கள்வன் 29
"ஆசைப்படலாம் தப்பில்லை!! ஆனால் இவ்வளவு பேராசைப் படக் கூடாது!!" என்று அவர்கள் முன்னால் நின்றிருந்தான் ஜலந்திரன் ஆக ஜித்தேந்தர்.
"நேற்று உன்னை பார்க்கும் போது கொஞ்சம் சந்தேகப் பட்டேன். ஆனாலும் நீ உன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருந்துட்ட.. சும்மா சொல்லக்கூடாது சிவாஜியை விட நல்லாவே நடித்த.. ஆனால் மண்ட மேல இருந்து கொண்டையை மறந்துட்டியே ராசா??
ஹிமா மட்டுமல்ல அவள் ரூமும் என் கட்டுப்பாட்டுக்குள் வந்து பல நாட்களாகுது.. புரியல?? சிசிடிவி.. சிசிடிவி!!" என்றான் நக்கலாக ஜித்தேந்தர்!!
'என்ன சிசிடிவி கேமரா வச்சானா?? எந்தெந்த ரூம்குள்ள வச்சானு தெரியலையே? என்னென்ன பார்த்தான் தெராயலையே??' என்று அவனை முறைத்து பார்த்தாள் வாஹினி.
"இப்படி எல்லாருக்கும் முன்னாடியும் லுக் விடாத பால் டப்பா.. அப்புறம் பாவாவுக்கு லவ்ஸ் எக்கச்சக்கமா பிச்சுக்கும்!" என்று சரசமாக கூற.. இவளோ தலையில் அடித்துக் கொள்ள முடியாத தன் நிலைமையை நினைத்து நொந்தாள்.
"இங்க பார் சோமா.. நேத்தியே நீ என்னோட சந்தேக வட்டத்துக்குள் கண்காணிப்புக்குள் வந்துட்ட.. ஆனாலும் உன்னை விட்டு வைத்தேன். ஏன் தெரியுமா?? ஒருவேளை நீ திருந்து இருக்கலாமோ என்று.. நீ இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் திருந்தவே மாட்டேங்கிறது புரிஞ்சுபோச்சு!! அதனாலே நீயும் உங்கள் அப்பன் கூடவே போய் சேர வழியை பாரு" என்றான் ஜித்தேந்தர்.
"என்ன சுத்தி முத்தி பாக்குற? உன்னோட ஆட்களையும் இவனோட ஆட்களையும் தானே?? அவங்க எல்லாம் எப்பவோ பத்திரமா நான் கொண்டுவந்த காற்று புக முடியாத கண்டெய்னர்க்குள் பத்திரமா இருக்கிறாங்க.. ஃபீல் பண்ணாத மச்சான்.. அவங்க கூடவே உன்னையும் ஷேஃப்பா அனுப்பி வைக்கிறேன்!" என்று கூறிக்கொண்டு ஜித்தேந்தர் முன்னேறி வர..
"தள்ளி நில்லு ஜலந்திரா.. கிட்டே வந்தால் நான் மட்டுமல்ல.. என் கூட சேர்ந்து நீங்களும் பீஸ் பீஸாகிடுவிங்க.." என்று நாக ப்ரசாத் போட்டிருந்த ஜர்க்கினுள், அவனே அறியாமல் விஷ்ரூத் வைத்திருந்த நவீன ரக லேசர் கற்றைகளை நொடியில் வெளியிட்டு எதிரில் உள்ளவைகள் அனைத்தையும் துகள் துகள்களாக மாற்றும் சிறுகருவி ஒன்றை காட்டினான்.
அதனை ஜாமர் நாம் இங்கிருப்பதை யாருக்கும் தெரிவிக்காது இந்த சின்ன கருவி என்று கூறி தான் பொருத்திருந்தான் விஷ்ரூத். நாக பிரசாத்துக்கோ நாக்கு வறண்டது இதை கேட்டதும்.
தனது சட்டையில் கை பகுதியிலுள்ள பட்டனை காண்பித்து
தான் அவன் கூறிக் கொண்டிருக்க.. சற்று நேரம் ஜித்தேந்தருமே திகைத்தான். ஆனாலும் அவனை நம்பா பார்வை பார்க்க..
"உன் கண்ணில் நம்பிக்கையே இல்லை!! சரி டெமோ பாரு!" என்று தனது கையிலுள்ள பட்டனை லேசாக அழுத்த.. பிரசாத் ஜெர்கினுள் இருந்த சிறிய கருவி மூலம் லேசர் கற்றைகள் வெளிவந்து பிரசாத்துக்கு முன்னே இருந்த இருக்கைகளை துகள் துகள்களாக மாற்றியது.
"இது என்னுடைய கண்டுபிடிப்பு!! எப்படி சூப்பரா இருக்குல்ல" என்று சாதித்து விட்டதைப் போல பார்த்தவனை கண்ட வாஹினியின் மனது வலித்தது.
"ஏன் விஷ் இப்படி பண்ற? சின்ன வயசுல இருந்து நீயும் நானும் ஒரு தாய் பிள்ளை போல் தானே பழகி இருக்கோம். ஆனாலும் இப்படி உன் டேலண்டை ஏதோ ஒரு ஜென்மத்தில் நடந்த ஒரு விஷயத்திற்காக வேஸ்ட் பண்ணாத.. தயவு செய்து கேளு.. இது எல்லாத்தையும் விட்ரலாம். இந்த அரசி முறை கூட வேண்டாம். சரியா?" என்று தான் தமயனாக நினைத்து கூட வளர்ந்தவன் தப்பான வழியில் போவதை தடுக்க தன்னால் முடிந்த வழிகளை எல்லாம் செய்தாள் வாஹினி.
"எந்த உருட்டலும் நீ வேற எங்கயாவது போய் உருட்டு போடி!!" என்றவன் மீண்டும் ஜித்தேந்தரை நோக்கி லேசர் கற்றைகளை தாக்க முயற்சிக்க அதற்குள் நூலிழையில் தப்பியனான் ஜித்து.
"இங்கே பாரு மச்சான்!! சொன்னா கேளு.. இப்பவும் என் பொண்டாட்டிக்காக உன்னை உயிரோடு விடுறேன்.. ஆனால் அதுவே அவளுக்காக ஏதாவது ஆச்சுன்னா உன் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன்!! மார்க் மை வோர்ட்ஸ்! " என்று தீர்க்கமாக உரைத்தான் ஜித்து.
"என்ன பேத்தல்!! நான் திரும்பவும் அந்த குடும்பத்து பிள்ளையா பிறந்து திரும்பவும் அடிமை வாழ்க்கை வாழுறேன். எனக்கு தேவையில்ல இப்படிப்பட்ட வாழ்க்கை!! அதனால் தான் நான் வத்ஸவ் மூளை சலவை செய்து அவனை கொண்டே அங்கு நடப்பவற்றை எல்லாம் அறிந்து..அவளைத் தூக்க பிளான் செய்தேன். அதையும் நீ புகுந்து தரைமட்டமாக்கின… அன்னைக்கு கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மூலமா இவளை முடிக்க ஏற்பாடு பண்ணினேன். அவனுங்களோ இவ உடலுக்கு ஆசைப்பட்டு வேற ஏதாவது பண்ண போக, அப்பவும் நீயே வந்து காப்பாற்றிட்ட.. அன்னைக்கு சவுக்க தோப்புக்குள்ளும் அப்படித்தான்… ஒவ்வொரு முறையும் அவளுக்கு முன்னே நீ தானே இருக்க.. இதோ இப்பவும்.. அப்பவும்!! அவளுக்கு முன்னே வந்து நின்னு" என்றவன் சற்றும் எதிர்பாராமல் அந்த ஒளிக் கற்றைகளை வாஹினி மீது செலுத்த, விஷ்ரூத் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்த ஜித்தேந்தர் சட்டென்று குறுக்கே பாய்ந்தவன் வாஹினியோடு அணைத்தபடி தள்ளி சென்று விழுந்தான்.
சட்டு சட்டென்று அவள் கை கட்டுகளை அவிழ்த்து விட்டு அவளோட உருண்டு அந்த பக்கம் செல்ல மீண்டும் இவர்கள் மீது தாக்குதல்.
இதில் நாக பிரசாத் அரண்டு மிரண்டு போய் பயத்தில் உச்சா போய் வைக்க..
"நீ எல்லாம் ஒரு வீரனாடா!! அரசனாடா?? போன ஜென்மத்துல எவ்வளவு வீரமா இருந்துத.. இப்படி இந்த ஜென்மத்துல பயந்து சாகற!!" என்று திட்டி தீர்த்தான் அவனை..
"இங்க பாருங்க.. போன வாரம் நடந்தது கூட எனக்கு சரியா ஞாபகம் இருக்காது. நீங்க என்னான்னா போன ஜென்மத்துல நடந்ததை தான் ஞாபகம் வச்சுக்கோ சொல்லுறிங்க. எனக்கு தேவை அந்த கிரீடம்!! அதை எடுத்து கொண்டு போகிறேன் நான். நீங்கள் ஆச்சு?? அவங்களா ஆச்சி!!" என்று கூறியவன் தன் ஜெர்கினை கழட்டி கொடுத்து விட்டு ஓடிவிட்டான் வெளியே..
ஒரு கணம் நின்று மீண்டும் அவர்கள் மீது ஒளிக்கற்றையை பாய்க்க முயல.. அப்போது பறந்து வந்த கோடாரி ஒன்று விஷ்ரூத்தின் நீட்டிக் கொண்டிருந்த வலது கையைத் துண்டித்து விட்டு சென்றது.
அதில் அவன் சட்டை பட்டனோடு கூட அவனது கையும் போக.. "பாத்தியா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ முதல்ல கை இழந்திட்டு அதற்கு பிறகு தான் சாகணும்னு உன் விதி போல!!" என்று நக்கலாக பேசிய ஜித்து அவனை வெளுத்து வாங்கிவிட்டான். அதோடு அவனை கொண்டு போய் அதைக் கண்டனைரில் போட்டு லாரி டிரைவரிடம் "எங்கேயாவது மலை மேலே ஏறி வேகமாக ஓட்டி விட்டு நீ குதிச்சிடு.. இந்த கண்டனைரை விட்டுட்டு!!" என்று கூறிய தன் கணவரை நிமிர்ந்து அதிர்ந்து பார்த்தாள் வாஹினி!!
"என்ன நடக்குது இங்கே?? அவன் என் சித்தப்பாவுக்கு ஒரே பையன் பாவா!! அவனை கொல்ல சொல்றீங்க?? வேண்டாம் பாவா!! வத்ஸவும் இதைத் தானே செய்தான். நாம மன்னித்துவிடலையா? ப்ளீஸ் பாவா அவனை விட்டு விடலாம்!!" என்று அவள் கெஞ்ச..
"வாயை மூடுடி!!" என்று சத்தமாக உறுமினான் ஜித்தேந்தர். எவ்வளவு வேகத்தில் உறுமினானோ அவ்வளவு வேகத்தில் தன் பால் டப்பாவை இறுக்க அணைத்துக் கொண்டான்.
அருகில் நின்று கொண்டிருந்த வாஹினியை பிடித்து இறுக்கிக் கொண்டு.. அவள் உதட்டில் முத்தம் கொடுத்தவன்… பின் வெறி வந்தவன் போல.. அவள் மூக்கு வாய்.. கன்னங்கள் எல்லாம் கண்டபடி முத்தமிட்டான். அவளது இரு கைகளையும் தன்னை சுற்றி படர விட்டான்.
'டேய்ய்ய்.. பாவா… மெதுவா!! என்ற பிச்சி தின்னுடாதே!!" என்றாள் வாஹினி.
அவன் பார்வை அவள் உதட்டில் நின்றது. நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த மெல்லிய உதடுகளை தின்றுவிட ஆசை வந்தது. முகத்தை அவள் அருகில் கொண்டு போனான். அவளோ முகத்தை பின்னால் இழுத்தாள். ஆனால் அவள் இதழ்களை கொய்து தின்று தீர்த்து விடுமளவு காதலும் மோகமும் கூடவே இதுவரை இருந்த பயமும் அவனுக்கு. அவை தீரும் வரை தின்று தீர்த்தான் அவளது இதழ்களை!!
"வேணாம் பாவா" என்று இதழ்களை விடுத்தப்படி வாஹினி..
"ப்ளீஸ் பால் டப்பா.. ஒன்ஸ் மோர் டி!!"
"ஹையோ.. ஒன்ஸ் மோரா??" என்று தன் இரு கைகளால் வாயை பொத்திக் கொள்ள..
சட்டென்று அதன் மீது முத்தமிட்டான். அவள் சிலிர்ப்புடன் அவனைப் பார்த்து சிணுங்கினாள். அவள் கையை இழுத்து அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவளது மென்மைகள் அவன் முரட்டு நெஞ்சில் நசுங்க இறுக்கினான். அவளோ மெல்ல திமிறினாள்.
"பாவா விட்று.. டைம் ஆகுது போகலாம்!"
"ப்ளீஸ் டி பால் டப்பா.. என் தவிப்பு புரியல உனக்கு? உன்னை காணும் தெரிஞ்சவுடன் எப்படி பதறினேன் தெரியுமா? அதுவும் அவன் கடத்திட்டான் தெரிஞ்ச போது.. என் உயிரே என்னிடம் இல்லடி பால் டப்பா" என்றான் உருக்கும் குரலோடு.
"ஆனாலும்.. இன்னைக்கு.. நம்ம கல்யாண...." என்று அவளை பேச விடாமல் அவள் உதடுகளைக் கவ்வினான். கீழ் உதட்டை கவ்வி இழுத்து சுவைத்தான். வாஹினியும் இவனை திருத்த முடியாது என்று அவன் முத்தத்தில் லயித்து கண்களை மூடி நின்றாள். அவளின் மெல்லிய உதடுகளின் தேன் சுவையை ரசித்து ருசித்து கிளர்ந்தான். அவளை முத்தமிட்டபடியே அவளை இறுக தழுவினான். அவனின் அதிரடியில் அவள் உடல் துவண்டது. அவள் கைகளால் அவனை இறுக்கி கொண்டாள். அவள் உதடுகளை கடித்து சப்பி உறிஞ்சி சுவைத்த பின் பிரிந்ததும் இருவரும் வேகமாக மூச்சு வாங்கினர்.
"ஸ்ஸ்ஸப்ப்பா.. மொரட்டு பாவா.." முணகினாள் பெண்.
"அவ்வளவு காதலடி பெண்ணே!!"
"ம்ஹூம்.. எவ்வளவாம்??" என்று அவள் உதடு சுழித்து கேட்க..
"நிரூப்பிக்கட்டுமா?? மீண்டும்??" என்றவன்,
சுழித்த அவள் உதடுகள் அவனை வெறி ஏற்ற.. மீண்டும்.. மீண்டும்.. அவள் உதடுகளை கவ்வினான். கொய்தான்!! அதில் அவனின் பற்தடங்கள் பட்டு எரிய.. ஸ்ஸ் என்றாள். புண்பட்ட உதடுகளை நாக்கால் எச்சில் அமிர்தம் கொண்டு மருந்தாக தடவி பின் மொத்தமாக நாவினை அவள் வாய்க்குள் நுழைத்து மருந்து கொடுக்க.. அவள் இதழ்களும் விரிந்து அவன் நாவினை வரவேற்றது!! இருவரும் தங்கள் காதல் உலகத்தில் லயித்து இருக்க..
"பாஸ்ஸ்ஸ்ஸ்… !!!!" என்று ஜிகா கத்தலில் தான் காதலைத் தாண்டியும் கலியுகம் ஒன்று இருக்கிறது என்று திரும்பி வந்தது காதல் கிளிகள்.
"பாஸ்.. ரொம்ப நேராமாச்சு.. முகூர்த்தத்துக்கு நேரமாச்சு!! வாங்க போகலாம்" என்று அவன் அழைக்க..அதன் பின்னே தான், தான் அழைத்த வந்து ஜிகா மற்றும் அவனது ஆட்களை நினைவு வர..சிகையை கோதிக் கொண்டவன், மறு கையால் தன்னவளை அணைத்துக் கொண்டு சென்றான் ஜித்தேந்தர்.
இவர்கள் அரண்மனையை நெருங்கும் முன்னமே அனைத்தும் தயாராக இருக்க.. விரைவாக வாஹினியும் தயாராகி வர.. மாப்பிள்ளை கோலத்தில் ஜித்தேந்தரும் தயாராக இருக்க.. குறித்த நேரத்தில் தன்னவளின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி.. ஜென்ம ஜென்மமாய் தவித்த இரு மனங்களும் இம்மணத்தில் அழகாக இணைந்தது.
