அழகன் 11
“பொம்மா..” என்று தாபம் பொங்க அழைத்தவனை கண்டவள் முகமோ அந்தி வானம் என வெட்கிச் சிவக்க..
அவளின் இந்த வெட்கச் சிவப்பில் அழகனின் மனதினுள் மோக மத்தாப்புகள் சிதறின..!
“நெசமாவா டி பொம்மா?” என்று அவன் கேட்க..
அவளோ வெட்கம் கொண்டு மன்னவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொள்ள…
இருவரின் தேகங்கள் உரசலில்.. மெல்லிய அழுத்தத்தில்.. அங்கம் சொக்க வைக்கும் சுகமிருந்தது இருவருக்குள்ளும்!!
உடல் கூசி மெல்ல விதிர்த்து நெளிந்து அவள் விலகப் பார்க்க..
“ம்ஹீம்..நீ எங்கிட்ட வர்ற வர தேன் உன் இஷ்டம்.. இனி என் இஷ்டமடி” என்றவனோ அவள் மூக்கை தன் மூக்கோடு உரசி அவளுள் தாப நெருப்பை பற்ற வைத்தான்…
அவளின் கனிந்த கன்ன கதுப்புகளை கவ்விச் சுவைத்து அவளுள் பற்றிய தாப நெருப்பை ஊதி பெருக்கினான்.
அவள் பட்டு கழுத்தில் நெளிந்து ஓடிய பச்சை நரம்புகளில் இச் இச் என்று அழுத்தி முத்தமிட்டு அந்நெருப்பு உடல் முழுவதும் பரவி விரவ செய்தான்..
அவளும் அவன் பற்ற வைத்த நெருப்பில் துவண்டு போனாள்..!
அவளின் மென் கழுத்துப் பரப்பு முழுவதும் அவனின் ஆளுகைக்கு வந்தது!!
“ம்மாமா.. அது.. வந்து.. நாம மொத புரிஞ்சுண்டு…” என்ற அவளின் வார்த்தைகள் எல்லாம் அவன் இதழ்களில் சென்று முடிவடைந்தன..!
“மொத பொருத்தமே இது தான் பொம்மா, இவ்ளோ நாளா உனக்கு பிடிக்கலையோன்னு தான் கொஞ்சம் தயங்கி தள்ளி இருந்தேன்.. எப்போ நீ என்ன திங்கிற மாதிரி பார்த்தியோ அப்பவே எனக்கு புரிஞ்சிட்டு.. இனி இந்த அழகன் தேன் ஆண்டாளை ஆளப்போறான்..!” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டும் கடித்தும் சிவக்க வைத்தான் பெண்ணவளை!!
மூச்சு முட்டும் முத்தங்களும்..
இடை இறுகிய அணைப்பும்..
வெம்மை மூச்சுகளும்..
சின்னச் சின்ன சிணுங்கல்களும்..
தாப முணகல்களும்..
பொம்மா.. என்ற கிறங்கிய அழைப்பும்..
ம்ம்ம்.. என்ற மயங்கிய மறு வார்த்தையும்..
வெகு நேரமாய் அங்கே.. அவ்வறையையே சிவக்க வைத்தன..!
மெல்ல அவளை பிரித்தெடுத்து அவளின் மென்மைகளை தாங்கி நிற்கும் நெஞ்சில் முகம் புதைத்தான். அவன் கட்டிய பொன் மஞ்சள் தாலி அவன் முகத்தில் குத்த.. பற்களினால் அதனை கவ்வி அவளை மோகனமாக பார்த்தவன், பின் அவளுக்கு.. இல்லையில்லை அவனுக்கு இடையூறுயின்றி அதனை ஒதுக்கினான்..! அவளோ நெளிந்து விலக முனைய..
“ஏன் பொம்மா… பிடிக்கலையா?” என்று அவன் கிறக்கம் இறங்காமல் பாவமாய் கேட்க..
ஏனோ அந்தக் குரல் அவளை அசைத்துப் பார்த்தது.
அவன் அவளின் சொந்த அத்தை மகன் தான்.. அவளிடம் சம்மதம் கேட்டு தான் திருமணம் செய்தார்கள்.
ஏனோ ஆரம்பத்தில் இந்த கரடு முரடான ஆணை ஏற்க அவள் மனம் மறுதலித்தது..!
இப்பொழுது மற்றவர்கள் பார்வையில் தன் கணவன் கண்ணனாய் தெரிய.. அதில் கோபம் கொண்டது பெண் மனது..!
“எப்படி இவளுங்க சைட் அடிக்கலாம் என் புருஷனை?” என்று பொறாமை உணர்வு பொங்கியது..!
பெண்ணும் அவள் மனமும் சட்டென்று புரிந்து கொள்ள முடிய ஆழ்மன ரகசிய பெட்டகங்கள்..!
அதில் இருக்கும் ரகசியங்களை ஆணவன் என்ன சில சமயம் பெண்ணவளாலேயே புரிந்து கொள்ள முடியாது..!
முடியாது என்று முறுக்கிக் கொள்ளும்..!
பின் அதே வா என்று ஏங்கி நிற்கும்..!
வேண்டாம் என்று தள்ளி போகும்..!
பின் அதே வேண்டும் என வேண்டி நிற்கும்..!
பிடிக்கலை என்று புறம் தள்ளும்..!
பின்பு அதே பிடித்தம் என்று ஒட்டி நிற்கும்..!
இப்படி குழப்பத்துக்குள் இருந்தாலும்..
இவன்தான் என்னவன்..! இவன் தான் என் உயிரில் கலந்தவன்..! என்று ஒரு முறை முடிவெடுத்து விட்டால், உயிர் போகும் வரை அவனை விட்டு பிரிய மாட்டாள் பெண்..!
அப்பொழுது தயங்கி விலகி நின்றவளோ.. இன்று என் கணவனை.. என் உரிமையை இவர்கள் எப்படி சைட் எடுக்கலாம் என்று அவனை உற்று உற்றுப் பார்த்து ஏதோ காதல் பற்றிக் கொண்டது அவளுள்..!
“என் புருஷன்..! அழகன்.. கண்ணன் எனக்கு தாண்டி போங்கடி..!” என்று முடிவெடுத்து தன்னையே அவனுக்கு தர முனைந்தாலும், ஏனோ சற்றே தயங்கி நின்றாள்.
அதுவும் அந்த தயக்கம் கூட அவனின் தடுமாற்றமான பார்வையில் தகர்த்து எறியப்பட.. இழுத்து அணைத்தாள், அவனை.. அவனின் இதழை!!
மயங்கி கிறங்கி மெல்லிய சிணுங்கலுடன் அவள் கைகள் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து நெறித்தன..!
அவளின் செய்கையில் அவனுள் உணர்ச்சி பிரவாகம் எடுக்க..
அழகனின் நெடு நாளைய பசித்த உதடுகளும் அவளின் இதழ்களைத் இறுக்கி அதக்கி கொண்டன தன்னுள்!! கொடுப்பதா வேண்டாமா என்கிற உணர்ச்சித் தவிப்பு எல்லாம் இல்லை அவளிடம்!!
அனைத்தும் அவனே!!
அனைத்தும் அவனுடையதே!!
அதை அணைத்தே நிரூபித்தாள் இறுக்கமாக.. இன்னும் ஆழமாக..
சற்றே அழுத்தமாக..!
அவன் உதடுகள் அவளின் ஈரக் கழுத்திலும் சிவந்த நெஞ்சுப் பரப்பிலும் இடைவெளியின்றி முத்தங்களை வாரியிறைத்து கொண்டிருந்தன நொடி கூட வீணடிக்காமல்!!
எல்லை மீறா அழகிய சங்கமம் கொண்டவனோ, இன்னும் வேண்டும் என்று ஏங்கி நின்றான்.
அதைப் புரிந்து கொண்டு பாவையவளோ, தானே அதனை முன்னெடுத்தாள்..!
ஆண்டாள் அவனை காதலாக பார்த்து அவன் மார்பில் முத்தமிட்டு தன் சம்மத்ததை தெரிவித்த நொடியே.. அவள் கன்னத்தை பற்றி இதழ்களை கவ்விக்கொண்டான் அழகன். இருவருக்கும் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியவில்லை.
பள்ளிப் பாடம் மட்டுமே இருவரும் அறிந்திருந்தனர். பள்ளியறை பாடம் இருவருக்குமே புதிது..!!
எதை தொடங்குவது?
எதை முடிப்பது?
எதை தொடுப்பது?
எதை தொடர்வது?
எதை அள்ளுவது?
எதை பருகுவது? என்று அறியாத பாடத்தை கையில் எடுத்த இருவரும், இதழ் என்னும் கையேடு கொண்டு அப்பாடத்தில் முன்னேறினர்,
இருவரும் தங்கள் மன விருப்பத்தை ஒருவர் மற்றொருவருக்கு முத்தச் சந்தங்களும்.. சத்தங்களும் மூலம் வெளிப்படுத்தினர் போட்டி போட்டுக் கொண்டு..!
வெண் பஞ்சு மேகத்திலே உலா வரும் நிலாவும்..
சிலுசிலுவென்ற காற்றும்..
இடையூர் இல்லா தனிமையும்..
பெண்ணவளின் தளிர் மேனியும்..
அவளின் அருகாமையும்..
அழகனின் தாபத்தை பற்ற வைக்க..
தன் வசம் இழந்து அவள் வாசத்தை பிடித்தான் அவளின் மார்பில் முகம் புதைத்து.
அவளோ தன் கிறங்கிய கண்களை மூடி மெல்ல முனகியபடி அவனை இறுகத் தழுவினாள். தன் முகத்தில் இழையும் அவன் முகத்தில் அங்கங்கே முத்தங்களை வாரி இறைத்தாள் வள்ளலாக!!
ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு தங்களை மறந்து வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
தீண்ட தீண்ட போதவில்லை அவனுக்கு
அவள் மீதிருந்த மோகம்!!
திணறத் திணற வேண்டுமென கேட்டது அவள் இளமையின் மீது கொண்ட தாகம்!!
அவள் கண்களைப் பார்த்தான். மிக ஆழமான பார்வை!!
மிக மிக ஆழமான பார்வை!! அதற்கு என்ன பொருள் கொள்வதென்று புரியவில்லை அவளுக்கு.
அவள் மீதான மோகமா? தாபமா? இல்லையில்லை இது எதுவும் இல்லை அக்கண்களில்... அதைத் தாண்டி வேற எதுவோ?? அவளின் உயிர் வரை ஊடுருவி சென்றது.
அவனின் மூச்சுக் காற்று அவள் முகத்தைத் தீண்ட.. மெல்லிய இளஞ்சூடாய் அது அவளை தகித்தது. இளங்குளிரில் இறுகிச் சிலிர்த்த அவளின் உடலுக்கு இந்த வெம்மை நன்றாக இருந்தன. இரவு விளக்கின் ஒளியில் தெரிந்த அவளது மென் இளமை வனப்புகளை ரசித்து பார்த்தான்.
கைகளோ பரபரப்பரத்தன அத்து மீறிட..!!
காதுகளோ இன்ப முனகலை ரசித்திட..!
இதழ்களினால் இன்பம் சுவைத்திட..!
எல்லையில்லா மோகத்தோடு அவள் மீது பரவி படர்ந்திட..!!
அவளின் அழகினை மொத்தமாக அள்ளிப் பருகிட..!!
அவளை மொத்தமாக ஆட் கொண்டிட..!!
சில நொடிகளில் மோகம் காட்டுத் தீ போல அவனின் மென் நரம்புகளை பற்றிக் கொள்ள.. அடக்கமுடியாம காட்டுத்தீயில் உடல் முறுக்கிட.. முத்தம் ஆவேசமானது அவள் இதழ்களோடு!
அவனின் அதீத அணைப்பும்..
இறுகிய தழுவலும்.. இறுக்கமும் மூச்சுத் திணறச் செய்தது பாவையை..!
இதழ்களை விடுத்து பிரிந்த நொடியே அவனின் உதடுகள் அவளின் வெண் கழுத்துக்கு இறங்கின. சங்கு கழுத்தின் மென்சதையை கடித்து கவ்வியிழுத்துச் சப்பின... கழுத்துப் பரப்பெங்கும் தவித்து அலைந்தன..
அவன் என்றென்றைக்கும் கேட்க விரும்பிய அவள் இதழின் மெல்லிய முணகல் இசையாக மாறி அவனை தனக்குள் பிரவாகம் செய்திட அழைத்தது..!
அதன் பின் அவளது உடைகள் களையப்பட, அவளோ வெட்கம் கொண்டு கட்டிலில் போர்வையால் தன்னை மறைத்துக் கொள்ள.. அழகனோ கள்ளவனாய் மாறி கட்டிலை நெருங்கி அவள் அழகை மறைத்த போர்வையை களவாடினான்.
வசந்தம் வீசும் வாலிபத்தின்.. இளமை ரகசியத்தை தனது கைகளால் மறைக்க முயன்று தோற்றாள் ஆண்டாள்.
நாணம் கொண்ட மாது அவனையே போர்வையாகி போர்த்தி கொள்ள..
அவனோ ஆழமாய் முத்தமிட்டு அதரங்களைப் பிரித்தான். அவனுக்கும் மூச்சு வாங்கியது. அவனுடலும் லேசாக படபடத்தது. அவள் கன்னங்களை முத்தமிட்டு மெல்ல கடித்தான். அவள் சிணுங்கி திரும்ப, வலது பக்கக் கழுத்தில் முகம் புதைத்தான். அங்கேயும் மெல்லிய சத்தத்துடன் அழுத்தி முத்தமிட்டு மெல்லக் கடித்துச் சப்பினான். இதழ்களால் அவளை கொண்டாடினான். அவை முத்தங்களாகவும் சில சமயம் அங்கங்கே கடிகளாகவும்... அவள் விம்மி விம்மித் தணிந்தாள். அவள் நெஞ்சில் முகம் புரட்டி நிமிர்ந்தான்
நீள் மூச்சு விட்டு தளர்ந்தபோது ஆண்டாளோ மிகவும் களைந்திருந்தாள். அந்தப் பெண்மைக் கசங்கலில் அவளுக்கு துளியும் வருத்தமில்லை. மனதின் சிறைகள் உடைபட்டது போல மகிழ்ச்சி பல மடங்கு கூடியிருந்தது.
"பொம்மா.. நான் கொஞ்சம் உன் கிட்ட பேசணும் டி " என்று அவன் ஆரம்பிக்க..
"உஷ்ஷ்..!! இப்ப ஏதேனும் ஆரம்பிச்சு இது மோன நிலைமையை மாற்றாதேள்.. இப்படியே இந்த சந்தோஷத்தோடையே தூங்கலாம் னா" என்றாள்.
"தூக்கமா??" என்று குறும்பாக சிரித்தவன், அவள் மீது படர்ந்து அவளுடன் கூடத் தொடங்கியபோது நெஞ்சு நிறைந்த காதலுடன் அவனைத் தழுவிக் கொண்டாள் மாது. காலோடு கூடிய உறவிது அவளின் பெண்மையைக் கனிய வைத்தது. ஒவ்வொரு அங்கத்திலும் இனித்தது. முத்தங்களும் முனகலும் மூச்சிரைப்புமாக நிகழ்ந்த ஆழமான உறவுக்குப் பின் இருவருமே சிறிது கண் சொக்கி விட்டனர்.
காலையில் வழக்கம் போல கணவன் அருகில் இருக்க மாட்டான் என்று எண்ணியே அவள் விழித்தவள், கைகளை உயர்த்தி நெளிவு எடுக்க, அவளின் மிச்ச சொச்ச அழகினை கண்களால் பருகிய படியே சற்று தள்ளி அமர்ந்திருந்தான் அழகன்..!
“வாவ் பொம்மா.. நெசமா பொம்மையே தான்..! நேத்த விட இன்னைக்கு தேன் பாடம் படத்தோடு தெளிவா நல்லா புரியது டி” என்றவனின் வார்த்தைகளில் அவள் நாணி போர்வையால் தன்னை மறைத்துக் கொள்ள…
“ம்ஹீம்.. இப்படி கொஞ்சமா கொஞ்சம் உன் அழகையெல்லாம் நான் பார்த்தா.. அவ்வளோ தான் டி.. இன்னைக்கு வர்த்தகதுறை சங்கத்துல ஒரு முக்கியமான கூட்டம் இருக்கு நான் அதுக்கு போகனும். நீ எழுந்தா என்ன தேடிவியோனு உட்கார்ந்து இருந்தேன்.. ஆனா..” என்று உதட்டை பிதுக்கியவன்
“கொஞ்சம் கூட நீ என்ன தேடல.. டி பொம்மா..” என்றதும் அவளோ பேந்து பேந்து விழித்து
“எதுக்கு னா தேடனும் உங்கள?” என்றாளே பார்க்கலாம்..!
“சுத்தம்..! உன்கிட்ட போய் எதிர்பார்த்தேன் பாரு.. என்ன சொல்லணும். இப்பதான் அம்மணி பாதி தூரம் பழகி பொண்டாட்டியே வந்திருகீக.. மீதியும் பொறுப்பா வந்து சேருக” என்றவன்,
“சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வந்து சேரு. நான் கிளம்புறேன்..!” என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு கிளம்பி விட்டான்.
பெரும்பாலும் ஆண்டாள் காலையில் 6:00 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவாள் தான். ஆனால் அவளுக்கு முன்னே எழுந்து உடற்பயிற்சி செய்து வயலுக்கு சென்று பின் கடை கண்ணி என்று அழகனின் நேரம் பரபரப்பாக இருக்கும்.
இவளோ எழுந்து குளித்து அமைதியாக கீழே வந்து விளக்கேற்றி கண்களை மூடி இறைவனை வேண்டி விட்டு, அதன் பின் அப்பத்தா மற்றும் அத்தையோடு ஐக்கியமாகி விடுவாள்.
அதற்குள் அங்கயற்கண்ணியும் பள்ளிக்கு கிளம்பி இருப்பாள். அவளோடு சேர்த்து உண்டு விடுவாள் ஆண்டாள்.
ஏனென்றால் அழகன் எப்பொழுது வருவான் என்பது தெரியாது..!
வருபவன் குளித்து உடைமாற்றி உண்டுவிட்டு அவன் கடைகளை பார்க்க சென்று விடுவான்.
ஆனால் மகன் சாப்பிடும் நேரம் மருமகளை அருகில் நிறுத்தி “மாமாவுக்கு பரிமாறு” என்று விட்டு கலையரசி தள்ளி சென்று விடுவார்.
திருமணம் முடித்து வந்த இந்த 15 நாட்களில் இதுதான் வழக்கம்..! இதுதான் பழக்கம்..!
இவள் தாமதமாக எழுந்தாலும் :ஏன் தாமதமாக எழுந்தாய்?’ என்று யாரும் கேட்க போவதில்லை..!
ஆனாலும் ஆறு மணி என்பது அலாரம் அடிக்காமல் ரங்கநாயகி பழகிவிட்ட பழக்கம்..!
இன்றோ அது எட்டு மணியாய் மாறி இருந்தது..!
“அச்சோ.. அத்த என்ன சொல்லப் போறாளோ?” என்று குளித்துவிட்டு வழக்கம் போல பூஜை அறை சென்று கும்பிட்டு விட்டு வந்த மருமகளை கண்டவர் எதுவும் பேசாமல் ஒரு சன்ன சிரிப்போடு உணவை எடுத்து வைக்க.. அவளுக்கோ அவரை நிமிர்ந்து பார்த்து வெட்கம் தின்றது.
கூடவே அப்பத்தாவும் “என்ன பேத்தி.. ஆண்டாளு.. இப்பதேன் காலை பலகாரம் சாப்பிட வரியா? என்று சூசகமாக கேட்க.. அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையை மட்டும் வேக வேகமாக ஆட்டிவிட்டு அவசரமாக உணவை உண்டாள்.
“ரொம்ப எல்லாம் வயித்த காயப்போடாத ஆத்தா..” என்றவரை கண்டவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், அசட்டு சிரிப்போடு விழித்தவளை கண்டவருக்கு அனைத்தும் புரிந்துவிட..
“ம்ம்ம்.. ம்ம்ம்…” என்று சற்றே சிரிப்போடு குரல் கொடுத்தார் சொக்கியம்மாள்.
அச்சிரிப்பின் அர்த்தம் அனைவருக்கும் புரிவதாய்..!
“இந்த வயசுல இந்த ஆச்சிக்கு ஏன் இவ்வளவு நக்கல்ன்னு தெரியல.. இவர..” என்று பள்ளி கடித்தாள் ஆண்டாள்.
அவசரமாக சாப்பிட்டு எழுந்தவள் “அத்த தலையை வெளியில காயவைக்கிறேன்” என்று அருகில் இருந்து தென்னந்தோப்பு பக்கம் ஓடிவிட்டாள்.
அங்கே ஓடி வந்ததும் தான் அவளுக்கு சற்றே மனம் சாந்தமடைந்தது..!
“ஏன் இந்த கிழவிங்க எல்லாம் எப்பொழுதும் கண்ணுல சிசிடிவி கேமரா வச்சுக்கிட்டு எப்பொழுதும் சின்ன பிள்ளைகளை கண்காட்சிக்குட்டே இருக்காங்க? அவங்களுக்குன்னு ஒரு பிரைவேசி இல்லையா? வரட்டும் இன்னைக்கு மாமா.. அதுவும் என் பக்கத்துல வரட்டும்.. முதல்ல உங்க அப்பத்தா கிழவியை ஆஃப் பண்ணுங்கோ.. அதுவும் அந்த கண்ணுல தெரிகிற நக்கல முதல்ல ஆப் பண்ணுங்கோன்னு சொல்லி வைக்கணும்..!” என்று தன் போல மனதில் சொக்கி அப்பத்தாவையும் அவளை சொக்க வைத்த கள்ளழகனையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளின் தளிர் விரல்களோ அவள் நீள முடியை தட்டி விட்டு உலர்த்தியது..!
அந்நேரம் அவளை நோக்கி ஒரு காளை வேகமாக சீறி வந்தது.
அதுவும் எப்படி? சீவிய கொம்பை மண்ணில் அவ்வப்போது சீற்றிய படி சீற்றமாய் அவளை நோக்கி ஓடி வர..
ஆங்காங்கே தென்னந்தோப்பில் வேலை செய்தவர்களோ “காள என்ன இம்புட்டு சீற்றமா வருது? ஏய் ஆத்தா.. அந்த காள வருது பாரு.. ஓரமா ஒதுங்கு ஆத்தா..” என்று அவர்கள் கத்த..
இவளோ அதிர்ச்சியில் அவ்வளவு பெரிய கொம்பை கொண்ட மாட்டை தன் அருகில் கண்டு பயந்தவள் சிலை என சமைந்து நின்றாளே ஒழிய.. விரைந்து ஓடும் எண்ணத்தை மறந்து விட்டாள்..!
அவள் கிட்டே வரும் ஒரு நொடிக்கு முன் சத்தமாக ஒரு விசில் சத்தம் கேட்க.. சரி வந்த காளையோ அப்படியே நின்றது..!
ஆண்டாளோ இறுக்க கண்களை மூடி காதுகளை இரு கைகளால் பொத்திக்கொண்டு தலையை குனிந்து இருந்தவள் நிமிரவே இல்லை..!
சட்டென அவள் தோளில் ஒரு கைப்பட அதிர்ந்து பார்த்தவள், அங்கிருந்த அங்கயற்கண்ணியை சற்றும் எதிர்பார்க்கவில்லை..!
“நான் பயந்தே போயிட்டேன் அத்தாச்சி..!” என்று வெடவெடத்த குரலில் அவள் கூற..
“அடியே பால்கோவா… அது ஒன்னும் உன்னை முட்ட வரல… இவேன் என் தம்பி காங்கேயன்..! தென்னந்தோப்பு பக்கத்துல ஒரு சின்ன குட்டை இருக்கு.. அதுல இவன குளிப்பாட்டா கூட்டிட்டு போறேன்.. அதுக்கு தேன் சின்ன புள்ள சந்தோசமா ஓடி போறான்..” என்றாள், காங்கேயின் கழுத்தில் முகத்திலும் தடவி கொடுத்துவிட்டு பின்பு அவன் முதுகிலே ஒரு கையை வைத்து ஸ்டைலாக நின்றாள் அங்கயற்கண்ணி..!
“எது சின்ன புள்ள சந்தோசமா ஓடுதா? ஒரு நிமிஷம் என் கொலையே நடுங்கி போச்சு..!” என்றவள் இன்னும் பயத்திலிருந்து தெளியாதவள், அங்
கயற்ஙண்ணியையும் அவளை விட உயரமாக நின்றிருந்த காளையையும் மாறி மாறி பார்த்தாள்.
“எம்மாம் பெருசு..” என்று எச்சில் விழுங்கிக் கொண்டவளை,
“வா வா காங்கேயனோட குளியல பார்க்கலாம்” என்று இழுத்துக் கொண்டு சென்றாள் அங்கயற்ண்ணி..!
தொடரும்..
