Share:
Notifications
Clear all

அழகன் 15

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அழகன் 15

 

தனியாக பேச வேண்டும் என்று ஆண்டாள் சொல்ல, தங்களுடைய வயல் மற்றும் அதனை சேர்ந்துள்ள தென்னந்தோப்புக்குத்தான் ஆண்டாளை அள்ளி வந்திருந்தான் அழகன்..!

 

காலை வெயிலை அப்பொழுதுதான் உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம்..!

 

தென்னந்தோப்பு ஊடே நடக்கும்போது ஆதவனின் கடும் வெயிலின் தாக்கம் குறைந்து, அங்கங்கே மட்டும் மெல்ல எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆதவன் பூமி பெண்ணவளை தொடுவதற்கு முயன்று கொண்டிருந்தான்..!

 

சிலு சிலு என்ற தென்னந்தோப்பின் காற்றும்..

 

சல சல என தென்னம் ஓலைகளின் சலசலப்பும்..

 

க்ரீச் க்ரீச் என்று கிளிகளின் பேச்சும்..

 

ஆ.. ம்மாஆஆ.. என்ற ஆநிரைகளின் அழைப்பும்…

 

க்ரீர்ர்.. க்ரீர்ர்… என்ற பூச்சிகளின் ரீங்காரமும்..

 

பார்க்கவும்.. கேட்கவும்.. தெவட்டவில்லை ஆண்டாளுக்கு..!

 

“ரொம்ப நன்னாயிருக்கு னா.. ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு..” என்று ஒரு கையில் முந்தானையின் நுனியை பிடித்தபடி சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவளின் அழகோ.. தோகையை விரித்து ஆடும் மயிலை போன்றே தோன்றியது நம் அழகனுக்கு..!

 

தோப்பில் இருந்து அடுத்தது வயல் பக்கம் வர.. அங்கே வயலும் வயலோடு சேர்ந்த பம்பு செட்டும்.. பார்ப்பதற்கு இன்னும் அவளுக்கு அதிசயமாய் ஆச்சரியமாய் தோன்றியது.

 

அதிலும் பம்பு செட்டில் இருந்து அப்பொழுது வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருக்க.. வேகமாக குழாயை பிளந்து கொட்டும் தண்ணீரையும்.. அது தொட்டியில் விழுந்து நிரம்பி வழிந்து, சிறு வாய்க்கால் ஊடே பாய்ந்து, வயல்களின் ஊடே நெளிந்து வளைந்து செல்வதையும்.. அவ்வளவு ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள்.

 

“ஏ பொம்மா.. என்ன புதுசா பாக்குற மாதிரி பாக்குற? ஏற்கனவே இதெல்லாம் நீ சின்ன புள்ளையில பார்த்தது தானே?” என்று அவளின் முந்தானையை தன் கையில் சுற்றி தன்னருகில் இழுத்தபடி கேட்டான் அழகன்.

 

“பார்த்திருக்கிறே னா..‌ஆனா எல்லா சின்ன வயசுல தானே.. நேக்கு மறந்தே போச்சு னா. அதுக்கப்புறம் அம்மா என்ன ரொம்பவும் எங்கும் வெளியில விட்டதில்லையா இதெல்லாம் ரொம்ப நாளாச்சு பார்த்து.. வெயிலின் தாக்கமே தெரியல பாருங்கோ.. இந்த பக்கம் தென்னம் தோப்பில் இருந்து வர காத்தும்..‌ அந்த பக்கம் வயலில் இருந்து வர காத்தும் சேர்ந்து அப்படியே சிலு சிலுனு ரொம்ப குளிர்ச்சியா இருக்கு னா நேக்கு.. கூடவே அந்த பம்பு செட்டில் இருந்து தெறிக்க அந்த தண்ணி கூட அவ்வளவு நல்லா இருக்கு” என்று அவள் இயற்கை அழகை ரசிக்க.. அவனோ மங்கையின் இயற்கை வனப்பை ரசித்தான்.

 

கூடவே இந்த பம்பு செட்டில் இருந்து தண்ணீர் சற்று தள்ளி இருக்கும் அவர்களின் கிணற்றை நோக்கி பாய்ந்தது.

 

 

குழந்தைகள் முதல்முறையாக கடலை கண்டு வியந்து பார்த்து பிரமிப்பது போல் அவள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த இயற்கையின் அழகையும்.. அழகன் குடும்பம் அதனை அழகாக செப்பிட்டு பாதுகாத்து வருவதையும்..

“குளிக்கிறியா பம்பு செட்டுல பொம்மா?” என்று அவன் கேட்க..

“அச்சோ வேணாம் னா.. அந்த பம்புல இருந்து வர தண்ணி எவ்வளவு ஃபோர்ஸா வருது பாருங்கோ‌‌.. அதை பார்த்தாலே நேக்கு பயமா இருக்குனா.. அதுவும் தொட்டி ரொம்ப ஆழமா இருக்குமோ?” என்று சற்று தள்ளி நின்று எக்கி பார்த்தாள் அவள்.

“அதெல்லாம் இந்த பக்கம் ஆழமெல்லாம் இருக்காது” என்றவன் அவள் எதிர்பார்க்காத வண்ணம் சட்டென்று தூக்கி அந்த பம்பு செட்டு தொட்டிக்குள் இறக்கி விட்டு விட்டான்.

“ஆஆஆ.. அம்மா..” என்ற அலறியவளின் அலறலை எல்லாம் அழகன் கண்டுகொள்ளவே இல்லை..!

 முதலில் பயந்தவள், பின் ஆசையோடு பம்பு செட்டுக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கால், முட்டி, தொடையை தண்ணீர் நனைத்து அதற்கும் மேலே அவளின் உடையை தாண்டி அவளது உடலை தண்ணீர் நனைத்த போது அவள் கண்ணை மூடி அந்த குளிர்ச்சியை அனுபவித்தாள்.

இயற்கை குளியல் எவ்வளவு சுகம் எவ்வளவு ரம்மியமானது என்பதை அன்று அனுபவப்பூர்வாமாக உணர்ந்து கொண்டாள்.

“இனி அத்தாச்சி, வீட்டுக்கு பக்கத்துல இருக்குற குளத்துக்கு குளிக்க போகும்போது நம்மளும் அவாளோடையே போய் குளிச்சிட்டு வந்திடுணும்..” என்று மனதுக்குள் முடிவெடுத்தவள் அந்த குளிர்ச்சியில் சிலிர்ப்பில் சிணுங்கி நின்றாள்.

‘கோடி ரூபாய் கொடுத்து ஆடம்பரமான பளிங்கு பாத்டப்பில் குளித்தாலும், ஷவரில் குளித்தாலும் கிடைக்காத சுகம்.. சூப்பர் னா’ என்றாள்.

அருவில் குளிக்கும் போது கூட தலை நனைந்து தான் கீழே நனையும். ஆனால் ஆற்றில்.. இம்மாதிரி தொட்டியில் மட்டும் தான் உள்ளங் காலிலிருந்து உச்சி வரை அங்குலம் அங்குலமாக தண்ணீர் தலை வரை நனைத்து நம் மனதையும் உடலையும் மெய்சிலிர்க்க வைக்கும். 

ஆண்டாள் அவ்வப்போது அந்த பம்பு செட்டு தண்ணீர் வேகமாக பாயும் போது, அதில் தட்டு தடுமாறிய போது அவளை தாங்கிப்பிடித்தான் அழகன். அப்போது அவளும் அவள் மேல் சாய்ந்து கொண்டு அந்த சுகத்தை அனுபவித்தாள்.

அவள் அடிக்கடி சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். யாராவது ஒளிந்து நின்று அவள் குளிப்பதை பார்க்கிறார்களா என்று பயம் வேறு. 

ஆனால் அங்கே புதர் எதுவும் இல்லை. வெட்டவெளி என்பதாலும் சுடும் வெயில் என்பதாலும் அன்று வயல் வேலைக்கு ஆட்கள் யாரும் வரவில்லை என்பதாலும் கொஞ்சம் நிம்மதி கொண்டாள் பெண்ணவள்..!

 

 

 

அவள் என்ன நினைக்கிறாள் என புரிந்து கொண்ட மன்னவனோ “இது நம்ம வயல்டி. நாம இங்க இருக்கும் போது யாரும் வர மாட்டாய்ங்க.. கூட இன்னைக்கு வயல்ல வேலை ஒன்னும் இல்ல.. தென்னந்தபுல மட்டும்தான் ஆட்க இருப்பாய்ங்க.. நம்ம இங்க வரத பார்த்ததால இந்த பக்கம் யாரும் வர மாட்டாய்ங்க.. எதையும் யோசிக்காமல் குளித்து முடி” என்று அந்த தொட்டியின் திட்டில் அமர்ந்து கொண்டான். 

 

“என்ன மட்டும் குளிக்க சொல்றீங்க.. நீங்க குளிக்கலையா ரா.. 

நீங்களும் வாங்களேன் னா. !!” என்று கண்கள் சுருங்க.. கைகளை நீட்டி அழைத்தாள் ஆண்டாள்.

 

”உனக்கு தான் புதுசு.. நீ ஆசைத்தீர வெளையாடிட்டு வா.. ” என்றவனுக்கு இப்போது குளிக்கும் மனநிலை இல்லை.

 

அவன் விஷமமாக அவளை பார்த்து “அது மட்டுமல்ல.. என்னால குளிக்க மட்டுமே முடியாது” என்றவன் விஷம சிரிப்பில் அவளோ நாணம் கொண்டு திரும்பிக் கொண்டாள். 

 

 

மேலும் சிறிது நேரம் அவனைப் போல தொட்டி திண்டில் அமர்ந்து கால்களை நனைத்து விளையாடியவள், குனிந்து இரண்டு கைகளிலும் நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாள். அவன் மீதும் அவ்வப்போது தண்ணீரை தெளிக்க அவனோ “நீ ஆடு ஆடு.. சேர்த்து வச்சிக்கிறேன்..!” என்பது போல அவன் மீசை முறுக்கி சிரிக்க.. 

 

இவளோ மேற்பற்களால் உதட்டை கடித்து சிரித்துக் கொண்டாள். 

 

மொத்தமாக நனைந்து மெதுவாக கரையேறி அவனிடம் வந்தாள். கழுத்தில் சுற்றியிருந்த துண்டை உருவி அவளிடம் நீட்டினான். 

 

“ஃபுல்லா நனைஞ்சிட்டேன் இதுல எங்கிருந்து துடைக்க?” என்ற அவள் சிரிக்க.. அவனோ அந்த துண்டை வாங்கி அவளின் முகம்.. காதோரம்.. மார்பு எல்லாம் துடைத்தான்.

 

“இப்படி இந்த வயல்ல கொஞ்ச நேரம் அந்த பக்கம் வரைக்கும் நடந்து போனோம் வச்சுக்கோ.. மொத்தமா எல்லாமே காஞ்சிரும் வா.. வா” என்றபடி அவளை முன்னால் நிறுத்தி பின்னால் நின்றவன், அவள் தோளில் கை போட்டபடி வேட்டியை மடக்கி கட்டிக்கொண்டு அவளோடு அந்த வயல் வரப்பில் நடக்க ஆரம்பித்தான். 

 

ஒவ்வொரு வயலிலும் என்னென்ன பயிர்கள் பயிரிட்டு இருக்கிறோம்.. அதன் மகசூல்.. எப்படி எந்தெந்த பருவங்களில் எதனை பயிரிடலாம்.. என்று அவளுக்கு விவரங்கள் கொடுத்தபடி மெல்ல அழைத்து சென்றான் அவளை..!

 

அவளும் அவனுடவே நடந்து இது என்ன? அது என்ன? இந்த மண்ணில் எது விளையும்? ஏன் இது போடக்கூடாதா? அது போட்டால் என்ன ஆகும்? மகசுல்லா என்ன? என்று தெரியாத விபரங்களை கேட்க.. அவனும் சிரித்தபடி சிறு பிள்ளைக்கு சொல்வது போல அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வந்தான். 

 

“மாமா இந்நேரத்துக்கு வயலுக்கு தானே வந்திருப்பாங்க?” என்று அவள் அப்பொழுதுதான் அந்த கேள்வியை கேட்க..

 

“ரொம்ப அறிவாளி நீ டி” என்று அவள் பின்னந்தலையில் தட்டியவன் “நாம இன்னைக்கு இங்க போறேன்னு சொல்லிட்டு அப்பாவ பர்னிச்சர் கடைக்கு போக சொல்லிட்டேன்” என்றான்.

 

“ஏன் மாமா? இங்க இருந்தா என்ன?” என்று அவள் கேட்ட கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கோபமாக அவளை மறைத்து பார்த்து,

 

“நீதானடி என்கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொன்ன? அதான் அப்பாவ பர்னிச்சர் கடைக்கு போக சொல்லிட்டேன். உன்னையும் இங்க தனியா பேச கூட்டிட்டு வந்தது போல ஆச்சு.. வாயிலையும் தோப்பையும் இன்னிக்கு நான் பார்த்துக்கொண்ட மாதிரி ஆச்சு..” என்றான் காலரை தூக்கி..

 

“அடப்பாவி புருஷா..! எவ்வளவு ப்ளானிங்..!” என்று திரும்பி அவனை பார்த்தாள்.

 

“பொம்மா.. புருஷன் தான்..! உன் புருஷன் தான்..! ஆனா புருஷன் எப்பொழுதும் கொஞ்சம் குலாவிட்டு மட்டும் இருக்க முடியாதே.‌.! ஒவ்வொரு வீட்டுக்கும் அவன் தான் அரசன்.. அப்ப அரசிய மகிழ்ச்சியா கஷ்டமில்லாம வச்சுக்கணும்னா அவனோட தொழிலையும் அவன் ஒழுங்கா பாக்கணும் இல்லையா?” என்றான்.

 

“சரிதான் அரச புருஷரே..!” என்று அவள் பவ்யமாய் கை கட்டி சிரிக்க..

 

“வாலு.. வாலு.. கொழுப்பு டி” என்று அவள் கன்னத்தை கிள்ளியவன், மெதுவாக அந்த வயலை ஒரு சுற்று வரவும் ஆண்டாளின் புடவை அந்த வெயிலிலும் காற்றிலும் நன்றாகவே காய்ந்து விட்டது. 

 

அங்கிருந்த சிறு வீட்டினுள் அவளை அழைத்து வந்தவன், “புடவை காஞ்சிருச்சா இல்ல வேற சுடிதார் மாத்திரியா?” என்று கேட்டான்.

 

“நான் ஒன்னும் கொண்டு வரலையே னா?” என்று விழிக்க.. அவனும் தன்னோடு கையில் கொண்டு வந்திருந்த பையைக் காட்ட..

 

“எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? எனக்கு இதெல்லாம் யோசிக்கவே வரவே இல்லை..” என்றாள் பாவமாய் முகத்தை வைத்து..!

 

“உன்னை யாரு இதெல்லாம் யோசிக்க சொன்னா? நான் எதுக்கு அப்புறம் இருக்கேனாம். உனக்கும் சேர்ந்து நான் யோசிக்கிறேன் டி பொம்மா.. நீ மாமாவ மட்டும் பார்த்துக்கோ” என்றவனின் காதலில்.. அன்பில் கட்டுண்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள். அவன் மார்பில் முகத்தை தேய்த்தாள். மென்மையாக முத்தம் கொடுத்தாள்..!

 

சில நொடிகள் அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்தவன், அதன் பின்னே அவளை ஆரத் தழுவினான். அவள் முதுகைத் தடவினான். அவளது முகத்தை நிமிர்த்தி.. நெற்றியில் முத்தம் கொடுத்தான்.. !!

 

“ஏன் னா.. நாம இங்கயே இருந்துடலாமா..? நாம ரெண்டு பேர் மட்டும்.. இப்படியே..?” என்றவளின் குரலிருந்த மயக்கம் கணவன் அவனுக்கு பெரும் கர்வத்தை கொடுத்தது. 

 

 

“ஏய் பொம்மா.. சோறு.. தண்ணி.. தூக்கம் ஒண்ணும் வேணாவா.?” என்று அவள் மூக்கோடு மூக்குரசி கேட்டான் ஹஸ்கி வாய்ஸில் அழகன்.

 

”வேணாம் னா. நேக்கு நீங்க.. உங்களுக்கு நான்..! போதும்..!” இறுக்கினாள் அவனை. அவளின் மென் கலசங்கள் அவன் நெஞ்சில் இதமாய் அழுந்தியது.

 

”எந்த படத்துல பாத்த இந்த சீன் டி பொம்மா இதெல்லாம்.. ?” மெல்லச் சிரித்தான்.

 

அதில் கோபமாக கணவனை முறைத்து பார்த்தவள் “போய்யா கொஞ்சம் ரொமாண்டிக் பேசுனா..

கிண்டல் பண்ணறேள்..!!” என்று மூக்கு விடைத்தாள்.

 

”பின்ன என்ன டி பொம்மா.. லவ் மட்டுமே வாழ்க்கையா? அது ஒரு பார்ட் தான்டிமா.. காதல் தாம்பத்தியம் அந்நியோன்யம் அழகு தான்!! வாழ்க்கைல மத்த விசயங்களும் நெறைய இருக்கு டா பொம்மா.. !!” என்றவன், அவள் முதுகைத் தடவி.. கைகளை கீழே இறக்கினான். அவள் இடுப்பில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

 

” ம்.. ம்ம்..!” என்று அவனின் இறுக்கிய பிடிக்கு தன் வினையை ஆற்றியவள், 

 

“என்ன வேணா இருந்துட்டு போகட்டும் னா.. எனக்கு நீங்க போதும்..! உங்க அன்பு போதும்..! இந்த காதல் போதும்..! இந்த இறுக்கி அணைப்பு போதும்..! இடைவெளி இல்லா அந்நியோன்யம் போதும்..! வேறு எதுவும் வேணாம்” என்றவளின் வார்த்தைகளில் நெகிழ்ந்தவன்,

 

“நீயாடி பேசுறது பொம்மா? ரெண்டு மாசத்துக்கு முன்ன என்னைய பார்க்கவே பயந்தவளா டி இப்படி எல்லாம் பேசுற?” என்று சிரித்தவன், அவள் முகத்தை நேராகப் பிடித்தான். அவளின் கண்களை ஆழமாகப் பார்த்து விட்டு.. அவள் நெற்றியில் நெற்றியோடு மோதினான். நெற்றியை பிரிக்காமல் அவள் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்தினான்..!!

 

உணர்ச்சி பெருக்கியில் இருந்தான் அழகன், ஆண்டாளின் வார்த்தையில்.. அவள் காதலில்.. அவள் நேசத்தில்..!

 

பின் தன் உதடுகளைக் குவித்து அவள் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான். பின் நாவை நீட்டி அவள் இதழ்களை தடவினான்.

 

மெல்லிய இதழைக் கவ்வி மென்மையாகச் சுவைத்தான் சசி. அவளும் அவன் உதட்டைச் சுவைத்தாள். முத்தம் தித்தித்தது..!!

 

 

”கிளம்பலாமா.. ??” அழகன் கேட்டான். அவர்கள் வந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது.

 

”எனக்கு வீட்டுக்கு போக மனசே இல்ல னா. உங்க போனா நீங்க கடைக்கு போய்டுவேள்..” என்றாள் கசங்கிய குரலில்..!

 

”காலையில வேலைக்கு போய்ட்டாலும் படுக்கும் போது பாத்துக்கறோம் இல்ல…??” என்றவன் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

 

”நேக்கு அது பத்தல னா..” என்றாள் உயிர் உருகும் குரலில்..

 

”வேற என்ன டி வேணும் பொம்மா..?” என்றவன் குரலும் உயிரை உருகச் செய்வதாய்..!

 

”நேக்கு உங்கள பிரியாம இப்படியே இறுக்கமா கட்டிப் புடிச்சிண்டு இருக்கணும்னா.. !!”

மீண்டும் முத்தமிட்டுக் கொண்டார்கள். கை கோர்த்தபடி அவ்விடத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். 

 

மெதுவாக இப்பொழுது தான் பேச வேண்டிய விஷயத்தை கேட்கலானாள் ஆண்டாள்.

 

“நான் கேட்கிறேன் என்ன தப்பா எடுத்துக்காதீங்கோ.. உங்களுக்கும் அத்தாச்சிக்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்க.. அவனோ திடுக்கிட்டு அவளை பார்த்தான்.

 

ஆனாலும் பதில் ஏதும் அவளுக்கு கூறாமல் “ஆமா என்ன பிரச்சனை?” என்று அவன் மறு கேள்வி கேட்க?. இப்பொழுது கணவனை முறைத்து பார்த்தாள் ஆண்டாள்.

 

“ஹா.. ஹா..!” என்று வாய்விட்டு சிரித்தான் அழகன்.

 

ஆண்டாளோ புரியாமல் “என்ன இப்ப நாம கேட்டுட்டோம்னு இவர் இப்படி சிரிக்கிறாரு?” என்று பார்த்தாள்.

 

“அதில்ல கொஞ்ச நேரம் முன்ன தேன் எப்பவும் இப்படியே இறுக்கி கட்டிக்கிட்டு இருக்கணும்னு சொன்ன.. அடுத்த நிமிஷமே என்னைய முறைக்கிறவ.. அதுதான் சொன்னேன், இதுதான் ஸ்வாசிதம்..! இது தான் எதார்த்தம்..! வாழ்க்கையில காதல் நேசம் அன்பு கோபம் சண்டை ஊடல் கூடல் எல்லாமே பங்கு வகிக்கணும். அதிகமான காதலும் திகட்டிடும் இனிப்பைப் போல.. அதிகமான சண்டையும் வெறுத்திடும் கசப்பை போல..!” என்றதும் அவளும் தனக்கு புரிந்தது என்று தலையாட்டிக் கொண்டாள்.

 

“எனக்கும் உன் உணர்வுகள் புரியுது பொம்மா.. முதல் முதலா உன் உள்ளத்தில் ஏற்படுகின்ற இந்த விதமான மாற்றங்கள்.. கணவனான என் மீது உனக்கு உண்டாகும் உணர்வுகள்னு உன்னை என்னால புரிந்து கொள்ள முடியுது..!” என்று இப்பொழுது அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

 

அவளுக்கும் கணவன் சொன்னது அனைத்தும் புரிய “எப்பொழுது என்கிட்ட எவ்வளவு நல்லா இருக்கிறீங்க.. ஏன் அத்தாச்சி கிட்ட அப்படி இல்ல” என்றதும் அவன் அவளை பிரித்து என்ன என்று அதிர்ந்து பார்த்தான். 

 

“ஆமா உங்களை நேக்கு நல்லா புரியுதுனா.. அதே மாதிரி நீங்க ஒவ்வொருத்தவங்க கிட்ட பழகுவதையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. அத்தை கிட்ட.. மாமா கிட்ட.. ஏன் அப்பத்தா கிட்ட கூட சகஜமா இருக்கிற நீங்க.. அத்தாச்சி கிட்ட ஒரு விலகலோடு தான் இருக்கிறீங்க சாதாரணமா பார்க்கிறவங்களுக்கு அது தெரியாதுனா. ஆனா என்னால அத இந்த ரெண்டு மாசத்துல நல்லாவே உணர முடியுது. ஏன் இப்படி இருக்கீங்கனா?” என்று அவள் கேட்டதில் ஒரு மெச்சுதல் பார்வை அவனிடம்.

 

“உன் கிட்ட மறைக்க எதுவும் இல்ல பொம்மா.. அது.. முதல்ல எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கல்யாணம் அவளாலும் நினைப்போச்சு..! அதனாலதான்..‌ அவ மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்” என்றதும்,

 

ஆண்டளோ கண்கள் கலங்கி உதடுகள் துடைக்க நின்றாள்.

 

“ஏற்கனவே உங்களுக்கு வேற பொண்ணோட கல்யாணம் பேசி இருந்தாங்களா?” என்ற அதிர்ச்சி விலகாமல்..!

 

அங்கயற்கண்ணியின் வாழ்

க்கை சிக்கலை தீர்த்து வைக்க எண்ணி சென்ற ஆண்டாள்..

 

அவர்களின் வாழ்க்கையிலே பெரிய சிக்கல் ஒன்று இருப்பது தெரியாமல் போனதுதான்.. விதியோ..!!

 

தொடரும்…

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top