தூகை 7

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

7

 

அன்று..!

“மிருக்குட்டி.. அங்க பாரு உன் மாமன..” என்று தன் முன்னால் வண்டியில் அமர்ந்திருந்த மகளிடம் அங்கே தள்ளி சாலை பாதுகாப்புக்காக நின்றிருந்த மேகவதனியின் தம்பியை சுட்டிக்காட்டினான் ஆதவ் நிரஞ்சன். அவன் விகர்த்தனன் சக்தி.‌!

“ஆமா பா.. மாமா..! மாமா…” என்று மிருக்குட்டி சத்தமாக அழைக்க.. திரும்ப பார்த்த அந்த ட்ராஃபிக் போலீஸோ குழந்தையிடம் காட்ட முடியாத கோபத்தை தன் அக்கா கணவனிடம் காட்டினான் தன் பார்வையில் கனலை தேக்கியப்படி..!

“என்ன மிருக் குட்டி உன் மாமன் கண்டுக்கவே மாட்டேங்குறாரு.. போலீஸ்காரர் ரொம்ப தான் பிகு பண்றாரே.. சூடா வேற இருக்கார் போல.. உன் மாமனோட சூட்ட குறைக்க கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாமா உன் மாமனோட?” என்று மகளின் காதில் கிசுகிசுத்தான் நிரஞ்சன்.

அவளும் மாமனுக்கும் மச்சானுக்கும் உள்ள அக்கப்போர் தெரியாமல் சந்தோஷமாக தலையாட்டினாள். மேதவதனி அவளிடம் இவன் தான் மாமா என்று அறிமுகப்படுத்தி இருக்கிறாள். சில முறை இவளும் விகர்த்தனனை பார்க்கும்போது மாமா என்று கூவி கையாட்டுவாள். பிள்ளையிடம் அக்கா மேல் உள்ள கோபத்தை காட்ட முடியாமல் புன்னகைத்துக் கொள்வான் அவன்.

இரண்டு ஒருமுறை மிரு அப்பாவின் வண்டியில் இருந்தே சாலையில் செல்லும் போது மாமா என்று சத்தமாக அழைப்பாள். திரும்பி பார்த்து நிரஞ்சனை முறைப்பவன் பேசாத கொஞ்சி விளையாடாத அக்கா மகளிடம் கோபத்தை காட்டா முடியாமல் மெல்ல புன்னகைப்பான். அதை வந்து குட்டி மேகாவிடம் கூறுவாள். அகமகிழ்ந்து போவாள் அவள் தம்பியை நினைத்து..!

சாலையில் வண்டியில் செல்லும் போது பார்ப்பதோடு சரி.. அருகே சென்று எல்லாம் மேகவதனியால் தம்பியிடம் பேச முடியாது. அவனது மிடுக்கும் உடையும் நெருங்க சொல்லாது. கூடவே அவன் கண்களின் நெருப்பும்.. அவள் மீதான குற்றமும்.. அவளுக்கு தன் தப்பின் வீரியம் புரிய பின்ன எப்படி தம்பியிடம் பேச? அவள் நெருங்கவே மாட்டாள். 

எப்போதாவது மகள் தம்பி பற்றி கூறும் போது அத்தனை ஆசையோடு கேட்பாள், கண்களில் வழியும் கண்ணீரோடு..! 

இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் மனைவியின் பிறந்த வீட்டார் அவளை ஏற்க மறுக்க.. அவளின் கண்ணீர் நிலை கண்டு தார்மீக கோபம் ஒன்று நிரஞ்சனுக்கு.

“அப்படின்ன பெரிய தவறு செய்து விட்டோம்? ஊரில் யாரும் செய்யாத தவறையா செய்துவிட்டோம்?” அதை தவறு என்று நினைத்தானே ஒழிய தப்பு என்று அவன் உணரவே இல்லை.

அதைத் தவிர காதலித்தது ஒரு குற்றமா? அவசர அவசரமாக திருமணம் செய்த காரணமும் அவர்கள் தானே? என்று தாங்கள் செய்த தவறு இன்னும் அவர்களை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது என்பதை அறியாமல்.. இன்னும் மாப்பிள்ளை கெத்து குறையாமல் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான் நிரஞ்சன்.

ஒருவேளை நாளை அவன் மகளுக்கும் திருமணம் நடக்கும்போது அப்போது மேகவதனியின் பெற்றோர் உணர்வுகளை புரிந்து கொள்வானோ என்னவோ? பெருவாரியான கணவன்மார்கள் இப்படித்தான்..! அப்பாவான பின்‌ தான் மனைவியின் பெற்றோரை பற்றியே புரிந்து கொள்ள முயல்கின்றனர்.

அதேநேரம் மச்சானை சாலையில் பார்க்கும்போது அவனிடம் ஏதாவது சீண்ட சொல்லி அவன் மனம் பிராண்டும்.

எப்பொழுதாவது தான் பார்ப்பான். அப்போது கூட அவனிடம் ஏதும் சீண்டாமல் வரமாட்டான். இல்லையென்றால் அன்றைய பொழுது அவனுக்கு நல்ல விதமாகவே ஓடாது.

இது ஒரு வகையில் தன் கோபத்தை காட்டும் விதம். ‘என் மனைவியை அழ வைப்பாயா நீ?’ என்பது போல..!

அவன் அக்காவை மணந்து இவன் தான் அவர்களை அழ வைத்து இருக்கிறான் என்பதை மறந்து விடுவான் நிரஞ்சன் அந்நேரங்களில்.

சிலசமயம் வேண்டுமென்று எதிர்பக்கத்தில் இருந்தால் விகர்த்தனன் நின்றிருக்கும் வழியாக வழியச் சென்று அங்கே பார்த்துக் கொண்டே நிற்பான். வதனியின் தம்பியும் அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே முனைப்பாக இருப்பான். 

“பார்றா மச்சானுக்கு வீம்பை..!” என்று சொல்லிக்கொண்டு வீட்டில் வந்து மனைவியிடமும் இரவெல்லாம் கூறி புலம்புவான்.

“மேகா.. ஆனாலும் உன் தம்பிக்கு இருக்கிற கெத்து இருக்கு பாரு.. மாப்பிள்ளைன்னு கொஞ்சமாவது மதிக்கிறானா? கஞ்சியை போலீசு சட்டைக்கு மட்டும் போடாமல் உள்ளுக்குள்ளேயும் கொஞ்சம் குடிச்சி இருப்பான் போல டி அப்படி விரைப்பாக நிற்கிறான்..!” என்று வேண்டுமென்று வம்பு இழுப்பான் மனைவியிடம் அவள் தம்பியை..

அவளுக்கு புசுபுசு என்று கோபம் வரும். “ஆமா நீங்க பெரிய வீட்டு மாப்பிள்ளை பாருங்க.. அவங்க தான் உங்கள ஜாதகம் பார்த்து.. நீங்க என்னை பொண்ணு பாக்க வந்து நாலு வித சடங்கு செஞ்சு 4000 பேரை கூப்பிட்டு பத்திரிக்கை வச்சு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.. உங்கள வீட்டு மாப்பிள்ளைனு‌ கொண்டாட..! நாமளா கல்யாணம் பண்ணிட்டு இப்போ அவனை போய் குறை சொல்லுவீங்களா? இன்னொரு தடவ என் தம்பியை எதாவது குறை சொன்னிங்க..” என்று மூக்கு கன்னங்கள் எல்லாம் சிவக்க உதடு துடிக்க தன் முன்னால் இன்று கேள்விகளாய் கேட்கும் மனைவியின் அழகை ரசிக்கவே அடிக்கடி இதுபோல் பேசுவான் ஆதவ் நிரஞ்சன்.

அதுவும் இன்று மகளை கூட கூட்டி வந்து.. மகள் கூடவே “மாமா பாரு.. மாமானு‌ கூப்பிடு.. மாமாட்ட பேசு..” என்று மகளின் காதில் கிசுகிசுத்துக் கொண்டு அங்க சிக்னலில் நின்று இருந்தான்.

சிக்னல் தாண்டி தான் வதனியின் தம்பி சில கான்ஸ்டபிள்கள் ஓட நின்று கொண்டு டூ வீலரில் வருபவர்களிடம் எல்லாம் ஹெல்மெட் லைசென்ஸ் எல்லாம் செக் செய்து கொண்டிருந்தான். 

“வாவ்.. ஒரு வாய்ப்பு கிட்டியதே மச்சான் கூட விளையாட..!” என்று சிரித்தபடி மகளின் காதில் “மாமா கூட விளையாடலாமா?” என்றதும் அவள் ஏதோ அப்பாவும் மாமாவும் பேசி விளையாட போகிறார்கள் என்று நினைத்து “சரி பா” என்று சந்தோசமாக தலையாட்டினாள்.

இவனை பார்த்ததுமே கான்ஸ்டபிள் திரும்பி தங்கள் அருகில் இருக்கும் இன்ஸ்பெக்டரை பார்க்க அவனோ “ஏன் சார்.. எம் மூஞ்ச மூஞ்ச பார்க்கிறிங்க.. எல்லாருக்கும் என்ன புரோசிஜரோ அதே பண்ணுங்க” என்று அவன் சற்று தள்ளி நின்று கொண்டான்.

அது ஏனென்றால் அருகே நின்று இருந்தால் அக்கா மகள் கண்டிப்பாக கூப்பிடுவாள் என்று தெரியும்..! அவளை புறக்கணிக்க சற்று பயம். அருகே அழைத்துப் பேச அதைவிட பயம்..! அதனால் எதற்கு வம்பு என்று தள்ளியே நின்று விடுவான் அவர்களிடம் இருந்தும்.. அவர்கள் உறவில் இருந்தும்..!

“இந்தாங்க சார்..!” என்று கான்ஸ்டபிளிடம் அவன் நீட்டிய லைசன்ஸ் காலாவதியாகி பல நாட்கள் ஆகி இருந்தது. அவர் தவிப்போடு நிரஞ்சனையும் தன் இன்ஸ்பெக்டரையும் பார்த்துவிட்டு.. பின் மெதுவாக விகர்த்தனனிடம் சென்று நிரஞ்சனின் லைசென்ஸை காண்பிக்க..

அவனும் திரும்பி மாமனை ஒரு பார்வை பார்த்தான் அவன் வேண்டுமென்றே சீண்டுவது புரிந்து “அவரை அனுப்பி விடுங்க..” என்று கான்ஸ்டபிளிடம் கூற, கான்ஸ்டபிளும் “நீங்க போகலாம் சார்” என்றார்.

“என்ன சார்.. யாருச்சும் நார்மலா லைசென்ஸ் காட்டினாலே அது இதுன்னு சொல்லி எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு தீட்டுவீங்க.. இன்னைக்கு எக்ஸ்பயரியானது தான் கொடுக்கிறேன். அப்படியும் நீங்க போக சொல்றீங்க? பார்ரா..! ஓ மாமானுக்காக இன்ஸ்பெக்டர் கர்சன் பார்க்கிறாரா?” என்று நிரஞ்சன் சீண்ட..

சட்டென்று தன் கையில் வைத்திருந்த டேபில் எதையோ தட்டி கான்ஸ்டபிளிடம் காட்டி, அதை நிரஞ்சனிடம் காட்ட சொன்னான் விகர்த்தனன். அதில் நிரஞ்சனின் சமீபத்திய லைசென்ஸ் இடம் பெற்றிருந்தது. “பார்றா‌.. மச்சான..!” என்று வாய் பிளந்தவனை பார்த்து இப்போது நக்கலாக சிரித்தான் விகர்த்தனன்.

ஆனால் அப்போதும் விடாமல் ”பரவால்ல மாமன் தான் வேணாமா இருந்தாலும் மாமனை பத்தின ஃபுல் டீடைல்ஸ் பக்காவா அப்டேட் பண்ணி தான் வச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் மச்சான்” என்று கான்ஸ்டபிளிடம் கூறியவன் அவ்விடம் விட்டு விரைந்தான் நிரஞ்சன் புன்னகைத்துக் கொண்டே.. கூடவே மகளிடமும் கிசுகிசுத்துக் கொண்டே..!

போகும் மாமனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தான் விகர்த்தனன்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top