தேன்மழை💞 - (22)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

சதாசிவம் போனை துண்டித்தவர், எல்லோரையும் தயக்கமாக பார்த்தார்.

 

"என்ன ஆச்சு சதாசிவா?"

 

"அப்பா.. ரங்க..ராஜனை.. பாம்பு கடிச்சுடுச்சாம்.." என்ற வார்த்தையில் எல்லோரும் ஐயோ கடவுளே என அலற, அடுத்த இடியாக அவர் இறந்த செய்தியையும் கூறியதில் வீட்டினர் அனைவரும் விதிர்விதிர்த்து போயினர்.

 

"கிளம்புங்க உடனே போயாகணும்." என சண்முகம் ஐயா பரபரத்ததில் மூவரும் விரைந்தனர்.

 

"சொன்னேன்.. தலைபாடா அடுச்சுட்டேன்.. இப்போ கட்ட வேணாம் என்ன அவசரம்ன்னு கேட்டா, மூணு பேரும் பேச்சை கேக்குறாங்களா. இப்போ ஒரு உயிர் போய்டுச்சே. ஐயோ.. போன உசுரு வருமா?" என சாவித்திரி அவர்கள், மகன்கள் மற்றும் கணவரை பற்றி பொருமிட..

 

"யாரு சொன்னா கேக்குறாங்க அத்தை.. இப்போ தினக் கூலி வேலைக்கு வந்த நல்ல மனுஷனை பாம்பு கடிச்சு.. அவங்க வீட்டுல என்ன பதில் சொல்லுறது?" என கல்யாணியும் மனம் கணக்க பேசிட..

 

தெய்வானையோ, "அது அவங்க விதி. நாம என்ன பண்ண முடியும்?" என்றார் லேசான வருத்தம் இழையோடிய குரலில்.

 

மருமகள் சொன்ன பதிலை கேட்டு, சினமடைந்த சாவித்திரி பாட்டி "மூணு பேரும் சரியா இருந்தா இந்த பிரச்சனை வருமா? ஒரு உசுரு போய்டுச்சு. இதெல்லாம் நல்ல சகுனமா? ஒரு வீட்டை தொடங்கும் போது அந்த இடத்துல உயிர் பலி.

 

ஐயோ.. கடவுளே.. இப்படி தலை கால் புரியாம ஆடுறாங்களே. இவனுங்க செய்ற தப்புக்கு அநியாயமா அப்பாவி உயிர் போய்டுச்சே.. ஆண்டவா, இனியும் யாருக்கும் எதுவும் ஆக கூடாது.." கண்ணீர் மல்க இயலாமையோடு அவர் பிரார்த்தித்துக் கொண்டார்.

 

"பாவம் ரங்கராஜன். வயசு பொண்ணை கரை சேக்கன்னு வேலைக்கு வந்தான். அந்த பொண்ணும், பொண்டாட்டியும் விஷயம் தெரிஞ்சா என்ன பாடு பாடுவாங்களோ? கடவுளே.. யாரோ பண்ணுற தப்பு யாரையோ பாதிக்குதே." என புலம்பி தள்ளும் மாமியாரை கண்ட தெய்வானை மீண்டும் இது விதியே என்றார்.

 

"அத்தை.. யாரும் நினைக்காத ஒன்னு நடந்துடுச்சு.. இடத்தை சுத்தம் பண்ண வந்ததுல இறந்துட்டாரு.. கேக்கவே கஷ்ட்டமா தான் இருக்கு.

 

இதை விதின்னு நினைச்சுக்க வேண்டியது தான்.." இரண்டாவது மருமகள் மீண்டும் அதையே கூற, கொதித்து போய் வாய்க்கு வந்தப்படி வசை பாடி விட்டு கல்யாணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார் சாவித்திரி பாட்டி.

 

 

ரங்கராஜனை சவமாக அரசு மருத்துவமனையில் கண்ட மனைவி, மகள் கதறி அழ; தங்களால் முடிந்த வரை அவர்களுக்கு ஆறுதல் அளித்து ஆற்றாமையை தெரிவித்தனர் குடும்பத்தினர். 

 

ரங்கராஜனின் உடல் தகனம் செய்யப்பட்டதும், சில மணி நேரங்களுக்கு பின் அவர்களின் காலியிடம் நோக்கி விரைந்தனர் மூவரும்.

 

அவ்விடத்தில் அவர்களின் காலடி பட்டதுமே, பழைய நினைவுகள் கண் முன் வந்து போனது.

 

திக்.. திக்.. திகில்..

 

மூவரும் அப்படியொரு உச்சபட்ச அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, "இப்போ என்ன நடந்துடுச்சு? ஒன்னும் இல்லை. சாமியை வர சொல்லுறேன். அடுத்த வேலை குறிச்ச தேதியில நடக்கும்." என்றார் சண்முகம்.

 

சதாசிவா, "சரிங்க பா.. நீங்க பாத்து எது சொன்னாலும் சரி தான்" என்க..

 

முருகனோ, "இல்லை பா.. சகுனமே சரியில்ல. எதுக்கும் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு தோணுது.." என்றார் தயக்கமாக.

 

சண்முகம் மனதிலும் ஏதோ ஒன்று ஊடாடினாலும், எவ்வித சலனத்தை அதை முகத்தில் காட்டாதப்படி தான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் திடமாக.

 

பாலக்காடு

இரவு 8.34 மணி.

அவன் வர சொல்லியிருந்த ஹோட்டலில் அவள் மட்டும் தனித்து அமர்ந்திருந்தாள். சர்வரும் 10நிமிடங்களாக அவள் ஏதேனும் ஆர்டர் செய்வாள் என எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்.

 

நேரம் செல்வதை எண்ணி நொந்தவள், அழைத்தால் அவனுக்கு. அவனோ, பயங்கர பிஸி. மொபைலை சைலன்டில் போட்டு விட்டு, வேலையில் மூழ்கியிருந்தான்.

 

நேரம் கடந்து செல்வதை கூட அவன் இருந்த பரபரப்பில் மறந்து விட்டான். சீஃப் வேறு அவருக்கு தெரிந்தவர்கள் நாளை காலை பான்கிரியாஸ் ஸ்கேன் செய்திட வருவதாக கூறியதிலும், அதிலே சற்று நேரம் அவரோடு பேச வேண்டிய நிர்பந்தம்.

 

ஹோட்டலின் நுழைவு வாயிலையும், கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தவள் உச்சுக் கொட்டி சலித்துக் கொண்டது தான் அதிகம்.

 

அவனது வருகையில் ஏமாற்றமடைந்தவள், கிளம்பிட எத்தனித்த நேரம் "ஹலோ" என ஒரு குரல் அவளது நடையை தளர்த்தியது.

 

சட்டென திரும்பியவள் எதிரே நின்றிருந்த ஆடவனை யார் என்பது போல் திகைப்பாக பார்த்தாள். ப்ளூ ஜீன்ஸ், பிளாக் டி-ஷர்ட், கூலிங் கிளாசில் பார்க்க ஒருவித வித்தியாசமான ஜந்து போல் தெரிந்தான்.

 

எப்படி பார்த்தும் அவளுக்கு அவன் யாரென தெரியவில்லை.

 

"உங்க ஆட் பாத்தேன்.. செம சூப்பர் அதுவும் அந்த ஃபேர்னஸ் க்ரீம் செம கியூட் நீங்க.."

 

"ம்ம்ம்.. தாங்க்ஸ்.." என்றவள் அங்கிருந்து நகர நினைத்த நேரம் அழைத்தவன், "நான் அன்னேக்கி உங்களை டேம்ல பாத்தேன். என் ஃபிரண்ட் கிட்ட கூட பேச வந்தீங்க.." என்னும் போது பிரதீஷ்க்கு நண்பன் என ஊகித்தவள், "ஓஹ்.." என்றாள் உதடு குவித்து.

 

அவளின் அழகை பாராட்டியவன் விழிகள் உதடை மொய்த்தது. ரஞ்சித் மற்றும் பிரதீஷ் எல்லோரும் ஒரே பேட்சில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள்.

 

"அன்னேக்கி கூட நீங்க அந்த கிரீன் சுடில செமயா இருந்தீங்க.."

 

அவள் தான் அதற்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல், "கிளம்புறேன்" என்க..

 

"ம்ம்.. உங்களுக்கு பிரதீஷை தெரியுமா?" என கேட்டதில், அவனை தடுமாற்றமாக பார்த்தவள் "தெரியாது!" என்றாள்.

 

அதில் களிப்புற்றவன், ப்ளாக் டி-ஷர்ட்டை முட்டி வரை மேலேற்றிக் கொண்டு, கூலிங் கிளாசை கையில் எடுத்தவன் அவளை தின்பது போல் பார்த்தவாறு, "ஆர் யூ சிங்கிள்?" என கேட்டான்.

 

 

அவன் முக பாவனையும், கேள்வியும் அவளுக்கு வில்லங்கமான ஆளாக உணர்த்த, "மிஸ்டர் யாரு நீங்க? இடியட்.." எனக் கூறி கடுப்பாகி வெளியேற, பின்னாடியே வந்தான்.

 

வந்தவன் முன்பை விட அவளிடம், கண்டிப்போடு பேசினான். அதிலும் இளக்காரமாக அவள் நடிப்பை பற்றி.

 

"இப்போ என்ன கேட்டுட்டேன்னு கோவமா போறீங்க?"

 

அவள் கடுமையான பார்வை பார்த்திட, "சிங்கிளான்னு தானே கேட்டேன். விர்ஜின்னான்னு கேட்டேன்? எஸ் ஆர் நோன்னு சொல்லுங்க. அழகா இருக்க பொண்ணை பாத்தா கேக்குறதுல என்ன இருக்கு?"

 

"............"

 

"எனக்கு உங்களை டேம்ல பாத்த அப்போவே பிடிச்சு போய்டுச்சு. எங்க அவன் உங்களை தெரியும்ன்னு சொல்லிடுவானோன்னு நினைச்சேன். காட்'க்கு தாங்க்ஸ் சொல்லணும்."

 

அவன் வாய்க்கு வந்தப்படி பேசியதில், ராசிகா எச்சரித்தாள் பேசும் விதம் சரியில்லையென்று.

 

"நீங்க தேவையில்லாம வழியை மறைச்சு வம்பு பண்ணுறீங்க மிஸ்டர்!"

 

"யாரு நானா? அழகா இருக்கீங்கன்னு சொன்னப்போ ரசிச்ச. இப்போ மட்டும் என்னவா உனக்கு?

 

கேமரா முன்னாடி நிக்க எல்லாரையும் அட்ஜெஸ்ட் பண்ணி தானே நிப்ப. அழகா இருக்கன்னு சொன்னது உனக்கு பிரச்சனையா?"

 

அதற்கு மேல் அவனது பேச்சை காதில் கேட்க முடியாது என உணர்ந்தவள், சப்பென அறைந்து விட்டாள்.

 

 

வாங்கிய அடியில் அவமானம் தாளாது சுற்றி முற்றி பார்த்தான். பொது இடத்தில் வைத்து அறைந்து விட்டாளே என்னும் கடுப்பில், அவளது துப்பட்டாவில் கை வைக்க முனையும் நேரம், ராசிகாவை பின்னாலிருந்து வலிய கரம் பற்றி இழுத்ததில் திடுக்கிட திரும்பி பார்த்தாள்.

 

ரஞ்சித்தை செவியோடு சேர்த்து அறை வைத்தான் பிரதீஷ். எப்படி? எங்கிருந்து வந்தான் என தெரியவில்லை. சரியான நேரத்தில் வந்து சேர்ந்தவனை விழி வெட்டாமல் திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"யார் மேல கை வைக்க பாத்த?" என்றவன் மீண்டும் அவனை கீழே தள்ளி பலமாக தாக்க முயல, "பிரதீஷ்.. வேண்டாம்" என்றவள் வேகமாக ஓடி வந்து அவனது கரம் பற்றி இழுத்தும், நிதானம் அடைபவனாக இல்லை.

 

"இன்னும் திருந்தலையா டா நீ. பொறுக்கி நாயே." என்றதோடு  அவனது கழுத்தை பிடித்து நெரிக்க போக, "ப்ளீஸ்.. பிரதீஷ் வா.. யாராவது கார் எடுக்க வந்தா பெரிய பிரச்சனை ஆகும்.. சொன்னா கேளு.." அவள் கெஞ்சலோடு சேர்த்து கண்ணீர் வடிய கேட்டுக் கொண்டதில் அமைதி ஆனான்.

 

"இதான் கடைசி வார்னிங். மீறி அவ கிட்ட வம்பு வச்சுட்ட செத்துடுவ." என கர்ஜனையாக எச்சரித்து செல்பவனை வன்மம் தெறிக்க பார்த்தான் ரஞ்சித்.

 

பிரதீஷ் அப்போது தான் வந்தான். காரை பார்க்க செய்து விட்டு, உள்ளே செல்லும் நேரம் தான் கார் பார்க்கிங் அருகே இருவரையும் கண்டு கொண்டான்.

 

இனி உணவா உண்ண முடியும்? அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

 

முன் சீட்டில் அமர்ந்தவள் வழக்கம் போல கண்ணீர் சிந்த ஆயத்தமாகி இருப்பதை கண்டவன், "ஆரம்பிச்சுட்டயா? அவன் பேசுனாலும் ஏன் பேசுற? நீ கிளம்பி போக வேண்டியது தானே?" என நடந்தது தெரியாது அவன் கேட்டு வைக்க..

 

இவன் வராமல் போனது தானே காரணம் என்பது போல் பார்த்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டவள் வீடு வந்து சேரும் வரை பேசவில்லை.

 

அவனும் கெஞ்சியும் பார்த்தாயிற்று. அவள் நடந்ததை நினைத்து இவனே காரணம் என்பது போல் குத்த வைத்தே வீடு வந்து சேர, கதவை சாற்றியவன் அவளது கரம் பற்றி இழுக்க உதறி விலகி சென்றாள்.

 

இதுநாள் வரை நெருங்கி வந்தவள், விலகி செல்வதை விரும்பாதவன், "குட்டிமா என்ன ஆச்சு?" என்று கொண்டே சோபாவில் அவளருகே அமர்ந்தான்.

 

ஆதூரமாக அவளது உள்ளங்கை பற்றிட.. உஷ்ணமாக ஏறிட்டவள், "என்கிட்டே பேசாதே பிரதீஷ்!" என்றாள் கரைந்தபடி.

 

"ஹேய் அவன் ஒரு மென்டல் டி. இதுக்கு ஏன் அழுற இப்போ?"

 

"ராசிகா.."

 

"நீ வந்துருந்தா இப்படி ஆகியிருக்குமா? எல்லாம்.. உன்னால.. தான்.." விசும்பலில் அவளை தோளில் சாய்த்துக் கொள்ள நினைத்த நினைப்பையும், உதறி எழுந்தவள் "நான் போறேன்!" என்றாள் அழுகைனூடே.

 

எழுந்தவளை இழுத்து பிடித்து வம்படியாக அமர வைக்க, "எனக்கு மூட் அவுட்டா இருக்கு. நான் போறேன்.." என்றாள் மூச்சு காற்று படும் நெருக்கத்தில் இருந்தவன் முகத்தை பாராது.

 

அவளது கன்னத்தை அழுந்த பற்றி விழிகளை காண, அவளும் அவனது ஏக்கம் நிறைந்த பார்வையை கண்டு கொண்டாள். அவளோடு பேச வேண்டும், அருகாமை வேண்டுமென்றே.

 

"எனக்கு.. ரொம்ப பசிக்குது.. உன் கூட டின்னர் சாப்பிட நினைச்சேன்.. அது தான் நடக்கல.. கொஞ்சம் நேரம் கூட இரு.."

 

"நான் கிளம்புறேன்.." என பிடிவாதமாக எழுந்து செல்பவளை, ஏமாற்றமாக பார்த்தான். வீட்டின் நுழைவு வாயிலை திறந்து வெளியே செல்லும் வரை.

 

ரஞ்சித் பேசிய விதம் அனைத்தையும் எண்ணி நொந்தவளுக்கு அவளின் அப்பா கூறிய வார்த்தையே நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் அவளது நடிப்பையும் அழகையும் பாராட்டினாலும், வக்கிர புத்தி கொண்டவர்கள் தவறாக நெருங்குவதை நினைத்து கேவி அழுதாள்.

 

அவளது அழுகை கண்டு ஜனனி தோசை வார்த்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்து என்னவென கேட்க, அவள் ஒன்று விடாது விசும்பலோடு கூறினாள். தோழியும் அவளுக்கு ஆறுதல் அளித்து விட்டு உண்ண அழைத்தாள். வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

 

"ஹேய்.. லூசு ரோட்ல போற ஏதோ நாய்க்கு நீ ஏன் அழுதுட்டுருக்க? கண்டவன் பேசுனா நீ தான் அங்க இருந்து விலகி தூரமா போகணும். அவன் ஏதோ பைத்தியம்ன்னு நினைச்சிக்கோ டி.

 

சரி இவ்வளவு நடந்துச்சே உன் ஆளு தானே வந்து கூட்டிட்டு போனாரு. அதை யோசிச்சு பெருமை படு டி.. நான் ஆளு இல்லாம சிங்கிளா சுத்திட்டு இருக்கேன். என் சோகத்தை யாருகிட்ட சொல்லுறது?" என்றவள் அவளை வலுக்கட்டாயமாக எடுத்து வைத்த சாப்பாடு தட்டு முன்பு இழுத்துச் சென்றாள்.

 

பழகிய சில நாட்களில் அவள் காட்டும் அன்பும், அக்கறையும் அவளை வெகுவாக நெகிழ வைத்தது. வம்படியாக ஊட்டி விட்டாள் ஜனனி.

 

இரண்டு மூன்று வாய் சாப்பிட்டவளுக்கு, பிரதீஷ் பற்றிய நினைவு வர, "எனக்கு தோசை வேணாம்." என்றவள் போனை எடுத்துக் கொண்டு அறை நோக்கி ஓடினாள்.

 

"இந்த காதல் வந்தா.. யாருக்கும் தலை கால் புரியாதுன்னு சொல்லுவாங்க.. சரியா இருக்கு.." என அறை நோக்கி ஓடிய ராசிகாவை பார்த்து தானாக புலம்பிக் கொண்டவள், வயிற்றுக்கு வஞ்சம் செய்யவில்லை.

 

"அம்மா.. நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்.." என டைனிங் டேபிளில் தனது எதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்த அன்னை விசாலாட்சியின் தலையில் இடியை இறக்கியதில், தங்கை ஆர்த்தியும் அண்ணனை அதிர்வோடு பார்த்தாள்.

 

"அஸ்வத்.. என்ன சொல்லுற? லவ் பண்ணுறயா?"

 

அஸ்வத் வீட்டில் அன்னை ராஜ்ஜியம் தான். அப்பா பேச்சு சில நேரங்களில் மட்டுமே எடுபடும். முடிவு எல்லாம் அன்னையின் விருப்பப்படியே நிகழும்.

 

"எது லவ்வா!"

 

"ஆமா மா.. நானும் சொல்ல நினைச்சேன். நீங்களும் உங்க ஒர்க்ல பிசி.."

 

"சரி பொண்ணு யாரு?"

 

அன்னை போலவே, ஆர்த்தியும் ஆர்வமாக அண்ணனை தான் இமை கொட்டாமல் பார்த்திருந்தாள்.

 

"ராசிகா!!"

 

ஆர்த்தியோ, ஏதோ கூறக் கூடாத செய்தியை கூறியது போல் அவனை பார்க்க, "எது ராசிகா வா?" என்றவர் மகளை தான் தீயாக பார்த்தார்.

 

"எனக்கு.. எதுவும்.. தெரியாது மா.." என்றவள் அன்னையின் பார்வைக்கே நடுங்க, "மா.. அவளை ஏன் முறைக்கிறீங்க? எதுவும் அவளுக்கு தெரியாது." என்றான் தங்கைக்கு சாதகமாக பேசி.

 

"சரி இப்போ என்ன பண்ண சொல்லுற?"

 

"நீங்க.. தான் பொண்ணு கேக்கணும்.."

 

ஆர்த்திக்கு தான் நெருடலாக இருந்தது. அஸ்வத் காதலிப்பதை அவளால் இன்னும் நம்ப முடிவில்லை. அதில் ராசிகா என்றதும் முகமோ வெளிறியது. அவளும் வேறு யாரையோ அல்லவா காதலிக்கிறாள்.

 

உடன் பிறப்பிடம் அவள் முன்பு போல் இல்லை என பொடி வைத்து கூறினாள் தவிர, அவளது காதலை பற்றி வாயே திறக்கவில்லை. அதை பற்றி பேசினால் தனக்கு தான் தலைவலி உண்டாகும் எண்ணி பேசாது இருந்தது இப்போது தான் தவறு என உணர்ந்தாள்.

 

"பொண்ணு தானே கேட்டுறலாம்.." என்றார் வாயில் அதக்கிய சப்பாத்தியை மென்று அசைப்போட்டபடி.

 

அவரது பேச்சில் சுதி குறைவதை கண்டவன், "மா.. நான் சீரியஸா பேசுறேன். நீங்க ஒரே வார்த்தையில கேட்டுறலாம்ன்னு முடிக்கிறீங்க.." என பதற..

 

பாதி உண்டதோடு கை கழுவி வந்தவர், "சாப்பிட்டு ஹாலுக்கு வா" என்றார். அவன் எங்கு உண்ண, அன்னையின் பதிலை தெரிந்து கொள்ள ஓட்டமாக ஓடினான். அதை விட ஆவல் ஆர்த்திக்கு.

 

'வேறு ஒருவனை தானே காதலிக்கிறாள். அப்பறம் எப்படி அஸ்வத் காதல் அவளுக்கு தெரியாமல் இருக்கும்? இவன் துணிச்சலாக அம்மாவிடம் கூறுவது அவளது சம்மதித்திலா?' என ஆர்த்திக்கு தான் பல வித குழப்பம். தனக்குள்ளே பல்வேறு கேள்வியை கேட்டுக் கொண்டாள்.

 

"மா.."

 

"அஸ்வத் நீ யாரை லவ் பண்ணாலும் பிரச்சனை இல்லை."  என்ற பின்பு அவன் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தாலும், அதற்குள் அவர் வேறொரு நிபந்தனை விதித்தார்.

 

"உனக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. அவ ஆட்'ல நடிக்கிறா. ஆஃப்டர் மேரேஜ் இதக்கு நான் சம்மதிக்க மாட்டேன் அண்ட் நீயும் பேங்க் போற வேலையை விட்டுட்டு அவ பின்னாடியே திரிய முடியுமா?" என்றதில் அவனுக்கு தான் என்ன பதிலளிப்பது என தெரியவில்லை.

 

"சோ, நீ அவகிட்ட இந்த ஆட்'லாம் வேணாம்ன்னு பேசு. நான் அவங்க வீட்டுல பொண்ணு கேக்கிறேன்." படபடவென பட்டாசாக பேசி விட்டு, அறை நோக்கி சென்றார்.

 

ஆர்த்தியோ தன் மனதில் உள்ளதை பேச இது நேரமில்லை என புரிந்து கொண்டு அவளும் நகர்ந்து கொண்டாள். அவளுக்கு இப்போதே போன் செய்து அண்ணன் காதல் பற்றி தெரியுமா என கேட்க நினைத்தாள்.

 

வழக்கம் போல் அவளுக்கு கிடைத்தது ஏமாற்றமே. அவள் அழைப்பை ஏற்கவில்லை. எரிச்சலுற்றவள், ஹாலில் அண்ணன் இருக்கறானா என்று எட்டி பார்க்க காலியிடத்தை கண்டவள் விடியட்டும் என்ற நினைப்போடு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

இரவு 10.56மணி

வாயிற்கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டே அவள் தான் என ஊகித்தான். கதவை திறந்து விட்டு, கண்டும் காணாமல் செல்பவனை முறைப்பாக பார்த்தப்படி டைனிங் டேபிள் மீது டொம்மென அவள் கொண்டு வந்த இரவு உணவை வைத்தாள்.

 

"பிரதீஷ்!"

 

அவன் வீட்டில் யாருமே இல்லை என்பது போல் செயல்பட, கிட்சனுக்குள் சென்றவன் பின்னால் விறுவிறுவென ஓடினாள். ஃபிரிட்ஜில் சில்லென இருந்த பீரை கையில் எடுப்பதை பார்த்து சீற்றம் கொண்டவள், வெடுக்கென வந்து வாங்க முற்பட அவனின் பிடி பாட்டிலில் மேலும் இறுகியது.

 

"என்ன இது?"

 

"கையை எடு ராசிகா."

 

"பிரதீஷ்.. எப்போ இருந்து இந்த பழக்கம்?"

 

"அது உனக்கு தேவையில்லாதது. விடு.." என்றவன் அவளது முகம் பாராமல் கூறி கடக்க, மீண்டும் வந்து வழி மறித்து நின்றாள்.

 

"கடக்கு.."

 

"பிரதீஷ்.. பாட்டிலை குடுங்க.."

 

அவளையே தள்ளி விட்டு நகர்ந்தவன், கடகடவென குடிக்க தொடங்கியிருந்தான்.

 

'சரியான குடிகாரனா இருக்கான். பேருக்கு தான் டாக்டர். காய்ஞ்ச மாடு கம்புல மேஞ்ச மாதிரி இப்படி குடிக்கிறான்..' என அவனை குடிகாரன் ரேஞ்சிற்கு கறுவியவள், மீண்டும் அவனிடம் குடு என கேட்டாள்.

 

அவளிடம் தராமல் முக்கால்வாசி குடித்தவன், டீபாயில் பாட்டிலை வைத்து விட்டு கண்களை மூடி சோபாவில் அமர்ந்து விட்டான்.

 

'கிட்ட போலாமா? வேணாமான்னு தெரியலையே. நல்லா இருந்தாலே கத்துவான். இப்போ என்ன செய்ய?' என அவளும் நின்ற இடத்திலே நெளிந்து கொண்டு இருக்க, "ராசிகா இங்க வா.." என கண்களை மூடிக் கொண்டு அழைத்தான்.

 

'எதுக்குன்னு தெரிலயே. ஐயோ..' என அவளும் கையை உதறிக் கொண்டு அருகே அமர்ந்தவள், 'மகா குடிகாரனா இருக்கானே' என்பது போல் பார்த்த பார்வையை உணர்ந்திருபபான் போலும்.

 

சட்டென அவள் புறம் திரும்பி பார்த்தான். அவனது பார்வையில் நடுங்கி போய் அமர்ந்திருந்தவளை, "பயப்படாதே.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. டென்சன் அதான் குடிச்சேன்." என்ற பின்பு தான் அவளுக்கு மூச்சே சீரானது.

 

"அவன் என்ன கேட்டான் உன்கிட்ட?"

 

"எவன்?"

 

"ரஞ்சித்!"

 

"அது.. அது உங்களை தெரியுமான்னு கேட்டான்.."

 

"ம்ம்ம்.. அப்பறம்.."

 

"நீ சிங்கிளான்னு கேட்டான்.."

 

"ம்ம்ம்.."

 

"தென்.."

 

"நீ.. நீ.." என்றவள் முகம் வாட்டம் கொண்டு தலை கவிழ, "ஏன் என்கிட்டே சொல்லல நீ?" என்றதில் எதுவும் பேசாமல் மௌனமனாள்.

 

அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை திசை திருப்ப, "சரி சாப்புடுங்க. உங்களுக்காக ஆனியன் தோசை, சிக்கன் கிரேவி வெயிட்டிங்" என்றாள் கண்களை சிமிட்டி.

 

அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாதவன், "நீ கிளம்பு" என்றிட..

 

"அப்போ சாப்பிட மாட்டீங்களா?" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவியளை, ஏறெடுத்து பார்க்காமல் வேணாம் என தலையசைத்தான்.

 

"நீங்க தானே பசிக்குதுன்னு சொன்னீங்க. சாப்பிடுங்க.. கொஞ்சமா.."

 

"நீ கிளம்பு.. கண்ட நேரத்துல வராதே.. வீட்டுக்கு போ.."

 

"நான் போகல.. கொஞ்சம் நேரம்.. உங்க கூட பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்.." என்றவள் மெல்ல அவனது தோளில் சாய, எவ்வித அசைவற்று படுத்திருந்தவன் செயல் ஏமாற்றம் தர, ஏதோ சுவற்றில் சாய்வதை போல் உணர்ந்தாள்.

 

"கொஞ்சம் சாப்பிடுங்க.."

 

"ஏன் நீ அவன் சொன்னதை சொல்லல?"

 

"சொன்னா என்ன பண்ணிருப்பீங்க?" என்றவள் சிலுப்பிக் கொண்டு தட்டில் தோசையை வைத்து அவனது அருகே அமர, "கண்ட நேரத்துல கண்டதை சாப்பிட மாட்டேன். கிளம்பு இப்போ.." என்றான்.

 

"என்மேல தான் தப்பு. அவன் மட்டுமில்ல நாளைக்கி இதை எல்லாருமே சொல்லலாம் தானே? அதுனால கேமரா பக்கம் போக மாட்டேன்.." என்றவளை, அறைந்து விட்டான்.

 

"நான் அப்படி சொன்னேனா? சொல்லு.. இதுல எனக்கு எதுவும் பிராப்லேம்ன்னு இப்போ வரை சொல்லிருக்கேனா? அப்போ ஏன் இப்படி பேசுற? அப்போ இதெல்லாம் யோசிக்காம தான் இந்த ஃபீல்டுக்கு போனயா?" என்றவன் பேச்சில் தலை குனிந்தவள் கண்ணீர் சிந்தினாள் தவிர எதுவும் பேசவில்லை.

 

எல்லோரும் அவளின் நடிப்பிற்கு எதிராக தடை போட, பழகிய தினம் முதல் நான் தவறாக எண்ணப்போவதில்லை என்றவன் இப்போதும் அதையே கூற, வியப்பில் விழி விரித்தாள்.

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top