Share:
Notifications
Clear all

சுந்தரியே 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

13

 

 

 

நீலாம்பரியை கூட்டத்தில் பார்த்த மாத்திரத்திலேயே அவனின் நினைவலைகளில் அவள் ததும்பி முழுவதும் நிரம்பியிருக்க.. எவ்வாறு அவளிடம் செல்ல.. எப்படி அவளிடம் சொல்ல.. என்று திக்கித் திணறி தவித்து கொண்டிருந்தவனுக்கு கலங்கரை விளக்காய் மகன்.

 

இனி அவளை பிரிவது என்பது சுவாசிப்பவனுக்கு ஆக்ஸிஜன் இல்லாததை போன்றது. அதிலும் கடைசியாக அவள் சொல்லி சென்று "அப்பா.. நீ கிடையாது!!" என்ற வார்த்தை அவனுக்கு அடர் அமிலத்தை அப்படியே நெஞ்சுக்குள் ஊற்றியது போல் இருந்தது.

 

 

'ஆமாம் நானு தப்பு செஞ்சுட்டேன் தான்.. ஆனால் அதற்கு முற்றும் முதல் பொறுப்பு நான் மட்டுமே கிடையாது அல்லவா?? என்ன ஆனது என்று தெரியாத நிலையில்.. என்னைய மறந்த நிலையில்.. அவளுக்கு தாலி கட்டியதை ஒரு அனுமன் பக்தனாக எவ்வாறு நானு ஒத்துக் கொள்ள முடியும்?' என்று அவன் மனதோடு விவாதித்துக் கொண்டிருக்க...

 

 

"அட அறிவாளி!! அப்புறம் மனசுல யோசி டா.. இப்போ போய் உன் பொண்டாட்டிய புடிடா" என்று அறிவுறுத்த வேக வேகமாக அவளின் பின் ஓடினான் ஸ்ரீராமன்.

 

 

ஸ்ரீராமனை காணாமல் அவனது அறையில் மோகினியோடு அடுத்து அவனை எப்படி வைத்து செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த கீசாவிற்கு ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம் மனதில்..

 

 

"இந்த ஸ்ரீராமனை ஏன் இன்னும் காணோம்?" என்று மோகினியிடம் கேட்க.

 

"எனக்கு எப்படி தெரியும் நானும் உன்கூட இங்கே தானே இருக்கேன்..‌ நீதான் இந்த ஊருல சாமியாருங்க நிறைய திரிகிறானுங்க.. அங்க வெளியில போனா நம்மை பிடிச்சுட்டு போய்டுவாங்கன்னு பயம் காட்டி இங்கே உக்கார வச்சுட்ட.. பாரு சுத்திமுத்தி நாலு சுவர தான் பாத்துக்கிட்டு இருக்கேன்" என மோகினி அலுத்துக்கொண்டது.

 

 

"இரு அவனை பிடிக்கலாம் முதலில்" என்ற கீசா எண்ண அலைகளை அவனை நோக்கி விட்டது. ஏற்கனவே நீலாம்பரியை விட்டதுபோல இவனையும் விட்டுவிடக்கூடாது என்று அவனை தனது கட்டுக்குள் வைத்து இருந்தது. கண்டிப்பாக இவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள் அதன் மூலம்தான் தன் நீலுக்குட்டியை பார்த்து வேண்டும் என்ற தவிப்பு எக்கச்சக்கமாக இருந்தது கீசாவிற்கு..

 

கீசாவின் எண்ண அலைகளில் ஸ்ரீ ராமன் இருக்குமிடம் தெரிய.. "அவனை கண்டுபிடிச்சிட்டேன். வா அவனை பார்க்கலாம்" என்று கீசா மோகினி அழைக்க.. 

 

"வா வா.. போலாம்" என்று குதூகலத்தோடு கிளம்பியது மோகினி, "அப்படியே என்னை சுத்தி பார்க்க கூட்டிட்டு போகணும் சரியா?" என்று சிங்கப்பூரின் அபரிமித வளர்ச்சி கண்களால் பார்த்துக் கொண்டே மோகினி கேட்க..

 

 

"வேண்டாம் மோகி.. இந்த ஊர்ல எச்சில் துப்பினால் கூட காசு கொடுக்கணுமாம்.. நமக்கு தமிழகம் தான் சரி.. நாளைக்கு ஊருக்கு திரும்பிடுவேன் ஸ்ரீராமன். அவனோட நாமும் போய் விடுவோம். வீணான ஆசை இல்லாமல் வைச்சுக்காதே!!" என்று காதலனிலிருந்து கணவனாய் மாறி அறிவுரை வழங்கியது கீசா..

 

"இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா!! சுத்த மோசம்!! ஒரு பொழுதுபோக்கு கிடையாது!! நாலு இடத்துக்கு கூட்டிட்டு போறது கிடையாது!! எப்ப பாத்தாலும் குரங்கு குட்டி போல நம்மை இழுத்து பக்கத்திலேயே வச்சுபாங்க.." என்று மோகினி தனக்குள் முணுமுணுத்துக் கொள்ள..

 

"என்ன தனியா உனக்குள்ள பேசுறா?" என்ற கீசாவிடம்.. "உங்க அருமை பெருமையை பாராட்டி பேசிகிட்டிருக்கேன்" என்றது அசட்டு சிரிப்போடு.. வழக்கமான மனைவியர் போல..

 

கீசா இங்கே பறந்து வந்து கொண்டிருக்க..

அங்கே ஸ்ரீராமனும் நீலாம்பரியின் பின்னால் ஓடியவன் அவள் கதவை சாத்த முன் தன் கையை விட்டு தடுத்து உள்ளே நுழைந்தான்.

 

அவனைக் கண்டு முதலில் அதிர்ந்தவள் அதற்குப்பின் கண்டுகொள்ளாத பாவனையோடு மகனை குளியலறைக்கு சென்று நல்ல தண்ணீரில் குளிப்பாட்டி அழைத்துக் கொண்டு வர அவனும் ஜம்பமாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

 

மகனே டவல் கொண்டு நன்றாக துவட்டி அவள் வேறு ஆடையை எடுத்து அணிவிக்க எத்தனிக்க.. அவனோ புது மனிதன் அருகில் இருப்பதை பார்த்து அன்னையின் பின்னே ஒளிந்து கொண்டு.. ஸ்ரீராமனின் முன்னால் உடையை மாற்ற முடியாது என்று மறுத்தான்.

 

 

அதைக்கண்ட ஸ்ரீராமுக்கு சின்ன மகிழ்ச்சி தான் சிறுவயதில் அடம்பிடிப்பது போலவே மகனும் செய்கிறான் என்று!! 

 

 

"அடேய் அடங்காதவன் மகனே!! ஒழுங்கா வாடா" என்று மகனே திட்டிக்விட்டு ஸ்ரீராமன் கண்களுக்கு தன் முதுகை காட்டி நின்று மகனுக்கு ஆடையை அணிவித்தாள். அப்போதுதான் உள்ளே நுழைந்து மருதுவோ கட்டிலில் அமர்ந்திருந்த ஸ்ரீராமனை அதிர்ச்சியோடு பார்த்து அக்காவையும் பார்க்க..‌ வேகமாக குளியலறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவன், "அக்கா நா வெளியில் இருக்கேன்" என்று சென்று விட்டான்.

 

 

"மரியாதை தெரிந்த மச்சான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஸ்ரீராமன் அடுத்து.. தன்னவளை பார்க்க.. அதுவரைக்கும் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபத்தை மகன் முன்பு காட்டாமல் ஆனால் "நீங்க ரூம் மாத்தி வந்துட்டீங்க நினைக்கிறேன்.. இது எங்க ரூம் வெளியில் போறீங்களா?" என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு..

 

"நீலாம்பரி.." என்று அவன் ஆரம்பிக்க கையை நீட்டி தடுத்தாள், "உங்களுக்கும் எனக்கும் எல்லாம் எல்லாமே முடிஞ்சு போய் மூணு வருசத்துக்கு மேல ஆகுது. இனி அதை தொடர எனக்கு விருப்பமில்ல.. வெளியில போங்க" என்று வாயில் பக்கம் கையைக் காட்ட..

 

 

"எல்லாம் முடிஞ்சு போச்சா? முழுசா மூணு வயசுல உக்காந்து இருக்கு பாரு" என்று சோபாவில் அமர்ந்து அன்னையின் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை காட்டினான்.

 

"இல்ல.. இல்ல.. அவன் எனக்கு மட்டுந்தேன் புள்ள.. உங்களுக்கு இல்ல" என்றவள் கூறி முடிக்க முன் இரண்டே எட்டில் பிள்ளையை நெருங்கியவன் அவன் வாரியணைத்து கொண்டான். நிமிலன் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவன் திரும்பி தந்தையை பார்த்தவன், புதிய ஆளாக இருக்கவும் உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்தான். 

 

 

"இந்த போன்ல பாக்குறியா செல்லம்.. இன்னும் நிறைய கேம் இருக்கு" என்று தனது ஐ போனை எடுத்து மகனிடம் எடுத்து அதிலிருந்து கேமை காட்ட பிள்ளையோ கேமில் நிலைத்திருக்க இவனும் நடுங்கும் விரல்களால் மகனை அங்குலம் அங்குலமாக தடவிப் பார்த்து சிலிர்த்தான். 

 

 

பிறக்கும் போது கையில் அள்ளி கொஞ்சம் முடியாத ஏக்கத்தை எல்லாம் தன் முத்தங்களாக கொடுத்து தணித்து கொண்டு இருந்தான் ஸ்ரீராமன். அவளோ சற்றும் அவனை கண்டுகொள்ளாமல் தன் போனிலிருந்து தம்பிக்கு அழைப்பு விடுத்தாள். இருவருக்கும் நிறைய பேசி ஏதாவது ஒரு முடிவு எடுக்கட்டும் என்று தான் மருது ஒதுங்கிப் போனது. திடீரென்று அக்கா அழைக்கவும் ஏதும் விபரீதமோ என்று பதறித் துடித்து ஓடிவந்தான்.

 

உள்ளே வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி!! அக்கா பத்ரகாளியாக சினத்தின் உச்சியில் இருக்க.. ஸ்ரீராமா அந்த ஸ்ரீராமன் போலவே அமைதியின் மறு உருவமாக மகனை கையில் அள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தான். இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள் அல்லது குழந்தையை பற்றி ஏதேனும் விசாரிப்பான் இடையில் நாம இருந்தால் இன்னும் பிரச்சினை பெரிதாக ஆகும் என்று மருது நினைத்திருக்க இங்கே அனைத்தும் தலைகீழாய்!!

 

"டேய்.. அந்த ஆள மொதல்ல வெளியே போ சொல்லடா" என்று அவள் கத்த..

 

மெல்ல ஸ்ரீராமனை நெருங்கியவன் அவன் கையிலிருந்த மருமகனை தூக்கிக் கொண்டான். ஆசையோடு சாப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளையின் கையிலிருந்த சாக்லெட்டை பிடுங்கியது போல ஸ்ரீராமன் விழிக்க.. 

 

 

"உங்கள நேர்ல பார்த்தா நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்கணும்னு என்ற நாக்கு துடிச்சு கிட்டு இருக்கு.. ஆனாலும்.. என்ற அக்காவுக்காகவும்.. என்ற மருமவனுக்காகவும் அமைதியா போறேன். இன்னும் ஒரு மணி நேரம் உங்களுக்கு டைம்?? கொஞ்சுவீங்களோ?? கெஞ்சுவீங்களோ?? மிஞ்சுவீங்களா?? எனக்கு தெரியாது!! உங்களுக்கான பிரச்சனையை இதோட தீர்த்துக்கோங்க.. அது நல்லதோ?? கெட்டதோ??" என்று ஸ்ரீராமனிடம் ஆரம்பித்து இருவருக்கும் பொதுவாய் கூறி முடித்தவன் நிமிலனை கையில் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டான்.

 

 

முதலில் சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது நீலாம்பரி எதுவும் பேசாமல் அருகில் இருந்த மோடாவில் அமர்ந்து கொள்ள.. 'அன்று ஆரம்பித்தது நானு தான்.. நானே தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும்' என்று நினைத்த ஸ்ரீராமன் அவள் அருகே நெருங்கி சென்று..

 

 

"உன்ற கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேனுங்க அம்மிணி" என்றான் அதிரடியாக..

 

"உன்ற மன்னிப்பை எதிர்பார்த்து இங்கன யாரும் காத்திருக்கல" என்று அவளும் திருப்பிக் கொடுக்க..

 

"சூப்பர்.. உன்ற கிட்ட காதல மட்டுமே கொடுக்க வந்திருக்கேனுங்க அம்மிணி" என்றவன் சட்டென்று அவள் முன் மடங்கி அமர்ந்து அவளது கையைப் பற்றிக் கொள்ள..

 

அவனின் காதலில் காணாத நடிப்பா?? ஏற்கனவே வகைவகையாக இவன் காதல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறான் அல்லவா இப்பொழுது மட்டும் எவ்வாறு நம்புவது என்று அவள் அவனை வெறித்தாள்.

 

"இங்கன பாரு அம்மிணி.. உனக்கு இது நம்புறது கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா இதான் உண்மை!! நானு காதல் கல்யாணம் இதையெல்லாம் வேண்டாம்னு தானுங்க அனுமார் பக்தனாய் இருந்தேன். எனக்குள்ள திடீருனு எப்படி அந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் வந்ததுனு எனக்கு தெரியல..

 இன்னைய வரைக்கும் யோசிச்சிட்டு இருக்கேன்.. எப்படி நானு அப்படி எல்லாம் நடந்தேனு.. எனக்கு விடையாய் கிடைத்தது என்னவோ நீ தான்?? 

 

"என்னது?? நானா?? நானா உன்னைய அப்படி செய்ய சொன்னேன்?" என்று அவள் வீறுகொண்டு எழ..

 

 

"அப்படித்தான் நானு நினைத்தேனுங்க.. ஏனா நீயு அப்ப பார்த்துக்கொண்டிருந்த தொழில் அந்த மாதிரி.. மந்திரம் மாந்திரீகம் மை பார்த்தல் இப்படி நிறைய?? நீயே என்னுடைய இடத்தில் இருந்து யோசிச்சு பாரு.. திடீர் திடீர்னு உன்னைய பார்த்தால் மாறும் நானு..‌ மத்த பெண்ணுக கிட்ட இந்த மாதிரி நடந்துக்கலேயே.. அப்போ என்ன நினைக்கிறது? உன்ற மேல தானே எனக்கு சந்தேகம் வருமுங்க" என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க..

 

நீலாம்பரியால் அதற்கு பதில் கூற முடியவில்லை. 'உண்மைதானே!! அவன் பேசியது எல்லாம். ஆனுமான் பக்தன் என்று இருந்த அவனை கீசா தானே இப்படி மாற்றியது.. எல்லாம் இந்த கீசா குரங்கால் வந்தது.. எல்லாத்தையும் போட்டு குழப்பி விட்டு எங்கே போய் உட்கார்ந்து கொண்டான். என் கையில் மட்டும் கிடைக்கட்டும் அவன்!! மகனே எலும்பு உடச்சு சூப்பு வச்சு குடிக்கிறேன்' என்று மனதுக்குள்ளேயே கீசாவை தாளித்துக் கொண்டிருந்தாள்.

 

"அதுதான் உங்க வாழ்க்கையில் இருந்து நானு விலகி வந்துவிட்டேன் இல்லையா? இந்த மாதிரி மந்திரக்காரி உங்களுக்கு தேவையில்ல.. நீங்க உங்க வெளியில போங்க.. நான் என்ற வழியில் அமைதியா போயிட்டு இருக்கேன்" என்றார் நெஞ்சில் பொங்கிய துக்கத்தை மறைத்தபடி...

 

 

"இரு அம்மிணி.. நானு இன்னும் முழுசா பேசி முடிக்கல" என்றவன்.. "இதுவரைக்கும் நான் சொன்னது நீயு என்ற கூட இருந்தபோது உன்ற கிட்ட நானு காட்டிய என்ற முகம்!! ஆனா இப்போ.." என்று அவன் இழுக்க..

 

"ஏன் இப்ப யார்கிட்டயாவது வேற முகத்தை கடன் வாங்கிக்கொண்டு வந்துட்டீங்களா?" என்று அவள் கிண்டலடிக்க..

 

மெல்ல இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன்.. "ஆமாம் என்னைக்கு நீயு விட்டு போனியோ.. அன்னையிலிருந்து உன்னை மறக்கோனும் மறக்கோனும்னு இன்னும் என்னைய அறியாமல் உன்னையே தான் நித்தமும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. என்னைய அறியாமலேயே இப்பொழுது முழுசா நீயு இங்கன வந்துவிட்ட அம்மிணி" என்று தன் இடது பக்கத்தை அவன் சுட்டிக்காட்ட..

 

நீலாம்பரி கீசாவினால் இவன் ஏதும் நாடகம் நடத்துகிறானா? என்று குழம்பி சுற்றுமுற்றும் தன் கண்களால் தேடினாள் அந்த அறை முழுக்க..

 

 

"நானு எவ்வளவு பீல் பண்ணி என்னோட லவ்வ சொல்லிக்கிட்டு இருக்கேன் அம்மிணி.. நீயு என்னடான்னா சுத்தி முத்தியும் என்னமோ பார்க்கிறே.. ஏதாவது அடிக்கிறதுக்கு தேடுறியா மாமன?" என்று அவளை பீதியுடன் பார்த்தவன், "எதா இருந்தாலும் இதமா பதமா சொல்லு நானு கேட்டுக்கிறேன் ஆயுதத்தை கையில் எடுக்க கூடாது அம்மிணி" என்றான் பாவமாக..

 

'கீசாவும் இவன் அருகில் இல்லை.. அப்படியே கீசா இருந்தது என்றால் என்ற கண்களுக்கு தெரிந்திருக்குமே? அப்போ உண்மையா தான் அவன் பேசுகிறானா?' என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் நீலாம்பரி.

 

சட்டென்று அவள் முன் மண்டியிட்டவன், "நெசமா.. இந்த சிங்கப்பூர் பயணம் முடிந்து போகும்போது எங்கிருந்தாலும் உன்னைய தேடி கிட்டு வரணும்னு நெனச்சிகிட்டு தான் இருந்தேன். ஆனா இப்படி என்ற கண்ணுக்கு முன்னால் லட்டு கணக்காய் நீயு வந்து நின்னதை நானு எதிர்பார்க்கவே இல்ல அம்மிணி.. கூடவே போனஸா இன்னொரு லட்டு" என்றான் காதலோடு..

 

ஸ்ரீராமனின் இந்த திடீர் மாறுதல் எல்லாம் நம்பவே முடியவில்லை.. "இந்த நாக்கு வரம்பு இல்லாதது நாலும் பேசும்!! அன்னைக்கு காசு பணத்துக்காக வந்தவ என்னைய சொன்னீக.. இப்போ அதே காசு என்ற கிட்ட இருக்கறதுக்காக என்னைய உங்க கூட கூப்பிட்டு இருக்கீகளா?" என்று இவள் தீர்க்கமாக கேட்க..

 

அதில் கட்டுக்கடங்கா கோபம் பெருகியது ஸ்ரீராமனுக்கு. ஆனாலும் அவர் கேட்பது உண்மைதானே!! "இங்கே பாரு அம்மிணி.. இப்போ நீயு சம்பாதிக்கிறதில் ஒத்த பைசா கூட எனக்கு வேணாம். நல்லா'ஸ் மசாலாவை உன்ற தம்பி கிட்டே ஒப்படைச்சிட்டு வா.. எனக்கு நீயு மட்டும் போதும்" என்றான் அழுத்தம் திருத்தமாக ஸ்ரீராமன்.

 

அப்பொழுதும் நீலாம்பரிக்கு மனது தெளியவில்லை.. "ஒருவேளை பிள்ளை இருக்கானு பாக்குறீகளா? நாளைக்கு அவனை வச்சு சொத்துக்காக வந்தேன் நீங்க ஏசுவீக.. என்ற பிள்ளைக்கு தேவையானது சம்பாரிச்சு கொடுக்க எனக்கு தெரியும்" என்று அவள் கூற..

 

எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறாளே.. "லூசாடி நீயு.. இல்ல லூசா நீயுனு கேட்கிறேன்.. புள்ள இருக்கிறது இப்போ அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான்டி எனக்கு தெரியும். அதுக்கு முன்ன உன்னைய பார்த்ததுமே பைத்தியகாரன் மாதிரி நானு தங்கியிருந்த இடத்தை விட்டுட்டு, உன்ற பின்னாடியே வந்து இங்க ரூம் போட்டு இருக்கேன். உன்னைய எப்படியாவது சமாதானப்படுத்தி என்ற காதலை புரிய வைத்து கூட்டிட்டு போகலாம்னு.. இன்னும் என்ன சொல்லி உனக்கு என்னைய புரிய வைக்கிறது எனக்கு தெரியலடி" என்றவன் அடுத்த நொடி அவளது கன்னத்தை பற்றி தன்னருகே இழுத்தவன் அவளது இதழ்களில் தனது காதலை கவியாக எழுத தொடங்கி இருந்தான்.

 

அவளின் மெலிந்த இடைப் பற்றி தன்னருகே இறுக்கிக் கொண்டான். முகம் முழுவதும் அவளை முத்தமிட்டான். அங்கங்கே மெல்லக் கவ்வினான். நீலாம்பரி கீசாவின் கட்டு இல்லாமலேயே ஸ்ரீராமனின் இந்த காதலை கண்டு மலைத்து தான் போனாள்..

 

 

அவனது முத்தத்திற்கு எதிர்வினையாக "மாமா.. மாமா.." என கிறக்கத்துடன் முனகி அவனைத் தழுவிக் கொண்டாள். 

இதுவரை அவளது மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் எல்லாம் விடை பெற.. சந்தோசம் மனதெங்கும் பொங்க..

அது அவள் உடல் முழுக்கப் பரவி அவளை மெல்ல மெல்ல மேலெழுந்து மிதக்க வைத்தது. அவள் உடலுக்கு சிறகு முளைத்து விட்டதோ என்று கண்களை மூடியபடி எண்ணினாள்.

 

 

 அவள் வானில் எழுந்து பறக்கத் தொடங்கிய நொடி சட்டென சிறகொடிந்த பறவை போல தரையில் வீழ்த்தப் பட்டதாய் உணர்ந்து திகைத்தாள். பின் பக்கம் திருப்பி பார்த்தாள் ஏதோ உள்ளுணர்வுடன்.. அங்கே கீசா மோகினியுடன் நின்று அவளைப் பார்த்து தனது குட்டிக் கண்கள் விரிய ஆனந்த அதிர்ச்சியோடு அவளை பார்த்து சிரித்தது.

 

 

ஸ்ரீராமன் உண்மையிலேயே அவள் மீது அன்பில் இருப்பதாய் நினைக்க.. 

இந்த கீசா வந்து இடையில் குதிக்க..

அவளோ கடும் கோபத்தோடு அதனை முறைக்க..

 

கண்களாலேயே ஸ்ரீராமனை சுட்டிக்காட்டிய கீசா.. "அவன் என் கட்டில் இல்லை நீலுக்குட்டி.. நிஜமாவே அவன் உனக்காக ஏங்கி தவிக்கிறான். அது எனக்கு நல்லாவே தெரியும். உன்னை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் மூலமாகவது உன்னை பார்க்கலாம் என்று தான் அவன் பின்னே நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நம்பு நீலுக்குட்டி" என்று கண்ணீர் வழிய அது மனுதுக்குள் கூற..

 

சிரிப்புடன் "பிறகு பேசுகிறேன் உன்னிடம்" என்று அவள் கண்களை காட்ட.. அதுவும் மகிழ்வுடன் மோகினியோடு ஸ்ரீராமன் இருந்த அறைக்கு சென்று விட்டது.

 

அன்று இரவு மகனுடனும் மனைவியுடனும் ஸ்ரீராமன் தங்கி விட... அக்காவின் வாழ்க்கை நேரான சந்தோஷத்துடன் ஸ்ரீராமன் புக் செய்த அறையில் மருது தங்கினான். மறுநாள் காலை விமானம் மூலம் அவர்கள் நேராக மதுரை வந்தடைந்தனர்.

 

அங்கிருந்து நேராக பொள்ளாச்சி செல்லலாம் என்று ஸ்ரீராமன் கேட்க.. இம்முறை மருது விடாப்படியாக மறுத்துவிட்டான். 

 

 

"ஏன்டா இதுவரைக்கும் நல்லாத்தானே போனது?" என்று மச்சானை பார்த்து இவன் கேட்க..

 

"என்ற அக்காவை நீங்க உங்க குடும்பத்தோடு வந்து அழைச்சிட்டு போனாதான் அவளுக்கும் பெருமை.. இத்தனை நாள் அவள் வடித்த கண்ணீருக்கும் வெகுமதி" என்று நல்ல சகோதரனாய் அவன் கூற.. அதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவன், "அப்ப நானும் உங்க கூடவே வரேன்" என்றான் மனைவியையும் மகனையும் பிரிய முடியாமல்!!

 

மனைவியுடன் தேனி நோக்கி சென்றவன் தன் அப்பாவிற்கு அழைத்து உடனடியாக அம்மாவை அழைத்துக் கொண்டு தேனிக்கு வர சொன்னான்.

 

என்ன? ஏது? என்று புரியாமல் அலறியடித்து வந்த சங்கரபாண்டியனுக்கும் நாச்சிக்கும் மகன் மனைவியோடு காட்சியளித்த மகனை கண்டதில் அப்படி ஒரு ஆனந்தம்!!

 

சொக்க ரெடியா??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top