14
இன்று..
இருவரும் அந்த மகப்பேறு மருத்துவரின் முன் அமர்ந்திருந்தனர்.
வதனி தான் ஆரம்பித்தாள். “டாக்டர் டிஎன்சி பண்ண இன்னைக்கு வரச் சொல்லி இருந்திங்க?” என்றாள் கணவனை ஓரக்கண்ணால் பாரத்தவாறு..!
அவளின் டிஎன்சி என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்தான் நிரஞ்சன். கண்களை இறுக மூடியவன் இடது கண்ணின் ஓரம் ஒரு துளி கண்ணீர் திரண்டு வந்து, சட்டென கன்னத்தில் வழிந்தது.
‘மகனோ? மகளோ? இழக்க போகிறேனே?’ என்று நொந்தவன் காதில் “ப்பா.. ப்பா..” மழலை குரல் கேட்டது.
காட்சிபிழையோ இல்லை அவன் மனதின் எதிரொலியோ ஒரு சின்னஞ்சிறு குரல் தீனமாய் காதில் கேட்டது. அச்சின்னஞ்சிறு குரல் கேட்டவன் முகமோ சொல்ல வேணா துயரத்தில் துடித்தது.
இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார் அந்த மருத்துவர். அவரது வேலை அனுபவமும் வயதின் அனுபவமும் அடித்து சொன்னது டிஎன்சி செய்ய தந்தைக்கு விருப்பமில்லை என்று..!
“நீங்க டிஎன்சி பண்ணனும்னு கேட்டீங்க. நான் இன்னைக்கு வாங்கனு தான் சொன்னேன்மா. இன்னைக்கு பண்றேனு சொல்லல?” என்றார் புன்னகையோடு..!
“அது.. நீங்க.. இன்னைக்கு வரச் சொன்னதும்.. நான் அப்படினு நினைச்சேன்..!” என்று அவள் திக்கி பதில் கூற..
“அப்பாடியெல்லாம் சட்டுனு ஒரு உயிர அழிச்சிடமுடியாது மா” என்றவர் நிரஞ்சனுக்கு தெய்வமாக தெரிந்தார்.
‘ஈசனே..! என் குழந்தையின் ஆயுள் இன்னும் ஒரு நாள் இருக்கு.!’ என்று மகிழ்ந்தவன் ‘அவ்வாயுளை நீட்டிக்க முடியாத ஈசனே?’ என்று மார்க்கண்டேயர் தந்தை போல அப்பரம்பொருளிடம் வேண்டினான்..! இறைஞ்சினான்..! கண்ணீர் உகுத்தான்..! ஆனால் அனைத்தும் மனதினூடே..!
இருவரையம் அவதானித்த மருத்துவர் “நீங்க அவங்க கணவர் தானே? பிள்ளைக்கு அப்பா தானே? எடுத்து சொல்லுங்க உங்க வொஃப்க்கு.!”
“அது..” என்று மனைவி முகம் பார்த்தவன், “இல்ல டாக்டர். அவ இஷ்டம்..! அவளுக்கு எது சரின்னு படுதோ அதுவே செய்யட்டும்” என்றான் கலங்கிய குரலை செருமி மறைத்தப்படி..!
கணவனின் இந்த பேச்சு அவளுக்கு பிடித்தமில்லை என்பது போல.. முகத்தை கோபமாக சுழித்தவள், மருத்துவரை கருத்தில் கொண்டு தலையை குனிந்துக் கொண்டாள்.
“சரியான காரணம் இல்லாம.. டிஎன்சி செய்றது தப்பு. இப்ப கவர்மெண்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் ரொம்ப ஸ்ட்ரிட், அது கப்புள்ஸா இருந்தாலுமே.. ஏன்னா இல்லீகலா நிறைய இன்சிடெண்ட் நடக்குது. நாங்களும் டிஎன்சி பண்ணுனா அதுக்கான தகுந்த காரணத்தையும் அரசாங்கத்துக்கு அனுப்பனும். புரியுதா..?”
“ஆல்ரெடி எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா டாக்டர். எங்களுக்கு அவ ஒரு குழந்தையே போதும்..!” என்றாள் வழி கிடைத்துவிட்டது என்று அவசரமாக வதனி.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இரு கைகளையும் கோர்த்த மருத்துவர், “ரீசண்டா சோஷியல் மீடியாவில டிஎன்சி சம்பந்தமா ஒரு போஸ்ட் வைரலாகுது. ஆக்ட்சுவலி நான் அவ்வளோ பெரிய சோஷியல் மீடியா பார்க்குறவ கிடையாது. பட் சொல்லணும் தோணுச்சு.. இது ரொம்ப ஆப்ட் உங்களுக்கு..!
“உங்களுக்கு ஒரு குழந்தை மட்டும் போதுமா?”
“போதும் டாக்டர்.!” பதிலளித்தது வதனி தான். அதனையும் குறித்துக் கொண்டார்.
“அப்போ.. ஏற்கனவே இருக்குற குழந்தைய கொன்னுட்டு இந்த குழந்தைய பெத்துக்கோங்க..!” என்றார் நிதானமாக..!
“டாக்டர்..! மைண்ட் யுவர் வோர்ட்ஸ்.!” என்று நிரஞ்சன் சீற..
“டாக்டர்..!” என்று அதிர்ந்து அவரை பார்த்தாள் வதனி.
“அப்போ.. இது உங்க குழந்தை இல்லையா? இது மட்டும் டிஎன்சி பண்ண ஈஸியா வாய் வருது. ஆனா.. ஏற்கனவே உள்ள குழந்தையை சொன்னதும் அத்தனை பதறிங்க?” என்று நறுக்கென்று கேட்டதும் இருவருமே தலை கவிழ்ந்தனர்.
“இது தான் அந்த வைரலான போஸ்ட்..! ஒரு டாக்டர் கிட்ட டிஎன்சி பண்ண வர்ற பெண்ணிடம் அந்த டாக்டர் கேட்டது..! அதே தான் நானும் கேட்டேன்..!” என்று இருவருக்கும் சற்று நேரம் கொடுத்தார்..!
அவர்கள் யோசிக்க...! குழந்தை வேண்டுமென யாசிக்க..!
ம்ஹூம் இருவரும் வாயை திறக்கவில்லை..!
இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு “நீ வா மா.. மொதல்ல ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்திடலாம். இட் மே மீ அன் எக்டோபிக் ப்ரக்னென்சினா, ஐ வில் டு டிஎன்சி..” என்றார்.
“டாக்டர் எக்டோபிக் ப்ரக்னென்சினா?” அவசரமாக கேட்டான் நிரஞ்சன்.
“சம் டைம்ஸ் ஃபலோபியன் ட்யூபில் எம்ரியோ அதாவது கரு இருந்தா அது எக்டோபிக் கர்ப்பம் சொல்வாங்க. அதாவது கருவுற்ற முட்டை கருப்பையில வளராம முன்னரே உள்ள ஃபலோபியன் குழாயிலேயே இம்ப்ளாண்ட் ஆகி வளர ஆரம்பிக்கும். சிலருக்கு இது நிகழலாம். இது குழாய் கர்ப்பம்னு சொல்வாங்க.. அது போல இருந்தா அந்த கருவால அங்க வளர இயலாது. ஃபேலோபியன் டூயுப் ப்ர்ஸ்ட் ஆக வாய்ப்பு இருக்கு. மதர் அண்ட் பீட்டஸ் இரண்டு பேருக்குமே ஆபத்து. சோ.. அந்த மாதிரி சுட்வேஷன்ஸ்ல மதரோட ஹெல்த் கன்சிடர் பண்ணி நாங்க டிஎன்சி பண்ணுவோம்” என்றதும் வதனி பயந்தாலோ இல்லையோ நிரஞ்சன் பயந்து அருகே இருந்த அவளின் கையை இறுக பற்றிக் கொண்டான்.
அவனின் அழுத்தமான பற்றலே அவனின் பயத்தை எடுத்துக்காட்டியது. இதுவே பழைய அவனின் காதல் மனைவி மேகாவாக இருந்நிருந்தால்.. அவனின் கையில் அழுத்தம் கொடுத்து அவனின் பயத்தை போக்கி இருப்பாள். இவளோ அவனின் துரோகத்தை கண்டு வலியில் துடித்து இப்போது காண்பிக்கப்படுகிறது அனைத்து உணர்வுகளும் மரத்து போனவள் ஆயிற்றே..!
சட்டென பட்டென அவன் கையை தட்டி விட்டாள் மருத்துவரின் கவனத்தை கவராமல்..!
தான் அவளின் துணையை தைரியத்தை தேடும் போது அதனை நிராகரிக்கும் தன் மனைவியை வலியோடு பார்த்தான் நிரஞ்சன்.
அது இன்னும் இன்னும் வலித்தது அவனுக்கு..! ஆனால் அதே ரணத்தை தான் அவளுக்கு நாம் கொடுத்தோம் என்று எண்ணியவன் விழியோரம் மீண்டும் ஒரு துளி நீர்.. கண்ணீர்..!
“மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் ஆதவ் நிரஞ்சன்.. ஃபர்ஸ்ட் லெட் மீ செக் ஹர்.. ம்ம்ம்? வா மா?” என்று வதனியை அழைத்துச் சென்றார்.
என்னதான் குழந்தையை கலைக்க வந்தாலும் மனதின் ஓரம் குழ்நதைக்கு ஏதும் இருக்க கூடாது என்று முரணாக வேண்டியப்படி கணவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் வதனி.
அவனோ அவளை தவிப்பை புரிந்து வேகமாக எழுந்து வந்து அவளின் கையை அழுத்தமாக பற்றியவன், “டாக்டர் நானும் வர வா ஸ்கேனிங் ரூம்க்கு?” என்றவனை பார்த்து சிரித்த அவ்வனுபவ மருத்துவர், “வொய் நாட்? கம்.. கம்..! அப்பா நீங்க தாராளமா கூட இருக்கலாம்..!” என்றார்.
இருட்டான ஸ்கேனிங் அறையில் கம்ப்யூட்டர் ஒளித்திரையில் சிறுப்புள்ளியாக தெரிந்த கருவை காட்டி “இது தான் குழந்தை..! உங்க குழந்தைக்கு வயசு எண்பதைந்து நாள்..!” என்றதும் நிரஞ்சன் குனிந்த அந்த கம்ப்யூட்டர் திரையை உற்று பார்த்தான். கண்கள் கலங்கி திரையை மறைக்க, கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டவன்,
“எனக்கு இத ப்ரிண்ட் அவுட் எடுத்து தர முடியுமா?” என்று கேட்டவனிடம்..
“எஸ்.. அட் லாஸ்ட்..! ம்ம்.. வெயிட் பண்ணுங்க” என்றவர்,
“டு யூ வான்னா ஹியர் யுவர் சைல்ட் ஹார்ட் பீட்?” என்றதும் இருவரும் கண்களும் ஒன்றை ஒன்றை தழுவிக் கொண்டன..!
பின் மெல்லிய குரலில் “எஸ் டாக்டர்..!” என்றனர்.
இருவருக்கும் கேட்குமாறு அந்த லப் டப்பை சற்று வால்யூம் அதிகம் வைத்தார்.
‘லப்.. டப்..’ ‘லப்..டப்..’ ‘லப்.. டப்..’ என்று மெலிதாக என்றாலும் அழுத்தமாக கேட்ட அந்த இதய துடிப்பை கேட்டதும் வெடித்து கிளம்பிய அழுகையை வதனி அடக்க முயல.. நிரஞ்சன் அவ்வாறெல்லாம் முயலவில்லை.
கண்ணீர் கன்னங்களில் கரை புரள.. “சாரி.. சாரி டா பேபி.. அப்பாவ மன்னிச்சிடு..! அப்பா பண்ணுன தப்பால் தான் இன்னைக்கு உனக்கு இந்த நிலை. ஐ அம் சாரி பேபி..! ஐ அம் சாரி..!” என்று நிரஞ்சன் மனதுக்குள் மன்னிப்பு படலம் கேட்டு அழுக..
“தங்கமே.. உனக்காக நான் தவமிருந்த நாட்கள்ல வராம.. இப்ப போய் இந்த பாவி வயித்துல வந்திருக்கியே.! உன்னை என்னால ஏத்துக்க முடியாத நிலையில அம்மா இருக்கேன் டா..! என்னை மன்னிச்சுடு..! உன்னை தாங்குற.. உன்னை நல்லா கவனிச்சு உயிரு போல பாசம் கொட்டி வளர்க்குற வேற ஏதாவது நல்ல பேரண்ட்ஸூக்கு போய் பொறத்துக்கோ செல்லமே..” என்று வதனி தன் நிலையில் இருந்து விம்ம.. இருவரையும் கண்டுக்கொள்ளாமல் சிறிது நேரம் அந்த கம்ப்யூட்டர் திரையை வெறித்த மருத்தவர் “ஓகே.. நீங்க வெளியில் வெயிட் பண்ணுங்க” என்றார்.
முதலில் நிரஞ்சன் வெளியில் செல்ல.. அதன் பின் புடவையை சரி செய்துக் கொண்டு வதனியும் வெளியேறினாள்.
மருத்துவரின் வார்த்தைக்காக இருவரும் காத்திருக்க..
“இந்த குழந்தைய அபார்ட் பண்ணுனா உங்க வொய்ஃப் ஹெல்த்துகு டெரிபிலி பேட் அண்ட் யூட்ரஸ நீக்குற மாதிரி வரும்” என்றார்.
நிரஞ்சனுக்கு குழுந்தை உயிரோடு இருக்கும் என்று சந்தோஷபடுவதா? இல்லை மனைவியின் உயிரை நினைத்து கவலைப்படுவதா?
தொடரும்..
