தேன்மழை💞 (9)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

வேலை பரபரப்பிலே, இரண்டு நாட்கள் கடந்திருந்தது பிரதீஷிற்கு. எப்படியோ அவனுக்கு மேல் உள்ள சீஃப் டாக்டரிடம் அனுமதி பெற்று, நண்பன் யாதவ் ரிஷப்ஷனிற்கு மதிய நேரம் காரில் பயணமாகி கொண்டிருந்தான்.

 

டாக்டரிடம் கூட எளிதில் அனுமதி வாங்கி விட்டான். ஆனால், குஷியை சமாளித்து செல்வது தான் அவனுக்கு போதும் போதுமென இருந்தது. வழக்கம் போல் பிடிவாதம், அழுகை என வீட்டையே ரணகளம் செய்து விட்டாள்.

 

அவளை சமாளிக்க வழி தெரியாத சாவித்திரி பாட்டி, அவளது அன்னைக்கு வீடியோ கால் செய்து பேசி பார்த்தார். அவள் எதிலும் அமைதி கொள்வதாக இல்லை. வந்த நாளில் இருந்து, இரண்டு நாட்களாக பிரதீஷ் அவளை மருத்துவமனைக்கு உடன் அழைத்து சென்றிருந்தான்.

 

அவன் தன்னை இப்போது அழைத்து செல்லவில்லை என்னும் பிடிவாதத்தில் தான் தாங்க முடியாமல், அழுது கொண்டிருப்பதை கண்ட ருத்ரா மற்றும் ஹரீஸிற்கு மிகுந்த வருத்தமானது.

 

அவளும் சமன் செய்திட, அவளோ "மாமா.. மாமா.." என புராணம் பாட, போனை துண்டித்தவள் ஹரீஸோடு பெரும் விவாதம் செய்தாள். அனுப்பி வைத்தது அவன் தானே என்னும் கடுப்பில்.

 

"அவ குழந்தை ருத்ரா அதை புரிஞ்சுக்கோ. நான் ஏற்கனவே பிரதீஷ் கிட்ட போன்ல பேசிட்டேன். அவன் நாளைக்கி ஏர்லி மார்னிங் ரிட்டர்ன் ஆகிடுவான். அதுவும், பசங்க பார்ட்டி அது இதுன்னு இருக்கும்ன்னு தான் கூட்டிட்டு போகலன்னு சொன்னான்.

 

எம்.பி வீட்டு ரிஷப்ஷன்னால ரொம்ப கூட்டமா இருக்கும். ஏன் இப்போ தேவையில்லாம நீ குதிக்கிற?" என ஹரீஸ் உண்மையை கூறியப்போதும் அவள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

 

"சித்தி சொன்ன மாதிரி அவன் மெண்டல் தான்.." என்றிட, ஹரீஸ் சப்பென அறைந்து விட்டான்.

 

"யாரு டி மெண்டல்? யாரு? அவனா? இல்லை உன் குடும்பமா? அவன் தெளிவா தான் இருக்கான். ஆனா, உன் ஃபேமிலி மெம்பர்ஸ் அப்படி இல்லை. நல்லாருக்கிறவனுக்கே, மெண்டல் பட்டம் கட்டி பைத்தியம் ஆக்கிடுவாங்க போல.." என அவன் புதிதாக காய, தனலாக பார்த்தாள் ருத்ரா.

 

"கல்யாணம் பண்ணுறேன்னு உன் அப்பன் அவனை போட்டு டார்ச்சர் பண்ணுறாரு. அதுவும் நீங்க அவன் பண்ணாத தப்புக்கு குடுத்த பட்டம், என்ன தெரியுமா? என்ன?" என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி, உஷ்ண மூச்சை உள்ளிழுத்து விட்டான்.

 

"என் அப்பாவை பத்தி பேச உங்களுக்கு ரைட்ஸ் யாரு குடுத்தா?"

 

"அதே போல, பாக்காத ஒரு விஷயத்தை வச்சுட்டு ஒருத்தவனை குறை சொல்லுறதை விடுங்க. உன்கிட்ட இல்லாத அன்பு பிரதீஷ் கிட்ட கிடைக்குதுன்னு தான் குஷி அவன் கிட்ட போறா.

 

அதை புரிஞ்சுக்காம மெண்டல் மாதிரி பிஹேவ் பண்ணாதே ருத்ரா. எனக்கும் ஒரு அளவுக்கு தான் பொறுமை இருக்கு. உன் வீடு மாதிரி பொம்பளை நாட்டாமை பண்ண நினைக்காதே. குஷி அவன்கிட்ட ஹாப்பியா இருக்காளா அதை மட்டும் பாரு!" என ஹரீஸ் உண்மையை கூறி சென்ற போதும், அவளுக்கு எல்லாமே தவறாக தோன்றியது. ஏன் ஹரீஸை கூட ஏதோ சொல்லி குடுத்து மாற்றி விட்டான் என தான் நினைத்தாள்.

 

 

மாலை 7மணி

அந்த பிரபல மஹாலில் புதிதாக திருமண முடிந்த ஜோடிகளின் ரிஷப்ஷனிற்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தொடங்கி சாமானிய மனிதர்கள் உட்பட வருகை தந்திருந்தனர்.

 

மஹாலின் ஒவ்வொரு அலங்காரத்திலும் பணத்தின் செழுமை தனித்துவமாய் மின்னியது. எம்.பி மகளின் திருமணம் அல்லவா! ஆளுங்கட்சி எம்.பி திருமண விழா என்பதால், மண்டபமே வான வேடிக்கை போல் ஜொலித்தது.

 

பிரதீஷும் சரியான நேரத்திற்கு வருகை தந்திருந்தவன், நண்பர்களின் கேலி கிண்டலுக்கு மத்தியில் மௌனமாக அமர்ந்திருந்தான். அவனது அமைதி எல்லோருக்கும் பழக்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும், இப்போது திருமணம் ஆகாமல், இருக்கும் நபர் என்றால் பிரதீஷ் மட்டும் தான். அவர்களின் நட்பு வட்டாரத்தில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

 

ஷாமிலி, "பிரதீஷ் சீக்கிரம் நீயும் மேரேஜ் டேட் சொல்லு டா." என்றாள் தோழி என்னும் உரிமையில், தோளில் கை போட்டப்படி.

 

"ம்ம்.. ஸியூர்!"

 

ராம், "இல்லை பேசுனா உன் வாயில இருக்க பல்லு கொட்டிடுமா? என்ன தான் டா உனக்கு ஆச்சு? யார்ட்டையும் பேச மாட்டுற. போன் அண்ட் மெசேஜ் எதுவும் இல்லை.

 

ஃபேமிலில இருக்கிற நாங்களே எப்படிலாமோ என்ஜாய் பண்ணுறோம். ஆனால், நீ வாழ்ந்து முடிச்சவன் மாதிரி இருக்கயே டா.." என நண்பன் அக்கறையோடு விசாரிக்க, "நத்திங் டா.." என்றான் எங்கோ பார்த்தபடி.

 

"இப்படி இருக்க உன்னை எவளாவது சுத்தல்ல விட போறா பாரு.." என  ராம் கூற, நகைப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு, அங்கு வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் புதிதாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

செய்யாத ஒரு தவறுக்கு கிடைத்த பட்டத்தை எண்ணி நொந்ததில் தான், விரக்தியாக இருக்கிறான். நண்பர்களிடம் படிக்கும் காலத்தில் சிரித்து பேசி கலகலப்பாக இருந்தவன் என்றால், எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது பிரதீஷ் தான்.

 

சீனியர் டாக்டர் பெண்ணிற்கே ரூட் விட்டவன் படிக்கும் காலத்தில். காதலுக்கு ஏது வயது என்பான் அப்பெண்ணை சைட் அடித்த காலத்தில், அவளும் அவனை அவ்வப்போது சைட் அடித்தது பிரதீஷ் அறிந்ததே.

 

ஆனால், அப்படி இருந்தவனுக்குள் இப்படியொரு பேரமைதி என்றால் நம்ப முடியாத ஒன்று தான். உண்மையில் அவனுக்கு இங்கு கலந்து கொள்ள கூட விருப்பமில்லை. இருப்பினும், வராமல் போனால் தன்னை தேடி வந்து உண்டில்லை என ஆக்கி விடுவார்கள் என நினைத்து தான் அரக்க பறக்க வந்து சேர்ந்தான்.

 

வந்ததும் புது மாப்பிள்ளை அவனை வறுத்தெடுக்க சந்தர்ப்பம் அமையவில்லை என்பதால் பிரதீஷ் தப்பித்து விட்டான். இல்லையேல், காது சவ்வு கிழியும் அளவு உரிமையோடு திட்டுவான் யாதவ். மாப்பிளை கோலத்தில் இருந்தவன் அவ்வப்போது, நண்பர்கள் வட்டாரத்தையும் பார்த்துக் கொண்டான்.

 

ஷாமிலி, "மச்சி நீ எப்போ டா இப்படி ஸ்டேஜ்ல நிக்க போற?" என ஆர்வமாய் கேட்டவளுக்கு, அபசகுனமாக பதிலளித்தான்.

 

"அது நான் செத்த பிறகு.." என்றான் புன்னகையாக.

 

"நிஜமா சொல்லுறேன் டா. ஆளுங்க இருக்காங்கன்னு கூட பாக்க மாட்டேன். அறைஞ்சுடுவேன் பிரதீஷ்." என கூர் விழியால் அவள் எச்சரிக்கை விடுக்க, "சரி டி விடு.." என்றான் நீண்ட நாட்களுக்கு பின் இறந்து போன புன்னகையை இயல்பாக உதிர்த்த படி.

 

அதற்கு ராமோ, "நீ வேணும்னா பாரு. உன்னை ஓருத்தி நாயா பேயா அலைய விடல. நான் டாக்டர் ஃபீல்டு விட்டு போயிறேன் டா." என அவன் சபதம் செய்த வாய் முகுர்த்தம், ஓரிரு நொடியில் பலித்து விட்டது அவளின் வருகையால்.

 

பிரதீஷ் நண்பர்களோடு பேசிக்கொடிருந்த நேரம், "எக்ஸ்கியூஸ் மீ" என பெண்ணவள் குரல் கேட்க, மூவரும் சட்டென திரும்பி பார்த்தனர்.

 

வான் நீல நிற குர்தியில், மல்லிகை சரத்தோடு சேர்ந்த கார் குழல் சிறிது முன்புறம் தோளில் ஒதுங்கி, கன்னக்குழி சிரிப்பை உதிர்த்தவாறு "ஹாய்" என்றாள் ராசிகா.

 

"ஹாய்.." என சொல்ல துடித்த உதடுகளை, பிரயத்தனப்பட்டு பிரிக்காமல் மூடிக்கொண்டான். அவளோ, படபடவென பேசினாள் அவன் பதில் புன்னகை தரவில்லை என்பதை கூட கவனியாமல்.

 

"நான் தான் ராசிகா. என்னை நியாபகம் இருக்கா. துடியலூர்ல என்னை கூட நைட் என் ஃபிரண்ட் வீட்டுல டிராப் பண்ணுனீங்களே.." என அவள் அப்பாவியாக அவனுக்கு நியாபகம் செய்ய முயற்சிக்க, "ஸாரிங்க நீங்க எனக்கு யாருன்னு தெரியாது. அதுவும் நீங்க சொல்லுற ஊரு என் ஊர் இல்லை. நான் பாலக்காடுல இருக்கேன்." என்றான்.

 

நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழப்பமாய் பார்த்துக் கொள்ள, ராசிகா மீண்டும் "இல்லைங்க அன்னேக்கி நைட் கூட உங்க வீட்டுல.." என அவள் உண்மையை கூற வருவதை உணர்ந்து கொண்ட பிரதீஷ், "ஹலோ மேடம் உங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுறேன். ஏன் இன்டரப்ட் பண்ணுறீங்க. இடியட்.." என்றவன் பட்டென முகத்தை திருப்பிக் கொள்ள, அவளும் அவனை திரும்பி பார்த்துக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

 

"டேய் என்ன மனுஷன் நீ? ஒன்னு தெரியலன்னு சொல்லு. இல்லை நான் இல்லை அதுன்னு சொல்லு, அதை விட்டுட்டு இடியட்ன்னு சொல்லுற. என்ன ஜென்மம் நீ?" என ஷாமிலி அறிவுரை கூற, "வில் யூ ஸ்டாப் இட் யுவர் லெசன்?" என்றான் கடுப்பாக.

 

"மச்சி அவளை நிஜமா உனக்கு தெரியாதா? எனக்கு என்னமோ, நீ சொல்லுறது தான் பொய்யுன்னு தோணுது. அவ சரியா.." என்றவன் நண்பனை பார்த்து கண் சிமிட்ட, அவனை முறைத்து விட்டு திருப்பிக் கொண்டான்.

 

"ராம் நான் அவளை எங்கையோ பாத்துருக்கேன். எங்கன்னு நியாபகம் வரல.." என அவனே நண்பர்களிடம் இருந்து தப்பிக்க வழி தேடும் நேரம், ஷாமிலி யோசனையாக இதை கூற ஒருவாறு அவளை பார்த்தான்.

 

"மச்சி.. நீ நிஜமா சரியில்ல.. எனக்கு என்னமோ உன்மேல தான் டவுட்.. வா இப்போவே அவகிட்ட போய் கேட்டுட்டு வந்துடலாம்.." என ராம் மேலும் சீண்டிட, "மண்டபம்ன்னு பாக்க மாட்டேன். அசிங்கமா வாயில வரும் பாத்துக்கோ. இதான் கடைசி மூடிட்டிரு" என்றான் புன்னகையாக.

 

"டேய்.. டேய்.. இங்க பாரு.. இந்தோ இருக்கா பாரு.." என ஷாமிலி பிரதீஷ் தோளை தட்டிட, பட்டென திரும்பி பார்த்தான்.

 

ஒரு காலேஜ் அட்மிஷன் விளம்பரத்தில் ராசிகா நடித்திருந்தாள். அதை எப்படியோ நினைவுப்படுத்தி, யூ-டியுபிள் அவனிடம் காண்பிக்க அவனோ இவளா அவள் என்பதை போல் விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஷாமிலி, ராமிடம் நண்பனை பார் என கண்ணசைக்க அவன் கூர்ந்து விளம்பரத்தை பார்த்ததிலே ஏதோ ஒன்று உள்ளது என கணித்து விட்டனர்.

 

விளம்பரம் முடியும் வரை பார்த்தவன், "அதெல்லாம் எனக்கு யாருன்னு தெரியாது. வாங்க டைம் ஆகுது கிஃப்ட் குடுத்துட்டு, ரூம்க்கு போலாம்" என்றான் அலுத்துக்கொண்டு. அவர்களும் கிஃப்ட் கொடுத்து விட்டு போட்டோவிற்கு நிற்க, தொலைவில் இருந்து பார்த்த ராசிகா விழிகள் தான் அவனை குழப்பம் மேலோங்க பார்த்தது.

 

'அதெப்புடி தெரியாம போகும். தாங்க்ஸ் சொல்ல நினைச்சா இப்படி சொல்லுறாங்க. இவங்க தான் அது. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு..' என அவள் மூளையை கசக்கி யோசிக்க, "ராசிகா கிளம்பலாம்" என்றாள் ஆர்த்தி.

 

"நான் ரூம்க்கு வர வரை ரூம்ல வெயிட் பண்ணு. மீறி ஊருக்கு போன செருப்பு பிஞ்சிடும். பேச வைக்காதே.." என நண்பன் காதில் யாதவ் கிசுகிசுக்க, ஓரக்கண்ணால் அவனை பார்த்து விட்டு வாய் மூடி சிரித்துக் கொண்டான் பிரதீஷ்.

 

எல்லோரும் அங்கிருந்து நகர, பெண்ணோருத்தி பிரதீஷ் மீது தெரியாமல் இடித்து சென்று மன்னிப்பும் கேட்டு விட்டாள். ஆனால், மற்ற இருவருக்கும் அவள் பரிச்சயமான ஒருத்தி என்பதால் அவளை பிரதீஷிற்கு அறிமுகம் செய்து வைக்க, அவன் தலையசைப்பை மட்டும் தான் தெரிவித்தான் தவிர பேசவில்லை.

 

"எங்க போற நேஹா? வா சாப்பிடலாம்." என ஷாமிலி அழைக்க..

 

"இதோ போகணும், ஃபிரண்ட்ஸ் வருவாங்க.." என்னும் போதே அவர்களும் நேஹா என அவள் பெயரை அழைத்து அங்கு வந்திட, எல்லோரும் ஒன்றாக உண்ண சென்றனர்.

 

இதை பார்த்த ராசிகா தான் மனதுக்குள்ளே கறுவிக் கொண்டிருந்தாள்.

 

'அதானே இவ கூட கூட்டு வச்சிட்டா விளங்கவா முடியும். உன் கண்ணு என்ன குருடான்னு யோசிச்சேன். இப்போ தான் தெரியுது, உன்னையும் மயக்கிட்டான்னு.. ' என நேஹாவையும், பிரதீஷையும் ஒருசேர திட்டிக் கொண்டாள்.

 

மிகப்பெரிய ஹாலில் விதவித பதார்த்தங்களோடு உணவு உண்ண, அமர்ந்தனர். இப்படியா அந்த விருந்து துவங்க வேண்டும்? பிரதீஷ் அருகில் எதார்த்தமாக அமர்ந்து விட்டாள் நேஹா. இருவரும் ஒருவருக்கொருவர், திரும்பி பார்த்திடவில்லை. ஆனால், சற்று தொலைவில் எதிரே அமர்ந்திருந்த, ராசிகா தான் அவனை நன்கு கண்டு கொண்டாள்.

 

'நல்லா தெரியும் இவன் தான் அவன். எப்படி என் யூகம் பொய்யா போகும். என் கண்ணு என்ன குருடா? இல்லை அவன் பொய் சொல்லுறானா?' என யோசித்தவள் பார்வை அவன் மீது மட்டுமின்றி அருகில் இருந்தவள் மீதும் பதிந்தது.

 

"ஆர்த்தி எனக்கு இங்க வரவே விருப்பம் இல்லை. நீ தான் ரொம்ப கம்பல் பண்ணுன. அதுவும் இவ வீட்டு விஷேஷம்ன்னு ரொம்பவே யோசிச்சேன். இப்போ ஏன் வந்தேன்னு இருக்கு." என திடீரென தோழி நொந்து கொண்டது, ஆர்த்திக்கு புதிதாக தெரிய குழப்பமாக பார்த்தாள் ராசிகாவை.

 

"என்ன டி ஆச்சு இப்போ? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த. ஏன் இப்படி சொல்லுற?"

 

"எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ கிளம்பு. அவ மூஞ்சியை பாக்கவே பிடிக்கல. டென்சன் ஏறுது.." என படபடப்பாக கூறியவளை கண்டு, ஆர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. போதா குறைக்கு உண்ணாமலே எழுந்து விட்டாள் ராசிகா. அவளும் எழுந்து விட்டாள் தோழி செல்கிறாளேன்று.

 

நல்ல வேளை இதன் பின் நடந்த கூத்தை தான் அவள் பார்க்கவில்லை. சென்றது எவ்வளவோ நல்லது தான்.

 

நேஹா, பிரதீஷிடம் ஹாய் ஹலோவில் பேச்சு குடுத்து, ஓரளவிற்கு நன்றாக பேசிக்கொண்டனர்.

 

ஷாமிலியிடம், பிரதீஷ் எண்ணை கேட்டு பெற்றுக்கொண்டாள் அவன் முன்பே. அவனுக்கு அது விருப்பமில்லை தான், அது பொது நாகரீகம் இல்லையே என புரிந்து கொண்டு மௌனமாக இருந்து விட்டான். நேஹா யாதவ் மனைவியின் தங்கை என்பதால், மறுத்து கூற முடியாத நிலையில் இருந்தான்.

 

 

இரவு 10மணிக்கு ரூம் வந்து சேர்ந்தனர் நண்பர்கள். அவர்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களை காண யாதவ் வந்து விட்டான். வந்தவன் திருமணத்திற்கு வராத நண்பனை சும்மாவா விட்டு வைப்பான்?

 

வந்த வேகத்தில் அவனை அறைந்து விட்டு தான் பேச்சினை தொடங்கினான்.

 

"என்ன பு*** டா இப்போ மட்டும் வந்த? ஊர் வரை வந்துட்டு மேரேஜ்க்கு வராம போய்ட்ட. ஏன் நான் செத்த பிறகு மாலை வாங்கிட்டு வர வேண்டியது தானே? இப்போ மட்டும் ஏன் *** வந்த?" என அவனும் வண்ண வண்ணமாக பேச, ஷாமிலி காதை மூடிக்கொண்டு "டேய் கேக்க முடியல டா. ப்ளீஸ் போதும் டா.." என அவள் கெஞ்சியதில் தான் அமைதியானான்.

 

ஆனாலும் அவன் மீதிருந்த கோவம் குறைய, சில மணி நேரங்கள் தேவைப்பட்டது. அவன் ஒருவழியாக மனம் மாறி நண்பனோடு இயல்பாக பேசிக்கொண்டிருந்த நேரம், பிரதீஷ் போனில் பேசியது மேலும் சினமடைய வைத்தது.

 

"சார் நாளைக்கி மார்னிங் 11'ஓ கிளாக் இருப்பேன் சார். அப்பாயிண்ட்மென்ட் குடுத்துருங்க. லிவர் பயாப்சி கேஸ் தானே பண்ணிடலாம் சார்." என்று உறுதியாக கூறி அவன் போனை வைக்க, யாதவ் அவனை அடி பின்னி எடுக்கும் நோக்கில் நின்றிருந்தான்.

 

லிவர் பயாப்சி என்பது கல்லீரலில் உண்டாகும் கட்டி, வீக்கம் மற்றும் வேறெதேனும் நாள்பட்ட பிரச்சனையை கண்டறிவதாகும். லேப்ராஸ்க்கோப்பி உதவியில், ஸ்கேன் மூலம் சிறு திசுவை வெட்டியெடுத்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் முக்கி பங்கு வகிக்கும் மருத்துவர்களாக இரைப்பை குடல் மருத்துவர் மற்றும் கதிரியக்க மருத்துவர்கள் உள்ளனர்.

 

"அப்போ நீ நாளைக்கி கிளம்பிடுவ அப்படி தானே?"

 

"டேய் மச்சான் நான் இல்லைனா, ஒரு கேஸ் சர்ஜன் பண்ண முடியாது. நாளைக்கி எத்தனையோ டெலிவரி கேஸ் வேற இருக்கு. போயாகணும் டா. இன்னொரு டாக்டர் மெடிக்கல் லீவ்ல போயிருக்கனால என்னால இப்போ ஒருநாள் கூட ஸ்டே பண்ண முடியாது" என கூறிய நண்பனை அனல் பார்வை பார்த்தான். அதற்குள் அறையின் கதவு வேறு பலமாக தட்டியதில், யாதவ் கதவை திறக்க சென்று விட்டான்.

 

"வாங்க சார்.. வாங்க.." என வந்திருந்த இருவரையும் வரவேற்றவன், நண்பர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

"மீட் மிஸ்டர் ரோஹித் அண்ட் சர்வேஷ். ரோஹித் ASP. அப்பாவோட க்ளோஸ் பிரண்ட்" என யாதவ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, பிரதீஷ் பாலக்காடில் வேலை பார்க்கிறேன் என கூறியதும் அவனிடம் கார்டை பெற்றுக்கொண்டு இருவரும் அங்கிருந்து விடைபெற்றனர்.

 

"ஏன்டா அவன் அப்பனுக்கு நீ க்ளோஸ் ஃபிரண்ட்ன்னா நான் என்ன உன் அல்லக்கையா?" என சர்வேஷ் காய, ரோஹித் சிரிப்பை அடக்க தான் பெரும்பாடு பட்டான்.

 

நண்பனையும் ஏதேதோ சமாளிக்க, "அப்போவே ரிஷ்வி சொன்னா.." என முழுவதும் கூறாமல் சர்வேஷ் முகத்தை ஒருவாறு வைத்து கூற, "என்ன அப்படியே உன்னை காணாம போய்ட சொன்னாளா?" என்றான் ரோஹித் நக்கலாக.

 

"போடா டேய்.."

 

"மச்சி அந்த பையன் டாக்டர் டா. தெரிஞ்ச டாக்டர் அண்ட் ஹாஸ்ப்பிட்டல்னா ரிஷ்வி டெலிவரிக்கு யூஸ்புல்லா இருக்கும்ன்னு, உனக்கு நல்லது நினைச்சவனை போய் இப்படி சொல்லுறயே" என்றவன் வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள, சர்வேஷ் என் நண்பேன் டா என தோளோடு அணைத்துக் கொண்டு நடந்தான்.

 

தேன்மழை💖💖

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top