அழகன் 6
காலை உடற்பயிற்சியை முடித்து வேர்க்க விறுவிறுக்க வந்த அழகன் மாடியில் நின்றிருந்தான், குளிர்ந்த காற்றை அனுபவித்தப்படி..!
அப்போது வீட்டு வாசலின் ஒதுக்கு புறமாய் நின்று கூந்தல் ஈரத்தை உலர்த்திக்கொண்டிருந்த ஆண்டாள் தென்பட்டாள்..!
காலை இளம் வெயிலில் அவள் கூந்தல் மயிரிழைகள் பளபளப்பாகத் தெரிந்தன..!
அவளைப் பார்த்ததும் இளம் புது கணவனின் மனதில்.. ஒரு மெல்லிய உற்சாகம் பிறந்தது..!
மெல்ல விசில் அடித்து
“பொம்மா” என்று அழைத்தான் மெல்லிய குரலில்..
திருமணம் முடிந்த வீடு..! இன்னும் சில நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் வீட்டில் தான் இருக்கிறார்கள்.
‘ஏன் காலையிலேயே அவர்கள் கண்களுக்கு நாங்கள் காட்சியாக வேண்டும்?’ என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
ஆனால் அந்த குரலோ அவனின் சகதர்மணிக்கோ சுத்தமாக காதில் கேட்கவே இல்லை..!
“ஏய் பொம்மா” என்று மறுபடியும் சற்று உறக்க அழைக்க.. அவளோ மாடியில் இருந்து கூப்பிடுகிறான் என்று அறியாமல் சுற்று முற்றும் பார்வையால் கணவனை தேடினாள்.
அவளுக்கு காதில் விழுந்ததோ இல்லையோ தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேத்தியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த சொக்கியமாளுக்கு காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது பேரனின் பொம்மா என்று குரல்..!
ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். முன்பிருந்த யோசனை இப்பொழுது இல்லை. ஒரு மெல்லிய புன்னகை அவர் முகத்தில்..!
விசில் அடித்தான் இம்முறை சற்று சுத்தமாகவே.. அதில் அவள் திடுக்கிட்டு அன்னார்ந்து பார்க்க,
“ஏய் பொம்மா.. என்ன டி அதுக்குள்ள கீழ வந்துட்ட.. மாமனுக்கு செய்ய வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு.. வா வா.. சீக்கிரம் மேல வா” என்று சத்தமாக அழைத்தவனை கண்டு அதிர்ந்தாள்.
சூரியனுக்கு முகம் காட்டி நின்றிருந்தவள்.. அவனின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
அவள் முகத்தில் மெல்லிய பதட்டம்..!
முன்பக்க கழுத்து வழியாக இறங்கி அவளது மார்பின்மேல் தவழ்ந்து கொண்டிருந்த.. ஈரக்கூந்தலை.. பின்னால் தூக்கிப் போட்டு.. மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
அந்தத் தோற்றம் அதுவும் இளங்காலை வெயில் மனைவியின் உடலில் பட்டு ஜொலிக்க.. ஏற்கனவே அவள் சிவந்த மேனிக்காரி தான், இப்பொழுது இந்த பொன் கதிர்களும் அவள் மேனியில் பட்டு அப்சரஸாய் மிளிர்ந்தாள் அழகனின் கண்களுக்கு..!
“என்னடி பார்த்துகிட்டு இருக்கிறவ மேல வா..” என்று அவன் கொஞ்சம் உரக்க அழைக்க..
அப்பத்தாவிடம் ஒரு அசடு சிரிப்பை கொடுத்துவிட்டு வேகமாக மாடியை நோக்கி ஓடினாள் ஆண்டாள்.
அறைக்குள் நுழைந்தவள் அடுத்த நிமிடம் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..!
இதெல்லாம் புது மணத் தம்பதிகளுக்கே உரித்தான சில்மிஷங்கள்..! அழகிய ஞாபகங்கள்..!
அவளை ஒரு சுழற்றி சுழற்றியவனின் இடக்கையை அவள் பின்னந்தலையில் பதித்து.. அவள் முகத்தை விலக்க விடாமல் அழுத்திக்கொண்டு இருக்க.. அவனின் வலது கை அவளது இடையை பிடிக்க.. அவள் இடையை இறுக்கிப் பிடித்து பிசைந்தான்..!
“னா விடுங்க னா.. என்னது இது காத்தால? நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் னா. என்னை அபச்சாரம் ஆக்காதிங்கோ..!” என்று அவள் அலற..
“அடியே.. பொம்மா..! இது அபச்சாரம் இல்லடி..! புருஷனுக்கு பண்ற உபச்சாரம்..!” என்றான் அவள் பட்டு கன்னத்தில் தன் சொரசொரப்பான தாடியால் உரசியப்படி..!
“அச்சோ பெருமாளே..! இன்னொரு தடவ குளிக்க வச்சிடாதேள் என்ன” என்று அவள் பதற..
“பதறாத..! பதறாத டி பொம்மா..! இன்னொரு தடவ நீ குளிக்கிற அளவு இங்கன ஒன்னும் பெரிய பர்பாமென்ஸ் நடக்க போறது இல்ல..”
“வேற என்ன நடக்க போறது னா?” என்று கண்கள் விரிய அவள் கேட்க..
அவளை தன் கை வளைவிலேயே வைத்து உச்சாதி பாதம் முதல் குறுகுறுவென பார்த்தவன்,
“ம்ம்ம்.. வேற என்ன கொஞ்சல் தான்..! இந்த மாமியோட மாம்பழ கன்னத்துல சின்ன கடி..! இந்த பளீரென வெள்ள கழுத்துல லைட்டா ஒரு முரட்டு முத்தம்..! அப்புறம்..” என்றவன் பார்வை இறங்கி, அவள் ஏற்ற இறக்கங்களை கொள்ளையிட, அவளோ தன் மார்பின் மீது எக்ஸ் குறியீட்டுக் கொள்ள..
“ஹான்.. ரொம்ப தேன் பாதுகாப்பு டி.. அதுவும் புருஷன் கிட்டேயிருந்தே வா..! வெரி நைஸ்” என்றவன், அவளது இல்லா இடையை இறுக்க,
“ஏன் இப்படி?” என்று அவள் நெளிய,
“நீ தானே நேத்து ராத்திரி சொன்னவ.. கொஞ்ச நாள் பழகணும்னு.. புதுசா கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டி இப்படி தான் பழகுவாய்ங்க..! கொஞ்சம் மாமன பழகிக்கோ டி என் பொம்மா” என்றவன்,
அவளது ஈர உதடுகளின்.. அமிர்தத்தை ஆழமாக உறிஞ்சினான் தன் நாவை அவள் வாய்க்குள் விட்டு..!
அவன் கைகளோ மெல்லிடையாளின் சிக்கென்ற இடையை விட்டு சற்றும் விலக்கவில்லை. அவள் இடையை வளைத்தவாறே.. அவளை அவனின் கைகளுக்குள் சுழல விட்டு… அவளைப் பின்புறமாக அணைத்து, அவள் வயிற்றை இறுக்கினான்.
அவன் அதரங்களை அவள் பின்னங்கழுத்தில் பதித்து முத்தம் கொடுத்தான். அவள் கழுத்துப் பகுதி.. கூந்தல் ஈரத்தால் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.. அவள் கழுத்தில் கிடந்த தாலிக்கயிறும் ஈரமாக இருந்தது.!
அவள கூந்தலிலிருந்து வீசிய.. ஷாம்பு மணம் அவனைக் கிறங்கச் செய்தது..!
“போதும் னா.. பழகுனது” என்று அவள் விலக,
“கொஞ்ச கொஞ்சமாக பழகுவோம்.. ஒரே நாளில் படுத்த வேண்டாம்” என்று எண்ணியவன்,
“ஆமா.. காலையில எனக்கு செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்யாம நீ பாட்டுக்கு கிளம்பி கீழ போயிட்ட” என்று கேள்வி கேட்டவனை கண்டு விழித்தவள்,
“நா.. நா.. உங்களுக்கு என்ன னா செய்யணும்?” என்றாள் அப்பாவியாய் அவள் முகத்தை வைத்து..
அதை கண்டவனுக்கோ இரட்டை அர்த்தங்கள் செய்திகளை இதழ் வழியே அவளுக்கு சொல்லத்தான் ஆசை..!
ஆனால் ‘இந்த தொட்டாசிணுங்கி பொம்மாவ வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேனோ’ என்று அத்தனையும் தனக்குள் விழுங்கியவன்,
“காலையில எழுந்திருச்சா நான் கிளம்பி வயலுக்கு போற வரைக்கும் என் கூட தான் நீ நிக்கணும்..!”
“உங்க கூட நின்னு நான் என்ன னா பண்றது?” என்றவளின்
கன்னத்தில் தட்டி,
“காலைல எழுந்திருச்சு நான் முதல்ல உடற்பயிற்சி செய்வேன். செஞ்சிட்டு வந்தா உடம்பு எல்லாம் வேர்த்து ஓழுகும்.. அத நீ எப்படி உன் புடவ முந்தானைய பிடிச்சு..” என்று அவளின் முந்தானை பிடித்து அவள் கையில் திணித்து
“இப்படி தொடச்சு விடணும்” என்று அவள் கையை தன் நெஞ்சில் வைத்தான்.
அவன் துடைத்து விட அவளுக்கோ புடவை வழியே தொட்ட அவன் தேகம் அவனை உறுதியை வலிமையையும் பறைசாற்ற.. எச்சில் விழுங்கி கொண்டு அவனைப் பார்த்தாள்.
“இத.. இத… நான் செய்யணுமா?” என்று குரல் தந்தியடிக்க கேட்க..
“ஆமா நீ தானே பொண்டாட்டி? அப்போ நீ தானே செய்யணும்..!”
என்றதும்,
“ஆமா.. ஆமா..நான் தான் ஆத்துக்காரி..! நான்தான் செய்யணும்” என்று அவளும் தலையை ஆட்டிக் கொண்டாள்.
“அப்புறம் னா..!” என்று ஆடே தலையை தானே கொடுத்து பிரியாணி போட சொல்ல.. விடுவானா என்ன அழகன்?
“அப்புறம் நான் குளிச்சிட்டு வந்ததும் என் ஈரத் தலையை துவட்டி விடணும்..” என்றான் முட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“அதுவும் என் முந்தானைல தான் செய்யணுமா னா?” என்று அப்பாவியாய் அப்பாவை கேட்க..
முந்தானையில் அவள் துடைத்தால்.. அதுவும் நெருங்கி நின்று துடைத்தால்.. அவளில் இளமை அழகுகள் அவன் முகத்திலும் அவள் பார்வைக்கும் நன்றாகவேப்படும்.
அதை எண்ணி ஒரு நிமிடம் தன்னை தொலைத்தவன் “அப்படியும் செஞ்சா நல்லா தான் இருக்கும்..! ஆனா உன் புடவ ஈரத்தை ரொம்ப இழுக்காதே..! அதேன் போனா போகுது.. துண்டால தொட” என்றான்.
“அதுக்கும் சரிங்கனா.. சரிங்க னா..” என்று அவள் தலையை தலையை ஆட்டிக்கொள்ள..
“அடுத்து எனக்கு டிரஸ் எடுத்து வைக்கணும்.. ஏன் இன்னர்வியர்ஸ் உட்பட..!” என்றதும்,
அவளோ தடுமாறி “அதுவுமா?” என்றுவளின் கண்களோ ஒரு வித திகலை தான் வெளிப்படுத்தியது.
‘என்ன இவரு என்னாலாமோ செய்ய சொல்கிறார்?’ என்று..!
சாதாரண தாம்பத்தியத்தில் இதெல்லாம் வெகு சாதாரணம். கணவன் மனைவியின் உடைகளை காய வைத்து மடித்து வருவதும்.. மனைவி கணவனின் எல்லா உடைகளையும் துவைப்பதும் சாதாரணம்தானே?
ஆனால் அதற்கு ஏன் இவள் இப்படி முகத்தை சுளிக்கிறாள் என்று பார்த்தவன்
“ஆமா உங்க ஆத்துல.. உன் தோப்பனார் ட்ரஸ யாரு துவைப்பாங்க?”
“அம்மாதான் துவைப்பா” என்றதும்,
இவனும் அர்த்தமுள்ள பார்வையை அவளை நோக்கி விட அவளுக்கோ அப்பொழுதுதான் மண்டையில் பல்ப் எரிந்தது போல என்று தலையாட்டினார்.
“இப்படி ஒன்னு ஒன்னுத்துக்கும் உனக்கு எக்ஸாம்பிள் சொல்லி விளக்கம் கொடுத்து எனக்கு டயர்டா இருக்கு.. அதனால என்னை வந்து குளிப்பாட்டு” என்றான் இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்து..!
“என்ன? என்ன? நான் உங்களுக்கு குளிப்பாட்டனுமா?” என்று அவள் பதற,
சிரித்துக் கொண்டவன் “இன்னைக்கு மட்டும் உனக்கு எக்ஸ்கியூஸ்.. இனிமே என்ன இந்த மாதிரி விளக்கம் எல்லாம் சொல்ல வைச்ச.. கண்டிப்பா நீ தான் என்னை குளிப்பாட்டணும்.!” என்று டீல் போட்டவன்..
“இரு என் ஜிம் ரூமை லாக் பண்ணிட்டு வரேன்.. அதுக்குள்ள கீழே போன தொலைச்சிடுவேன் ராஸ்கல்.!” என்றான்.
“நானும் அத பாக்கவா?” என்று ஆசையாக கேட்டவளை,
“வா..” என்று அழைத்து சென்று காட்டினான்.
அங்கே த்ரட்மில் போன்ற நவீன ரக ஜிம் பொருட்களும் இருந்தன.. கரலா கட்டை போற்ற பாரம்பரியமான உடற்பயிற்சி செய்யும் சாதனங்களும் இருந்தன..!
அதனை எல்லாம் ஒரு வகை ஆச்சரியத்தோடு தொட்டு தொட்டு பார்த்து வந்தவளிடம் ஒரு கர்லாக்கட்டையை நீட்டி “இத உனக்கு சுத்த தெரியுமா?” என்று கேட்டான்.
“எதே? என்னால முதல்ல இத தூக்க முடியுமானே நேக்கு தெரியாது. இதுல இத சுத்தணுமாமுல” என்று மனதில் கவுண்டர் கொடுத்தவள், வேகமாக தலையாட்டி முடியாது என்றாள்.
அழகனோ அதனை தன் மார்பு முன்னால் ஒற்றைக்கையால் பிடித்து, மறு கையை மடித்து வைத்து அந்த கர்லாக்கட்டையை லாவகமாக தலையை சுத்தி கொண்டுவந்து,
மீண்டும் தன் மார்புக்கு நேரில் நிறுத்த.. அவன் ஏதோ வித்தைக் காட்டுவது போல அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தாள் ஆண்டாள்.
“உங்களுக்கு நல்ல பலம் னா” என்று கண்களை விரித்து ஆச்சரியமாய் அவள் கூற..
கர்லா கட்டை ஓரமாக வைத்தவன் தன் எதிரே இருந்த நாட்டுக்கட்டையை அலேக்காக இரு கைகளால் உயிரே தூக்கி ஒரு சுற்று சுழற்றிவிட..
“ச்சோ.. பெருமாளே..! நேக்கு தலையெல்லாம் கிர்கிர்னு சுத்துறது னா.. கீழ விடுங்கோ.. னா.. தல சுத்துறது” என்றவள் மயங்கி அவன் கைகளிலேயே சரிந்தாள்.
“என்ன இது மயக்கம் போட்டுட்டா? அடியே பொம்மா.. பொம்மா.. எழுந்திருடி எழுந்திரு..!”’என்று கையில் ஏந்தியவன், அவள் கன்னத்தை தட்டினான் சற்று வேகமாக தான்.
ஆனால் அவள் முழிப்பது போலவே காணோம். அப்படியே அவளை அள்ளி கொண்டு வந்து தங்கள் அறையில் இருந்து கட்டிலில் படுக்க வைத்தான்.
ஏற்கனவே அவன் அவள் குளித்து சென்ற பின் தங்கள் அறையை சுத்தம் செய்திருந்தான்.
அழகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
“என்ன இவ பட்டுனு இப்படி மயக்கம் போட்டு விழுந்துட்டா அவ்வளவு வீக் பாடியா? ரெண்டு சுத்து தானே சுத்துனேன்” என்று யோசித்தவன், அடுத்தது என்ன செய்வது என்று புரியாமல் மெல்ல கதவை திறந்து வெளியில் வந்து பார்க்க..
அப்பொழுதுதான் வீட்டில் ஒவ்வொருத்தராய் எழுந்து நடமாடும் அரவம் பேச்சு குரல் கேட்டது.
அதிலும் கலையரசியின் குரல் சற்று உரத்த கேட்க “அம்மாகிட்டயே கேட்போம்” என்றவன், மேலே இருந்தே அம்மாவை அழைக்க..
மகனின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தவர் பின் வழக்கம் போல காபி கேட்கிறான் போல என்று எண்ணி,
“இரு அழகா காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.
“இல்லை நீ மட்டும் கொஞ்சம் சீக்கிரம் முல வா மா” என்றான் அவசரமாய்.
“எதுக்கு மேல வர சொல்றியான்?” என்று யோசித்தபடியே மாடி ஏறி வந்தவர்,
“என்ன என்ன சேதி? எதுக்கு என்னை பார்த்த உடனே கூப்பிடுற? பாப்பா எங்க! என்றதும்,
“வா உள்ள..!” என்று தங்கள் அறைக்கு சென்றவன் அங்கே மயங்கி கிடந்த ஆண்டாளை காட்டினான்.
“என்னாச்சு? ஏன் இன்னும் இவ தூங்கறாளா? கொஞ்சம் அசதியா இருக்கும். விடு விடு அவ தூங்கட்டும்..!’ என்று அவர் சிறிது வெட்கத்துடன் வெளியே செல்ல போக..
அவர் கையை பிடித்து நிறுத்திய அழகனோ “மா மானத்தை வாங்காதம்மா.! அவ தூங்கலாம் இல்ல மயக்கம் போட்டுட்டா” என்றான்.
“என்னது மயக்கம் போட்டுடாளா? ஏன் எதுக்கு?” என்றபடி அவள் அருகில் குனிந்து கன்னத்தின் மெதுவாக தட்டி “பாப்பா.. ஆண்டாள் ஆண்டாளு.. எழுந்திரு ஆண்டாளு.. எழுந்திரு.! என்ன ஆச்சு இங்க பாரு அத்தைய பாரு.. ஆண்டாளு” என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றார். அவளோ எதுக்குமே அசையவே இல்லை..!
அவருக்கோ பயம் பீடித்துக் கொண்டது. சிறு பெண் தன் மகளை விட ஒரு வயது சிறிய பெண்ணை இந்த முரடானுக்கு கட்டி வைத்து.. என்று மகனை முறைத்து,
“என்னடா பண்ணி வச்ச புள்ளய.. இப்படி வேர் அறுந்த மரம் போல கிடக்காளே டா.. இவ அப்பனுக்கு ஆய்க்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று முந்தானை உறிஞ்சி அவர் ஒப்பாரி வைக்க..
“ம்மா வாயை மூடுமா..! நீயே கத்தி எல்லாரையும் இங்க வர வச்சிடாத” என்று அடிக்குரலில் சீறியவன் அவர்கள் அறை கதவை சாத்திவிட்டு வந்து..
“நான் உங்க மருமகள ஒன்னுமே பண்ணலாமா” என்றான்.
“ஒன்னுமே பண்ணாம தான் அவளுக்கு மயக்கம் வந்துச்சா?” என்றவர்
“அந்த சொம்பல உள்ள தண்ணீய எடு” என்று மகனை அதட்டினார.
அவர்கள் அறையில் இருந்த தண்ணீர் எடுத்து அழகன் கொடுக்க..
மெல்ல அதில் தன் முந்தானையை நினைத்து அதை ஆண்டாளின் கண்களை நன்றாக துடைத்துவிட்டு.. மீண்டும் தண்ணீரை சற்று வேகமாக அவள் மீது தெளித்து விட்டார்.
சட்டென்று தன் மீது விழும் நீர் துளிகளின் குளிர்ச்சியிலும் அந்த வேகத்திலும் சுளிர் என்று அவளுக்கு வலிக்க.. அந்த வலியில் மெல்ல கண்களை திறந்தாள் ஆண்டாள்..
“ஆத்தா மாரியாத்தா..! உனக்கு நான் பொங்க வைக்கிறேன் நல்லபடியா என் மருமக கண்ணு முழிச்சிட்டணும்” என்று இவர் ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் கூப்பிட்டு படையல் வைக்க பட்டியல் போட..
பல்லை கடித்து அழகனோ “நான் என்ன பண்ணிட்டேனு உன் மருமவளனு ஊருல உள்ள தெய்வத்தை எல்லாம் கூப்பிடுற” என்று அவன் சீற..
“இதுக்கு மேல என்ன செய்யணும்?” என்று மகனை முறைத்தவர், பின் மருமகளின் கன்னம் தட்டி
“ராசாத்தி.. இப்ப எப்படி இருக்கு கண்ணு? அத்த ஏதும் உனக்கு சூடா கொண்டு வரட்டுமா டீ காபி.. இல்ல வேணாம் ஹார்லிக்ஸ் பூஸ்ட் இந்த மாதிரி ஏதும் குடுக்குறியா டா தங்கம்” என்று பாசமாக கேட்க..
அழகனோ கைகளை பின்னால் கட்டிக்கொண்டு விரைப்பாய் அன்னையையும் அவர் கொஞ்சும் அவன் மனைவியையும் பார்த்தவாறு நின்றிருந்தான்.
“இல்லத்த நேக்கு எதுவும் வேணாம். ஒரு மாதிரி தலை கிர்னு ஆயிடுச்சு. எல்லாம் இந்த மாமாவால தான்” என்று அவள் போட்டுக் கொடுக்க..
அதுவரை மகன் ஏதும் செய்யவில்லை என்றாலும் முழுதாக நம்பாமல் அவ்வப்போது முறைத்துக் கொண்டிருந்தவர் பார்வை இப்பொழுது சிவனின் மூன்றாவது கண்ணாய் கனலை கக்க…
“முழுசா சொல்லுடி..!” என்று இவன் பல்லைக் கடித்தான் மனைவியைப் பார்த்து..
“ஹான்.. முழுசா வா..? எதிலிருந்து மாமா ஆரம்பிக்கட்டும்.. நேத்து நைட்டில் இருந்தா? இல்ல இன்னைக்கு காலையில விடிஞ்சதுல இருந்த மாமா?” என்று அப்பாவியாய் அவள் கேட்டு, அழகனை இன்னும் வகைத் தொகையாய் மாட்டி விடு ஏற்பாடு செய்தாள்.
மருமகளின் இந்த பேச்சில் சற்று நாணமுற்ற கலையரசி “ஆத்தா நைட்டு நடந்ததெல்லாம் உங்களுக்குள்ள..! காலையில என்ன ஆச்சு? ஏன் மயக்கம் போட்டனு சொல்லு” என்று கேட்டார்.
“நான் ரொம்ப நல்ல பிள்ளையா காத்தாலேயே எழுந்து தலைக்கு ஊத்திண்டு கீழ தலை காய வச்சிண்டு இருந்தேனா.. அப்போ உங்க புள்ள தான் மாடியில் இருந்து இப்படி விசில் அடிச்சு பொம்மா பொம்மானு கூப்பிட்டாரு..”
“ஆமா யார் இந்த பொம்ம?” என்று அதி முக்கிய கேள்வி கேட்டார் கலையரசி..
அழகனுக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை..! இவளுக்கு நாம் செல்ல பெயரை வைத்தால்.. இவள் என்னவோ ஊருக்கே அதை ஒலிப்பரப்புகிறாளே என்று மனைவியை முறைத்தான்.
“அது.. பொம்மா நான் தான்..! ஆமா அத்த.. என்ன பொம்மை போல அவ்ளோ குட்டியோண்டாவா இருக்கேன்?” என்று அத்தையிடம் அவள் நியாயம் கேட்க..
அவரோ சிரித்துக் கொண்டு இல்லை என்று தலையசைக்க..
“அப்புறம் உன் உங்க புள்ள என்ன அப்படி கூப்பிடுறாரு? சரி விடுங்கோ நாம இப்ப மேட்டருக்கு வருவோம்” என்றதும் அழகனுக்கோ ஜெர்க்காகி தூக்கி போட்டது.
“மேல வந்தேனா…” என்று அவள் ஆரம்பிக்க.. அம்மாவுக்கு பின்னால் நின்ற அழகனோ கண்களால் மிரட்டி சொல்லாதே சொல்லாதே என்று சைகை செய்ய..
“சரி னா.. சரி னா.. நான் எல்லாத்தையும் சொல்லல” என்றதும், அவன் வெளிப்படையாகவே இப்பொழுது தலையில் அடித்துக் கொண்டான்.
அவளோ அத்தையிடம் “அது அது ஏன் தல சுத்துச்சுன்னா.. அது.. அவரு.. என்ன தூக்கி..” என்று ஆரம்பித்ததுமே “அடியே..!” என்று அழகன் பல்லை கடிக்க..
“அத்த ஏன் மயக்கம் வந்ததுன்னு கேக்றாளோனோ அதை நான் சொல்லனுமா இல்லையா? எல்லாத்தையும் சொல்லல னா.. அதை மட்டும் சொல்றேன். அது ஒன்னும் இல்ல அத்த.. இவரு எனன்னை தூக்கி.. ஒரு தடவைனா பரவால்ல அத்த ரெண்டு மூணு தடவ.. எனக்கு அப்படியே உடம்பு சோர்ந்து போய் தலையெல்லாம் கிறுன்னு ஆயிடுச்சு.. அவரு விடவே இல்ல.. நானும் போதும் னா.. நேக்கு தலையை சுத்துறதுன்னு எவ்வளவோ கெஞ்சினேன்.. அவரு விடவே இல்ல..” என்றவள் அவன் அவளை தூக்கி சுத்துனதை குறிப்பிட கலையரசியின் மனதிலோ இஸ்க் இஸ்கு என்று கேட்டது..!
உங்களுக்கும் அப்படித்தானே கேட்டது டியர்ஸ்?
“அடப்பாவி..! ஒரு பச்ச புள்ளைய என்ன பாடு படுத்து இருக்க நீயு.. என் புள்ள தேன் அதுக்காக உன்னைய இப்படியா வளர்த்தேன்?” ஒரு பெரிய பாட்டு படித்தவர்
“கொஞ்ச நாளைக்கு என் மருமக என் கூட தேன் படுப்பா.. அவள மனுஷினு நெனைச்சியா நீ என்னென்னு நெனச்ச?” என்று மகனிடம் எகிறியவர், அவன் மனைவியை கையோடு இழுத்து செல்லும் அன்னையைப் பார்த்தவன்,
“
சுத்தம்..! அதுக்கு அந்த பொம்மாவில் முழுசாவே சொல்லி இருந்திருக்கலாம். அந்தரங்கத்தை அம்பலப்படுத்திடுவாளோனு பயந்து அரைக்குறையா சொல்லி.. என்னைய அர்த்தராத்திரியில் தனியா படுக்க விட்டுட்டா” என்று புலம்பியபடி நின்று இருந்தான் அழகன்..!
தொடரும்..
