தூகை 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

13

 

அன்று..!

“அப்புறம்.. மிர்ஸஸ் ஆதவ் நிரஞ்சன்.. உடம்பு இப்போ தேவலையா?” என்று கேட்டப்படி அறைக்கு உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

”எஸ் மிஸ்டர் மேகவதனி, உங்க புண்ணியத்துல பூரண குணமுங்க.. ” என்று பதிலளித்தாள் வதனி சோபையான முறுவலோடு.

”என் புண்ணியத்துல.. ம்ம் இருக்கட்டும்.. இருக்கட்டும்..!” என்று சிரித்தான் கணவன்.

”அவ்வளவு நல்லா என்னை கவனிச்சிட்டிங்க.. மிஸ்டர்‌ மேகவதனி” என்றாள் மனைவி மெச்சுதலாக..!

அவன் ஒரு மேடாவை இழுத்துப் போட்டு அவளின் அருகில் அமர்ந்தான். இரண்டு நாட்களாக மேகவதனிக்கு காய்ச்சல். ஆதவ் தான் இரண்டு நாளாக வீடு.. வங்கி.. மகள்.. அம்மா.. கூடவே காய்ச்சல் கண்டிருக்கும் மனைவி என்று பம்பரமாய் சுற்றி சுழன்று கவனித்தான்.

பிரேமா கூட முகத்தை சுழித்தார்‌ தான். “ஊர்ல இல்லாத அதிசயம் இவன் பொண்டாட்டிக்கு தான் காய்ச்சல் வந்துட்டு.. அதுக்கு இந்த பாடு படுத்துறானே?” என்று தாடையில் கை வைத்து அதிசயப்பட்டார்.

 உண்மையில்.. அந்த அதிசயத்திற்கு பின்னே நிரம்பி இருப்பது கொஞ்சம் நெஞ்சம் இல்ல நிறைய பொறாமை தான்..! இப்படி எல்லாம் தன் கணவன் தன்னை கவனிக்கவில்லையே?? தன் மகள்களை மருமகன்கள் கவனிக்கவில்லையே?? தன் மகன் மட்டும் மருமகளை விழுந்து விழுந்து கவனிக்கிறானே..!!

எனக்கும் என் மகள்களுக்கும் கிடைக்காத கணவனின் இந்த கவனிப்பு பாசம் நேசம் எல்லாம் மருமகளுக்கு மட்டும் கிடைக்கிறதே என்ற ஆற்றாமை தான்.

ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை நிரஞ்சன். வீட்டில் யாருக்கு உடம்பு முடியவில்லை என்றாலும் அத்தனை பாங்காக பார்த்துக் கொள்வாள் மேகவதனி. பிரேமா கூட சில சமயம் யோசிப்பார் இதை எல்லாம் நான் என் மாமியாருக்கு செய்தது கிடையாது என்று..! ஆனால் எல்லாம் மனதோடு மட்டும்தான்.

“அப்படி பார்த்துக் கொண்டவளை நாம எப்படி மா பார்த்துக் கொள்ளணும்?” என்று ஒரு முறை கேட்டே விட்டான் பிரேமாவிடம்.

வழக்கம் போல முகத்தை சுழித்துக்கொண்டு தன் அறைக்குள்ளே சென்றுவிட்டார். “ஏய் மிரு குட்டி நீ வந்து என் கூட படுத்துக்கோ.. உங்க அம்மாவுக்கு காய்ச்சல்.. அப்புறம் உனக்கும் வந்திடும்” என்று இடை சொருகல் வேறு.

தலையாட்டி சிரித்துக்கொண்டான் நிரஞ்சன் “இந்த அம்மா இருக்கே..” என்று..!

 மகளை அம்மாவோடு அனுப்பி வைத்துவிட்டு இரவில் மனைவியின் காய்ச்சலை கவனித்துக் கொண்டே தான் உறங்கினான்.

காலை சாப்பாட்டை அவனே அவளுக்கு ஊட்டிவிட்டான். அவள் சாப்பிட்டாள் கண்ணீர் வழிய.. “ச்சீ.. இது என்ன சின்ன புள்ள மாதிரி கண்ணுல உச்சா வுடுற” என்று அவன் கிண்டல் செய்ய..

“ஆமா.. ஆமா.. நீங்க டயப்பர் மாட்டி விடுங்க” என்றவள், முகத்தை சுருக்கி மூக்கை உறிஞ்சி சண்டையிட்டாள்‌ கணவனிடம் செல்லமாக..

அவள் சண்டையிடும் அழகை ரசித்து ரசித்து அவளது மூக்கிலும் கண்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான், அதில் காமம் இல்லை.. ஏன் காதல் கூட இல்லை அத்தனை அன்பு இருந்தது. அழகிய நேசம் இருந்தது..!

“என் மூத்த புள்ள டி நீனு..‌ சில சமயம் உனக்கும் மிருவுக்கும் வித்தியாசமே தெரிய மாட்டேங்குது டி” என்றான் வாஞ்சையாக..!

“போங்க.. போங்க.. பேசியே ஆள கவுக்க வேண்டியது” என்றதும் சிரித்துக் கொண்டே அவள் சாப்பிட்ட தட்டை எடுத்து சென்று சின்கில் போட்டவன் “நீ எதுவும் கழுவிட்டு இருக்காத ஈவினிங் நான் வந்து கழுவிக்கிறேன்” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

“ஆமாமா பாத்திரத்தை கழுவி வைச்சிடு, துணியையும் துவைச்சிடு, அப்படியே வீட்டையும் கூட்டி மாப் போட்டுடு” என்று கேலியாக சொல்வது போல சற்று கோபமாக உரைத்தார் பிரேமா.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல இடவலமாக தலையாட்டி சிரித்தவன் மனைவிக்கு காய்ச்சல் என்பதால் சோற்றை ஹாட்பாக்ஸில் வைத்து, மனைவியிடம்‌ கேட்டு கேட்டு ரசமும் செய்து அதை டேபிளில் வைத்தான். 

“பை டா மேகா” அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான். அவளது தாடையை நிமிர்த்தி அவளை காதலாக பார்த்தான். கண்கள் மூடியிருந்த அவளது உதடுகளில் மெல்ல முத்தமிட்டு விலகினான். 

“மறக்காம சாப்பிடுடா மேகா.. இன்னைக்கு கண்டிப்பா லீவு போடவே முடியாது டா, பேங்க்ல ஆடிட்டிங் இருக்கு” என்றான் நிரஞ்சன் வருத்தமாக..

இரண்டு நாட்களும் விடுப்பு எடுத்து தான் மனைவியை பார்த்துக் கொண்டான். ஆனால் இன்று கட்டாயமாக வங்கிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் மதியத்துக்கு மனைவிக்கு சாதமும் ரசமும் செய்துவிட்டு, அன்னைக்கு வெளியில் இருந்து அவருக்கு பிடித்த உணவினை ஆர்டர் செய்வதாய் சொல்ல “சரி.. சரி..” என்று முணங்கினார் பிரேமா.

மாலை முடிந்து இருள்‌ கவ்வும் இரவு நேரத்தில் தான் வீட்டிற்கு வந்தான் ஆதவ் நிரஞ்சன்.

வரும்பொழுது அத்தனை சோர்வாக இருந்தது. “ஐயோ.. அவளுக்கு வேற ஃபீவர் சாப்பாடு வெளியே வாங்கிட்டு வந்து இருக்கலாமே..!” என்று யோசித்தபடி ஒரு கையால் நெற்றியை பிடித்தப்படி மறு கையில் அவனது ஆபீஸ் பேக்கை வைத்துக்கொண்டு நின்றிருந்தவன் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்துப் பார்க்க..

புடவையில் பளிச்சென்று காட்சியளித்தாள் அவனின் மனைவி மேகவதனி..

“வாவ்.. பொண்டாட்டி..! அசத்துற..!! ஜுரம் விட்டுடுச்சா..??” என்றவன் அவள் கன்னம் கழுத்து என்று தொட்டு பார்க்க.. அவளோ சிரிப்போடு “அது வெறும் ஜூரம். ஆதவ் பொண்டாட்டி கிட்ட உரிமை காட்ட முடியுமா என்ன?” என்று அவள் ஒற்றை புருவம் உயர்த்தி அழகாக சிரிக்க..

“சிரிச்சு மயக்குறாளே..! எனக்கு வேற ஜூரம் வரமாதிரி இருக்குடி..! ஆனாலும் குறும்புடி உனக்கு..!” என்று அவள் மூக்கு பிடித்து ஆட்டியப்படி உள்ளே வந்தான். 

“நைட்டுக்கு சாப்பாடு வெளிய வாங்கிக்குவோம் மேகா.. இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடு” என்றான்.

அவனுக்கு குளிப்பதற்கு டவுலை எடுத்தபடி திரும்பியவள், “அதெல்லாம் ஒன்னும் வேணாம் சாம்பார் செஞ்சு வச்சுட்டேன். இட்லி அவசிக்கலாம்” என்று அவனிடம்‌ டவலை நீட்ட..

அவள் இடுப்பு சரிவு வழக்கத்தை விட சற்று அதிகமாகத் தெரிந்தது. பளபளப்பான இடுப்பின் மெல்லிய மடிப்பு அவனின் உணர்ச்சிகளை தாறுமாறாக ஏற்றியது. அவன் பார்ப்பதை அவளும் பார்த்தாள். அவன் லேசான தயக்கத்துடன் புன்னகைத்து, “தனியா குளிக்க பயமா இருக்கு.. நீயும் துணைக்கு வர்றியா?” என்று‌ கண்களில் குறும்பு கூட அவன் கேட்க.. அவளோ அவனை‌ முறைத்தாள்.

”ஐயா எதுக்கு கேக்குறீங்கன்னு எனக்கு தெரியாது? அதான் வந்ததிலிருந்து என்னை சைட்டிக்கறிங்களே.. என்ன?” நாக்கை வாய்க்குள் சுழற்றியபடி கேட்டாள்.

”உன்னை யாரு டி காலையில் போட்டு இருந்த நைட்டியை மாத்த சொன்னா? அதுவும் பளிச்சுன்னு இப்படி புடவை யார் கட்ட சொன்னா? அதுவும் வழக்கத்தை விட ரெண்டு இன்ச் கீழே இறங்கி இருக்கு?” என்று‌ அவள்‌ மெல்லிடையை அவன் தொட, கணவனின் தீண்டலில் அவளுள் ஒரு இன்பச் சிலிர்ப்பு கிளர்ந்தது. அது அவள் உடலெங்கும் பரவி அவள் மனதினை குளிரச் செய்தது.

“புடவைல தான் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க மேகா..” என்று அவளிடம் நெருங்கினான்.

“அப்போ மத்த டிரஸ்ல நான் அழகா இல்லையா?” என்று செல்லமாக முறைக்கும் மனைவியை பார்த்து வழக்கமான கணவனாய் திருத்திருத்தான் நிரஞ்சன்.

”எனக்கும் புடவை கட்டத்தான் புடிக்கும். ஆனா வீட்லயேதான இருக்கேன். அதனால அதிகமா கட்டுறதில்லை..!” என்றவளை கட்டிக் கொண்டவன், “இனி நானே கட்டி விடுறேன்.. அப்புறம் நானே..” என்று கண்ணடித்து நிரஞ்சன் விசமமாய் கூற,

பக்கத்தில் நின்றவனின் இரண்டு கைகளிலும் ‘ பட்.. பட் ‘ டென அடித்தவள், “கொழுப்பு.. கொழுப்பு..!” என்ற அவள் அடிகள் அவனுக்கு சுகமாக இருந்தது. அவள் அடிக்கும் போது அவளது முந்தானை ஒதுங்க, அந்த இடைவெளியில் அவளின் தெரிந்த செழுமையும் இடுப்பு மடிப்பும் படு கவர்ச்சியாக தெரிந்தது அவன் கண்களுக்கு.

அன்பான காதலான கணவனின் கண்களுக்கு அவன் மனைவி தான் உலக அழகி.. ரதிதேவி எல்லாம்..!

அவன் பார்வை எங்கே மேய்கிறது என்பதை உணர்ந்தவள், 

”எங்க பாக்கறிங்க.. எங்க பாக்கறிங்க?” என்று நிறுத்தாமல் அவனை அடித்தாள், 

சற்றே ஊடலாக..! அடுத்த கூடலுக்கான வினையாக..! 

அவர்களின் அந்த விளையாட்டு சில நொடிகள் தொடர.. சட்டென அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தான். நிரஞ்சன். அவ்வளவுதான் அடுத்த நொடியே பூ போல அவன் மேல் சரிந்து விழுந்தவளின் அதரங்கள், எந்த முயற்சியும் செய்யாமலே அவனின் அதரங்களோடு இணைய.. இரு இதழ்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டன..! வன்மையாய் உரசிக் கொண்டன..!

அதே நேரம்.. “ஆதவா…!” என்ற பிரேமாவின் பெரும் வலி நிறைந்த சத்தம்.. இணைந்த இதழ்களை பிரிய வைத்தது..! அவர்களை அதிர வைத்தது..!

பல அனர்த்தங்களுக்கு முன் எச்சரிக்கையாய் பிரேமாவின் அந்த அலறல்‌..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top