தூகை 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

20

 

இன்று..!

கடந்த போனவைகள் போனவைகளா இருக்கட்டும்..! இனி கடக்க இருப்பவைகள் நல்லதா இருக்கட்டும்..! என்று முகத்தை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டவன், அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டத்தை கண்டு சற்றே அஞ்சினான்.

அவனுக்கு பணத்துக்கு இப்போது குறைவில்லை தான். பதவி உயர்வில் அவனின் தேவைகள் வீட்டு தேவைகள் மகளின் எல்ஐசி பாலிசிகள் என்று சமாளிக்கிறான். அன்னைக்கும் முன்னே போல மருத்துவ செலவு இல்லை, ஆதலால் வதனியின் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டிருக்கிறான்.

மனைவிக்கு இந்த மருத்துவமனையில் பிரசவம்‌ பார்ப்பது அவன் வசதிக்கு சற்று அதிகம் தான். ஆனால் மனைவியின் உடல்நிலைக்கு முன் இவையெல்லாம் ஒரு செலவே இல்லை நிரஞ்சனுக்கு.

ஆனால்..? அவன் மனைவி பிரசவத்தை இங்கே வைத்துக் கொள்ள அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே? அதற்கு நிரஞ்சன் பணம் கட்டினால் மகாராணி மனம் இறங்கி சம்மதிக்க வேண்டுமே? என்று யோசித்து கொண்டுருந்தவன் தலையில் சுத்தியலால் வலிக்க அடித்தது போல்.. 

“அடேய்..! அவ முதல்ல புள்ளையை பெத்துக்கிற ஐடியாவிலுயே இல்லடா.. மடையா..!” என்று அவனது அறிவு அறிவுறுத்த.. 

அது கொடுத்த வலியோடு கண்களை இறுக மூடி திறந்தவன், அந்த மருத்துவமனையின் வளாகத்தில் குழந்தைகளோடு செல்லும் தாய்மார்களையும்.. 7 மாதம் 8 மாதம் என்று சூல் தாங்கி வயிற்றில் கையை தாங்கியபடி ஆழித் தேர் போல அழகாக நடந்து செல்லும் கர்ப்பிணி பெண்களையும் ஏக்கத்தோடு பார்த்தான் நிரஞ்சன்.

“மனச அலைபாய விடாதடா.. அது கண்டபடி கற்பனை பண்ணி கடைசியில் உனக்கு கஷ்டத்தை கொடுக்கும்”’என்று தன்னை தானே கட்டுப்படுத்தியவன் மெல்ல நடந்தபடி ராவண் அறைக்கு முன்னால் அமர்ந்தான்.

மதியம் அவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் மனைவி வருகிறாளா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. வருவாள் என்ற நம்பிக்கையில் வெள்ளிக்கிழமை அடுத்த அப்பாயிண்ட் என்று அவன் வந்து சேர்ந்திருந்தான். 

காலையிலேயே மனைவிக்கு ஃபோன் எடுத்த பொழுது, வதனியோ அவன் அழைப்பை எடுக்கவே இல்லை. நான்கு ஐந்து முறை மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவன், அவள் எடுக்கவில்லை என்றதும், வாய்ஸ் மெசேஜை தட்டி விட்டு இப்பொழுது வந்து மருத்துவமனையில் காத்திருக்கிறான், கட்டியவளை எதிர்ப்பார்த்தபடி..!

“அடுத்தது நாம தான்.. இன்னும் அவ வரலையே? என்று மனைவியை எதிர்பார்த்தபடி வாசலையே பார்த்து இருந்தான். 

அப்போது செவிலியர் வந்து “மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆதவ் நிரஞ்சன்” என்று அழைக்க..

“சிஸ்டர் வைஃப் ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க.. நீங்க நெக்ஸ்ட் பேஷண்ட் வேணா போ சொல்றீங்களா?” என்றதும் அவனை ஒரு மாதிரியாக பார்த்த செவிலிய பெண்ணும் அடுத்த பேஷண்டை அனுப்பி வைத்தாள்.

அவர்களும் பார்த்துவிட்டு வர இன்னும் வதனி வந்த பாடில்லை‌. அவள் வருவாளா வரமாட்டாளா என்றே நிரஞ்சனுக்கு தெரியவில்லை. 

‘ஏதாவது ஒரு வார்த்தை வரேன் இல்ல வரேலன்னு சொல்லலாம் இல்ல இந்த மேகா?’ என்று புலம்பியவன் கைக்கடிகாரத்தையும் வாயிலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த அழைப்பும் வந்து விட அப்பொழுதும் அதே சாக்கை சொன்னவனை வித்தியாசமாக பார்த்தபடி அவர்களுக்கு அடுத்த உள்ள பேஷண்ட்டை அனுப்பினாள் செவிலியப்பெண். 

இதுபோல இரண்டு மூன்று பேஷண்டுகளும் உள்ளே சென்று விட்டு வந்து விட்டனர்.

“சார் இப்ப நீங்கதான் அடுத்த பேஷண்ட்” என்றாள் செவிலியர்.

“அடுத்த பேஷண்ட்..” வாய் திறந்தவனை கை உயர்த்தி தடுத்தவள் “சார் நீங்க தான் லாஸ்ட்..! நீங்க போறீங்களா இல்ல பேஷண்ட் அவ்வளவுதானு டாக்டர் கிட்ட இன்பார்ம் பண்ணட்டுமா?” என்று அவள் எரிச்சலோடு கேட்க,

தயக்கத்தோடு மீண்டும் ஒருமுறை வாயில எட்டிப் பார்த்தவன், “அட்லீஸ்ட் நாமாவது அவ நிலமையை சொல்லி என்ன பண்ணலாம்னு சஜஷன் கேட்போம்” என்று‌ எண்ணி மெல்ல ராவண் திரேந்திரன் மாறவேல் அறையை நோக்கி நகர்ந்து, கதவைத் திறந்து “எக்ஸ்கியூஸ் மீ..” என்று சொல்ல நிரஞ்சன் வாய் திறக்க அது பெண் குரலில் வெளிவந்தது.

ஆம்.. வேகமாக வந்த மேகவதனி நிரஞ்சன் உள்ளே செல்வதை பார்த்து அவளும் அவனோடு இணைந்து கொண்டாள். மனைவியை ஒரு முறை கண்களில் மின்னல் தெறிக்க பார்த்தவன், இப்பொழுது நெஞ்சை நிமிர்த்தி ஒரு நிமிரோடு இவனும் “எக்ஸ்கியூஸ்மி டாக்டர் சார்” என்றான்.

“கம் இன்” என்று ராவண்னும் மிகவும் மும்மரமாக ஒரு கோப்பை பார்த்து இருந்தவன் எதிரே இருந்த இருக்கையில் அவர்களை அமர வைத்துவிட்டு “சொல்லுங்க..!” என்று தான் பார்த்துக் கொண்டிருந்த கோப்பை மூடி வைத்து இவர்கள் பார்த்து கேட்டான். 

நிரஞ்சன் தயக்கத்தோடும் மனைவியை பார்க்க.. அவள் சாருபாலா டாக்டர் கொடுத்த லெட்டர் முதலில் கொடுத்து அதன் பின் அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டையும் கொடுத்தாள். அதற்குள் வேகமாக பார்வையொட்டி சாருபாலா கடித்ததில் இருந்ததை படித்தவன் முகத்தில் ஒரு மென் முறுவல்.

“தென்.. வாட்ஸ் யுவர் டிசிஸன்?” என்று கேட்க..

“டிஎன்சி தான் டாக்டர்..!” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள் மேகவதனி‌‌.

மனைவியின் வேகத்தில் முகம் வருத்தமாக சட்டென்று முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் நிரஞ்சன். 

பார்த்ததுமே இருவரை பற்றி ஒரு முடிவுக்கு வந்த ராவண் இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட் ஒருமுறை தரவாக படித்துவிட்டு “மிர்ஸஸ் ஆதவ் நிரஞ்சன்..” என்று ஆரம்பிக்க என அந்த பெயரை அவளுக்கு அத்துணை பிடித்தமாக இல்லை.

“ஐ அம் மேகவதனி டாக்டர்..!” என்றாள். ‘நீ என் பெயரை என் பெயரால் மட்டுமே குறிப்பிடு!’ என்ற அழுத்தம் அதில் தொணித்திருக்க.. மெல்ல சிரித்தவன் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு நிரஞ்சனை பார்த்தான். அந்த கண்களில் என்னை கண்டானோ ‘என்னை போல ஒருவன்.!’ என்று சிரித்துக் கொண்டான்..

“எதுக்காக நீங்க டிஎன்சி பண்ணனும் நினைக்கிறீங்க?” என்று மேகவதனியை பார்த்து கேட்டான் ராவண்.

அவளோ என்ன காரணம் சொல்வாள். அதிகமாக பிள்ளை இருக்கிறது என்றால் இல்லையே..! இது இரண்டாவது பிள்ளை அப்படி ஒன்றும் இரண்டாவது பிள்ளை பெறுவது பெரும் குற்றம் கிடையாது இந்தியாவை பொறுத்தவரை..!

“நாங்கள் புரிந்து தான் இருக்கோம் டாக்டர் என்னால ஒரு குழந்தையை தான் பார்க்க முடியும். ஐ அம் சிங்கிள் மதர்” என்று சாருபாலாவிடம் சொன்ன அதே காரணத்தை சொல்ல.. 

“அப்ப இந்த குழந்தையை அழிச்சுக்கிட்டு..” என்று அவனும் ஆரம்பிக்க..

“நோ டாக்டர்..! ப்ளீஸ் அதை சொல்லாதீங்க.. அந்த வார்த்தையை சொல்லி ஹர்ட் பண்ணாதிங்க”என்று அவசரமாக சீறினான் நிரஞ்சன்.

“தட்ஸ் ஓகே‌‌.! எனி கான்ட்ராசெப்டிவ் டிவைஸ் யூஸ் பண்ணி அது ஃபெயிலியரா?” என்று ராவண் கேட்க, இருவரும் இல்லை என்று தலை அசைத்தனர். 

“சோ ஒருத்தவங்களுக்கு டிஎன்சி பண்ணுனா எந்த சிச்சுவேஷன்ல பண்ணும் என்பதை நான் எக்ஸ்பிளைன் பண்ணிடுறேன் முதல்ல.. அஸ் அ டாக்டரா..!” என்றவன்

“நம்பர் ஒன்னு.. கர்பிணிப்பெண்ணின் உயிர்காக்கும் பொருட்டு, 

நம்பர் டூ.. கர்பிணிப்பெண்ணின் உடல் மற்றும் மன நலம் கருதி..” என்றவுடன் மேகவதனியின் கண்கள் மின்னின..!

“நம்பர் த்ரீ.. உயிர்கொல்லும் இல்ல முடங்கச்செய்யும் பிறவி நோய்களோட பிறக்கப்போகும் குழந்தையைத் தடுக்கும் பொருட்டு..!

நம்பர் ஃபோர்..‌பல்சூல் நிலையில் அதாவது Multiple pregnancy, அந்த தாயின் நலன் கருதி செய்வது..!

நம்பர் ஃபை.. வன்கொடுமை‌ தட் மீன் ஃபிஸிக்கல் அப்யூஸ் இல்லை வேண்டத் தகாத உறவினால் உருவாகிய குழந்தையை‌ அபார்ட் பண்ணுவது..!

அதுல நீங்க எந்த கேட்டகரி? டோண்ட்‌ மிஸ்டேக் மீ, இது கவர்மெண்ட் ரூல்ஸ் இதை ஃபாலோ பண்ணி தான் நான் ப்ரொசீஜர் செய்யணும்” என்றால் இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு..! ஆனால் இருவரும் அமைதியாக இருந்தனர்.

“எதுவும் இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல வந்த குழந்தையா?” என்று வேண்டுமென்று அவன் கேட்டதும் நிரஞ்சன் பொங்கி “டாக்டர்!! மைண்ட் யுவர் டங்” என்று சீறினான்.

மேகவதனி ஒன்றும் கூற முடியாமல் பெருகும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க..

“அப்போ உங்க ஹஸ்பண்ட் தான் உங்களை பிஸிக்கலா அப்யூஸ் பண்ணாரா? ஐ மீன் உங்க விருப்பம் இல்லாமல் உங்ககிட்ட பலவந்தமா நடந்துக்கிட்டாரா? அதனால இந்து குழந்தையை அபார்ட் பண்ண வந்திருக்கீங்களா?” என்று இன்னும் பட்டவர்த்தமாக அவன் கேட்க..

“டாக்டர்..!” அதிர்ச்சியோடு கணவனை பார்த்தவள் இல்லை என்று ராவண்னிடம் தலையசைந்தாள்.

“தென்.. ?? சீ.. நீங்க ஏதாவது ஒரு ரீசன் சொல்லணும் உங்க டிஎன்சிக்கு. ஆனா உங்களோட ரிப்போர்ட் பார்த்தா.. டி என் சி செய்தால் உங்க யூட்ரசையை ரிமூவ் பண்ற சிச்சுவேஷன் வரலாம்.‌ சோ.. அதையும் தாண்டி நான் ரிஸ்க் எடுக்கணும்னா, யூ சூட் ஓபன் யுவர் மௌத்..!” இருவரையும் கூர்மையாக பார்த்தான்.

அதை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் என்று அழுத்தம் அப்பட்டமாக தெரிய.. அதனை வாயை இறுக்கமாக மூடிக்கொள்ள.. நிரஞ்சன் தான் பெருமூச்சு ஒன்றை விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

தூகையாகும்


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top