காதலி 26

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 26

 

நாக பிரசாத் தப்பித்துச் சென்றது ஜித்தேந்தருக்கு தெரியும்!! ஆனாலும் அவனால் இனி பெரிய பிரச்சனை இருக்காது என்று நினைத்து விட்டு விட்டான். மேலும் அவனது அப்போதைய பெரிய பிரச்சனையே தனது பால் டப்பாவை எப்படி சமாளிப்பது என்று இருந்ததால் நாக பிரசாத்தின் மீது அவனது முழு கவனம் அப்போது செல்லவில்லை.

 

 

அடிபட்ட நாகமென நாக பிரசாத் காத்திருந்தான். தன் புண்களை நக்கி நக்கி ரணத்தை ஆறவிடாமல் இருக்கும் குரங்கை போன்றே அவனது மனமும்.. ஜிதேந்திரனிடம் பட்ட அவமானத்தை நினைத்து நினைத்து புழுங்கியது.

 

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்டாலும் நாக பிரசாத் தொழில் தொடங்கியது எல்லாம் கர்நாடகா தமிழ்நாடு கேரளா போன்ற பிற மாநிலங்களில் தான். திரும்பவும் ஆந்திராவில் அவன் கால் பதித்த நேரத்தில்தான் ரெட்டியின் வம்ச செல்வ செழிப்பும் பெருமையும் அவனுக்கு தெரியவந்தது. மெல்ல மெல்ல சோமையாவுடன் நட்பாக பழகினான். அவர்களது வம்ச பெருமையை பயன்படுத்தி தொழில் முன்னேறலாம் என்பது அவன் எண்ணம்!! அப்படி அவன் பழகும் போதுதான் எதிர்பாராத விதமாக அவர்களது அரும்பெரும் மற்றொரு உண்மையும் தெரிய வந்தது. அந்த கிரீடம்!!

 

வழக்கமாக இவ்வாறு ராஜாக்கள் வம்சத்தில் வந்தவர்களிடம் சில அரியப் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். அது போல தான் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டவனுக்கு அந்த கிரீடத்தை பற்றி தெரிய தெரிய இன்னும் வியப்பு மேலிட்டது. அதிலும் அந்த வைடூரியம்!! அதன் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்பதை கேட்டவனுக்கு, பேராசை பித்து கொண்டது மனது.

 

 

ஆனால் இம்மாதிரி பட்டாபிஷேக விழாவிற்கும் மற்ற விழாவிற்கும் அவர்களின் வம்சத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்பதை அறிந்தவனுக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான், சோமையா ஒருமுறை தன் அண்ணன் மகளுக்கு வரன் பார்ப்பதாக சொல்லிக்கொண்டிருக்க.. அப்பொழுதே அவன் நடை உடை பாவனை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக அவரை கவர முயற்சித்தான். பின்பு ஒருநாள் தன்னைப் பற்றிக் கூறித் தன் தொழில்களையும் கூறி இவன் பெண் கேட்க.. சோமையாவும் சற்றும் யோசித்து சொல்கிறேன் என்றார். அவரும் அவனைப்பற்றி அனைத்தும் விசாரித்தே வாஹினியின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தார்.

 

ஆனால் அன்றிரவே அவள் காணாமல் போக.. அதுவும் வேறு ஒருவனோடு வேறு ஒரு இடத்தில் இருப்பதை தன் ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டவனுக்கு வன்மம் தலை தூக்க.. அவளை எப்படியாவது அடையவேண்டும் என்று ஜித்தேந்தரிடம் பேசி அவளை அழைத்துவர செய்ய.. ஆனால் அங்கு நடந்தது எல்லாமே இவனுக்கு எதிராக அமைந்து விட்டது!!

 

 

இனி தான் ஒற்றையாக தான் அந்த வைடூரியத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று அதிதீவிரமாக அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்.. அவனுக்கு வேறு ஒரு பெரிய இடத்தில் இருந்து நட்பு கிட்டியது அவ்வைடூரியத்தை எடுக்க!!

 

ஒருபுறம் இந்த கல்யாணத்தில் கலகம் விளைவித்து வைடூரியத்தை அடைய அவனுக்கு கிடைத்த புது கூட்டாளியுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.. மறுபுறம் இங்கே அரண்மனையில் கல்யாணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. 

 

சோமையா மற்றும் கொண்டல்வராவ் இருவரும் தம்பதி சமேதராய் வந்து கல்யாணம் பேசுவதற்கு ஜிதேந்தர் வீட்டுப்பக்கம் யாரிடம் பேசவேண்டும் என்று கர்னலிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

 

"அவனுக்கு என்று யாருமில்லை!! கொண்டல்வரராவ்.. நீங்களே அவனுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்யலாமே!!" என்று கர்னல் கூற அவர்களும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டனர். இந்த விஷயம் ஜிதேந்திரனை அடைய அவனோ கோபத்தில் கொந்தளித்து விட்டான். 

 

"அது எப்படி நீங்க இருக்கும் போது இன்னொருவரை எனக்கு செய்ய சொல்லலாம்?" என்று கேட்டு சண்டைபிடிக்க.. 

 

அவரோ "அடேய் தஸ்யூதா!!! நான் தனியா இருக்கேன் டா.. தம்பதி சமேதராய் வந்து மணவறையில் நின்றால் தாண்டா அதற்கு மரியாதை.. மகிழ்ச்சி!! கூடவே அவங்க பையன் செய்த நினைச்சு ரொம்பவே வேதனையில் இருக்காங்க.. அவங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்தது வரம்னு நினைக்கிறாங்க.. இதில் எல்லாம் பெருசா நீ பாலிடிக்ஸ் பண்ணாத.. போ.. போய்.. மத்த வேலையை பாரு!!" என்றார். அவனும் முறைப்புடன் அவரை தான் பார்த்து நின்று கொண்டிருந்தான். 

 

"இவனை..???? ஏன் டா?? இப்படி பிடிவாதம் பிடிக்கிற தஸ்யூதா!! சொன்னா கேளு.. போ" என்க.. அவனோ மீண்டும் நிற்க "இப்ப நீ போகப் போறியா? இல்லையா?" என்று ஒரு அதட்டல் போட்டார். திரும்பி திரும்பி பார்த்து அவரை 

முறைத்து கொண்டே சென்றான். 

 

அவன் கர்னல் ரூமில் இருந்து வெளியே வந்த உடனே அவனுக்கு இரு பக்கமும் காவலாக நின்று கொண்டனர் மெகாவும் ஜிகாவும். . 

 

 

"இவனுங்க வேற இருக்கற இம்சைல!!" என்று சிரித்துக் கொள்ள தான் முடிந்தது.

 

"நான் அவளை பார்க்க வேண்டும் என்றால் காற்று கூட என்னை தடை செய்ய முடியாது டா தடி தாண்டவராயன்களா.. நீங்கள் எனக்கு எம்மாத்திரம்??" என்று சிரித்துக் கொண்டே சென்றான். 

 

 

இரவு தூக்கம் வர மறுத்தது ஜித்துக்கு. இவ்வளவு நாட்களாக அவள் உடனே பகிர்ந்த படுக்கையும் அவளது ஸ்பரிசமும்.. இறுக்கிய அணைப்பும்.. சிறு சிறு அணைத்தல்களும்.. கொஞ்சல்கள் கெஞ்சல்களுக்கும் பழகி இருந்தவனுக்கு இன்று தனிமை கொடுமையானது!!

 

"பைத்தியம் பிடிக்க வைக்கிறா என்னை. .. என்னை என்னடி செய்தாய் பால் டப்பா? நீ அருகில் இல்லாமல் தூக்கும் கூட கண்ணுக்கு வரமாட்டேங்குது டி!!" என்று தலையணையைக் கட்டிக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்தவன் எழுந்து மணி பார்க்க அதுவோ ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. 

 

இரவு கொஞ்ச நேரம் தூங்கினால் தான் நாளைக்கு விஷசத்தில் தெளிவாக இருக்க முடியும். தூங்க வேண்டுமென்றால் அவளிடம் தானே போக வேண்டும் என்று நினைத்தவன், கொஞ்சம் கூட யோசிக்காமல் சரசரவென்று பால்கனி வழியாக மாடி ஜன்னல்கள் பிடித்து ஏறி அவள் அறையில் வந்து குதித்தான். 

 

 

அவளோ நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். "கும்பகர்ணி.. கும்பகர்ணி.. கொஞ்சமாச்சும் ஃபீலிங்ஸ் இருக்கா? எப்படி தூங்குறா பாரு!! ஒருத்தன் தூக்கமில்லாமல் கொட்ட கொட்ட விழித்து கொட்டும் பனியில் மாடி எல்லாம் குதிச்சு வந்து இருக்கேன்.. தூக்கத்தை பாரு.. இதுல என்‌ இடத்துல பில்லோ வேறு!!" என்றவன் கோபத்தோடு அவள் அணைத்து இருந்து தலையணையைப் பிடித்து தூக்கி எறிந்தவன், அந்த இடத்தில் வாகாகப் படுத்துக் கொண்டான்.

 

மெல்ல குறும்பு சிரிப்பு ஒன்று வாஹினியின் வதனத்தில் உதயமாக.. அதை கண்டு கொண்டவன், "திருடி!!! முழிச்சிட்டு தான் இருக்கியா?" என்று கேட்க. .. 

 

"ஆமா!! இந்த திருடனுக்கு ஏத்த திருடி!!" என்று கண்ணடித்து சிரித்தாள்.

 

"உனக்கு மட்டும்தான் ஃபீலிங்ஸ் பிடிக்குமா? உனக்கு மட்டும் தான் என் மீது அன்பு இருக்குமா? உனக்கு மட்டும் தான் என் மீது காதல் இருக்கமா? எனக்கு ஒன்னுமே இருக்காதா?? நான் என்ன ஜடமா!!" என்று அவன் தலைமுடிக்குள் விரல்களை விட்டு ஆட்டிக்கொண்டே கேட்டாள். 

 

"அது என்ன கொஞ்ச நாளா உன் மூஞ்சி இப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருந்த?? என்மேல உனக்கு அவ்ளோ தான் நம்பிக்கை இல்லை? காலையிலேயே உன்னை புடிச்சு வாங்கு வாங்குனு வாங்கியிருப்பேன்!! எல்லோரும் பக்கத்தில் இருந்தாங்க.. உன் மானம் போகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அமைதியாக இருந்தேன். இப்ப மாட்டுனடா மவனே!!" என்று அவன் மீது ஏறி படுத்து தன் கோபம் தீரும் வரை.. ஆற்றாமை ஆறும் வரை.. கைகளால் பட்டு பட்டு என்று அடித்து.. நகங்களால் கிள்ளி கீறி என்று இம்சைகள் செய்ய.. அந்த இனிய இம்சையை சுகமாக சுகித்துக் கொண்டு கண்களை மூடி படுத்து அனுபவித்துக் கொண்டிருந்தான் இந்தக் கள்வன்!!

 

மறுநாள் விடியல் அழகாக விடிந்தது பல சுவாரஸ்யங்களை வைத்துக் கொண்டு!! 

 

வாஹினி எழுந்து பார்க்கும் போது ஜித்து அவள் பக்கத்தில் இல்லை. "அதுக்குள்ள ஓடிப் போய்விட்டான்.. திருடன்!!" என்று சிரித்துக் கொண்டே எழுந்து கிளம்பி கீழே வர.. அதற்குள் இவளை அழைத்துச் செல்ல பெண்கள் கூட்டம் வந்திருந்தது. அன்று முகூர்த்த கால் ஊன்றி அவர்கள் முறையில் கல்யாண நிகழ்வுகளை ஆரம்பித்து இருந்தனர். 

 

இன்னும் ஊரில் இருக்கும் மீதி சொந்தபந்தங்கள் இளவட்டங்கள் அனைத்தும் வந்து சேர.. சோமையாவின் புதல்வனும் வெளிநாட்டில் தனது மேற்படிப்பை தொடர்ந்து இருந்தவன், அவனும் அக்காவின் திருமணத்திற்கு பறந்து வந்துவிட்டான். 

 

இளசுகளின் பட்டாளம் சேர்ந்தால் அங்கே கொண்டாட்டத்திற்கும் ஆட்டத்திற்கு பாட்டத்திற்கும் குறைச்சலா என்ன?? என்று ரிதிஷா விஷ்ரூத்.. ஜிதேந்தர் வாஹினி கூடவே மெகா ஜிகாவும் ஹரிதாவும் இணைந்து கொள்ள, களைகட்டியது கல்யாண கொண்டாட்டம். . 

 

 

சங்கீத் பங்க்ஷன் ஆரம்பித்த உடனேயே டிஜே மூலம் காதல் பாடல்களாக போடப்பட்டு ஆண்களும் பெண்களும் கலந்து ஆட.. மருதாணி கையில் வைத்துக்கொண்டு அதை எல்லாம் ரசித்துக்கொண்டிருந்தாள் வாஹினி. அவளையும் விடாமல் இழுத்து வந்து விட, இன்னொரு பக்கம் ஜித்தேந்தரையும் இளைஞர்கள் இழுத்து வந்து அவளோடு விட்டு ஆட சொன்னார்கள்.

 

"எப்படிடா இதை வச்சுக்கிட்டு இவளோடு டூயட் ஆட?" என்று அவள் மருதாணி கையை சுட்டிக்காட்ட..

 

"அதுதான் கெத்து!! இப்போ நீங்க என்ன பண்ணாலும் வதினவால ஒன்னும் பண்ண முடியாது என்ஜாய் ப்ரோ!!" என்று சொல்லி இளைஞர்கள் சிரிக்க..

 

"எங்க அக்கா மருதாணி கலைக்காம ஆடுறது தான் உங்களுக்கு டாஸ்க் மாமாகாரு!!" என்று இளைஞிகள் பட்டாளம் சவால் விட..

 

வாஹினியும் அவஸ்தையுடன் மன்னவனை நோக்கினாள். இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கவ்விக்கொள்ள.. அவளது கையை சற்றே மேலே உயர்த்தியவன் அவள் மருதாணி கலையாமல்.. அவள் அங்கங்களை அதிகமாக தீண்டாமல் தீண்டி… அவளை அணைக்காமல் அணைத்து.. மெதுவாக அந்த பாட்டுக்கு ஏற்றபடி நடன அசைவுகளை செய்ய.. பார்த்திருந்த அனைவருக்குமே வாயை பிளந்தனர்.

 

"அப்பப்பா என்ன கெமிஸ்ட்ரி!!" 

 

"என்னா லவ்ஸ்!!" என்று ஒரே ஆர்பாட்டம் தான். பெரியவர்கள் சற்று தள்ளி நின்று பார்த்தாலும் இளசுகளின் கொண்டாட்டத்தில் தலையிடவில்லை.

 

வத்ஸவ் இல்லாமல் நீலிமா தான் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். அவன் நல்லபடியாக இருந்திருந்தால் அவனும் இப்படி கொண்டாட்டத்தோடு சந்தோஷமாக இருந்திப்பான். அவனுக்கு ஏன் புத்தி அப்படி சென்றது என்று!! 

 

நீலிமாவின் பக்கத்தில் அம்மா என்ற சிறு அழைப்பு வர.. சட்டென்று கொண்டல்வராவும் நீலிமாவும்

திரும்பி பார்க்க.. அங்கே வஸ்தவ் தான் நின்று கொண்டிருந்தான் அருகே ஜித்தேந்தர்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top