தூகை 16

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 16

 

இன்று..!

“இந்த குழந்தைய அபார்ட் பண்ணுனா உங்க வொய்ஃப் ஹெல்த்துகு டெரிபிலி பேட் அண்ட் யூட்ரஸ நீக்குற மாதிரி வரும்” என்றார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று அதிர்ந்து கேட்டது நிரஞ்சன் தான். 

“ஏற்கனவே இவங்களுக்கு யூட்ரஸ்ல சம் ப்ராப்ளம் இருக்கு. போன டெலிவரி சிசேரியனா?” என்று கேட்டார்.

இருவரும் ஆம் என்று தலையசைத்தனர். “அப்போ ஒரு சின்ன ஸ்கேர் உங்க யூட்ரஸ்ல இருக்கு மேகவதனி. அதனால உங்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்.. ப்ளீடிங் நிறைய வர்றது.. பீரியட்ஸ் டைமில் பயங்கர வலி.. இதெல்லாம் கூட இருக்கும். ஆமாவா?” என்று கேட்க, 

ஆமாம் என்று தலை அசைத்தாள். 

சற்றென்று நிரஞ்சன் மனைவியை அதிர்ந்து பார்க்க.. அவளோ கணவனை திரும்பி கூட பார்க்கவில்லை.

டாக்டர் செல்வது போல அவளுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் வரும். அதனாலதான் முதலில் இந்த கர்ப்பத்தை அவள் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் 40 நாட்களுக்கு முன்பே அவள் கலைத்திருப்பாள். 

“அது கூட சில ப்ராப்ளம்ஸ் இருக்கு. அதனால தான் சொல்றேன்” என்றார்.

“அப்போ டிஎன்சி பண்ணவே முடியாதா டாக்டர்?” என்றதும் பெருமூச்சியை விட்டு பின்னால் இருக்கையில் சாய்ந்த அமர்ந்தவரோ “ஏம்மா உன் உயிருக்கே ஆபத்துன்னு சொல்றேன். அதை விட டிஎன்சி பண்ணனும்னு இன்னொரு உயிரை கொல்றதிலேயே குறியா இருக்கே? நாளைக்கே ஏதாவது ஆகி உன்னோட இன்னொரு புள்ள தாய் இல்லாம இருந்தா பரவாயில்லையா?” என்றார் குறையா கோபத்தோடு.

“டாக்டர்..!” என்று கத்திய நிரஞ்சன், “வேணாம் டாக்டர் அப்படி எல்லாம் சொல்லாதீங்க. சில பேர் வாக்கு பலிக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க” என்றான் தழுதழத்த குரலில்.

‘பின்ன என்ன மிஸ்டர்? நான் எவ்வளவு சொல்றேன். திரும்ப திரும்ப டிஎன்சி பண்ண முடியாதன்னே கேட்குறாங்க உங்க வைஃப். நான் வேணா ஒன்னு பண்றேன் இப்போ சில அட்வான்ஸ் டெக்னாலஜி எல்லாம் கூட இருக்கு. நான் அப்படி ஒரு டாக்டர உங்களுக்கு ரெஃபர் பண்றேன். நீங்க அவர் கிட்ட கூட ஒப்பீனியன் கேட்டுக்கோங்க.‌ அவர் ஃபேமஸ் டாக்டர்” என்றதும் அவசரமாக ஓகே டாக்டர் என்றாள்‌ வதனி.

அவளின் ஆர்வத்தை பார்த்து வருத்தமாக தலையாட்டிக் கொண்டவர், வேறு ஒரு மகளிர் மருத்துவருக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதிக் கொடுத்தார். கூடவே அவளை ஸ்கேன் போர்ட்டையும் கொடுத்து நிரஞ்சன் கேட்ட அந்த குழந்தையின் படத்தை தனியாக பிரிண்ட் அவுட் கொடுக்க அவன் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான். 

“அந்த டாக்டர் கிட்ட பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு அவர்கிட்டயும் செகண்ட் ஓபனியன் கேட்கலாம். சப்போஸ் பண்ணலாம்னு சொன்னா அவர்கிட்டயே ப்ரோசீட் பண்ணுங்க. எனக்கு நோ அப்ஜக்சன்ஸ்..!” என்றார் நிரஞ்சனிடம் சிறு வலியோடு மருத்துவரை பார்த்தான்.

பின் வதனியை பார்த்து, “ப்ரக்னென்சி என்பது வரம். இப்பல்லாம் பல பேர் எவ்வளோ காலம் தவம் செய்தாலும் அது கிடைக்கிறது இல்லை. ஆனா உங்களுக்கு உடனே கிடைச்சதனால அந்த அருமை தெரியல..! போகும்போது வெளியில இருக்கிற பொண்ணுங்களை கொஞ்சம் பாருங்க.. அதுல குழந்தை வேண்டி ட்ரீட்மென்ட்க்கு வந்தவங்க தான். தென் யுவர் விஷ்” என்றார் வதனியை பார்த்து. 

அவளும் பல காலமாக இரண்டாவது குழந்தைக்கு தவம் இருந்தவள் தானே? மருத்துவர் அவ்வாறு சொன்னதும் முணுக்கென்று முகிழ்த்த தண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டவள், “அவரவர் நியாயம் அவரவருக்கு டாக்டர்..! நான் சொன்னாலும் என் வலி உங்களுக்கு புரியாது. தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்ஸர்ன் டாக்டர்” என்று அவள் வெளியேற, மருத்துவரிடம் தலையசைத்த நிரஞ்சன் மனைவி பின்னே வெளியே வந்தான்.

“கொஞ்சம் யோசிக்கலாமே மேகா? உன் ஹெல்த்துக்கும் பிரச்சனை எனும் டாக்டர் சொல்றார்களே?” என்றதும் திரும்பி ஒரு தீர்ப்பார்வை அவனை பார்க்க..

“தப்புதான்..! நான் செஞ்சது தப்புதான்.. இல்லைன்னு சொல்லல. ஒத்துக்கிறேன்.! அதுக்காக என்னை தண்டி டி.. எதுக்காக உன்னை தண்டிச்சுக்கிற.. குழந்தையை தண்டிக்கிற? மிருகுட்டியையும் யோசி மேகா” என்று இறைஞ்சினான்.

ஏற்கனவே டாக்டர் சொன்ன அதிர்ச்சியான விஷயங்கள் அவளது மூளையை நிறைத்திருக்க.. மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியவில்லை அவளால். அமைதியாக அவள் நடக்க பின்னே அவளோடு நடந்தவன் “அந்த டாக்டர் கிட்ட போன்ல அப்பாயின்மென்ட் வாங்கி வைக்கிறேன்” என்றான்.

“என் விஷயங்களை எனக்கு பாத்துக்க தெரியும் மிஸ்டர் ஆதவ் நிரஞ்சன்‌ அப்பாங்கற விஷயத்துக்கு தேவைப்பட்டா மட்டும் நீங்க வந்தா போதும். ஏன்னா அப்பா நீங்க தானே? அதுல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா மட்டும் வந்தா போதும்” என்றதும் செருப்படி வாங்கியது போல வலியில் முகத்தை சுருக்கியவன்,

பின்பு அவளை கசங்கிய முகத்தோடு பார்த்து “என்ன கேவலப்படுறதா நினைச்சு உன்னை நீயே கேவலப்படுத்திக்காத மேகா. டேக் ரெஸ்ட்..!” என்றவன் அவள் தோளினை தொட வர, சட்டென்று இரண்டடி தள்ளியவள் “டோன்ட் எவர் டச் மீ.!” என்றபடி விறுவிறுவென்று நடந்தாள்.

தன்னிடம் கோபமாக பேசினாலும் உள்ளுக்குள் அவள் எவ்வளவு வலியோடும் குழப்பத்தோடும் இருப்பாள் என்பதை புரிந்தவனுக்கு அவளை எப்படி தேற்றுவது என்று வழி தெரியாமல் தவித்து நின்றான்.

பின்பு யோசனையாக சாருபாலா மருத்துவரை திரும்பவும் சென்று சந்தித்தான். 

“டாக்டர்.. மே ஐ கம் இன்?” என்று அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து “ஐ அம் எக்ஸ்பெக்டிங் யூ..!” என்று சிரித்தார். 

“நெஜமாவே மேகாவுக்கு பிராப்ளம் இருக்கா டாக்டர” என்று கேட்டவனை பார்த்து சிரித்தவர், “பிராப்ளம் இருக்குதான் பட் யூட்ரஸ் எடுக்குற அளவு எல்லாம் இல்லை” என்றதும் தான் அவனுக்கு ஆசுவாச மூச்சு.

“நான் ரொம்ப பயந்துட்டேன் டாக்டர். யூட்ரஸ் எடாக்கணும்னு சொன்னதும்” என்று பதட்டம் தனிந்து சிரித்தவனை கனிவாக பார்த்தவர், 

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்றார்.

“உங்களுக்குள்ள ஏதோ ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு எனக்கு புரியுது. அத எவ்வளவு சீக்கிரமா நீங்க நிவர்த்தி பண்ணிக்கிறீங்களோ அவ்வளவு சீக்கிரம் உங்க ஒய்போட ஹெல்த்துக்கும் நல்லது. பிறக்க போற குழந்தைக்கு நல்லது. எந்த ஒரு கருவையும் அனாவசியமாக அழிக்க கூடாதுங்குறது என்னோட கருத்து மிஸ்டர். என் தனிப்பட்ட கருத்து..! அத நான் உங்ககிட்ட திணிக்க முடியாது அதனால தான் ஒரு சின்ன பொய்” என்றார் கனிவாக புன்னகைத்து. 

“நீங்க ரெஃபர் பண்ணின டாக்டர் ஒருவேள..” என்று அவன் பயத்தோடு இழுக்க.. 

தலையசைத்து சிரித்தவர், “அவர் எனக்கும் மேல.. நீ போய் பாருங்க உங்களுக்கே புரியும்..!” என்று அவனுக்கு விடை கொடுத்து விசிட்டிங் கார்ட்டையும் கொடுத்தார். 

“அப்படி என்ன பெரிய டாக்டர் அவரு?” என்று யோசித்தபடி சாருபாலா மருத்துவர் கொடுத்த விசிடிங் கார்டை பார்த்தான் நிரஞ்சன். 

அதில் ராவண் திரேந்திரன் மாறவேல் என்றிருந்தது.

இவன் யாரென்று தெரிகிறாதா??

தொடரும்..

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top