காதலி 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 11 

 

 

"வாங்க வாங்க இளவரசி.. 

ரெட்டி வம்சத்தின் பெண்ணரசி!!"

 

என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் ஸ்ரீ வத்ஸவ் ராஜூ. வாஹினியின் அத்தை மகன்! நீலிமா ராஜூவின் ஒரே சீமந்த புத்திரன்!!

 

 

முதலில் சற்றே அதிர்ந்தாலும் பின்பு தன்னை சமாளித்துக் கொண்டாள். ஏனென்றால் அன்பு வைத்தவனே பொய்த்து விட்ட போது.. இனி யாரையும் நம்ப கூடாது!! எந்த புற்றில் எந்த பாம்பு வேண்டுமானாலும் இருக்கலாம்!! என்று ஒரு திடமான முடிவுக்கு ஏற்கனவே வந்திருந்தாள் வாஹினி!!

 

 

ஆனால் சிறு வயதிலிருந்தே வத்ஸவை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள். இந்த அளவுக்கு இவனுக்கு தைரியம் இருக்கிறதா என்ன? இல்லை இவன் மட்டுமே செய்திருக்க முடியாது!! இவனுக்கு பக்கபலமாக வேறு ஒருத்தரும் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள். ஆனால் மறைந்திருக்கும் அந்த முகம் தெரியா மற்றொரு எதிரியை வெளிக்கொண்டுவர வேண்டும் எனில் இவனை சற்று தூண்டும் படி தான் பேச வேண்டும். கூடவே இவனைப்பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

 

 

"முதல்ல என் கண்ணு கட்டை கழட்டி விடு வத்ஸவ்.. அதுதான் உன் இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டியே?" என்று நிதானமாக கூறியவளை நம்பாமல் பார்த்தான் வத்ஸவ்‌. அவன் அறிந்தவரை வாஹினி இவ்வளவு நிதானம் கிடையவே கிடையாது.

 

 

அதே சமயம் அனைத்தும் தெரிந்த விட்டபோதிலும் இனி கண் கட்டை அவிழ்ப்பதில் என்ன பிரச்சனை என்று நினைத்தவன் அவளது கண் கட்டை அவிழ்த்து விட உத்தரவிட்டான்.

 

"ஏய் பால் டப்பா.. இருந்தாலும் உனக்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது. என் கண் கட்டையும் சேர்த்து அவிழ்த்துவிட சொல்லலாம் தானே?" என்று புலம்பியவன்.. "அடேய் தடிமாடுகளா!! என் கண் கட்டையும் கழட்டி விடுங்கடா!!" என்றான் ஜித்து.

 

 

"டேய்.. இவனையும் ஏண்டா கூட்டிட்டு வந்தீங்க? இவனுக்கு கொடுக்கவேண்டிய காசை எல்லாம் கொடுத்தாச்சு தானே!! பின்ன எதுக்கு இங்க தள்ளிட்டு வந்தீங்க?? வேஸ்ட் லக்கேஜ்!!" என்று தமிழில் கேட்டு முகம் சுளித்தான் வத்ஸவ்.

 

 

'நாங்க எங்க இவன தள்ளி விட்டு வந்தோம்.. இவன் தான் எங்களை தள்ளிட்டு வந்தான்!' என்று தொண்டையில் கத்தி குத்து வாங்கிய அந்த அடியாள் தன் போல முனகி கொண்டான் ஓரக்கண்ணால் ஜித்துவை பார்த்து.

 

 

ஆனாலும்.. கழட்டி விடட்டுமா? என்று தன் முதலாளியை அவன் பார்க்க.. அவனும் கையசைத்து கழட்டிவிட சொல்ல.. அவனது கண் கட்டை கழட்டி விட கண்ணை நன்றாக கசக்கி பார்த்தவன் தன் முன்னால் நின்றிருந்த வஸ்தவை பார்த்து அவனிடம் நெருங்க.. மற்றவர்கள் எல்லாம் பயந்து அவனுக்கு அரணாக சுற்றி நின்று கொள்ள..

 

"அடச்சீ.. தள்ளுங்கடா!!" என்று மற்றவர்களை தள்ளிவிட்டவன், வத்ஸவ் முன்னாலயும் பின்னாலயும் சுற்றி சுற்றி பார்த்தான். பிறகு அந்த இடத்தை மீண்டும் சுற்றிப் பார்த்து ஏதாவது கேமரா வைத்திருக்கிறார்களா என்று பார்க்க.. அப்படி ஒன்றும் இல்லை. ஆனாலும் தன் போல மேலே பார்த்து யோசித்தான்.. பின் கீழே பார்த்து யோசித்தான்.. 

 

"இவ என்னடா ஏதோ பைத்தியம் மாதிரி செய்கிறான்??" என்று கோபத்தோடு அவனை அழைத்து வந்தவரிடம் வத்ஸவ் கேட்க… வாஹினியும் புரியாமல் விழித்தாள்.

 

"தெரியல பாஸ்!!" என்று அவனும் உதட்டைப் பிதுக்க..

 

"எதுக்குடா இப்படி சீன போட்டுட்டு சுத்தற நீ??" என்று கேட்டவர்களிடம் "ஆமா.. என்கிட்ட பேசின ஆள் நீ கிடையாது. அந்த பேச்சிலேயே ஒருவித அதிகாரமும் ஆளுமையும் இருந்துச்சு. ஆனா உன்ன பார்த்தா ஃபீடிங் பாட்டில் குடிக்கிற புள்ள மாதிரியே இருக்கு" என்று அவன் முகிழ்த்த சிரிப்பை வாய்க்குள் அடக்க படாத பாடு பட்டான்.

 

 

'ஏற்கனவே நான் பால் டப்பா.. இவன் ஃபீலிங் பாட்டில் கிட் ஆ! நல்லா வைக்கிறான் பட்ட பேரு!' என்று வாஹினிக்கும் சிரிப்பு வர, அதை மறைத்து கோபத்தோடு முறைப்பதை போல நின்றிருந்தாள்.

 

 

"ஏன்?? என்னை பார்த்தா உனக்கு இந்த ப்ளானுக்கு ஸ்கெட்ச் போட்டவன் மாதிரி தெரியலையா?" என்று நக்கலாக வத்ஸவ் கேட்க.. அதைவிட நக்கலாக "பார்த்தா தெரியலையே!!" என்றான் ஜித்து.

 

 

"சரி அதெல்லாம் விடு!! நீ யார வேணா இருந்துட்டு போ?? யாரோ பிளான் போடறாங்க.. அதை யாரோ செய்கிறாங்க.. யார் பேரோ மாட்ட போகுது எனக்கு என்ன வந்தது? நான் என்ன கேட்டேன் ஒன்றரை கோடி டாலர் தானே கேட்டேன். ஆனா நீங்க என்னடா ஒன்றரை கோடி இந்தியன் மணியில அனுப்பி வச்சிருக்கீங்க. ஒழுங்கா நான் கேட்டது கொடுத்துட்டு அப்புறம் மேலும் இந்த பால் டப்பா மேல கைய வை!!" என்றான் ஜித்து, வாஹினி தோள் மீது கை வைத்து ஒய்யாரமாக சாய்ந்தாவாறு..

 

"பால் டப்பா??" என்று‌ புரியாமல் பார்த்த வத்ஸவிடம் வாஹினியை அவன் காட்ட.. அவளோ அவனை முறைத்தாள்.

 

 

வாஹினி என்ன நினைத்தாளோ.. அதைத்தான் ஜித்து செய்கின்றான் என்று அவனது பேச்சில் இவளுக்கு புரியவே இல்லை.

 

"இவளை எங்களிடம் கொண்டுவந்து கொடுத்ததற்கு உனக்கு ஒன்றரை கோடியே ஜாஸ்தி. இதில் உனக்கு அமெரிக்க டாலர் வேற வேணுமா? ஒழுங்கா கொடுத்ததை வாங்கிட்டு போய்கிட்டே இருந்தேன்னா உயிருக்கு கேரன்டி!! இல்ல டாலர்தான் வேணும்னா உன் போட்டோவ டாலரா மாட்டி தான் வைக்கணும்" என்று இகழ்ச்சியாக கூற.. மற்றவர்களும் ஜித்துவை பார்த்து சிரித்தார்கள்.

 

 

"என்ன?? என்னை பாத்தா அவ்வளவு லூசா வா இருக்கு?? நீங்க ஒன்றரை கோடி டாலர் தரேன் சொன்ன போதே இவளைப் பற்றிய பேக்ரவுண்ட் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன்!! அப்படியும் உன்னை நம்பி.. அதாவது உங்க வாக்கை நம்பி இவளை கொண்டு வந்து விட்டேன். ஆனால்... நீ என்னை ஏமாத்திட்ட.. அதுக்கு ஃபைனா இன்னும் ஒரு 50 ஆயிரம் டாலர் சேர்த்து இரண்டு கோடி டாலராக என் கையில நீ கொடுக்கணும்!! அதை விட்டுட்டு சும்மா பேச்சு பேசுற.." என்று இவன் வளைந்து நெளிந்து நெளிவு எடுக்க..

 

அதற்கு வத்ஸவ் "உனக்கெல்லாம் ஒன்றரை கோடியே ஜாஸ்தி டா?" என்று உறுமினான்..

 

 

"இவளோட சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா? நீ குடுக்குற அந்த ஒன்றரை கோடி டாலர் கூட இவளோட ஒரு‌வார டேர்ன் ஓவர் தான்.. உனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்! நான் பால் டப்பாவ கூட்டிட்டு போறேன்" என்றவன் வாஹினி புறம் திரும்பி, "வா பால் டப்பா.. போகலாம்!" என்று அவனை கை பிடிக்க முனைய அதற்குள் அங்கிருந்தவர்கள் அவனை சுற்றி வளைத்தனர்.

 

 

அவன் ஒவ்வொரு வரையும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க.. "நீ இருக்கிறது என்னுடைய இடம்! சுத்தி நிற்கிறது என்னுடைய ஆட்கள்!! இங்கிருந்து என்ன.. என் உதவி இல்லாமல் இந்த அறையை விட்டு கூட உன்னால் போகமுடியாது.. இதுல நீ அவளை கூட்டிட்டு போறியா? அந்த ஒன்றரை கோடி கூட உனக்கு கிடையாது. இவளோட டேர்ன் ஓவரை சொல்றேன்னா.. எந்த அளவுக்கு உனக்கு விஷயம் எல்லாம் தெரிந்து இருக்கும். அதனால இனி நீ இருக்க வேண்டிய இடமே வேற.." என்று விசில் அடித்தவன் மேலே கண்ணை காட்டி கூறினான்.

 

ஜித்து அசராமல் அப்படியே அவனை பார்த்து இருகைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்ட படி நின்றிருந்தான். வத்ஸவ் சொல்ல சொல்ல வாஹினிக்கு நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. அவன் சொல்வது உண்மைதானே? எங்கே இருக்கிறார்கள்? என்று இவளுக்கு தெரியாது. அப்படி இருக்க எந்த தைரியத்தில் இவன் பேசுகிறான். எதிர்த்து நின்ற ஆட்களை அடித்து போட முடியும். ஆனால் பெரிய பெரிய ஆயுதங்களோடு.. கண்ணுக்கு மறைவா இருப்பவர்களை என்ன செய்ய முடியும்?? அது தெரியாம இவன் பேசுறானே.. மர மண்டை.. மர மண்டை!!' என்று மனதில் எழுந்த பயத்தை அவள் கண்கள் காட்டிக் கொடுக்க..

 

 

அதைப்பார்த்த ஜித்துவோ மனது உல்லாசமாக இருக்க.. அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்து சிரித்தவன் பறக்கும் முத்தத்தை தன் உதடுகளை குவித்து பறக்கவிட்டான் யாருமறியாமல்..

 

 

"கொழுப்பு.. கொழுப்பு.. இன்னும் அவன் பின்னாலேயே நான் போறேன்ற கொழுப்பு.. போடா.. போடா!! அதெல்லாம் எப்பவோ முடிந்த கதை. இனி உன்னை திரும்பி பார்ப்பேனா நான்?" என்று கோபத்தோடு இவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அதற்கும் ஒரு உல்லாச சிரிப்பே இவனிடம்.

 

 

"என்னடா?? கொஞ்சம் கூட பயமில்லாம அப்படியே நிக்குற! சொன்னதை செய்ய மாட்டோம்னு நினைச்சியா?" என்று தெனாவட்டாக கேட்டான் வத்ஸவ்.

 

 

ம்ப்ச்.. ம்ப்ச்… என்று தலையை சரித்து கண் சிமிட்டி சிரித்தான் ஜித்து.

 

"இவ்வளவு தூரம் ஒருத்தன் நம் முன்னாலேயே தைரியமாக நின்று பேசுகிறான் என்றால்.. சரியான பிளானோடு இல்லை பக்கபலமாக ஆட்கள் இல்லாமல் வந்திருப்பானா?" என்று கூறிக்கொண்டே உள்ள அறையில் இருந்து வெளியே வந்தான் நாக பிரசாத் சவுத்ரி.

 

 

"அண்ணா!!! வணக்கமுங்க!!!" என்று அவனைப் பார்த்ததும் இரு கைகளையும் மேலே தூக்கி பெரிய கும்பிடு போட்டான் ஜித்து.

 

"இப்ப தெரியுதா ஏன் வந்தவுடனே சுத்திமுத்தி பார்த்து நீ சரியான ஃபீடீங் பாட்டில் பேபினு சொன்னேனு? சால தெலுசா??" என்று சிரித்தான்.

 

 

முகம் சிவக்க அவமான குன்றலுடன் முகத்தை திருப்பிய வத்ஸவ், அருகே நின்ற நாக பிரசாத்திடம் "நான் தான் இதை டீல் பண்ணிக்கிறேன் என்று சொன்னேன்ல.. உன்னை யார் இடையில வர சொன்னது?" என்று எரிந்து விழுந்தான்.

 

"இவ்வளவு நேரம் உன்னை விட்டு டீல் பண்ண தானே சொன்னேன். எங்க டீல் பண்ண.. அவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற. இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் ஒன்னு பலத்தால ஆட்களை கொண்டு அடிக்கணும். இல்லை பண பலத்தை கொண்டு அடிக்கணும். ஆள்பலம் அவனிடம் எடுபடவில்லைனா அப்போ பண பலத்தை கொண்டு அடிக்கிறதுதான் புத்திசாலித்தனம்!! நீ என்னடானா போயும் போய் அவன்கிட்ட பிச்சைக்காரன் குறையா டீல் பேசிகிட்டு இருக்க.. நமக்கு வரப்போவது எவ்வளவு பெரிய தொகை தெரியுமா? அது எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. ஆனால்.. பிசாத்து காசு அதை கொடுக்க இப்படி நீ யோசிச்சு கிட்டு இருக்க?" என்று அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு கனல் கக்கும் பார்வையால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தான் வார்த்தைகளில் நாக பிரசாத் சவுத்ரி!!

 

 

நாக ப்ரசாத் சவுத்ரி!! அப்படி ஒன்றும் வாஹினியின் அழகில் மயங்கி அவளை கட்டிக் கொள்ள ஆசை கொண்டு எல்லாம் அவளின் சித்தப்பா சோமையாவை இவன் வளைத்துப் பிடிக்கவில்லை. அவனின் காரணம் முழுக்க முழுக்க அவளால் அவனுக்கு கிடைக்கப்படும் பணமும் பதவியும் பகட்டும் தான்.

 

 

தென் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆளுமையும் அதிகாரமும் பணபலமும் படைத்த குடும்பங்களில் இவர்களது குடும்பமும் ஒன்று. 

 

 

அதனால்தான் தன் சமூகத்தை விட்டு வேறு ஒரு சமூகத்தில் இருக்கும் இவளை திருமணம் செய்ய முடிவெடுத்தான். அதற்காக அவன் பார்த்த வேலைகள் எல்லாம் கொஞ்ச நஞ்சமில்லை. கடந்த ஒரு வருடமாக அவள் சித்தப்பாவிடம் பேசி மயக்கி.. கனவான் போல கச்சிதமாக பல காய்களை எல்லாம் நகர்த்தி.. அவள் பிறந்த நாளின்போது திருமணம் பேசலாம் என்று முடிவை அவரை எடுக்க வைத்து.. இவன் வந்திருந்தால்… அவனுக்கு முதல் எதிரியாக வந்து நின்றான், வத்ஸவ் முறை மாப்பிள்ளை என்ற பெயரில்!!

 

 

இரண்டு நிமிடம் பேசியவுடனே தெரிந்துவிட்டது, இவனெல்லாம் எடுப்பார் கைப்பிள்ளை என்று!! எடுத்து கொஞ்சம் பேசினாலே நாம் வளைத்து விடலாம் என்று. அதன்படி பேசி பேசி.. அவளை கல்யாணம் செய்து கொள்வதை விட அவள் மூலம் கிடைக்கும் சொத்துக்களை அவனுக்கு தருகிறேன் என்று கூறி இருந்தான்.

 

 

அப்படி எடுத்த உடனே வத்ஸவ் ஒத்துக்கொள்ளவில்லை. இவன் பேசிப்பேசி கரைத்து இருந்தான். "எப்படியும் என்னை மீறி உன்னால் அவளை தொடக்கூட முடியாது! அப்படி இருக்கும்போது கிடைக்கும் சொத்தையாவது பெற்றுக்கொள்!" என்று.. 

 

 

காத்திருந்து ஏமாந்து போகும் இலவு காத்த கிளி போக இல்லாமல் கிடைக்கும் சொத்தை வைத்து நல்லபடியாக வாழலாமே என்று அவனுக்கும் குறுக்கு புத்தி ஒட்டிக்கொள்ள.. நாக பிரசாத்தோடு கை கோர்த்துக் கொண்டான்.

 

 

அரண்மனையில் நடக்கும் அனைத்து ரகசியங்களையும் நாக பிரசாத் கொடுத்து இருந்த மற்றொரு போன் மூலம் அப்படியே அவனுக்கு கூற.. 

ஜித்துவிடம் அவள் இருப்பதை ஈசியாக கண்டுகொண்ட நாக பிரசாத்.. முதலில் அவளின் பெயரை கெடுத்துவிட்டு பின்பு தானே பாவம் பார்த்து அவளது அன்னைக்காக.. குடும்பத்துக்காக வாழ்க்கை தருவது போல வாழ்க்கை கொடுத்து அனைத்தையும் வளைத்து பிடித்து கொள்ளலாம் மலை பாம்பை போல என்று வெகுவாக திட்டம் தீட்டி.. கன்னம் வைத்து காத்திருக்க.. இந்த கள்வனோ அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவளிடம் நெருங்கவே முடியாதப்படி வைத்திருந்தான் நாக ப்ரசாத்தை.

 

 

ஏதோ அவனுக்கு பணத்தின் மீது பேராசை இருந்தது. அதை வைத்து அவனை பணத்தாலே அடித்து வீழ்த்தி தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ளும் புத்தி கூட இல்லாத இவனெல்லாம் எப்படி ஒரு தலைமையை கட்டிக் காப்பான் என்று அவ்வளவு ஆத்திரமாக வந்தது நாக பிரசாத்துக்கு வத்ஸவின் மீது!!

 

 

"இன்னும் இவனை பேச வைத்து இருந்தால் அனைத்தையும் உளறி வைத்திருப்பான் போல.. இடியட்!! இடியட்!!" என்று உள் அறையில் இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு கொண்டிருந்தவன் அதற்கு மேல் தாங்க முடியாமல் தான் வெளியில் வந்து விட்டான்.

 

 

வெளி வந்த நாக பிரசாத்தை கண்களாலேயே எரித்து பேசினான் வத்ஸவ். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் பிரசாத் இல்லை.

 

 

"முட்டாள் மாதிரி என்னை முறைச்சிட்டு இருக்காத வத்ஸவ். இவ்வளவு தூரம் அவன் பேசுறான்னா.. பின்னாடி ஆள் வைத்திருக்காமல் இங்கு வந்திருக்க மாட்டான். இப்போ நமக்கு காசு முக்கியம் இல்ல. பொண்ணு தான் முக்கியம். அதனால் அவன் கேட்கிற பணத்தை தூக்கி எறிஞ்சு அவனை இங்கிருந்து அனுப்புற வழியேதான் நாம பாக்கணும். எங்க மோதனுமோ அங்க மோதணும்!! எங்க பதுங்கணுமோ.. அங்க பதுங்கணும்!!" என்று அவன் நீண்ட உரையாற்றி ஒத்த பார்வை பார்க்க அவனும் சரி என்று ஒத்துக் கொண்டான்.

 

 

"சரி ஜித்து.. நீ கேட்ட படி உனக்கு இரண்டு கோடி ரூபாய் டாலர்வே நான் தரேன். ஆனா எங்கள பத்தி என்ன ஆதாரம் வச்சிருக்கியா அது எல்லாத்தையும் கொடுத்துவிடனும்" என்று இவர்கள் நூல் விட அதிலெல்லாம் மாட்டிக்கொள்ளும் ஊசியா ஜித்து??

 

 

"அது எப்படி உங்கள நம்பி தர முடியும்? நான் கேட்ட போதே பணம் கொடுத்து இருந்தீங்கன்னா பிரச்சனை எல்லாம் முடிஞ்சு இருக்கும். என்னை ஏமாத்த நினைச்சா.. அதுவும் நியாயம் கேட்க வந்த என்னை போட்டு தள்ள பார்த்த உங்க கிட்ட இன்னும் எந்த நம்பிக்கையில் எல்லாத்தையும் கொடுக்க.. நீங்க என்னை என்னவேண்டுமானாலும் செய்ய நினைக்கும் போது பாதுகாப்பு எனக்கு முக்கியம் தானே?" என்றான்.

 

"பாத்தியா நீ செய்த வேலையால் வந்த ஒரு புது எதிரியை!" என்று வத்ஸவை நாக பிரசாத் குற்றம் சாட்டினான்.

 

"உனக்கு செக்கா தரவா இல்ல உன் பேங்க்ல போடவா?" என்று கேட்க "எதுக்கு பின்னாடி போலீஸ அனுப்பி புடுங்க வா!! எனக்கு போஸீன்னா அலர்ஜி!!" என்றான் ஜித்து.

 

 

"சரி கேஷாவே தரேன். ஆனா அதை ஒரு ஆள் வந்து உன்கிட்ட கொடுப்பான்.. அதேபோல உன்கிட்ட உள்ள ஆதாரத்தையும் நீ கொடுக்கணும். இப்போ!" என்றான் ப்ரசாத்.

 

 

"டீல்!!" என்ற ஜித்து தன் கையில் இருந்த ஆப்பிள் போனை ஒரு முறை தட்டி "டேய் ஜிகா எல்லாம் கேட்ட தானே.. ஒரு பதினைந்து நிமிஷத்துல இங்கே வந்து சேரு!" என்றான்.

 

நேரடியாகவே நாக பிரசாத் அதிர்ந்து வத்ஸவை பாரக்க.. அவனும் திருதிருவென்று விழித்தான். நாம் கண்களை கட்டி யாருக்கும் தெரியாமல் செய்து, லிஃப்ட் எல்லாம் வைத்து அவனை அழைத்துக்கொண்டு வந்தோமே?? இவன் என்னடா அவன் ஆளை 15 நிமிஷத்தில் உள்ள ஒரு சொல்லிட்டான்? எப்படி கண்டுபிடிச்சி இருப்பான்?" என்று இவன் குழம்பி பார்க்க..

 

"ஜிபிஎஸ்!!" என்ற ஜித்து "நீங்க இன்னும் வளரனும் தம்பி!!" என்று வத்ஸவ்-ஐ பார்த்து கூறினான்.

 

 

ஆனால் அவன் சொன்ன அடுத்த பதினைந்து நிமிடத்தில் அங்கே வந்தது ஜிகா மட்டுமல்ல கர்னல் அண்ட் டீம்!! அதுவும் கர்னல் கையில் பிணை கைதியாய் ஜிகா!!

சுற்றிவளைத்து அனைவரையுமே பிடித்தது அவரது டீம்!!

 

"திட்டம் போட்டு வாஹினியை கடத்திய குற்றத்திற்காக உன்னை கைது செய்கிறேன்!!" என்றார் தெலுங்கில் கர்னல் ஜித்து முன் ரிவால்வரை நீட்டியவா

று..

 

 

"அவுனா??" என்று சுந்தரத் தெலுங்கில் கேட்டு, "வாட்??!!" என அதிர்ந்து நின்ற சுந்தரியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான்..

 

ஜித்தேந்தர் தஸ்யூதன்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top