக்கும் அத்தை.." என்றாள் சமாளிப்பாக.
 
"எங்க குடு மா.. நான் கேக்குறேன்.." என்றவர் அவளிடம் அதை வாங்கும் முயற்சியில் கை நீட்ட, சுதாரித்தவள் "இங்கிலிஷ் பாட்டு ஓடுது.. தமிழ் பாட்டு வச்சுட்டு தரேன் அத்தை.." என்றாள் பதட்டத்தை சகிதம் காட்டாதப்படி.
 
"ஆமா.. மேடம் இங்கிலிஷ் படம் நல்ல ஓட்டுவாங்க. இப்போ அதுக்கான சாங்ஸ் தான் என்கிட்டே பிராக்டிஷ் பண்ணுறாங்க. என்ன ராசிகா. ஆன்ட்டி கேக்குறாங்களா குடு டி.. நான் ஒரு ஹாய் சொல்லுறேன்.." என அவன் நக்கலடிக்க, "ஷ்ஷ்ஹ்.." என்றாள் மெல்லமாக.
 
வீட்டில் மற்றவரோடு அவள் பேசும் கலகலப்பு பேச்சை ரசித்தவன், சில நிமிடங்களுக்கு பின் பெண் கேட்க வந்த சேதியும் காதில் விழ அதிர்ந்து போனான். அதன்பின் அவளே அழைப்பை துண்டித்து விட்டாள்.
 
(அஸ்வத் அப்பா - கண்ணன், அன்னை - விசாலாட்சி)
 
ராசிகாவிற்கும் இது பேரதிர்ச்சி தான். அஸ்வத் காதலிப்பது மட்டுமே அவள் அறிந்த ஒன்று. ஆனால், இப்படி திடுதிப்பென இவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை.
 
ராணி அவர்கள், வந்தவர்களை கவனி என்று கூறி அவளுக்கு புதிதாக கட்டளை பிறப்பிக்க ராசிகா தான் செய்வதறியாது, நின்ற இடத்திலே திகைத்து நின்றாள்.
 
அதே நேரம் கௌதமனும் உள்ளே வர, வந்தவர்களை எவ்வித குறைவின்றி உபசரிக்க கூறினார் மனைவியின் காதில் ரகசியமாக. அவரும் பார்த்து பார்த்து பக்குவமாக செய்த பதார்த்தங்களை மகளிடம் குடுத்தனுப்ப, மகளின் தோழியானவளை ஆஹா ஒஹோ என புகழ் பாடிக் கொண்டிருந்தார் விசாலாட்சி.
 
அனைத்திற்கும் ஆமா போட தான் சலைத்தவன் அல்ல என்பது போல் கண்ணன் அவர்களும் மனைவியின் பேச்சிற்கு ஆம் என்க, மகளை வேண்டா வெறுப்பாக பேசியவர் கூட இப்போது பெருமை பாடினார்.
 
எல்லா பேச்சும் பேசி முடித்தவர்கள், இறுதியாக திருமண பேச்சில் வந்து நின்றனர். கௌதமனும் மகளுக்கு செய்வதெல்லாம் எவ்வித குறையுமின்றி செய்வேன் என்றார். அதோடு, அவள் காலை அன்னையிடம் பேசியதை கேட்டவராக இனிமேல் மகளே விளம்பரத்தில் நடிக்க போவதில்லை என கூறி விசாலாட்சியை  குளிரச் செய்தார்.
 
தான் கூறிய அனைத்தையும் அன்னை இப்படி சாதுர்யமாக அப்பாவிடம் கூறி விட்டாரே என நொந்தவள் தான், எதுவும் பேச முடியாத நிலையில் விக்கித்து நின்றிருந்தாள்.
 
"என்ன ராசிகா பதிலே பேச மாட்டுற? அஸ்வத் தான் பொண்ணு கேக்க சொன்னான். அதான் நாங்களும் உடனே வர வேண்டியதாகிடுச்சு. உனக்கு சம்மதம் தானே?" என்றவர் முகம் மலர கேட்டு வைக்க..
 
அவள் தான் என்ன பதிலளிப்பது என தெரியாமல் அன்னையை தவிப்பாக பார்த்து நின்றாள். அவரோ, கன்னசைவிலே தலையசைக்க கூற.. அவள் எதுவும் கூறாத மௌனி ஆனாள்.
 
"ராசிகாக்கும் அஸ்வத்தை பிடிக்கும்னு நினைக்கிறோம். பையன் படக்குன்னு சொல்லிட்டான்  பொண்ணுல அதான் கூச்சப்படுறா.." என்ற விசாலாட்சியை தான் சொல்லொண்ணா நிலையில் பார்த்தாள்.
 
திடுதிப்பென அவர் பெண் கேட்டதும், கௌதமன் ஒத்துக் கொண்டதற்கு காரணம் விசாலாட்சியின் அந்தஸ்து மற்றும் ஆளுமை தான். கல்லூரி ஒன்றில் தலைமை பொறுப்பில் உள்ளார். சொத்துக்களோ ஏராளம்.
 
இப்படிப்பட்ட சம்மந்தம் வலை வீசினால் கூட கிடைக்காது என யோசித்தவர் தான், பட்டென ஆமோதித்தார் போன் வழியே பட்டும் படாமல் கேட்ட போதே.
 
எல்லாம் பேசி முடித்தவர்கள் பிருந்தா திருமணம் முடியவும், ஒரு மாதத்திற்குள்ளே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றதில் விடைபெற்றுக் கிளம்பினர்.
 
"ஏங்க சம்மந்தி வீட்டுல என்ன சொன்னாங்க?" என்று கொண்டே கணவரை நெருங்கிய அன்னையை தான், ஏமாற்றப் பார்வை பார்த்தாள். எல்லோரிடமும் சுயநலமே நிறைந்துள்ளது என எண்ணியவள், அதற்கு மேல் அங்கு நிற்காது அறை நோக்கி சென்றாள்.
 
அடுத்து அழைத்தது மனம் கவர்ந்தவனுக்கே! அவனும் காதில் கேட்டிருந்தானே. அழைத்து தகவல் கூற நினைத்தவளிடம், "6.30க்கு ஷோ. கிளம்பி வந்துடு.." என்றவன் அவள் என்ன கூற வருகிறாள் என கேளாது துண்டித்ததில், எங்கையாவது முட்டிக்கொண்டு அழலாமா? இல்லை ஓடி விடலாமா? என்பது போல் இருந்தது அவளது நிலை.
 
ஆபீஸ் வேலையில் மும்மரமாக இருந்தாள் பிருந்தா. அலைபேசி அலறி சிந்தை கலைத்தது. தொடுதிரையை கண்டவள் விழிகள் வியப்பில் விரிய, முகத்திலோ மகிழ்ச்சியின் ரேகைகள் மின்னி மறைந்தது.
 
"ஆங்.. சொல்லுங்க.."
 
மறுமுனையில் குரலை செருமி பேசிடவே யோசித்தான் பிரதீஷ். அன்று இதே வாய் தான் டையலாக் அடித்தது. இன்று பேச கூட அத்தனை தயக்கம்.
 
அவளே வேலை இன்னும் முடியவில்லை என நயந்து கூறினாள்.
 
'கடவுளே நீ இருக்குறது இப்போ தான் உண்மைன்னு புரிய வச்சுருக்க. நான் சொல்ல நினைச்சதை அவளே சொல்லிட்டா.' என்றென்ணி நிம்மதி பெருமூச்சு விட்டவன், பிளேட்டை மாற்றி விட்டான்.
 
"ம்ம்.. ஓகே கேரி ஆன்.. நாளைக்கி ஈவ்னிங் மீட் பண்ணலாம்.."
 
"ம்ம்.."
 
அதோடு அவன் அழைப்பை துண்டிக்க, அவளுக்கு தான் பெரும் ஏமாற்றமானது.
 
5.30மணி
வீட்டிலிருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவள் வெளியே கிளம்ப, "ராணி! இனி கொஞ்சம் ஆட்டத்தை குறைச்சுட்டு ஆகுற வேலையை மட்டும் பாரு. இல்லை தண்டவாளத்துல அப்பன் தலை போய்டும்!" என்றார் மகளை வெட்டவா குத்தவா என்னும் ரீதியில் பார்வை பார்த்தப்படி.
 
அவள் அதையெல்லாம் காதில் வாங்கிடாது, ஸ்கூட்டியை பறக்க விட்டு கிளம்பினாள்.
 
வீட்டினர் உட்பட ஆர்த்தி மற்றும் அஸ்வத் மீது அப்படியொரு சினம் மூண்டது. போன் செய்து பேசிட நினைத்தவள், வீடு அதற்கான இடமில்லை என அறிந்து தான் பிரதீஷ் தங்கியுள்ள யாதவ் கெஸ்ட்ஹவுஸ் நோக்கி சென்றாள்.
 
அதற்குள் அழைத்து விட்டான் அவள் இன்னும் வரவில்லை என்னும் எதிர்பார்ப்பில். வண்டியை ஓரங்கட்டியவள் அழைப்பை ஏற்க, "சீக்கிரம் வா.. டைம் ஆகுது.." என்று விட்டு போனை வைத்ததில், தலையில் அடித்துக் கொண்டு அவனை காண கிளம்பினாள்.
 
"ஏங்க பத்திரிக்கை அடிக்க குடுத்துடலாம் தானே?"
 
"ம்ம்.. நாளை கழிச்சு, நாள் நல்லாருக்கு சொன்னாரு சண்முகம் ஐயா. அவங்க வீட்டுல எத்தனை பேர் வராங்க தெரியல. நாம எல்லாரும் போய்டலாம்."
 
ராணியோ அகம் மகிழ்ந்து, "குலசாமிக்கு காசு எடுத்து வச்சுட்டேங்க காலையிலேயே. இப்போ தான் நல்ல சேதி சொல்லிருக்கீங்க." என்க, "நல்லபடியா கல்யாணம் முடியனும். ரெண்டு பேரையும் ஜோடியா கண் குளிர பாக்கணும் அதான் என் ஆசை!" என்றார் வேதகி அவர்கள் சிலாகித்தபடி.
 
"எதுக்கு அழுதுட்டுருக்க? கல்யாணம் தானே பேசிட்டு போனாங்க.. இதுக்கே அழலாமா?" என்றவன் மடியில் அமர்ந்திருந்தவள், அவனை கட்டிக்கொண்டு மேலும் விசும்பிட..
 
"ஹேய்.. லூசா டி நீ? அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. கண்ணை துடை. உன் அப்பா நம்பர் குடு நான் பேசுறேன்.." என்றான் மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ளும் விதமாக.
 
"வேணாம்.. எனக்கு பயமா இருக்கு.." என முதன் முதலாக பயம் என்பதை உரைத்தவளை புருவம் சுருக்கி பார்த்தான்.
 
அஸ்வத் குடும்பம் மற்றும் அவனது ஒருதலை காதலை பற்றியும் தெளிவாக கூறினாள் பிரதீஷிடம்.
 
"அப்போ மேடம் என்ன பண்ண போறீங்க?"
 
"ஓடி வந்துறேன்.. கல்யாணம் பண்ணிக்கலாம்.."
 
"எனக்கு எந்த பிராப்லேம் இல்லை. எப்போ வர்ற?"
 
"நாளைக்கழிச்சு மார்னிங்.."
 
"சரி மேடமே உங்க பிளான் சொல்லுங்க.."
 
அவள் கூறிய அனைத்தையும் கேட்டு சிரித்தவன், "இது ஓரு ஐடியா அதை வேற பில்டப் பண்ணி பேசுற." என்றான் முறைப்பாக.
 
"என் அப்பாவை நினைச்சாலே பயமா இருக்கு" என்றாள் உதட்டை பிதுக்கி.
 
"அப்போ.. என்ன பண்ணுறதா உத்தேசம்?"
 
"நான் இப்போ என் ஃபிரண்ட் அண்ணன் கிட்ட பேசுறேன். அவன் வேணாம் சொல்லிட்டாலே போதும்.." என்றவள் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்றதும் பிரதீஷ் அவளிடமிருந்து போனை வெடுக்கென பறித்து விட்டான்.
 
முதன் முதலாக ஒருதலை காதலியின் போனில், ஆண் ஒருவன் குரல் கேட்டதும் தடுமாற்றம் அடைந்த அஸ்வத் "ராசிகாஆஆ.." என்றான் பதட்டமாக.
 
"நான் ராசிகா லவ்வர் பேசுறேன்!"
 
அவ்வழுத்தம் குரலில் மட்டுமல்ல. மடியில் அமர்ந்திருந்தவளின் இடையை சுற்றிய அணைப்பிலும் வலுத்தது.
 
".........."
 
"இன்னேக்கி நீங்க அவ வீட்டுல மேரேஜ் விஷயமா பேசிட்டு போனதா இப்போ தான் என்கிட்ட சொன்னா. நான் மிரட்டலாம் கால் பண்ணல ப்ரோ.
 
இப்போ தான் ஜாலியா லவ் பண்ண ஆரம்பிச்சுருக்கோம். சோ, டோன்ட் டிஸ்டர்ப் அஸ்.
 
அடுத்தவன் லவ்வர் மேல ஆசைப்படுறது ரொம்ப தப்பு. படிச்சுருக்கீங்க புரியும்ன்னு நினைக்கிறேன்.
 
புரியலைன்னா என் நம்பர்க்கு கால் பண்ணுங்க புரிய வைக்கிறேன். அவளுக்கு நான்.. நான் மட்டும் தான் எல்லாமே.. டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?" என கேட்டதும், அழைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட்டது.
 
"என்ன சொன்னான்?" என ராசிகா பதட்டமாக வினவ, அவனோ நக்கலாக "சொல்ல மாட்டான். இனி தான் ஏதாவது செய்வான்!" என்றான் விழிகளை சிமிட்டி.
 
அதில் மிரட்சியோடு பார்த்தவளை, காதை பிடித்து திருகியவன் "உன்னால உன் மேரேஜ்ஜை ஸ்டாப் பண்ண முடியல. நீ டைவர்ஸ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லுற. இதுக்கு மட்டும் எங்க இருந்து உனக்கு தைரியம் வரும்?" என்றவன் மற்றொரு கை அவளது கன்னம் கிள்ள..
 
"ஆஆ.. வலிக்குது.. விடுங்க.. அதெல்லாம் வரும் இப்பவும் கூட.. ஆனால், என் அப்பான்னா கொஞ்சம் பயம்!"
 
"ஏன் இதை அன்னேக்கி சொல்லும் போது உன் அப்பா நியாபகம் வரலையா?"
 
"ப்ளீஸ் விடு டா.. அதெல்லாம் வந்துச்சு.. ஆனாலும் லவ் அப்படி இல்லைல.." என்றவள் அப்பாவியாக, முகத்தை வைத்துக் கொண்டு உதட்டை சுளித்தாள்.
 
"ராசிகா, இதெல்லாம் யோசிச்சு டென்சன் ஆக ஒண்ணுமில்ல. ரிலாக்ஸா இரு. ஒன் வீக்ல நீ நினைச்சதை விட சிறப்பான சம்பவம் ஒன்னு இருக்கு.."
 
"அதென்ன? சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கணும்.."
 
"தெரிஞ்சு என்ன செய்ய போற? நடக்கும் போது பாரு.." என்றவன் அவளின் யோசனைக்கு இடமளித்து, குளியலறை நோக்கி சென்றான். அவளும் வெகு நேரம் யோசித்து பார்த்து விட்டு, என்னவென தெரியாமல் குழம்பி நிற்க..
 
கேசத்தை துவட்டியப்படி வந்தவன், அவளை பின்னால் இருந்து அணைக்க; துளியும் அவ்வணைப்பை எதிர்பாராதவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
 
"என்ன?"
 
"ஒன்னும்.. இல்லை.."
 
"ரொம்ப யோசிக்கிற மாதிரி தெரிஞ்சதே.."
 
"அதெல்லாம்.. ஒண்ணுமில்ல.. கிளம்புங்க.." என்றவள் அணைப்பில் இருந்து விலகி அவனை வெட்கப்பார்வை பார்த்தாள்.
 
ஒவ்வொரு எட்டுக்களையும் அவன் முன்னே வைக்க, அவளோ பின்னே நகர்ந்தாள். அதில் இதற்கு மேல் நகர இடமில்லை என சுவர் ஒரு இடி வைக்க; சட்டென அணையிட்டு நின்றவன் அவள் கன்னத்தை அழுத்தமாய் பற்றி திருப்ப, பாவம் அவள் தான் ஏதேதோ கற்பனையில் மிதந்தாள்.
 
"இந்த டிரஸ் நல்லாருக்கு!" என கிசுகிசுத்தவன் குரலில் தகித்திருந்த பெண்ணவளோ, விழி வெட்டாமல் அவனையே பார்த்திருக்க..
 
நெற்றியில் மிக அழுத்தமாக முத்தமிட்டான். அவனது எதிர்பாராத முத்தத்திலும், ஊர்வலம் சென்ற விரலையும் எட்டி பிடித்தவள்..
 
"கிளம்புங்க.. போலாம்.." என்றாள் காற்றுக் குரலில்.
 
மீண்டும் அழுத்தமாக வலது கண்ணின் மீது முத்தமிட்டவன், "இது எனக்காக கண்ணீர் சித்துனதுக்கு.." என்றான்.
 
"அப்போ முதல? எதுக்கு?" என்றவள் மூக்கோடு மூக்கு உரசிட கேட்க..
 
"என் அம்மாவுக்கு நிகரா நினைச்சு குடுத்த முத்தம்.."
 
"ம்ம்ம்ம்.."
 
"இன்னும் நிறையா.. பேலன்ஸ் இருக்கு.. நாளைக்கி தரேன்.." என்றதில் ஏமாற்றமாக பார்த்தாள் தூரம் விலகி சென்றவனை.
 
சென்ற வேகத்தில் மீண்டும் அவளை நோக்கி வந்தவன், நெஞ்சோடு இழுத்தனைத்துக் கொண்டான் பின்பக்கமாக. எதிர்பாராத அணைப்பில் திடுக்கிட்டு நின்றவள் கன்னத்தில், அழுத்தமான இதழ் முத்தம் வைத்தான்.
 
அவளோ இது எதுக்கு என்னும் ரீதியில் பார்க்க, "எனக்கு நீ எப்பவும் குழந்தைன்னு நான் சொல்லாம சொன்னது.." என்க, "நிஜமாவா?" என்றாள் ஆர்வம் மின்ன.
 
அவளது கேள்விக்கு பதிலளிக்காது, அடுத்த முத்தத்தை காது மடலில் பதித்து; எதற்கு என கூறாமல் விலகி சென்று விட்டான்.
 
"என்ன.. எதுவும் சொல்லாம போறீங்க?"
 
"இப்போ சரியா.. தரல.. நெக்ஸ்ட் சரியா குடுத்துட்டு சொல்லுறேன்.." என்றவன் குறும்பு பேச்சில், பேதையவள் வெட்கி குனிந்தாள்.
 
தேன்மழை💖💖
 
 

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top