Share:
Notifications
Clear all

வஞ்சகனின் காதல் சிம்மாசனம்

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 8
Thread starter  

வஞ்சகனின் காதல் சிம்மாசனம்

 

அத்தியாயம் 1

 

பகலவன் தன் வேலை முடிந்ததும் டான் என ஐந்து மணிக்கே மறைய ஆரம்பித்த மாலை நேரம் அது.

திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டே கலகலவென அமைதி என்பதை மறந்த நிலையில் இருந்தது.. 

 

சூரியன் சற்று கீழே சாய்ந்து, தன் மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த ஒரு வித தங்கக்கலரில் தன் பொன்கதிர்களை பூமியில் வீச ஆரம்பித்தது.. அந்த ஒளி பஸ்ஸ்டாண்டில்  இருக்கும் தூசியை பொன்னாக மின்ன வைத்திருந்தது.

 

அழுக்கு உடைகளில் நின்றிருந்த பேருந்தில் ஏறியிறங்கி சத்தமிட்டுக் கொண்டே விற்பனை செய்துக் கொண்டிருந்தனர் சிலர்.. 

 

“இஞ்சி மொறப்பா.. இஞ்சி மொறப்பா… 

வேகலை.. வேகலை.. 

மாங்கா.. மாங்கா.. 

சுட்ட சோளம்.. சுட்ட சோளம்..

தலைவலி தைலம்.. தலைவலி தைலம்..” என பல குரல்கள் விற்பனைக்கு தயாராகி பொதுமக்களின் பார்வையை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது.. 

 

இந்தக் கூட்டத்தில் யாருக்கும் யாரைப் பற்றி கவலையில்லை. அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்தது.. அதை நோக்கித் தான் அவர்கள் பயணமும் இருந்தது..


ஆனால் அதில் ஒருவன் மட்டும் அங்கிருந்த ஒவ்வொருவரையும் கவனித்து கொண்டிருந்தான்.

 

அவன் கண்களோ இரை தேடும் கழுகினைப் போன்று, அந்த பஸ் ஸ்டாண்டையே கூர் விழிகளால் அளவெடுத்தது.. 

 

அவன் பெயர் சயந்தன்.. திருநெல்வேலியில் புதிதாக என்கவுண்டர் ஆபீசராக சார்ஜ் எடுத்திருக்கிறான்..

அவனோட கண்கள் கழுகைப் போன்று கூர்மையானது.. யாரையும் எளிதாக எடைபோடும்.. 

 

சில சமயம் குத்திக் கூர் கிழிக்கும்.. 

 

ஒருவரின் சிரிப்பு உண்மையா?.. போலியா?.. அனைத்தையும் அவர் தெரிந்துகொள்வான். 

 

அதனால் தான் என்னவோ தன் குடும்பத்தின் மீதே பற்றற்று இருக்கின்றான்.. 

 

காக்கிச்சட்டை அவனுக்கு உடம்பு போல. அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்..

அவன் மெதுவாக நடந்து வந்து, ஓரமாக இருந்த தேநீர் கடையில நின்றான்.
“ஒரு இஞ்சி டீ.” என்றவன், அழுக்கடைந்த பெஞ்சை லேசாக தட்டிவிட்டுக் கொண்டே அதில் கம்பீரமாக அமர்ந்தான்.. 

 

கடைக்காரன் அவனை உடனே அடையாளம் கண்டு கொண்டான்.. 

 

பயத்துடன் கடைக்காரர் இவனைப் பார்க்க, இவனோ லேசாக புன்னகைத்தான்.. 

 

அந்தப் புன்னகை கூட அவருக்கு பயத்தை தான் கொடுத்தது.. 

 

கைகள் நடுங்க, டீயை அவரிடம் நீட்டினார் அவர்.. 

 

அந்த நேரம் ஏதோ ஒரு பஸ்சின் ஹாரன் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 

 

 “திருநெல்வேலி வந்தாச்சு.. இறங்குறவங்க இறங்குங்க..” என்று கண்டக்டர் தொண்டைக்கிழிய கத்திக் கொண்டிருந்தான்.. 

 

கண்டக்டரின் சத்தம் இவனுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும் போல, முகத்தைச் சுழித்தான்.. 

 

மஞ்சள் வெயில் கண்களை கூச செய்ய, லேசாக விழிகளை சுருக்கி அவன் பார்த்த வேளையில் பஸ்சில் இருந்து இறங்கினாள் பெண் பாவை அவள்.. 

 

வர்ணனையில் மட்டுமில்லாது பெயரிலும் அவள் பாவை தான்.. யாதிரா பாவை.. 17 வயது கொண்ட இளம் பெண்..


12வது படித்துக் கொண்டிருக்கும் பெண் அவள்.. 

 

அவள் கையில் நிறைய புத்தகங்கள், தோளில் வேறு ஒரு பை.. என தூக்க முடியாத சுமையாய் படிப்பையும் சுமந்துக் கொண்டு வந்தாள்.. அவன் இருந்த கடைக்கு அருகில்.. 

 

அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சயந்தன். 


அவளைத் தாண்டிச் செல்லும் வேளையில் பச்சை நிற துப்பட்டா காற்றில் அசைந்தாடியது.. 

 

முகத்தை லேசாக திருப்பிக் கொண்டான் சயந்தன்.. 

 

பட்.. பட்.. என்று ஒரு சத்தம் கேட்க, வேகமாக முன்னே பார்த்தான்.. 

 

யாதிராவின் கைகளில் இருந்த புத்தகம் தான் ஒரு பக்கமாக சரிந்து விழுந்திருந்தது.. 

 

“அச்சோஓஓ..” என மெல்லிய முனகல் ஒலியுடன், அவள் லேசாக வருத்தத்தின் சாயல் கலந்து குற்றிக்காலிட்டு அமர்ந்தவாறே, அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்.. 

 

அவளுக்கு ஓடிச்சென்று உதவி செய்யக்கூட அவனுக்கு தோன்றவில்லை.. அமைதியாக தான் அமர்ந்திருந்தான்.. அவளை வேடிக்கை பார்த்தபடி.. 

 

ஒவ்வொரு புத்தகத்தை எடுக்கும் போதும், புத்தகத்தில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டுக் கொண்டே, அவள் கைகளில் எடுத்து வைத்த விதம் அழகோ அழகு தான்.. 

 

ஆறடி ஆண்மகனை சாய்க்கும் வல்லமை கொண்டது தான்..  

 

“நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா யாதி?..” என அவள் வகுப்பு தோழன் ஒருவன் வம்பு வளர்க்க வேண்டுமென்றே அவளிடம் கேட்க, சுருக்கென்று கோபம் ஏறியது சயந்தனுக்கு.. 

 

‘நீ யாருடா அவளுக்கு ஹெல்ப் பண்ண?..’ என உள்ளுக்குள் கனன்று கொண்டு வந்தது அவனுக்கு.. 

 

அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை.. 

 

வேகமாக சென்று, அங்கிருந்த எல்லாவற்றையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.. 

 

தன் முன்னால் நீண்ட கரங்களை அழுத்தமாக பார்த்தாள் யாதிரா.. 

 

வலிமையான இரும்புக்கரத்தினை அச்சம் படர்ந்த விழிகளுடன் பார்த்தவள், அந்தக் கரத்திற்கு சொந்தக்காரனையும் ஏறிட்டுப் பார்த்தாள்.. 

 

காக்கி பேன்ட், கருப்பு கலர் சட்டை அணிந்திருந்தான்.. காக்கி கலர் ஷூ அணிந்திருந்தான்.. அதைப் பார்த்ததுமே புரிந்து விட்டது இவளுக்கு. இவன் போலீஸ்காரன் என.. 

 

அந்தக் கண்கள் அவளைத் துளைத்தெடுப்பதை போல இருந்தது.. மெல்ல அவள் உடல் நடுங்கியது.. 

 

அவளின் நடுங்கிய உடலைப் பார்த்துக் கொண்டே, அவள் நோட்டின் முன்பக்கத்தை திருப்பிப் பார்த்தான். E.யாதிரா பாவை என எழுதியிருந்தது.. 

 

யாதிரா என மென்மையாக சொல்லிப் பார்த்தான்.. 

 

“தாங்க்ஸ்” என கண்களால் சொன்னவள், அவனை திரும்பிக்கூட பாராமல் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, கூட்டத்தில் மறைந்து போய் விட்டாள்.

 

சயந்தன் அங்கேயே நின்று, அவள் போகும் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அரியாசனம் ஏறினாய் என்னுள், 

காதலால் அல்ல.. வன்மத்தினால்.. 

ஒரு நாள் அந்த அரியாசனமே 

முள்படுக்கையாகி 

உன்னைக் கொல்லும்”

 

அவனது உதடுகளில் ஒரு சின்ன குரோதப் புன்னகை விளையாடியது. பஸ்ஸ்டாண்ட் முழுக்க சத்தமாய் இருந்தாலும், அந்த நொடியில் சயந்தனின் காதில் ஒன்றுமே கேட்கவில்லை.

 

அவன் காதில் கேட்டது அவள் பெயர் மட்டும்தான் — யாதிரா பாவை.

 

அவள் மைனர் பெண் என அவள் அணிந்திருந்த ஸ்கூல் யூனிபார்மை பார்த்தாலே கண்டு பிடித்து விடுவான்.. 

 

ஆனாலும் அவளைப் பார் என்ற உணர்வை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.. 

 

அவள் என்னவள்.. எனக்கானவள்.. எனக்கு மட்டுமே உரிமையானவள் என்று மட்டுமே தோன்றியது. 

 

மெல்லி விழிகளை சுற்றிப் பார்த்தவனின் கண்களில் சிறு ஏளனப்புன்னகை.. 

 

தன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை உருவி எடுத்தவன், நொடியும் தாமதிக்காமல், பஸ்சின் பின்புறம் மறைந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த பட்டாக்கத்தி பாலுவின் நெற்றியில் துப்பாக்கியின் தோட்டாவை இறக்கியிருந்தான்.. 

 

ஹக்க்.. என அவன் விழுவதைப் பார்த்த மக்கள் அதிர்ந்து, அங்குமிங்கும் தெறித்து ஓட ஆரம்பித்த வேளையில்.. யாதிரா திகைத்து நின்றுக் கொண்டிருந்தாள்.. 

 

“ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள்? என அறியாமல் நின்றுக் கொண்டிருந்தவளின் முழங்கையை யாரோ இடித்து விட, தொப்பென்று தரையில் விழப்போனவளை சட்டென்று தாங்கிக் கொண்டது காக்கிச்சட்டை அணிந்த உருவம்.. 

 

தன்னை தாங்கிக் கொண்ட கரங்களை அதிர்ந்து பார்த்தாள் யாதிரா.. 

 

“ஆட்கள் ஓடுறாங்கன்னு தெரியும்ல கவனமா இருக்க மாட்ட?.” என சாடியவனைக் கண்டு திகைத்து விழித்தாள்.. 

 

“ப்ச்ச்ச. என்ன பார்க்குற?.. போ போய் ஓரமா இரு.. எப்படியும் இங்கே கலவரம் வெடிக்கும்.. ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போயிடு..” என்றவளின் பார்வையோ, கீழே சிதறிக்கிடந்த புத்தகத்தின் மீது தான் இருந்தது.. 

 

அவளின் பார்வையில் சலிப்பை உணர்ந்தான் சயந்தன்.. 

 

“உனக்கு உசிரை விட புக்கு தான் முக்கியமா?..” என கடுமையாக சாடியவன்,  அவளை சுட்டெரிக்கும் பார்வையில் முறைக்க ஆரம்பித்தான்.. 

 

இதுவரை தன்னிடம் இலகுவாக பேசியவனின் பார்வை மாற்றத்தில் உள்ளுக்குள் ஒரு வித கிலி பரவிட, மிரண்டு விழித்தவளின் முழங்கையைப் பற்றி இழுத்தவன், யாதிராவிற்கு பின்னால் தன்னை வெட்ட முயன்றவனின் இதயத்திலேயே தோட்டாவை இறக்கினான் சயந்தன்.. 

 

தோட்டோ வெளியேறும் சத்தத்தில் அதிர்ந்து, சயந்தனின் இதயக்கூட்டில் தன் காதுகளை பொறுத்தி, பயத்தில் கண்களை இறுக்கமாக மூடியபடி நின்றிருந்தாள் யாதிரா.. 

 

அவளின் உடலோ அனிச்சை செயலாக நடுங்கிக் கொண்டிருந்தது.. தன் நெஞ்சோடு சாய்ந்திருந்தவளின் தலையை இடது கரம் கொண்டு வருடி விட்டவாறே,  

 

“ஈசி பேபி.. டோன்ட் ஒர்ரி..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் இடையை அழுத்தமாக பற்றி பக்கவாட்டாக சுழற்றி எடுத்தவன், இன்னொரு ரவுடியையும் சுட்டுப் பொசுக்கியிருந்தான்.. 

 

அவன் வலது கையிலிருந்து ஒவ்வொரு தோட்டோவும் செல்லும் நேரம், இவளுக்கு உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது.. 

 

கிட்டத்தட்ட ஆறு புல்லட்டையும் காலி செய்து முடித்தவன்.. அப்பொழுது தான் தன்னை குனிந்துப் பார்க்க.. எப்பொழுதோ அவன் நெஞ்சிலேயே மயங்கிச் சரிந்திருந்தாள் யாதிரா.. 

 

நல்லவேளையாக அவன் இடையைப் பற்றியிருந்ததால், அவள் கீழே விழவேயில்லை… 

 

“யாதிரா.. யாதிரா.. பேபி.. ” என அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்.. 

 

6 உயிர்களை அசால்ட்டாக வாங்கியவனுக்கு, அனிச்சம் பூ இவளின் சிறு மயக்கம் அவனுக்கு பயத்தைக் கொடுத்தது.. 

 

“ஆம்புலன்ஸ்..” என்றவனின் அலறல் சத்தத்தில், வேகமாக அவன் முன்னே இருவர் வந்து நின்றனர்.. 

 

“இவளுக்கு என்னாச்சின்னு பாருங்க..” என அவளை தன் மடியில் கிடத்தினான்.. 

 

எதிரில் இருந்தவர்கள் திருதிருவென விழித்தனர்.. நடந்த கலவரத்தில் மயக்கமாகியிருக்கிறாள் என்பது அவர்களுக்குப் புரிந்தது.. 

 

“என்னடா முழிச்சிட்டு இருக்கீங்க?.. இவளுக்கு என்னாச்சின்னு பாருங்க..” என துடித்தவாறே கேட்ட சயந்தனை வியந்து பார்த்தான் கெளதம்.. 

 

“சார்.. சாதாரண மயக்கம் மாதிரி தான் தெரியுது..” 

 

“நீ என்ன டாக்டரா?.. ஹான் டாக்டரா டா?..” எரிச்சலைக் கிளப்பாத.. என அவன் கத்திய கத்தலிலும், அங்கு நின்றிருந்த ஒருவன் பாட்டிலில் இருந்த தண்ணீரை யாதிராவின் முகத்தில் தெளித்ததால்  மெல்ல கண்களை சுருக்கிப் பின் விழித்தவளின் முகம் பார்த்தது என்னவோ சயந்தனை தான்.. 

 

அவனைப் பார்த்த பின்பு தான் அனைத்தும் ஞாபகத்திற்கு வர, சட்டென்று அவனை விட்டு இரண்டெட்டு பின் வைத்தாள் பாவை.. 

 

அச்சத்தில் விழிகள் உருள, லேசாக தன்னைச் சுற்றிப் பார்த்தாள்.. பஸ் ஸ்டாண்டே காலியாக இருந்தது.. 

 

ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை போலீஸ்காரர்கள் ஏதோ செய்துக் கொண்டிருந்தனர். 

 

முதல் முறை கொலையைப் பார்க்கிறாள்.. உடலோ நடுக்கத்தில் பற்றுக்கோலாய் எதையோ தேடியது.. 

 

“என்னாச்சி பேபி?..” என தேனொழுக கேட்ட சயந்தனைப் பார்த்தவள், சட்டென்று பின்னோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தாள்.. 

 

அவள் வைத்த வேகத்தில் கால்கள் தடுமாறிட, பின்னால் விழப்போனவள்.. ஒரு வழியாக சமாளித்து.. பின்னங்கால் பிடறியில் அடிக்க வேகமாக ஓட ஆரம்பித்தாள்.. 

 

அவள் ஓடுவதைப் பார்த்தவனின் இதழ்களில் சிறு மர்மப்புன்னகை.. 

 

“ஓடு.. பேபி.. நீ எங்கே போனாலும், அங்கே நான் கண்டிப்பா வருவேன்..” என மனதோடு பேசியவன்.. அங்கிருந்த போலீஸ்காரரிடம் பேச ஆரம்பித்தான்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top