காதலி 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 21

 

 

 

உயிரற்ற சடலமாக இருப்பாள் என்று எண்ணிய ஹிரன்மாயி ஜெயத்ரி கம்பீரமாக அமர்த்திருந்தாள் கையில் வீரவாளுடன் புரவியின் மீது!!

 

 

 

"இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டீர்கள் அல்லவா?? உங்களை.." என்று அவன் பேசும் முன்னே அவனது வலது கை துண்டிக்கப்பட்டது ஹிரன்மாயி கையிலிருந்த வீரவாளால்…

 

 

 

அதற்குள் அங்கிருந்த மற்ற கள்வர் கூட்டமும் வந்து சேர.. கூடவே ஹிரன்மாயின் மெய்காப்பாளர் படையும் வந்து விட.. ஒட்டுமொத்தமாக மாட்டிக்கொண்டான் சோமன்.

 

அதன் பிறகு அவனது ஒற்றைக் கையில் கயிற்றைக் கட்டி குதிரையின் பின்னே இழுத்து வரச்செய்து.. நாட்டில் உள்ளவர்களுக்கு அவனைப்பற்றி விஷயங்கள் பரவச் செய்தனர்.

 

 

அதன் பின் கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள் அவனும் அவன் சார்ந்த வீரர்களும்.. நாட்டுக்கு செய்த துரோகத்துக்காக..‌

 

அதில் கஞ்சனராம ரெட்டி அனைவருக்கும் முன்பாகவே தன் மகனை கன்னம் கன்னமாக அறைந்து " என்‌ பெறா மகளை கொல்ல துணிந்தாயா கேடு கெட்டவனே!! இந்த வம்சத்தின் கோடாரி காம்படா நீ!! நீ என் மகனே இல்லை.. ஒழிந்து போ!!" என்று தன் நடிப்பை பிரமாதமாக நிரூபித்தான்.

 

 

அதன் பெண் அரசியாக ஹிரன்மாயி ஜெயத்ரிக்கு முடி சூட்டப்பட்டது. அப்படி சூட்டப்பட்ட கிரீடத்தில் பதிக்க வைடூரியம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது இளவரசிக்கு. அதை அனுப்பியது யாரென்று அறியவில்லை அவர்கள். மேலும் அவளது ஓவியமும் அரசிக்கு பரிசாக வர… அதை தன் அறையில் மாட்ட சொன்னாள் ஹிரன்மாயி..

 

ஒருநாள் இரவு அந்த ஓவியத்தை பார்க்கையில்.. அது ரத்தத்தில் வரையப்பட்டது என்பதை கண்டு கொண்டாள் ஹிரன்மாயி..

 

"இரத்தம்!! யார் இதை வரைந்திருப்பார்கள்??" என்று இன்ச் இன்ச்சாக அந்த ஓவியத்தை அவள் கண்களால் அளவெடுக்க ஓவியத்தின் ஒரு மூலையில் 'கள்வா!!' என்று எழுதப்பட்டிருந்தது. சட்டென்று புரிந்து போனது அவளுக்கு.. அந்த ஓவியம் யாரால் வரையப்பட்டு.. எங்கே இருந்து அனுப்பப்பட்டது என்று!! தன் கிரீடத்தில் உள்ள வைடூரியத்தை எடுத்து மெதுவாக தடவி பார்த்தவள் "ஒருவேளை இதுவும் அந்த கள்வனின் வேலையோ??" என்று யோசிக்க மெல்லிய புன்னகை அவள் வதனத்தில் மட்டுமல்ல கண்களிலும் சுடர் விட்டது.

 

 

 

சோமனின் சதிச் செயல்கள் அதன் பின் வந்த அவனது தண்டனை அதற்கு பிறகு இவளது பட்டாபிஷேகம் என்று அந்த கள்வர் கூட்டத்தை மறந்தே போனார்கள் ஹிரன்மாயியும் அவளது தந்தை சுகன்பிரதாபனும்.

 

ஆனாலும் கள்வர் கூட்டத்தை இப்படி கன்னம் வைக்க விட்டுக்கொண்டு இருக்கலாகாது என்று முடிவெடுத்தவள் தன் தந்தையிடம் சென்றாள். அவர்கள் அனைவரையும் சரணடைய செய்ய வைப்பதாய் தன் தந்தையிடம் கூறி விட்டு, மீண்டும் அந்தக் காட்டிற்கு ஒரு பயணம் மேற்கொண்டாள் தனது மெய்க்காப்பாளர் வீரர்களோடு..

 

வெகுதூரம் பயணம் மேற்கொண்டும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத பொழுதே 'கள்வன்.. கண்டுகொண்டுவிட்டான் நான் வருவதை!' என்று ரகசிய புன்னகை நெளிந்தது ஹிரன்மாயி வதனத்தில்..

 

எப்பொழுதும் அவர்கள் செய்யும் சமிக்ஞையை அவர்களோடு கழித்த அந்த இரண்டு நாட்களில் தெரிந்திருந்தாள் அரசி. அந்த சமிக்ஞையை ஒலிக்க செய்தாள்.

 

"ஆக.. இளவரசியிலிருந்து அரசியாக மாறினாலும் எங்களை விட மாட்டாய்!! அப்படித்தானே??" என்று குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க.. பெரும் மரத்திலிருந்து விழுதைப் பிடித்து குதித்து அவள் முன் நின்றான் ஜலந்திரன்.

 

"எப்படி விட முடியும்?? ஒன்று சரணடையுங்கள்!! இல்லையேல் இத்தொழிலை விட்டு வேறு எங்காவது ஓடி விடுங்கள்!!" என்று அரசியும் தன் புரவியில் இருந்து குதித்து தன் போர்வாளை அவன் மார்பினில் பதிக்க..

 

ஜலந்திரனுக்கு அது வாளாக தோன்றவில்லை.. மாறன் அம்பாகவே பட்டது!!

 

 

'நம் கண்களுக்கு எதுவோ ஆகிவிட்டது!! அதுவும் இந்த பெண்ணுக்கு முன்னால் மூளையும் அவ்வப்போது மறத்து போய்விடுகிறது!!

 

ஜலந்திரா கடிவாளம் இடு! உன் மனதிற்கு!! அவள் இப்போது இந்நாட்டு அரசி!!' என்று அறிவு எச்சரிக்கை மணி அடிக்க.. கண்களை மூடி ஒரு நிமிடம் நிதானித்தவன்,

 

"அதுதான் ஏற்கனவே சரணாகதி ஆகிவிட்டேன் தேவி!! இனி என்ன?" என்பது போல அவனின் பார்வை!!

 

"நான் இந்நாட்டு அரசி கள்வா… கள்வனே ஆனாலும் நீயும் என் குடியே!! ஆதலால்.. இவற்றை எல்லாம் விடுத்து.. சரணடையுங்கள் உங்கள் வாழ்வாராதாத்திற்கு நான் பொறுப்பு!! ஏனெனில் நீங்கள் கள்வர்கள் தான்.. கயவர்கள் இல்லை" என்றாள் ஹிரன்மாயி!!

 

அவள் கண்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவன் தன் இருபக்கமும் தலையசைத்து "என் முடிவுகளை என்றும் நீ எடுக்கலாகாது! நானே.. நான் மட்டுமே!! ஆதலால்.. நாளை காலை சரணடைகிறேன். அதுவும் இவ்வழகான அரசி முன்பு மட்டுமே!!" என்று அவன் சிரிப்புடன் கூறி மீண்டும் அந்த விழுதைத் பற்றியவன், அடுத்த நிமிடம் அவ்விடம் விட்டு மறைந்து போனான்.

 

அதன்பிறகு சரண்டைந்த கள்வர் கூட்டம் நன்மை செய்திருந்தாலும் அவர்கள் இத்தனை நாள் செய்தது தவறு தானே என்று அதற்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க ஏற்பாடு செய்யும் போதுதான் மற்றொரு உண்மை வெளிவந்தது.

 

 

உண்மையில்.. கள்வர்களாக இருந்தவர்கள் யாரும் பிறப்பால் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.. இதற்கு முன்னால் இருந்த அரசனின் மெய்க்காப்பாளர் படையை சேர்ந்த வம்சாவழிகள் என்று!!

 

 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சுகன்பிரதாபன் தனது நாட்டை கஞ்சனராமிடம் ஒப்படைத்து சென்றுவிட்ட நேரத்தில்.. இங்கே அவன் செல்வந்தர்களுக்கு மட்டுமே ஆதரவளித்து.. பல ஏழை குடும்பங்களை வறுமையில் வாட வைத்து.. இருக்கும் மக்களிடம் இருந்து இல்லாதவர்களுக்கு கொடுக்காமல், இல்லாதவர்களிடம் இருந்ததை மீண்டும் மீண்டும் பிடுங்கி.. வியாபாரிகளோடு கைகோர்த்து பல வரிகளை நாட்டு மக்கள் மீது திணித்து.. பல மோசடி வேலைகள் செய்ததும் தெரியவந்தது.

 

அப்போது அவனால் வஞ்சிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்த மெய்க்காப்பாளர் படை.. கள்வர் கூட்டமாக உருவெடுத்தது. அந்த வியாபாரிகளிடமிருந்து பல பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது.

 

"நாட்டு அரசனை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ?? அவ்வளவு முக்கியம் தான் நாட்டு மக்களையும் காப்பது!! மெய்க்காப்பாளர் படையான நாங்கள் அதைத்தான் செய்தோம்!! இதில் தவறு என்ன இருக்கிறது??" என்று நெஞ்சை நிமிர்த்தி உக்கிரமாக சபைக்கு முன்னே கேட்ட ஜலந்திரனை கண்ட சுகன்பிரதாபனுக்கு தண்டிக்க மனமில்லை.

 

 

தன் தம்பியை முறைத்து பார்த்தவர் "இனி இந்த வேஷம் உனக்கு அவசியமில்லை ஜலந்திரா!! நாட்டு மக்களை மட்டுமல்ல.. இந்த நாட்டு அரியணையில் இருக்கும் அரசியையும் சேர்த்து நீ காப்பாற்றிக் கொடுத்ததால்.. இனி மெய்க்காப்பாளர் படையின் தலைவனாக உன்னை நியமிக்கிறேன்!!" என்றார்.

 

முதலில் மறுக்க நினைத்தவனின் பார்வை.. சுற்றுச்சூழல.. கொக்கி போட்டு நின்றது அரசியின் கயல் விழிகளில்..

 

அதன்பின் எங்கே அவன் மறுக்க?? பார்வை அரசியிடமும் பதிலை அவள் தந்தையிடமும் அளித்தான் ஜலந்திரன்.

 

மீண்டும் அவர்களது மெய்க்காப்பாளர்கள் படை ஒன்றிணைக்கப்பட்டு, அவை அரசிக்கும் பின் சுகன்பிரதாபனுக்கும் அவரது மனைவிக்கும் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. அவற்றுக்கெல்லாம் தலைமையாக.. தலைவனாக இருந்தான் ஜலந்திரன்!!

 

 

 

 

 

கஞ்சனராம ரெட்டி அந்த அரண்மனையில் தான் இருந்தான். ஆனால் முன்புபோல் அவனுக்கு மட்டு மரியாதை எல்லாம் இல்லை. ஏற்கனவே மகனின் விஷயத்தில் அவனது மரியாதை போயிருக்க.. இப்போது அவனின் பழைய விஷயங்கள் வெளிப்பட்டு பதவியும் பறிபோனது. அரண்மனையில் இருக்கும் ஒரு பொருளை போலத்தான் அவனும் இருந்தான். ஆனால் உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த அந்த வன்மம் மட்டும் சற்றும் குறையவில்லை. தன் கண்ணெதிரே தன் மகனை.. அதுவும் ஒற்றை மகனை.. குல கொழுந்தை கழுவேற்றியவர்களின் வம்சத்தை கரு வறுக்காமல் ஓய்வு போவதில்லை என்று வன்மம் வைத்து காத்து இருந்தான்.. நாகப்பாம்பு என கஞ்சனராம ரெட்டி!!

 

அரசியின் மெய்க்காப்பாளரில் முதன்மையானவனாக ஜலந்திரனின் பெரும்பகுதி எப்பொழுதுமே ஹிரன்மாயி ஜெயத்ரியோடு தான்.

 

காலையில் அவள் குளித்து வெளிவந்து பூஜை செய்ய ஆரம்பித்தது முதல் அவள் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நிழல் என அவள் பின்னால் தான் பாதுகாப்பாக வந்தான் ஜலந்திரன்.

 

சுகன்பிரதாபனும் அதையேதான் விரும்பினார். பல நேரங்களில் பல சூழ்ச்சிகளில் இருந்தும் ஜலந்திரன் அவளை காப்பாற்றியதால்!!

 

அவனை ஏன் தன் மகளுக்கு மணாளனாக முடிக்க கூடாது என்று எண்ணமும் இருந்தது அவருக்கு.

 

 அதையே தன் மனைவியிடம் கேட்க அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி!! வேறு ஏதும் அரசனை மகள் மணந்தால் அவர்களை விட்டு பிரியவேண்டும். ஆனால் ஜலந்திரனை மணந்தால் அவனுக்கு தலைமை தளபதி பதவியை கொடுத்து உயர்த்தி விடலாம். இருவரும் நம் கண்ணெதிரே இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் நம் வாரிசுகளும் நம் வம்சத்தை ஆளும் என்று பல கனவுகளோடு அவர்கள் காத்திருக்க…

 

காலம் வேறு சோதனைகளை வைத்து அவர்களுக்கு காத்திருந்தது போலும்…

 

"அப்புறம் என்ன ஆச்சு நீலு?? இப்படி பாதி கதையோடு முடிச்சா மனுஷனுக்கு காண்டு ஆகுமா? ஆகாதா? ரெண்டு பேரும் சேர்ந்தார்களா இல்லையா? ஏற்கனவே சோமன் இறந்தவிட்டான். மிச்சமிருக்கிறது ஹிரன்மாயி மட்டும்தான். அவளும் இறந்தால் இந்த வம்சம் அப்புறம் எப்படி வந்திருக்கும்? ஏண்டி தலையில இருக்கிற நாலு முடியும் பிய்க்க வைக்கிற.. மீதியையும் சொல்லி தொலைடி!! இடையில் என்ன உனக்கு பிரேக் வேண்டி கிடக்கு!!" என்று அங்கலாய்த்தார் கொண்டலராவ்..

 

"இவ்வளவு நேரம் மூச்சு விடாம இவ்வளவு பெரிய கதையை சொல்லி இருக்கேன். கொஞ்சம் தாகத்துக்கு தண்ணி குடிக்க கூடாதா? அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவ்வளவு அவசரம்? கொஞ்சம் பொறுமையா இருங்க!!" என்றவர் கணவருக்கும் சேர்த்து பிரஷ் ஜூஸை வர செய்து அவரும் குடித்து கணவருக்கும் கொடுத்து அதன்பின் கதையைத் தொடர்ந்தார்.

 

ஹிரன்மாயிக்கும் ஜலந்திரன் நாட்டு மக்களுக்காக அவன் தன்னையே கள்வனாக மாற்றிக் கொண்ட விதமும்.. கள்வனாக மாறினாலும் கயவன் ஆகாமல் அவன் நடந்துகொண்ட கண்ணியமும்.. அவனின் வீரமும்.. புத்தி சாதுரியமாக சோமனை மாட்ட வைத்த விதமும்.. மிகவும் பிடிக்கவே செய்தது. ஆனால் அதையும் தாண்டி அவனை மணாளனாக ஏற்றுக் கொள்ள தந்தை சம்மதிப்பாரா? என்று பெரும் தயக்கம் அவளுள்!! அதை விட நாட்டு மக்கள் என்ன சொல்வார்களோ? என்று பெரும் பதற்றம்.. இப்படி ஒவ்வொன்றாக அவளை ஆட்கொண்டது. அதையும் மீறி அவ்வப்போது அவள் கண்களில் தெரியும் அந்த சிறு காதல் மயக்கம் ஜலந்திரனுக்கு தெரியாமல் மறைத்துக்கொள்வாள்.

 

ஜலந்திரனுக்கு இவளை பல்லாக்கு திரைமறைவில் பார்த்த கணத்தில் இருந்தே மனதுக்குள் தடம்பதித்து வந்தவள், சரிநிகர் சமமாக சமர் செய்ததில் மொத்தமாக அவன் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டாள். அதையும் தாண்டி அரசியை கைபிடிக்க அவனுக்குமே பெரும் தயக்கம்!!

 

 

இவனின் தயக்கம்..

 

அவளின் பதற்றம்..

 

எல்லாம் கானல் நீராகி போனது ஒரு கார்கால இரவில்.. 

 

காதல் வெளிப்பட்ட தருணத்தில்..

 

கந்தர்வ மணத்தில்!!

 

மன்னவனை தாங்கிய மலரினி அவனது மகவையும் தாங்கினாள் தனது ஆலிலை வயிற்றில்…

 

ஓரிரவு உறவில்..

 

இந்த விஷயம் அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தது!!

 

 

குலகுருவோ வரும் காலம் அவ்வளவு நல்ல விதமாக இல்லை. பல மரணங்கள் சம்பவிக்கலாம் என்று தனது ஞான திருஷ்டியில் உணர்ந்தார். ஜலந்திரனை அழைத்து அரசியின் பாதுகாப்பை பற்றி பேசி அனுப்பி வைத்தார். ஜலந்திரனும் தனது மெய்க்காப்பாளர் படைகளிடம் ஏற்கனவே கூறியது போல.. அரசியின் உயிரை காப்பாற்ற வேண்டியது அவர்களது கடமை!! அவ்வாறு இல்லையெனில் அரசியின் உயிருக்கு ஊறு விளைவித்தவர்களின் குடும்பத்தை கருவறுக்க வேண்டியும் சங்கல்பம் எடுத்தார்கள்.

 

ஹிரன்மாயின் கிரீடத்தில் இருக்கும் வைடூரியம் ஓர் அபூர்வ வைடூரியம்.

 

அது இருக்கும் வரையில் எவரும் செல்வ செழிப்போடு மட்டுமல்லாமல் பரந்த இவ்வுலகத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நம்பிக்கை..

 

அதைக் கண்டு கொண்ட அயல்நாட்டு மன்னன் சைதன்யன் தன் படைகளைத் திரட்டி இவர்களோடு போரிட முயன்றான். ஆனால் வீரமும் திறமையும் புத்திசாதுர்யமும் கொண்ட இவர்கள் படைக்கு முன் நிலைகொள்ள முடியாமல் பின்வாங்கி ஓடி விட்டான்.

 

அப்பொழுதுதான்.. ஹிரன்மாயி கர்ப்பம் வெளியில் தெரிந்தது. எனக்கு கந்தர்வ மணம் ஆகி விட்டது என்றும்.. இது என் காதலின் சாட்சி என்றும்.. அவள் தைரியமாக வெளியே சொன்னாலும் கணவன் யார் என்று சொல்லவில்லை.

 

 

இதில் நெஞ்சம் உடைந்தது ஜலந்திரனுக்கு. 'காதல் கொண்ட பெண்ணவளுக்கு கணவனாக நான் வேண்டாமோ?' என்று மனம் வெதும்பினான். அவளிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். ஆனால் எந்நிலைமையிலும் அவனாக அவளை நெருங்கவில்லை.

 

 

ஹிரன்மாயின் கர்ப்பம் கஞ்சனராம ரெட்டிக்கு வெறுப்பை தந்தாலும் அதே நேரம் அதை பகடையை உருட்டிச் சகுனியாகப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

 

அதன்படி..

 

"முறைகெட்ட வகையில் அரசி மகவை சுமக்கிறாள்!!"

 

"அரசன் எவ்வழியோ.. குடிகளும் அவ்வழியே!!"

 

என்று அந்நாட்டு பெண்களை சில காமுகர்கள் கை வைக்க முயன்றனர்.

 

முதலில் அவர்களை கழுவில் ஏற்றினாலும்.. அந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற இடத்திலும் பரவ.. அன்று காதலின் கந்தர்மணத்தின் சாட்சியாக தெரிந்தது.. இப்போது அனைவருக்கும் பிழையாகவே தெரிந்தது.

 

நாட்டுக்குள் ஒற்றுமை இருந்தால் எதிர்த்து வரும் எவரையும் சமாளிக்கலாம். நாட்டுக்குள்ளேயே புல்லுருவிகளாக சில விஷக்கிருமிகளை பரவ வைத்து நாட்டு மக்களிடையே ஒற்றுமையை பிளந்து அரசிக்கு எதிராக தூண்டி விட்டான், கஞ்சனராம ரெட்டி சைதன்யாவுடன் கைகோர்த்து.

 

 

"அரசியால் நாட்டு பெண்களுக்கு அவமானம்!! இவள் இருந்தால் நம் பெண்களை யாரும் நற்குடியில் பிறந்தவர்களாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!!" என்று பலதரப்பட்ட பேச்சுகள் வதந்தீகளாக பரவியது.

 

அதனிடையே சைதன்யாவும் பெரும் சைனியத்தையோடு அவர்களை வந்து சந்திக்க..

 

 

 

இம்முறை ஹிரன்மாயியை விடுத்து தான் மட்டுமே களம் புகுந்தான் ஜலந்திரன். போகும் போது மெய்க்காப்பாளர்களிடம் அவளை ஒப்படைத்தான். "எனக்கு எந்நேரினும் அரசியை பத்திரமாக பாதுகாப்பது உங்கள் கடமை!! அதுவும் அவர் வயிற்றில் வளர்வது தான் இவ்வம்சத்தின் ஒரே வாரிசு!! அது அழிந்தால் இவ்வம்சமே அழிந்து விடும்!! கவனம்!! அதி கவனம்!!" என்று பலவகையாக அவர்களிடம் கூறி தன்னவளை தனிமையில் சந்தித்தவன்,

 

 

 

"இனி ஒரு பிறவி நமக்கு இருந்தால் மீண்டும் உனக்கு காவலனாக தான் வருவேன் தேவி!! ஆனால் அந்த ஜென்மத்திலாவது நான் கள்வன் என்றாலும்.. காவலன் என்றாலும்.. எந்த தயக்கமும் இல்லாமல் என்னை ஏற்பாயா தேவி?" என்று கண்களில் காதலை தேக்கி கேட்கும் அவனை கட்டிக்கொண்டு கதறி விட்டாள் காதலியாக ஹிரன்மாயி!!

 

முதல் நாள் களத்திலேயே துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் விஷம் தொய்த்த அம்புகளாலும் தாக்கப்பட்டு வீர‌மரணம் எய்தினான் ஜலந்திரன்.

 

 

வஞ்சகத்தால் தன் மணவாளன் மாண்டதை கேள்வியுற்றவள், வீரபுத்திரியாக ஹிரன்மாயி ஜெயத்ரி வீராவேசத்துடன் தன் மக்கள் முன் நின்றாள்.

 

"காதல் ஒருவனைக் கைப்பிடித்து.. கந்தர்வன் மணம்புரிந்து.. அவன் வாரிசை சுமப்பது.. அவ்வளவு பெரிய குற்றமா என்ன? சத்திரியர்களான எங்களுக்கு கந்தர்வ மனம் உட்பட்டதே!! இதில் எங்கிருந்து பிழைத்துப் போனோம் நாங்கள்!! இத்தனை ஆண்டுகளாக என்னை நீங்கள் அறியவில்லையா?? என் தாய் தந்தையின் வளர்ப்பை புரிந்துகொள்ளவில்லையா?? ஆகட்டும்!!! ஆனாலும் இப்பொழுது போர் தொடுத்து வந்திருப்பவன் கள்வன் அல்ல.. கயவன் அவன்!! வருவதற்கு முன்னே இங்கு ஒவ்வொரு பெண்ணையும் தன் நீச செயலால் விலைமாதுவாக புனைந்துவிட்டான். அவன் வந்து இங்கே ஆட்சிபுரிந்தால் உங்கள் பெண்களின் நிலைமை என்னவாகும்??? யோசியுங்கள்!!! உங்களுக்காக போர் புரிந்த என் மணவாளன் ஜலந்திரரை... உங்க வஞ்சகத்தால் இழந்து விட்டேன்!! இனி இருப்பது நானும் என் வாரிசு மட்டுமே!! எங்களுக்கு எதுவாகினும் என் நாட்டு மக்கள் உங்களை விட மாட்டேன்!!" என்று வீராவேசத்துடன் அவள் பேச.. அங்கிருந்த மக்களுக்கு அப்போதுதான் ஜலந்திரன் யார் என்று புரிய.. அனைவரும் அவளிடம் மன்னிக்கும்படி இறைஞ்சினர்.

 

 

ஒற்றைக் கை அசைவில் அவற்றை புறந்தள்ளியவள், புகுந்தாள் போர்க்களத்தில் பெண் புலியாக!! ஆனால் இம்முறை அவளுக்கு பக்கபலமாக நாட்டு மக்களின் துணையும் இருக்க.. ஒரே நாளில் அனைவரின் துணை கொண்டு கயவர்களை விரட்டி அடித்தாள் வீர பெண்மணியாக!!

 

 

"அரசியாக நான் வெற்றி பெற்றாலும் ஒரு காதலியாக.. ஒரு மனைவியாக.. நான் தோற்றுவிட்டேன்!! நான் தோற்றுவிட்டேன்!! என் காதலில் தோற்றுவிட்டேன்!! என் மன்னவனை இழந்துவிட்டேனே…" என்று கதறி அழுதவள், என் மன்னவனை பறித்த இந்த அரியணை இனி எனக்குத் தேவையில்லை என்று அதன் பின் அரியணை ஏறவில்லை. 

 

 தன் கிரீடத்தை மட்டும் அரியாசனத்தில் வைத்தவள், ஜலந்திரன் வாழ்ந்த அந்த காட்டுக்குள் சென்று விட்டாள். அங்கேயே மகவை ஈன்றெடுத்தாள். தன் தந்தையிடம் சேர்ப்பிக்க சொல்லி வாரிசை மெய்க்காப்பாளர்களிடம் கொடுத்துவிட்டு, சமாதி நிலை அடைய.. அவளை குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர் அதன்பின் வந்த ரெட்டி வம்சத்தினர்!!

 

"அவ்வளவு தான்!! கஞ்சன ராம ரெட்டி அதன்பின் அங்குள்ள மக்களாலேயே விரட்டி விரட்டி கல்லால் அடித்து கொல்லப்பட்டானு செய்தி. ஹிரன்மாயி அம்மாளுக்கு அப்புறம் அந்த வம்சத்தில் முதல் குழந்தை மட்டுமே வாரிசு என்று முடிவு பண்ணாங்க.. பெரும்பாலும் ஒரு மகன்தான் பிறப்பான். சில சமயம் இரண்டு மகன் பிறந்தாலும் இரண்டாவது மகனுக்கு இந்த கதையை போதித்து அவனை வாரிசு உரிமை கோரக் கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்ப்பாங்க.. ஏன் என் தம்பிக்கும் அப்படித்தான்!! 

 

அதன்படி மூத்த வாரிசு பெண்ணாக பிறந்தாலும் கூட ஹிரன்மாயி அம்மாள் இறந்த அதே இருப்பத்திரெண்டாவது வயதுக்கு மேல் அந்த பெண் இருந்ததில்லை.. ஏன்னு எதுக்குனு காரணம் தெரியாது..‌

 

ஆனால் குலகுரு சொன்னது போல..‌ வேந்தன் வந்துவிட்டார்னா கண்டிப்பா இப்போ பிறந்திருக்கிறது அந்த ஹிரன்மாயி அம்மாளே தான்!! அவளை தேடி கண்டிப்பாக ஜலந்திரர் வரணும்.. இல்லை இவளே அவரை தேடி கண்டுபிடிப்பா. ஆனால் இவர்கள் கல்யாணம் நட

ந்தால் தான் இந்த வம்சம் பூர்த்தியாகும்!!" என்று அதுவரை இருந்த அக்கதையின் தாக்கம் அவரை ஆட்கொள்ள கணவன் தோளில் சாய்ந்து கொண்டார் நீலிமா..

 

ஜித்தேந்தர் ஜலந்திரனாக மாறும் காலம் வருமா??

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top