தூகை 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அன்று..!!

 

சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள் மேகவதனி. அவளை பின்புறம் வந்து கட்டியணைத்து அவள் தோள்களில் முகம் புதைத்து, கழுத்தில் மெல்ல கடித்தான் நிரஞ்சன்.

 

“ஸ்ஸ்.. என்னங்க இது காலையிலேயே?” என்று அவள் விலக..

 

“வேற‌ எப்ப தான் நீ வர? நைட் அம்மா தூங்குனப்புறம் வான்னா.. நீயும் தூங்கிடுற..! அப்புறம் எங்க? மாசக்கணக்காகுது டி..! ரொம்ப ஏங்கி போயிருக்கேன்” என்றவன் கைகள் இப்போது முன்னால் சென்று அவளது இடை வளைவில் ஆபாயக்கரமாக பயணித்து, நாபிக் குழியில் ஏறி இறங்க.. “ஹக்” என்ற சத்தத்துடன் வயிற்றை எக்கியவள், வெகு நாள் கழித்து கணிவனின் தீண்டலில்.. பனியாய் உருகி நின்றாள்.

 

மேகா.. மேகா.. என்று ஹஸ்கி குரலில் அவளை பின்புறமாக வளைத்தவன் தன் கற்றை மீசைக் கொண்டு அவளது கன்னத்தில் கோலமிட்டு, வன் இதழ்களால் அவளது இதழ்களை கவ்வி விழுங்கினான்.

 

அவளது கைகளோ அடுப்பை அணைத்து, தன்னவன் பிடறி முடியை முன்னிருந்தே இறுகினாள்.

அவனது தாபமும்.. மோகமும் அவளது இறுகிய அணைப்பிலும் தன் முன்னால் தெரிந்த அவளது முன்னெழில் கோலங்களின் செழுமைலும் அவளது இளமை வனப்பிலும் இரத்தநாளங்களில் பரவி வரவி சூடேறி போக.. சுற்றம் மறந்து சூழ்நிலை மறந்து அவளை அப்படியே ஆட்கொள்ள அவன் ஆண்மை ஏங்கியது.

 

மேகா.. மேகா… மேகா.. என்று அவளது காது மடலை கவ்வி தன் மோகத்தை அவளுள் ஏற்றினான்.

 

கணவனின் அந்தரங்க தீண்டலில் அவளுள்ளும் மோக வெள்ளம் கரைப்புரண்டோட, அதனை தணிக்க அவனுள் துளிர்க்க இன்னும் இன்னும் அவனோடு ஒட்டினாள்.. உரசினாள்.. உறவாடினாள்..!

 

பெண்‌ என்ன? ஆண் என்ன? உணர்வுகள் இருவருக்கும் பொது அல்லவா??

 

அந்நேரம் “அம்மா… எனக்கு டீ வேணும். பால் வேணாம்” என்றப்படி மிரு வர, சட்டென்று மனைவியை விட்டு பிரிந்தான். ஆனால் இருவருள்ளும் மோகத்தீ பற்றி எரிந்தது..! ஒருவரையொருவர் பற்றிக் கொள்ள எரிந்தது..!

 

“காலையில பால் குடி..! ஈவ்னிங் டீ தரேன். இரண்டு வேளை டீ தர மாட்டேன்” என்று அதட்டிய வதனி, மகளுக்கு பாலே ஆற்றி கொடுத்தாள். அதிலேயே ஓரளவுக்கு தன்னிலை மீண்டிருந்தாள் வதனி.

 

ஆனால்.. பாவம் ஆண் மகன் அவனோ? அவளால்.. அவள் மீது கொண்ட தாபம்‌ குறையாமல் சிகையை கோதா நின்றவன், தன்னிலைக்கு மீள வெகுநேரம் ஆகியது. 

 

இருவருக்குள்ளும் பயங்கர அமைதி..!!

 

பிரமாவுக்கு ஓட்ஸ் கஞ்சி தயார் செய்துக் கொண்டிருந்தாள் வதனி. வெறும் பாத்திரங்களின் உரசல் மட்டுமே அங்கே பெரும் சத்தமாய்..! இருவரின் அதரங்களோ சட்டென அதி வேகத்துடன் மீண்டும் இணைந்துக் கொண்டு தன் இணையோடு வெகு மூர்க்கமாய் உறவாடியது..! 

தாபமாய் பேசியது..! 

காதலாய் கொஞ்சியது..!

 

“ம்மா.. என் க்ராஃப்ட் நோட் காணும்..” என்ற மகளின் குரலில் முட்டும் ஏக்கத்தோடு பிரிந்தன கூடிய களித்து களைத்து போதாமல் இருவரின் அதரங்கள்..!

 

 

பின் மெதுவாக மனைவியிடம் “இந்த மாசம் இருந்து எனக்கு 5000 ரூபா வந்து இருக்கு மேகா” என்று சந்தோஷமாக உரைத்தான் நிரஞ்சன். 

 

“ஓஹ்…!” முதல் மாசம் அவன் 2000 ரூபாய் வாங்கிய போது இருந்த சந்தோஷம் அடுத்தடுத்த மாதங்களில் குறைந்து விட்டது வதனிக்கு. போன மாதம் கூட 4000 வாங்கி இருக்கிறேன் என்றான் நிரஞ்சன். 

 

“சரி ஓகேங்க..! ஆனா அதிகமா இப்பெல்லாம் நீங்க போன்ல இருக்கற மாதிரி எனக்கு தோணுதுங்க.. கொஞ்சம் குறைச்சுக்கோங்க” என்றாள் வதனி வெகு நாளாக கணவனிடம் கூற வேண்டும் என்று நினைத்ததை..

 

“இல்ல மேகா.. பகலெல்லாம் பேங்க் வொர்க் பிஸி. அதனால நைட் தான் என்னால கொஞ்சம் லைவ் போக முடியுது. லைவ் போட்டா தான் காயின்ஸ் கலெக்ட் பண்ணி நமக்கு கிப்ட் போட்டவங்களுக்கு கிப்ட் போட முடியும். அதான் மேகா” என்றதும் அவனை முறைத்து பார்த்தவள்,

 

“நீங்க லைவ் போறத தான் தப்பா சொல்லல..! முன்னயெல்லாம் வீட்டுக்கு வந்தீங்கன்னா கொஞ்ச நேரம் அத்தை கிட்ட பேசுவீங்க.. பாப்பா கிட்ட உட்கார்ந்து அவ கிட்ட படிப்பு சம்பந்தமாக ஜெனரல் நாலேஜ் எல்லாம் பேசுவீங்க..‌ அவளுக்கு புடிச்சது விளையாடுவீங்க.. இப்ப அதெல்லாம் ஒண்ணுமே இல்லிங்க..! பேங்க்ல இருந்து வந்த உடனே அத்தைய பார்த்து தலையாட்டிட்டு ரூம்குள்ள போய்.. நீங்க லைவ் போய்டுறீங்க.. இல்லன்னா வேற யாராவது லவ் போன அதுல உட்கார்ந்து அவங்களுக்கு கமெண்ட்ஸ் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்கீங்க.. பேமிலி கிட்ட நீங்க ஸ்பென்ட் பண்ற டைம் வர வர ரொம்ப கம்மி ஆகிட்டே இருக்குங்க” என்று அவனுக்கு புரியும் விதத்தில் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

 

ஆனால் அதுவோ அவனுக்கு சற்று எரிச்சலை கொடுத்தது.

“நான் என்னமோ தப்பான வேலைய செய்யுற மாதிரி பேசுற? இதுவே நம் வீட்டு நிலைமைக்கு எங்கேயாவது நான் பார்ட் டைம் ஜாப் பார்க்க போய் இருந்தா.. நீ இதுபோல பேசுவியா? போயிட்டு நைட்டு பத்து மணிக்கு பதினோரு மணிக்கு வந்தா.. அப்ப என்னை எவ்வளவு புகழ்ந்து பேசி இருப்ப?” என்றதும் கணவனின் தப்பான புரிதலை கண்டு திகைத்தாள் வதனி. 

 

“இதே 5000 ரூபா தான் பார்ட் டைம் ஜாப்ல தராங்க.. அதே ரூபாய நான் வீட்டில் உட்கார்ந்து சம்பாதிக்கிறேன். இதுல என்ன தப்பு கண்டுபிடிச்ச நீனு?” என்றான் கோபமாக..!

 

“அதில்லீங்க.. நான் அந்த அர்த்தத்தில சொல்ல வரல”

 

“அட்லீஸ்ட் நீயாவது வேலைக்கு எதும் போய் சம்பாதிக்கிறியா? அதுவும் இல்ல.. வீட்டுலேயே தண்டமாக தான் இருக்க..” என்றதும் அவளுக்கு திக்கென்று கணவனின் குற்றச்சாட்டில்..!

 

பிரேமா நல்லா இருந்த காலத்திலேயே மிருவின் பள்ளிக்கூடத்தில் வேலை செய்கிறேனே என்று கேட்டவளிடம் அப்பொழுது மறுத்திருந்தான். அதன் பின் நிறைய நேரம் பார்ட் டைம் ஜாப் பத்தி எல்லாம் கூறி வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன் என்றெல்லாம் கேட்டு இருந்தாள் வதனி.

 

அதற்கெல்லாம் வேண்டாம் என்று மறுத்தவன் இப்பொழுது இப்படி மாற்றி சொன்னதும் அவளுக்கு கணவனின் இந்த மாறுபட்ட பேச்சில் தூக்கி வாரி போட்டது.

 

“நீ வீட்டு வேலை செய்யுற.. நான் உட்கார்ந்து வேலை பார்க்கிறது உனக்கு கடுப்பா இருக்கா?” என்று முகத்தில் அடித்தாற் போல பேசு விக்கித்து அவனை பார்த்தாள் வதனி. 

 

இத்தனை வருடங்களில் இம்மாதிரி எல்லாம் அவன் பேசியதே கிடையாது..!

 

ஏன் மாமியார் நாத்தனார்கள் கூட பலவிதமாக பேசுபவர்கள். அத்தனையும் தாங்கி கொள்வாள் கணவனுக்காக..!

 

இன்று கணவனே பேசுகிறான்.. முதல் முறையாக தன்னை பேசுகிறான்..!

 

இந்த பத்து வருடத்தில் வீட்டில் வேலையை தவிர வேறு எதுவுமே அவளுக்கு தெரியாது. படிப்பு கூட ஏதோ ஒரு டிகிரி தான். பார்த்து பார்த்து இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும் செய்வதற்கு நல்ல பெயர் நமக்கு கொடுக்கிறான் என்று முகிழ்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் சமையலை கவனிக்க திரும்பிக் கொண்டாள்.

 

தான் பேசியதும் பதில் கூறாமல் தன்னை அவமானப்படுத்தியது போல திரும்பிக்கொண்ட மனைவியை பார்த்தவனுக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது. 

 

ஏற்கனவே உள்ளுக்குள் இருந்த தாபம் அதை தணிக்க முடியாது வேகம் இப்பொழுது இவள் மீதான கோபம் என்று தன்னிலை மறந்தவன் நான் இருந்து பாத்திரங்களை வேகமாக தட்டிவிட்டு அதைவிட வேகமாக அறைக்கு சென்றான்.

 

கணவன் பாத்திரத்தை தட்டி விட்டு சென்றதும், அது விழுந்த வேகத்தில் எதிரொலித்த எதிரொலியில் மிரு ஓடி வந்து சமையலறையை பார்க்க.. உதடு கடித்து கண்ணீரை அடக்கியவள், “ஒன்னும் இல்லடா கை தவறி விழுந்துடுச்சு” என்று அழுகையை அடக்கிய குரலில் கூறியவள் திரும்பி மகளுக்கு முதுகை காட்டி நின்று கொண்டாள்.

 

 

இணை துணை எல்லா உறவுகளுமே சரிசம நிலையில் இருக்கும்போது மட்டுமே ஈர்ப்பு.. நேசம்.. எல்லாம் வரும். பெண்ணின் மதிப்பு குறைந்து போகும்போது.. அவள் மீதான பிரமிப்பு அகன்று காதலும் குறைய ஆரம்பிக்கும். இங்கே தன் நடத்தையை கேள்வி கேட்டு சண்டையிடும் மனைவி நிரஞ்சனுக்கு புதிது..!

 

அதுபோல கேள்வி கேட்டதற்கு சண்டையிட்டு கத்திவிட்டு தன்னை மட்டமாக பேசி செல்லும் கணவனும் வதனிக்கு புதிது..!

 

ஆணவனின் குணமோ பெண்ணவள் அவன் எதிர்பார்ப்புக்கு இல்லை என்றால், அவளிடம் இருந்து மெல்ல மெல்ல விலகுவான். அவன் விலகலை கண்ட பெண்ணவளோ அவனை இன்னும் இன்னும் நெருக்குவாள்.

 

அடுத்து வந்த காலத்தில் அதுதான் நடந்தது நிரஞ்சன் விலகிப் போக போக.. வதனி அவனை நெருங்கிக் கொண்டே வர வர.

. தன் சுதந்திரம் பறிபோவது பிடிக்காத அந்த வெறுப்பில் இறுக்கமானான் நிரஞ்சன்..!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top