தேன்மழை💞 (14)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  
  • குடிக்க மாட்டேன் என கூறியவன் மட்டையாகி படுத்திருந்தான் ஹோட்டல் அறையில். யாதவ் ஏன் அவனை தொந்தரவு செய்ய வேண்டுமென நினைத்தவன், அறைக்கு சென்று குளித்து முடித்து ஆயத்தமாகினான் ஊருக்கு செல்ல.

 

நண்பனை விட்டு ஊர் திரும்புவது அவனுக்கு பெரிதான கவலையாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அவன் வெகுநேரம் மனம் விட்டு பேசியது என்னவோ, யாதவிடம் மட்டுமே. அவனுக்கும் அவன் இப்படி மௌனம் ஆன காரணம் நன்கு அறிந்த ஒன்று தான்.

 

அவன் கூறியது போல, அவளை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டுமென தீர்மானித்தான். அதிலும் குடித்து விட்டு அவன் செய்த ரகளை சிரிப்பை உண்டாக்கிட, தானாக புன்னகைத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்றிருந்தான். தனியே தூங்கிய புது மனைவி தான், அவனை சுட்டெரிப்பது போல் பேக் செய்து கொண்டே பார்த்தாள்.

 

"ஃப்ரண்டை பாத்தா ஒய்ஃப் கூட கண்ணுக்கு தெரியாதோ சாருக்கு?" என அவள் நக்கலாக வினவ, யாதவ் அதை சீரியசாக எடுத்துக் கொண்டான்.

 

"தினமும் தானே உன்னை பாத்துட்டுருக்கேன். அவனை பாக்குறது எப்போவோ ஒரு டைம் தான்" என்றவன் வார்த்தையும், முகமும் கோவமாக இருப்பதில் அதிர்ந்தாள் ரூபியா.

 

"நான் இப்போ என்ன கேட்டேன் யாதவ்?"

 

"ரூபியா ஜஸ்ட் லிசன், என் ஃபேமிலி மெம்பர்ஸ் பத்தி கூட பேசு. பட் பிரதீஷ் பத்தி எதுவும் பேசாதே." என காரணமே இல்லாமல் கோவம் கொள்ள, அலரவள் முகமோ வாடியது.

 

"ஸாரி யாதவ்.." என்றவள் பட்டென பேக் செய்து வெளியே செல்ல, உள்ளிருந்து எட்டி பார்த்தவனுக்கு அதை விட கோவம் தலைக்கேறியது.

 

'காசு இருக்குற திமிரு இதெல்லாம். ஊருக்கு போய் உன்னை பேசிக்கிறேன்.' என அவன் இல்லாத ஒன்றை கற்பனை செய்திட, அவள் தான் அப்பாவியாக அவனை பார்த்து நின்றிருந்தாள்.

 

எழுந்தவன் அவதி அவதியாக கிளம்பினான். அவனது சீனியர் டாக்டரிடம் இருந்த வந்த அழைப்பில் தான் அவனுக்கு சுயமே வந்தது. நண்பனிடம் போன் செய்கிறேன் மட்டும் என கூறிவிட்டு கடந்தவனை, யாதவ் ஆரத்தழுவி வழியனுப்ப ரூபியா தான் அதனை ஒருவாறு பார்த்து கடிந்தாள்.

 

'பொண்ணா இருந்தா இவரையே நானே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன். என்னா ஃபிரண்ட்ஷிப் யப்பாஆஆ!! பொண்டாட்டி இல்லாம இருப்பாராம். ஃபிரண்ட் இல்லாம இருக்க மாட்டாராம்' என அவளும் சலித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ள, வரன் அவன் அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

ஹாஸ்ப்பிட்டல் வந்தவன் சீனியர் டாக்டரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். அவரது ஷிஃப்ட் ஒர்க்கும் சேர்த்து தான் பிரதீஷ் இது வரை பார்த்திருந்தான். அவரின் கோப வார்த்தையில் சில நிமிடங்கள் பொறுமை காத்தவன், பதிலுக்கு கோபமாக பேசிட அவரே திகைத்து போனார்.

 

லீவில் சென்றவர் திரும்பி வந்தயையெண்ணி நிம்மதி கொண்டிருந்தாலும், அவரின் பேச்சு அவனை வெகுவாக யோசிக்க வைத்தது. அவனுக்கோ இவர் ஏன் இப்படி பேசுகிறார் என குழம்பியவன், நேராக பீஜ்ஜு மோனிடம் சென்று தனக்கு இங்கு வேலை வேண்டாம் என்றும் இப்போதே செல்கிறேன் என கூற அவரருக்கோ பேரதிர்ச்சி.

 

விடயம் என்னவோ அவன் மீது தவறல்ல. ஸ்கேன் பார்த்து கூறியதை தவறாக டைப் செய்த நர்ஸ் மீது தான். அதை புரிந்து கொள்ளாத, அவனது சீனியர் டாக்டர் ராகவன் அவனை சிடுசிடுக்க பேசியது பிரதீஷிற்கு கோவம் உச்சி தொட்டது.

 

நர்ஸ் பெண் கூட தவறு தன் மீது எனக் கூறியும், ராகவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதீஷிற்கு இந்த விவாதம் எல்லாம் துளியும் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவன் தங்கை மீது கொலைவெறி கோவத்தில் இருந்தான்.

 

வேலைக்கு வந்ததும் இப்படியொரு பஞ்சாயத்து அவனை எரிச்சலை உண்டாக்கிட, அவனோ நான் கிளம்புறேன் என கூறி வெளியேறி விட்டான். பீஜ்ஜுவிற்கு தான் தலைவலியானது இவர்களின் குற்றச்சாட்டு பஞ்சாயத்து.

 

வெளியேறிவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி கிளம்பிட, பீஜ்ஜு அவருக்காக மன்னிப்புக் கோரவும் அமைதியானான்.

 

ஆனாலும், எல்லோரிடமும் ராகவனே இவன் இங்கு வேலைக்கு தேவை தானா? என பேச்சை நிறுத்தாதவர் தனக்கு தெரிந்த வேற ஒரு மருத்துவர் உள்ளார் என பரிந்துரை செய்ததில் தான் அவரின் உள்நோக்கம் புரிந்தது மோனிற்கு.

 

இறுதியில் தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்றும் ஏற்கனவே மன உளைச்சலில் இருப்பதாக, சீஃபிடம் கூறினான். அவரும் அவனது குண நலன் மற்றும் நேர்மையின் காரணமாக அனைத்திற்கும் சரி என்றார்.

 

அங்கிருந்து கிளம்பியவன் மதியம் போல் தான் வீடு வந்தடைந்தான். யாதவ் இன்னும் கிளம்பவில்லை என்னும் தகவல் அவன் மொபைல்க்கு குறுஞ்செய்தியாக வந்திட, அவனோ சிட்டாக பறந்து நண்பனை காண ஹோட்டல் நோக்கி சென்றான்.

 

மற்ற அனைவரும் கிளம்பி விட்டனர். ஆனால், யாதவ் மற்றும் ரூபியா கிளம்பவில்லை. அப்படி இப்படியென அவளை அதட்டியவன், வேறு வழியற்று கொஞ்சி கெஞ்சி, மஞ்சத்தில் பெதும்பையை மகிழ்வித்த பின் தான் ரூபியா சமாதானம் அடைந்தாள்.

 

நண்பனோடு சேர்ந்து அவனும் கோயம்புத்தூர் பயணமாகி கொண்டிருந்தான் ருத்ராவை ஒருவழியாக்கிட வேண்டுமென்று.  தன்னோடு வர சம்மதிக்காத குழந்தையை, அடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளாள். அவ்விடயத்தை காதில் போட்டது என்னவோ, அவள் கழுத்தில் நாணிட்ட ஹரீஸ் தான்.

 

சில மணி நேரங்களுக்கு பின் கோயம்புத்தூர் வந்தவர்கள் விடைபெற நினைக்க, ரூபியாவே அவர்கள் வீட்டிற்கு அவனை அழைத்தாள். அவனோ வேணாம் வேணாம் எனக் கூற, யாதவ் அவனை வலுக்கட்டாயமாக அழைத்ததில் வேறு வழியற்று சென்றான்.

 

அங்கு அந்த மாளிகை போன்று உள்ள வீட்டில் தங்கிக் கொள்ளாதவன், கெஸ்ட் ஹவுசில் தங்கிக் கொண்டான். அதுவும் சௌகரியத்திற்கு குறைவின்றே இருந்தது. யாதவ் அவனை காண வந்தவன், இரவு உணவை குடுத்து விட்டு ராத்திரி அவன் செய்த ரகளையை போனில் ஃபிளே செய்து காண்பித்தான்.

 

"மச்சான் தூக்கமே இல்லை. அவ தான் டா கண்ணை மூடுனா கண்ணுக்குள்ள.. இங்க.. இல்லை.. இங்க வந்து நிக்கிறா!" என்றான் பிரதீஷ் ஒவ்வொரு இடமாக கைகளை காட்டிட..

 

"டாக்டருக்கே கண்ணுல கோளாறா அது சரி!" என பதிலுக்கு யாதவ் நக்கலடித்து சிரித்தான். அலைபேசி சிணுங்கியதில் இருவரின் சிரிப்பும் காணாமல் போனது..

 

"சொல்லு டா நண்பா!"

 

"மச்சி எல்லாம் விசாரிச்சுட்டேன். அவளுக்கு ஆள் இருக்கு. வயசு 23  அண்ட் நேம்.."

 

"வெண்ணை, பேர் ராசிகான்னு தெரியும். அட்ரஸ் எங்க?"

 

"டேய் ஆல்ரெடி ஆள் இருக்கு டா.."

 

"ஆள் தானே இருக்கு புருஷன்னு எவனும் இல்லைல. அப்போ க்ளோஸ் பண்ணிடு!" என ஷியாமிடம் பேசி விட்டு போனை துண்டித்தான் பிரதீஷ்..

 

நண்பர்களுக்கு தெரியக்கூடாது என நினைத்து தான் அவளிடம் பேசாமல் தட்டிக் கழித்தான். ஆனால், தண்ணியடித்தால் வரலாறு வந்து விடும் என்பதற்கேற்ப அவனே உளறி விட்டான்.

 

மாலதி விஷயத்தில் அவனுக்கு கிடைத்த வெகுமதியில் தான் தனது குனநலனையே மாற்றிக் கொண்டான். தவறு அவன் மீது இல்லை என தெரிந்து அன்னை மன்னிப்புக் கோரியும் மனமிறங்கவில்லை.

 

வீடியோவை பார்த்தவனுக்கு அதிர்ச்சியோடு சிரிப்பும் சேர்ந்தே வந்தது. அதனை ஆஃப் செய்தவன், "அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. என் லைஃப்ல யாரும் வேணாம். இப்படியே இருக்கிறது தான் எனக்கு ரிலாக்ஸா இருக்கு" என்றான் விரக்தியாக.

 

"சரி அதெல்லாம் விடு. உனக்கு இவளை பிடிச்சிருக்கா? சொல்லு.. நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.." என்றவன் நண்பன் முகத்தை பார்த்து வினவ,

 

அவனோ "எனக்கு யாரையும் பிடிக்கல" என்றான் வேண்டா வெறுப்பாக.

 

"பீ சீரியஸ் மச்சான்.. நீ அவ ஆட் காமிச்சதும் விசாரிச்சு சொல்லிட்டேன். நீ பிடிச்சுருக்குன்னு மட்டும் சொல்லு நைட்க்குள்ள அவளை தூக்கிட்டு வந்துறேன்.."

 

க்ளுக் என சிரித்தவன், "உன் ஒய்ஃப்க்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான் உன் நிலைமை.." என்றான் வேறேதும் பேசாமல் நகர்ந்தபடி.

 

அவனது மனநிலையை புரிந்து கொண்டவன் அதை பற்றி மேலும் பேசாது, வெளியேறி விட்டான்.

 

இரண்டு நாட்கள் கடந்திருக்க, புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. ஹாஸ்பிட்டலில் இருந்து வந்திருக்கலாமோ, என நினைத்து உடனே அழைப்பை ஏற்றான்.

 

"ஹலோ.."

 

"ஹலோ நான் பிருந்தா பேசுறேன்.." என்றாள் தேன் குழைத்த குரலில்.

 

அவனுக்கு தான் அவள் சட்டென நினைவுக்கு வரவில்லை. பேரும் நியாபகம் இல்லை. அவளே நினைவுபடுத்தினாள்.

 

"நீங்க பொண்ணு பாத்துட்டு.. உங்க விசிட்டிங் கார்டு குடுத்துட்டு.." என அவள் முழுதாக கூறி முடிக்கும் முன்னே, "சொல்லுங்க" என்றான்.

 

"அப்பா வேற மாப்பிளை பாக்கல. இப்போ உங்களுக்கு ஓகேன்னா நிச்சயம் வச்சுக்கலாம்ன்னு கேக்கிறாங்க.." என்றவளை சுற்றி வீட்டினர் அனைவரும் கூட்டமாக தான் இருந்தனர். அதுவும் போன் வேறு ஸ்பீக்கரில் இருந்தது. அவனது பதிலை ஆவலோடு எதிர்பார்த்து ஸ்பீக்கரில் போடும்படி கூறினார்கள்.

 

"இப்போ நிச்சயம் வச்சுட்டு மேரேஜ் ஒன் மந்த் மேல நீங்க சொல்லுற டேட்ல வச்சுக்கலாம் சொல்லுறாங்க.." என அவள் நடுங்கிய குரலில் கூற, பிரதீஷ் ஒருநொடி என்ன யோசித்தானோ என்னவோ "ம்ம்ம்.. ஓகேன்னு சொல்லிடுங்க.." என்றான்.

 

வீட்டினர் அனைவர் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம். பிருந்தாவிற்கு அவன் பதில் இன்பதிர்ச்சியாக இருந்தது. அவன் சட்டென ஓகே சொல்வான் என நினைத்து பார்க்கவில்லை.

 

"ஆர் யூ ஸியூர்? மத்த அரேஞ்மெண்ட்ஸ் பண்ணணும் அதான் கேட்டேன்."

 

"ம்ம்ம்.. ஸியூர்.." என்றவன் போனை வைத்து விட்டான்.

 

பிருந்தாவை கன்னம் வழித்த வேதகி, "என் மருமகளுக்கு நான் நினைச்ச பையனே மருமகனா வர போறான்.." என்றிட எல்லோர் முகத்திலும் அளப்பறிய மகிழ்ச்சி குடிகொண்டது.

 

"நான் இதுக்கு தான் வேதகி பிருந்தாவை பேச சொன்னேன். அன்னேக்கி அந்த பையன் டீசன்ட்டா கார்டு குடுத்தப்போ தப்பா நினைச்சோம். இப்போ அவனே சரின்னு சொல்லிட்டான் பாரு!" என நினைத்தது ஈடேறியது என்னும் களிப்பில் ஜெயமோகன் காலட்டிக் கொண்டு கூற, அதை ஆம் என வழி மொழிந்தார் கௌதமன்.

 

அடுத்த கட்டமாக அதே பரபரப்பில், சதாசிவத்திற்கு தகவல் கூற அவருக்கும் ஏக ஆனந்தமானது. விஷயத்தை எல்லோரிடமும் தெரிவித்தவர் துரிதமாக அத்தனை ஏற்பாடையும் செய்யத் துவங்கினார் ஒரு நாளிற்குள்.

 

அன்றிறவே ஊர் வந்து சேர்ந்தனர் பிருந்தா குடும்பத்தினர். நிச்சயத்திற்கான ஏற்பாடு ஒருபுறம் நடக்க, ராணி மகளிடம் ராசிகாவை வருமாறு கூற பணித்தார். அழைத்து அழைத்து பார்த்து அவள் பெரு விரல் வலித்தது தான் மிச்சம். ராசிகா அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை அழைத்தும், குறுஞ்செய்தியும் கூட அனுப்பி விட்டாள்.

 

எதற்கும் அவளிடம் பதிலில்லை. தங்கையை கடிந்து கொண்டவள், போனை கீழே வைக்கும் நேரம் அலைபேசி அலறியது.

 

"ஆங்.. சொல்லுங்க.." என மெல்லிய குரலில் கூறிட..

 

"எனக்கு என் ஃபேமிலில யாரையும் பிடிக்காது. உங்களை நான் எதுலயும் கம்பல் பண்ண மாட்டேன் அண்ட் ஃபார்மலிட்டிஸ் அது இதுன்னு எங்கையும் என்னை கூப்பிட கூடாது.." என்றான் மிக கண்டிப்பான குரலில்.

 

பிருந்தா ஒன்றும் புரியாது திகைத்தவள், "என்ன சொல்லுறீங்கன்னு புரியல.." என குழப்பமாக கூற..

 

"மேரேஜ் முடிஞ்சதும் நான் பாலக்காடு வந்திடுவேன். ஃபார்மலிட்டிஸ்ன்னு எங்கிட்ட எதுவும் பேசி வரக்கூடாது. உங்க ஃபேமிலியை பாக்குறது, போறது வரதுக்கு எனக்கு எந்த அப்ஜெக்ஷன் இல்லை. பட் எல்லா டைமும் நான் ஃப்ரீயா இருப்பேன்னு சொல்ல முடியாது.." என்றான் படபடப்பாக.

 

அவன் மீது அப்படி ஒரு புரிதல் போலும் பெண்ணவளுக்கு. அவன் கூறிய அனைத்திற்கும் சரி என்றவள், "உங்களுக்கு விருப்பம் இல்லாம நான் எதுவும் கம்பல் பண்ண மாட்டேன். உங்க ஒர்க் பத்தி தெரியும் அண்ட் அதர் இஸ்ஸு.." என அவள் ஜவ்வாக விழி பிதுங்கி இழுக்க..

 

"என் ஃபேமிலியை பிடிக்காது. என்னை பிடிச்சா மேரேஜ் பண்ணிக்கோங்க. டைம் இருக்கு நாளைக்கி ஈவினிங் வரை. யோசிச்சு சொல்லுங்க." என்றவன் வேறேதும் பேசாமல் போனை வைத்தான்.

 

அவன் பேசிய பேச்சில் குழம்ப வேண்டியவள், மாறாக நிச்சய கனவில் மிதந்தாள். அதே சந்தோஷத்தில் அவனுக்கு எத்தனை மணிக்கு நிச்சயம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள். அவனும் அதை பார்த்து விட்டு, தலை வலிக்கு ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விட்டான்.

 

மறுநாள் விடிந்ததில் இருந்து, ஒவ்வொரு நொடி கடப்பதும் அவளுக்கு யுகம் போல் தோன்றியது. நேரம் போகிறதா பாரு என நொந்தவள், பட்டுபுடவை ஒவ்வொன்றாக எடுத்து தனக்கு எது மேட்ச் என்பதை கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.

 

அதில் அவளுக்கு பிடித்த வான் நீலமும், ஊதா கலர் பார்டரும் வைத்திருந்த சேலையை தோளில் போட்டு பார்த்தவளுக்கு, பிரதீஷ் முகமும் கண் முன் வந்து போனது.

 

'ச்சீ..' என அகத்தின்னுள்ளே கூறிக்கொண்டே முகத்தை மூடியவள், அவளது அப்பா அழைப்பில் தான் சுயம் வந்தாள்.

 

மாலை 5.37மணி..

மாப்பிளை வீட்டினர் அனைவரும் வந்து விட்டனர். மாப்பிளையை தவிர! வந்தவர்கள் எல்லோரும் பெண் வீட்டினரோடு கலகலப்பாக பேசிக்கொண்டிருந்ததில், அடுத்தகட்ட நிகழ்வுகளை சில நிமிடங்கள் மறந்து போயினர்.

 

அவர்கள் மறந்த போதும் நினைவு படுத்தியது என்னவோ, அண்டை வீட்டினர் தான்.

 

அதன் பின் தான் மாப்பிளை இன்னும் வரவில்லை என்னும் சலசலப்பு பேச்சுகள் அடிப்பட்டது. எல்லோரும் மாப்பிளையை பற்றி பிருந்தாவிடம் வினவ, அவளோ வருவார் என உறுதியாக கூறினாள்.

 

பெற்றவருக்கு தான் மகன் மீது சந்தேகம் வலுத்தது. மனைவியை தனலாக பார்த்தவர், "வருவானா? இல்லையா டி?" என கேட்டப்படி பல்லை கடிக்க அவரோ "எனக்கென்னங்க தெரியும்.." என கமறிய குரலில் கூறினார்.

 

"இவன் வர மாட்டான்.. இவனை பத்தி எனக்கு தெரியாதா.." என முருகனும், சதாசிவமும் மாறி மாறி பேசிக்கொள்ள பெண் வீட்டினர் தான் விதிர்விதிர்த்து போயினர்.

 

பிருந்தா சட்டென அறையை நோக்கி ஓடியவள், அவனை தொடர்பு கொள்ள முயற்சிக்க அவனோ அழைப்பை ஏற்கவில்லை.

 

"அவன் பேச்சை கேட்டு தான் நிச்சயம் முடிவு எடுத்தாங்களா?" என்ற கேள்வி பெற்றவரிடம் இருந்தே வர, விசேஷத்திற்கு வந்தவர்களே திடுக்கிட்டனர்.

 

மகனால் மீண்டுமொரு அவமானம் என வீட்டினர் கொதித்து போயிருக்க, பெண் வீட்டினரோ மாப்பிளை வரவில்லை என்னும் கடுப்பில் சதாசிவத்தொடு வாக்குவாததில் ஈடுப்பட்டனர்.

 

 

தேன்மழை💖💖

 

 

This thread was modified 4 weeks ago by Priyadinesh

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top