தூகை 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

3

 

அன்று..

 

ஓர் சனிக்கிழமை இரவு.. மெல்ல பதுங்கி பதுங்கி கதவினை‌ சத்தம் இல்லாமல் திறந்த கணவனை கண்டு வாய் கொள்ளா சிரிப்பு மேகவதனியிடம்.

 

அவனும் எதிர்பார்க்கவே இல்லை மனைவி ஹாலிலேயே அவனுக்காக காத்திருப்பாள் என்று!

 

“நீ தூங்கவேனு நினைச்சேன் உன்னை யார் முழிச்சிட்டு இருக்க சொன்னா?” என்று செல்லமாக கடிந்தப்படி அதட்டிய கணவனை கண்ட காரிகைக்கு இன்னும் அந்த சிரிப்பு குறையவே இல்லை..

 

“ப்ளீஸ் டி.. சிரிக்காத..!” என்று அவன் கெஞ்ச இவளோ பார்வையால் அவனை மேலும் கீழும் அளந்தவள் மெல்ல இதழ்களைத் திறந்து “அத்த… உங்க புள்ள..” என்று வாய் திறக்கும் முன்.. வேகமாக அவள் வாயை முரட்டுக் கரங்களால் பொத்தியவன்,

 

“ப்ளீஸ் ப்ளீஸ்.. தாய் கிழவியையும்.. சின்னக் கிழவியையும் எழுப்பி விட்டுடாத டி!” என்றான் கெஞ்சலோடு…!

 

வேறு யார் அம்மாவையும் மகளையும் தான்..!

 

சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மிருணாளினி அவளது பாட்டி பிரேமாவுடன் தான் தூங்குவது வழக்கம். இந்த வழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ அவருக்கு கொஞ்சமும் பிடிக்காத அவரது மருமகளான வதனி தான்.

 

பெரும்பாலும் மிருணாளினி மாலை சிறிது நேரம் விளையாடுவாள், பின் வீட்டுக்கு வந்ததும் படிக்கும் நேரங்களில் அவர் சீரியல் பார்ப்பார். அவருக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்று மகளை தங்கள் அறையிலேயே வைத்து பாடம் சொல்லிக் கொடுப்பாள் வதனி.

 

இரவு உணவும் போது கூட பிரேமா சீரியலில் இருந்து கண்களை விலக்கவே மாட்டேன் என்பார். 

 

ஒரு நாள் அன்று ஏதோ உலக அதிசயமாக அவர் சீரியல் பார்க்கவில்லையோ அல்லது தொலைக்காட்சி கேபிளில் கோளாறோ.. ஏதோ ஒன்று 

 

“மிருகுட்டி.. இங்க பாட்டிக் கிட்ட வா?” என்று ஆசையோடு அழைத்தார். மகளும் அன்னையை திரும்பி பார்த்து அவள் தலையாட்டியதும் பாட்டி அருகில் சென்று அமர்ந்தாள்.

 

சிறிது நேரம் பாட்டி அருகில் அமர்ந்து பேசியவள் அதன்பின் அவரோடு ஒட்ட முடியாமல் நெளிந்து எழுந்து அம்மாவிடம் ஓடிவிட..

 

“நான் ஒத்த ஆம்பள புள்ளைய பெத்தேன், அவன கட்டிட்டு வந்த மகராசியோ ஒரே ஒரு பொட்ட புள்ளைய தான் பெத்து வச்சிருக்கா.. மஹும்.. ஒரே ஒரு பேத்தி.. அந்த பேத்தியும் என்னோட ஒட்டாம பண்ணுறா.. கடைசி‌ காலத்துல தனிக்கட்டையா இருக்கவா இருக்கேன். அதுக்கு போய் சேரலாம்..!” என்று அவர் ஒப்பாரி வைக்க தலைசுற்றி போனது மேகவதனிக்கு.

 

பிறந்தது முதல் அவர் பேத்தியை எட்டிப் பார்ப்பதோடு சரி.. அதே பெண் பிள்ளைகளின் பேத்திகள் பேரன்கள் வரும் போது காட்டும் ஒட்டுதலையும் பாசத்தையும் அன்பையும் ஒரு முறை கூட மிருவிடம் காட்டியது கிடையாது.

 

பிரேமாவிடம் கேட்டால் “உன் பொண்ணு எங்கிட்ட வரவே மாட்டேங்குறா டா ஆதவா.. அவ அம்மா கிட்ட தான் ஒட்டிட்டு அலையுறா.. எனக்கு வேறு வழி இல்லாம தான் இந்த சீரியல பாத்துட்டு இருக்கேன்” என்று புலம்பித் தள்ளுவார். அதனாலே அவரிடம் எதுவும் கேட்டுக் கொள்வது கிடையாது. 

 

இன்று இவர் ஒப்பாரி எல்லை மீறியது. பேத்தியையும் வசைபாட ஆரம்பித்தார். 

 

“அவ வர மாட்டேன்னு சொன்னா நீங்கதான் வச்சு பேசணும். குழந்தைகளும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலனு சொல்லுவாங்க தெரியுமா? என்னமோ நான் புடிச்சு வச்ச மாதிரி பேசுறிங்க.. சரி அப்ப நான் ஒன்னு பண்றேன். நீங்க தான் உங்க பேத்தி மேல கொள்ள பாசம் வச்சிருக்கீங்கங்க.. இனிமே ஒவ்வொரு சனிக்கிழமை அப்புறம் எப்போலாம் லீவு விடறாங்களோ அப்போ நீங்களே படுக்க வச்சுக்கோங்க உங்க கூடவே.. உங்க பாசத்தை எல்லாம் கொட்டுங்க..” என்று பிரேமாவை பார்த்து அழுத்தமாக கூற அவரோ முகம் சுழித்துக்கொண்டார். 

 

அங்கே மகளிடம் “மிரு தங்கம்.. இனி சாட்டர்டே பாட்டி கூட தான் தூங்க வேண்டும்.” அவளோ “ம்மா.‌.” என்று இழுத்தாள்.

 

“பாட்டி தனியா தானே படுத்திருக்காங்க வீக்லீ ஒன் டைம் தான போற.‌ போ..” என்றதும் வேண்டா வெறுப்பாக தலையாட்டினாள் பிள்ளை. 

 

மாலை வேலை முடித்து வீட்டுக்குள் நிரஞ்சன் நிழையும்போதே “ஆதவா ஆதவா.. உன் பொண்டாட்டி.. என்ன பண்ணா தெரியுமா?” என்று ஆரம்பித்து விட்டார் பிரேமா. 

 

“அம்மா இப்பதான் ஆபீஸ் வந்து இருக்கேன். டயர்டா இருக்கு..” என்றதும் 

 

“அதானே எனக்கு இருக்கிற ஒத்த புள்ள நீ.. நீயும் இந்த மாதிரி பேசுனா நான் எங்க போவேன்? எனக்கு வேற போக்கிடம் தான் இருக்கா? பொண்ணு வீட்டுல போய் இருந்தா நல்லா இருக்குமா? கொண்டான் கொடுத்தான் வீட்ல போய் இருந்தா என்ன சொல்லுவாங்க? நான் போக்கத்த அனாதை தானே?” என்று முந்தானையில் மூக்கு சிந்த ஆரம்பித்து விட்டார். 

 

அப்புறம் அவரை சமாதானப்படுத்தி என்ன விஷயம் என்று கேட்டதும் மனைவி பேசியதை கேட்டு “என்ன மேகா??” என்றான் சலிப்பாக‌..!

 

அவள் அழுத்தமாக நின்று இருந்தாள் கணவனை பார்த்தவாறு..!

 

பல சமயங்களில் மேகவதனி விட்டுக் கொடுத்தாலும் சில சமயங்கள் அதுவும் குறிப்பாக அவள் குழந்தை என்று வரும்போது கொஞ்சமும் அசர மாட்டாள். 

 

‘நான் தானே வெளி வீட்டில் இருந்து வந்த பொண்ணு.. இவ உங்க பொண்ணு தானே? இவ கூடவே உங்க அம்மா போட்டி போடுவாங்களா?’ என்று அவளது வாதம் இருக்கும்.

 

அதன் பின்னாக மகள் இரவில் அழுதா கூட ‘ஒரு குழந்தையை உங்களால வச்சுக்க முடியாதா? அவ்வளவு பேசுனீங்க?’ என்று மாமியாரை ஏத்தி விட்டு சனிக்கிழமை இரவு மகளை அங்கே படுக்க வைத்து விடுவாள். 

 

குட்டியோ இரவெல்லாம் “கதை சொல்லு பாட்டி.. கதை சொல்லு பாட்டி” என்று கேட்டு தொணதொணக்க.. 

 

“வேலியில போன ஓணான தூக்கி பனியனில போட்டுடோமோ?” என்று முதலில் ஒட்டாமல் இருந்தாலும்.. போகப்போக இவருமே பேத்திக்காக ஆர்வமாக இப்போது எல்லாம் கதைகளை தேடிக் கொண்டிருக்கிறார் சனிக்கிழமை இரவு பேத்திக்கு சொல்வதற்கு..!

 

அதேபோல மிரு குட்டியும் அம்மாவோட மட்டுமே பகிர்ந்து கொள்ளும் பள்ளி விஷயங்களை இப்பொழுது பாட்டியிடமும் பகிர்ந்து கொள்கிறாள்..!

 

அவர்களே அறியாத ஒரு அந்நியோன்யம் பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் இப்பொழுது எல்லாம்..!

 

இதற்கெல்லாம் காரணம் மேகவதனி என்று புரிந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாத கெத்து மாமியார் தான் பிரேமா..!

 

மகள் சனிக்கிழமை இரவுகளில் அன்னையோடு படுத்துக்கொள்ள தன் வெகு நாள் ஆசையை இப்பொழுது நிறைவேற்றிக் கொள்கிறான் நிரஞ்சன்

 

ஆம்.. வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் பீர் அடிப்பது..!

எப்போதாவது நண்பர்களோடு மாதம் ஒருமுறை அடித்து விட்டு அவன் வீட்டுக்கு அன்னையும் மகளும் தூங்கி பிறகு தான் வருவான். அது மேகவதனியின் முறைப்பில் “ப்ளீஸ் எப்பயாவது தானே??” என்று கெஞ்சும் கணவனை அவளாலும் ஒன்றும் சொல்ல முடியாது. 

 

மத்திய தரத்து ஆண்மகன்.. இரண்டு அக்காள்களின் திருமணம் அதற்குப் பின் அவர்கள் பிள்ளைகள் சடங்கு சம்பிரதாயங்கள் கூடவே இவர்களின் காதல் என்று ஓட்டமாக ஓடிக்கொண்டு.. இப்பதான் நிலையாக ஒரு இடத்தில் நிற்கிறான்.

 

அவனது சிறு சிறு அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனைவியின் முகம் பார்க்க அவளோ தலையாட்டி சம்மதம் தெரிவிப்பாள்.

 

அதுவும் அளவோடு தான்.‌ அதனால் கண்டிப்பாளே ஒழிய கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவனை சங்கடப்படுத்த மாட்டாள். 

 

கூடவே அவன் எல்லை மீறும்போது தடுத்து விடுவாள் நிதர்சனமாக..!

 

அறைக்குள் நுழைந்ததும் மனைவியை அவசரமாக அணைத்து “போங்க போங்க மொதல உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க..”

 

“உனக்கு தான் அந்த ஸ்மெல் பிடிக்காதுடி” என்றவன் தன் உலகத்திற்கு மனைவியும் இழுத்து செல்ல ஆரம்பித்தான்.

 

சூடான மூச்சை காற்றும்.. குளிர்ந்த உதடுகளும் மங்கைக்குள் மாயம் செய்திட.. அவளை அறிந்திடாமல் கண்கள் சொருகியது அவளுக்கு. அவள் தள்ளாடிட அவளின் உதடுகள் தானாய் பிரிந்துக் கொண்டன. சுக வேதனையில் அவள் சுகிக்க.. அவனின் சூடான முத்தங்கள பெருக.. மோகத்தீ பற்றிக்கொண்டது இருவருக்குள்ளும்.. மெல்ல அவளை தன் புறம் திருப்பியவன் அவளின் உதட்டில் திகட்ட திகட்ட தேன் உறிஞ்சினான். அவளின் உதட்டை உறிஞ்ச, உறிஞ்ச அவளுக்கு தேகமெல்லாம் அனலடித்தது. அவனின் முத்தம் நின்றிடாமல் தொடர.. நங்கையவளோ மூச்சு வாங்க.. சற்று அவளுக்கு இளைப்பாற நினைத்த அவனது அதரங்களோ உதட்டை விட்டு அவளின் நெற்றி, மூக்கு, கன்னங்கள் என்று ஒரு சுற்றடித்து முத்தங்களால் சுழற்றி அடித்தது. அவன் முத்தத்தில் அவள் கிறங்கி இருக்க எப்பொழுது அவளை தூக்கினான்? எப்பொழுது மஞ்சத்தில் கிடத்தினான்? என்று அவள் அறியவே இல்லை..

 

அவனின் ஒற்றை விரலை நீட்டி அவளின் நெற்றியில் தொடங்கிய ஊர்வலம் மேலிருந்து கீழே மெல்லமாய் உரசியப்படி அவளின் மென்மைகளை தாண்டி நாபியில் வந்து நின்றது. அவளோ அந்த உணர்வுகளை தாங்க இயலாமல் அவன் சிகைக்குள் தனது விரலை விட்டு அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

 

அவளின் இடையில் இருந்த அந்த சிறிய மின்னிய ஒற்றை வைரக்கல்லில் அவனை வெறியேற்ற அதை வாயால் கவ்வியவன் இதழ்களால் உரசிட மேனி தகித்தது பெண்ணவளுக்கு..

 

மெல்ல மெல்ல அவளது உடைகளுக்கு விடை கொடுத்தான்.. அதில் அவளின் மென்மைகள் மெல்ல எட்டிப் பார்க்க.. அவள் நாணம் கொண்டு அதை மறைக்க முயல.. அவள் கைகளைப் பிடித்து சிறை செய்தவன்.. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் பல்லவன் சிலையாய் விழுந்தவளை கண்களாலேயே அள்ளி அள்ளி பருகிய அவன்.. அடுத்து அதரங்களாலும் விரல்களாலும் அவளை மீட்டி எடுத்தான் விடியும் வரை... அவளை சுவைக்க சுவைக்க அவளும் சுகத்தில் சுகித்தாள்..

 

விடிந்த பின்பு தன் நெஞ்சில் தலை வைத்து தூங்கும் தன்னவனை பார்த்த பிறகே நேற்றைய இரவின் களியாட்டம் புரிய.. 

 

கண் மூடி ஆழ்ந்து சுவாசித்து உறங்கும் கணவனின் நெஞ்சில் இன்னும் வாகாக சாய்ந்து கொண்டாள்.

 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் “நீ தள்ளி போ.. உனக்கு ஸ்மெல் பிடிக்காது டி” என்று உளறிக்கொண்டு அவளை தள்ளி படுக்க வைக்க..‌ பரவாயில்லை என்றவள் இன்னும் கணவனை நெருங்கிக் கொண்டாள்.

 

மனைவியின் இந்த புரிதலும் ஆழமான நம்பிக்கையும் தான் கணவனான ஆதவ் நிரஞ்சனின் அஸ்திரம்

.. அஸ்திவாரம்..!

 

ஆனால்.. அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டது தான் பெண்ணவளின் பிரிவுக்கு காரணம்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top