தூகை 25

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 233
Thread starter  

25

 

அன்று…!

 

 

இரவு நேரம் சென்று தான் வந்தான் நிரஞ்சன். அவன் சுத்தம் செய்து வருவதை பார்த்தவள் டைனிங் டேபிளில் தட்டை வைத்து அதில் சப்பாத்தியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் வதனி.

 

அவனோ அவளையே உற்றுப் பார்த்தான். அவளோ கண்டுக்கொள்ளாமல் அமைதியாக தன் வேலையை பார்த்தாள்.

 

மெதுவாக அவள் பின்னால் போய் அவளை கட்டிப்பிடித்தான். தன் முகத்தை அவள் பிடறியில் வைத்து.. பின்னங் கழுத்தில் அழுத்தபாக ஒரு முத்தம் கொடுத்தான். அவளின் இடையில் தன் கைகளை உலாவ விட்டான்.

 

“சமாதானப்படுத்துகிறானாம்!! காலையில் செய்தவற்றுக்கு ஒரு மன்னிப்பை யாசிக்கவில்லை. இப்பொழுது சமாதானப்படுத்துறேன்னு இழைவதைப் பார்..!” என்று கோபம் வந்தாலும்,

 

 

”ம்ம்.. சும்மாருங்க. உங்க வேனா அம்மா எப்ப வேணாலும் கூப்பிடுவாங்க. சாப்பிடுங்க மொதல்ல” என்றவள் மெல்ல அவனிடம் இருந்து விலகி நகர்ந்தாள்.

”நீ சாப்பிட்டியா?” அவளை விட்டு விலகி இருக்கையை இழுத்து போட்டு உட்கார்ந்தான்.

”சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க.. 

“பாப்பா.??” 

”சாப்பிட்டு. தூங்கறா.. !!” சப்பாத்தியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே மனைவியின் முகத்தை பார்த்தான்.

அவனுக்கு பறிமாறி விட்டு எதிர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். வலது கையை டைனிங் டேபிளில் ஊன்றி உள்ளங்கையில் முகம் தாங்கி உட்கார்ந்து கொண்டு அவன் சாப்பிடுவதையே பார்த்தாள்.!

காலையில் இருந்து கோபம் இப்போது இல்லை நிரஞ்சனுக்கு பெரும்பாலான ஆண்கள் போல..

”கண்ணு வெக்காத டி.. எனக்கு வயிறு வலிக்கும்” அவன் கிண்டலாக சொல்ல.. மெல்லச் சிரித்தாள் வதனி.

”எனக்கு கொஞ்சம் பயமாருக்கு” என்றாள்.

”என்ன பயம்.??”

” வர வர நீங்க ரொம்ப கோபப்படுறீங்க.. முன்ன மாதிரி இல்ல” என்று மெதுவாக கணவனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கி பேச்சை ஆரம்பித்தாள்.

”அப்படியா..??” என்று சப்பாத்தி விள்ளையை வாயில் வைத்துக் கொண்டு ஒற்றை புருவத்தை உயர்த்தி ஸ்டைலாக கேட்டவனின் கணவனின் அழகு இப்பொழுது ஏனோ மனதில் சற்று பயத்தை விளைவித்தது.

“ஆமா காலையில என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கூட நீங்க கேக்கல? அத்தைக்கு வேற டையேரியா..! நீங்க சொல்லாம போனது வேற அவங்களுக்கு இன்னும் கஷ்டமா போச்சு. என்ன போட்டு அவங்க அவ்வளவு பேச்சு..” என்று காலையில் நடந்தவற்றையெல்லாம் அவள் சொல்லி ‘நீ செய்தது தப்பு டா.!’ என்று மறைமுகமாக கூற.. அமைதியாக அனைத்தையும் கேட்டவன்,

“போய் படு போ..! நானே போட்டு சாப்பிட்டுக்கறேன் !!” என்றான்.

”என் மேல கோபமா?” பதறினாள் வதனி.

அவனோ அவளை பார்க்காமல்.. அவள் கேள்விக்கு பதில் கூறாமல் சாப்பிடுவதில் கவனம் காட்டினான்.

”கோபம் தான் !” என்றவளுக்கு முணுக்கென்று கண்களில் நீர் நிறைந்தது.

அவன் அவளிடம் பேசவும் இல்லை. அவளை பார்க்கவும் இல்லை.

” இப்படி கோபப்பட்டால் எப்படிங்க? சரி ஃபைனலா.. கேட்கிறேன்? என்னாச்சு உங்களுக்கு? இல்ல என்கிட்ட என்ன தான் வேணும்?”

”நத்திங்.. அன் நெவர்.. !!” என்றான்‌ சுருக்கமாக..!

கண் இமைக்காமல் அவனையே வெறித்துப் பார்த்தாள் வதனி. அவன் ஒரே நொடி அவள் கண்களை பார்த்துவிட்டு தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

அவர்கள் காதலித்த நாட்களில் பெரும்பாலும் இப்படி நிரஞ்சன் முசுட்டுத்தனமாய் கோபம் கொள்வது உண்டு. அப்பொழுதெல்லாம் இவள்தான் இறங்கி பேசி அவனை சமாதானப்படுத்துவாள்.

ஆனால் திருமணம் முடிந்த பின் ‘தன்னை மட்டுமே நம்பி வந்திருக்கிறாள் குடும்பத்தை விட்டு’ என்று அவன் தன் கோபத்தை குறைத்து கொண்டு விட, முன்னை போல சண்டை சமாதானம் இல்லாவிட்டாலும் ஊடல் கூடல் எல்லாம் நன்றாகத் தான் இருவருக்கும் இருந்தது. இப்பொழுது ஒரு பெருமூச்சினை விட்டபடி அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் வதனி.

டேபிளுக்கடியில் அவள் காலை நீட்டி அவன் காலை தொட்டாள். அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு காலை நகர்த்திக் கொள்ள.. மீண்டும் தேடி பிடித்து.. அவளது கால் கட்டை விரலால் அவன் காலை தடவினாள். அதில் அவளது கால் கொலுசு அவன் காலில் லேசாக கீறி விட..

“ஸ்ஸ்ஸ்.‌” என்றவன் அவளை முறைத்தான்.

”சாரி.. !!” என்றாள் கண்களை சுருக்கி முகத்தை சாய்த்து உதட்டை குவித்து..!

 

“நான் சாப்பிட்டேன்” என்று எழுந்துக் கொள்ள போனவனை இன்னொரு சப்பாத்தியை எடுத்து அவன் தட்டில் வைத்து சாப்பிடுங்க என்றாள்.

அவனோ அப்பொழுதும் அமைதியாக அவளையே பார்க்க..

“சாப்பிடுங்கன்னு சொல்றேன்ல” என்று அவனை முறைத்தாள்.

”ஏய்ய்.. ஏன்டி மொறைக்கற?” என்று அவளிடம் எகிறினான்.

”மொறைக்கல.. நான் காதலிச்ச மொகறைய பாத்தேன். ஒரு வயசுப் பொண்ணுகிட்டயே அவ்ளோ சேட்டை பண்ணுன ஆளு, மேரேஜ் வேற‌ ஆகிடுச்சு சும்மா விடுவிங்க என்னை?” முகத்தில் வெட்கம் படற.. அரை முகம் காட்டி அவனைப் பார்த்தாள்.

”அப்படியே கண்ணு ரெண்டும் சொக்கி.. தன்னால தூக்கம் வந்துரும்.. !!” கிண்ணென இருந்த அவள் புட்டத்தை கசக்கினேன்.

” யப்பா.. பேசிய மயக்குறடி!” என சொல்லிக் கொண்டே நகர்ந்தவளை

”மேகா.. !!” என்று அவள் இடுப்பை எட்டிப் பிடித்தான்.

”விடுங்க.. எல்லாம் சிங்க்ல போட்டுட்டு வரேன்” என்றவளை விடாமல்

”இப்போ பாத்திரம் கழுவ போறியா.?” என்று ஒரு மார்க்கமாக கேட்டவனை கண்டு புன்னகை புரிந்தவள்

”இப்ப இல்ல.. மார்னிங்தான்” என்றாள்.

“அப்போ வா” என்றவன் அவள் இடையில் கை போட்டுக் கொண்டு அவளை இழுக்க திரும்பியவளது மென்மைகள் அவன் நெஞ்சை அழுத்தின. அதன் குழைவான மென் தசை பஞ்சு போல அமிழ்ந்தது.

அவன் ஒரு கையால் அவள் இடுப்பை இறுக்கிக் கொண்டு மறு கையால் அவளது உதட்டை பிடித்து கசக்கியவன்,

”ஒரு கிஸ் குடுடி.!” என்றான் தாபமாக.

அவன் தோள்களில் கை வைத்து லேசாக அணைத்தவாறு.. அவன் உதட்டில் அவளது ஈர உதடுகளை வைத்து ‘ப்ச் ‘ என முத்தம் கொடுத்தாள்.

”இவ்ளோதானா கிஸ்? இதெல்லாம் ஒரு கிஸ்ஸா டி?” அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.

”ஹ்ஹா.. !!” மெல்லச் சிணுங்கி விட்டு அவன் உதட்டில் அவள் உதட்டை வைத்து அழுத்தினாள். 

பின் அதனை அப்படியே அவன் தனதாக்கிக் கொண்டான். காலையில் நடந்த அவர்களது ஊடல் அங்கு கூடலாய் முடிந்தது. 

அத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. இனி வாழ்க்கை பழையபடி நிம்மதியாக செல்லும் என்று எதிர்பார்த்த ,வதனியின் நினைப்பு எல்லாம் மண்ணாய் போனது.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top