Share:
Notifications
Clear all

அசுரன் 53 இறுதி அத்தியாயம்

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 53

 

"நான் இவ்வளோ ஃபீலிங்கா பேச.. இவள் என்ன சிரிக்கிறாள்?" என்று மீண்டும் அவளை முறைக்க.. அவளோ அவனை இழுத்து நெற்றி முட்டினாள் ஆசையாக..! நேசமாக..!

 

"அடிப்பாவி..! இப்பதான் என்னை அவ்வளவு மிஸ் பண்ணுனேனு ரொம்ப ரொம்பனு ரெண்டு கையும் விரிச்சு சொன்ன.. சின்ன பிள்ளை மாதிரி ஊளு ஊளுனு என் சட்டை எல்லாம் கரையாக்குன.. இப்ப என்ன சிரிச்சிக் கிட்டு இல்லைன்னு சொல்ற? கேக்குற நான் லூசா இல்ல சொல்ற நீ லூசா டி பாப்பா?” என்று அவன் மீண்டும் முறைக்க.. 

 

அவன் கை பற்றி தன் வயிற்றில் பொதித்தவள், " நான் உங்களை மறந்தால் தானே.. மிஸ் பண்ண..!!

நீங்க என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என் கூடத்தான் இருந்தீங்க..” என்று கூறியவளை அவன் குழப்பமாக பார்க்க..

 

“மசக்கைல உடல் உபாதையில் நான் கஷ்டப்படும் போது எனக்கு உள்ள இருந்து அரணாய்.. 

இந்த சமூகத்தை எதிர் கொள்ள  தைரியமான என் அரனாய்... என்னோடு எப்போதும் அர்த்தநாரீஸ்வரராய்.. இப்போ சொல்லுங்க.. " என்றவளை ஆச்சரியமாக பார்த்தான். என்ன மாதிரியான காதல் இவளுடையது என்று!!

 

காதல் யாதெனில்..??

 

தான் என்ற சுயமும் சரிவது தான்..! நான் என்ற அகங்காரம் இல்லாமல்.. நீ என்ற பேதமும் இல்லாமல்.. நாம் என்று கலந்து அதில் உயிர்த்து வாழ்வதே காதல்…!

 

"நீ என் தேவதைடி பாப்பா.. " என்று கண்களில் காதல் மின்ன தேவா கூற, "ஆஹான்" என்று உதடு சுழித்து  வைஷூ நக்கல் செய்ய..

 

 

"நக்கலா பண்ற உன்னை" சுழித்த உதடுகளை தன் விரல்களால் சுண்டி விட, அவள் வலியில் அவனை முறைத்து பார்த்தாள். அவனோ சிரிக்க, அவன் கன்னத்தை தன் பலம் கொண்ட மட்டும் கடித்து வைத்தாள்.

 

"அடியே என் இம்மை அரசி" என்று அவன் கத்த அவளோ கலகலவென சிரித்தாள்.

 

பின் அவளை தன் மடியில் சாய்த்து கொள்ள, அவன் விரல்களோ  தன் வாரிசின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருக்க.. முகமோ அதன் சந்தோசத்தை பிரதிபலித்தது.

 

"ஆரம்பிச்சுட்டாங்கய்யா இவனும் இவன் பிள்ளைஙளும் " என்று அலுத்து உட்கார்ந்திருந்தாள்…!

 

இராவண் வருடிக் கொடுப்பதும் அதற்கு உள்ளிருந்து பிள்ளை  தன் இருப்பை காட்டுவதும் இவர்களின் வழக்கமான விளையாட்டு இது. இதில் தவித்து போவது என்னவோ ஆருஷி தான். 

 

" உனக்கு பொறாமடி.. என்னையும் என் பேபீஸையும் பார்த்து" என்றவனை பார்த்து, அவள் தன் கீழ் உதட்டை சுளித்து சிரிக்க, அவனோ உன்னை என்றவன், சுளித்த உதட்டை விழுங்கி இருந்தான். 

 

இப்படியாக அவர்கள் வாழ்க்கை இப்போது சந்தோஷமாக அமைதியாக சென்றது..! 

 

ஆச்சியின் கை மருந்து கவனிப்பிலும்..

ரூபிணியின் சத்தான உணவு முறைகளிலும்..

குளோரியாவின் சந்தோஷமான அணுமுறைமாலும்…

இராவணின் டயட் அண்ட் உடற்பயிற்சியிலும்..

சுக்ரேஷின் தோழமையிலும்..

 

ஆருஷியின் கர்ப்ப காலம் அழகாக நிறைவாக சென்றது..!

 

அன்றும் அவளை பால்கனிக்கு அள்ளி வந்திருந்தான் இராவண்..!

 

“வர.. வர.. உங்க அழிச்சாட்டியம் தாங்கல மாறா..” என்று படுத்துக் கொண்டாலும் அந்த நேரத்தை அவளும் ரசித்தாள்.

 

அவளின் அந்த தேன்சிந்தும் இதழ்கள் எப்பொழுதும் போல அப்பொழுதும் அவனைக் கவர, விடுவானா என்ன, இழுத்து பிடித்து இதழ்களை மென்று ரசித்து ருசித்தான் கள்வனவன்..! 

 

அவள் மூச்சிக்கு முட்டும் போது விட்டவன்.., தன்னை காதலோடு பார்க்கும் பாவையின் பார்வையில் தன்னை தொலைத்து உருகி கிடந்தான் இராவண்..!

 

இராவண்.. கலைகளுக்கு மட்டும் தலைவன் அல்ல..! காதலுக்கும் தான்..! என்று தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டே இருந்தான் அவன்..!

 

தன்னை காதலோடு பார்த்த பார்வை சட்டென்று வலியை காட்ட.. அதிர்ந்து அவன் நோக்கும் போதே, அவள் வலியில் சுருண்டாள் அவன் பாப்பா.

 

அவளை அள்ளிக் கொண்டவனோ திகைத்து நோக்கினான் தன்னவளை..!

 

ஏனென்றால் வலி வருவதற்கு முன்னரே வந்து அட்மிட் செய்ய வேண்டும் என்று சாருபாலா ஏற்கனவே சொல்லி இருந்தார். அதன்படி நாளை மறுநாள் தான் அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக நல்ல நாள் பார்த்து கொடுத்து இருந்தார் வள்ளியம்மை. அவள் ட்யூடேட்டுக்கு இன்னும் 15 நாட்கள் இருந்தன…!

 

ஆனால் இன்று வலியில் துடித்தவளை கண்டு தவித்து போனான் அவன்..!

 

வலியில் சுருண்டவளோ அவனின் சட்டையை அழுத்தமாக பற்றி கசக்கி “ஐ லவ் யூ மாமா..”  என்றாள் ஈனஸ்வரத்தில்..!

 

அவன் வேண்டி கேட்டபொதெல்லாம் கூறாதவள், இன்று வலி மிகுதியில் தன்னை மறந்து கூறியிருந்தாள்…!

 

போடி ராட்சசி என்று கண்களில் கண்ணீர் வர அவளை திட்டிக் கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் குளோரியா ஓடு ரூபினையும் வள்ளியம்மன் அவளுக்கு தேவையான அட்டை எடுத்துக்கொண்டு பின்னால் காரில் பயணித்தனர்..!

 

அன்று இரவு உணவை வர்ஷினியோடு சாப்பிட வெளியில் சென்று தான் சுக்ரேஷ்..! விஷயம் கேள்விப்பட்டு அவனும் வர்ஷினியை அழைத்துக்கொண்டு அடுத்த பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான்..!

 

வள்ளியம்மையும் ரூபிணியும் வரும் பொழுது, குளோரியாவோ மகனைத் திட்டிக் கொண்டிருந்தார்.

 

எதற்கு திட்டுகிறார் என்று புரியாத வள்ளியம்மை என்னவென்று பார்க்க..

 

“உள்ள போக சொன்னா போக மாட்டேங்குறான் அத்த.. அங்க ஆருஷி தனியா இருக்கா..” என்று மகனை சாடினார். 

 

இவனுக்கோ கையில் எல்லாம் லேசாக நடுங்கியது. “என்னால முடியாதுமா?” என்று பாவமாக கூறியவனை, முறைத்தார் குளோரியா.

 

“இப்ப நீ போறியா இல்ல நான் போட்டுமா?” என்று கண்டிப்பாக அவர் கேட்க..

 

“இல்ல இல்ல.. நானே போறேன்”  என்றவன் கலங்கிய கண்களை நன்றாக துடைத்துவிட்டு மூச்சை ஆழமாக இழுத்து விட்டு ஸ்டெர்லைஸ் செய்த உடைகளை மாட்டிக் கொண்டு அந்த லேபர் வார்ட் உள்ளே சென்றான், பயமே என்னவென்று தெரியாத மகளிர் மருத்துவனான ராவண் திரேந்திரன் மாறவேல்..!

 

சாருபாலா பயந்தது போல தான் நஞ்சு கொடியில் சிக்கி இருந்தன இரு பிள்ளைகளும்..! அவர்கள் நிலையும் சற்று சிக்கலாக தான் இருந்தது. ஆருஷியோ மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள்..!

 

சாருபாலா கண்டன பார்வையை பார்த்தார் ராவண்னை.. அவனும் கண்களால் கெஞ்சி விட்டு அவரோடு இணைந்து கொண்டான்.

 

அருகே ஒரு குழந்தை நல மருத்துவர் இருந்தார். மிகவும் சிரமப்பட்டு இரு பிள்ளைகளையும் பிரித்தெடுத்து உடனே அவர் பரிசோதனை செய்ய.. அனைத்துமே நலமாக தான் இருந்தது. 

 

அப்பொழுதுதான் பெரும் மூச்சி வந்தது தந்தைக்கு..!

 

“தேங்க்ஸ் மேடம்.. தேங்க்ஸ் மேடம்..” என்று அத்தனை நன்றிகளை உரித்தாக்கினான் தந்தையாய் கணவனாய் சாருபாலாவுக்கு..!

 

ஒரு ஆண் ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள் அவனுக்கு பிறந்திருக்க.. இரண்டையும் இரண்டு கையில் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வெளிவந்தவனை குடும்பமே கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

 

ஆண் குழந்தை குளோரியாவிடம் கொடுத்து “அப்பா மாம்” என்றான். ஆம் என்று கண்கள் கலங்க குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் குளோரியா.

 

மற்றொன்று வள்ளியம்மை இடம் கொடுத்தவன், “உங்க பொண்ணு தான்..!” என்றார் சிரிப்போடு..!

 

“ஆமா.. ஆமா.. என் பொண்ணு தான்..! அவ பொண்ணுக்கே பொண்ணா பொறந்து இருக்கா” என்று கைகள் நடுங்க குழந்தையை தடுமாற்றத்தோடு வாங்கிக் கொள்ள, ரூபிணியும் அணைத்தாற் போல் பிடித்துக் கொண்டார்.

 

நெகழ்வான உணர்ச்சிமிக்க தருணம் அது..!

 

தன்னை விட்டு பிரிந்த தன் இரண்டு குழந்தைகளும் தன் பேரனுக்கும் பேத்திக்கும் வந்து பிறந்ததாய் எண்ணி அத்தனை ஆனந்தம் கொண்டார் வள்ளியம்மை..!

 

பின்ன அங்கே கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவா என்ன?

 

இந்த விஷயத்தை மறக்காமல் அழகப்பனிடம் கூற வேண்டும் என்று கிரிதரனிடம் கூறினார் வள்ளியம்மை..!

 

கிரிதரன் மிக சந்தோஷத்தோடு வீட்டிற்கு சென்று புதிதாய் பிறந்திருக்கும் வாரிசுகளை பற்றி அத்தனை ஆனந்தத்தோடு கூற,

 

“அவளோட வாரிசுங்களா?” என்று கடுகடுக்க மட்டும் தான் முடிந்தது அழகப்பனால்..!

 

அவரின் கடுகடுப்பை முணுமுணுப்பை எல்லாம் இங்கே யாரும் கண்டு கொள்ளவே இல்லை..! அவரை தனியாக தவிக்க விட்டு இங்கே அனைவரும் மருத்துவமனையில் தான் வாசம்..!

 

அப்பொழுது பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று ஆளாளுக்கு தங்கள் யோசனைகளை சொல்ல..

 

கடைசியாக சிவ அருணேந்திரன் மாறவேல், மீனலோச்சினி என்று முடிவெடுக்கப்பட்டது..!

 

இங்கே குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளோடு ஐக்கியமாகிவிட.. பாப்பாவை காண சென்றான் இராவண்.

 

மனைவியை காண சென்றவனின் கண்ணீரில் காய்ந்த கன்னங்களை மெல்ல வருடினாள் அவனின் பாப்பா….!

 

“என்ன டாக்டரே.. ரொம்ப பயந்துட்டீங்களா?” என்று சிரிப்போடு கேட்டவள், அவனை ஆழ்ந்து பார்த்தாள். 

 

இப்போது அவன் சொல்லாமலேயே அவனின் ஆழமான அழுத்தமான காதல் அவளுக்கு புரியதாய்.. அவள் வருடலில் கண்களை மூடி சுகித்தான் இராவண்.  

 

“கொன்னுட்ட டி..!” தாவி அணைத்துக் கொண்டான் அவளை. 

 

அதன்பின் அங்கே “பாப்பா.. பாப்பா..” என்ற உச்சரிப்பும் முத்தச் சத்தங்களும் மட்டுமே நிறைந்திருந்தன..!

 

சுபம்..!!

 

இந்த கதையில் வெகு நாட்களாக என்னோடு பயணித்து... பொறுமையாக படித்து..

மறக்காமல் லைக்குக இந்தளையும் கமெண்ட்களையும் அள்ளி அள்ளி தெளித்த..

 

அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...!!🙏🙏🙏❣️❣️❣️❣️❣️

 

அண்ட் முத்தாஸ் 😍😍😍🤩🤩🥰🥰😘😘😘😘

 

மீண்டும் ஒரு புதிய கதையில் சந்திப்போம்..!

 

ஆவலுடன் ஜியா ❤️

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top