காதலி 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 4

 

 

ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த வாகினி.. சுற்றுமுற்றும் பார்க்க.. ஆங்காங்கே டிரைவர்கள் தங்களது வாகனத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்க சலசலப்புகளும் பேச்சு சத்தமும் சிரிப்புமுமே ஒரு மாதிரி திகில் கொடுத்தது இவளுக்கு.

 

 

 

சற்று முன்னேறி வர அங்கே..

 

அரக்கர்கள் மாதிரி உடம்போடு அங்கே இங்கே பிதுங்கி வழியும் கன்னச் சதைகளோடு.. பான்பராக் கரை கொண்ட பற்களால் அவளைப் பார்த்து சிரித்து.. பின்பு தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டனர் ஒரு கும்பல். அந்த அரக்க முரடர்களை கண்டதும் சற்று மிரண்டு போனாள் வாஹினி. அவர்கள் இவளை நோக்கி வருவதை வருவதைக் கண்டவள் "ஜித்துஊஊஊ" என்று கத்திப்படியே ஓடினாள்.

 

 

 

"ஜித்துஊஊ.. ஜித்துஊஊ.." என்று அலறியபடி அந்த ரெஸ்ட் ரூம்க்கு பின்னால் இருந்த இடத்தை நோக்கி ஓடினாள். அதுதான் அவள் செய்த ஆகப்பெரும் முட்டாள்தனம்!!

 

 

அந்த கும்பலும் "பிடிடா அவள.. விடுடாத டா!! விடுடாத டா!!" என்று கூக்குரலோடு அவளை துரத்த..

 

 

 

இம்மாதிரியான சந்தர்ப்பத்தை இதுவரை அவள் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. செய்திகளில் யாரோ ஒருவருக்கு நிகழ்ந்ததாக இவள் கேள்விப்படும்போதே மனசு பரிதவிக்கும்... அந்த பெண்ணுக்காக அழுகும்.. அந்தப் பெண்ணை பாடாய் படுத்திய கயவர்களை நிந்திக்கும். ஆனால் இன்று தனக்கே என்கிற போது.. அதன் நிதர்சனத்தை அவளால் நம்பமுடியாமல் தெரியாத இருட்டு பகுதியில் ஓட முடியாமல் அதுவும் அந்த பார்ட்டிக்கு கவுனைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் விழுந்து எழுந்து ஓடினாள்.

 

 

 

கைகால்கள் எல்லாம் ஆங்காங்கே சிராய்ப்பு!! போதாக்குறைக்கு இரண்டு மூன்று இடத்தில் அந்த பார்ட்டி கவுன் லேஸ் எல்லாம் மாட்ட.. அது அவள் ஓட்டத்தை தடுத்து நிறுத்த.. அந்த தடிமாடுகளோ இன்னும் அவள் அருகில் நெருங்கி வர.. அவர்கள் கையில் பிடிபட கூடாது என்ற எண்ணத்தோடு.. கிழிந்தாலும் பரவாயில்லை என்று படாரென்று கவுனை பிடித்து இழுத்து கொண்டு ஓடினாள்.

 

 

 

ஓரளவுக்கு தான் அவளால் ஓட முடிந்தது. அதற்குமேல் முடியவில்லை. பெரிதாக இம்மாதிரி உடலுழைப்பு எல்லாம் அவளுக்கு பழக்கமே இல்லாத ஒன்று.. உடற்பயிற்சி ஆசனங்கள் இன்டோர் கேம்ஸ் நீச்சல் சில தற்காப்பு பயிற்சிகள் என்று எடுத்துக் கொண்டாலும் அவ்வப்போது ஓய்வு இடைவெளியோடு தான் நடக்கும். இப்படி இடைவிடாத ஓட்டமும்.. அதனால் விளைந்த மூச்சறைப்பும்.. எங்கே தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயமும்.. எல்லாம் சேர்ந்து அவள் உடம்பு மனம் இரண்டையும் சோர்வுறச் செய்தது.

 

 

 

அதற்கு மேலும் அவளது ஓட்டத்தை ஆங்காங்கே தடுத்து நிறுத்தியது அவளது உடை வேறு.. அதுவே ஐந்து கிலோ இருக்கும் போல அதை தூக்கிக் கொண்டு ஓடும்போது இன்னமும் களைப்படைந்தாள் மாது.

 

 

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல.. கற்களும் முற்களும் கடந்த அந்த முரட்டு பாதையில் அவள் போட்டுக்கொண்டிருந்த ஹை ஹீல்ஸ் போட்டு ஓட முடியாமல் போக.. அது எப்போதோ அவள் உதறி தள்ளி இருந்தாள். இப்போது அந்த கற்கள் எல்லாம் வெண் பஞ்சு பாதங்களில் குத்தி அழுந்த.. இன்னும் அவளின் ஓட்டத்தின் வேகம் தடைபட்டது.

 

 

 

கண்கள் எல்லாம் பூச்சிகள் பறக்க.. மூச்சு விடவே சிரமமாக இருக்க.. இதோ மூச்சடைத்து விழ போகிறோம்.. விழ போகிறோம்.. என்று அவளுக்கு அவளை சொல்லிக்கொண்டாலும்..

 

 

 "துவண்டு விடாதே ஹிமா!! விழுந்து விடாதே ஹிமா!! ஓடு.. ஓடு.. ஹிமா!!" என்று எப்பொழுதும் அவள் தந்தை அழைக்கும் அந்தப் பெயரும்.. அந்த வார்த்தைகளும் அவள் காதில் வந்து ஒலிக்க.. தன் முழு முயற்சியையும் கொடுத்து ஓடினாள்.

 

 

 

சிறு மான் ஒன்று தன் உயிருக்காக மானத்துக்காக செந்நாய் கூட்டத்திலுமிருந்து தப்ப ஓட்டம் எடுக்க.. பின்னால் வந்த மாமிச மலைகளோ தங்கள் இச்சைக்காகவும் காமத்துக்கும் துரத்தியது அம்மானை!! அதுவும் இதையே தொழிலாக கொண்ட பொல்லாத மாமிச மலைகளின் புத்திகள் நேர் பாதையில் செல்லுமா என்ன? எப்பவும் குறுக்கு பாதை தானே!! சட்டென்று தன் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஓடும் வாஹினியின் காலை நோக்கி ஒருவன் குறிவைத்து தாக்க..

 

 

 

முதல் முறை தவறி போனது. ஆனால் அடுத்தடுத்து அவன் மட்டுமல்லாமல் அந்த கும்பலில் வந்த ஒவ்வொருவரும் எடுத்து வீச ஒன்று இல்லேன்னாலும் ஒன்று அவள் காலில் சரியாக பட.. அதில் தடுக்கி நிலைதடுமாறி தொப்பென்று விழுந்தாள் வாஹினி.

 

 

நச்சென்று ஏதோ தலையிலும் முன் நெற்றியிலும் அடிப்பட.. அழகு வதனம் செவ்வண்ணம் பூசியது. கண்கள் அவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை. இதோ மூர்ச்சையாகி போகப்போகிறோம்!! இவனுங்களும் என்னை புசிக்க போகிறார்கள்!! என்ற நினைவே அவளுக்கு பயத்தையும் நடுக்கத்தையும் தர.. ஓடி வந்த களைப்பும் பயமும் அவளை சோர்வுறுச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் ஆட்கொண்டது அவளை

 

 

கண்கள் திறக்க முடியாமல் கடினமான பாறையை வைத்தது போல இருக்க.. கைகளும் கால்களும் அவள் முளையின் கட்டளைக்கு இணங்காமல் ஓர் இன்ச் கூட அசையாமல் கட்டை போல கிடக்க.. உடம்பு தொடர் ஓட்டத்தினாலும் அடிப்பட்டதாலும் ஆங்காங்கே வலிக்க..

 

 

என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்று ஒன்றும் புரியாமல் மயக்கத்தின் பிடியில் சென்று கொண்டிருந்தாள் வாஹினி.

 

 

 இவர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது!! சிக்கிக் கொள்ளக் கூடாது!! என்று உதடுகள் முணுமுணுக்க.. ஒன்றும் செய்ய முடியாத பாவையாக கிடந்தாள் வாஹினி.

 

 

ஆனால் காதுகள் மட்டும் சற்றே கூர்மையாகி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உத்து உத்து கேட்கலானது.

 

 

அப்போது அவளை சுற்றி துரத்தி வந்த மாமிச மலைகள் நிற்க.. அது தெளிவாக இல்லாமல் ஏதோ நிழல் போலவே அவள் கண்களுக்கு காட்சி தந்தது. அவள் கண்ணை விட்டு காதை கூர்மை தீட்டினாள்..ஆந்திரா பார்டர் என்பதால் அவர்கள் பேசியது தெலுங்கில்..

 

 

 

"டேய்.. பார்ட்டி செம டக்காரா இருக்கா டா. இன்னைக்கு நல்ல வேட்டை தான்" என்று ஒருவன் தெலுங்கில் கூற..

 

 

"ஆமாண்டா பார்க்கும்போது உடம்புல ஏதோதோ பண்ணுது டா. அல்வா மாதிரி இருக்கா?" என்று மற்றொருவன் தனது உதடுகளை நாக்கால் தடவி ஈரமாக்கி இச்சையோடு பார்க்க..

 

 

"டேய்.. என்னடா பேசிக்கிட்டே நேரத்தை கிடக்கிறிங்க.. ஆரம்பிங்க டா.. இன்னைக்கு கிடாவெட்டு தான்" என்று ஆசையோடு கூற..

 

 

"டேய் இந்த பார்ட்டிய மேட்டரை முடிச்சுட்டு இங்கே விட்டுட்டுப் போக வேண்டாம். நம்ம கண்டெய்னரில் தூக்கி போடு.. அப்பப்போ நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் யூஸ் பண்ணிக்கலாம். பாக்கவே இளசா புதுசா இருக்காடா !!"என்று ஒருத்தன் ஹஸ்கி வாய்ஸில் கூற..

 

 

"இல்லடா பார்ட்டிய வேட்டையாடுனமோ போனமா இருக்கணும். அதை விட்டுட்டு அது தோளில் தூக்கி சுமந்தா பிரச்சனை நமக்கு தான்!!" என்றான் மற்றொருவன்..

 

 

"இந்த பார்ட்டி பர்சனாலிட்டி வச்சு சொல்றேன். கண்டிப்பா இது பெரிய இடத்துப் பொண்ணாதான் இருக்கணும்!!" என்றான் ஒருவன்.

 

 

 

"சரி சரி வழக்கம்போல டாஸ் போடுடா!!" என்று அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து, இந்த குரூப்புக்கு விழுகிறதோ.. அந்த குரூப் முதலில் அவளை வேட்டையாட வேண்டும் என்பதும், அதன் பிறகு தோற்ற குரூப் வேட்டையாட வேண்டும் என்பது அந்த நாதாரிகளின் நாறிப்போன வழக்கம்.

 

 

ஆறு பேரும் இரு குழுவாக பிரிந்து கொண்டு டாஸ் போட.. 

 

 

அரை மயக்கத்தில் இருந்தாலும் கண்கள் தெளிவாக தெரியவில்லை என்றாலும் பேசியதெல்லாம் அவளது இரு காதுகளில் நன்றாகவே விழுந்தது.

 

 

அவர்கள் பேசியது ஒவ்வொன்றும் கேட்க கேட்க அவளுக்கு கைகள் எல்லாம் நடுநடுங்க.. இதயம் அதன் இடத்திலிருந்து எகிறி குதிக்க.. தொண்டை அடைத்து மீண்டும் கண்கள் எல்லாம் இருளத் தொடங்கியது.

 

 

'அவ்வளவுதான்!! அவ்வளவுதான்!! இனி எல்லாம் போச்சு!! ராணி என என் அரண்மனையில் உலா வந்த காலம் போச்சு!! அப்பாவின் பேருக்கு நல்ல மரியாதையை ஏற்படுத்தித் தர போகிறோம்!! ரெட்டி வம்சத்திற்கு நாம் களங்கமாக நிற்கப் போகிறோம்!! இதற்கு மேல் உயிரோடு வாழ்ந்தால்தான் என்ன? வாழ்வைத் துறந்தால் தான் என்ன? இல்லை!! இல்லை!! இந்த நாய்கள் செய்த தப்புக்கு நான் ஏன் என் வாழ்வை இழக்க வேண்டும்? துக்கப்பட வேண்டும்?? கண்டம் துண்டமாக இவனுங்களை எல்லாம் வெட்டி கூறு போட வேண்டும்!! நடுரோட்டில் வைத்து அந்த பிணம் தின்னிகளை கொளுத்த வேண்டும்!! எந்த உறுப்பை கொண்டு இப்படி அப்பாவி பெண்களை கொடூரமாக சிதைக்கிறார்களோ.. அந்த நாறிபோன உறுப்பை எல்லோர் முன்னிலையிலும் வெட்டி எடுத்து கதறக்கதற துடிக்க வைக்க வேண்டும்!! இவர்கள் சித்திரவதையால் ஒவ்வொரு பெண்களும் இப்படித்தானே துடித்திருப்பார்கள்.. வலியில் அரக்கி இருப்பார்கள்.. ஒன்றும் செய்ய முடியாது தங்கள் நிலையை நினைத்து அழுது அழுது கரைந்து உயிர் போக்கியிருப்பார்கள்.. அதே நிலையை இவர்களுக்கு தரவேண்டும்!! தருவாள் இந்த ஹிரண்மயா வாஹினி!!' என்று அந்த நிலையிலும் மனதிடத்தை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். அவளின் மனதின் மூலையில் ஒரு ஓரம்.. ஜித்து.. ஜித்து.. என்று கதறிக் கொண்டே இருந்தது.

 

 

ஒரு இரவு அவன் கூட ஒன்றாக இருந்தாலும் கண்களால் கூட கண்ணியம் காத்த அவனின் மாண்மை கண்முன்னே வந்து மின்னி மறைந்தது.

 

 

 

என் கதறல் உன் காதுக்கு கேட்கிறதா ஜித்து??

 

என் அவலம் உன் மூளையை சென்று அடைகிறதா ஜித்து??

 

என் ஓலம் உன் இதயத்தை எட்டவில்லையா ஜித்து??

 

 

வாயேன்.. வந்து காப்பாற்றேன் ஜித்து!!

 

என் மானத்தை கற்பை காப்பாற்றேன் ஜித்து!!

 

அட்லீஸ்ட் இந்த கயவர்களை நான் கண்ட துண்டமாக்க என் உயிராவது மிஞ்சு வேண்டும்.. வந்து காப்பாற்றேன் ஜித்து!!

 

 

 

அன்று திரௌபதி தன்னைத் துகிலுரிய நின்ற கூட்டத்திடம் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டி முற்றுமுழுதாக அந்த கோபாலனை கோவிந்தனை சரணடைந்து மனதார அவனை மட்டுமே நினைக்க..

 

சேலையாய் வந்து பாஞ்சாலி அவளின் மானத்தை காப்பாற்றினான் கோபாலன்!!

 

 

அங்கே முக்கியமாக கருதப்பட்டது என்னவோ முழு நம்பிக்கை!! சரணாகதி!! ஆம்!! நான் உன்னை சரண் அடைந்து விட்டேன் இனி என்னை காப்பதும் தூற்றுவதும் நீயே!!

 

 

போற்றலும் தூற்றலும் கண்ணனுக்கே!! என்பது போல வாஹினியும் தன்னையறியாமல் அவள் மனது முழுவதும் ஜித்து.. ஜித்து என்று அவன் நாமத்தை உச்சரித்து.. அவன் மீது ஏதோ ஒரு பற்று கொண்டாள் பாவை!!

 

 

பற்றுக்கொண்ட அவளின் கற்பை காப்பாற்றுவானா கள்வன்??

 

 

 

அந்தக் காட்டுமிராண்டி மாமிசமக்கூட்டம் தங்களுக்குள் பேசிக்கொண்டு டாஸ் போட்டு பார்க்கும் இந்நேரத்தில் தான் வாஹினியின் இவ்வளவு எண்ணங்களும்!! ஜித்துவுக்கான வேண்டுதல்களும்!!

 

 

"டேய் சீக்கிரம் போடா.. எனக்கு படையலை பார்க்க பார்க்க உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு ஏறுது!! இன்னும் என்னென்னமோ பண்ணனும்னு தோணுது!!" என்று அங்கிருந்தவற்றிலேயே பெரிய மாமிச மலை.. கடா மீசையும் தோள் வரை முடியும் கொண்டு பான்பராக் கரையோடு அவளை பார்த்து ஜொள்ளு வழிய சிரித்தான் ஒருவன்.

 

 

 

"இருடா.. இருடா.. அவசரப்படாதே!! நமக்குத்தான் விருந்து!;" என்றவன் "டேய் இந்த முறையை நாங்கள் ஹெட்.. நீங்க டெயில்!!" என்றவாறு காயினை தூக்கிப்போட மற்றொருவன் தன் செல்போனில் டார்ச்சை உயிர்ப்பித்து ஒளி அடிக்க.. 

 

 

அந்த டார்ச் ஒளி மேலே சென்ற காசை நோக்கி சென்றது. காசு கீழே இறங்க இறங்க அந்த ஒளியும் அதனுடோடு கீழே பயணித்து வர.. அனைவர் கண்களும் அந்த காசில்தான்!!

 

 

சட்டென்று இறங்கி வந்த காசு காணாமல் போக.. எங்கே என்று தேடி அவர்களுக்கு முன் ரௌத்திரம் பொதிந்த ஜித்துவின் முகமே அந்த டார்ச் ஒளியில் சிக்கியது.

 

 

"டேய் யாருடா இவன் டாஸ் போடும்போது குறுக்கு வந்துகிட்டு.. அப்பால போடா!!" என்றான் முரட்டு பீஸ்.

 

 

"இங்க பாரு நைனா.. ஏற்கனவே நாங்க ரெண்டு குரூப்பா இருந்து தான் படையல வேட்டையாட போறோம். ஒன்னு எங்க கூட வா இல்ல அவங்க கூட போ!! இரண்டுமே புடிக்கலையா நடுவுற அம்பையரா இருந்து மேட்சை என்ஜாய் பண்ணு!! அத விட்டுட்டு காசு பிடிக்கிறேன்.. அவளை காப்பாற்றேன் எல்லாம் வந்து நின்னு நல்லா இருக்குற மூஞ்ச பஞ்சராகிக்காத.. இருக்கிற ஒரு உயிரையும் காப்பாற்றி கிட்டு ஓடிப் போய்டு!!" என்று நக்கலாக காது குடைந்து கொண்டே கூறினான்.

 

 

அவர்கள் பேசியதை சற்றும் ஜீரணிக்க முடியாமல் கண்களை இறுக்க மூடி திறந்தவன் கண்களில் ரௌத்திரம் மின்னியது.

 

 

 

"ஒரு பொண்ணு ராத்திரி தனியா வந்தா அது உங்களுக்கான வேட்டை இல்லடா நாதாரிகளா.. ஆண்களுக்கான கடமை.. அத விட்டுட்டு.." என்று சிலபல பீப் வார்த்தைகளாக கோபம் குறையாமல் கர்ஜித்தான் ஜித்து.

 

 

"என்னடா இவன்?? வழக்கமான ஹீரோ போல டயலாக் பேசிட்டு இருக்கான். அந்தக் கட்டை எடுத்து வந்து நடு மண்டையில் நச்சுனு போட்டு தூக்கி கடாசுங்க டா.. டாப்பா வெயிட்டிங்..!!" என்று மற்றொரு மாமிசமலை கூற..

 

 

"அதானே எருமை மாடுகளுக்கு எல்லாம் பேசினா புரியவா போகுது?? அதுக்கு பொறடியில ரெண்டு தட்டு தட்டினால் தான் புரியும்!!" என்றவன்..

 

தன் கால் ஷூவில் எப்பொழுதும் மறைத்து வைத்திருக்கும் சிறு கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேர்த்தில் அந்த கூட்டத்துக்குள் புகுந்து, அவர்களின் முக்கியமான நரம்புகளை எல்லாம் கை கழுத்து வயிறு என ஆங்காங்கே நொடிக்கும் குறைவான நேரத்தில் ஏழு எட்டு வெட்டுக்களை அனாயசமாக வெட்டிட.. என்ன நடந்தது என்று அவர்கள் உணரும் முன்பே அனைவருக்கும் கழுத்து கை வயிறு இடத்திலிருந்து அணைத்திறந்த வெள்ளமென ரத்தம் பாய்ந்து வெளியே வந்தது. 

 

 

 

"டேய்.. இவன் ஜெகஜாலக்கில்லாடி!! அங்கங்க நம்மளோட நரம்பெல்லாம் கட் பண்ணிட்டு இருக்கான்டா.. அவனை விடாதேடா!!" என்று அனைத்து மாமிச மலைகளும் அவன் மேல் ஒன்றாக வந்து குமிய சட்டென்று கிடைத்த கேப்பில் வெளியே வந்தவன் ஒவ்வொருத்தராக இடம் பார்த்து கையாலும் கத்தியாலும் வெட்டு கொடுக்க.. அவனின் இந்த நேர்த்தியான அடியிலும் வேகத்திலும்.. அவன் கையில் கத்தி சுழன்று பதம் பார்த்து விதத்திலும் சீக்கிரமே சுருண்டு விழுந்தனர்.

 

 

ரத்தம் வர வர "இதுக்கு மேல நீங்க எல்லாம் இங்க நின்னா சீக்கிரம் செத்துப் போய்டுவிங்கடா.. சீக்கிரம் போய் ஹாஸ்பிடல் இடம் பிடிக்கிற வழியே பாருங்க.. பொழைக்கிற வழிய பாருங்க" என்று அவர்களை திசை திருப்ப உயிருக்கு மிஞ்சிய பயம் ஏதேனும் உண்டா என்ன? உருண்டு பிரண்டு ஒருத்தரை ஒருத்தரை ஒருத்தர் பிடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடினர் இல்லை இல்லை உருண்டு ஓடியது அந்த மாமிச கும்பல்.

 

 

அதன்பின் தான் வாஹினியை கவனித்தான். ஆங்காங்கே உடைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு தலையில் ரத்தம் உறைந்து இருக்க.. கண்கள் சொருகி இருக்க.. கை கால்களை விரித்து பார்ப்பதற்கே அப்படி வலித்தது அவனுக்கு.

 

 

 

"பால் டப்பா..!!" என்று மென்மையாக அவள் கன்னத்தில் தட்ட மெதுவாக விழித்தவள், ஜித்துவை பார்த்து கஷ்டப்பட்டு உதடுகளை அசைத்து "வந்துட்டியா ஜித்து!!" என்று கேட்டவாறே மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். இரு கைகளாலும் அவளை தூக்கியவன் யாரும் பார்க்காத வண்ணம் அவன் கொண்டு வந்த காரிலேயே ஏற்றி திரும்பவும் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

 

 

வாஹினி தன்னுடைய இந்த நிலையை நினைத்து, நொடி பொழுதில் தன் உயிரும் மானமும் காப்பாற்றப்பட்டதை இன்னமும் நம்ப முடியா நிலையில் இருந்தாள். நிதர்சனம் உரைத்து அனைத்தையும் வார்த்தைகளால் வெளியிட இயலாமல் வெடித்து அழுதாள். அவளின் இந்த அழுகையை காண சகிக்காது "இப்படியெல்லாம் நீ அழுது என்னை பயமுறுத்துவனு தெரிஞ்சு இருந்தா உன்னை காப்பாத்தி இருக்கவே மாட்டேன் பால் டப்பா.. விட்டுட்டு அப்பவே எஸ்கேப் ஆகி இருப்பேன்!!" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் ஜித்து கூற..

 

 

 

அவளோ அவனின் இந்த வார்த்தையில் இன்னும் வேகமாக வாயை திறந்து கத்தி அழுதாள்.

 

 

அவள் தலையை இறுக பற்றி தன் மார்பில் அழுந்த பிடித்து.. மறுகையால் அவள் வாயை மூடி "அடியே.. கத்தி வைக்காதடி பால் டப்பா!! நீ கத்துற கத்துல ஒட்டுமொத்த ஊரும் முழிச்சு வந்திட போகுது. வாயை திறக்காத கஷ்டப்பட்டு உன்னை நான் காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கேன். தயவுசெய்து அழுகையை நிறுத்து!!" என்று இவன் கெஞ்ச..

 

 

 

இதன் பேசுவது ஒன்றும் அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் இந்நேரம் வரை இருந்த மன அழுத்தத்தை முற்றிலுமாக கண்ணீராக வடித்து அதை வெளியேற்றி கொண்டிருந்தாள் வாஹினி. மனதுக்குள்ளே வைக்க வைக்க இன்னும் அழுத்தம் தானே அதிகமாகும் என்பதை உணர்ந்து.

 

 

 

ஜித்துவுக்கும் ஆறுதல் மொழிகள் கூறி எல்லாம் பழக்கம் இல்லை. எவ்வாறு கூற வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியாது. இதுவரை அம்மாதிரி யாருக்கும் ஆறுதலும் அரவணைப்பும் கொடுத்ததில்லை அவன்!!

 

 

 

"ராமன் ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்.. எனக்கு ஒன்னும் கவலை இல்லை!!" என்பது போலத்தான் இவர்கள் மூவரும் சுற்றித் திரிவார்கள். இப்பொழுது ஒரு பெண்ணை அதுவும் அழுகும் பெண்ணை எப்படிக் கையாளுவது என்று தெரியாமல் திருதிருவென்று திருடனை போலவே.. ச்ச.. இவன் நிஜ திருடந்தானே.. திருடனாகவே விழித்தான் ஜித்து.

 

 

 

மீண்டும் அவளின் இந்த அழுகையை காண சகிக்காதவன் அதை நிறுத்த எண்ணம் கொண்டு, தன் மார்பில் இருந்த அவள் முகத்தை பிரித்தெடுத்து அழுகையில் துடித்துக்கொண்டிருந்த அவளது இதழ்களை கூர்ந்து பார்த்து "பால் டப்பா.. இந்த மாதிரி நீ அழுது கிட்டு இருந்தா.. வழக்கமா படத்தில் எல்லாம் செய்யுற மாதிரி பக்குன்னு பிடிச்சு கிஸ் அடிச்சுடுவேன்!!" என்றான்.

 

 

அவளுக்கு கிஸ் என்றதும் விழிகளை உயர்த்தி அழுகையை நிறுத்த.. "பரவால்ல கிஸ்ஸூனு சொன்னதுக்கு நீ வாயை மூடிட்ட.. குட் கேர்ள்!! அதையே மெயின்டன் பண்ணு!! இன்னொருமுறை வாய தொறந்த நிஜமாவே இழுத்து வச்சு கிஸ் அடிச்சு புடுவேன்!!" என்று அவன் மிரட்ட அவள் வாயை மூடிக் கொண்டாள்.

 

 

"இந்த ஐடியாவ முன்னவே செய்திருக்கலாம் போலயே.. சோ ஸ்வீட்!!" என்றவன், அப்போதுதான் அவளைப் பார்க்க அங்கங்கே ஆடைகள் கிழிந்து அவளது அங்கங்களை ஒளிவு மறைவின்றி காட்டிக் கொண்டிருக்க.. இதுவரை இருவரும் அதை பற்றி எண்ணவே இல்லை. சட்டென்று ஒரு கூச்சம் ஒட்டிக்கொள்ள அவள் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

 

 

 

"இரு வரேன்!!" என்றவன் தன்னுடைய ஆடைகளை கொண்டு வந்து கொடுத்து "இத மாத்திக்கோ!!" என்றான். அவளை தட்டுத்தடுமாறி எழ முடியாமல் இருக்க… "இரு!!" அவளை தூக்கி நிறுத்தினான். "மாட்டிக்கோ நான் வெளியிலே இருக்கேன்!!" என்று அவன் அறையை விட்டு நகர மீண்டும் ஜித்து வாஹினியின் நெஞ்சில் நீக்கமற நிறைந்தான்.

 

 

 

மறுநாள் காலை ஜித்துவை பார்க்க வந்த ஹரிதா பார்த்தது என்னவோ ஜித்துவின் உடையில்.. அதுவும் அவனது அறையில்.. அவனுக்கு அருகே படுத்திருந்த வாஹினியை 

 

தான்!!

 

 

"அடியே என் சக்களத்தி!! யாரு டி நீ?"

 

என்று ஹரிதா கத்திய கத்தலில் அந்த பகுதியில் இருந்தவர் அனைவரும் குவிந்தனர்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top