தூகை 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

12

 

இன்று..

“சிஸ்டர் இன்னைக்கு எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு டிஎன்சிக்காக..!” என்றதைக் கேட்டதும் அதுவரை குறுகுறு என்று உள்ளத்துக்குள் அப்படி இருக்குமோ? அப்படியாக தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்பார்ப்புகளை ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிந்தாள் நிரஞ்சனின் மனையாள்.

இரண்டாவது குழந்தைக்காக அவர்கள் இருந்த தவம் என்ன? எத்தனை வேண்டுதல்கள்? எத்தனை பிரார்த்தனைகள்? எத்தனை ஆசைகள்? எத்தனை அபிலாஷைகள்? அத்தனையும் இன்று கைகூடி வந்திருந்த நிலையில்.. ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டாளே ராட்சசி..!!

“பாவி.. எப்படி உன்னால் முடிகிறது? என்னால் தாங்க முடியலையே? மனம் வலிக்கிறதே..!” என்று கண்கள் கலங்க அந்த மருத்துவமனை அதிர மேகா என்று கத்தி இருந்தான் ஆதவ் நிரஞ்சன்.

அவளோ அவனை வெகு நிதானமாக திரும்பி பார்த்தவள் என்ன என்பது போல ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேட்டாள். 

என்னுடான வார்த்தைகளை கூட தவிர்ப்பவள். இனி வாழ்க்கை மட்டும் வாழப் போகிறாளா என்ன? ஒரு விரக்தி புன்னகை தோன்றி மறைந்தது ஆதவ் நிரஞ்சனிடம்.

ஆனாலும் தன் குழந்தையை தவறவிட அவன் விரும்பவில்லை. அது தனக்காக மட்டுமல்ல அவளுக்காகவும் தான். அவனை விட அவள் தானே இரண்டாவது குழந்தையை அதிகமாக எதிர்பார்த்து இருந்தாள். இன்று கையில் கிடைத்த ஆனி முத்தை கலைக்க போகிறாளே? என்று பெரும் கோபம் அவள் மீது..!

ஆனால் அதற்கு காரணமும் தான் தானே..! என்று கண்களை மூடி.. மூச்சுகளை இழுத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவன், “சிஸ்டர்.. நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சிஸ்டரிடம் சொன்னவன் கண்களோ வதனியை தான் துளைத்திருந்தது.

அவளோ யாருக்கோ வந்து விருந்தோ? என்னமோ பேசிக்கொள் என்பது போல நின்று இருக்க.. அவளின் கை பிடித்து இழுத்து அந்த மருத்துவமனை ரிசப்ஷன் ஓரம் அழைத்து சென்றான். 

“கையை விடு..! என்னை தொடாதனு உன்னை ஏற்கனவே சொல்லி இருக்கேன் தானே? கொஞ்சம் கூட உனக்கெல்லாம் அறிவில்லை.. விடு.. விடு.‌!” என்று அவள் சீற..

காரிடர் ஓரம் அழைத்து வந்து அவளது கையை விட்டவன் இரு கைகளையும் தூக்கி “ஓகே சாரி. இனி தொட மாட்டேன்..; ஆனால் ஏன் இப்படி? ஏன் டி இப்படி பண்ற? உனக்கு கொஞ்சம் கூட வலிக்கலையா?” என்று அவளிடம் கோபம் எடுபடாது என்று கெஞ்சலில் ஈடுபட்டான் கணவன். 

“வலிச்சது மிஸ்டர் நிரஞ்சன் ரொம்ப வலிச்சது இங்க..!” என்று தன் இதயத்தை தொட்டு சொன்னவள், “நீ செய்த காரியத்தினால் ரொம்ப வலிக்குது.. அதுக்கு முன்ன இதெல்லாம் ஒரு பெரிய வலியே இல்லை” என்றவள் முகத்தை திருப்பி வழிந்த கண்ணீரை அவனுக்கு தெரியாமல் சுண்டி விட்டாள்.

 ஆனால் அதை அவனும் கவனித்து விட்டவன் “ராட்சசி உனக்குள்ளேயும் குழந்தை மேல விருப்பம் இருக்கு அதையும் தாண்டி உனக்கு வீம்புடி..!” என்று மனதில் புழுங்கினான்.

“ஓகே அக்செப்ட்..! நான் தப்பு..! நான் தப்பு செஞ்சேன் தான். ஆனா அதுக்கான தண்டனை எனக்கு கொடு மேகா.. எதுக்கு நம்ம குழந்தைக்கு? வேணாம் மேகா சொன்னா கேளு.. பாவம் ஒரு பாவமும் அறியாத அந்த குழந்தை எதுக்கு தண்டிக்கிற ப்ளீஸ் டி..!” என்று அவன் கெஞ்ச..

“போதும் உங்க நடிப்பு எல்லாம். நான் ஒரு சிங்கிள் மதர் எனக்கு இருக்கிற வேலையில ஒரு குழந்தையை நான் வளர்க்கறதே பெருசு. இப்பதான் வேலை கிடைச்சிருக்கு. இந்த டயத்துல ப்ர்கனேட்னா அந்த வேலையும் எனக்கு நிலைக்காது. இப்போ இருக்கிற அதுவும் உயிரோடு இருக்கிற ஒரு குழந்தையை தான் என்னால பாத்துக்க முடியும். அதுவும் இல்லாம இந்த குழந்தை.. அதுவும் அந்த தருணத்தில்..” என்று கண்களை மூடி தன் வலியை அடக்கியவள், 

“எனக்கு இந்த குழந்தை வேணாம்.. வேணாம்..!” என்று கண்களில் கனல் தெறிக்க கத்தினாள்.

அவளின் அந்தக் கோபம் அவனை எரிமலையாய் சுட “ஓகே.. ஓகே.. கூல்..! இப்ப என்ன இந்த குழந்தை வேணாம் அவ்வளவு தானே? சரி நட..!” என்று முன்னே நடந்தவன் மனதெல்லாம் தங்களால் மரிக்கப் போகும் மகவின் நினைவுதான்..!

“ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்கறவங்க தானே பெற்றோர் உயிரை எடுக்கிறவர்கள் இல்ல டி..!” என்று திரும்பி அவள் முகம் பார்த்து அழுத்தமாக சொன்னவன் அங்கிருந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

ஆதவ் கண்களை மூடி சாய்ந்திருந்தான் சோஃபாவில்..!

மேகா அவன் அருகே  தான் இருக்கிறாள். ஆனாலும் அவளை அவனவள் என்று இப்போது சொந்தம் கொண்டாட முடியாது நிலை.‌.! ஒரு காலத்தில் அவன் தள்ளி அமர்ந்தாலும், அவனை இடித்தப்படி அவனருகே தான் அமர்ந்து கொள்வாள். ஆனால் இப்போது… பெரிய பெரிய இடைவெளி இருவருக்குள்ளும்… 

கண்களை இறுக்க மூடியவன் திறக்கவே இல்லை…!! திறக்க முடியவில்லை..! 

இருவருக்கமான இடைவெளியை நிரப்பக் கொள்ள அவன் ஆன மட்டும் முயற்சி செய்து விட்டான்.

“ம்ஹும்.. பிடி கொடுக்கவேயில்லையே  ராட்ஷஸி..! கொல்லற டி என்னை..! இப்படி அணு அணுவாக கொல்றதுக்கு ஒரேடியா கொன்னு டி..!” எல்லாம் மனதோடு மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தான். அவளின் தீர்க்கமான விழிகளைக் கண்டு ஆதவ் ரஞ்சனால் இப்பொழுது எல்லாம் பேச முடிவதே இல்லை.

“மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆதவ் ரஞ்சன் நெக்ஸ்ட் நீங்க..” என்ற அட்டெண்டர் கூப்பிட..

படக்கென்று கண்களை திறந்து தனக்கு எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தவளை பார்த்தான் ரஞ்சன். கண்களில் அத்தனை வலி..! 

‘கண்டிப்பாக உள்ளே போகத்தான் வேண்டுமா? வேண்டாமே..!’ என்று அத்தனை கெஞ்சல். ஆனால் அவளோ உறுதியாக அவனை பார்த்திருக்க.. 

பெருமூச்சு விட்டபடி அந்த மருத்துவமனையின் கைனக்காலஜிஸ்ட் அறையின் கதவை திறந்து பெரும் தயக்கதோடு அவன் முன்னே செல்ல.. எந்தவித தயக்கமும் இன்றி அவன் பின்னால் சென்றாள் வதனி, அவனின் மேகவதனி.

தூகையாகும்....


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top